Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

பார்த்தேன், மனசுடைந்தேன்.

வெலிக்கடைக்கு சென்று பார்ப்பது ஒன்றும் எனக்கு புதுசு இல்லை.😊

எங்களுக்கே... செவ்வந்தியை பார்க்க பாவமாய் இருக்கு,

வக்கீல் சுமந்திரனை பிடித்து, ஆளை ஜாமீனில் வெளியே எடுத்து விடுங்க. 😂

Edited by தமிழ் சிறி

  • Replies 103
  • Views 4.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Thumpalayan
    Thumpalayan

    எனக்கு ஜெவிபி யை ஆரம்பித்தில் இருந்தே பிடிப்பதில்லை, ஆனால் இப்போது அவர்களின்நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது. எல்லா அரசியல் கடசிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. இர

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    நிச்சயமாக குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிலும் இவர்களின் குழு…. பெருமளவில் போதைப் பொருள் கடத்தல், கொலை என்று…. தங்களுடைய பணத் தேவைக்கும், சொகுசு வாழ்க்கைக்க

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    1988 முதல் 1990 வரை தெற்கில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கவே இந்திய இராணுவம் வருகிறது, ஆகவே அவர்களை திருப்பியனுப்புங்கள் என்று கோரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, தமிழ் சிறி said:

கறுப்பு உடையுடன் இருப்பவர் சாவகச்சேரியை சேர்ந்த... தக்சி என்று முகநூலில் உள்ளது.

வர வர சாவச்சேரி ஒரு மார்க்கமாய்த்தான் போகுது. 🙃

தனங்கிளப்பு ரோட்டிலை ஒரு நன்னடத்தை பள்ளிக்கூடம் கட்டி திருத்தியெடுக்கத்தான் இருக்கு.....

இடம் தவறணைக்கு அங்காலை.....சுடலைக்கு இஞ்சாலை 😂

34 minutes ago, தமிழ் சிறி said:

565611263_820211207163718_22893517979951

கறுப்பு உடையுடன் இருப்பவர் சாவகச்சேரியை சேர்ந்த... தக்சி என்று முகநூலில் உள்ளது.

சாவகச்சேரி என்றால் எம் வைத்தியருக்கு அல்லது தங்கத்துக்கு தெரிஞ்ச ஆளாக இருக்குமோ...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

வர வர சாவச்சேரி ஒரு மார்க்கமாய்த்தான் போகுது. 🙃

2 minutes ago, நிழலி said:

சாவகச்சேரி என்றால் எம் வைத்தியருக்கு அல்லது தங்கத்துக்கு தெரிஞ்ச ஆளாக இருக்குமோ...

அகில இலங்கை ரீதியில்....

அடிக்கடி முக்கிய செய்திகளில் இடம் பிடிப்பது.. "சாவகச்சேரியான்ஸ்" மட்டுமே. 🤣

அந்த மண்ணில் அப்படி ஒரு மகிமை இருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்

18 minutes ago, நிழலி said:

மூக்குத்தியை மூக்கில் தான் குத்த முடியும்.

செய்வினை, செயற்பாட்டு வினை எல்லாம் தாறுமாறாக ஓடுகிறது😂!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, தமிழ் சிறி said:

அகில இலங்கை ரீதியில்....

அடிக்கடி முக்கிய செய்திகளில் இடம் பிடிப்பது.. "சாவகச்சேரியான்ஸ்" மட்டுமே. 🤣

அந்த மண்ணில் அப்படி ஒரு மகிமை இருக்கு. 😂

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது மண்டைதீவானக இருந்தாலும் சரி. சாவகச்சேரியானாக இருந்தாலும் சரி. 😎

  • கருத்துக்கள உறவுகள்

இஷாரா செவ்வந்தியுடன் சிக்கிய மிருசுவில் தக்சி நந்தகுமார், பளை சுரேஸ் போன்றோரின் பின்னணி என்ன?

அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்காவில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் மறைந்திருந்தபோது நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டார். சந்தேக நபருடன் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே (வயது 26),

கிளிநொச்சி- பளையைச் சேர்ந்த ஜீவதாசன் கனகராசா சுரேஸ் (வயது 33), யாழ்ப்பாணம் மிருசுவிலை சேர்ந்த தக்சி நந்தகுமார் (வயது 23)

தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா (வயது 49), யாழ்ப்பாணத்தை சேர்ந்த கெனடி பஸ்தியாம்பிள்ளை- ஜே.கே.பாய் (வயது35) மற்றும்

தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே (வயது 43) ஆகியோரே கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்று விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

பேலியகொட குற்றப் பிரிவின் இயக்குநனர் ASP ரொஹான் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் IP கிஹான் டி சில்வா ஆகியோரால் மூன்று நாட்களாக நேபாளத்தில் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்தது. நேபாள காவல்துறை மற்றும் இன்டர்போலின் உதவியுடன், காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரி அசங்க கரவிட்ட ஆகியோரின் முழு மேற்பார்வையின் கீழ், கடந்த சனிக்கிழமை (11) முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இஷாரா செவ்வந்தியின் மறைவிடத்தின் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், ரொஹான் ஒலுகலவின் தலைமையில் இந்த சோதனை திட்டமிடப்பட்டது. அதன்படி, காத்மாண்டு சென்ற இலங்கை காவல்துறை அதிகாரிகள், நேபாள காவல்துறையினரை சந்தித்து நடவடிக்கை குறித்து விவாதித்தனர், மேலும் இஷாரா செவ்வந்தி மறைந்திருந்த சொகுசு வீட்டிற்கு அடுத்த வீட்டில் தங்கிய பின்னர், விசாரணையைத் தொடங்கினர்.

இந்த நடவடிக்கையைத் தொடங்கிய நேபாள பொலிசார், முதலில் இஷாரா செவ்வந்தியின் உதவியாளரான கென்னடி பஸ்தியான்பிள்ளை அல்லது ‘ஜே.கே. பாய்’ என்பவரைக் கைது செய்தனர். அவர் தாமெலில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் போது இஷாராவின் இருப்பிடத்தை உறுதிசெய்த பிறகு, நேபாள காவல்துறையின் உதவியுடன் வீடு சோதனை செய்யப்பட்டு, செவ்வந்தி கைது செய்யப்பட்டார். தன்னைக் கைது செய்ய வந்த உதவி காவல் கண்காணிப்பாளரைப் பார்த்தவுடன் திகைத்துப் போன சந்தேக நபர், “ஓலுகல சேர் எனக்குத் தெரியும் நீங்கள் என்னைக் கைது செய்வீர்கள் என்று" இவ்வாறு கூறியுள்ளார்

செவ்வந்தி, பக்தபூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, வீட்டு உரிமையாளரிடம் தான் ஒரு இந்திய பெண் என்று கூறி வந்ததாக புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். “அவர் இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்றும், சுமார் ஒரு மாதமாக பக்தபூரில் தங்கியிருந்ததாகவும், பெரும்பாலும் தனது அறைக்குள் தங்கியிருந்ததாகவும் கூறினார்” என்று விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார். “ஆபத்தை குறைக்க அவர் வெளியே செல்வதைத் தவிர்த்திருக்கலாம்.”

