Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து நாட்களில் 34கி.மீ பாலம் கட்டுவது சாத்தியமா?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி: இன்று மறுபடியும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறேன். வழக்கறிஞர்கள் தங்கள் வாதப் பிரதிவாதங்களில் நீதிபதியின் இதயம் மிகவும் வாய்க்கெட்டது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மனுதாரரின் வழக்கறிஞரே.. ராமாயணத்தின் அடிப்படையில் இலங்கை இந்தியாவுக்குச் சொந்தமா?

மனுதாரரின் வழக்கறிஞர்: மன்னிக்கவும் கனம் நீதிபதி அவர்களே..எங்கள் தரப்பு முதன்மை வழக்கறிஞர் ஆதாரம் தேடி ஆபிரிக்கா வரை சென்றுள்ளார். அதனால் அவரது இளநிலை வழக்கறிஞரான நான் பங்கு பெறுகிறேன். உங்கள் கேள்விக்கான பதில்..தர்க்க அடிப்படையில் இலங்கை இந்தியாவுக்குச் சொந்தம். ஆனால் இந்த விவாதம் இப்போது தேவையில்லாதது.

நீதிபதி நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொள்கிறார்..

நீதிபதி: இன்று ராமாயணத்தின் அடிப்படையில் காலவாய்ப் பணிகளை நான் நிறுத்த உத்தரவிட்டால், நாளை யாராவது, இலங்கையை மீட்டு இந்தியாவுக்குத் தரும்படி கேட்கமாட்டார்களென்று என்ன நிச்சயம்?

மனுதாரரின் வழக்கறிஞர்: இதை அறுதியிட்டு என்னால் கூறமுடியாது. ஆனால் கச்சைதீவைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளவை யாவும் முக்கியமான விடயங்கள். விஞ்ஞானத்தைக் காரணங்காட்டி ஒதுக்க முடியாதவை. பண்டைக்கால கட்டுமான முறைகள் யாவும் எமக்குத் தெரியாது. உதாரணத்துக்கு தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரு கல்லை பல அடிகள் மேலே ஏற்றிப் பதித்துள்ளார்கள். எப்படி அது சாத்தியமென்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை

நீதிபதி: அரசு வழக்கறிஞரே.. தஞ்சைக்கோவிலின் பெரிய கல்லை இந்தக்காலத்தில் அவ்வாறு பதிக்க முடியுமா?

அரசு வழக்கறிஞர்: முடியும் கனம் நீதிபதியவர்களே..

நீதிபதி: ஆனால் ஐந்து நாட்களில் 34 கி.மீ.பாலம் உங்களால் கட்டமுடியாது. அப்படித்தானே?.

அரசு வழக்கறிஞர்: ஆம்.

மனுதாரரின் வழக்கறிஞர்: கனம் நீதிபதியவர்களே..கனடாவில் ஒரே நாளில் பாலம் கட்டியிருக்கிறார்கள்.

நீதிபதி: அப்படியா? அப்படியானால் ராமர் பாலமும் சாத்தியம் போலுள்ளதே? இதற்கு உங்கள் பதிலென்ன, அரசு வழக்கறிஞரே?

அரசு வழக்கறிஞர்: கனடாவில் கட்டப்பட்டது Precast எனப்படும் முன்கூட்டியே கட்டப்பட்ட பாலம் தூக்கிவரப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. அதுவும் ஒரு சிறிய பாலம்.

நீதிபதி: மனுதாரர் ராமர் பாலத்தை precast செய்ததாக நம்புகிறாரா?

மனுதாரரின் வழக்கறிஞர்: இல்லை நீதிபதியவர்களே..

நீதிபதி: அப்படியானால் இந்த ராமர் பாலம் ஐந்து நாட்களில் கட்டப்படுவது சாத்தியமில்லை என்று கொள்ளலாமா?

மனுதாரரின் வழக்கறிஞர்: கனம் நீதிபதியவர்களே.. இது ராமரை அவமதிக்கும் செயல். எப்படி ராமரால் ஒரு பாலத்தைக்கட்டமுடியாதென்று வினவுவீர்கள். இதேபோல முஸ்லிம் கிறீஸ்தவ மதங்களை உங்களால் கேள்விகேட்க முடியுமா?

நீதிபதியின் உடம்பு நடுங்க வியர்வை அருவியாகக் கொட்டுகிறது..

நீதிபதி: நான் ஏன் கேட்கவேண்டும்? :icon_mrgreen:

மனுதாரரின் வழக்கறிஞர்: இல்லை.. நீங்கள் வேண்டுமென்றே இந்து மதத்தை அவமதிக்கிறீர்கள்..

நீதிபதி: இந்தப் பாலம் கிறீஸ்தவ, முஸ்லிம் மத சம்பந்தப்பட்டதா? இல்லையே.. அதனால் அதைப்பற்றி நாம் இங்கே விவாதிக்க முடியாது.

மனுதாரரின் வழக்கறிஞர்: ஏன் முடியாது? இந்தப்பாலத்தை ஆடம்ஸ் பாலம் என்றும் அழைப்பார்கள். ஆடம் என்பவர் கிறீஸ்தவ மதப்படி சாத்தான் கொடுத்த ஆப்பிளை உண்டவர்..! அதனால் இந்த ஆடம்ஸ் பாலத்தைப்பற்றி கிறீஸ்தவத்திலும் ஏதாவது உள்ளதா என்று ஆராய வேண்டும்...

நீதிபதியை தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்கிறார்கள்..

:icon_idea::(:(

  • Replies 81
  • Views 9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனுதாரரின் வழக்கறிஞர்: கனம் நீதிபதி அவர்களே இலங்கையில் காரை நகர் என்ற ஒரு தீவு இருக்கின்றது.

அந்த தீவையும் மறுபக்கத்திலிருக்கும் புன்னாலை என்ற இடத்தையும் இணைக்கும் பாலமும் இராமர் பாலமும் ஒரே அடிப்படையில் தான் கட்டப்பட்டுள்ளன.

காரை நகர் பாலம் முற்றிலும் மண் கல் கொண்டு நிரப்பி கட்டப்பட்ட பாலமாகும். இடையிடையே இருபக்கமும் கடல் நீர் சென்றுவர மதகுகள் வைத்துள்ளார்கள்.

இதை போாலவே இராமர் பாலமும் கட்டப்பட்டுள்ளது. இப்போ கடலுக்குள் மூழ்கியாதால் அன்று இடையிடையே வைக்கப்பட்ட மதகுகள் கடல் நீரால் அரிக்கப்பட்டடதனால் மிகுதி பகுதிகள் இப்போ மண் குன்றுகள் போல தென்படுகின்றது. இதிலிருந்து கவனிக்கபட வேண்டியது இராமர் பாலம் அப்பவே 103 மதகுகள் வைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது என்பதே. :(

இப்படியான பாலங்கள் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன பல இடங்களில்

மேலும் குரங்குகள் இராமர் பாலம் கட்டுவதற்கு உதவியதாக சொல்லபடுதிலும் உண்மை தன்மையுள்ளது.

குரங்குகளுக்கு நாம் சொல்வதை செய்யும் திறமை இருக்கின்றது. இப்போ விஞ்ஞானிகள் என்று தற்காலத்தில் சொல்லப்படுகின்றவர்களே நிருபித்துள்ளார்கள்.

இராமரும் அதனால் தான் குரங்குகளை அந்த காலத்திலேயே தெரிவு செய்துள்ளார்.

சிலர் சொல்கின்றார்கள் மற்ற மிருகங்களும் இதே போல் செய்யுமென்று.

அதற்காக பூனையையோ நாயையோ கேட்கலாமா இந் பெரிய கல்லை துக்கு என்று. சிறிது அறிவுபூர்வமாக சிந்தியுங்கள் எதற்கு எதை உபயோகிக்கலாம் என்று.

ஆதாரங்கள்

http://eelamtube.com வீடியோ கேம் விளையாடும் குரங்கு

மேலும் எனது இணைய நண்பர் சொல்லியிருந்தார் எலிக்கும் கறன்ட் சொக் கொடுத்தால் இப்படி செய்யுமென்று. இதிலிருந்து ஒன்று புரிகின்றது அர்தமுள்ள இந்துமதம் சொல்லும் ஒவ்வொன்றிலும் ஒரு அர்த்தம்முள்ளது என்றுதான். பிள்ளையாருக்கு பக்கத்தில் இருப்பது எலி

http://www.dukenews.duke.edu/2005/05/monkeyrobot.html

http://www.livescience.com/technology/0505...y_robotics.html

http://newsroom.ucla.edu/portal/ucla/srp-view.aspx?id=15078

http://www.newscientist.com/article/dn1248...or-peanuts.html

http://english.pravda.ru/science/19/94/377/13706_monkey.html

உடனே அவர்கள் சொல்வார்கள் இது எல்லாம் மூடத்தன்மை என்று.

