Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

15 Dec, 2025 | 05:34 PM

image

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளதாக  உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை குறிப்பிட்டுள்ளார். 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனால் இரு நாடுகளுக்கும்  இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.

இதன்போது, போர் குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவோம் எனக்கூறியுள்ளார்.

இதேவேளை, உக்ரைன் நாட்டின் எந்த ஒரு நிலப் பகுதியையும்  ரஷ்யாவிற்கு தர முடியாது என்றும், தங்களது பாதுகாப்புக்கு மேற்கித்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என  உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுனார்.

https://www.virakesari.lk/article/233437

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஏராளன் said:

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளதாக  உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே?

பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி.

சுய புத்தியும் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

சுய புத்தியும் தேவை.

ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால்,

கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி.

இப்ப… நாரி முறிய, கீழே விழுந்து கிடக்கிறார். 😂

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே?

42 minutes ago, தமிழ் சிறி said:

பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி.

இந்த 26 ஆம் புலிகேசியை ஜனாதிபதி ஆக்கியதே உக்ரைனை அழிக்கத்தானே ........ அவர் அதை செவ்வனவே செய்து முடித்துள்ளார். அந்த வகையில் பாராட்டிடலாம்.

கடந்த 3 வருடமாக முழு பலத்தையும் பாவித்து முக்கிய மேற்கு ஆதிக்கம் ரசியாவுடன் மோதி தனது தோல்வியை ஒப்புக்கொண்டது என்பதுதான் இதில் முக்கிய செய்தி. ரசியாவையும் சீனாவையும் ஒரு வழிக்கு கொண்டுவர ஒரு கடடத்தில் ஈரானை அழித்து வெற்றிபெறலாம் என்று எண்ணினார்கள் அதற்கும் ஈரான் இஸ்ரேலுக்கு கொடுத்த அடியுடன் மூடி கட்டிக்கொண்டு கிளம்பி விடடார்கள்.

ஆனால் இந்த யுத்தத்தை உருவாக்கிய மேற்கு பணக்கார வர்க்கம் தனது இலக்கை அடைந்து வெற்றியை கண்டுள்ளார்கள். அவர்கள் இலக்கு ஆயுத விற்பனை .... உலகில் உணவு பற்றாக்குறையை உண்டுபண்ணுவது, (இரண்டிலும் வெற்றிதான்) அதன் மூலம் மோன்சடோ பேயர் ( Monsanto, Bayer ) என்ற இரண்டு மகா கம்பெனிகளும் உலகம் பூராக விவசாயத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவருவது. அவர்கள் எண்ணம் அமெரிக்காவிலேயே பெரும் வெற்றியை கண்டிருக்கிறது அமெரிக்க விவசாயிகள் பெரும் கடனில் மூழ்கி இனி இவர்களிடம் சரண் அடைவது என்பதை தவிர்த்து வேறு வழியின்றி பரம்பரை விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். முன்புபோல் விவசாயிகளால் இனி லாபம் பார்க்க முடியாது ....... இந்த இரண்டு கொம்பனிகளின் கொத்தடிமைகளாக இருந்துகொண்டு அவர்களின் விதைகள் உரங்களை கொள்வனவு செய்து அவர்களுக்கு உழைக்கும் ஒரு துரதிர்ஷ்ட்ட நிலையில் நிற்கிறார்கள்.