ஒலுகல எப்போதாவது வந்து தன்னைக் கைது செய்வார் என்று நினைத்ததாக இஷாரா செவ்வந்தி கூறினார். ஏழு மாதங்களாக நேபாளத்தில் சிக்கியிருப்பதாகவும், இப்படி இருப்பதை விட இலங்கைக்குச் செல்லலாம் என நினைத்ததாகவும், ஆனால் காவல்துறையினரிடம் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயத்தில் தான் நேபாளத்திலேயே இருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

ஜீவதாசன் கனகராசா மற்றும் தக்சி நந்தகுமார் ஆகியோர் மித்ராபார்க், புதிய பேருந்து நிறுத்தம் அருகே கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளில் ஜே.கே. பாய், இஷாரா செவ்வந்தியை படகில் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அங்கேயே வைத்திருந்தார், பின்னர் ஆறு நாள் ரயில் பயணத்தின் மூலம் நேபாளத்திற்கு அழைத்துச் சென்றார். கடல் வழியாக குற்றவாளிகளை மற்ற நாடுகளுக்கு கடத்துவதை தனது தொழிலாகக் கொண்ட ஜே.கே. பாய், தனது தொடர்புகளைப் பயன்படுத்தி அவளை எல்லை தாண்டி நேபாளத்திற்கு கொண்டு வந்தார், மேலும் காத்மாண்டுவில் ஒரு வாடகை வீட்டையும் அவருக்கு வழங்கினார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிறகு பல நாட்களாக கொழும்பைச் சூழவுள்ள பல பகுதிகளில் தலைமறைவாக இருந்த இஷாரா செவ்வந்தி, பின்னர் மதுகம பகுதிக்கும், அங்கிருந்து மித்தேனியாவிற்கும் தப்பிச் சென்றார். ஜே.கே. பாய் மித்தேனியாவில் அவருடன் சேர்ந்தார், மேலும் அங்கு ஒளிந்து கொள்ள சம்பத் மனம்பேரி என்ற குற்றவாளியின் உதவி அவருக்கு கிடைத்ததா என்ற சந்தேகத்தை போலீசார் எழுப்பியுள்ளனர்

இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கெஹல்பத்தர பத்மேவின் கும்பலுடன் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் மற்றும் ஒரு பெண் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, காத்மாண்டுவில் வேறு இடங்களில் பதுங்கியிருந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு, கெஹல்பத்தர பத்மே கும்பலின் தலைவரான ‘கம்பாஹா பாபா’, அவரை காவலில் இருந்து விடுவிக்க ASP ரொஹான் ஒலுகலவுக்கு ரூ. 5 மில்லியன் லஞ்சம் கொடுக்க முயன்றார், ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்து மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் சாவகச்சேரியைச் சேர்ந்த தக்சி என அடையாளம் காணப்பட்டார், மேலும் அவர் இஷாரா செவ்வந்தியை மிகவும் ஒத்த தோற்றமுடையவர்.

இந்த தமிழ்ப் பெண்ணின் தரவு மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இஷாரா செவ்வந்தியின் பெயரில் ஒரு போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் அவளை ஐரோப்பாவிற்கு அனுப்ப திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மேவின் ஆலோசனையின் பேரில், ஜே.கே. பாய் இந்தத் திட்டத்தை செயற்படுத்தினார். ஆனால், பத்மே மற்றும் அவரது கும்பல் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டபோது அந்தத் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன.

கெஹல்பத்தர பத்மேவின் உத்தரவின் பேரில் பெப்ரவரி 19 அன்று அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் கொமாண்டோ வீரரும் பத்மேவின் கும்பலின் துப்பாக்கிச்சூட்டாளராகக் கருதப்படும் கொமாண்டோ சாலிந்து, சட்டத்தரணியாக மாறுவேடமிட்டு நீதிமன்ற அறைக்குள் வந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்.

இந்தக் கொலையின் உள்ளூர் செயற்பாட்டாளராக செவ்வந்தி செயல்பட்டார், மேலும் அவர் ஒரு சட்டத்தரணியாக மாறுவேடமிட்டு நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். இந்தக் கொலைத் திட்டம் பல வாரங்களாக கொமாண்டோ சாலிந்துவுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலைக்குப் பிறகு, இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல மன்னாருக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த கொமாண்டோ சாலிந்த, புத்தளம் பாலாவிப் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார், ஆனால் இஷாரா செவ்வந்தியை கைது செய்ய முடியவில்லை.

சஞ்சீவ கொலை செய்யப்பட்ட 17 நாட்களுக்குப் பிறகு இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. கணேமுல்ல சஞ்சீவ அத்தனகல்ல மற்றும் கம்பஹா நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்பட்டபோது, இஷாரா செவ்வந்தி பல முறை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

நேபாளத்தில் கைதானவர்கள் தற்போது இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Andal Hashini



  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணம்….

படகு…..

தமிழ் நாடு…..

வட இந்தியா…

நேபாளம்….

ஐரோப்பா….

1991 இல் இன்னொரு முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக தேடப்பட்ட இன்னொரு இலங்கையை சேர்ந்த குழுவும்….

இதே பாதையில் தப்பலாம் என நம்பவைத்து ஏமாற்றப்பட்டதாக சொல்வார்கள்.

இதை வாசிக்க அன்றைய பத்திரிகை செய்திகள் நினைவுக்கு வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, யாயினி said:

இஷாரா செவ்வந்தியுடன் சிக்கிய மிருசுவில் தக்சி நந்தகுமார், பளை சுரேஸ் போன்றோரின் பின்னணி என்ன?

விடுதலைப்போராட்டம் முறியடிக்கப்பட்டபின், தமிழ்ப்பிரதேசங்களை ஆக்கிரமித்த இராணுவ, போலீஸ் புலனாய்வுப் பிரிவின் நேரடி, மறைமுக தலையீட்டின் வழிநடத்தலில் செயற்பட்ட ஆவா குழுவாக இருக்கலாமென சந்தேகம் எனது. தெற்கில் பாதாள, போதைக் குழு. வடக்கில் ஆவா குழு. ஆவா என்கிற பெயர் வடக்கில் அறிமுகமானது, இராணுவ ஆக்கிரமிப்பின் பின்னே. வடக்கில் தமிழர் தலைமை, அதற்கு பெயர் மட்டும் ஏன் "ஆவா."