அவர்களிடம் ஒன்று கேட்கிறேன் ஜேசு சிலுவையில் அறைந்த பின்னர் உயிர்த்து எழும்பி வந்து அப்பம் கொடுத்ததென்பதும் மூடதன்மை தானே? அந்த கறள் கட்டிய ஆணியிலிருந்து ஏற்பு ஏற்படாமல் அவர் தப்பி வந்தார் என்பது மட்டும் அறிவியலோ :icon_mrgreen::icon_idea:

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இராமர் செய்யல்லையே அப்படி சித்துவிளையாட்டுக்கள். நிறையச் செய்திருக்கிறார். சிலையாய் இருந்த பெண்ணை உயிர்ப்பித்தே இருக்கிறார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஏன் சத்தியசாய் பாபா கூட பல சித்துக்களைச் செய்யுறார்... அப்ப அவரும் ஜேசு போல கடவுளின் பிரதிநிதி என்பீர்களா..??!

ஜேசுவிற்குப் பிறகு ஏன் யாரும் தோன்றி இப்படி வாய் பேசாதவங்களை எல்லாம் பேச வைக்கும் மருத்துவ சிகிச்சையை அளிக்கல்ல..??! ஆக இராமர் செய்தா அது நம்பத்தகுந்ததல்ல. ஜேசு செய்தா நபிகள் செய்தா அதை நம்பினால் என்ன விட்டால் என்ன.. நமக்கென்ன. நாம இராமரை ஒரு கை பார்க்கிறது என்று முடிவு கட்டிட்டம்..!

இக்களத்தில் நடுவுநிலை என்பதே கிடையாது. வேண்டும் என்றே இராமர் சீதை என்ற நிலைகளை கொச்சைப்படுத்தும் வகையான கருத்துக்கள் அனுமதிக்கப்படுகின்றன. இங்கு வைக்கப்பட்டுள்ள கருத்துக்களில் எத்தனை தலைப்புடன் சம்பந்தப்பட்டு நியாயபூர்வ விவாதம் செய்கிறது..??! இராமரை பழிக்கவும்.. நெளிக்கவும்.. நக்கல் நளினம் பண்ணவும்.. ( அது நேரடியாகவும் நடக்கது மறைமுகமாகவும் நடக்குது) இடமளிப்பினம். ஆனால் இதையே நாம் எழுதினால் இங்குள்ள சில நிர்வாகிகளுக்கு எமது கருத்துக்குள் உள்ள மறைமுகங்கள் கூட வெளில தெரிஞ்சிடுது. தணிக்கை செய்யுற வசதிக்கு ஏற்ப...! அதிதான் வேடிக்கையானது..! இவர்கள் தங்களைப் போல மற்றவர்களையும் எண்ணிக் கொண்டார்களோ என்னவோ..??! :icon_idea::icon_mrgreen:

யாழில்............ எழுத்தார்கள் தேவைதான் இதை நெடுக்காலபோவான் துயவன் போன்றோர் நிறைவு செய்வது வரவேற்க தக்கது. நான் எப்போதாவது நேரம் கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே வருகிறேன் வந்து உங்ஙகளுக்கு கோபம் உண்டு பண்ணும் படியாக எதையாவது எழுதுவது கூடாது என்று பல இடங்களில் தவிர்த்திருக்கிறேன். ஆனாலும் சில இடங்களில் எனது கருத்தை முன்வைத்திருக்கிறேன் (எதிர்வாதமாக அல்ல). மேலே கூட நான் எழுதியிருந்தேன் இது ஒரு தகவலே அன்றி எதிர்கருத்து அல்ல என்று.

எதிர் கருத்து எழுதுவதென்பது வரவேற்க தக்கதுதான்.............. அதற்காக கருத்தை வாசிக்காமல் எழுதுவது எவ்வளவோ முட்டாள்தனம்........... அதை இந்த கருத்துகளத்தில் பல காலமாக எழுதிவருபவர்கள் செய்வது வருத்தத்திற்கு உரியது நண்பர்களே.........

மேலே சென்று ஒரு தடவை எனது தகவல் எதற்காக முன்வைக்கப்படுகின்றது என்பதை திருப்பி ஒரு முறை வாசியுங்கள். பின்பு உங்களது எதிர் கருத்தை வாசியுங்கள் ...... உங்களை நினைத்தால் உங்களுக்கே அவமானமாக இருக்கும்.

அதாவது........... நெடுக்காலபோவான் குறிப்பிட்டு இருந்தார் ஜேசு சிலுவையில் அறையும் வரை அதாவது தான் உயிர்த்தெழுந்து காட்டும் வரை தனது தெய்வீக தன்மையை வெளிகாட்டாது இருந்தார் என்று. அத்றகான தகவலாகவே எனது கருத்து முன் வைக்கப்பட்டது............ இல்லை ஜேசு தன்னிடம் தெய்வீக தன்மை இருக்கிறது என்பதை தொன்று தொட்டே செய்திருக்கிறார் என்பதை பைபிள் ஊடககவும் பிற கிறிஸ்தவ மத புத்கங்கள் ஊடகவு நான் படித்திருக்கிறேன்............... ஆனாலும் நெடுக்காலபோவோனின் கருத்தையும் நான் கிறிஸ்த்தவ மத புத்தகங்களில் படித்திருறக்கிறேன். மதங்கள் சார்பான புத்தகங்கள் முன்பின் முரண்படுவது இதுதான் முதல் தடவையல்ல. மதங்கள் சார்பான புத்தகங்கள் எல்லாம்மே கேள்வி ஏதும் கேட்காமல் அதை கடவுள் பயத்தினால் நம்புவர்களுக்கு மட்டுமே எழுத பட்டது இது என்னுடைய தனிபட்ட கருத்து.

இப்போது விடயம் என்னவெனில் ....????

திருவாளர் துயவன். திரு. தமிழ்நெக்ஸ். நெடுக்காலபோவான். மூன்று பேரும் நான் ஏதோ ஜேசுவை துக்கி மேலேயும் இராமனை கீழேயும் வைத்துவிட்டதாக சொல்லி............. 34 கிலோமீற்றர் பாலத்தை ஐந்து நாளில் கட்ட முடியுமா என்ற தலைப்பை திசை திருப்பி ஓரு பக்கத்தை பூராகவும் வீணடித்திருப்பது உண்மையிலேயே வேதனைகட்குரியது. நண்பர்களே .......... உங்களின் வாதம் இந்துமதம் உயர்ந்தது என்பதாக இருக்கிறது. எனது வாத் இதுவரையில் கடவுளே இல்லை என்பதாகவே இருக்கிறது............ இனியும் அவ்வாறே இருக்கும் காரணம் அதுதான் உண்மையும் கூட கடவுளை மனிதனே படைத்தான்........ மனிதன் குரங்கில் இருந்து வந்தான்.

இவ்வாறான கருத்தாடல் மீண்டும் எங்காவது வந்தால் மீண்டும் சந்திப்போம்.

நான் குறிப்பிட்டு எழுதிய முவரும் உங்கள் திறமையை மேம்படுத்துங்கள் என்பதாக எழுதுகிறேன்... தவறாக விளங்கி என்மேல் கோபம் கொள்ளாதீர்கள் நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருவாளர் துயவன். திரு. தமிழ்நெக்ஸ். நெடுக்காலபோவான். மூன்று பேரும் நான் ஏதோ ஜேசுவை துக்கி மேலேயும் இராமனை கீழேயும் வைத்துவிட்டதாக சொல்லி............. 34 கிலோமீற்றர் பாலத்தை ஐந்து நாளில் கட்ட முடியுமா .

நான் கூறிப்பிடுவது இந்து மதம் என்ற புத்தகம் வெளியிடும் கருத்துக்கள் விளக்கங்கள் எல்லாவற்றிலும் ஏதோ அர்தமுள்ளது என்பது தான். பண்டைய காலத்தில் அதில் குறிப்பிட்டு இருந்த சகல விடயங்களும் இப்போ படிப்படியாக நிருபிக்க பட்டு வருகின்றன.

அதே போல தான் இராமர் பாலமும்.

அதில் குறிப்பிடப்படும் சில விடயங்கள் திரிவு படுத்த பட்டிருக்கலாம். ஆனால் மூலம் ஒன்றே.