சமகாலத்தில் சீனா தென்னமெரிக்க நாடுகளில் விவாசாயத்தை முன்னெடுத்து பெரும் வெற்றியை கண்டுள்ளது இது ஆப்ரிக்காவிட்ற்கும் விரிவாக்கம் செய்யப்படலாம் ஆனால் மேற்கின் அடிமைகளான நைஜீரியா ருவாண்டா தென் ஆப்ரிக்கா அதை முறியடிப்பார்கள். தென் அமெரிக்காவில் ஒரு கலகத்தை உண்டுபண்ணி அமெரிக்க இராணுவ தளங்களை நிறுவுவதன் மூலம் சீனவை விரட்டிடலாம் எனும் நோக்கில்தான் இப்போ வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்த தயாராகி வருகிறார்கள். மீடியாக்களின் உதவியுடன் இப்போ மூளைச்சலவை தொடங்கி வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. இனி வெனிசுவேலா என்ற நாடே மேற்கை குறிப்பாக அமெரிக்காவை அழிக்கத்தான் தோன்றியது போன்ற பரப்புரையை இங்கிருக்கும் ஆடுகள் நம்ப தொடங்கும்போது அது நடக்கும் என எண்ணுகிறேன் அதன் மூலம் இரண்டு இலக்குகள் எடடபடும் ஒன்று வெனிசுவேலாவின் எண்ணெய் அவர்கள் சொத்தாக ஆகும் மற்றது தென்னமெரிக்காவில் ஒரு குழப்ப நிலையை உருவாக்கி விவசாயத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால்,

1 hour ago, ஏராளன் said:

உக்ரைன் நாட்டின் எந்த ஒரு நிலப் பகுதியையும்  ரஷ்யாவிற்கு தர முடியாது என்றும், தங்களது பாதுகாப்புக்கு மேற்கித்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்

இதன் பின்னால் உள்ள இராஜதந்திர முஸ்தீபை புரிந்து கொள்ளும் இயலுமை ஈழத்தமிழருக்கு இருந்திருதால்….

சிங்களவன் ஒன்பதுவாயில்களிலும் பிதுக்கி விட்டிருக்கும் அவல நிலையை அவர்கள் அடைந்திருக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
  1. அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே?

  2. பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி.

  3. ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால்,கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி.

  4. இப்ப… நாரி முறிய, கீழே விழுந்து கிடக்கிறார்.

  5. சுய புத்தியும் தேவை.

இந்த திரியில் கண்ட வசனங்கள் இவை. 😂

இவை அத்தனையும் முகக்கண்ணீடி முன் நின்று தமிழர்கள் தம்மை தாமே கேட்டிருக்க வேண்டியவை அல்லவா!

கச்சிதமாய பொருந்துது எமக்கும். 😂

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, island said:
  1. அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே?

  2. பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி.

  3. ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால்,கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி.

  4. இப்ப… நாரி முறிய, கீழே விழுந்து கிடக்கிறார்.

  5. சுய புத்தியும் தேவை.

இந்த திரியில் கண்ட வசனங்கள் இவை. 😂

இவை அத்தனையும் முகக்கண்ணீடி முன் நின்று தமிழர்கள் தம்மை தாமே கேட்டிருக்க வேண்டியவை அல்லவா!

கச்சிதமாய பொருந்துது எமக்கும். 😂

அப்படி நாங்களே கேட்க தொடங்கினால்............ உலகத்தில் உங்களுக்கு என்ன மரியாதை?

உங்களைப்போன்ற அறிவாளிகள் பிறந்த இனத்தின் பிறந்தோம் என்ற இன்பமே எங்களுக்கு அனுபவித்து முழுவதுமாக களிப்புற ஆயுள்காலம் போதவில்லை. இதில் வேண்டாத வேலைகள் எதற்கு நமக்கு?

நீங்களே கேளுங்கள் ...... நீங்களே செல்லுங்கள்

உங்கள் நிழலில் நாங்கள் நடந்து வருகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, island said:
  1. அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே?

  2. பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி.

  3. ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால்,கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி.

  4. இப்ப… நாரி முறிய, கீழே விழுந்து கிடக்கிறார்.

  5. சுய புத்தியும் தேவை.

இந்த திரியில் கண்ட வசனங்கள் இவை. 😂

இவை அத்தனையும் முகக்கண்ணீடி முன் நின்று தமிழர்கள் தம்மை தாமே கேட்டிருக்க வேண்டியவை அல்லவா!

