Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்பரும் ,  இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடும், ஈரான் நாடும், கடந்த இரண்டு நாட்களாக மத்திய கிழக்கில் எங்களின் பகைமைகளுக்கு முழுமையான மற்றும் மொத்தமான தீர்வு குறித்து மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள உரையாடல்களை நடத்தி வருவதாகத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த ஆழமான, விரிவான, ஆக்கபூர்வமான உரையாடல்களின் போக்கையும் நெருக்கடியையும் அடிப்படையாகக் கொண்டு, இவை வாரம் முழுவதும் தொடரும். நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் விவாதங்களின் வெற்றிக்கு உட்பட்டு, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாள் காலத்திற்கு ஒத்திவைக்குமாறு போர் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த விஷயத்திற்கு நீங்கள் அளித்த கவனத்திற்கு நன்றி!

ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப்

-பிபிசி.com

Edited by zuma

  • zuma changed the title to தம்பரும் ,  இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
  • கருத்துக்கள உறவுகள்

அடி பணிந்துவிட்டார் ரா 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க - இஸ்ரேலின் இந்த வலிந்த தாக்குதல் மூலம்,  ஈரான்முன்னரை விட வலிமை பெற்றுள்ளது.

இத்த தாக்குதல் மூலம் அதிக நட்டம் அடந்தவர்கள் அரபுஷேக்குகளே ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஈரானிடம் இருந்தோ, இஸ்ரேலிடம் இருந்தோ எந்த தகவலும் வரவில்லை.

ஈரானின் கோரிக்கைகள் நிறுவேறுமா?

ஆகினால் அமெரிக்காவின் சகாப்தம் முடிந்ததாகவே அர்த்தம்.

37 minutes ago, zuma said:

அமெரிக்க - இஸ்ரேலின் இந்த வலிந்த தாக்குதல் மூலம்,  ஈரான்முன்னரை விட வலிமை பெற்றுள்ளது.

இத்த தாக்குதல் மூலம் அதிக நட்டம் அடந்தவர்கள் அரபுஷேக்குகளே ஆகும்.

ஈரான் போரை முடிக்க பல நிபந்தனைகளை போட்டுள்ளது.

அவற்றினை செயல்படுத்தாமல் தம்பர் தான் நினைத்தது போல் போரை நிறுத்த முடியும் என நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பர்🤡 சொன்னது போல் அப்படி ஒரு பேச்சும் இல்லை வார்த்தையும் இல்லை என ஈரான் சொல்லி உள்ளதாம் 😂

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் நடந்திருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆகினால் அமெரிக்காவின் சகாப்தம் முடிந்ததாகவே அர்த்தம்.

இப்படி ஆனால், அதில் ஒரு silver line இருப்பதாகவே எனக்குப் படுகிறது. சகல வழிகளிலும் பலம் கொண்ட ஒரு தரப்பு, தன் பலத்தை ஒட்டு மொத்த நன்மைக்குப் பாவிக்காமல் (பிபி டரம்பிற்குச் செய்தது போல) " தன் பின் பக்கத்தை முத்தமிடும் ஒருவருக்காக மட்டும்" பாவித்தால் இப்படியான நிலை வரும் என்பது நிரூபிக்கப் பட வேண்டும்! அடுத்த 3 ஆண்டுகளுக்கு மட்டுமாவது பல்லைப் பிடுங்கி விட்டால், அடுத்து வரும் நிர்வாகம் கொஞ்சம் நிவர்த்திக்க இடம் கிடைக்கும்.

இது நடந்தால், பிபி யும் இத்தோடு அரங்கில் இருந்து அகன்று விட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. தீய சக்திகளுக்கு பலம் நிலைத்திருக்கக் கூடாது, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி!

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப்பின் அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச சந்தையில் சரிந்த கச்சா எண்ணெய் விலை!

Mar 23, 2026 - 06:20 PM

ட்ரம்ப்பின் அறிவிப்பை தொடர்ந்து  சர்வதேச சந்தையில் சரிந்த கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 15% சரிந்து, ஒரு பீப்பாய் 96 டொலராகக் குறைந்தது. 

அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலை 13.5% சரிந்து, ஒரு பீப்பாய் 85.28 டொலராக வீழ்ச்சியடைந்தது. 

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா முன்னதாக எச்சரித்திருந்தது. இதனால் போர் பதற்றம் அதிகரித்து எண்ணெய் விலை உயர்ந்திருந்தது. 

இந்நிலையில், ஈரானுடன் நடத்தப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் "ஆக்கபூர்வமாக" இருந்ததாகத் தெரிவித்த ட்ரம்ப், அடுத்த 5 நாட்களுக்கு ஈரான் மீதான எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் நடத்த வேண்டாம் எனத் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmn36ojxf0008356p1ebftg8g

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

இப்படி ஆனால், அதில் ஒரு silver line இருப்பதாகவே எனக்குப் படுகிறது. சகல வழிகளிலும் பலம் கொண்ட ஒரு தரப்பு, தன் பலத்தை ஒட்டு மொத்த நன்மைக்குப் பாவிக்காமல் (பிபி டரம்பிற்குச் செய்தது போல) " தன் பின் பக்கத்தை முத்தமிடும் ஒருவருக்காக மட்டும்" பாவித்தால் இப்படியான நிலை வரும் என்பது நிரூபிக்கப் பட வேண்டும்! அடுத்த 3 ஆண்டுகளுக்கு மட்டுமாவது பல்லைப் பிடுங்கி விட்டால், அடுத்து வரும் நிர்வாகம் கொஞ்சம் நிவர்த்திக்க இடம் கிடைக்கும்.

இது நடந்தால், பிபி யும் இத்தோடு அரங்கில் இருந்து அகன்று விட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. தீய சக்திகளுக்கு பலம் நிலைத்திருக்கக் கூடாது, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி!

கொமேனியின் மறைவை போல ஒரு நல்ல விடயமாகவே பி பி யின் தம்பரின் அகற்றமும், அடக்கமும் இருக்கும், என்னை பொறுத்தமட்டில்.

ஆனால் ஈரானிய அடிப்படைவாதிகள் இவ்வாறு வெல்வது, நிச்சயம் அரபு முஸ்லிம் நாடுகளுக்கோ எனைய தனி மனித சுதந்திரங்களை அனுசரித்து போகும் இஸ்லாமிய நாடுகளுக்கோ, நல்ல சகுனமாக இராது.

அமெரிக்காவின் அடிவருடிகள் என நாம் மிக சுலபமாக அரபுநாடுகளை கடந்து போகலாம். ஆனால் உண்மையில் அடிப்படைவாதத்துக்கு எதிரான மிக் முக்கிய பங்கை ஆற்றுவது யு ஏ ஈ.

சல்மான் வந்த பின் சவுதியில் கூட மிக நல்ல மாற்றங்கள் வந்தன. சில மத விதிகளை, சில ஹதீசுகளை நடைமுறை படுத்தவே தேவையில்லை என அண்மையில் அறிவித்தார்.

ஈரான் இந்த போரில் படுதோல்வி அடையாமல், சரணாகதி ஆகாமல், ஒரு போர்நிறுத்தம் வரும் எனில் - அது ஈரானின் வெற்றியே.

தம்பர், செத்த கிளி, பிபி எல்லாரும் தற்காலிகமானவர்கள். ஆனால் ஈரானின் இந்த வெற்றி, அந்த பிராந்தியத்துக்கும், உலகுக்கும், ஷியா அடிப்படைவாதத்தில் நம்பிக்கை இல்லாத அனைவருக்கும் நீண்ட கால நோக்கில் ஒரு பெரும் தலையிடியாக அமையும்.

யாழ்களத்தில் ஸ்கோர் கேட்கும் மனநிலையில், அமெரிக்காவுக்கு அடி போட்டால் காணும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு இது உறைக்கும் போது காலம் கடந்து விட்டிருக்கும்.

இதே ஆட்கள்தான் பொதுபல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்பை ஆதரித்து, முஸ்லிம்களை ஆதரித்து எழுதிய எம்போன்றோரை திட்டினார்கள் என்பது அடுத்த லெவல் முரண்நகை.