முன்னைய அரசாங்கம் இராணுவ, போலீசாரை பயன்படுத்தி. தமிழரின் கல்வி, கலாச்சாரம், சுதந்திரம் போன்றவற்றை நிரந்தரமாக அழிக்க, சமூக விரோத செயல்களை ஊக்குவிக்க, திட்டமிட்டு புகுத்தப்பட்ட போதை, வாள்வெட்டு. இதில் முன்னைய அரசாங்கங்களுக்கு பாரிய பங்கு உண்டு. சட்டம், நீதியை நிலைநாட்ட வேண்டியவர்களை அதை அழிப்பதற்கும், தங்களை செல்வாக்கை செழிப்பாக்குவதற்கும், பதவிகளை தக்க வைப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டார்கள். அனுரா அரசால் இதை செய்ய முடிந்ததென்றால்; ஏன் முன்னைய அரசாங்கங்களால் இதை செய்ய வேண்டாம், நடவடிக்கை ஏதும் செய்யப்படவில்லை? இப்போ நாமல் என்ன கருத்து வெளியிடப்போகிறார்? கோத்தா முந்திக்கொண்டு, சில போதைக்கும்பல் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு, தனக்கு அவர்களுடன் தொடர்பில்லை என கருத்து வெளியிட்டிருக்கிறார். அது ஏன்? சிக்குவாரா முன்னாள் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர், நாமலின் நண்பர்?

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வந்தி சிரிச்சபடி வந்திறங்குவதையும்..மற்றவர்களுடன் சிரித்து கதைப்பதையும் பார்த்தால் ...ஏன் உவ்வளவு செலவழித்து பொலிசு நடவடிக்கை தேவௌயற்றதுபோல் தெரிகிறது ...டிக்கட் காசை அனுப்பினாலே ..அவராகவே வந்து இறங்கியிருப்பார்..

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது மண்டைதீவானக இருந்தாலும் சரி. சாவகச்சேரியானாக இருந்தாலும் சரி. 😎

நிச்சயமாக குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதிலும் இவர்களின் குழு…. பெருமளவில் போதைப் பொருள் கடத்தல், கொலை என்று…. தங்களுடைய பணத் தேவைக்கும், சொகுசு வாழ்க்கைக்குமாக.. நாட்டு மக்களையும், இளைய சமுதாயத்தையும் சீரளித்துக் கொண்டு இருக்கும் கோர சிந்தனை உடையவர்கள்.

சில வாரங்களுக்கு முன்…. இந்தக் கும்பலின் 850 கிலோ பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப் பட்டிருந்தது. அந்த 850 கிலோவும் அடுத்த பத்து வருடத்துக்கு இலங்கையின் பாவனைக்கு போதுமானது என்று வாசித்தேன்.

அத்துடன் எல்லாம் முடிந்தது என்று பெரு மூச்சு விடுவதற்கிடையில்…. நேற்று தெற்கு கடல் பகுதியான தங்காலையில் 840 கிலோ ஐஸ் போதைப் பொருட்கள் 51 சாக்குகளில் கடலில் மிதந்த வண்ணம் இருந்ததை கடற்படையினர் கண்டு எடுத்துள்ளார்கள். இவை எல்லாவற்றின் பெறுமதி பல பில்லியன் ரூபாய்களை தானும் என்கிறார்கள்.

ஆக…. இந்தப் போதைப் பொருள் வலையமைப்பு இன்னும் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. இதன் ஆணி வேரைத் தேடிப் போனால்… நிச்சயம் பெரும் கொழுத்த அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்பது கசப்பான உண்மை.

இந்தப் போதைப் பொருள் மாஃபியாக்களை, கைது செய்யும் நடவடிக்கையை…. அனுரா அரசை தவிர்ந்த வேறு எந்த அரசும் இவ்வளவு மூர்க்கமாக செய்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோரின் கண்ணசைவுடன்தான் இந்தப் போதைப் பொருள் கடத்தலும், வியாபாரமும் நடந்து கொண்டுள்ளதாக பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள்.

ஆகவே…. வேரோடும், வேரடி மண்ணோடும் இந்த வலையமைப்பை அழித்து ஒழிக்கும் வரை… கைது செய்யப்பட்டவர்களை முட்டிக்கு முட்டி தட்டி… விசாரிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, alvayan said:

செவ்வந்தி சிரிச்சபடி வந்திறங்குவதையும்..மற்றவர்களுடன் சிரித்து கதைப்பதையும் பார்த்தால் ...ஏன் உவ்வளவு செலவழித்து பொலிசு நடவடிக்கை தேவௌயற்றதுபோல் தெரிகிறது ...டிக்கட் காசை அனுப்பினாலே ..அவராகவே வந்து இறங்கியிருப்பார்..

செவ்வந்தி… கள்ளத் தோணியில் இந்தியா போய்,

நேபாளத்தில் இருந்து விமானத்தின் மூலம்,

தாய் நாட்டிற்கு வரும் போது…

கொடுப்புக்குள் சிரிப்பு வரத்தான் செய்யும். 😁 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வந்தியை விட முக்கியமானவராக மாறிய யாழ்ப்பாண ஜே.கே.பாய்: வெளிநாட்டு ஆசையில் சிக்கினாரா தக்ஷி?

October 16, 2025

குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணையில், இஷாரா செவ்வந்தியை மொரீஷியஸ் பெண் போல ஆள்மாறாட்டம் செய்து மொரீஷியஸுக்கு தப்பிச் செல்ல கெஹல்பத்தர பத்மே திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்ட பிறகு, இந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட மொரீஷியஸ் பாஸ்போர்ட் நேபாளத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த பாஸ்போர்ட்டை இஷாராவுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட ஜே.கே. பாய் என்ற நபர் தயாரித்தார். போலி பாஸ்போர்ட்டில் மொரீஷியஸ் குடிவரவு மற்றும் குடியேற்ற அலுவலகத்தின் சில அதிகாரப்பூர்வ முத்திரைகளை மட்டும் ஒட்டிய பிறகு, அவர் மொரீஷியஸுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.கே. பாய், துபாய்க்கு அடிக்கடி வருபவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஒரு ஆவணமற்ற குற்றவாளி என்றும், குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதில் ஈடுபட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. சர்வதேச மாஃபியா கும்பல்களுடன் அவருக்கு பல தொடர்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கெஹல்பத்தர பத்மே, இஷாரா செவ்வந்தியை நாட்டை விட்டு தப்பிச் செல்ல ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. கெஹல்பத்தர பத்மே இதற்காக ஜே.கே. பாய்க்கு ரூ. 10 மில்லியன் வழங்கியுள்ளார்.

இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், மேலும் விசாரணை தேவை என்று சிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து இஷாரா செவ்வந்தி மற்றும் ஜே.கே. பாயிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார்.

