Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

என்ன. மாற்றம். எற்ப்பட்டு. உள்ளது. ? நோட்டோ. என்பது. மேற்கு. நாடுகளின் பாதுகப்பு. கூட்டமைப்பு. நோட்டோ. வில. இணையவில்லை. மேற்கு. நாடுகள். பாதுகப்ப. உத்தரவாதம். தரவேண்டும். என்றால். என்ன ? அதாவது. நோட்டோ. பாதுகப்பு. தரவேண்டும். என்பது. தான். உறுப்பு. நாடுகளுக்கு. மட்டும். தான். நோட்டோ. பாதுகப்பு. வழங்கும் ஆகவே. பாதுகப்பு. வேண்டுமென்றால். நோட்டோ. இல். அங்கம். வகிக்க. வேண்டும்

சரியான நேர்வழிப் புரிதல். ஆனால், உக்ரைனை "நேட்டோ உறுப்பினருக்கு வழங்கும் பாதுகாப்புக்கு ஒத்த (Article 5-like) பாதுகாப்பு " தருவோம் என்று ஏமாற்றும் வேலையை ட்ரம்ப் செய்வார் என நினைக்கிறேன். எப்படி?

Article 5/சரத்து 5: ஒரு நேட்டோ உறுப்பு நாடு தாக்கப் பட்டால் நேட்டோ பதில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி செய்கிறது.

Article 4/சரத்து 4: அப்படியாக ஒரு உறுப்பு நாடு தக்கப் பட்டால் அது நேட்டோ பதில் வழங்க வேண்டிய தாக்குதலா என்று ஆலோசனை நடத்த வேண்டுமென்கிறது.

ஹங்கேரி, துருக்கி ஆகிய இரு நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் நேட்டோவில், உக்ரைனுக்காக சரத்து 5 இனை அமல் செய்ய ஆலோசனை செய்தால் என்ன பலன் இருக்கும் என்பது ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.

  • Replies 69
  • Views 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே? பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி. ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால்,கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி. இப்ப… நா

  • goshan_che
    goshan_che

    இதன் பின்னால் உள்ள இராஜதந்திர முஸ்தீபை புரிந்து கொள்ளும் இயலுமை ஈழத்தமிழருக்கு இருந்திருதால்…. சிங்களவன் ஒன்பதுவாயில்களிலும் பிதுக்கி விட்டிருக்கும் அவல நிலையை அவர்கள் அடைந்திருக்க மாட்டார்கள்.

  • கிருபன்
    கிருபன்

    ஸ்புட்னிக்கில் ஏறி நிலவில் இருந்து கதைக்கின்ற மாதிரி இருக்கின்றது😂 2014 இல் கிரைமியாவைக் கைப்பற்றியது ரஷ்யா. 2022 பெப்ரவரியில் கியேவை நோக்கி படையெடுத்துப் பின்னர் அடி அகோரத்தால் பின்வாங்கியது ரஷ்யக் க

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அப்படியானால் செலன்ஸ்கி என்ற நவ நாசியை ஆட்சியில் இருந்து அகற்ற "விசேட நடவடிக்கை" என்று சொன்னது, அதை இங்கே புரின் புரியன் மார் தலை மேல் தூக்கித் திரிந்தது, எல்லாம் வெறும் புருடாவா😂?

மேலே சொல்லப்பட்டுள்ள “மேற்கு” என்ற ஒற்றை பதமே காலாவதியான ஒண்டு.

நமது அண்ணர் 2024 க்கு பின் அப்டேட் ஆகவில்லை போலுள்ளது.

அண்மையில் வந்த அமெரிக்க பாதுகாப்பு மூலோபாய ஆவணம் - தற்போதைய ஐரோப்பாவை கடுமையாக சாடி ராஸ்யாவை அரவணைக்கிறது.

ரஸ்யாவும் அதை வரவேற்கிறது.

டிரம்ப் புட்டின் கைப்பாவை இதன் அடிப்படையில் இப்போ அமரிக்கா+ரஸ்யா சேர்ந்து உக்ரேனை விழுங்க முனைகிறனர்.

ஐரோப்பா தனித்து விடப்பட்டுள்ளது. யூகேயும் அதேதான்.

இதுதான் இப்போ உலக ஒழுங்கு.

இன்னும் பழைய மேற்கு கிழக்கு பதங்களை பாவிப்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த AI காலத்திலும் எவ்வளவு கருத்து வரடசியில் இருக்கிறார்கள்?

தலைப்பு சார்ந்து ஒரு கருத்தை பதிய ஏன் இவர்களுக்கு தோன்றுவதில்லை?

இந்த யாழ்களத்தை இப்படி கேவலம் ஆக்கியதை தவிர இதனால் யாருக்கு என்ன லாபம்?

சைகொலோஜி ரீதியாக இதை தெளிவாக புரிந்துகொள்ளலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் செலன்ஸ்கியின் குலுக்கல் நடனத்தை பகிர்ந்த கருத்து செழுமையை களமே கண்டதே.

சாத்தான் வேதம் ஓதக்கூடாது.

வாசகருக்கு,

இந்த செலன்ஸ்கி ஒரு கோமாளி பெல்லி டான்ஸ் ஆடுகிறார் என மேற்படி கருத்தாளர் யாழில் பதிந்த வீடியோ ஒரு ஏ ஐ புரட்டு.

பச்சை பொய்யர் - பொய் என தெரிந்தே பதிந்தார் என்பது என் குற்றச்சாட்டு.

ஆதாரம் இதோ.

இதுதான் இவர் ஏ ஐ உலகில் “கருத்தாடும்” இலட்சணம்.

வெக்கட்கேடு!

https://www.reuters.com/article/fact-check/dancer-in-social-media-video-is-not-ukraines-president-zelenskiy-idUSL1N3930VL/

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Maruthankerny said:

இந்த யாழ்களத்தை இப்படி கேவலம் ஆக்கியதை தவிர இதனால் யாருக்கு என்ன லாபம்?

யாழ் களம் கேவலமாகி இருக்கிறதா? அப்படியானால் யாரால் கேவலமாகியிருக்கிறது? என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும் மருதர்😂!

போலிச் செய்திகளையும், செயற்கை நுண்ணறிவு தயாரிக்கும் துணுக்குகளையும் இணைப்போர் முயற்சித்தும் கூட யாழ் களம் கேவலமாகி விடவில்லை! செய்தி/தகவல்களின் உண்மைத் தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் வசதி இருக்கும் வரை யாழ் களம் தரமாகத் தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரசோதரன் said:

பிந்தி வந்த செய்திகள் அதிபர் ட்ரம்ப் 'பிளாட்டினம் பாதுகாப்பு உத்தரவாதம்' ஒன்றை உக்ரேனுக்கு வழங்கவுள்ளார் என்று சொல்கின்றன. இந்த திட்டத்தை அவர் அமெரிக்க காங்கிரஸின் முன் கொண்டு செல்லப் போகின்றார் என்றும் செய்தியில் இருக்கின்றது.

ஆனால் இந்த உடன்படிக்கை முழுவதையும் ரஷ்ய அதிபர் புடின் முற்றாக நிராகரிக்கப் போகின்றார். அவர் எந்த உடன்படிக்கையையுமே நிராகரிப்பார், ஆனால் இது என்ன உடன்படிக்கை............ ரஷ்ய அதிபரைப் பார்த்தால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும், உக்ரேனுக்கும் ஒரு கோமாளியாகத் தெரிகின்றாரா...................... மூன்று வருட சண்டைக்கு பலனாக ஒரு கொஞ்சமாவது ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டாமா.................

உக்கிரேன் அதிபரிடம் துருப்பு சீட்டு இல்லை எனவும் அவர் அணிந்த ஆடையினை கேள்விக்குள்ளாக்கிய உங்கள் உலக நாட்டாண்மையினை சரியாக உக்கிரேன் அதிபர் செலன்ஸ்கி மாட்டி விட்டுள்ளார் என கருதுகிறேன்.