கச்சிதமாய பொருந்துது எமக்கும். 😂

👍 இதைத் தான் நானும் எழுத நினைத்தேன்: "நாங்கள்" 2002 இல் கூட்டுத் தலைமை பாலசிங்கத்தார் மூலமாக எச்சரிக்கை கொடுத்த பின்னரும் போராடியது வீரம்! அதையே முழுமையான சுதந்திர நாடாக 30 ஆண்டுகள் வரை இருந்த உக்ரைனின் ஒரு தலைவர் செய்தால் "கோமாளித் தனம்".

இதைச் சொல்வோர் ஆமி சுடாத ஷொட் கண்ணோட ஜீப்பில் திரிந்த காலத்திலேயே ஐரோப்பாவுக்குப் பறந்த ஆட்கள். இன்னும் சிலர், உயிர் காக்க ரஷ்யாவூடாக தப்பி, அமெரிக்காவில் வந்து லேண்ட் ஆன ஆட்கள்!

இன்னும் என்னவெல்லாம் கேட்க வேண்டுமெண்டு எங்களுக்குச் சபிச்சிருக்குதோ தெரியேல்ல🤔!

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை போருக்கும்

அடுத்தவன் அரிப்பு போருக்கும்

வித்தியாசம் தெரியாதவர்கள்

எதிரியாய் இருந்தாலும் கோத்தா சொன்னால் சொல்வதை பார்த்து அப்படியே பற்றிக்கொள்ள வேணுமாம்.

அடுத்தவன் சொன்னால் சொன்னவர்கள் கருத்தை விட்டுவிட்டு எங்கே சுச்சா போனார்கள் எப்போ போனார்கள் எங்கே போனார்கள் என்று என்று பிரிச்சு மேய்ந்து அக்குவேறு ஆணிவேறாக பார்க்கவேண்டும். அப்போதான் அது இனிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று யேர்மனி, பேர்லினில் நடைபெற்ற தலைவர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அதன் சுருக்கம்,

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க ஆதரவுடன், உக்ரைனுக்காக ஐரோப்பிய தலைமையிலான ஒரு பன்னாட்டுப் படையை அமைக்க உறுதியளித்துள்ளன. இந்தப் படை உக்ரைன் இராணுவத்தை மீண்டும் வலுப்படுத்த, வான்வெளி மற்றும் கடல்களைப் பாதுகாக்க உதவும். எதிர்காலத்தில் உக்ரைன் இராணுவம் சுமார் 8 லட்சம் வீரர்களைக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்கா தலைமையிலான போர்நிறுத்த கண்காணிப்பு அமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது. இது ரஷ்ய தாக்குதல்களுக்கு முன் எச்சரிக்கை வழங்கவும், போர்நிறுத்த மீறல்களை கண்டறியவும் பயன்படும். முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளை உக்ரைனுக்குப் பயன்படுத்தும் எண்ணத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

போரைக் முடிக்க உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களும், பொருளாதார மறுசீரமைப்புக்கான உதவியும் தேவை என்று அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உக்ரைன் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளன. ரஷ்யா அமைதிக்குத் தயாராகி, டிரம்பின் அமைதித் திட்டத்தையும் போர்நிறுத்தத்தையும் ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக ரஷ்யாவிற்கு மேலதிக அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஆனால், இந்தத் திட்டங்களை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக்கொள்ளுமா என்பதும், உக்ரைனில் வெளிநாட்டு படைகள் இருப்பதை ரஷ்யா ஏற்குமா என்பதும் இன்னும் தெளிவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

விடுதலை போருக்கும்

அடுத்தவன் அரிப்பு போருக்கும்

வித்தியாசம் தெரியாதவர்கள்

எதிரியாய் இருந்தாலும் கோத்தா சொன்னால் சொல்வதை பார்த்து அப்படியே பற்றிக்கொள்ள வேணுமாம்.

