Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

gajaa.jpg

தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று (16) சென்னைக்கு சென்று அங்கு முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர். இந்த தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி , தமிழ்த் தேசிய பசுமை இயக்க தலைவர் பொ.ஐங்கரநேசன், ததேமமு செயலாளர் செகஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், சிரேஸ்ட சட்டத்தரணி க.சுகாஷ், உத்தியோகபூர்வ பேச்சாளர் , ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர் ஆகியோர் இவ்வாறு செல்லவுள்ளனர்.

இது தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி கூறியுள்ளதாவது,

சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வளண்டும். அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசரதேவை எழுந்துள்ளது.

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக ஸ்ரீலங்கா அரசு, ஐக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும்.

அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசரதேவை எழுந்துள்ளது.

இந்நோக்கத்திற்காக தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து இவ்விடயங்களை தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்னை சென்று அரசியல் தலைவர்களுடன் இவ்வாரம் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளோம். – என்று தெரிவித்துள்ளார்.

https://akkinikkunchu.com/?p=352658

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசரதேவை எழுந்துள்ளது.

தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுத்தால் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படும் என்ற ஈழதமிழரின் காதுல பூ சுத்தும் கதைகள் இன்னும் தொடருது என்றால் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவசரமா அரசியல் செய்ய வேறு எதுவும் கிடைக்கவில்லையென்றே அர்த்தம்.

ஆனால் உங்கள் துரதிர்ஷ்டம் நீங்கள் சுத்தும் பூவை ஏற்க பெரும்பாலான ஈழதமிழர்களின் காதுகள் தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

உள்ளுருக்குள் நடக்கும் மீனவர்களின் ஒன்று கூடல்களுக்கு போய் அடிவாங்க முடியாத அடிமை அரசியல்வாதிகள் எஜமானர்களிடம் ஓடிசென்று ஒப்பாரி வைக்க போகினம் போல் உள்ளது . அந்த மீனவர்கள் சொல்வது போல் யாழில் வேலை வெட்டி இல்லாமல் ஏன் இந்திய தூதரகம் இருக்கு ? போதைபொருள் கடத்தலை ஒழுங்கு பண்ணி யாழ் இளையோர்களுக்கு வழங்கலை செய்யவா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

ஆனால் உங்கள் துரதிர்ஷ்டம் நீங்கள் சுத்தும் பூவை ஏற்க பெரும்பாலான ஈழதமிழர்களின் காதுகள் தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.

வெள்ள நேரம் நாட்டில நிண்டனான் பாருங்கோ…

ஈழத்தமிழர் காதில் இப்போ முழுசா அனுரா சுத்துற பூத்தான் பாருங்கோ…

ஆமி, நேவி இல்லாட்டில் இனமே வெள்ளத்தில அழிஞ்சிருக்கும் எண்ட அளவுக்கு பூந்தோட்டமே காதில இருக்கு கண்டியளே….

இனி எந்த தமிழ்தலைவரின் பூவும் அங்கே வேலைக்கு ஆகும் போல தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

🤣...................

அவர்களே எஸ்ஐஆரின் பின்னே கோடிக் கணக்கிலோ அல்லது பல லட்சங்கள் கணக்கிலோ வாக்காளர்கள் காணாமல் போய் விட்டார்கள் என்று அவசரமாகத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதற்குப் பிறகு விஜய்யின் ஈரோடு கூட்டம், அடுத்த கட்டம் என்று அவர்கள் எல்லோருமே படு பிசி...............

திருவண்ணாமலை தூண் சமணர் தூணா அல்லது ஒரு அளவையாளார் வைத்த தூணா அல்லது தொல்பொருளா என்றே தெரியாமல் குழம்பிப் போய், அவர்கள் ஒருவருடன் ஒருவர் மல்லுக்கட்டிக் கொண்டும் நிற்கின்றார்கள்..........

இதை விட பெரிய பிரச்சனை காங்கிரஸ் 60 சீட் கேட்பதும், பாஜக அதற்கு மேலே கேட்பதும்..................

