Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாலியறுக்க சில ஆலோசனைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாலியறுத்து ஒரு பெண்ணை மூலைக்குள் நிறுத்தி வைப்பதோ, ஒதுங்கச் செய்வதோ சம்பிர்தாயம் என்பதற்குள் அடக்கமுடியவில்லை. அப்படிச் செய்வதாக இருந்தால் மனைவி மரணித்தால் ஆண்களுக்கு ஏன் அவ்வாறன தடைகள் இல்லை??

எந்த ஒரு மனிதனும் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் இதை "தாலியறுத்த" "பெண்" என்ற நிலைகளுக்கு அப்பால் மனிதன் என்ற அடிப்படையில் நோக்கியே கருத்துப் பகர்கின்றேன்..!

உலகில் மனித உரிமைகள் தான் மனிதனுக்கு உள்ளனவே தவிர.. பெண்ணுரிமை.. ஆணுரிமை என்பதெல்லாம் வெறும் எழுத்தளவில்.. விளம்பரம் தேடும் அளவில் தான் உள்ளன. மனிதன் என்ற நிலையில் உணர்வியலுக்கு மதிப்பளிக்க வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதுதான் தலையாய கடமை. ஒவ்வொரு தனிமனிதனின் சமூக வாழ்வையும் அங்கீகரித்து நிற்க வேண்டும். அவனின் தனிப்பட்ட குணங்கள் பழக்கவழக்கங்கள்.. நிலைககள் கருதி அவனை புறந்தள்ள முனையக் கூடாது..! அது மனிதாபிமானச் சிந்தனைக்கு அப்பாற்பட்டது.

தாலி அறுப்பு என்பதை நான் நேரடியாகக் காணவில்லை. கழற்றி வைப்பதை கண்டிருக்கிறேன். அதுகுறித்து யாரிடமும் விசாரிக்க வேண்டும் என்றும் தோன்றவில்லை. காரணம்.. அது அந்தத் தனிமனிதனின் சுயமுடிவுக்கு உள்ளான விடயம் என்பதால்.

வன்முறை ரீதியான.. வற்புறுத்தல் ரீதியான மனிதத் துன்புறுத்தல் ரீதியான விடயங்களை இனங்காணின் குறித்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமையைச் செயற்பட்டு நீதியைப் பெற்றுக்கொடுங்கள். அந்த மனிதன் தனக்கு சமூகத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பெற வழிகாட்டுங்கள். அதைவிடுத்து.. எமது தனிப்பட்ட கருத்துக்களை திணிப்பதன் மூலம் அந்த மனிதனை நாம் இயல்பான சமூக வாழ்வுக்குள் கொண்டு வந்துவிடுகிறோமா என்பதை இட்டு எவரும் சிந்திக்கவில்லை.

நாம் புரட்சி செய்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அதே விடயத்தில் இன்னொருவர் பாதிப்படையும் போது.. அதன் தாக்கம் என்பதை உணராதவர்களாக நாம் உள்ள போது எமது புரட்சி என்பது மனித இனத்துக்குள்ளேயே கேள்விக் குறியாகி விடும்..!

எனவே மூடநம்பிக்கைகள் தனிமனிதனின் சமூக வாழ்வியலை நாசம் பண்ண முனைகின்றன எனும் போது அதை சரிவர இனங்காட்டி சமூகத்தை வழிநடத்துவது வேறு.. மூடநம்பிக்கை என்ற நிலையில் மனிதர்களை பிரித்தாள்வதும்.. ஒருவர் தன்னை மேலோணாக்க முனைவதும்.. மனித சமத்துவத்துக்கு வலுவான காரணியல்ல. ஒருவன் தன்னைப் புரட்சியாளன் என்றும் இன்னொருவனை பிற்போக்காளன் என்று வகுப்பதைக் கூட நான் வெறுக்கிறேன். ஒரே காலத்தில் வாழும் மனிதன்.. இன்னொருவனை நோக்கி புரிந்துணர்வை செய்யமுடியவில்லை என்பதன் தோல்விதான் இந்தப் பாகுபாடு. இது மனித சமூகவியல் வாழ்வின் அடிப்படையில் தோல்வியின் அறிகுறியே..!

இவை கூட மூடநம்பிக்கைகள் தாம். மனிதர்கள் எல்லோரும் சமன். எல்லோரும் எல்லா உரிமைகளும் உள. எல்லோருக்கும் ஒரே உணர்வுகள். உள. ஒழுக்கம் என்பது மனிதனை வழிநடத்தும் பொது மொழி. அது எல்லோருக்கும் பொதுவானது. என்பதை நிலைநாட்டும் போது.. புரட்சியாளனும் இரான் புரட்டாளனும் இரான்..! மனிதர்கள் எல்லோருமே இணைந்த மாற்றங்கள் காணப்பட்ட உலகம் இருக்கும்...! :lol:

Edited by nedukkalapoovan

  • Replies 69
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆக, கடைசியாக, அந்தப் பெண்ணைப் பலவந்தமாகத் தாலியறுத்தது தவறு என்று சொல்ல வருகின்றீர்கள். அறுக்க உடந்தையாக நின்றவர்களைப் பிழை என்கின்றீர்கள்.