இதுவரை காலமும் உக்கிரேனை முன்னிறுத்தி பின்னால் நின்ற அனைவரும் நேரடியாக நிற்க வேண்டிய நிலையினை உக்கிரேன் அதிபர் சாதுரியமாக உருவாக்கியுள்ளார், ஆர்டிகல் 5 நிகரான அமெரிக்க உத்தரவாதம் இரண்டு பெரிய அணுகுண்டு நாடுகளை எதிரெதிராக கொண்டு வந்து விட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் உக்கிரேனிற்கான பணத்தினை ஏற்பாடு செய்யாமல் வீடு போக முடியாத நிலை, 800000 இராணுவத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமே காசு வழங்கவேண்டும்.

இதுவரை காலமும் ரிமோட்டில் இந்த போரினை விடியோ கேமாக விளையாடியவர்கள் தற்போது சுமை சுமக்கிறார்கள், இது போக போக நிலமை தீவிரமாகும், போரிற்கு கொம்பு சீவினவர்களும் அதற்கான பலனை அனுபவித்தே ஆவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, vasee said:

உக்கிரேன் அதிபரிடம் துருப்பு சீட்டு இல்லை எனவும் அவர் அணிந்த ஆடையினை கேள்விக்குள்ளாக்கிய உங்கள் உலக நாட்டாண்மையினை சரியாக உக்கிரேன் அதிபர் செலன்ஸ்கி மாட்டி விட்டுள்ளார் என கருதுகிறேன்.

இன்றைய செய்தியை பார்த்தீர்களா, வசீ................. அமெரிக்கா உக்ரேனின் நிலப்பகுதிகளை தங்களுக்கு கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருப்பதாக ரஷ்ய தரப்பிலிருந்து சொல்லுகின்றார்கள்..................🫢.

நாங்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை பாடசாலைகளில் எங்களுக்கு பிஸ்கட் கொடுத்தார்கள். அது அமெரிக்கா கொடுத்த பிஸ்கட்டே............... அப்படி ஏதோ பெட்டிக்குள்ளிருந்து பிஸ்கட் எடுத்துக் கொடுப்பது போலவே இந்தச் செய்திகளும் இருக்கின்றன.................

ஆனால் அவர்கள் இருவரும் மாறி மாறி ட்ரோன்களை விட்டு, இரண்டு நாடுகளையும் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்............ நேற்று ஒரு நீர்மூழ்கி போய்விட்டதா.............🫣.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் அதிபர் மிகவும் இக்கட்டான நேரத்தில் மிகவும் கடினமான முடிவை எடுத்திருப்பது உலக அமைதிக்கு வழி வகுக்கும். அதேவேளை தனக்கு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்திருக்கிறார். நல்லது நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நமது அண்ணர் 2024 க்கு பின் அப்டேட் ஆகவில்லை போலுள்ளது.

ஆனால் நான் அப்டேட்டட்! எனக்கு ஏஅய் எண்டு வாசிக்கத்தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, vasee said:

உக்கிரேன் அதிபரிடம் துருப்பு சீட்டு இல்லை எனவும் அவர் அணிந்த ஆடையினை கேள்விக்குள்ளாக்கிய உங்கள் உலக நாட்டாண்மையினை சரியாக உக்கிரேன் அதிபர் செலன்ஸ்கி மாட்டி விட்டுள்ளார் என கருதுகிறேன்.

இதுவரை காலமும் உக்கிரேனை முன்னிறுத்தி பின்னால் நின்ற அனைவரும் நேரடியாக நிற்க வேண்டிய நிலையினை உக்கிரேன் அதிபர் சாதுரியமாக உருவாக்கியுள்ளார், ஆர்டிகல் 5 நிகரான அமெரிக்க உத்தரவாதம் இரண்டு பெரிய அணுகுண்டு நாடுகளை எதிரெதிராக கொண்டு வந்து விட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் உக்கிரேனிற்கான பணத்தினை ஏற்பாடு செய்யாமல் வீடு போக முடியாத நிலை, 800000 இராணுவத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமே காசு வழங்கவேண்டும்.

இஙளவுக்கு செலன்ஸ்கி இராஜதந்திர கேம் ஆடுகிறார் என நீங்கள் எழுதினால், அண்ணன்மாருக்கு பிளட் பிரசர் ஏகிறிவிடும், கவனம்.

52 minutes ago, vasee said:

இதுவரை காலமும் ரிமோட்டில் இந்த போரினை விடியோ கேமாக விளையாடியவர்கள் தற்போது சுமை சுமக்கிறார்கள், இது போக போக நிலமை தீவிரமாகும், போரிற்கு கொம்பு சீவினவர்களும் அதற்கான பலனை அனுபவித்தே ஆவார்கள்

எல்லாரையும் பட்டியல் இட்டீர்கள். குறை சொன்னீர்கள் - எனக்கும் உடன்பாடுதான்.

ஆனால், தேடிப்பார்த்தேன், ஒரு இறைமையுள்ள நாட்டினுள் படைகளை அனுப்பி போரை ஆரம்பித்த புட்டின் பற்றி ஒரு வரி கூட இல்லை.

வீட்டில் யன்னல்கள் அதிகமோ😂

39 minutes ago, ரசோதரன் said:

இன்றைய செய்தியை பார்த்தீர்களா, வசீ................. அமெரிக்கா உக்ரேனின் நிலப்பகுதிகளை தங்களுக்கு கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருப்பதாக ரஷ்ய தரப்பிலிருந்து சொல்லுகின்றார்கள்..................🫢.

நாங்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை பாடசாலைகளில் எங்களுக்கு பிஸ்கட் கொடுத்தார்கள். அது அமெரிக்கா கொடுத்த பிஸ்கட்டே............... அப்படி ஏதோ பெட்டிக்குள்ளிருந்து பிஸ்கட் எடுத்துக் கொடுப்பது போலவே இந்தச் செய்திகளும் இருக்கின்றன.................

ஆனால் அவர்கள் இருவரும் மாறி மாறி ட்ரோன்களை விட்டு, இரண்டு நாடுகளையும் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்............ நேற்று ஒரு நீர்மூழ்கி போய்விட்டதா.............🫣.

டிரெம்ப் இருக்கும் வரை புட்டினுக்கு வெற்றி மேல் வெற்றிதான்.

ஈயூ, யூகே, துணையுடன் - அதிக இழப்பு இல்லாமல் டிரம்பின் பதவிகாலத்தை எப்படி கடத்துவது என்பது மட்டுமே இப்போதைக்கு செலன்ஸ்கியின் குறி என நான் எண்ணுகிறேன்.

பிகு

அமெரிக்கன் அரசிடம் இருக்கும் எப்ஸ்டீன் பைலில் டிரம்ப் பற்றிய போட்டோ தான் உள்ளது….

புட்டினிடம் டிரம்பின் எப்ஸ்டீன் விளையாட்டுகளின் வீடியோவே உள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

புட்டினிடம் டிரம்பின் எப்ஸ்டீன் விளையாட்டுகளின் வீடியோவே உள்ளதாம்.

🤣.................

ஏதேதோ வெளியிடுகின்றார்கள், இதை மட்டும் வெளியே விடுகின்றார்கள் இல்லை........😜.

அதிபர் ட்ரம்ப் இவ்வளவு ஆதரவாக இருந்துமே, சேற்றில் ஒரு கால், சகதிக்குள் ஒரு கால் என்று ரஷ்யாவும், அதிபர் புடினும் இழுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்............. உக்ரேன் மக்களின் வீரம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று......................👍.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

🤣.................

ஏதேதோ வெளியிடுகின்றார்கள், இதை மட்டும் வெளியே விடுகின்றார்கள் இல்லை........😜.

அதிபர் ட்ரம்ப் இவ்வளவு ஆதரவாக இருந்துமே, சேற்றில் ஒரு கால், சகதிக்குள் ஒரு கால் என்று ரஷ்யாவும், அதிபர் புடினும் இழுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்............. உக்ரேன் மக்களின் வீரம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று......................👍.

அந்த வீடியோ எல்லாம் புட்டினுக்கு பொன் முட்டையிடும் வாத்து.

என்று அதை வெளியிட்டால் தனக்கு தீமையை விட நன்மை என உணர்கிறாரோ அன்று வெளியிடுவார்.