அடுத்தவன் சொன்னால் சொன்னவர்கள் கருத்தை விட்டுவிட்டு எங்கே சுச்சா போனார்கள் எப்போ போனார்கள் எங்கே போனார்கள் என்று என்று பிரிச்சு மேய்ந்து அக்குவேறு ஆணிவேறாக பார்க்கவேண்டும். அப்போதான் அது இனிக்கும்

Pedo க்களை ஆதரித்து யாழில் கருத்து எழுதும், பெட்டியில் ஏறும் வயதில், மகள் வயது நடிகைகள் மீது ஜொல்லு வழிக்கும், பீடோ ஆதரவு மாமாக்களிடம் அரிப்பு பற்றிய தகவல்கள் அபரிமிதமாக இருப்பது வியப்பல்ல.

ஆனால் எமது விடுதலை போராட்டத்தையும், இதே போல் “இந்தியாவின் துண்டுதலால், புலிகள் “அரிப்பு” எடுத்து நடத்தினார்கள் என எழுதுவோரும் உளர்.

தேசிய இனங்களின் சுயநிர்ணயத்துக்கான “வேட்கை” சகல இனவழி தேசிய இனங்களுக்கும் ஒன்றே.

எமக்கு வந்தால் விடுதலை வேட்கை, உக்ரேனியனுக்கு வந்தால் அரிப்பு என்பது வடிவேல் ஜோக்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kavi arunasalam said:

ஆனால், இந்தத் திட்டங்களை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக்கொள்ளுமா என்பதும், உக்ரைனில் வெளிநாட்டு படைகள் இருப்பதை ரஷ்யா ஏற்குமா என்பதும் இன்னும் தெளிவில்லை.

பிந்தி வந்த செய்திகள் அதிபர் ட்ரம்ப் 'பிளாட்டினம் பாதுகாப்பு உத்தரவாதம்' ஒன்றை உக்ரேனுக்கு வழங்கவுள்ளார் என்று சொல்கின்றன. இந்த திட்டத்தை அவர் அமெரிக்க காங்கிரஸின் முன் கொண்டு செல்லப் போகின்றார் என்றும் செய்தியில் இருக்கின்றது.

ஆனால் இந்த உடன்படிக்கை முழுவதையும் ரஷ்ய அதிபர் புடின் முற்றாக நிராகரிக்கப் போகின்றார். அவர் எந்த உடன்படிக்கையையுமே நிராகரிப்பார், ஆனால் இது என்ன உடன்படிக்கை............ ரஷ்ய அதிபரைப் பார்த்தால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும், உக்ரேனுக்கும் ஒரு கோமாளியாகத் தெரிகின்றாரா...................... மூன்று வருட சண்டைக்கு பலனாக ஒரு கொஞ்சமாவது ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டாமா.................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

பேசுறவனுக்கும் தெரியும் என்ன பேசுகிறோம் என்று கேட்பவனுக்கும் தெரியும் என்ன கிடக்கிறோம் என்று. அது புட்டினுக்கு மட்டும் தெரியாமல் இருக்கும் என்பதுதான் தற்போதைய உலக அரசியலை நகைப்புக்கிடமாக்கி உள்ளது.

எதோ ஒன்றை எழுதி ஒரு 4-5 மாதம் சும்மா இருந்தார்கள் என்றால் தலைவர் ட்ரம்மிற்கு உக்ரைப்போரை நிறுத்திய செம்மல் என்று படடம் கிடைத்துவிடும் அதை தொடர்ந்து அந்த நோபல் பரிசையும் கொடுத்தால் ஐரோப்பியாவிற்கு வரி விலக்கும் வந்துவிடும்.

இவர்க்ளின் எந்த ஆடடத்திற்கும் கிரிமியாவை ரசியா ஒருபோதும் விட்டுக்கொடுக்க போவதில்லை. க்ரீமியாவை வைத்திருந்தாலே கடலை ரஸ்யா பூரண கண்காணிப்பில் வைத்திருக்கும் அதை ரஸ்யா விட்டுக்கொடுக்க போவதில்லை என்பது இவர்களுக்கும் தெரியும். ஆனால் இவர்கள் இலக்கு க்ரீமியாவை தட்டி பறிப்பதுதான் அங்குதான் முக்கிய பேச்சுக்கள் தொடங்கும். இப்போதே இவர்களின் இராணுவ முழு பலமும் அங்குதான் இருக்கிறது அது சின்ன பிள்ளைக்கே தெரியும் அதை வைத்து இனி ரஸ்யாவிற்கு பூச்சாண்டி காட்டிட முடியாது.