உதாரணமாக பண்டைய காலத்தில் மந்திரம் தந்திரம் பேய் பிசாசுகள் கூடுவிட்டு கூடு பாய்வது பிரமாஸ்திரம் புஸ்பவிமானம் என பலவற்றை சொல்லியிருந்தார்கள்.

இப்போ அதே போல பல வரவில்லையா நடக்கவில்லையா??

ஒன்றை மற்றும் கருத்தில் கொள்ளுங்கள் இவைகளை மறுத்து மூடநம்பிக்கை என்று அறிக்கை விடுபவர்களும் மனிதர் தான்.

சரி பிழை இருக்கலாம். அதை அறியவேண்டியது நமது கடமை.

பண்டைய காலத்தில் கண்ணகி மதுரையை எரித்ததாக சொல்லப்படுகின்றது.

இந்த வீடியோக்களை பாருங்கள்.

http://www.eelamtube.com/index.php

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமது நீதிபதியவர்கள் முதலாவது மாரடைப்பிலிருந்து உயிர்பிழைத்து சில மாதங்கள் கழித்து நீதிமன்றம் வருகிறார். :icon_idea:

நீதிபதி: நான் இல்லாதபோது இந்த விசாரணையை மேற்கொண்ட நீதிபதியிடம் மனுதாரரின் வழக்கறிஞர் பலவிதமான ஆதாரங்களை சமர்ப்பித்திருக்கிறார். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்து முடித்தேன். இலங்கையில் காரை நகர் என்ற ஒரு தீவு இருப்பதாகவும், அந்த தீவையும் மறுபக்கத்திலிருக்கும் புன்னாலை என்ற இடத்தையும் இணைக்கும் பாலமும் இராமர் பாலமும் ஒரே அடிப்படையில் தான் கட்டப்பட்டுள்ளன என்றும் மனுதாரர் குறிப்பிடுகிறார். இதைப்பற்றி அரசு வழக்கறிஞர் ஏதாவது கூறவிரும்புகிறாரா?

அரசு வழக்கறிஞர்: ஆம் கனம் நீதிபதியவர்களே. காரைநகர் பாலம் எத்தனை நாட்களில் கட்டப்பட்டது?

மனுதாரரின் வழக்கறிஞர்: தெரியவில்லை.

அரசு வழக்கறிஞர்: இங்கே ராமர் பாலம் உண்டா இல்லையா என்பதல்ல பிரச்சினை. ஐந்து நாட்களில் 34கி.மீ கட்டிமுடிக்க முடியுமா என்பதுதான் வழக்கின் சாராம்சம். அந்த அடிப்படையில் காரைநகர் பாலம் ஒருவேளை 3.4கி.மீ இருந்தால் அதை அரை நாளில் கட்டிமுடிக்க முடியுமென்று மனுதாரரின் வழக்கறிஞர் கருதுகிறாரா?

மனுதாரரின் வழக்கறிஞர்: இல்லை.

அரசு வழக்கறிஞர்: அவ்வளவுதான் கனம் நீதிபதியவர்களே..

நீதிபதி தனது வழக்குக் குறிப்பில் ஏதோ எழுதுகிறார்.

நீதிபதி: சரி..வேறு ஏதாவது மனுதாரர் கூறவிரும்புகிறாரா?

மனுதாரரின் வழக்கறிஞர்: ஆம் கனம் நீதிபதியவர்களே..குரங்குகள் இராமர் பாலம் கட்டுவதற்கு உதவியதாக சொல்லபடுதிலும் உண்மை தன்மையுள்ளது. குரங்குகளுக்கு நாம் சொல்வதை செய்யும் திறமை இருக்கின்றது. இப்போ விஞ்ஞானிகள் என்று தற்காலத்தில் சொல்லப்படுகின்றவர்களே நிருபித்துள்ளார்கள். இராமரும் அதனால் தான் குரங்குகளை அந்த காலத்திலேயே தெரிவு செய்துள்ளார்.

அப்போது பார்வையாளர் பகுதியிலிருந்து ஒரு குரல்..

நீதிபதி: யாராவது இந்த வழக்கு சம்பந்தமாக ஏதாவது கூறவிரும்பினால் கூண்டுக்குள் வந்து சொல்லவும்.

டவாலி: ஜஸ்டின்..ஜஸ்டின்..ஜஸ்டின்..

ஜஸ்டின் கூண்டுக்குள் வந்து நீதிபதிக்கு வணக்கம் வைக்கிறார்.

நீதிபதி: ஜஸ்டின்.. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஜஸ்டின்: மனுதாரர் சொல்லும் குரங்கு மட்டுமல்லாமல் நாய் பூனை எலி கூட பழக்கப்படுத்தினால் சொல்வதைச் செய்யும்.

நீதிபதி: குரங்கு மாதிரிச் செய்யுமா?

ஜஸ்டின்: சில வேலைகள் முடியலாம்.

மனுதாரரின் வழக்கறிஞர்: குரங்கு அளவுக்குப் பாரம் தூக்குமா இந்த நாய், பூனை மற்றும் எலி?

ஜஸ்டின்: இல்லை

மனுதாரரின் வழக்கறிஞர்: இந்த அம்சத்தைக் குறித்துக்கொள்ளுங்கள் கனம் நீதிபதியவர்களே.. :icon_mrgreen:

அரசு வழக்கறிஞர்: குரங்கு கல்லைத்தூக்கும் என்று சொல்வதற்கு ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை. ஆனால் அவைகளையே பெரும்பாலும் கொண்டு ஐந்து நாட்களில் 34 கி.மீ பாலம் கட்ட முடியுமா என்பதே கேள்வி.

மனுதாரரின் வழக்கறிஞர்: எனக்குத் தெரியாது. ஆனால் ராமாயணத்தில் உள்ளது.

அரசு வழக்கறிஞர்: ராமாயணத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு சேது கால்வாய்த் திட்டத்தை இடைநிறுத்தம் செய்யலாமா?

மனுதாரரின் வழக்கறிஞர்: தெரியாது. ஆனால் வேறு ஆதாரங்களையும் தேடவேண்டும்.

அரசு வழக்கறிஞர்: வேறு ஆதாரம் எங்கே?

மனுதாரரின் வழக்கறிஞர்: இதென்ன கேள்வி. எனக்குத் தெரியாது. ஆனால் இருந்தாலும் இருக்கலாம். ஆகவே பணிகளை இடைநிறுத்தம் செய்ய வேண்டும். மேலும் ராமாயணத்தை இந்த நீதிமன்றம் நம்பவும் வேண்டும்.

அரசு வழக்கறிஞர்: ஐந்து நாட்களில் 34 கி.மீ. பாலம்கட்ட முடியுமென ராமாயணத்தை மட்டுமே உங்களால் இப்போது ஆதாரமாகக் காட்ட முடிகிறது. இதைமட்டும் ஆதாரமாகக் கொண்டு பணிகளை இடைநிறுத்தம் செய்தால் அது மூடத்தனம் ஆகாதா?

மனுதாரரின் வழக்கறிஞர்: ஜேசு சிலுவையில் அறைந்த பின்னர் உயிர்த்து எழும்பி வந்து அப்பம் கொடுத்ததென்பதும் மூடதன்மை தானே? அந்த கறள் கட்டிய ஆணியிலிருந்து ஏற்பு ஏற்படாமல் அவர் தப்பி வந்தார் என்பது மட்டும் அறிவியலோ?

அரசு வழக்கறிஞர்: யேசுவுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்?

மனுதாரரின் வழக்கறிஞர்: ராமர் பாலம் ஆடம்ஸ் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இதை முன்னமே விளக்கியுள்ளேன். அதனால் சம்பந்தம் உண்டு.

நீதிபதி மறுபடியும் மயங்கிச் சாய்கிறார்..

:(:(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசு வழக்கறிஞர்: கனம் நீதிபதி அவர்களே இந்த காரைநகர் பாலத்தில் தமிழீழ விடுதலை இயக்கங்கள் ஆரம்ப காலத்தில் சீறிலங்கா கடற்படை மீது கண்ணி வெடித் தாக்குதலை மேற்கொண்டன என்பதையும் கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள். ஆனால் அவர்கள் குறி ஒரு மினி வான் இடையில் வந்தால் பிழைத்துவிட்டது.