வெறுமனே அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதாது...........அப்பப்ப ஆக்சனிலும் இறங்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் போல ஒரு நிபுணர் சொல்லியிருப்பாரோ..............🤣.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வருடன் தமிழ்த்தேசியப் பேரவை சந்திப்பு : தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய கூட்டாட்சி முறைமை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

Published By: Vishnu

19 Dec, 2025 | 03:09 AM

image

(நா.தனுஜா)

தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடாத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவையினர், மத்திய அரசு ஊடாக இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தனித்துவ இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

597605584_1363576548800659_7484529359648

தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர்  சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர்  ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத்தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர்.

அங்கு நடாத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் ஏற்பாட்டில் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினுக்கும் தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (18) முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் ஒருமணிநேரம் வரை நீடித்த இச்சந்திப்பின்போது 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பை நிராகரித்து தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை என்பன அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்கல், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் என்பன தொடர்பில் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு இச்சந்திப்பில் பேசப்பட்ட மற்றும் தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றையும் தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கையளித்தனர். அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகப் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. குறித்த முயற்சியானது ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்குவதாக அமையவேண்டும் என்ற நோக்கிலேயே எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களினதும், அதன் முதலமைச்சரான தங்களதும் ஆதரவினைப் பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் இந்தச் சந்திப்பைக் கோரியிருந்தோம்.

நீங்கள் ஈழப்போராட்ட வரலாற்றை நன்கு அறிந்தவர். 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டின் பிரதிபலனாக இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுது. அவ்வொப்பந்தத்தில் தமிழ் மக்கள் இலங்கையின் வட, கிழக்குப் பகுதிகளில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, குறித்த வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஒரு அலகாகக்கொண்டு சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்பது கோட்பாட்டளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்குச் செயல்வடிவம் வழங்குதல் எனும் பெயரில் இலங்கை அரசாங்கத்தினால் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தமும், அதனூடாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையும் ஓர் ஒற்றையாட்சி வரையறைக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட முறைமையாகவே காணப்படுகின்றது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் தாற்பரியத்தையும், ஈழத்தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என்ற கோட்பாட்டையும் மிகத் தந்திரமாக நிராகரிக்கும் நோக்கிலேயே அரசாங்கத்தினால் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாக இந்த மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது.

13 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமை இலங்கையின் இறுக்கமான ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமையினால் மாகாணசபைகளுக்கு எந்தவொரு அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்படமுடியாது என்றும், அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்றும் இலங்கையின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு வரைவை இறுதிப்படுத்தி நிறைவேற்றப்போவதாகத் தற்போதைய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வரைவானது ஏற்கனவே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை விடவும் மிகப் பலவீனமானதாகும்.

இந்நிலையில் தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவரான நீங்களும் மத்திய அரசு ஊடாக இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக புதிய அரசியலமைப்பில் தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

இப்போது பொருளாதார ரீதியில் வீழ்ச்சிகண்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு இந்தியாவின் பங்களிப்பு மிக அவசியமாகும். அதுமாத்திரமன்றி தமிழகத்தோடு பொருளாதார ரீதியில் நெருக்கமான உறவையும், தொடர்பாடலையும் கட்டியெழுப்பாமல் பொருளாதார வளர்ச்சியை அடைவதென்பது இலங்கைக்கு சவாலானதாகவே இருக்கும். ஆகவே இலங்கைமீது கணிசமான அழுத்தத்தைப் பிரயோகித்து, தமிழர்கள் விரும்பும் மேற்படி தீர்வை இந்தியாவினால் சாத்தியமாக்கமுடியும் என நம்புகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/233777

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனை எங்கடை அரசியல்வாதிகள் நம்பும் அளவுக்கு சிங்களவர்கள் நம்ப போவதில்லை வழக்கம்போல் மகஜர் கொடுத்து விட்டு இங்கு வந்து அறிக்கை விட்டு குரைக்க வேண்டியதுதான் .