இந்த இடைவெளியில் நாம் வெனிசுவேலாவை களவாடலாம்.

31 minutes ago, goshan_che said:

Pedo க்களை ஆதரித்து யாழில் கருத்து எழுதும், பெட்டியில் ஏறும் வயதில், மகள் வயது நடிகைகள் மீது ஜொல்லு வழிக்கும், பீடோ ஆதரவு மாமாக்களிடம் அரிப்பு பற்றிய தகவல்கள் அபரிமிதமாக இருப்பது வியப்பல்ல.

ஆனால் எமது விடுதலை போராட்டத்தையும், இதே போல் “இந்தியாவின் துண்டுதலால், புலிகள் “அரிப்பு” எடுத்து நடத்தினார்கள் என எழுதுவோரும் உளர்.

தேசிய இனங்களின் சுயநிர்ணயத்துக்கான “வேட்கை” சகல இனவழி தேசிய இனங்களுக்கும் ஒன்றே.

எமக்கு வந்தால் விடுதலை வேட்கை, உக்ரேனியனுக்கு வந்தால் அரிப்பு என்பது வடிவேல் ஜோக்

ஐக்கிய ராச்சியத்தில் இவ்வளவு கருத்து பஞ்சமா?

தலைப்பு :

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

ஐக்கிய ராச்சியத்தில் இவ்வளவு கருத்து பஞ்சமா?

தலைப்பு :

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

இல்லை ஐக்கிய அமெரிக்க நாட்டில் இருந்து அரிப்பு, சிலாவத்துறை, முந்தல் போன்ற பதங்கள் பாவிக்கப்பட்டதால், பாவிப்பவரின் முன்னைய யோக்கியதை என்ன எனபதை நினைவூட்டினேன்.

அதை மறுக்க திராணி இல்லைதானே?

அதன் கீழ் தலைப்பை ஒட்டி கருத்தும் எழுதியுள்ளேன்.

வாசிப்பு மங்குகிறதோ?

  • கருத்துக்கள உறவுகள்

செலன்ஸ்கி இப்பொழுதுதான் தான் விட்ட அடிப்படைத் தவறை உணர்ந்துள்ளார்.மேற்கு நாடுகள் தங்கள் தளங்களை அமைப்பதற்கும் உக்கிரைனின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும் காட்டியே ஆசையே உக்ரைனை நேட்டோவில் இணைத்துக் கொள்வது என்பது. தனது கோடிக்குள் நேட்டோவை ரஸ்யா அனுமதித்தால் அது ரஸயாவின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அந்த நோக்கத்தை ரஸ்யா எந்த விலை கொடுத்தும் நிறைவேற்றும். ஆகவே 3 வருட கால உசுப்பேத்தல் போரினால் நேட்டோ நாடுகளின் ஆயுதங்களைப்பரிட்சித்துப் பார்க்கும் களமாக உக்ரைன் போர் அமைந்திருக்கிறது. இனி நேட்டோவில் இணையும் நோக்கத்தை உக்கரைன் கைவிட்டால் ஆப்கானிஸ்தானை திடீரென்று கைவிட்டதைப்போல உக்ரைனையும் கைவிட்டு விடுவார்கள்.தேவையில்லாமல் அடுத்தவன் பேச்சைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரனைப்பகைக்கப் போய் இனி உக்ரைனுக்கு அவல நிலைதான் ரஸ்யா உக்ரைனை ஒரு பரமஎதிரியாக பார்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எமது விடுதலை போராட்டத்தையும், இதே போல் “இந்தியாவின் துண்டுதலால், புலிகள் “அரிப்பு” எடுத்து நடத்தினார்கள் என எழுதுவோரும் உளர்.