அண்டைக்கு MAGA மொக்குகளே தம்பருக்கு உயிரோடு சமாதி கட்டுவார்கள்😂.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ஆனால் அவர்கள் இருவரும் மாறி மாறி ட்ரோன்களை விட்டு, இரண்டு நாடுகளையும் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்............ நேற்று ஒரு நீர்மூழ்கி போய்விட்டதா.............🫣.

இது போன்ற இரஸ்சியாவிற்குள் நிகழும் தாக்குதலுக்கு பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக கூறுகிறார்கள், இதனை உக்கிரேன் தரப்பில் இருந்து புடனோவ் ஒழுங்குபடுத்துகிறார் என கூறப்படுகிறது, புடனோவ் சி ஐ ஏ இனால் பயிற்றுவிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

56 minutes ago, goshan_che said:

எல்லாரையும் பட்டியல் இட்டீர்கள். குறை சொன்னீர்கள் - எனக்கும் உடன்பாடுதான்.

ஆனால், தேடிப்பார்த்தேன், ஒரு இறைமையுள்ள நாட்டினுள் படைகளை அனுப்பி போரை ஆரம்பித்த புட்டின் பற்றி ஒரு வரி கூட இல்லை.

வீட்டில் யன்னல்கள் அதிகமோ😂

தேவையில்லாத மேலதிக விடயங்களை எழுதினால் நச்சென்றிருக்காது🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

செலன்ஸ்கியின் குலுக்கல் நடனத்தை பகிர்ந்த கருத்து செழுமையை களமே கண்டதே.

இப்படி ஒரு நடனத்தை யாழ்களத்தில் போடுவதற்கு இவருக்கு எப்படி மனது வந்தது 🙁

1 hour ago, goshan_che said:

செலன்ஸ்கி இராஜதந்திர கேம் ஆடுகிறார் என நீங்கள் எழுதினால், அண்ணன்மாருக்கு பிளட் பிரசர் ஏகிறிவிடும், கவனம்.

😂

செலன்ஸ்கி இராஜதந்திர கேம் ஆடுகிறார் என்று தான் Vasee நினைத்தார். மற்றவரோ செலன்ஸ்கி பெல்லி நடனம் ஆடுவதாக கற்பனை பண்ணி அதை யாழ்களத்திலும் போடுகின்றார்

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2025 at 13:49, island said:
  1. அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே?

  2. பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி.

  3. ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால்,கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி.

  4. இப்ப… நாரி முறிய, கீழே விழுந்து கிடக்கிறார்.

  5. சுய புத்தியும் தேவை.

இந்த திரியில் கண்ட வசனங்கள் இவை. 😂

இவை அத்தனையும் முகக்கண்ணீடி முன் நின்று தமிழர்கள் தம்மை தாமே கேட்டிருக்க வேண்டியவை அல்லவா!

கச்சிதமாய பொருந்துது எமக்கும். 😂

உக்ரேன் என்பது அனைத்து வளங்களையும் சொந்த அரசியலையும் நாடு மொழி ராணுவம் ஆட்சியென்று அனைத்தையும், உலகதேவையின் பெரும்பங்கை கொண்ண்ட தானியங்கள், எண்ணெய்வளம், கனிமங்கள், பல்கலைகழகங்கள்,உலகத்திலேயே பெரிய சரக்கு விமானத்தை கொண்ட பெருமை ஆயுத உற்பத்தி என்று பலவற்றை கொண்டு தனியாக இயங்கியநாடு. அத்தனையும் இருந்தும் தனது பாதுகாப்பு என்று சொல்லிக்கொண்டு வேற்று வல்லரசு சக்திகளுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்க்க கிளம்பியதால்தான் இந்த போரே ஆரம்பித்தது.

தமிழர்கள் இத்தனை வசதிகள் தம் வசம் இருந்தும் இந்திய வல்லரசுடனும் உலக வல்லரசுகளுடனும் இணைந்து இலங்கையை அழிக்க நினைத்து இறுதியில் தோற்று போனார்களா?

அதைதான் கண்ணாடிமுன் நின்றூ கேட்கவேண்டுமென்று நீங்கள் அர்த்தப்படுத்துகிறீர்களா?

உக்ரேன் மேற்குலகுடன் இணைந்து ரஷ்யாவை மிரட்ட வேண்டுமென்று போர் செய்த நாடு, தமிழர்கள் எவர் உதவியும் இன்றி சிங்களவனிடம் அடிவாங்கி செத்ததால் வேறுவழியின்றி போர் செய்த இனம் இந்த இரு பிரிவுகளையும் ஒப்பிட்டுபார்க்க எந்தரீதியிலான பெளதீக அறிவு உங்களை தூண்டியது?

உக்ரேன் சொந்தநாடு இருந்தும் போருக்கு வழி தேடிய இனம், தமிழர்கள் வேறி வழி இல்லாததால் சொந்தநாடுவேண்டி போராடி தோற்றுபோன இனம் இந்த இரண்டையும் ஒப்பிட்டு எகத்தாளமாய் சிரிக்க உங்கள் ஒரு சிலரால் முடிகிறது அது உலகின் பார்வைக்கு கண்டிப்பாக ஏளனமாய் அமையாது.

1958 ,1977, 1983 வரை எந்த தமிழர்களும் ஆயிரக்கணக்கில் ஆயுதம் ஏந்தி சிங்களவனுக்கெதிராய் போராட நினைத்ததில்லை, அவன் அரசியல் யாப்பையும் ஆயுதபடைகளையும் ஏற்றும், சொல்லபோனால் படைபலத்தை வைத்து சிங்களவன் எங்களை நீங்கள் வேறு நாங்கள் வேறூ என்று மிதி மிதியென்று மிதித்தபோதும் துடைத்துவிட்டு காவல்துறை ராணுவம் கடற்படை விமானபடை என்று சிங்களவனின் படைகளில் சேவையாற்றியும் வாழ்ந்தார்கள்.

கல்வி சுகாதாரம் பாதுகாப்பு, மொழி, அரசியல் என்று அனைத்திலும் வலிகளை மட்டுமே அவன் எமக்கு தந்தாலும்முடிந்தவரை சிங்கள தேசத்துடன் முரண்படாமலே வாழ நினைத்தார்கள். 83ல் ஜேஆர் எனும் மனிதகுலவிரோதி இலங்கையில் இனக்கலவரம் என்ற ஒன்றை உருவாக்காமல் விட்டிருந்தால் தமிழர் ஆயுத போராட்ட இயங்கங்களின் உறுப்பினர் தொகை இரண்டு இலக்கங்களுக்கிடையே மட்டுமே இருந்து தானாகவே காணாமல் போயிருக்கும்.

லட்சக்கணக்கான தமிழர்கள் ஆயுதபோராட்ட இயக்கங்களுக்கு பின்னால் போக வைத்த பெருமை சிங்கள இனத்தையும் ஆட்சியாளர்களையுமே சேரும்.

உக்ரேன் அப்படியா வாழ்ந்துவிட்டு நேட்டோவுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்த்து போர் செய்து பேரழிவின் முடிவில் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்தது?

எங்கள் காயங்கள் உங்களுக்கு சிரிப்புக்கிடமானதாக தெரிந்தால் விலகி நில்லுங்கள் அதனை பார்த்து கைகொட்டி சிரிக்காதீர்கள்,

பிற விலங்குகள் குட்டி ஈன்று கொண்டிருக்கும்போதே தன்பசியாற தாயின் பிறப்புறுப்பிலிருந்து இழுத்தெடுத்து உண்ணுமாம் ஹயினாஸ் எனும் விலங்கு அதுபோல் எமக்கு வசதியென்றால் எது வேண்டுமென்றாலும் பேசலாமென்ற மனபாங்கில் பேசி பழகுவான் மனிதன்.

அது விலங்குகள் பரவாயில்லை அப்படித்தான் அவற்றின் இயற்கை சுழற்சி இருக்கும், நாம் அப்படியா? அழகானமனிதர்கள்.