இதெல்லாம் முடியமுன் டெல்லியின் அரசியல் சதுரங்க ராஜா வெட்டு பட்டு இருப்பார் .

  • கருத்துக்கள உறவுகள்

எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ் தேசியப் பேரவைக்கும் இடையில் சந்திப்பு!

19 Dec, 2025 | 10:04 AM

image

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

நேற்று வியாழக்கிழமை (18) இச்சந்திப்பு இரவு 10.15 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 40 நிமிட நேரம் இடம்பெற்றது.

இதன்போது ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.

முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்களும் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது. இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் கலந்துகொண்டிருந்தார்.

தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் இதில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP, பொ.ஐங்கரநேசன் (தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்), செ.கஜேந்திரன் (செயலாளர் ததேமமு), த.சுரேஸ் (தேசிய அமைப்பாளர்), க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி), ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/233790

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!

19 Dec, 2025 | 12:54 PM

image

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான  சந்திப்பு தமிழ்நாட்டில் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (19) நடைபெற்றது.

இதன்போதான கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது.

இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது.  

அத்துடன் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கான தீர்வு முதலான விடயங்கள் குறித்தும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை, முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/233823

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/12/2025 at 20:33, goshan_che said:

இனி எந்த தமிழ்தலைவரின் பூவும் அங்கே வேலைக்கு ஆகும் போல தெரியவில்லை.

இந்த நிலைக்கு கொண்டு வந்தது யார்?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

1987 ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டின் பிரதிபலனாக இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுது.

ஆமா, கைச்சாத்திட்டார்கள். அதற்கு என்ன நடந்தது? முப்பத்தைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கைச்சாத்திட்டவர்களும் உயிரோடு இல்லை, அவர்களும் தங்கள் காலத்திலேயே கிடப்பில் போட்டு மூடி விட்டார்கள். வடக்கும் கிழக்கும் உத்தியோகபூர்வமாக நீதிமன்றத்தினால் பிரித்தாயிற்று, ஒவ்வொரு தடவையும் இந்திய அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வந்த போதெல்லாம் பேச்சுக்கு அதை நினைவூட்டி சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னார்கள், வாய் வலித்து விட்டது சொல்வதையே நிறுத்தி ரொம்ப நாளாகிவிட்டது.

20 hours ago, ஏராளன் said:

நீங்களும் மத்திய அரசு ஊடாக இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக புதிய அரசியலமைப்பில் தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

இந்திய அரசும் சேர்ந்து உருவாக்கிய சட்டமூலம் செத்துப்போய்விட்டது, இனி இதை செய்யப்போகிறார்கள்? தமிழர் வகை தொகையின்றி கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் போது, அதை தடுத்து நிறுத்த முடியாத உலக தமிழர்களின் தலைவர், அவரின் மைந்தர் செய்து போடுவார்? இனி அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய தயாராகுங்கள். இந்தியாவின் பிடி இலங்கையில் தளர்ந்து வருகிறது, இந்த நிலையில் இந்தியா சொல்லி இலங்கை கேக்குமாம். அதற்கு ஈமைக்கிரியை செய்யச்சென்றிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இந்த நிலைக்கு கொண்டு வந்தது யார்?

கோஷான்?

7 hours ago, satan said:

ஆமா, கைச்சாத்திட்டார்கள். அதற்கு என்ன நடந்தது? முப்பத்தைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கைச்சாத்திட்டவர்களும் உயிரோடு இல்லை, அவர்களும் தங்கள் காலத்திலேயே கிடப்பில் போட்டு மூடி விட்டார்கள். வடக்கும் கிழக்கும் உத்தியோகபூர்வமாக நீதிமன்றத்தினால் பிரித்தாயிற்று, ஒவ்வொரு தடவையும் இந்திய அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வந்த போதெல்லாம் பேச்சுக்கு அதை நினைவூட்டி சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னார்கள், வாய் வலித்து விட்டது சொல்வதையே நிறுத்தி ரொம்ப நாளாகிவிட்டது.