விசாரணைகளில் இருந்து இதுவரை தெரியவந்துள்ளபடி, ஜே.கே. பாய் கடைசியாக 2023 ஆம் ஆண்டு துபாய்க்கு நாட்டை விட்டு வெளியேறினார். அவர் நாட்டின் விமான நிலையம் அல்லது துறைமுகம் வழியாக சட்டப்பூர்வமாக திரும்பியதாக எந்த தகவலும் இல்லை என்றும் சிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இஷாரா செவ்வந்தியை இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை ஜே.கே. பாயின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் தங்கியிருப்பதை சிஐடி அதிகாரிகள் கண்டுபிடித்த பிறகு, அவரைப் பிடிக்கும் ரகசிய நடவடிக்கை இலங்கை காவல்துறை அதிகாரிகளின் மிகக் குறைந்த குழுவை மட்டுமே உள்ளடக்கியது. அண்டை நாட்டின் பொது புலனாய்வுப் பிரிவும் இதற்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஹோட்டல் முன்பதிவு

இஷாரா சேவ்வந்தி நேபாளத்தில் தங்கியிருப்பது தெளிவாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து, இன்டர்போலின் உதவியுடன் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையை மூத்த துணை காவல் ஆய்வாளர் அசங்க கரவிட்ட உள்ளிட்ட சிஐடி அதிகாரிகள், காவல் ஆய்வாளர் பிரியந்த வீரசூரியவின் மேற்பார்வையில் 6 வாரங்களுக்குத் திட்டமிட்டனர்.

இலங்கை வெளியுறவு அமைச்சகம் நேபாள வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கைக்கான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, மேற்கு மாகாணத்தின் வடக்கு மாவட்ட குற்றப் பிரிவின் இயக்குநர் உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் ஆய்வாளர் கிஹான் டி சில்வா ஆகியோர் இந்த நடவடிக்கைக்காக நேபாளத்திற்கு அனுப்பப்பட தேர்வு செய்யப்பட்டனர்.

இலங்கை ஹோட்டல் முன்பதிவு

அதன்படி, இந்த இரண்டு அதிகாரிகளும் இஷாராவைக் கைது செய்யும் நடவடிக்கைக்காக 11 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

கடந்த சில நாட்களாக ரோஹன் ஒலுகல உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி வந்தார். அவர் பல நாட்களாக தனது கடமை நிலையத்திற்கு கூட வரவில்லை.

11 ஆம் திகதி காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இலங்கை விமானத்தில் நேபாளம் சென்றபோது, அவரது உடல்நிலை சீராக இருந்தது.

அவர்கள் நேபாளத்தில் தரையிறங்கியபோது, அவர்களை வரவேற்க நேபாளத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அங்கு இருந்தனர். அவர்களுடன் தூதரகத்திற்கு வந்த ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா, முதலில் அங்குள்ள இலங்கை தூதரக அதிகாரிகளைச் சந்தித்தனர். இன்டர்போலின் நேபாள கிளையின் அதிகாரிகளுடனும் அவர்கள் கலந்துரையாடினர்.

இலங்கை ஹோட்டல் முன்பதிவு

இஷாராவைப் பிடிக்கும் நடவடிக்கையில் துபாயில் உள்ள மற்றொரு குழு ஏற்கனவே ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இஷாராவை நேபாளத்திற்கு அழைத்து வந்து தங்குமிடம் அளித்த ஜே.கே. பாய் பற்றி அவர்தான் அறிந்திருந்தார். அந்த நேரத்தில் ஜே.கே. பாய் ஏற்கனவே நேபாளத்தில் இருந்தார்.

இஷாரா செவ்வந்தியைப் பிடிக்கும் நடவடிக்கைக்கு நேபாளத்தில் உள்ள உள்ளூர் காவல்துறையின் ஒரு குழு ஏற்கனவே தயாராக இருந்தது. ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா அந்தக் குழுவுடன் சென்று முதலில் ஜே.கே. பாய்யைக் கைது செய்தனர். அந்த நேரத்தில் அவர் காத்மாண்டு அருகே தங்கியிருந்தார். சோதனையின் போது, அவரது சரியான இடம் குறித்து எந்த அதிகாரிக்கும் தெரியாது.

எனவே, ஜே.கே. பாயை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை துபாயில் இருந்து வந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பிறகு விசாரணையின் போது, ஜே.கே. பாய் தனக்கு எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார், ஆனால் இந்த நாட்டிலிருந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரியின் மொபைல் போனில் இருந்து அழைப்பு வந்த பிறகு அவரது வாய் திறந்தது. அந்த அழைப்பு ஒரு உயர் போலீஸ் அதிகாரியிடமிருந்து வந்தது. அந்த அதிகாரி வீடியோ அழைப்பு மூலம் ஜே.கே. பாயை அழைத்தார்.

“பாய், எங்களுக்கு உதவுங்கள். இஷாரா எங்கே என்று சொல்லுங்கள்,” என்று அவர் உரையாடலைத் தொடங்கினார்.

“இஷாரா யார், எனக்கு எதுவும் தெரியாது,” என்று ஜே.கே. பாய் கூறினார்.

ஜே.கே. பாய்க்கு சிங்களம் நன்றாகப் பேசத் தெரியாது. அவருக்கு சிங்களம் நன்றாகப் புரிந்தாலும், சில வார்த்தைகளில் மட்டுமே சிங்களத்தில் பேசத் தெரியும்.

“நீ உன் மனைவியையும் குழந்தைகளையும் நேசிக்கிறாய், இல்லையா? தற்போது சிஐடி அவர்கள் வீட்டைச் சுற்றி வளைத்துள்ளது. இந்த விஷயத்தில் நீ எங்களுக்கு உதவவில்லை என்றால், நாங்கள் அனைவரையும் கைது செய்வோம். நீ கஷ்டப்பட வேண்டியிருக்கும், பாய்.”

ஜே.கே. பாய் காவல்துறைத் தலைவரின் வலையில் சிக்கினார்.

“ஐயா, அந்தப் பெண் இப்போது எங்கே இருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவளை ஒரு முகவரிடம் ஒப்படைத்தேன்.” சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் யோசித்த பிறகுதான் பாய் வாய் திறந்தார்.

ஜே.கே. பாய் நேபாளத்தில் உள்ள ஒரு தரகரைப் பற்றி ஏதோ சொல்லவிருந்தார். ஜே.கே. பாய் அளித்த தகவலின் அடிப்படையில் நேபாள போலீசார் அந்த தரகரைக் கைது செய்தனர்.

விசாரணையின் போது, தரகர் இரண்டு வாரங்களுக்கு முன்பு செவ்வந்தி வேறு இடத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறினார். அது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார். ஏனென்றால் அவர் வேறொரு தரகருக்கு வேலையை ஒதுக்கியிருந்தார். தரகரைத் தொடர்பு கொண்டபோது, இஷாரா நாட்டில் பயன்படுத்தும் ஒரு மொபைல் போன் எண்ணைத் தவிர, அவரது சரியான இருப்பிடம் குறித்து வேறு எதையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அன்றிலிருந்து, இஷாராவைப் பிடிக்கும் நடவடிக்கை அவரது மொபைல் போன் எண் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது மொபைல் போன் பக்தபூர் மாவட்டத்தில் இயங்கி வருவது தெரியவந்தது. இந்தப் பகுதி இலங்கையில் உள்ள நுவரா எலியாவைப் போன்றது. நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கின் கிழக்கு முனையில், தலைநகர் காத்மாண்டுவிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் (8.1 மைல்) தொலைவில் அமைந்துள்ள பக்தபூர் நகரம், நேபாளத்தின் மிகச்சிறிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும்.