:icon_mrgreen:

Edited by tamillinux

ஏன் டங்குவார்... இராமரைப் பற்றி இவ்வளவு அலசுறீங்களே தெய்வீக சக்தி படைத்த ஜேசு கிறிஸ்து கூட சிலுவை மரணம் வரை தான் இறையருள் மிக்கவன் என்று காட்டாமல் சாதாரண மனிதனாகத்தானே வாழ்ந்ததா கிறிஸ்தவம் சொல்கிறது. உயிர்ந்தெழுந்த போதுதான் அவருக்குள் இருந்த தெய்வீக மகிமை வெளிப்பட்டதாச் சொல்லுறாங்க. ஏன் இராமரும் இதே அச்சில் செயற்பட்டிருக்கக் கூடாது. அங்கால நபிகள் நாயகத்துக்குப் பின்னாடியும் நிறைய இருக்குது.

இராமர் பாலம் என்பது தற்போதைய நவீன கால பாலங்கள் போன்றது என்பதாக நீங்கள் கற்பனை செய்வதற்கு இராமாயணம் பொறுப்பல்ல. அது பாலமல்ல. கடலூடு தரையை இணைக்கும் பாதை. இடையிடையே குறுக்கடற்குன்றுகளைக் கடக்க பாலம் அமைத்திருக்கலாம் இல்லையா..??! அறிவியல் தான் தான் ஆராயிறன் என்றுதே பிறகேன் நீங்கள் இடையில இவ்வளவு கஸ்டப்படுறீங்க. அறிவியலுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கட்டன். பாலமா.. புலுடாவா என்று..??!! :)

ஜேசு தான் கடவுளின் பிள்ளை என்பதை நிருபிக்க எவ்வளவோ வித்தைகளை முன் கூட்டியே செய்து காட்டி இருக்கிறார். உதாரணத்திற்கு பிறவி ஊமையையே வாய்பேச வைத்திருக்கிறார்.................. அடுக்கிக் கொண்டே போலாம்.

இது சின்னதொரு தரவுதான்! உங்களின் வாதத்திற்து எதிர் வாதமல்ல

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனுதாரரின் வழக்கறிஞர்: நீதிபதி அவர்கள் இதையும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்

Rama’s bridge is only 3,500 years old: CRS

The Adam’s bridge over Palk Strait, said to be the remains of a bridge built by Lord Rama, dates back to only 3,500 years and not 1.7 million years as claimed earlier.

A team from the Centre for Remote Sensing (CRS) of Bharathidasan University, Tiruchi, has come up with startling facts about this ‘‘bridge’’. Led by Professor S.M. Ramasamy, the team is studying the geological changes that took place along the Tamil Nadu coastline in the past 40,000 years.

Speaking to The Indian Express, Ramasamy said the CRS findings will give a clearer picture of the bridge connecting Dhanushkodi in India to Talaimannar in Sri Lanka.

A NASA satellite picture had brought the land strip under focus and some reports had mentioned that this was only a coral reef dating back 1.7 million years. Historians also do not subscribe to the claim linking this stretch to Ramayana. Besides NASA pictures, those taken by Indian Remote Sensing satellites also showed the bridge clearly.

Ramasamy says the satellite pictures and carbon dating of some ancient beaches between Thiruthuraipoondi and Kodiyakarai show the Thiruthuraipoondi beach dates back to 6,000 years and the Kodiyakarai beach to 1,100 years. In other words, the sea was near Thiruthuraipoondi 6,000 years ago and reached Kodiyakarai around 1,100 years ago.

Ramasamy explains that the land/beaches were formed between Ramanathapuram and Pamban because of the long shore drifting currents which moved in an anti-clockwise direction in the north and clockwise direction in the south of Rameswaram and Talaimannar about 3,500 years ago.

The sand was dumped in a linear pattern along the current shadow zone between Dhanushkodi and Talaimannar. Later, corals may have accumulated over these linear sand bodies, Ramasamy adds.

But as the carbon dating of the beaches roughly matches the dates of Ramayana, its link to the epic needs to be explored, he adds. Declining to comment whether the bridge was indeed built by Rama, Ramasamy says he would leave that to the experts to answer.

மூலம்

http://www.indianexpress.com/india-news/fu...ontent_id=17736

இளைஞன் இப்ப என்ன சொல்ல வாறீங்கள்? :)

அடடா :rolleyes:

அடடா :wub:

டங்குவார் பாவம், நெடுக்காலபோவான் நல்லாக்குழப்பி போட்டார் போல இருக்கிது.

இப்படியே நிலமை போனால், கலகம் அடக்கும் போலிசார் இஞ்ச இறக்க வேண்டி வரப்போகிது.

இந்த ஆராய்ச்சிய விட்டுப்போட்டு எல்லாரும் சேந்து எனக்கு கொஞ்ச காச அன்பளிப்பா தந்தீங்கள் எண்டால் ஐந்து நாட்களில் கனடாவில் ஒரு வீடு கட்டுவது சாத்தியமா எண்டு செய்து கட்டிபாத்து ஆதாரங்களோட சொல்லுவன். உங்களுக்கும் புண்ணியமா போகும். வீட்டூக்கு வேணுமென்றா வாசலில சிறி ராம ஜெயம் எண்டு கதவில எழுதிப்போடுறன். வீட்டுக்கு ராம வாசா எண்டு பெயர் வைக்கிறன். முன்னால ரெண்டு குந்து கட்டி அதில வலமும், இடமுமா அனுமர் சிலை ரெண்டு வச்சு விடுறன்.

கலைஞன்,

குழப்பமெல்லாம் ஒண்டுமில்லை... :rolleyes: இந்த அறிக்கையை சும்மா மிச்சுப் பிராண்டிப் பார்த்தனான்.. :wub:

அதுசரி.. கனடாவில வீடு பாக்கிறியள் போல.. கனடாவுக்கு வந்து நாலு வருசத்தில மூண்டு வீடு வாங்கினவர் ஒருவர் இருக்கிறார் தெரியுமே..? :)

வந்து நாலு வருசத்தில மூண்டு வீடு வாங்கினாரா? யாரவர்? மடியுக்க நிறைய காசு வச்சு இருக்கிறார் போல இருக்கு?

பி'கு: இந்த நெடுக்காலபோவான் என்பவருடன் வாதம் செய்யும்போது கொஞ்சம் அப்பால் தூரமாக விலகி நிண்டு வாதம் செய்யுங்கோ. இல்லாவிட்டா பிறகு பின்விளைவுகள் பாரதூரமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில்............ எழுத்தார்கள் தேவைதான் இதை நெடுக்காலபோவான் துயவன் போன்றோர் நிறைவு செய்வது வரவேற்க தக்கது. நான் எப்போதாவது நேரம் கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே வருகிறேன் வந்து உங்ஙகளுக்கு கோபம் உண்டு பண்ணும் படியாக எதையாவது எழுதுவது கூடாது என்று பல இடங்களில் தவிர்த்திருக்கிறேன். ஆனாலும் சில இடங்களில் எனது கருத்தை முன்வைத்திருக்கிறேன் (எதிர்வாதமாக அல்ல). மேலே கூட நான் எழுதியிருந்தேன் இது ஒரு தகவலே அன்றி எதிர்கருத்து அல்ல என்று.

எதிர் கருத்து எழுதுவதென்பது வரவேற்க தக்கதுதான்.............. அதற்காக கருத்தை வாசிக்காமல் எழுதுவது எவ்வளவோ முட்டாள்தனம்........... அதை இந்த கருத்துகளத்தில் பல காலமாக எழுதிவருபவர்கள் செய்வது வருத்தத்திற்கு உரியது நண்பர்களே.........

மேலே சென்று ஒரு தடவை எனது தகவல் எதற்காக முன்வைக்கப்படுகின்றது என்பதை திருப்பி ஒரு முறை வாசியுங்கள். பின்பு உங்களது எதிர் கருத்தை வாசியுங்கள் ...... உங்களை நினைத்தால் உங்களுக்கே அவமானமாக இருக்கும்.

அதாவது........... நெடுக்காலபோவான் குறிப்பிட்டு இருந்தார் ஜேசு சிலுவையில் அறையும் வரை அதாவது தான் உயிர்த்தெழுந்து காட்டும் வரை தனது தெய்வீக தன்மையை வெளிகாட்டாது இருந்தார் என்று. அத்றகான தகவலாகவே எனது கருத்து முன் வைக்கப்பட்டது............ இல்லை ஜேசு தன்னிடம் தெய்வீக தன்மை இருக்கிறது என்பதை தொன்று தொட்டே செய்திருக்கிறார் என்பதை பைபிள் ஊடககவும் பிற கிறிஸ்தவ மத புத்கங்கள் ஊடகவு நான் படித்திருக்கிறேன்............... ஆனாலும் நெடுக்காலபோவோனின் கருத்தையும் நான் கிறிஸ்த்தவ மத புத்தகங்களில் படித்திருறக்கிறேன். மதங்கள் சார்பான புத்தகங்கள் முன்பின் முரண்படுவது இதுதான் முதல் தடவையல்ல. மதங்கள் சார்பான புத்தகங்கள் எல்லாம்மே கேள்வி ஏதும் கேட்காமல் அதை கடவுள் பயத்தினால் நம்புவர்களுக்கு மட்டுமே எழுத பட்டது இது என்னுடைய தனிபட்ட கருத்து.