இந்திய அரசும் சேர்ந்து உருவாக்கிய சட்டமூலம் செத்துப்போய்விட்டது, இனி இதை செய்யப்போகிறார்கள்? தமிழர் வகை தொகையின்றி கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் போது, அதை தடுத்து நிறுத்த முடியாத உலக தமிழர்களின் தலைவர், அவரின் மைந்தர் செய்து போடுவார்? இனி அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய தயாராகுங்கள். இந்தியாவின் பிடி இலங்கையில் தளர்ந்து வருகிறது, இந்த நிலையில் இந்தியா சொல்லி இலங்கை கேக்குமாம். அதற்கு ஈமைக்கிரியை செய்யச்சென்றிருக்கிறார்கள்.

சாத்ஸ்,

உங்களுக்கு ஆக்டோபர் 1987 - மே 2009, நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2025 at 20:00, ரசோதரன் said:

🤣...................

அவர்களே எஸ்ஐஆரின் பின்னே கோடிக் கணக்கிலோ அல்லது பல லட்சங்கள் கணக்கிலோ வாக்காளர்கள் காணாமல் போய் விட்டார்கள் என்று அவசரமாகத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதற்குப் பிறகு விஜய்யின் ஈரோடு கூட்டம், அடுத்த கட்டம் என்று அவர்கள் எல்லோருமே படு பிசி...............

திருவண்ணாமலை தூண் சமணர் தூணா அல்லது ஒரு அளவையாளார் வைத்த தூணா அல்லது தொல்பொருளா என்றே தெரியாமல் குழம்பிப் போய், அவர்கள் ஒருவருடன் ஒருவர் மல்லுக்கட்டிக் கொண்டும் நிற்கின்றார்கள்..........

இதை விட பெரிய பிரச்சனை காங்கிரஸ் 60 சீட் கேட்பதும், பாஜக அதற்கு மேலே கேட்பதும்..................

வெறுமனே அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதாது...........அப்பப்ப ஆக்சனிலும் இறங்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் போல ஒரு நிபுணர் சொல்லியிருப்பாரோ..............🤣.

முக்கியமான விடயம் ஒன்று…

2009 முதல் 16 வருடமாக இந்தியாவை “செத்தாலும் வரமாட்டேன், செத்த வீட்டுக்கும் வரமாட்டேன்” என சொல்லி புறக்கணித்தவர் பொன்னர்.

இப்ப “இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டில் என்ன” என்ற நிலைக்கு தமிழ் தேசிய அரசியல் வந்த பின், திடீர் நிலைமாற்றம்.

ஏன் நிலைமாற்றம் என்பதற்கோ, முந்திய நிலைப்பாட்டுக்கு மன்னிப்போ எதுவும் இல்லை.

பாராட்டகூடிய விடயம் - அனைவரையும் சந்தித்தது.

பனையூர் ஜமீனை சந்திக்க இவர்கள் விரும்பவில்லையா? அவர் விரும்பவில்லையா தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

இந்திய அரசும் சேர்ந்து உருவாக்கிய சட்டமூலம் செத்துப்போய்விட்டது

சந்தர்ப்பம் கூறுக:

இதன் மிக முக்கிய ஏற்பாடொன்று இலங்கை நீதிமன்றத்தில் யாரால், எச்சந்தர்பத்தில் காயடிக்கப்பட்டது?

(புள்ளிகள்

யாரால் - 1 புல்டோ

எச்சந்தர்பத்தில் - 1 போண்டா).

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய ஜெ. வி. பி. நீதிமன்றம் சென்று சாதித்தது. அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி சில்வா கூறியிருந்தார், நீதிமன்றம் சென்று இதற்கு எதிராக வாதாடி தீர்ப்பை மாற்றலாமென்று.ஆனால் நம்மவர் யாரும் முன்வரவில்லை. வேண்டுமென்றே இருபகுதியும் நடந்து கொண்டன. சட்ட மேதையும் தூங்கிவிட்டார் பாருங்கோ. நாம்தான் பேரம் பேசும் சக்தி, ஏகோபித்த கட்சி என்று கூறி வாக்கு மட்டும் சேகரித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்திப்பு

Dec 20, 2025 - 06:11 PM

நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்திப்பு

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு இன்று (20) நடைபெற்றது. 

சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜ.க-வின் மாநிலத் தலைமையகமான 'கமலாலயத்தில்' இச்சந்திப்பு இடம்பெற்றது. 

இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இக்கலந்துரையாடல் சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்தது. 

இதன்போது தமிழ்த் தேசியப் பேரவையினால் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன: 

தமிழர் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். 

இலங்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தி, சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வலியுறுத்துமாறு இந்திய மத்திய அரசைக் கேட்டுக்கொள்ள வேண்டும். 

ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசை வலியுறுத்துவதற்கு, பா.ஜ.க மாநிலத் தலைவராகிய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmjeaf38c02yeo29n29ppjn6w

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

முக்கியமான விடயம் ஒன்று…

2009 முதல் 16 வருடமாக இந்தியாவை “செத்தாலும் வரமாட்டேன், செத்த வீட்டுக்கும் வரமாட்டேன்” என சொல்லி புறக்கணித்தவர் பொன்னர்.

இப்ப “இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டில் என்ன” என்ற நிலைக்கு தமிழ் தேசிய அரசியல் வந்த பின், திடீர் நிலைமாற்றம்.

ஏன் நிலைமாற்றம் என்பதற்கோ, முந்திய நிலைப்பாட்டுக்கு மன்னிப்போ எதுவும் இல்லை.

பாராட்டகூடிய விடயம் - அனைவரையும் சந்தித்தது.

பனையூர் ஜமீனை சந்திக்க இவர்கள் விரும்பவில்லையா? அவர் விரும்பவில்லையா தெரியவில்லை.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழர்களின் அரசியலை கடந்து போய்விட்டார்கள். ஒரு மாற்று அரசியல் செய்கின்றோம் என்று முன்நிற்கும் ஓரிரு அரசியல்வாதிகளைத் தவிர வேறு எவரும் இவை பற்றி அங்கே ஒரு பொருட்டாக பேசுவது கூடக் கிடையாது. மாற்று அரசியல் செய்பவர்களும் தங்களின் சுயலாபம் கருதியே ஈழ அரசியலை பேசுகின்றார்களோ ஒழிய, திராவிடத்தை எதிர்க்கும் ஒரு ஆயுதமாக கையில் எடுக்கின்றார்களே ஒழிய, ஈழ மக்களுக்கான ஒரு தீர்வாக அவர்கள் எதையும் முன்னெடுப்பதில்லை. இவர்களில் எவருக்கும் சரியான புரிதல் கூட இவர்களுக்கு கிடையாது என்பதை மீனவர்களின் பிரச்சனையிலேயே காண்கின்றோம்.

அங்கே தேர்தல் விஞ்ஞாபனங்களில் பத்தோடு ஒன்றாக ஈழத் தமிழ் மக்களுக்கு, அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று எழுதி வைத்துக் கொள்வார்கள். அவர்களின் விஞ்ஞாபனத்தை கனமாக்குவதற்கு மட்டுமே இது உபயோகமாக இருக்கும்.

எங்கள் நாட்டில் முதல் பாராளுமன்றப் பேச்சில் வடக்கு தமிழர்களுக்கு மட்டும் இல்லை, கிழக்கு தமிழர்களுக்கு மட்டும் இல்லை, மலையக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் அகதிகளாக முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்குமாக நான் குரல் கொடுப்பேன் என்று பேசி விட்டு, பாராளுமன்ற உணவு விடுதியில் சோறும், சொதியும் மட்டுமே உள்ளது என்று அதற்காகப் போராடும் எங்கள் அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் ஒன்றே தான். இவர்களின் பேச்சுகளை கேட்டு நாங்கள் அவசரப்பட்டு ஆனந்தப்படுகின்றோம், பின்னர் வசதியாக மறந்து விடுகின்றோம். இவர்களின் இந்த பேச்சுகள் விடிந்தால் போச்சு..............