கூட்டமைப்பு தனிநாடு தான் தமிழர்களுக்கு வேண்டும் என்ற போது அது அமெரிக்க ஏகாதிபத்திய மேற்கத்தியம் சொல்லி தான் இப்படி கேட்கின்றார்கள் என்றவர்கள் ரஷ்ய தமிழ் இரசிகர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

பேசுறவனுக்கும் தெரியும் என்ன பேசுகிறோம் என்று கேட்பவனுக்கும் தெரியும் என்ன கிடக்கிறோம் என்று. அது புட்டினுக்கு மட்டும் தெரியாமல் இருக்கும் என்பதுதான் தற்போதைய உலக அரசியலை நகைப்புக்கிடமாக்கி உள்ளது.

எதோ ஒன்றை எழுதி ஒரு 4-5 மாதம் சும்மா இருந்தார்கள் என்றால் தலைவர் ட்ரம்மிற்கு உக்ரைப்போரை நிறுத்திய செம்மல் என்று படடம் கிடைத்துவிடும் அதை தொடர்ந்து அந்த நோபல் பரிசையும் கொடுத்தால் ஐரோப்பியாவிற்கு வரி விலக்கும் வந்துவிடும்.

இவர்க்ளின் எந்த ஆடடத்திற்கும் கிரிமியாவை ரசியா ஒருபோதும் விட்டுக்கொடுக்க போவதில்லை. க்ரீமியாவை வைத்திருந்தாலே கடலை ரஸ்யா பூரண கண்காணிப்பில் வைத்திருக்கும் அதை ரஸ்யா விட்டுக்கொடுக்க போவதில்லை என்பது இவர்களுக்கும் தெரியும். ஆனால் இவர்கள் இலக்கு க்ரீமியாவை தட்டி பறிப்பதுதான் அங்குதான் முக்கிய பேச்சுக்கள் தொடங்கும். இப்போதே இவர்களின் இராணுவ முழு பலமும் அங்குதான் இருக்கிறது அது சின்ன பிள்ளைக்கே தெரியும் அதை வைத்து இனி ரஸ்யாவிற்கு பூச்சாண்டி காட்டிட முடியாது.

இந்த இடைவெளியில் நாம் வெனிசுவேலாவை களவாடலாம்.

ஐக்கிய ராச்சியத்தில் இவ்வளவு கருத்து பஞ்சமா?

தலைப்பு :

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

மருதங்கேணியாரே,

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எல்லாம் ஏலவே தெரியும் என்கின்றீர்கள்.............. கொஞ்சம் கீழே வந்தால் சின்னப் புள்ளைக்கும் தெரியும் என்கின்றீர்கள்................ அப்படி என்ன தான் இவர்களுக்கு தெரியுது என்று எங்களுக்குத் தான் மூன்று வருடங்களாகத் தெரியவில்லை................🤣.

கிரீமியா எல்லாம் எப்பவோ முடிந்த கதை............ இப்ப டான்பாஸ்............... ரஷ்ய பாஸ் நாங்கள் சொல்லியா கேட்கப் போகின்றார்.............. கெடு குடி சொற் கேளாது............ எப்படி இருந்த ரஷ்யா இப்படி ஆயிட்டுதே என்று போய்க் கொண்டிருக்க வேண்டியது தான்.................

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, புலவர் said:

தேவையில்லாமல் அடுத்தவன் பேச்சைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரனைப்பகைக்கப் போய் இனி உக்ரைனுக்கு அவல நிலைதான் ரஸ்யா உக்ரைனை ஒரு பரமஎதிரியாக பார்க்கும்.

உக்ரைனுக்கு பக்கத்து வீட்டுகாரனாக ஐரோப்பிய யூனியன் உள்ளது. அது தான் உக்ரைன் மனதுக்கு பிடித்த பக்கத்து வீட்டுகாரன். அடுத்த பக்கத்து வீட்டு கொள்ளைகாரன் ரஷ்யா இல்லை. உக்ரைனியர்களோடு பேசிபார்க்கும் போது தெரியவரும் எவ்வளவுக்கு ரஷ்யாவை புடினை வெறுக்கிறார்கள். ஈழதமிழ் ரஷ்ய விசுவாசிகளே ரஷ்யா நிராகரித்து மேற்குலகில் வாழ்வை இனிதாக அனுபவித்து கொண்டிருக்கின்ற நிலையில் உக்ரைனை பார்த்து நீ ரஷ்யாவோடு தான் இரு மேற்குலத்தை நிராகரி என்று சொல்வது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, island said:
  1. அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே?