அழகான மனிதர்கள் அந்த கொடூர இனத்தில் சேராமல் சுயமாக சிந்தித்து வாழ்ந்தால் அதில் தவறென்று எதுவும் இருக்க போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரசோதரன் said:

இன்றைய செய்தியை பார்த்தீர்களா, வசீ................. அமெரிக்கா உக்ரேனின் நிலப்பகுதிகளை தங்களுக்கு கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருப்பதாக ரஷ்ய தரப்பிலிருந்து சொல்லுகின்றார்கள்..................🫢.

பெரும்பான்மையான உக்கிரேனியர்கள் (சமூக ஊடகத்தினடிப்படையில்) உக்கிரேன் இராணுவத்தினரே நிலம் தொடர்பான முடிவு எடுக்கவேண்டும் என கருதுகிறார்கள், அரசியல்வாதிகளுக்கு இதில் பங்கிருக்ககூடாது என கருதுகிறார்கள்.

அரசியல்வாதிகள் தமது பிள்ளைகளை போர்களத்திற்கு அனுப்புவதில்லை எனவும் பல முன்னால் அரசியல்வாதிகள் பலரை அவர்கள் முன்னர் பேசிய பேச்சுக்களினடிப்படையில் தற்போது போருக்கு போகலாம் என கூற அதற்கு பதிலாக அவர்கள் நாட்டிற்கு ஏற்கனவே பணியாற்றி விட்டதாகவும் இராணுவத்தில் சேரவில்லை என குறிப்பிடும் வாதங்கள் சமூக ஊடகங்களில் பார்க்கமுடிகின்றது.

உக்கிரேன் அரசியல்வாதிகள் எமது தமிழ் அரசியல்வாதிகள் போலவே இருக்கிறார்களோ என எண்ணும் வகையில் இந்த கருத்துக்களை பார்க்கும் போது தோன்றுகிறது.

2050 இல் உக்கிரேனின் சனத்தொகை 40% வீழ்ச்சியுறும் என கூறுகிறார்கள், மறுபுறம் சிறுபான்மை யூத பின்புலம் கொண்ட அரசியல்வாதிகள் இந்த போரின் மூலமான பலனை அனுபவிக்கிறார்கள், நாட்டினை கொள்ளை அடிக்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள்.

ஒரு சிக்கலான நிலை நிலவும் போது ஆக்கிரமிப்பு பயன்படுத்தும் பிரித்தாளும் உத்தி இங்கும் பிரயோகிக்கப்படுகிறது என கருதுகிறேன், உக்கிரேனியர்கள், பெலருசியர்கள் மற்றும் இரஸ்சியர்கள் ஒரே அடிபடையில் இருந்து வந்தவர்கள் என கூறுகிறார்கள் அதற்கு காரணமான மொழி (3 மொழிகளும் கிழக்கு சிலாவிய) மற்றும் வரலாற்று காரணிகளினடிப்படையில் ஒரு உளவியல் யுத்தம் மேற்கொள்ளப்படுகிறது என கருதுகிறேன்.

போர் முடிவிற்கு வந்தாலும் மேற்கு மற்று கிழக்கு ஐரோப்பாவிற்கிடையேயான வேறுபாடுகளை கருத்தில் கொண்டு உக்கிரேன் ஒரு ஐரோப்பிய இராணுவ பலமாகவும் தொடர்ச்சியான் இரஸ்சிய தேய்மானமாகவும் இருக்கலாம், இதனாலேயே 800000 இராணுவத்தினை உக்கிரேனில் பேண ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது.

ஆனால் முன்னரங்க போர் முனைக்கு செல்லும் ஒரு உக்கிரேனிய போர் வீரர் உக்கிரேனிய இராணுவ மனநிலையினை போர் விரைவில் முடிந்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதனையே பிரதிபலிக்கின்றது.

ஆரம்பத்திலிருந்தே உக்கிரேனை இரஸ்சியாவிற்கெதிராக கொம்பு சீவிய அமெரிக்கா போரில் இராணுவ தோல்வி தவிர்க்க முடியாத நிலையில் முழு வகிபாகத்தினையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மேல் தள்ளி விட்டுள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தினை அமெரிக்கா தனது அச்சுறுத்தலாக பார்க்கிறதா? ஐரோப்பிய நாடுகளுக்கு தனியான நேரடி உறவினை மேம்படுத்தவே அமெரிக்கா விரும்புகின்றது போல் உள்ளது.

இந்த ஆர்டிகள் 5 இற்கு நிகரான உத்தரவாதத்தினை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது ஒரு பரிசோதனை முயற்சி என கருதுகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு. நோட்டோ வில். இணையமாட்டோம். என்றிருக்கிறது. ஆனால். அதன். கீழ் வரும். செய்தி. நோட்டோ. பாதுகாப்பு. வழங்கினால். நோட்டோ வில் இணையமாட்டோம். என்று. உள்ளது. இதையே. நோட்டோவிலுள்ள. எல்லா. நாடுகளும். சொன்னால் நோட்டோ. என்ற. ஒன்றே இருக்காது. அப்படி. என்றால். யார். பாதுகாப்பு. வழங்குவது ? மேலும் உக்கிரேன். அதிபரின் முடிவு. அமுல்படுத்தப்படுவது. நோட்டோ. தான் தீர்மானிக்க. முடியும் மாறாக. உக்கிரேன். அதிபர் இல்லை. அதை. அவரே. மறைமுகமாக. சொல்லி. உள்ளார்.

தலைப்பு. பிழையாக. இருக்கும் போது. அதனைப்பார்த்து. எழுதும் கருத்துகளும். பிழையாகத் தான். இருக்க. முடியும் மொத்ததில். உக்கிரேன். நோட்டோவில். இணைவது அல்லது இணைவதில்லை. என்பதை. நோட்டோ. தான். தீர்மானிக்க. முடியும். மாறாக. உக்கிரேன். அதிபர். இல்லை. அவரால். நோட்டோவின். பாதுகாப்பு. தேவையில்லை. என்று. சொல்ல முடியுமாயின். நோட்டோவில. இணையவில்லை என்று கூற. முடியும். பாதுகாப்பு. தாருங்கள் என்று கூறும்போது. நோட்டோவில. இணையவில்லை. என்று. கூறும். தகுதியை. உக்கிரேன் அதிபர். இழந்துவிட்டார். அது. நோட்டோவிடம். ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதற்க்கு. சரியான. தீர்வு. பழைய. சோவியத் யூனியனை. உருவாக்குவது. தான். அவ்வாறு. உருவாகும்போது புட்டினின். வேலிக்குள். நோட்டோ. இருக்க மாட்டாதா ? இன்று. உக்கிரேன். நோட்டோவில். இணந்தால். வேலிக்குள் நோட்டோவந்து விடும் என்று. கூறுவது. ஏன். ?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

இந்த ஆர்டிகள் 5 இற்கு நிகரான உத்தரவாதத்தினை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது ஒரு பரிசோதனை முயற்சி என கருதுகிறீர்களா?

இந்த ஆர்டிகள் 5 இற்கு நிகரான உத்தரவாதம் வெறும் வாய்ப்பேச்சு என்றே நான் நினைக்கின்றேன், வசீ. இதை அமெரிக்காவும், மற்றைய நேட்டோ நாடுகளும் உக்ரேனுக்கு வழங்கினால், ரஷ்யாவின் மொத்த முயற்சிகளுமே வீண் என்றாகிவிடும். அதிபர் புடின் அவருக்கு சுயநினைவு இருக்கும் வரை இதற்கு ஒத்துக்கொள்ளப் போவதில்லை. அதே போலவே அதிபர் ட்ரம்பும். இவர் சும்மா சும்மா எதையாவது வெறும் திண்ணைப் பேச்சு போல எடுத்து விட்டுக் கொண்டிருக்கின்றார். மறு நாளே 180 பாகைகளில் திரும்பிவிடுவார். ஒரு பொறுப்பான பேச்சுகளாக பலதும் இல்லை.