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் மத்திய அரசின் ஒரு நீட் பரீட்சையை கூட அசைக்க முடியாது என்பதே உண்மை. இதில் எங்களுக்கு இவர்கள் சமஷ்டி பெற்றுத் தருவார்களா. ஊழலில் திளைக்கும் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளினதும் இன்றைய பிரச்சனை பாஜகவிடம் இருந்து எப்படித் தப்பி, அவர்களின் வாரிசு அரசியலைக் கொண்டு நடத்துவது என்பதே. தமிழ்நாட்டின் நலனும் அங்கே இல்லை, ஈழத்தின் நலனும் அங்கே இல்லை. மாற்று என்று வந்திருப்பவர்கள் அதைவிடக் கீழே.

'யார் அந்த ஏழு பேர்கள்..................' என்று ரஜனி கேட்டதை விட விஜய்யின் நிலை மோசம். யாரோ எழுதிக் கொடுக்க, அதை விஜய் பாடமாக்கிய பின் இவர்களுடன் பேச வேண்டும். இதற்கு ஒரு வாரமாவது எடுக்காதா.................

தமிழ்நாட்டில் இன்னமும் அகதிகளாக இருக்கும் எம் மக்களை பற்றி இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுடன் பேசலாம். அங்கே எம் மக்கள் மூன்றாவது தலைமுறையாக முடங்கிக் கிடக்கின்றார்கள். தமிழ்நாட்டு அரச வேலைகளில் ஒரு சிறிய பகுதியை சில வருடங்களுக்காகவது அங்கிருக்கும் எங்களின் மக்களுக்கு ஒதுக்குங்கள் என்று கேட்கலாம். இந்தியக் குடியுரிமை கொடுங்கள் என்று கேட்கலாம். கியூ பிராஞ்சின் கெடுபிடிகளை அகற்றுங்கள் என்று கேட்கலாம். இப்படியான விடயங்கள் தான் நடைமுறையில் ஓரளவு சாத்தியமானதும், பலன் தருவதும் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

ஒட்டு மொத்த சமகால தமிழக-ஈழ தமிழர் உறவின் நிலையை சகல கோணங்ளிலும் ரத்தின சுருக்கமாக தந்துள்ளீர்கள்.

புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள் என தம்மை காட்டி கொண்டு, சிலர் செய்த அவதூறு அரசியலின் பின்னும் கஜனை ஸ்டாலின் சந்தித்ததே என்னை பொறுத்தவரை கொஞ்சம் ஆச்சரியமான விடயம்தான்.

யாழில் கூட எங்கள் புலவர் பலத்த கஜன், சீமான் ஆதரவாளர். திமுக எதிர்ப்பாளர்.

இப்படி பலர் உளர்.

இனியாவது திராவிடத்தை புடுங்கிறோம், கிளறுறோம் என வேண்டாத வேலை செய்வதை இப்படியானவர்கள் விட்டு விட்டு, தமிழக தலைவர்கள் அனைவரையும் சம தூரத்தில் வைக்கும் வழிக்கு திரும்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