இப்போது விடயம் என்னவெனில் ....????

திருவாளர் துயவன். திரு. தமிழ்நெக்ஸ். நெடுக்காலபோவான். மூன்று பேரும் நான் ஏதோ ஜேசுவை துக்கி மேலேயும் இராமனை கீழேயும் வைத்துவிட்டதாக சொல்லி............. 34 கிலோமீற்றர் பாலத்தை ஐந்து நாளில் கட்ட முடியுமா என்ற தலைப்பை திசை திருப்பி ஓரு பக்கத்தை பூராகவும் வீணடித்திருப்பது உண்மையிலேயே வேதனைகட்குரியது. நண்பர்களே .......... உங்களின் வாதம் இந்துமதம் உயர்ந்தது என்பதாக இருக்கிறது. எனது வாத் இதுவரையில் கடவுளே இல்லை என்பதாகவே இருக்கிறது............ இனியும் அவ்வாறே இருக்கும் காரணம் அதுதான் உண்மையும் கூட கடவுளை மனிதனே படைத்தான்........ மனிதன் குரங்கில் இருந்து வந்தான்.

இவ்வாறான கருத்தாடல் மீண்டும் எங்காவது வந்தால் மீண்டும் சந்திப்போம்.

நான் குறிப்பிட்டு எழுதிய முவரும் உங்கள் திறமையை மேம்படுத்துங்கள் என்பதாக எழுதுகிறேன்... தவறாக விளங்கி என்மேல் கோபம் கொள்ளாதீர்கள் நன்றி.

ஜேசு தனது தெய்வீகத்தன்மையை உறுதிபட வெளியிட்டது என்பதற்கும் வாழ்க்கைக்காலத்தில் சில அற்புதங்களை செய்தது என்பதற்கும் இடையில் வேறுபாடுண்டு. ஜேசு தெய்வீகத்தன்மை பொருந்தியவர் என்பதை மக்கள் அவர் உயிர்த்தெழுந்த போதே ஐயத்துக்கு இடமின்றி மக்கள் தெரிந்து கொண்டதாக கிறிஸ்தவ நூல்களும் சொல்கின்றன. ஏன் மேரி அன்னைக்குக் கூட தன் பிள்ளை இறைவனின் சொத்து என்பது அப்போதுதான் தெளிவானது.

வாழ்க்கைக்காலத்தில் ஜேசு தன்னை ஒரு சாதாரண மனிதனாக்கியே மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்திருந்தார். ஜேசு தன்னை தன் கூட்டத்தில் இருக்கும் ஒருவன் காட்டிக் கொடுப்பான் என்பதை.. (அவன் யார் என்றும் அறிந்திருந்தும்) தனது தெய்வீக மகிமையை கொண்டு அறிந்திருந்தார். ஆனால் அதனைக் காட்டிக் கொள்ளவில்லை. மாறாக சாதாரண மனிதன் போல அவன் காட்டிக் கொடுக்க சந்தர்ப்பம் அளிக்கிறார்.

ஜேசுவின் அற்புதங்களை கொண்டு மக்கள் அவரை தெய்வீக சக்தி படைத்தவர் என்று நம்பும் படி செய்ய யூதர்கள் அவரை அனுமதிக்கவும் இல்லை. ஜேசு தனக்கு தெய்வீக சக்தி இருந்தது என்பதற்காக அதை எப்போதும் பிரயோகிக்கவும் இல்லை. மனிதர்கள் இழைந்த பல இன்னல்களைத் தாங்கியவர் ஏன் தனக்கிருந்த தெய்வீகத்தன்மையைப் பாவித்து அவற்றில் இருந்து அப்பவே அவர்களுக்கு பாடம் புகட்டி தன்னையும் அதில் இருந்து விடிவித்திருக்கலாம் தானே. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக சிலுவை ஏறும் வரை யூதர்களின் அக்கிரமங்களை அனுமதிக்கிறார். அது அவசியம் தானா..???! அதற்கு இன்று அர்த்தம் புகட்டப்பட்டிருக்கிறது.

அப்படித்தான் இராமனும் இறைவனின் அவதாரமாக சாதாரண மக்களோடு அவர்களின் துன்பங்களை ஏற்று இடைக்கிடை அற்புதங்களைப் புரிந்து வாழ்கிறான் என்பதாக அமைகிறது இராமனின் வரலாறு. அப்படி இருக்க.. ஜேசுவைப் பார்த்துக் கேட்க மறுத்த கேள்வியை இராமரைப் பார்த்துக் கேட்க முடிகிறது என்றால்.. அதன் பின்னணி.. தேவை என்ன என்பதையும் நாம் இங்கு உற்று நோக்க வேண்டும்.

இதைத்தான் நான் அங்கு சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன்..! இந்த விளக்கம் எனது சுருக்கமான கருத்தை விளங்கிக் கொள்ள சிரமமானவர்களுக்கு மேலதிக விளக்கத்தைக் கொடுக்கும் என்று நம்புகின்றேன்..!

ஒரு கட்டத்தில் சுறாவளியில் சிக்கும் ஜேசு.. நடுக்கடலில் நடந்து படகைப் பிடித்து கரை சேருவதாகவும் விவிலிய நூலில் படித்திருக்கிறேன்..! இப்படிக் கனக்க. ஆனால் இவை அவரை தெய்வீக சக்தி படைத்தவன் இறைவனின் மகன் என்பதை நிறுவ காரணமாக அமையவில்லை. இவற்றை அறிந்த யூதர்கள் இவற்றைப் பித்தலாட்டம் என்றே மொழிந்தனர். மக்களையும் நம்ப வைத்தனர்.

எனக்கு ஜேசுவின் கொள்கைகள் மீது நம்பிக்கையும் விசுவாசமும் உண்டு. அதற்காக எனது எண்ணங்களின் அடிப்படையில் எழும் விமர்சனங்களை ஒழிச்சு வைச்சு செய்யமாட்டேன். இந்து மதக் கடவுள்களை மட்டும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் பாங்கை நான் எப்போதும் எதிர்ப்பவன். அதற்காக இந்து மதத்தை அப்படியே ஏற்றுக் கொண்டவனும் அல்லன்..! எல்லா மதங்களுக்குள்ளும் மனித வாழ்க்கையை நெறிப்படுத்தக் கூடிய அம்சங்கள் உள்ளன. அவற்றை எப்போதும் ஆதரிக்கவே செய்கின்றேன். மதங்களின் எல்லா வழிகாட்டல்களையும் அறிவியலோடு கலந்தடிப்பதைத் தவிர்த்து அறிவியலால் விளங்கக் கூடியவற்றை விளக்கக் கூடியவற்றை விளங்கவும் விளக்கவும் முயற்சிக்கிறேன்..! ஆனால் ஆன்மீகமும் அறிவியலும் இரயில் பாதைகள் போன்றவை. வாழ்க்கை எனும் ரயிலை ஓட்ட இவை இரண்டும் அவசியம்..!

இறுதியாக டங்குவாருக்குச் சொல்லிக் கொள்வது. உங்களின் நகைச்சுவையை ரசிக்கிறேன். ஆனால் அதில் அறிவியலை காணவில்லை. இந்திய அறிவியல் ஆய்வு மையம் இராமர் பால விடயத்தை அறிவியல் வழி கொண்டு ஆய்வு செய்வதை ஆதரிப்பவர்களில் நானும் ஒருவன். இராமாயண இலக்கியமல்ல.. தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் அம்சங்களை ஆராய வேண்டியது தமிழர்களின் வரலாற்று தொன்மை பற்றிய அறிவியல் சான்று தேடல்களுக்கு உதவி அளிக்கும்.