ஆனால் உங்கள் போன்ற கருத்தாளர்களுக்கு நான் சொல்வது புரியும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

புரிகிறது.

கொள்கையளவில் ஈரானின் அடிப்படை வாதிகள் வெல்லக் கூடாது. ஆனால், இந்த 3 வாரங்களில் என்னிடம் உருவான ஒரு கேள்வி, பெரும்பாலான ஈரானியர்களே இந்த அடிப்படை வாதத்தைச் சகித்துக் கொள்ளத் தயாராக இருக்கும் போது வெளியார் என்ன செய்ய முடியும் என்பது தான்! அவர்கள் அடிப்படை வாதத்தை ஆதரிக்கவில்லை, ஆனால் அதோடு வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று நினைத்திருக்கிறார்கள் என நம்புகிறேன். அந்த சகிப்புத் தன்மை இருக்கும் வரை தலைமையைக் கொன்று ஒன்றும் மாறப் போவதில்லை என நினைக்கிறேன். தென்னமெரிக்க நாடுகளில் ஒரு போதை வஸ்துக் கும்பல் தலைவரைக் கொன்றால் உடனேயே அடுத்தவர் பதவிக்கு வருவது போல, ஈரானிலும் இருப்பார்கள்.

கடைசியில் "பாலாவி" (Pahlavi) தான் பாவம்😂!

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல . ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பெருமளவில் போரடிக் கொண்டிருந்த போது தேவையில்லாமல் அமெரிக்கா இஸ்ரேல் போரில் இறங்கி ஈரானியர்களை ஒற்றுமையாக்கி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

புரிகிறது.

கொள்கையளவில் ஈரானின் அடிப்படை வாதிகள் வெல்லக் கூடாது. ஆனால், இந்த 3 வாரங்களில் என்னிடம் உருவான ஒரு கேள்வி, பெரும்பாலான ஈரானியர்களே இந்த அடிப்படை வாதத்தைச் சகித்துக் கொள்ளத் தயாராக இருக்கும் போது வெளியார் என்ன செய்ய முடியும் என்பது தான்! அவர்கள் அடிப்படை வாதத்தை ஆதரிக்கவில்லை, ஆனால் அதோடு வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று நினைத்திருக்கிறார்கள் என நம்புகிறேன். அந்த சகிப்புத் தன்மை இருக்கும் வரை தலைமையைக் கொன்று ஒன்றும் மாறப் போவதில்லை என நினைக்கிறேன். தென்னமெரிக்க நாடுகளில் ஒரு போதை வஸ்துக் கும்பல் தலைவரைக் கொன்றால் உடனேயே அடுத்தவர் பதவிக்கு வருவது போல, ஈரானிலும் இருப்பார்கள்.

கடைசியில் "பாலாவி" (Pahlavi) தான் பாவம்😂!

மக்கள் வீதிக்கு இறங்காமைக்கு நான் பின்வரும் காரணங்களை காண்கிறேன்.

  1. ஜனவரியில்தான் 20,000க்கு மேலெ கொன்று குவிக்கப்பட்டார்கள். அதில் இருந்து மீண்டு மீள போராட 3 வருடம் எடுக்கும். இதுதான் ஈரானில் எப்போதும் நடப்பது.

  2. பஃலவி கூட இன்னும் வீதிக்கு இறங்க வேண்டாம் என்றே சொன்னார்

  3. யுத்தகால நடைமுறைகள் போராட்டம் இன்னும் மிருக தனமாக அடக்க வழிகோலும்.

  4. இஸ்ரேலை நம்பிபாலும், தம்பரை நம்பி வீதியில் இறங்க அவர்கள் தயாரில்லை. ஏன் என்றால் ஆரம்பம் முதலே தம்பர் “வெனிசுவேலா” தீர்வைத்தான் விரும்பினார். பஃலவியை கூட அவர் சரிவரார் என கூறி ஒதுக்கினார் தம்பர். நல்லகாலம் தம்பரை நம்பி இறங்கி இருந்தால் மக்கள் அநியாயமாக பழிவாங்க பட்டு இருப்பார்கள்.