601970946_1770994223616654_9025557399803

தமிழக முதல்வருடன்... செல்பி எடுத்த, ஈழத்து கோமாளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு அரசியல்தீர்வு என்ற பெயரில் ஏக்கிய இராச்சிய என்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பைநடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்கிறது. சுமத்திரன் அந்த வரைவில் முக்கிய பங்காற்றிய படியால் அவருடைய ஆதரவாளர்கள்அதற்கு ஆதரவாக வாக்களிக்களிள்பார்கள். அது அந்த நேரத்திது அரசியல்சூழ்நிலைகளை வைத்து முடிவெடுக்கப்படும். அந்த நேரத்தில் மாகாணசபைத் தேர்தலை வெத்தால் முடிவு மாறலாம்.இதைத்தவிர கஜேந்திரகுமார். செல்வம். அதற்கு ஒரு அடையாள எதிர்ப்பைக் காட் வேண்டும் என்பதற்காக சங்கோடு பேச்சு வார்த்i நடத்தினார். ஆனால் இப்போது சங்கும் சுமத்திரனுடன் நிற்கிறது..ந்த அரசியலமைப்பு மாற்றத்தால் வரவிருக்கும் ஆபத்தைபுரிய வைப்பதற்கான முயற்சியே இந்தத்தமிழகத்தலைவர்களைச்சந்தித்து விளக்கம் கொடுக்கப்படுகிறது. பேச்சுவாரத்தை என்றால் எதிரியுடனும் பேசவேண்டும். தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் பேசவேண்டும் தமிழக காங்கிரஸ்தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட விஸை உட்பட பேசவேண்டும். விஸை சந்திக்க நேரம் ஓதுக்குவாரா என்பது வேறு விடயம். இதன் பொருள் இந்தச்சந்திப்பின் பலனாக தமிழக அரசியல் தலைவர்கள் கிளர்தெழுந்து எமது அரசியல் பிரச்சினைப்பற்றி பேசிநடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவது முட்டாள்த்தனமானது. ஒரு அடையாளத்துக்காக தமிழக மக்களின் பிரதிநிதிகளுக்கு எமது தரப்பின்நியாயத்தை விளக்கியுள்ளோம் என்ற ஆவணப்படுத்தல் மட்டுமேஇதில் முக்கியமானது.ஸெயலலிதா முதலமைச்சராக இருந்த வேளையில் ஈழத்தமிழர்களின் அரசியல்தீர்வு தொடர்பாக ஒரு சர்சன வாக்கு நடாத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உட்பட ஒரு தீர்மானத்தை ஏகமனதாக தமிழக சட்டசபை நிறைவேற்றியிருக்கிறது. இதனல் எந்தப்பலனும் இதுவரை இல்லாத போதும் இந்தத்தீர்மானம் ஒரு வரலாற்று முக்கியத்துமானது.

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_9315.jpeg.5e039b20ab78d643d9c3

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழ் தேசிகர் சொல்கின்றார் கஜேந்திரகுமார் தமிழீழக் கோரிக்கையைத் தமிழ்நாட்டில் சவப்பெட்டியாக்கிவிட்டார் 😂

large.1317414361_.png

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

இலங்கை அரசு அரசியல்தீர்வு என்ற பெயரில் ஏக்கிய இராச்சிய என்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பைநடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்கிறது. சுமத்திரன் அந்த வரைவில் முக்கிய பங்காற்றிய படியால் அவருடைய ஆதரவாளர்கள்அதற்கு ஆதரவாக வாக்களிக்களிள்பார்கள். அது அந்த நேரத்திது அரசியல்சூழ்நிலைகளை வைத்து முடிவெடுக்கப்படும். அந்த நேரத்தில் மாகாணசபைத் தேர்தலை வெத்தால் முடிவு மாறலாம்.இதைத்தவிர கஜேந்திரகுமார். செல்வம். அதற்கு ஒரு அடையாள எதிர்ப்பைக் காட் வேண்டும் என்பதற்காக சங்கோடு பேச்சு வார்த்i நடத்தினார். ஆனால் இப்போது சங்கும் சுமத்திரனுடன் நிற்கிறது..ந்த அரசியலமைப்பு மாற்றத்தால் வரவிருக்கும் ஆபத்தைபுரிய வைப்பதற்கான முயற்சியே இந்தத்தமிழகத்தலைவர்களைச்சந்தித்து விளக்கம் கொடுக்கப்படுகிறது. பேச்சுவாரத்தை என்றால் எதிரியுடனும் பேசவேண்டும். தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் பேசவேண்டும் தமிழக காங்கிரஸ்தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட விஸை உட்பட பேசவேண்டும். விஸை சந்திக்க நேரம் ஓதுக்குவாரா என்பது வேறு விடயம். இதன் பொருள் இந்தச்சந்திப்பின் பலனாக தமிழக அரசியல் தலைவர்கள் கிளர்தெழுந்து எமது அரசியல் பிரச்சினைப்பற்றி பேசிநடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவது முட்டாள்த்தனமானது. ஒரு அடையாளத்துக்காக தமிழக மக்களின் பிரதிநிதிகளுக்கு எமது தரப்பின்நியாயத்தை விளக்கியுள்ளோம் என்ற ஆவணப்படுத்தல் மட்டுமேஇதில் முக்கியமானது.ஸெயலலிதா முதலமைச்சராக இருந்த வேளையில் ஈழத்தமிழர்களின் அரசியல்தீர்வு தொடர்பாக ஒரு சர்சன வாக்கு நடாத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உட்பட ஒரு தீர்மானத்தை ஏகமனதாக தமிழக சட்டசபை நிறைவேற்றியிருக்கிறது. இதனல் எந்தப்பலனும் இதுவரை இல்லாத போதும் இந்தத்தீர்மானம் ஒரு வரலாற்று முக்கியத்துமானது.