அண்மையில் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் மொழி பொறிக்கப்பட்ட மட்பாண்டச் சுவடி.. சங்கம் காலத்தில் எழுதப்பட்ட இலக்கியப் பாடல்களில் கூறப்பட்ட தமிழர்களின் வணிகச் சிறப்பை பிரதிபலித்திருப்பதாக கூறப்படுவது போல.. இராமாயணம் காட்டும் நிகழ்கால உலகில் தரிசிக்கக் கூடிய வெளிப்படை தோற்றங்களில் அல்லது கூறுகளில் இருந்து அதன் உண்மைத் தன்மையை அறிவியல் கொண்டு ஆராய்வது கூடாது என்றில்லை. இராமாயணத்தின் படி இந்தப் பாலத்தை முன்னரே ஆய்ந்து அறிந்திருந்தால் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆழிப்பேரலை தாக்கிய விடயமாவது ( இதுவும் இன்னும் அறிவியலூடு நிரூபணம் ஆகவில்லை. அறிக்கையில் கூறியபடி சொல்கிறேன்) வெளிவந்திருக்கும். ஒரு விழிப்புணர்வாவது இருந்திருக்கும்..! 2004 ஆழிப்பேரலை வரை அதற்காகக் காத்திருக்க வேண்டி வந்திருக்காது..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வந்து நாலு வருசத்தில மூண்டு வீடு வாங்கினாரா? யாரவர்? மடியுக்க நிறைய காசு வச்சு இருக்கிறார் போல இருக்கு?

பி'கு: இந்த நெடுக்காலபோவான் என்பவருடன் வாதம் செய்யும்போது கொஞ்சம் அப்பால் தூரமாக விலகி நிண்டு வாதம் செய்யுங்கோ. இல்லாவிட்டா பிறகு பின்விளைவுகள் பாரதூரமாக இருக்கும்.

எல்லாம் கடனுக்குத்தான்.. :)

ஏன்.. நெடுக்கண்ணை வெள்ளை வான் அனுப்புவாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது மாரடைப்பிலிருந்தும் ஒருவழியாக மீண்டுவந்த நீதிபதியவர்கள் வழக்காடுமன்றத்துக்கு வந்து தமது இருக்கையில் அமர்கிறார்கள். :wub:

நீதிபதி: நான் பிழைத்துவரவேண்டி பிரார்த்தனை செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.

மனுதாரரின் வழக்கறிஞர் (மெதுவாக): ஆரம்பிச்சிட்டாருய்யா செண்டிமெண்டை பிழிய.. :rolleyes:

நீதிபதி: இந்த வழக்கு இன்று தீர்ப்புக்கு வருகிறது. மனுதாரர் தீர்ப்புக்கு முன் ஏதாவது சொல்ல விரும்புகிறாரா?

மனுதாரரின் வழக்கறிஞர்: ஆம் கனம் நீதிபதியவர்களே.. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராமசாமி அவர்கள் ராமர் பாலம் பற்றி விரிவாக ஆரய்ந்து, அது 3500 ஆண்டுகள் பழமையானது எனக் கண்டறிந்துள்ளார். அவரது அறிக்கையின் நகலை உங்கள் பார்வைக்குத் தருகிறேன். :)

நீதிபதி: அடடா.. இதைப்பற்றி அரசு வழக்கறிஞர் ஏதாவது கேட்க விரும்புகிறாரா?

அரசு வழக்கறிஞர்: ஆம் கனம் நீதிபதியவர்களே.. இந்தப்பாலம் எத்தனை நாட்களில் கட்டப்பட்டது என்று ஏதாவது தகவலுண்டா?

மனுதாரரின் வழக்கறிஞர்: இல்லை. ஆனால் ராமர் பாலம் உண்மை.

அரசு வழக்கறிஞர்: இங்கே வழக்கு ஐந்து நாட்களில் 34 கி.மீ. பாலம் கட்ட முடியுமா என்பதே. நன்றி கனம் நீதிபதியவர்களே.

நீதிபதி: இரு தரப்பு விவாதங்களையும் தீர விசாரித்ததில் ராமர் பாலம் ஐந்து நாட்களில் 34 கி.மீ. நீளம் கட்டப்பட்டதென்று எந்தவிதமான நம்பத்தகுந்த சான்றுகளுடனும் நிரூபிக்கப்படவில்லை. இதை மையமாக வைத்தே இந்திய அறிவியல் ஆய்வு மையம் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதனால் அடிப்படையே ஆட்டம் கண்டுள்ளதால் மையத்தின் ஆய்வை வைத்து கால்வாய்ப் பணிகளை இடைநிறுத்தம் செய்ய உத்தரவிட முடியாதெனத் தீர்ப்பு வழங்கி இந்த நீதிமன்றம் கலைகிறது..

:D:D:D

எல்லாம் கடனுக்குத்தான்.. :)

ஏன்.. நெடுக்கண்ணை வெள்ளை வான் அனுப்புவாரா?

வான் எல்லாம் அனுப்பமாட்டார். இவர் கொஞ்சம் ஹைடெக் ஆன ஆள்.

உங்கள வெறுக்கவச்சு நீங்களாகவே வெள்ளவானத் தேடிப்போய் அதில ஏறி காணாமல் போகும்படி செய்து போடுவார்... :rolleyes::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்த இராமாயணம் பொய்யா இல்லையா என்று ஆராச்சி செய்யுறோம்.

ஆனால் அமெரிக்க A51 Area விலிருந்து ஒருவரால் இரகசியமாக வெளியிடப்பட்ட Alien பற்றிய வீடியோ படம் உண்மையானதா இல்லை பொய்யானதா என்று சொல்ல முடியாமல் தடுமாறுறாங்க இங்கே. :)

(இது ஒரு 50வருடத்துக்குள் நடந்த சம்பவம்)

அமெரிக்க A51 Area கும் வெளிக் கிரகங்களில் இருக்கும் Alien கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் தொழில் நுட்ப தகவல்களை பரிமாறிக் கொள்வதாகவும் சொல்லப்படுகின்றது.

ஆனால் இந்து மதத்தில் இது போன்ற கதைகளை மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாடுவார்கள் நமது அறிஞர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள்

1987 அமெரிக்க ஜனாதிபதி றேகன் ஒரு இடத்தில் சொல்கின்றார் வெளிக் கிரகங்களில் இருக்கும் Alien னால் பூமிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கென்று. :rolleyes:

யாராவது இந்த வீடியோவை பார்தீங்களா??

வான் எல்லாம் அனுப்பமாட்டார். இவர் கொஞ்சம் ஹைடெக் ஆன ஆள்.

உங்கள வெறுக்கவச்சு நீங்களாகவே வெள்ளவானத் தேடிப்போய் அதில ஏறி காணாமல் போகும்படி செய்து போடுவார்... :wub::D

கடைசியில் யாரோ உள்ளே போக வழி செய்யிறாங்க போல இருக்கு. FBI யாழ் களத்தை கண்காணிக்க :D:D:(

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசு தனது தெய்வீகத்தன்மையை உறுதிபட வெளியிட்டது என்பதற்கும் வாழ்க்கைக்காலத்தில் சில அற்புதங்களை செய்தது என்பதற்கும் இடையில் வேறுபாடுண்டு. ஜேசு தெய்வீகத்தன்மை பொருந்தியவர் என்பதை மக்கள் அவர் உயிர்த்தெழுந்த போதே ஐயத்துக்கு இடமின்றி மக்கள் தெரிந்து கொண்டதாக கிறிஸ்தவ நூல்களும் சொல்கின்றன. ஏன் மேரி அன்னைக்குக் கூட தன் பிள்ளை இறைவனின் சொத்து என்பது அப்போதுதான் தெளிவானது.

வாழ்க்கைக்காலத்தில் ஜேசு தன்னை ஒரு சாதாரண மனிதனாக்கியே மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்திருந்தார். ஜேசு தன்னை தன் கூட்டத்தில் இருக்கும் ஒருவன் காட்டிக் கொடுப்பான் என்பதை.. (அவன் யார் என்றும் அறிந்திருந்தும்) தனது தெய்வீக மகிமையை கொண்டு அறிந்திருந்தார். ஆனால் அதனைக் காட்டிக் கொள்ளவில்லை. மாறாக சாதாரண மனிதன் போல அவன் காட்டிக் கொடுக்க சந்தர்ப்பம் அளிக்கிறார்.

ஜேசுவின் அற்புதங்களை கொண்டு மக்கள் அவரை தெய்வீக சக்தி படைத்தவர் என்று நம்பும் படி செய்ய யூதர்கள் அவரை அனுமதிக்கவும் இல்லை. ஜேசு தனக்கு தெய்வீக சக்தி இருந்தது என்பதற்காக அதை எப்போதும் பிரயோகிக்கவும் இல்லை. மனிதர்கள் இழைந்த பல இன்னல்களைத் தாங்கியவர் ஏன் தனக்கிருந்த தெய்வீகத்தன்மையைப் பாவித்து அவற்றில் இருந்து அப்பவே அவர்களுக்கு பாடம் புகட்டி தன்னையும் அதில் இருந்து விடிவித்திருக்கலாம் தானே. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக சிலுவை ஏறும் வரை யூதர்களின் அக்கிரமங்களை அனுமதிக்கிறார். அது அவசியம் தானா..???! அதற்கு இன்று அர்த்தம் புகட்டப்பட்டிருக்கிறது.