இலங்கை ஹோட்டல் முன்பதிவு

நேபாள போலீஸ் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்மாண்டுவிலிருந்து பக்தபூருக்கு ஒலுகல மற்றும் கிஹான் சில்வாவை அழைத்துச் சென்றது. தொலைபேசி சிக்னல்கள் வெளியிடப்படும் இடம்தான் காவல் குழுவின் இலக்காக இருந்தது. சிக்னல்கள் சுமார் 800 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியிருந்ததால், அது அவர்கள் நினைத்த அளவுக்கு எளிதானது அல்ல என்று காவல் குழு கண்டறிந்தது. அந்தப் பகுதி மக்கள் தொகை அதிகமாகவும், சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் இடமாகவும் இருந்ததால், வீடுகளையும் கட்டிடங்களையும் சோதனை செய்து இஷாராவைத் தேடுவது எளிதான காரியமல்ல. நேபாளத்தில் உள்ள சட்டப்பூர்வ சூழ்நிலையைப் பொறுத்தவரை, வீடு வீடாகவும், கட்டிடத்திலிருந்து கட்டிடமாகவும் செல்வது சிக்கலாக உள்ளது. மத்திய காவல்துறையின் அறிவிப்பின் பேரில் உள்ளூர் காவல்துறையினர் குழு ஏற்கனவே அங்கு வந்திருந்தது. ஏற்கனவே தாமதமாகிவிட்டது. அவர்கள் வீடுகளை ஒவ்வொன்றாகச் சோதனை செய்யச் சென்றால், இருட்டுவதற்குள் வீடுகளையும் கட்டிடங்களையும் சோதனை செய்து முடிக்க முடியாது. நேபாள காவல்துறையினர் இரவில் செயல்படுவதில்லை. ஒரு சிறப்பு விஷயத்தின் காரணமாக இரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், மேலிடத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். இது சாத்தியமற்றது என்பதால், ரோஹன் ஒலுகல உள்ளிட்ட குழு, இஷாராவை அவரது இடத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று கைது செய்வது பொருத்தமானது என்று முடிவு செய்தது. ஜே.கே. பாய் இதற்கு பயன்படுத்தப்பட்டார். ஒரு திட்டத்தின்படி ஜே.கே. பாய் மூலம் இஷாராவின் மொபைல் போனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரிகள் குழுவும் இதற்குப் பின்னால் இருந்தது.

அந்த அழைப்பின் மூலம், இஷாராவை ஏமாற்றி, பக்தபூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தனது செலவுகளுக்குத் தேவையான பணத்தை பெற வருமாறு அழைப்பதே திட்டம். காவல்துறையின் திட்டத்தின்படி, ஜே.கே. பாய், செவ்வந்திக்கு போன் செய்து, அங்கு வர வேண்டிய நேரத்தையும் சொன்னார். அது மறுநாள் காலை.

அன்று, நேபாள காவல்துறை ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்தது. ஜே.கே. பாயும் ஏற்கனவே அவர்கள் காவலில் இருந்தார்.

இஷாரா செவ்வந்தியைக் கைது செய்ய, நேபாள காவல்துறை குழு, ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வாவுடன் ஆகியோர் ஜே.கே. பாய் முந்தைய நாள் செவ்வந்தியை வரச் சொன்ன இடத்திற்குச் சென்றது. நேபாள உள்ளூர் காவல்துறையினர் இஷாராவை அவள் தங்கியிருந்த இடத்தில் கைது செய்யும் நம்பிக்கையை கைவிடவில்லை. இரவு முழுவதும் அந்தப் பகுதியில் தங்கியிருந்த அந்நியர்கள் மற்றும் வெளிநாட்டுப் பெண்கள் பற்றிய தகவல்களை அவர்கள் சேகரித்து வந்தனர். அதன்படி, திங்கட்கிழமை காலை, அவள் வீட்டை விட்டு வெளியே வரவிருந்தபோது உள்ளூர் காவல்துறை அதிகாரிகளால் அவள் கைது செய்யப்பட்டாள். அந்த நேரத்தில், ஒலுகல உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஏற்கனவே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் வேறொரு இடத்தில் இருந்தனர்.

உள்ளூர் போலீசார் இஷாரா கைது செய்யப்பட்டதாக அவர்களுக்குத் தெரிவித்ததும், ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா, நேபாள போலீஸ் குழுவுடன் சேர்ந்து, அந்த இடத்திற்குச் சென்று, முந்தைய நாள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகிலேயே செவ்வந்தி தங்கியிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

வாரக்கணக்கில் நீடித்த சிறப்பு நடவடிக்கையின் விளைவாக இஷாராவைக் கைது செய்த பிறகு, ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா வெற்றியைக் கொண்டாடவும், அவளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரவும் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில், அவர்களுக்கு மற்றொரு நடவடிக்கை ஒதுக்கப்பட்டது. ஜே.கே. பாயால் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு பெண் உட்பட மூன்று பேர் அதன்படி கைது செய்யப்பட்டனர். அவர்கள் நால்வரும் நேபாளத்தின் மற்றொரு பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அந்தப் பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். முதல் பார்வையில் அவர் இஷாராவைப் போலவே இருந்தார்.

இதேபோல். அதிகாரிகள் அவரை இஷாராவின் போலி என்று அழைத்தனர். அவர் பெயர் தக்ஷி. அவருடன் சுரேஷ் என்ற நபரும் இருந்தார். சுரேஷும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கொலை உட்பட பல குற்றங்களில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கேரள கஞ்சா கடத்தலிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் தக்ஷியுடன் நேபாளத்திற்கு வந்திருந்தார். அவர்கள் இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு வந்திருந்தனர். ஜூலை 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவர்கள் இந்தியாவுக்குச் சென்றதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தக்ஷி நேபாளத்திற்கு வந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர் நேபாளத்திலிருந்து ஒரு ஐரோப்பிய நாட்டிற்குச் செல்லத் தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட மற்ற இருவர் பாபி மற்றும் பாபா. பாபி நுகேகொடவைச் சேர்ந்தவர். பாபா கம்பஹாவைச் சேர்ந்தவர். பாபி மற்றும் பாபா பாதாள உலக குற்றவாளிகள். அவர்கள் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டவர்கள். 2019 ஆம் ஆண்டு நுகேகொடவின் ஜம்புகஸ்முல்லவில் ஒரு தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அவர் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். அந்த நேரத்தில் அவர் போலீசாரிடமிருந்து தப்பிக்க துபாய்க்கு தப்பிச் சென்றார். அவருடன் கைது செய்யப்பட்ட நபர் கெஹல்பத்தர பத்மேவின் சீடர். கம்பஹா பகுதியில் கடந்த காலங்களில் நடந்த குற்றங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இஷாராவை கைது செய்யச் சென்ற ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா ஆகியோர் நேற்று மாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை வந்தனர். இந்தக் குழுவை அழைத்து வருவதற்காக நேற்று காலை இலங்கையில் இருந்து காத்மாண்டுவுக்குப் புறப்பட்ட விமானத்தில் குற்றப் புலனாய்வுத் துறையின் மேலும் இரண்டு அதிகாரிகள் இருந்தனர். இந்த காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு கூடுதலாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் காவலர்களின் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. அவர்களில் ஒரு பெண் விமானப் பாதுகாப்பு அதிகாரியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 8 மாதங்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்ற பிறகு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியின் விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் மேலும் விசாரணைகள் நடத்தப்படும்.