    பிகு

    ஆனால் ஈரானிய மக்களை தாண்டி, ஈரான் இப்படி வெல்வது ஷியா அடிப்படைவாதிகள் இல்லாத அனைவருக்கும் நீண்ட கால நோக்கில் நல்ல செய்தி அல்ல.

    அரபு நாட்டினர் மட்டும் அல்ல, சதாமும், அசாத்தும், கடாபியும், நசாரும் கூட இவர்களில் இருந்து தள்ளியே நின்றார்கள். தனியே இவர்கள் ஷியா என்பது மட்டுமே காரணம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானில் மத ஆட்சிக்கு எதிரானவர்கள் கூட இந்தப்போரில் அனிஞாயமாக கொல்லப்பட்டுள்ளனர், அழிவை சந்தித்துள்ளனர், ஆட்சி முறையை காரணம் காட்டியே எதிரிகள் நாட்டை சூறையாடவும் அழிவுகளுக்கும் வழி வகுத்தன. ஆகவே இரானிய ஆட்சியாளர்கள் இதனை மனதிற்கொண்டு தங்கள் கடும் போக்கை தளர்த்தி, மாற்றி அனைத்து அரபு நாடுகளையும் அணைத்து ஒன்றிணைந்த பலமான சக்தியாக இயங்க முன்வரவேண்டும். இதுவே எதிர்கால வளமான ஈரானுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் சிறந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கப்பல்களும் ஆளணிகளும் உரிய இடத்திற்குப் போகவில்லை என்று நினைக்கிறேன்.

வெகிசூலாவிலும் இதே நடந்தது.

சிஐஏ யின் வேலை முடியுமட்டும் பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்தார்கள்.

16 hours ago, உடையார் said:

அடி பணிந்துவிட்டார் ரா 😁

15 hours ago, goshan_che said:

ஆனால் ஈரானிடம் இருந்தோ, இஸ்ரேலிடம் இருந்தோ எந்த தகவலும் வரவில்லை.

ஈரானின் கோரிக்கைகள் நிறுவேறுமா?

ஆகினால் அமெரிக்காவின் சகாப்தம் முடிந்ததாகவே அர்த்தம்.

ஈரான் போரை முடிக்க பல நிபந்தனைகளை போட்டுள்ளது.

அவற்றினை செயல்படுத்தாமல் தம்பர் தான் நினைத்தது போல் போரை நிறுத்த முடியும் என நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புரிந்தது புரியாதனவற்றிற்கு அப்பால் , உலக ஒழுங்குகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் ( பெயர் எப்படி இருந்தால் என்ன இலுமினாட்டியோ என்னவோ ) அவர்களுக்கு , கட்டுப்பாட்டு மையம் மாறிக்கொண்டிருக்கும் நிலைமை புரிந்து கொண்டிருக்கும் போலிருக்கு .

45 இல் அணுகுண்டு போட்டமாதிரி இப்பவும் செய்யாட்டி அது மாறத்தான் போகுது .

எனவே கட்டுப்படுத்தப்பட்ட முறையில் போடத்தான் வேணும் .

இவங்கள் முந்திக்கொண்டு விடுவாங்களோ எனும் நிலவரமும் இருக்கு .

டோடல் சம் - இப்போதைக்கு ஜகா வாங்கி , "சமாதானப் பேச்சுவார்த்தை " போய் , சில "கருணா " & கொம்பனிசை உருவாக்கி , பின்னர் நந்திக்கடல் செல்வது .

அது தான் பிளானா இருக்கும் .

எல்லா இடமும் நந்திக்கடல் சரிவருமோ தெரியவில்லை

பஸ்ஸுகளுக்குள்ள அவங்களே எத்தனை குண்டு வச்சாங்களோ , அவங்களுக்கு தான் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, சாமானியன் said:

49 வருசமாக, கருணா குரூப், நந்தி கடல் ஈரானில் சரி வரவில்லை.

நீங்கள் சொல்வது போல் இன்னும் பிரச்சினையை தூண்டி, சமாதானம் பேசினோம் சரிவரவில்லை எனவே அழித்தொழிப்பதை தவிர வேறு வழியில்லை என அழிக்க திட்டமாக இருக்கலாம்.