  2. பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி.

  3. ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால்,கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி.

  4. இப்ப… நாரி முறிய, கீழே விழுந்து கிடக்கிறார்.

  5. சுய புத்தியும் தேவை.

இந்த திரியில் கண்ட வசனங்கள் இவை. 😂

இவை அத்தனையும் முகக்கண்ணீடி முன் நின்று தமிழர்கள் தம்மை தாமே கேட்டிருக்க வேண்டியவை அல்லவா!

கச்சிதமாய பொருந்துது எமக்கும். 😂

இது உக்ரேன் போர் பற்றிய திரி. இங்கே உக்ரேன் அரசியலையும் தமிழர் அரசியலையும் சேர்த்து பிசைவதால் எந்த பலனும் இல்லை.

உலகின் ஒவ்வொரு அரசியலையும் நிறுத்தி நிதானித்து முற்றுப்புள்ளியுடன் விவாதிக்க முயற்சி செய்யுங்கள்.

உக்ரேனுக்காக ஐரோப்பிய ஒன்றியம் நிற்பதால் மட்டுமே...உக்ரேன் இன்னும் நிமிர்ந்து நிற்கின்றது.இது தான் இங்கு பேசு பொருள்.

7 hours ago, தமிழ் சிறி said:

பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி.

இனி மேலைத்தேய ஊடகங்களில் உக்ரேன்/செலென்ஸ்கி போன்ற செய்திகள் தலைப்பு செய்தியாக வராது என நம்புகின்றேன்.இராணுவ அடி பலம் மட்டுமல்ல அரசியல் அடியும் பலமாக வீழ்ந்து விட்டது போல் தெரிகின்றது.

டொன்பாஸ்?????? 😁

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

மருதங்கேணியாரே,

எப்படி இருந்த ரஷ்யா இப்படி ஆயிட்டுதே என்று போய்க் கொண்டிருக்க வேண்டியது தான்.................

ரஷியா இப்பிடி இருக்கு .....

அசோவ் (Azov) கடல் பகுதிக்குள் எந்த ஆதிக்கமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதே ரசியாவின் இலக்காக இருந்தது அதன் அனைத்து கரையோரங்களையும் கைப்பற்றி அதை பரிபூரணமாக நிறைவேற்றி உள்ளது. தவிர ரசிய கட்டுப்பாட்டுக்குள் வந்த போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) பகுதியில் ரேர் மட்டேரியல் (Rare Material) கனிம வளம் உண்டு என்றும் சொல்கிறார்கள்.

அமெரிக்காவிற்கு இப்போ உக்ரைனில் சமாதானம் வருதோ இல்லையோ ரேர் மாற்றியலுக்கான மைனிங்கை தொடங்க வேண்டும் என்ற அவசரம்தான் அதிகம். மேற்கின் அனைத்து பேச்சும் இலக்கம் Goal இப்போ அதை நோக்கித்தான் உள்ளது ட்ரம் அதை வெளிப்படையாகவே பல தடவை சொல்லி உள்ளார் உக்ரைனை மீள கட்டும் செலவுக்கு ஈடாக கனிமவளங்கள் வேண்டும் என்று.

Series of four maps showing changes in Russian military control in Ukraine from February 2022 to August 2025.  Feb 2022: No Russian military control. Mar 2022: Rapid Russian advance with areas in red (control) and red stripes (limited control). Nov 2022: Ukraine regains territory; Russian-controlled areas reduced. Dec 2025: Russia edges forward; controlled areas increase again. The maps highlight cities including Kyiv, Kharkiv, Mariupol, Kherson, Kursk, and Pokrovsk. Crimea is outlined in black, indicating its annexation by Russia in 2014. Source: ISW

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.