இலங்கை ஹோட்டல் முன்பதிவு

இந்த நடவடிக்கையில், இஷாராவை விட ஜே.கே. பாய் காவல்துறைக்கு மிகவும் முக்கியமானவர். அந்த பாதாள உலகக் குற்றவாளிகளில் பலரை நாட்டிலிருந்து நாடு கடத்தி வெளிநாட்டில் தங்குமிடம் வழங்க சர்வதேச மாஃபியா குழுக்களுடன் தொடர்புகளைப் பேணி வந்தவர் அவர்தான். ஜே.கே. பாயை விசாரிப்பதன் மூலம், இந்த வலையமைப்பு அம்பலப்படுத்தப்படும் என்று குற்றப் புலனாய்வுத் துறை நம்பிக்கை கொண்டுள்ளது.

https://pagetamil.com/2025/10/16/செவ்வந்தியை-விட-முக்கியம/

  • கருத்துக்கள உறவுகள்

563448924_4017783951700076_8179843103225

இந்த பாதாள உலக ஆட்கள் எல்லாம் ஏன் சினிமா ஹீரோ, ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்கிறார்கள்? 🤔
இலங்கையின் Most wanted Criminals. ஆனா விஷயம் தெரியாதவர்களிடம் இந்த போட்டோக்களைக் காட்டினால் நம்பவே மாட்டார்கள்.
மக்களே தெரிந்துகொள்ளுங்கள் - வாழ்க்கையில் திருப்தியாக, நிம்மதியாக வாழ “அழகு” மட்டும் இருந்தால் போதாது.

Rajeevan Ramalingam

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

கெஹல்பத்தர பத்மே கும்பலின் தலைவரான ‘கம்பாஹா பாபா’, அவரை காவலில் இருந்து விடுவிக்க ASP ரொஹான் ஒலுகலவுக்கு ரூ. 5 மில்லியன் லஞ்சம் கொடுக்க முயன்றார்,

2 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் போதைப் பொருள் மாஃபியாக்களை, கைது செய்யும் நடவடிக்கையை…. அனுரா அரசை தவிர்ந்த வேறு எந்த அரசும் இவ்வளவு மூர்க்கமாக செய்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோரின் கண்ணசைவுடன்தான் இந்தப் போதைப் பொருள் கடத்தலும், வியாபாரமும் நடந்து கொண்டுள்ளதாக பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள்.

சந்தேகம் என்ன? இந்த மாபியாக்கள் கைது செய்யப்படும்போது, எதிர்கால கனவு ஜனாதிபதி பதறித்துடித்து, இதெல்லாம் தேவையில்லை, அபிவிருத்தி தான் நாட்டுக்கு தேவை என்று குதித்தாரே, இதிலிருந்து தெரியவில்லையா? சிலர் கொலை செய்யப்பட்டனரே, அதிலிருந்து தெரியவில்லையா முதலாளி முதலைகள் யாரென்று? இவர்களின் ஊழலை விசாரிக்கத் தொடங்கியிருந்தால் இவ்வளவு வெற்றி கிடைத்திருக்காது. இப்போ, தானாகவே சிக்கப்போகிறார்கள். அதை தவிர்ப்பதற்காக ஏழை மக்களை ஏமாற்றி, வீட்டுக்கு அழைத்து படம் காட்டி, தங்கள் குற்றங்களை மறைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். இந்த மக்கள் தானே இவர்களை வேரோடு அரசியலில் இருந்து விரட்டியவர்கள்? இவர்களை தேர்தலில் வீட்டிற்கு அனுப்பியவர்களும் இந்த மக்கள் தானே? சிறை செல்வதென்று முடிவாகிவிட்டது, எப்படி சிறையில் சாதாரண சிறைக்கைதிகள் போல வாழ்வதற்கு தம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு கொலையை மறைத்து, தப்ப முயற்சி பண்ணி இப்போ பல கொலைகள், கொள்ளைகள், ஊழல்கள் பெருகி இவர்கள் வெளியே வரமுடியாதளவுக்கு தண்டனை காலம் இவர்களது வாழுங்காலத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. பல லட்ஷம் கொலைகளை, ஊழல்களை செய்தவர்களுக்கு மரணதண்டனையே பொருத்தமானது. பரம்பரையே உள்ளே போகப்போகிறது. குடும்பத்தில் ஒருவனாவது நல்லவன்? பெற்றவர்களைபோலவே பிள்ளைகளும் இருப்பார்கள். கசாப்புக்கடைக்காரருக்கு அரசியல் வந்தால், அரசியலும் கசாப்புக்கடையாய் மாற்றி விடுவார்கள், விட்டார்கள் முட்டாள்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சந்தேகம் என்ன? இந்த மாபியாக்கள் கைது செய்யப்படும்போது, எதிர்கால கனவு ஜனாதிபதி பதறித்துடித்து, இதெல்லாம் தேவையில்லை, அபிவிருத்தி தான் நாட்டுக்கு தேவை என்று குதித்தாரே, இதிலிருந்து தெரியவில்லையா? சிலர் கொலை செய்யப்பட்டனரே, அதிலிருந்து தெரியவில்லையா முதலாளி முதலைகள் யாரென்று? இவர்களின் ஊழலை விசாரிக்கத் தொடங்கியிருந்தால் இவ்வளவு வெற்றி கிடைத்திருக்காது. இப்போ, தானாகவே சிக்கப்போகிறார்கள். அதை தவிர்ப்பதற்காக ஏழை மக்களை ஏமாற்றி, வீட்டுக்கு அழைத்து படம் காட்டி, தங்கள் குற்றங்களை மறைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். இந்த மக்கள் தானே இவர்களை வேரோடு அரசியலில் இருந்து விரட்டியவர்கள்? இவர்களை தேர்தலில் வீட்டிற்கு அனுப்பியவர்களும் இந்த மக்கள் தானே? சிறை செல்வதென்று முடிவாகிவிட்டது, எப்படி சிறையில் சாதாரண சிறைக்கைதிகள் போல வாழ்வதற்கு தம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு கொலையை மறைத்து, தப்ப முயற்சி பண்ணி இப்போ பல கொலைகள், கொள்ளைகள், ஊழல்கள் பெருகி இவர்கள் வெளியே வரமுடியாதளவுக்கு தண்டனை காலம் இவர்களது வாழுங்காலத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. பல லட்ஷம் கொலைகளை, ஊழல்களை செய்தவர்களுக்கு மரணதண்டனையே பொருத்தமானது. பரம்பரையே உள்ளே போகப்போகிறது. குடும்பத்தில் ஒருவனாவது நல்லவன்? பெற்றவர்களைபோலவே பிள்ளைகளும் இருப்பார்கள். கசாப்புக்கடைக்காரருக்கு அரசியல் வந்தால், அரசியலும் கசாப்புக்கடையாய் மாற்றி விடுவார்கள், விட்டார்கள் முட்டாள்கள்.