அப்படித்தான் இராமனும் இறைவனின் அவதாரமாக சாதாரண மக்களோடு அவர்களின் துன்பங்களை ஏற்று இடைக்கிடை அற்புதங்களைப் புரிந்து வாழ்கிறான் என்பதாக அமைகிறது இராமனின் வரலாறு. அப்படி இருக்க.. ஜேசுவைப் பார்த்துக் கேட்க மறுத்த கேள்வியை இராமரைப் பார்த்துக் கேட்க முடிகிறது என்றால்.. அதன் பின்னணி.. தேவை என்ன என்பதையும் நாம் இங்கு உற்று நோக்க வேண்டும்.

இதைத்தான் நான் அங்கு சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன்..! இந்த விளக்கம் எனது சுருக்கமான கருத்தை விளங்கிக் கொள்ள சிரமமானவர்களுக்கு மேலதிக விளக்கத்தைக் கொடுக்கும் என்று நம்புகின்றேன்..!

ஒரு கட்டத்தில் சுறாவளியில் சிக்கும் ஜேசு.. நடுக்கடலில் நடந்து படகைப் பிடித்து கரை சேருவதாகவும் விவிலிய நூலில் படித்திருக்கிறேன்..! இப்படிக் கனக்க. ஆனால் இவை அவரை தெய்வீக சக்தி படைத்தவன் இறைவனின் மகன் என்பதை நிறுவ காரணமாக அமையவில்லை. இவற்றை அறிந்த யூதர்கள் இவற்றைப் பித்தலாட்டம் என்றே மொழிந்தனர். மக்களையும் நம்ப வைத்தனர்.

எனக்கு ஜேசுவின் கொள்கைகள் மீது நம்பிக்கையும் விசுவாசமும் உண்டு. அதற்காக எனது எண்ணங்களின் அடிப்படையில் எழும் விமர்சனங்களை ஒழிச்சு வைச்சு செய்யமாட்டேன். இந்து மதக் கடவுள்களை மட்டும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் பாங்கை நான் எப்போதும் எதிர்ப்பவன். அதற்காக இந்து மதத்தை அப்படியே ஏற்றுக் கொண்டவனும் அல்லன்..! எல்லா மதங்களுக்குள்ளும் மனித வாழ்க்கையை நெறிப்படுத்தக் கூடிய அம்சங்கள் உள்ளன. அவற்றை எப்போதும் ஆதரிக்கவே செய்கின்றேன். மதங்களின் எல்லா வழிகாட்டல்களையும் அறிவியலோடு கலந்தடிப்பதைத் தவிர்த்து அறிவியலால் விளங்கக் கூடியவற்றை விளக்கக் கூடியவற்றை விளங்கவும் விளக்கவும் முயற்சிக்கிறேன்..! ஆனால் ஆன்மீகமும் அறிவியலும் இரயில் பாதைகள் போன்றவை. வாழ்க்கை எனும் ரயிலை ஓட்ட இவை இரண்டும் அவசியம்..!

இறுதியாக டங்குவாருக்குச் சொல்லிக் கொள்வது. உங்களின் நகைச்சுவையை ரசிக்கிறேன். ஆனால் அதில் அறிவியலை காணவில்லை. இந்திய அறிவியல் ஆய்வு மையம் இராமர் பால விடயத்தை அறிவியல் வழி கொண்டு ஆய்வு செய்வதை ஆதரிப்பவர்களில் நானும் ஒருவன். இராமாயண இலக்கியமல்ல.. தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் அம்சங்களை ஆராய வேண்டியது தமிழர்களின் வரலாற்று தொன்மை பற்றிய அறிவியல் சான்று தேடல்களுக்கு உதவி அளிக்கும்.

அண்மையில் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் மொழி பொறிக்கப்பட்ட மட்பாண்டச் சுவடி.. சங்கம் காலத்தில் எழுதப்பட்ட இலக்கியப் பாடல்களில் கூறப்பட்ட தமிழர்களின் வணிகச் சிறப்பை பிரதிபலித்திருப்பதாக கூறப்படுவது போல.. இராமாயணம் காட்டும் நிகழ்கால உலகில் தரிசிக்கக் கூடிய வெளிப்படை தோற்றங்களில் அல்லது கூறுகளில் இருந்து அதன் உண்மைத் தன்மையை அறிவியல் கொண்டு ஆராய்வது கூடாது என்றில்லை. இராமாயணத்தின் படி இந்தப் பாலத்தை முன்னரே ஆய்ந்து அறிந்திருந்தால் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆழிப்பேரலை தாக்கிய விடயமாவது ( இதுவும் இன்னும் அறிவியலூடு நிரூபணம் ஆகவில்லை. அறிக்கையில் கூறியபடி சொல்கிறேன்) வெளிவந்திருக்கும். ஒரு விழிப்புணர்வாவது இருந்திருக்கும்..! 2004 ஆழிப்பேரலை வரை அதற்காகக் காத்திருக்க வேண்டி வந்திருக்காது..! :)

தங்களின் அடக்கமான ஜேசுவின் விளக்கம் அருமையானது!

தான் பிடித்த முயலுக்க மூன்றுகால் எனும் பாணியில் நிறபவர்களுடன் வாதம் செய்தால் நேரம்தான் வீண் என்று நான் கூடியளவில் விலகி நிற்கவே விரும்பியிருக்கிறேன். ........

நீங்கள் கூறியவிடயங்கள் உண்மைதான்............... ஆனாலும் எனது கருத்து அதிலிருந்து மாறுபட்டது.

உங்களின் முந்தைய கருத்தும் தற்போதைய கருத்தும் ஒன்றொடு ஒன்று ஒவ்வாதது போல் எனக்கு தெரிகின்றது.

மனிதர்களுக்கு எட்டாத அற்புதங்களை செய்தார் என்பதற்கும்.......????

தெய்வீக தன்மையை மறைத்தார் என்பதற்கும் உள்ள....????

வேறுபாடு என்னால் விளங்கிகொள்ள முடியவில்லை.... உங்களிடம் விளக்கமும் நேரமுமிருந்தால் தயவு செய்து தரவும்.

............. ஜேசுவின் தத்துவம் அகிம்சைபோன்றதொன்று..... "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு" என்பது. அந்த தத்துவத்தை இறுதிவரையில் காத்தார் சிலுவையிலும் அதைத்தான் மீண்டும் ஒருமுறை இறுதியாக உலகிற்கு வலியுறித்தினார் என்றுதான் நான் விளங்கி வைத்திருக்கிறேன்...... அது தவறாக இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார், மன்னிக்க வேண்டும். சிலர் தவறான தகவல்களையும் intelectual இனிப்புத் தடவி இணைத்து விடுவதால் மீண்டும் தடம் மாறிக் கருத்தெழுத வேண்டியிருக்கிறது. கடைசியாக இருக்கும் இது. இயேசுவைப் பற்றி அன்னை மேரிக்குக் கூட உயிர்த்தெழுந்த பின்னர் தான் தெரியும் என்பது தவறானது. கானாவூர்த் திருமணத்தில் வைன் தீர்ந்து விட்டதை இயேசுவிடம் சொன்னதே மேரி தான். அப்போதே அவரது சக்தி மேரிக்குத் தெரிந்திருந்தது என்று தான் பைபிள் சொல்கிறது.

Disclaimer: இது ஒரு மதமாற்றத்திற்கான முயற்சியோ ஊக்குவிப்போ அல்ல!

:) மண்டை காயிறதெண்டு கேள்விப்பட்டிருக்கிறன். ஆனால் அதை இங்கு வாசித்து அனுபவிச்சிட்டனுங்கோ!!!!!! :(:D

  • கருத்துக்கள உறவுகள்

றொம்ப காயுதோ? சரி சரி யாழ் களத்தில தானே அணுபவச்சிங்க யாழ் அத நினைச்சு பெருமை படட்டும் வம்பு அண்ணாவையே காய வைச்சிட்டம் என்டு..

குரங்கைப் பற்றி மட்டுமே எல்லாரும் ஆய்வு செய்யுறீங்கள். அணிலை விட்டிட்டீங்கள் :)

அணிலின் முதுகில் இருக்கும் மூன்று கோடுகள் போட்டது பற்றி எதுவும் ஆய்வுகள் செய்யமாட்டீங்களா?