அது அணுகுண்டா அல்லது ஏனைய நாடுகளை அணியில் சேர்க்கும் முயற்சியா தெரியவில்லை.

ரஸ்யா ஈரானை பேச்சுக்கு போகுமாறு கேட்டுள்லதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க படைகளுக்கு ஒரு ஓய்வு நிலை தேவைப்படுகிறது, ஆயுதங்கள் சேகரிக்க குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்க்க ஒரு நேரம் தேவையாகலாம், அல்லது நான் போர் நிறுத்தம் கோரினேன் இரான் மறுத்துவிட்டது எனும் ஒரு மாயையை ஏற்படுத்தி மற்றைய நாடுகளை போரில் இழுக்கும் தந்திரம், கச்சா எண்ணெய் விலை சரிவு, இதனால் தன் நிதி நிலையை ஸ்திர படுத்தல், ஈரானை பேச்சு என ஏமாற்றிக்கொண்டு மறு வழியில் போரை உக்கிரமாக தொடர்தல். ட்ரம்பே சொல்லிவிட்டார், எனது எண்ணம் அடிக்கடி மாறுமென. இவர் தெரியாமல் காலை வைத்து விட்டு இப்போ வெளியேற முடியாமல் வேறு வழியுமில்லாமல் தவிக்கிறார். இவ்வளவு தூரம் இந்த போர் தொடருமென அவர் நினைத்திருக்க மாட்டார், வெனிசுலா மாதிரி ஒரு இரவில் முடித்து விடலாமென நினைத்தே தொடங்கியிருப்பார். இவரது அழைப்பையே மற்றைய நாடுகள் உதாசீனம் செய்து விட்டன, இப்போ நெத்தன்யாகு ஈரானை அழிக்க உலக நாடுகளை ஒன்று சேரும்படி அழைக்கிறார். இவர்களால் முடியவில்லை உலக நாடுகள் வரவேண்டுமாம். ட்ரம்ப் சொல்வதுபோல் எந்தப்பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்று இரான் அறிவிக்கிறது, ட்ரம்ப் ஒருதலைபட்சமாய் பேசுகிறாரே என்னவோ? இரான் விரும்பாத, எதிர்பாராத போரை தொடங்கியவர்கள் இவர்கள், இப்போ எதற்காக போர் நிறுத்த வேண்டுமென்கிறார் ட்ரம்ப்? ஈரான் அழிக்கப்படவேண்டிய நாடு, எங்களுக்கு அச்சுறுத்தலானது என்று கூறி சும்மா இருந்த ஈரானை வம்புக்கிழுத்தவர்கள் இவர்கள், அதே மாதிரி இரான் நினைப்பதில் தவறில்லையே, அவர்கள் கெட்டவர்களாகவே இருக்கட்டும், அவர்கள் தாங்கள் யாரென்பதை நிரூபிக்கவே செய்வார்கள். அதோடு இவர்களின் அச்சுறுத்தலை முறியடித்து தன்னை பாதுகாத்துக்கொள்வதில் தப்பில்லை. இல்லை, ஈரானின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் கூறுவதுபோல யுத்த நிறுத்தம் இடம்பெறவில்லை. யுத்தம் 4 ஆவது வாரமாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

ஆனால், ஹோர்மூஸ் நீரிணையினால் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குவதை 48 மணி நேரத்திற்குள் நிறுத்தாவிட்டால் ஈரானின் எண்ணெய் மற்று எரிவாயு உற்பத்திநிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். இத்தாக்குதலே 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதுகூட நடக்கவிருக்கும் அல்லது நடந்துகொண்டிருக்கும் பேச்சுக்களுக்குக் கால அவகாசம் கொடுப்பதற்காகவே தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய ஈரானிய நிலைகள் மீதான தாக்குதல்கள் வழமைபோல அமெரிக்காவினாலும் இஸ்ரேலினாலும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. இஸ்ரேல் வழமைபோல ஈரானின் இராணுவ இலக்குகள் மீதும் அரச - இராணுவத் தலைமைகள் மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்திக்கொண்டே இருக்கிறது. ஈரானும் அயல் நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறதுது.