போதை மாஃபியாக்கள் தினமும் கைதாக...

நாமல் ராஜபக்சவுக்கு கெடி கலக்கமாக உள்ளது.

போதைக் கும்பலில் 40 பேர் குறி வைக்கப் பட்டிருந்தவர்கள்.

அதில் 18 பேர் வரையே இதுவரை கைது செய்யப் பட்டுள்ளார்கள்.

இன்னும் 22 பேர் தலைமறைவாகி உள்ளார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-200.jpg?resize=750%2C375&ssl

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட இலங்கை பாதாள உலகக் குழுவினரின் கைதும் பின்னணியும்!

காத்மாண்டுவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களை நேபாளம் நாடு கடத்தியுள்ளதாக The Kathmandu Post செய்தி வெளியிட்டுள்ளது.

நேபாள காவல்துறையினருடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காத்மாண்டு மற்றும் பக்தபூர் முழுவதும் வாடகை வீடுகளில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை (15) நாடு கடத்தப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.

அந்த செய்திச் சேவையின் தகவலின்படி,

இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே ( வயது 26), ஜீவதாசன் கனகராசா ( வயது 33), தக்ஷி நந்தகுமார் (23), தினேஷ் ஷியமந்த டி சில்வா (49), கெனடி பஸ்தியம்பிள்ளை ( வயது 35), மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே ( வயது 43) ஆகியோரே நாடு கடத்தப்பட்டவர்கள் என சிரேஷ்ட பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2025 பிப்ரவரி 19 அன்று கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்திற்குள் சஞ்சீவ கொல்லப்பட்ட வழக்கில் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தார். 

இந்த அறிவிப்பு நேபாளம் உள்ளிட்ட இன்டர்போல் உறுப்பு நாடுகளை அவரது நடமாட்டங்களைக் கண்காணிக்கத் தூண்டியது.

காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் இந்த வழக்கு குறித்து குறிப்பாக கவலை தெரிவித்ததாக நேபாள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அதன்படி, நக்சலில் உள்ள நேபாள காவல்துறை தலைமையகத்தில் உள்ள இன்டர்போல் தேசிய மத்திய பணியகம், சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது என்று அந்த அதிகாரி கூறினார்.

காவல்துறை விசாரணையில், ஆறு பேரும் மலேசியா மற்றும் துபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ள இலங்கை குற்றவியல் அமைப்பான கெஹல்பத்தர பத்மே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. 

ஆகஸ்ட் 25 அன்று இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பத்மேவுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பையும் பிறப்பித்திருந்தது.

சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் பத்மே தான் மூளையாக செயல்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேக நபர்கள் பல வாரங்களாக நேபாளத்தில் இரகசியமாக வசித்து வந்ததும், போலி அடையாளங்களைப் பயன்படுத்தி, இந்திய குடிமக்கள் என்று அவர்கள் கூறிக் கொண்டதும் கண்டறியப்பட்டது.

அவர்களில் இருவர் விமானம் மூலம் நேபாளத்திற்குள் நுழைந்ததாகவும், மற்றவர்கள் இந்தியாவிலிருந்து தரை வழியாக எல்லையைத் தாண்டியதாகவும் நம்பப்படுகிறது.

சந்தேக நபர்கள் யாரும் நேபாளத்தில் குற்றங்களைச் செய்யவில்லை என்பதால், நேபாள சட்டத்தின்படி அவர்களை நாடு கடத்துவதற்கு வசதியாக அதிகாரிகள் குடிவரவுத் துறையுடன் ஒருங்கிணைந்தனர்.

சிரேஷ்ட குடிவரவு அதிகாரி ஒருவர், சட்டத் தேவைகளின்படி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறை மேற்பார்வையின் கீழ் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

இலங்கை பாதாள உலக நபர்கள் நேபாளத்தில் தஞ்சம் புகுந்தது போன்ற வழக்குகள் மிகவும் அரிதானவை என்று இன்டர்போல் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மேலும் அவர்கள் விரைவாக நாடுகடத்தப்படுவதை உறுதி செய்வதில் நேபாள காவல்துறைக்கும் இலங்கை தூதரகத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமாக அமைந்ததாகவும் – தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

Image

https://athavannews.com/2025/1450514

  • கருத்துக்கள உறவுகள்

560658209_1256735916481445_4708104154033

🛑கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட பின்னர் 3 மாதங்களாக பல இடங்களில் பதுங்கியிருந்தேன்
🛑மத்துகமவில் மாத்திரம் ஒன்றரை மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்தேன்
🛑மாத்தறையிலும் தங்கியிருந்த பின்பு, படகில் இந்தியாவிற்கு சென்றேன்
🛑கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை, கெஹெல்பத்தர பத்மேவின் கூற்றுப்படி எடுத்துச் சென்றேன்.

(இஷாரா செவ்வந்தியின் வாக்கு மூலம்)

################ ##############

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட முன், நிதி வசதியில்லாத பெண் ஒருவருக்கு பண உதவி செய்ததாகவும், சஞ்சீவ கொலையின் போது நீதிமன்றத்திற்கு சென்ற தன்னை, உண்மையான வழக்கறிஞர் என எண்ணிய பெண் தன்னை வழக்கு ஒன்றை வாதாட அழைத்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

“கணேமுல்ல சஞ்சீவவை சுட கமாண்டோ சலிந்துவுடன் நீதிமன்றத்திற்கு வந்தபோது, வழக்கறிஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓய்வு அறையில் இருந்தேன். அங்கு வந்த மிகவும் உதவியற்ற தோற்றமுடைய ஒரு பெண் என்னிடம் பேசினார்.