நீங்கள் உக்ரேனுக்கு இந்த இருபக்க சண்டையால் எவ்வளவு குறுகிய கால மற்றும் நீண்ட கால இழப்புகள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். சொல்லப்பட்டிருக்கும் கணக்குகளும், எண்களும் பிழையாக, மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம், ஆனால் எந்த யுத்தத்தாலும் அதில் பங்குபற்றும் நாடுகளுக்கு மனித வளமும், மற்றய வளமும் இழப்பாகும் என்பது உண்மையே. உக்ரேன் போலவே ரஷ்யாவும் மிகப் பெரிய இழப்புகளை சந்தித்துக் கொண்டிடுருக்கின்றது. அங்கும் ஒரு தலைமுறை இல்லாமலேயே போய்க் கொண்டிருக்கின்றது. அவர்களுடைய வரவு செலவில் மூன்றில் ஒரு பங்கு இந்த சண்டைக்காக போய்க் கொண்டிருக்கின்றது என்று சில இடங்களில் குறிப்பிட்டிருந்தார்கள். இது எவ்வளவு பெரிய ஒரு தொகை.................... இறந்த மற்றும் காயமடைந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையையும் மிகப் பெரிதாகச் சொல்கின்றார்கள்.

இந்த உலகிற்கும், இன்றைய மற்றும் எதிர்கால சந்ததிகளுக்கும் பயனுள்ளவற்றை கொடுக்கக்கூடிய வலுவும், திறமையும் மிகச் சில நாடுகளுக்கு மட்டுமே உள்ளது. அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவதாக ரஷ்யா இந்த வரிசையில் இருக்கவேண்டும். ஆனால் ரஷ்யா பாதாளத்தை நோக்கியே போய்க் கொண்டிருக்கின்றது. அங்கிருந்து எதுவும் இந்த உலகிற்கு கிடைக்கப் போவதில்லை. மலிவு விலை எண்ணெயை மட்டுமே அவரவர் இலாபங்கள் கருதி சிலர் ரஷ்யாவிடம் இருந்து வாங்கிக் கொள்கின்றார்கள். அந்த மலிவு விலை வர்த்தகத்தில் கூட ரஷ்யா பலவீனமான பக்கமாகவே இருக்கின்றது என்பது வேதனையான விடயம். இந்த உக்ரேன் சண்டை ஆரம்பித்த பின், சீனா - ரஷ்யா இடையான வர்த்தகம் பற்றிய கட்டுரைகளை வாசித்திருப்பீர்கள் தானே. அது மிகவும் ஒரு தலைப்பட்சமாக சீனாவுக்கு மிகவும் சாதகமாகவே இருக்கின்ற்து. அத்துடன் சீனாவுக்கு ரஷ்யா தேவையில்லை, ரஷ்யாவுக்கே சீனா தேவையாக இருக்கின்றது. இது ஒரு தலைகீழ் மாற்றம் அல்லவா.

தனிப்பட்ட ரீதியில் ரஷ்யாவின் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிலர் இதை மறுக்கலாம், ஆனால் இது ஒரு ஆக்கிரமிப்பாகவே என்றும் எனக்குத் தெரிகின்றது. உக்ரேன் ஒரு சுதந்திரநாடாகவே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என்றோ அல்லது பலவீனமாக்கப்பட வேண்டுமோ என்று நான் எண்ணவில்லை. ஆனால் அதிபர் புடின் போன்ற ஒற்றைத் தலைமைகளின் வரலாறும், முடிவும் எக்காலத்திலும் ஒன்றே, அவர் உக்ரேனில் இல்லாவிட்டாலும், வேறு எங்கேயோ அவருடைய முடிவில் அதைச் சந்திக்கவே போகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

உக்கிரேன் நோட்டோவில் இணந்தால் வேலிக்குள் நோட்டோவந்து விடும் என்று கூறுவது ஏன்?

அண்ணா,

சில நாட்களின் முன் கிருபன் ஒரு கட்டுரையை இங்கு இணைத்திருந்தார். பா. ரவீந்திரன் என்பவரால் அது எழுதப்பட்டது. அவர் அதை ரஷ்யாவுக்கு ஆதரவாக ஒரு வக்கீல் வாதம் செய்வது போன்று எழுதியிருக்கின்றார். அதில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உக்ரேன் நேட்டோவில் இணைய விரும்புவது ஒரு முக்கிய காரணம் அல்ல, பத்தோடு சேர்ந்த ஒன்றே அது என்று அவர் சொல்லியிருக்கின்றார்.

உக்ரேனியர்கள் உக்ரேனின் வாழும் ரஷ்ய வழி வந்தவர்களை கொடுமைப்படுத்துகின்றார்கள், கொலை செய்கின்றார்கள் என்று கூட அவர் சொல்லுகின்றார். 70 வீதம், 30 வீதம் என்ற ஒரு கணக்கும் அதில் இருந்தது என்று ஒரு ஞாபகம்.

ஆகவே சொல்லப்படும் காரணங்கள் எதுவுமே நம்பப்பட வேண்டியவை அல்ல என்று நினைக்கின்றேன். நான்கு புள்ளிகள் கண்களுக்குத் தெரிகின்றன, சிலர் அதை ஒரு நாற்கோணி என்கின்றார்கள், சிலர் அதை ஒரு வட்டம் என்கின்றார்கள்......... அதை நாலு டைனோசர்கள் என்றும் சொல்லலாம் போல.............🤣.

எனக்கும், உங்களுக்கும் ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமிப்பது போலவே தெரிகின்றது என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

நீங்கள் உக்ரேனுக்கு இந்த இருபக்க சண்டையால் எவ்வளவு குறுகிய கால மற்றும் நீண்ட கால இழப்புகள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். சொல்லப்பட்டிருக்கும் கணக்குகளும், எண்களும் பிழையாக, மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்,

உக்ரைனில் மக்கள்தொகை நெருக்கடி: அளவு, காரணங்கள் மற்றும் முன்னறிவிப்புகள்.

06.12.2025

பகிர்:

ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் இடுகைகள் உறை

பொருளடக்கம்:

உக்ரைன் அதன் நவீன வரலாற்றில் மிக முக்கியமான மக்கள்தொகை நெருக்கடியை சந்தித்து வருகிறது. பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் செயல்முறைகளை - விரைவான மக்கள்தொகை சரிவு, பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சி, பெருமளவிலான இடம்பெயர்வு மற்றும் நாட்டின் வயதானது - இந்தப் போர் துரிதப்படுத்தியுள்ளது. இந்தப் போக்கு நிறுத்தப்படாவிட்டால், வரும் பல தசாப்தங்களுக்கு நாடு அதன் வளர்ச்சித் திறனை இழக்கும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உக்ரைனின் மக்கள் தொகை: மெதுவான சரிவிலிருந்து கூர்மையான வீழ்ச்சி வரை

2022 ஆம் ஆண்டு வாக்கில், உக்ரைனின் மக்கள் தொகை சுமார் 41-42 மில்லியனாக இருந்தது. பல்வேறு மதிப்பீடுகளின்படி, இன்று அந்த எண்ணிக்கை 35-36 மில்லியனாகக் குறைந்துள்ளது. 1990களின் மிகவும் கடினமான காலங்களில் கூட, அத்தகைய சரிவு ஏற்படவில்லை.

பொருளாதார வல்லுநரும் மக்கள்தொகை ஆய்வாளருமான எல்லா லிபனோவா, போருக்கு முன்பே சரிவு நடந்து கொண்டிருந்தது என்பதை வலியுறுத்துகிறார், ஆனால் முழு அளவிலான படையெடுப்பு அதை வியத்தகு முறையில் ஆக்கியது:

"உக்ரைன் ஏற்கனவே குறைந்தது 10 மில்லியன் மக்களை இழந்துவிட்டது. இவை வெறும் எண்கள் அல்ல - இது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இழந்த மனித மூலதனம்."

மக்கள்தொகை ஆய்வாளர் எல்லா லிபனோவா / நஸாரி மசிலுக்

மக்கள்தொகை ஆய்வாளர் எல்லா லிபனோவா / நஸாரி மசிலுக்

மக்கள்தொகை ஆய்வாளர்களின் மதிப்பீடுகளின்படி, 2050 வாக்கில் மக்கள் தொகை 27-29 மில்லியனாகக் குறையக்கூடும், மேலும் அவநம்பிக்கையான சூழ்நிலையில் - 25 மில்லியனாகக் கூட சுருங்கக்கூடும்.