அமெரிக்கா யுத்தத்திலிருந்து பின்வாங்காது விட்டாலும், இச்சண்டைகளில் இருந்து இராஜதந்திர ரீதியில் விலகிக்கொள்வதற்கான ஏதுவழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம். இதனாலேயே பேச்சுக்களுக்கு இடம் விடும்வகையில் சில தாக்குதல்களை மட்டும் பிற்போட்டிருக்கிறது அமெரிக்கா. போர் நிறுத்தப்படவில்லை. ஈரான் மீதான இராணுவ அழுத்தங்களை அது தொடர்ச்சியாக பிரயோகித்து வரும் வேளை, இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முற்றான உதவிகளை வழங்கியேவருகிறது. மேலும் போர் ஆரம்பிக்கப்படுவதற்கான காரணங்களாக தான் முன்வைத்தவற்றை விடாப்பிடியாக இன்றுவரை கூறியே வருகிறது. ஆக, தொடர்ச்சியான கடும்தாக்குதல்களை சிறிதுகாலத்திற்கு மட்டுப்படுத்திவிட்டு, விட்டுக்கொடுக்காத பேச்சுக்களில் ஈடுபடவே அமெரிக்கா விரும்புகிறது.

இப்போரைப் பொறுத்தவரை அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் இராணுவ வல்லமையினனையும், இராணுவக் கட்டுமானங்களையும் கணிசமாக அழித்துவிட்டன. ஈரானின் ஏவுகணைச் செலுத்திகள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்புத் தொலிற்சாலைகளையும் கணிசமானளவு அழித்திருக்கின்றன. ஈரானைப் பொறுத்தவரை அயலில் உள்ள வளைகுடா நாடுகளின்மீது கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கிறது. அமெரிக்கத் தளங்கள் மீதும், தூதரகங்கள் மீதும் கணிசமான தாக்குதலை நடத்தியிருக்கின்றது. இதுவரையில் 13 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன் பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டிருக்கிறார்கள். குறைந்தது 10 அமெரிக்க விமானங்கள் முழுவதுமாகவோ பகுதியாகவோ சேதமடைந்திருக்கின்றன. இதற்கு மேலதிகமாக ஹோர்மூஸ் நீரிணையூடாகச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலினை நடத்தி அப்பகுதியூடான கப்பற்போக்குவரத்தினை முற்றாகத் தடுத்து வைத்திருக்கிறது. தனது இராணுவ நிலைகள், கட்டுமானங்கள் கடுமையாக அழிக்கப்பட்டிருக்கும்பொழுதிலும், தீவிரமாக எதிர்த்தாக்குதலினை நடத்தியே வருகிறது. இருபக்கமும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதுடன், எத்தரப்புமே அறுதியான வெற்றியினை இதுவரை பெறவில்லை. அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் தொழிநுட்ப பலத்தினால் அவர்களின் கை ஓங்கியிருப்பினும் ஈரானும் தொடர்ந்தும் போரிட்டே வருகிறது.

அமெரிக்கா தனது தீவிரத் தாக்குதல்களை மட்டுப்படுத்தியிருப்பதாகக் கூறினும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை தொடர் தீவிரத்துடன் நடத்தியே வருகிறது. ஈரானுடன் அமெரிக்கா பேச்சுக்களில் ஈடுபட்டாலும்கூட தமது தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்றே நெத்தன்யாகு அறிவித்திருக்கிறார். இப்போரின் ஊடாக ஈரானின் இராணுவ வல்லமையினை முற்றாக அழித்துவிடவும், தன் மீது ஈரான் செலுத்தும் பாதுகாப்பு அச்சுருத்தலினை நிரந்தரமாகவே அகற்றிவிடவும் இஸ்ரேல் முயல்கிறது.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