நான் ஒரு வழக்கறிஞர் என்று அவர் நினைத்தார். அந்தப் பெண்ணின் கணவர் அவரை மோசமாக அடிப்பதாகவும் வழக்கு புதுக்கடை நீதிமன்றத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். தன்னிடம் ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது. அந்தத் தொகைக்கு வழக்கில் வாதாட முடியுமா எனவும் குறித்த பெண் தன்னிடம் கேட்டதாக செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் வேறொரு வழக்கிறக்காக வாதாடவுள்ளதாக கூறினேன். அதனால் நான் அந்த பெண்ணின் வழக்கை அங்கிருந்த மற்றுமொரு பெண்மணியிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு, என் பார்வையில் இருந்த மற்றொரு பெண் வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்றேன்.

அந்தப் பெண் வழக்கறிஞரிடம் சென்று தனது கதையைச் சொன்னார். வழக்கில் முன்னிலையாக 2000 ரூபாய் கேட்டார். அந்த பெண் மிகவும் உதவியற்றவராக என்னைப் பார்த்தார். நான் அவரை அறையிலிருந்து வெளியே அழைத்து, என்னிடம் இருந்த 5000 ரூபாயை கொடுத்து, அந்தப் பெண் சட்டத்தரணியை வழக்கில் வாதாட அழைக்குமாறு கோரினேன். அந்த பெண் என் கைகளைப் பிடித்து, வணங்கி பணத்தை பெற்றுக் கொண்டார்” என இஷாரா செவ்வந்தி குறிப்பிட்டுள்ளார்.

Jaffna Muslim ·

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

இன்னும் 22 பேர் தலைமறைவாகி உள்ளார்களாம்

அதில் ராஜபக்ச குடுப்பதில் எத்தனை பேருக்கு தொடர்பு?

17 hours ago, Justin said:

இஷாரா யாழ்ப்பாணமூடாகத் தப்பிச் சென்ற விவகாரத்தில் சுமந்திரனுக்குத் தொடர்பிருப்பதாகச் சுட்டும் செய்திகள், தகவல்கள் எவையும் எங்கள் யாழ் கள சுமந்திரன் லவ்வர்சுக்குக் கிடைக்கவில்லையோ😎? Just a thought!

16 hours ago, தமிழ் சிறி said:

வக்கீல் சுமந்திரனை பிடித்து, ஆளை ஜாமீனில் வெளியே எடுத்து விடுங்க.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே! சுமந்திரனின் விசிறிகள் கட்டியம் சொல்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி: 👉 https://www.facebook.com/reel/670893809039091 👈

செவ்வந்திக்கு... இன்னும் சிரிப்பாக இருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்

561329823_1266322335510622_8267901518736

hqdefault.jpg

hqdefault.jpg

ஆட்டை திருடிய வடிவேலு, பஞ்சாயத்தை கூட்டுற மாதிரி இருக்கு. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட குழுவை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி!

16 Oct, 2025 | 05:52 PM

image

நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவை 72 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டார். 

நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி கைதுசெய்யப்பட்டார். 

இஷாரா செவ்வந்தியுடன் ஜேகே பாய் உட்பட மேலும் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி நேற்று புதன்கிழமை இரவுக்குள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட குழுவை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பாரிய குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கூட இனவெறி இன பேதம் இல்லாமல் தமக்குள் ஒன்றாக செயற்பட்டுருக்கிறார்கள் எனும் போது நாட்டின் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் தமது முன்னேத்திற்காக இனவெறி இல்லாமல் அனைவரும் இணைந்து செயற்பட்டு அரசியல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாமல் வைக்கும் கோரிக்கையைப்பாத்தால் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையாம். போதைப்பொருள் காரரை கைது செய்வதை விடுத்து, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்கிறார். இஷாராவை கைது செய்ய ஒரு வருடம் எடுத்திருக்கிறது இந்த அரசாங்கத்திற்கு என்று வேறு விமர்சிக்கிறார். இவ்வளவும் செய்த அரசாங்கத்திற்கு இந்தப்பெண்ணின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது பெரிய விடயமா? அல்லது அது தெரியாமல்த்தான் நேபாளம் வரை சென்று கைது செய்தார்களா என்ன? இவருடைய நூறு கோடி சொத்துக்கள் எங்கிருந்து கிடைத்தன, நூறு கோடி மட்டுந்தானா என்பதையும் வெளிக்கொண்டு வரத்தான் போகிறார்கள். அதை விட, வெளிநாட்டில் பதுங்கியுள்ள சொத்துக்களும் அரச உடமையாகத்தான் போகிறது. இவர்களின் கோரமுகத்தை மக்களிடம் இருந்து மறைக்க பயங்கரவாதிகள் என்கிற கதையை இழுத்து மறைக்கப்பார்கிறார்கள். இவர்களின் சுய ரூபம் வெளிப்படுத்தப்படும்போது என்ன நடக்கபோகிறதென பாப்போம். இனிமேல் வெளிநாட்டுக்கும் தப்பியோட முடியாது. போதைப்பொருள் தாதாக்கள் என்றால், சர்வதேசமே பிடித்து அனுப்பிவிடும். பல நாடுகளின், துரோகியின் உதவியில்லாமல் புலிகளை முறியடித்திருக்க முடியாது என்று சொன்னவர்கள், பயங்கரவாதத்தை எப்படி முறியடிப்பது என்று சர்வதேசத்துக்கு பயிற்சியளித்தார்கள். போதைப்பொருள் மாபியாக்களை எப்படி கைது செய்து வலையமைப்பை அழிப்பது என்று பயிற்சி பெற சர்வதேசமே அனுராவை தேடி வரப்போகிறது. அதுமட்டுமல்ல இங்கையின் எந்த அரசாங்கமும் செய்யாத, செய்ய முயற்சிக்காத அதிரடியை செய்து, நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமானவர்களை உடனடியாக அடையாளம் கண்டு பிடித்தது பெரும் சாதனை. அதுவும் பதவியேற்று ஒருவருடத்திற்கு முன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2025 at 06:07, தமிழ் சிறி said:

இந்தப் போதைப் பொருள் மாஃபியாக்களை, கைது செய்யும் நடவடிக்கையை…. அனுரா அரசை தவிர்ந்த வேறு எந்த அரசும் இவ்வளவு மூர்க்கமாக செய்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோரின் கண்ணசைவுடன்தான் இந்தப் போதைப் பொருள் கடத்தலும், வியாபாரமும் நடந்து கொண்டுள்ளதாக பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள்.

இந்த விடயத்தில் அனுரா ஜேவிபி அரசை நானும் போற்றுகிறேன்.

5 hours ago, island said:

பாரிய குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கூட இனவெறி இன பேதம் இல்லாமல் தமக்குள் ஒன்றாக செயற்பட்டுருக்கிறார்கள் எனும் போது நாட்டின் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் தமது முன்னேத்திற்காக இனவெறி இல்லாமல் அனைவரும் இணைந்து செயற்பட்டு அரசியல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும்.

வரும்….ஆனா வராது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.