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குரங்கைப் பற்றி மட்டுமே எல்லாரும் ஆய்வு செய்யுறீங்கள். அணிலை விட்டிட்டீங்கள் :(

அணிலின் முதுகில் இருக்கும் மூன்று கோடுகள் போட்டது பற்றி எதுவும் ஆய்வுகள் செய்யமாட்டீங்களா?

இன்றைய புதிய தகவல் குரங்கை பற்றியது

Five-year old chimpanzee Ayumu beat university students at a short-term memory test.

http://technology.sympatico.msn.cbc.ca/New...id=chimp-memory

நினைத்தேன் இந்த அணில் பிரச்சனையை ஏன் மறந்து விட்டாங்க என்று :)

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

ராமர் பாலம் போட்டது உண்மையாக இருக்கலாமா?????

உண்மையாக இருக்க கூடியதற்கான சாத்திய பாடுகள்.....

அவர் சீமென்ற்றை பாவிக்கவில்லை. பாலம் என்றால் கீழ நீர் ஒடவதற்கான வழிகளை அமைக்க வில்லை. கடலுக்குள்ளாலே மறு கரைக்கு செல்வதற்கான ஒருபாதையை கற்களாலும் மண்ணாலும் நிரப்பி ஒரு சிறிய பாதையை அமைத்தார்கள். இது முற்றிலும் சாத்தியமானதே. முன்னைய காலத்தில் பல அசாத்தியமான வேலைகளை செய்து வைத்திருக்கிறார்கள்..... உதாரணத்திற்கு எகிப்த்து நாட்டில் பிரமிட்.

இராமர்அமைத்த கடல்பாதையின் நீளம் 34 கிலோமிற்றர் என்றால்?????

அதன்அகலத்தையும் ஒரு அண்ணளவாக எடுப்போமெனில் அதை நிரவுவதற்கு எவ்வளவு கொள்ளளவு மண் தேணும் கல்லும் தேவை என்பதை கணக்கிட்டு கொள்ள வேண்டும். கடலினுள் மணல் திட்டிகள்தான் காணபடுகின்றன அதலால் கற்கள் பற்றிய கதையையே விடுவது நேரத்தை மீதிபடுத்த உதவும். இவ்வளவு மணலையும் எங்கிருந்து எடுத்தார்கள் என்று பார்க்க வேண்டும். தமிழகத்தின் ஒரு கரையில் பாரிய பள்ள தாக்கு மணல்மண்ணாலானதாக இருக்க வேண்டும்..... இதைபற்றிள தகவல் யாருக்காகவது தெரியுமா?

5 நாட்களில் 34 கிலோ மீட்டர் பாலம் கட்டுவது சாத்தியமா? இது கேள்வி! முதலில் இந்த கேள்வியே அடிப்படையில் தவறு என்று நினைக்கிறேன்.

இராமர் பாலம் கட்டினாரா? அப்படியே கட்டி இருந்தாலும் இராமயணத்தில் வரும் லங்காபுரி, தற்போதைய இலங்கை தானா அல்லது வேறு ஏதாவது தீவா? அந்த தீவு இப்போதும் இருக்கிறதா? அல்லது கடற்கோள் போன்றவற்றால் மூழ்கடிக்கப்பட்டு விட்டதா? என்று பல்வேறு கோணத்தில் இராமர் கட்டிய பாலம் பற்றிய ஆய்வுகளை செய்திடல் சாத்தியம் என்றாலும், முதலில் 34 கி.மீட்டர் பாலத்தை 5 நாட்களில் கட்டுதல் சாத்தியம் தானா என்ற கேள்விக்கு வருவோம்.

இராமயணம் நடந்ததாக சொல்லப்படும் காலம் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் முந்தியதாகும். அன்றைய காலகட்டத்தில் இந்த இடைவெளி 34 கிலோ மீட்டர் ஆக இல்லாமல் அதைவிட மிகவும் குறுகியதாகவே நிச்சயம் இருந்திருக்கும் எனலாம். பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நடைபெற்று இருக்கக் கூடிய கடலரிப்புகள், கடற்கோள்கள், கண்டநகர்வுகள் இவற்றால் ஏற்பட்ட தாக்கங்கள் இலங்கை தீவுக்கும் தமிழகத்தின் தென் கோடிக்கும் இடையிலான கடல் இடைவெளியை அதிகரிக்க செய்யக்கூடிய சாத்தியக் கூறுகளை புவியிலாளர்கள் எவரும் மறுக்கவில்லை!

ஆகவே 34 கிலோ மீட்டர் பாலம் என்பது அடிப்படையில் தவறு. இன்னும் ஒன்றையும் சிந்திப்போம்! வள்ளம், படகு போன்றவற்றை கட்டி அக்கரை செல்வதை விட பாலம் (பாதை) அமைத்து அக்கரை செல்வது துரிதமானதாக இருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் கடலினூடாக பாதை அமைக்கும் முடிவுக்கு இராமரின் படையை சேர்ந்தவர்கள் வந்திருக்க சாத்தியமில்லை.

அத்தோடு வனவாசத்தில் இருக்கும் ஒரு இளவரசனுக்கு இயற்கையில் கிடைக்க கூடிய பொருள்களை தவிர, பாலம் அமைப்பதற்கான வேறு பொருட்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தருவிப்பது சாத்தியமாகவும் இருந்திருக்காது.

ஆகவே வால்மீகி இராமயணத்தில் உள்ளது போலவே கடலில் ஏற்கனவே இருந்த மண் திட்டுகளின்(அல்லது குன்றுகளின்) இடைவெளிகளில் கற்பாறை, மரம் இவற்றை கொண்டு நிரப்பி ஒரு தற்காலிக பாலம் அமைத்திருக்கலாம் என்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. மண்திட்டுகள் உள்ள கடல் பகுதிகளில் நீரின் ஆழம் குறைவாகவே காணப்படும் என்பதால், இது சாத்தியமே. (தற்போது கூட இந்த பகுதிகளில் கரையில் இருந்து பல கிலோ மீட்டர்கள் கடலில் பயணம் செய்த பின்னும் முழங்கால் அளவே நீர்மட்டம் உள்ள பகுதிகள் காணப்படுவது இதை மேலும் உறுதி செய்கிறது.)

கடலில் காணப்பட்ட இந்த மண்திட்டுகளுக்கு (அல்லது குன்றுகளுக்கு) இடையிலான இடைவெளி சில நூறு மீட்டர்களாக அல்லது அதையும் விட குறுகியதாக கூட இருந்திருக்கலாம், ஆகவே 5 நாட்களிலும் மொத்தமாக ஓரிரு கிலோ மீட்டர் அல்லது அதையும் விட குறைவான இடைவெளியை கற்கள், மரக்குற்றிகள் கொண்டு நிரப்புவதன் மூலம், ஒரு தற்காலிக கடல் பாதை ஒன்று அமைக்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கில்லை.

இதற்கு மேலும் ஆதாரமாக, தமிழகத்தில் உள்ள தாமிரபரணி ஆறு இலங்கை வரை ஒரு காலத்தில் ஓடியதாகவும், இன்றைய தமிழகத்தின் தெற்கே குமரிக்கண்டம் பரவி இருந்ததாகவும், கடற்கோளில் அது அழிந்து போனதாகவும், சங்கத்தமிழ் நூல்கள் சொல்கின்றன (மார்ர்கோ-போலோ போன்றவர்களாலும், கிரேக்கர்களாலும் தாமிரபரணியின் திரிபான TAPROBANE என்றே இலங்கை தீவு அழைக்கப்பட்டிருக்கிறது லங்கா என்று அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

அவ்வாறு இராமர் பாலம் அமைப்பதற்கு பயன் பட்டதாக கூறப்படும் கடற்குன்றுகள், கடற்கோளால் விழுங்கப்பட்ட குமரிக்கண்டத்தின் எச்சங்களாக கூட இருந்திருக்கலாம். என்னை பொறுத்தவரையில், இந்தியாவும் சரி, தமிழக அரசும் சரி, தமிழகத்தின் தெற்கே ஆழ்கடல் புதைபொருளாராய்ச்சியில் அத்தனை அக்கறை காட்டவில்லை என்றே சொல்வேன். அப்படி அக்கறை காட்டி இருந்தால், இராமர் பாலத்தை பற்றி மட்டும் அல்ல, குமரிக்கண்டத்துடன் புதைந்து போன தமிழர் வரலாற்றின் ஒரு பகுதியை பற்றியும் கூட நிறைய தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கும்.

பொதுவாவே மனித வரலாற்றின் பெரும் பகுதி கடலுக்கடியிலும் துருவங்களின் பனிப்பாறைகளுக்கு அடியிலும் புதைந்து விட்டதாகவே பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.