உலக சந்தையில் எரிபொருளின் விலையேற்றமும் அதனால் ஏற்பட்டுவரும் பொருளாதாரச் சிக்கல்களும் அனைத்து நாடுகளையும் பாதித்து வருகின்றன. போர் தொடங்குமுன்னர் ஒரு லீட்டர் ஒரு டொலர் அறுபது சதத்திற்கு விற்கப்பட்ட டீசலை நான் இன்று மூன்று டொலர்கள் 20 சதங்கள் கொடுத்து வாங்குகிறேன். இரு மடங்கைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறது. இதனோடு பொருட்களின் விலைகளும் அதிகரித்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்த பொருட்களின் விலைகள் சடுதியாக 50 சதத்திலிருந்து ஒரு டொலர்கள் வரை அதிகரித்திருக்கிறது. இது போதாது என்று வட்டி வீதத்தினை குறைந்தது இரு முறையாவது அதிகரிக்கவேண்டி நேரிடும் என்று அவுஸ்த்திரேலிய மத்திய வங்கியின் ஆளுனர் எதிர்வு கூறுகிறார். நிலைமை இப்படியிருக்கிறது.

ஆனாலும், இப்போர் ஆரம்பிக்கப்பட்டமைக்கான சில காரணங்கள் இருக்கின்றன. அவையாவன, ஈரான் அணுவாயுத உற்பத்தியைக் கைவிட வேண்டும், நீண்டதூர ஏவுகணை உற்பத்தியைக் கைவிடவேண்டும், இஸ்ரேலினைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதக் குழுக்களுக்கான தனது நிதி, ஆயுத மற்றும் தார்மீக ஆதரவினை கைவிடவேண்டும் என்பன. ஆனால், இவை எவற்றையும் தான் கைவிடப்போவதில்லை என்று ஈரான் கூறுவதாலேயே போர் ஆரம்பித்தது. முன்னர் 2000 கிலோமீட்டர்கள் பாய்ந்துசென்று தாக்கும் ஏவுகணைகளுடன் நிறுத்திக்கொள்வேன் என்று கூறிய ஈரான், இரு நாட்களுக்கு முன்னர் சுமார் 4000 கிலோமீட்டர்கள் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் இரண்டினை இந்துசமுத்திரத்தின் டியேகோகார்சியா தீவில் அமைந்திருக்கும் இங்கிலாந்து - அமெரிக்க கூட்டு இராணுவ தளம் மீது ஏவியிருக்கிறது. ஒரு ஏவுகணை பாதி வழியில் தானாக வீழ்ந்துவிட, இரண்டாவது அமெரிக்கக் கடற்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. ஆக, ஈரான் தனது ஆயுத பெருக்கத்தை நிறுத்தப்போவதில்லை என்பதுடன் இஸ்ரேலினைத் தொடர்ச்சியாக அழிக்கும் தனது நோக்கத்தினையும் கைவிடவில்லை என்பது உறுதியாகிறது. போதாக்குறைக்கு தான் அழிக்கப்பட்டால், உலக பொருளாதாரத்தையும் சேர்த்து அழித்துச் செல்வேன் என்றும் சபதமிட்டிருக்கிறது.

போர் பெருமளவு தூரத்தினைக் கடந்து வந்துவிட்டது. சீன - ரஸ்ஸிய உதவியினால் இன்றுவரை தாக்குப்பிடிக்கும் ஈரானின் முல்லாக்களும், அவர்களின் இராணுவ வல்லமையும், அணுவாயுதக் கனவும் முற்றாக அழிக்கப்பட வேண்டும். இஸ்ரேல் எனும் நாட்டிற்கு மட்டுமல்லாது, மொத்த உலகிற்கும் ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் இருப்பு ஆபத்தானது. ஆகவே போர் தொடரப்பட்டு, ஈரான் முல்லாக்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, அயல்நாடுகளுக்கும் உலகிற்கும் ஆபத்தில்லாத ஈரான் உருவாகும்வரை சண்டை தொடரப்படுதல் அவசியம். எதிர்கால மத்திய கிழக்கும், மொத்த உலகும் அமைதியை அடைய வேண்டுமென்றால் இப்போர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முழுமையான வெற்றியுடன் முடிக்கப்படுதல் அவசியமானது. அதற்கான விலையினை உலகம் செலுத்துவதும் தவிர்க்க முடியாதது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.