மக்கள்தொகை குறைப்புக்கு மூன்று முக்கிய காரணிகள்

  1. இடம்பெயர்வு: வெளிநாடுகளில் மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள்.

போர் தொடங்கியதிலிருந்து, 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். சிலர் திரும்பி வருகின்றனர், ஆனால் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாடுகளில் ஒன்றிணைந்து, வேலை தேடி, தங்கள் குழந்தைகளை உள்ளூர் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

போரினால், உக்ரைனில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது / TSN.ua

போரினால், உக்ரைனில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது / TSN.ua

மக்கள்தொகை ஆய்வாளர் ஒலெக்சாண்டர் கிளாடுன் விளக்குகிறார்:

"ஒருவர் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் வெளிநாட்டில் வசித்து வந்தால், அவர்கள் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறையும். அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்திருந்தால், அந்த வாய்ப்புகள் கணிசமாகக் குறையும்."

பல உக்ரேனியர்கள், குறிப்பாக குழந்தைகளைக் கொண்ட இளம் பெண்கள், நிரந்தரமாக வெளிநாட்டில் தங்கக்கூடும் என்பதை EU ஏற்கனவே அங்கீகரித்துள்ளது.

ஒலெக்சாண்டர் கிளாடுன் / ஆர்பிசி-உக்ரைன் / விட்டலி நோசாச்

ஒலெக்சாண்டர் கிளாடுன் / ஆர்பிசி-உக்ரைன் / விட்டலி நோசாச்

  1. பதிவு செய்யப்படாத குறைந்த பிறப்பு விகிதம்

போருக்கு முன்பு, உக்ரைனில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 270,000-300,000 குழந்தைகள் பிறந்தன. 2023-2024 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை வரலாற்று ரீதியாக மிகக் குறைந்த அளவாக சுமார் 180,000 ஆகக் குறைந்தது. இது இரண்டாம் உலகப் போரின் போது உக்ரைன் பெற்றதை விடக் குறைவு.

இன்று ஐரோப்பாவிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளில் உக்ரைனும் ஒன்றாகும். நிச்சயமற்ற தன்மை, பொருளாதார உறுதியற்ற தன்மை மற்றும் போர் அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்கள் குழந்தைகளைப் பெறத் திட்டமிடுவதில்லை.

அதே நேரத்தில், COVID-19 முடிவுக்கு வந்து, சமீபத்திய ஆண்டுகளில் ஆயுட்காலம் பொதுவாக அதிகரித்த போதிலும், இறப்பு விகிதம் பிறப்பு விகிதத்தை விட 2-3 மடங்கு அதிகமாக உள்ளது.

உக்ரைனின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பிறப்புகளை விட அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன / ராய்ட்டர்ஸ்

உக்ரைனின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பிறப்புகளை விட அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன / ராய்ட்டர்ஸ்

  1. இராணுவ இழப்புகள் மற்றும் பாலின அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்

இந்தப் போர் மற்றொரு முக்கியமான மக்கள்தொகைப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது: இனப்பெருக்க வயதுடைய ஆண்களின் பற்றாக்குறை. அணிதிரட்டல், இழப்புகள், காயங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஆண்கள் இடம்பெயர்தல் - இந்த காரணிகள் அனைத்தும் வரும் ஆண்டுகளில் குழந்தைகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சமூகக் கொள்கை நிபுணரும் பொருளாதார மருத்துவருமான ஆண்ட்ரி ரெவென்கோ குறிப்பிடுகிறார்:

"உக்ரைனின் தற்போதைய மக்கள்தொகை அமைப்பு மிகவும் சமச்சீரற்றதாக மாறியுள்ளது: ஆண்களை விட குழந்தை பிறக்கும் வயதுடைய பெண்கள் அதிகம். இதன் பொருள் போருக்குப் பிந்தைய காலத்திலும் பிறப்பு விகிதம் குறைவாகவே இருக்கும்."

ஆண்ட்ரி ரெவென்கோ / ZN.UA

ஆண்ட்ரி ரெவென்கோ / ZN.UA

மக்கள்தொகை முதுமை: ஒரு நேர வெடிகுண்டு

உக்ரேனியர்களின் சராசரி வயது ஏற்கனவே 41 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. 2050 வாக்கில், இது 46-47 ஆண்டுகளாக உயரக்கூடும்.

இதன் பொருள்:

- சுகாதார அமைப்பில் அதிகரித்த அழுத்தம்;

- ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு;

- தொழிலாளர் பற்றாக்குறை;

- பொருளாதார நடவடிக்கைகளில் சரிவு.

பொருளாதார உத்தி மையத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் மரியா ரெப்கோ விளக்குகிறார்:

"உக்ரைன் மக்கள்தொகை ஆபத்து மண்டலத்திற்குள் திறம்பட நுழைகிறது, அங்கு அவர்கள் ஆதரிப்பவர்களை விட குறைவான உழைக்கும் மக்கள் இருப்பார்கள். இது நாட்டின் பொருளாதார ஆற்றலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது."

மரியா ரெப்கோ / செர்ஹி நுஷ்னென்கோ

மரியா ரெப்கோ / செர்ஹி நுஷ்னென்கோ

நிலைமையை என்ன மாற்ற முடியும்?

ஆய்வாளர்கள் பல மூலோபாய திசைகளை அடையாளம் காண்கின்றனர்.

  1. உக்ரேனியர்கள் திரும்பி வர ஊக்குவித்தல்

புலம்பெயர்ந்தோருக்கான திட்டங்கள், உக்ரேனிய நிறுவனங்களுக்கு தொலைதூர வேலை வாய்ப்பு, முதலீட்டு ஊக்கத்தொகைகள் மற்றும் சலுகைகள் - இவை அனைத்தும் சில குடிமக்களை மீண்டும் கொண்டு வரக்கூடும்.

  1. பிறப்பு விகிதத்தை ஆதரித்தல்

பணம் மட்டுமே மக்களை குழந்தைகளைப் பெற ஊக்குவிக்காது என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். தேவைப்படுவது:

- மலிவு விலை வீடுகள்,

- உயர்தர மழலையர் பள்ளிகள்,

- வேலை செய்யும் பெற்றோருக்கு உதவி,

- பாதுகாப்பு உத்தரவாதங்கள்.

எல்லா லிபனோவா மேலும் கூறுகிறார்:

"ஒரு முறை பணம் செலுத்துவது உதவாது. மக்கள் குழந்தைகளைப் பெறுவது பணத்திற்காக அல்ல, மாறாக நிலைத்தன்மை மற்றும் எதிர்கால உணர்விற்காகத்தான்."

எல்லா லிபனோவா / ஆண்ட்ரி டுப்சாக் / RadioSvoboda.org (RFE/RL)

எல்லா லிபனோவா / ஆண்ட்ரி டுப்சாக் / RadioSvoboda.org (RFE/RL)

  1. இடம்பெயர்வு குறித்து கவனம் செலுத்துதல்

சில உக்ரேனியர்கள் திரும்பி வர விரும்புகிறார்கள் - ஆனால் பாதுகாப்பு, வேலைகள், அரசாங்க சீர்திருத்தம் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு இருந்தால் மட்டுமே.

அடுத்து என்ன நடக்கும்: மூன்று காட்சிகள்

  1. நம்பிக்கையான

வெளிநாடுகளில் உள்ள உக்ரேனியர்களில் பாதி பேர் திரும்பி வருகிறார்கள், பிறப்பு விகிதம் அதிகரிக்கிறது, போர் முடிவடைகிறது. 2050 வாக்கில், மக்கள் தொகை 33-35 மில்லியனாக நிலைபெறுகிறது.

  1. யதார்த்தமானது

20-25% திரும்பப் பெறுதல், பிறப்பு விகிதம் சற்று அதிகரிக்கிறது. 2050 வாக்கில் - 28-30 மில்லியன்.

  1. அவநம்பிக்கை

போர் நீண்ட காலமாக தொடர்கிறது, இடம்பெயர்வு அதிகரிக்கிறது, பிறப்பு விகிதம் குறைகிறது. 2050 வாக்கில் - 24-26 மில்லியன்.