உங்களுக்கும், உங்கள் தலைவர் பொன்னருக்கும் இந்த அரசியல் விளக்கம் வர 16 ஆண்டுகள் தேவைபட்டது என எடுத்து கொள்ளலாமா?

16 வருடமாக, ஓங்கோல் கருணாநிதி, இனத்துரோகி, சுடலை ஸ்டாலின், திருட்டு திமுக என தேவையில்லாத ஆணிகளை எல்லாம் புடுங்கி விட்டு….

இப்போ பேச்சுவார்த்தை என்றால் செல்வபெருந்தகையோடு கூட பேசவேண்டும், எதிரியோடு கூட பேச வேண்டும் என்கிறீர்கள்.

இதைத்தான் ஐயா 16 வருடமாக சொல்லிவாறோம், இப்ப நித்திரையால எழும்பி வாறியள்😂.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை இப்பொழுதும் நம்பவில்லை.புட்டின் இந்தியா போன அடுத்த நாளே அமெரிக்க அதன் மிகப்பெரிய விமானத்தை அதுவும் புயலால் பெரிதும் பாதிக்கப்படாத யாழ்ப்பாணத்தில் தரையிறக்குகிறது.யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியதூதரகம் அகற்றப்படவேண்டும் என போராட்டங்கள் நடக்கிறது.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உடைந்து தமிழரசுக்கட்சியும் உடைந்து என்பிபி வடமாகாணத்தில் வலுவாக காலூன்ற அடித்தளம் போடுகிறது. தனக்குள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்து ஒற்றையாட்சிக்குள்ளே அரசியலைமப்பு மாற்றத்தை நிறைவேற்ற ஆயத்தமாகிறது. இது ஒரு ஆபத்தான நிலை தமிழர்களுக்கு அதே வேளை இந்தியாவுக்குப் பிடிக்காத சார்பு நிலைகளை அனுரஅரசு எடுக்கிறது.இந்தப் புறச்சூழலில் தான் அதுவும் தமிழகத்தில் தேர்தல் காய்ச்சல் அடிக்கும் நேரத்தில் இப்ப தும்முனாத்தான் அது தேர்தல் மேடைகளில் ஊறுகாயாக அவது பயன்படுத்தப்படலாம். மற்றும்படி தமிழக அரசியல் கட்சிகளில் நாம்தமிழர் பாமக தவிர யாரும் ஈழத்தமிழர் விகாரததைக் கையில் எடுக்கப் போவதில்லை. அன்பு மணி பாமக தலைமைப் பொறுப்பில் இருப்பதால் பாமகவும் இந்த விவகாரத்தை கவனத்தில் பெரிதாக எடுக்காது.சீமானை மட்டும் சந்திப்பது தமிழக மக்களை உதாசீனம் செய்வதாகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.