முடிவுரை

மக்கள்தொகை நெருக்கடி என்பது வெறும் புள்ளிவிவரங்களின் விஷயம் மட்டுமல்ல, உக்ரைனின் எதிர்காலத்திற்கு ஒரு அடிப்படை அச்சுறுத்தலாகும். பல ஆண்டுகளாக உருவாகி வரும் போக்குகளைப் போர் அம்பலப்படுத்தியுள்ளது மற்றும் துரிதப்படுத்தியுள்ளது. இருப்பினும், சரியான அரசாங்கக் கொள்கை, புலம்பெயர்ந்தோரின் திரும்புதல், இளம் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றுடன், நாடு இந்தப் போக்கை மாற்றியமைக்கும் திறன் கொண்டது என்று நிபுணர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

The Ukrainian Review
No image preview

Demographic crisis in Ukraine: scale, causes, and forecasts

Ukraine is experiencing the most significant demographic crisis in its modern history. The war has only accelerated processes that have been developing for year

https://global.espreso.tv/ukraine-faces-population-crisis-as-numbers-could-drop-to-25-million-by-2050#:~:text=Opposition%20lawmaker%20Mykola%20Kniazhytskyi%20argues,for%20soldiers%20and%20their%20families.&text=Prime%20Minister%20Denys%20Shmyhal%20has,thirties%20are%20in%20short%20supply.

EUobserver
No image preview

Born into war: How Ukraine's demographic crisis became a...

Ukraine had a demographic problem even before Russia's full-scale invasion — but the war is turning a crisis into a catastrophe.

.

.

மேற்குறித்த கட்டுரையின் கீழ் மேலும் இரண்டு இணைப்பு உள்ளது, இது உக்கிரேன் தரப்பு செய்திகள்தான் ஆனால் பெருமளவில் மேற்கு நாடுகளின் ஊடகங்களில் வராமையால் இந்த பிரச்சினை வெளித்தோன்றாமல் இருக்கலாம்.

5 hours ago, ரசோதரன் said:

உக்ரேன் போலவே ரஷ்யாவும் மிகப் பெரிய இழப்புகளை சந்தித்துக் கொண்டிடுருக்கின்றது. அங்கும் ஒரு தலைமுறை இல்லாமலேயே போய்க் கொண்டிருக்கின்றது. அவர்களுடைய வரவு செலவில் மூன்றில் ஒரு பங்கு இந்த சண்டைக்காக போய்க் கொண்டிருக்கின்றது என்று சில இடங்களில் குறிப்பிட்டிருந்தார்கள். இது எவ்வளவு பெரிய ஒரு தொகை.................... இறந்த மற்றும் காயமடைந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையையும் மிகப் பெரிதாகச் சொல்கின்றார்கள்.

போரில் ஏற்படும் இழப்புக்கள் சம்பந்தப்பட்ட இரு தரப்புக்களுக்கு மட்டுமே, மற்றவர்களுக்கு அதனால் வரும் இலாபங்களிலேயே கவனம் இருப்பதால் அதனை பற்றி பேச விரும்பமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

தனிப்பட்ட ரீதியில் ரஷ்யாவின் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிலர் இதை மறுக்கலாம், ஆனால் இது ஒரு ஆக்கிரமிப்பாகவே என்றும் எனக்குத் தெரிகின்றது. உக்ரேன் ஒரு சுதந்திரநாடாகவே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என்றோ அல்லது பலவீனமாக்கப்பட வேண்டுமோ என்று நான் எண்ணவில்லை. ஆனால் அதிபர் புடின் போன்ற ஒற்றைத் தலைமைகளின் வரலாறும், முடிவும் எக்காலத்திலும் ஒன்றே, அவர் உக்ரேனில் இல்லாவிட்டாலும், வேறு எங்கேயோ அவருடைய முடிவில் அதைச் சந்திக்கவே போகின்றார்.

இரஸ்சிய ஆக்கிரமிப்பினை பலர் ஏற்றுக்கொள்ளும் நிலை உள்ளது, ஆனால் இதனை அமெரிக்க ஆக்கிரமிப்பின் தொடர்ச்சியாகவே இது இருகின்றது என நியாயப்படுத்தும் நிலை உள்ளது, மறுவளமாக அமெரிக்க ஆக்கிரமிப்பினை ஒரு ஆக்கிரமிப்பாகவே பார்க்கும் நிலை இல்லாமல் இருக்கின்றது அதற்கு காரணமாக கூறப்படும் இந்த rule based world order மாறினால் ஒரு பலமான ஐ நா போன்ற அமைப்பு அல்லது உலக ஒப்பந்தம் மூலம் இதற்கு முடிவு எட்டலாம்.

5 hours ago, ரசோதரன் said:

இந்த ஆர்டிகள் 5 இற்கு நிகரான உத்தரவாதம் வெறும் வாய்ப்பேச்சு என்றே நான் நினைக்கின்றேன், வசீ. இதை அமெரிக்காவும், மற்றைய நேட்டோ நாடுகளும் உக்ரேனுக்கு வழங்கினால், ரஷ்யாவின் மொத்த முயற்சிகளுமே வீண் என்றாகிவிடும். அதிபர் புடின் அவருக்கு சுயநினைவு இருக்கும் வரை இதற்கு ஒத்துக்கொள்ளப் போவதில்லை. அதே போலவே அதிபர் ட்ரம்பும். இவர் சும்மா சும்மா எதையாவது வெறும் திண்ணைப் பேச்சு போல எடுத்து விட்டுக் கொண்டிருக்கின்றார். மறு நாளே 180 பாகைகளில் திரும்பிவிடுவார். ஒரு பொறுப்பான பேச்சுகளாக பலதும் இல்லை

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஐரோப்பாவினை பார்த்து அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் பயந்துவிட்டார்கள் என நினைக்கிறேன்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

இந்த உலகிற்கும், இன்றைய மற்றும் எதிர்கால சந்ததிகளுக்கும் பயனுள்ளவற்றை கொடுக்கக்கூடிய வலுவும், திறமையும் மிகச் சில நாடுகளுக்கு மட்டுமே உள்ளது. அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவதாக ரஷ்யா இந்த வரிசையில் இருக்கவேண்டும். ஆனால் ரஷ்யா பாதாளத்தை நோக்கியே போய்க் கொண்டிருக்கின்றது. அங்கிருந்து எதுவும் இந்த உலகிற்கு கிடைக்கப் போவதில்லை. மலிவு விலை எண்ணெயை மட்டுமே அவரவர் இலாபங்கள் கருதி சிலர் ரஷ்யாவிடம் இருந்து வாங்கிக் கொள்கின்றார்கள். அந்த மலிவு விலை வர்த்தகத்தில் கூட ரஷ்யா பலவீனமான பக்கமாகவே இருக்கின்றது என்பது வேதனையான விடயம். இந்த உக்ரேன் சண்டை ஆரம்பித்த பின், சீனா - ரஷ்யா இடையான வர்த்தகம் பற்றிய கட்டுரைகளை வாசித்திருப்பீர்கள் தானே. அது மிகவும் ஒரு தலைப்பட்சமாக சீனாவுக்கு மிகவும் சாதகமாகவே இருக்கின்ற்து. அத்துடன் சீனாவுக்கு ரஷ்யா தேவையில்லை, ரஷ்யாவுக்கே சீனா தேவையாக இருக்கின்றது. இது ஒரு தலைகீழ் மாற்றம் அல்லவா.

இரன்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக முன்னேற்றம், அமைதி நோக்கி நல்ல முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன, இன்று மீண்டும் அதே நிலையில் உலகு வந்து நிற்கிறது.

இந்த பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் அடிப்படையாக இருப்பது சுயநலம் கொண்ட முதலாளிகள்தான் (பல தடவை அதனை விரிவாக பேசிய விடயம் என்பதால் மீண்டும் இங்கு பதிவதனை தவிர்க்கிறேன்), ஆனால் அதன் உண்மை நிலை உணரும் நிலையில் சாதாரண மக்கள் இல்லை.

இரஸ்சியா மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் வளங்கள் மீது அந்த நாட்டு மக்களுக்கு உரிமை இல்லாத நிலை காணப்படுகிறது, 1972 அவுஸ்ரேலியாவில் விட்லம், ஆட்சிகவிழ்ப்பின் பின்னணியில் நேட்டோ நாட்டு அங்கத்துவம் வகிக்கும் இரண்டு பெரிய நாடுகளின் உளவு அமைப்பினை குற்றம் சாட்டுகிறார்கள், பின்னர் 2008 கெவிட் ராட் 40% சுரங்க வரி விதிக்க போவதாக மட்டுமே கூறியிருந்தார் அவரது ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது.

ஒரு இறைமையுள்ள நாட்டின் மீதான ஆக்கிரமிப்பாக இதனை கருதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2025 at 22:32, valavan said:

உக்ரேன் மேற்குலகுடன் இணைந்து ரஷ்யாவை மிரட்ட வேண்டுமென்று போர் செய்த நாடு

ஸ்புட்னிக்கில் ஏறி நிலவில் இருந்து கதைக்கின்ற மாதிரி இருக்கின்றது😂

2014 இல் கிரைமியாவைக் கைப்பற்றியது ரஷ்யா. 2022 பெப்ரவரியில் கியேவை நோக்கி படையெடுத்துப் பின்னர் அடி அகோரத்தால் பின்வாங்கியது ரஷ்யக் கரடி.

இது எல்லாம் தெரிந்திருந்தும் நோஞ்சான் உக்கிரேன் பயில்வான் ரஷ்யாவை மிரட்டிப் போருக்கு வெளிக்கிட்டது என்ற கதையாடலை (narrative) எல்லோருக்கும் தீத்தமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

சில நாட்களின் முன் கிருபன் ஒரு கட்டுரையை இங்கு இணைத்திருந்தார். பா. ரவீந்திரன் என்பவரால் அது எழுதப்பட்டது. அவர் அதை ரஷ்யாவுக்கு ஆதரவாக ஒரு வக்கீல் வாதம் செய்வது போன்று எழுதியிருக்கின்றார். அதில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உக்ரேன் நேட்டோவில் இணைய விரும்புவது ஒரு முக்கிய காரணம் அல்ல, பத்தோடு சேர்ந்த ஒன்றே அது என்று அவர் சொல்லியிருக்கின்றார்.

@Kandiah57 அண்ணா,

நேரம் எடுத்து படியுங்கள். ரஷ்ய சார்பு வாதங்கள் உள்ள அலசல்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

இந்த ஆர்டிகள் 5 இற்கு நிகரான உத்தரவாதம் வெறும் வாய்ப்பேச்சு என்றே நான் நினைக்கின்றேன்

இது உண்மைதான், நான் கேட்பது நேட்டோ எனும் பழைய முறைமை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றிற்கு மாற்றீடாக நேரடியாக ஐரோப்பிய நாடுகளுடனான அமெரிக்க உறவு நிலை.

ஆர்டிகல் 5 எந்த ஒரு மாற்றத்தினையும் உக்கிரேனுக்கு ஏற்படுத்தாது என்பது தற்போதுள்ள நிலையில் சரியாக உள்ளது அமெரிக்க ஐரோப்பிய தங்குதடையற்ற ஆயுத உதவிகளால் இரஸ்சியாவினை தோற்கடிக்க முடியாது, அல்லது ஐரோப்பிய அமெரிக்க அரசுகள் கூறும் பொருளாதார தடை இரஸ்சியாவினை தோற்கடிக்காது ஆனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க துருப்புகள் உக்கிரேன் போர் முனையில் நிறுத்தப்பட்டால் போரின் போக்கு மாறும், அவாறு படையினரை இரஸ்சியாவிற்கெதிராக பயன்படுத்தினால் உலக போர் ஏற்பட வாய்புள்ளது.

ஐரோப்பாவோ அமெரிகாவோ தமது படையினரை பலிகொடுக்க தயாராக இல்லை, அதனாலேயே உக்கிரேனியர்களினது உயிர் பலியினை பயன்படுத்தி இரஸ்சியாவினை பலவீனமாக்கமுடியும் என இன்னமும் நம்புவதாலேயே தொடர்ச்சியாக போருக்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

பாதுகாப்பு உத்தரவாதங்கள் காலவரையறைக்குட்பட்டதாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை - ஜெலென்ஸ்கி

Serhiy Sydorenko - 16 டிசம்பர், 17:19

பாதுகாப்பு உத்தரவாதங்கள் காலவரையறைக்குட்பட்டதாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை - ஜெலென்ஸ்கி

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம்

635 -

பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் இதுவரை சில முக்கிய கூறுகளைத் தீர்க்காமல் விட்டுவிட்டன, அத்தகைய உத்தரவாதங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது உட்பட.

மூலம்: உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தி ஹேக்கில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ஐரோப்பிய பிராவ்தாவால் அறிவிக்கப்பட்டது.

விவரங்கள்: சாத்தியமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து பல சுற்று விரிவான பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும், சில சிக்கல்கள் திறந்தே உள்ளன, குறிப்பாக உத்தரவாதங்கள் காலவரையின்றி இருக்குமா என்பது குறித்து ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

"இது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும், அல்லது சில உத்தரவாதங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவால் வரையறுக்கப்படுமா என்பதை என்னால் கூற முடியாது. நாங்கள் இன்னும் இதைப் பற்றி விவாதிக்கவில்லை," என்று அவர் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் பற்றிப் பேசினார்.

அதே நேரத்தில், உக்ரைனுக்கு ஒரு முக்கிய மற்றும் முக்கியமான தேவை என்னவென்றால், இந்த உத்தரவாதங்கள் "அமெரிக்க காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.

மேற்கோள்: "காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட அத்தகைய உத்தரவாதங்கள் செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்."

மேலும் விவரங்கள்: விவாதத்தில் உள்ள பாதுகாப்பு உத்தரவாதங்கள் நேட்டோவின் வாஷிங்டன் ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவின் கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை ஜெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளார், இருப்பினும் இது என்னவாக இருக்கும் என்பது பற்றி அவர் விரிவாகப் பேசவில்லை.

உத்தரவாதங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டாலும், ஆக்கிரமிப்பு மீண்டும் நிகழாது என்பதில் உக்ரைனுக்கு இன்னும் முழுமையான உறுதி இருக்காது என்று ஜெலென்ஸ்கி கூறினார். இந்த காரணத்திற்காக, பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளின் ஒரு தனி அம்சம், உத்தரவாதங்கள் இருந்தபோதிலும் ரஷ்யா உக்ரைன் மீது புதிய தாக்குதலைத் தொடங்கினால் கூட்டாளிகள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பது பற்றியது.

மேற்கோள்: "புதிய ஆக்கிரமிப்புக்கு கூட்டாளிகள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறோம். என்னை நம்புங்கள், நான் கூட்டாளிகளிடம் சில சங்கடமான கேள்விகளைக் கேட்கிறேன். ஆக்கிரமிப்பு இருந்தால், அமெரிக்கா எவ்வாறு பதிலளிப்பார்கள்? ஐரோப்பிய கூட்டாளிகள் எவ்வாறு செயல்படுவார்கள்? உலகம் எவ்வாறு எதிர்வினையாற்றும்? தடைகள், ஆயுதங்கள், கடலில், போர்க்களத்தில் பதில்கள் மற்றும் பல."

மேலும் விவரங்கள்: கூடுதலாக, உக்ரைனின் பார்வையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்பது ஒரு தனி பாதுகாப்பு உத்தரவாதமாகும், ஏனெனில் அது ஒரு புவிசார் அரசியல் முடிவு என்று ஜெலென்ஸ்கி செய்தியாளர் கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தியுள்ளார்.

பின்னணி:

Ukrainska Pravda
No image preview

It remains unclear whether security guarantees will be ti...

Talks on security guarantees have so far left some key elements unresolved, including how long such guarantees would last.

சிகப்பு எழுத்து வடிவில் செலன்ஸ்கி சில தரமான கேள்வியினை கேட்டுள்ளார், இது அமெரிக்க ஐரோப்பிய தரப்பினை சங்கடப்படுத்தும் நியாயமான கேஎள்விகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.