உங்களின் கருத்துக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக, கடைசியாக, அந்தப் பெண்ணைப் பலவந்தமாகத் தாலியறுத்தது தவறு என்று சொல்ல வருகின்றீர்கள். அறுக்க உடந்தையாக நின்றவர்களைப் பிழை என்கின்றீர்கள்.

உங்களின் கருத்துக்கு நன்றிகள்

இதில் சம்பந்த்ப்பட்டபெண் ஒரு பேப்பருக்கு தனது கைப்பட எழுதி அனுப்பிய மறுப்பறிக்கையின் பிரதியை இங்கு தருகிறேன்.

மேலதிக விபரங்கள் தேவைப்படின் தனிமடலில் தொடர்புகொள்ளவும்.

இது தொடர்பான மூலபிரதிகளின் கொப்பிகள் சாந்தினி, சாத்திரி மற்றும் களநிர்வாகி மோகன் ஆகியோருக்கு அவர்களது ஈமெயில் விலாசத்துக்கு அனுப்பியுள்ளேன். ஆகவே இங்கு இருந்து இவற்றை எடுத்து விடுகின்றேன்.

Edited by அபி

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, கடைசியாக, அந்தப் பெண்ணைப் பலவந்தமாகத் தாலியறுத்தது தவறு என்று சொல்ல வருகின்றீர்கள். அறுக்க உடந்தையாக நின்றவர்களைப் பிழை என்கின்றீர்கள்.

உங்களின் கருத்துக்கு நன்றிகள்

குறித்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதை நாம் எவரும் நேரில் காணவில்லை. சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கள் இரு வேறு நிலைகளை சொல்கின்றனர். பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சகோதரியின் நேரடிக் கருத்து ஒலி/ஒளி அல்லது அவரின் கையெப்பமிடப்பட்ட நிலையில் எழுத்துருவில் தமிழ் பேசும் உலகுக்கு அளிக்கப்படவில்லை.

அதிலும் சம்பந்தப்பட்ட சகோதரி வற்புறுத்தலின் பெயரில் மறுப்புச் சொல்லச் செய்யப்படுவதாகவும் ஒரு தரப்புச் சொல்கிறது.

இப்படி இந்த விடயம் சிக்கலாக்கப்படுகிறதே தவிர.. அதன் சமூக நோக்கத்தை குறித்த பெண்மணியின் மனிதாபிமானத் தேவையை எவரும் கருத்தில் எடுத்துச் செயற்படுவதாகத் தெரியவில்லை.

வன்முறை ரீதியான அணுகுமுறைகளால் சடங்குகள் சம்பிரதாயங்களை அனுஸ்டிக்கக் கோருவதைக் கண்டிக்கும் அதேவேளை.. மேற்குறிப்பிட்ட பெண்ணின் நிகழ்வை மையப்படுத்தி இந்த நிலைப்பாட்டை நான் எடுக்கவில்லை. எப்போதுமே... வன்முறைரீதியான கட்டாயரீதியான தனிமனித சுயப்பறிப்பை நான் எதிர்த்தே வந்துள்ளேன். அதனடிப்படையில் தான் மேற்குறிப்பிட்ட கருத்தை எழுதியிருந்தேன். நீங்கள் சுட்டிக்காட்டியது போல.. இப்பெண்மணி மற்றும் அவர் சம்பந்தப்பட்ட தாலி அறுப்பு விடயத்தை மையப்படுத்தியல்ல. அதில் எது உண்மை எது பொய் என்பதில் பல குழப்பங்கள் உள்ளன..! எதுஎப்படி இருப்பினும் இரு தரப்பிலும் உள்ள பிறரின் கருத்துக்களுக்கும் இடமளிக்க முதல் பாதிக்கப்பட்டவரின் நேரடிக் கருத்துக்கு முக்கியளிப்பது அவசியம். :)

"திருமதி சுதானந்தன்"

இந்தப் பெயரைப் பார்க்கும் போது ஒரு சிந்தனை தோன்றுகின்றது.

கணவர் இறந்தவுடன் தாலியை, பூவை, பொட்டை, சேலையை என்று எல்லாவற்றையும் அந்தப் பெண்ணிடம் இருந்து இந்தச் சமூகம் பறிக்கின்றது. இவைகள் கணவர் கொடுத்தவை என்று காரணம் சொல்கிறது.

ஆனால் கணவரின் பெயரை தொடர்ந்து வைத்திருக்க வற்புறுத்துகிறது.

தமிழ் சமூகம் ஒரு மோசமான காட்டுமிராண்டித்தனமான சமூகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இடம்பெறும் இக்கருத்தாடல் நகைச்சுவைப் பகுதிக்கானதாகப் படவில்லை. இக்கருத்தாடலுக்கு இவ்விடம் பொருத்தமானதுமல்ல.

Edited by valvaizagara

தாலியறுக்க ஆலோசணையா சாத்திரி அங்கிள் உங்கள் ஓவிஸ் எங்கே இருக்கு என்று சொல்லவில்லை சொன்னா ஆட்களை அனுப்பி வைக்க தான் சாத்திரி அங்கிள் :lol: ......(பிறகு தப்பா நினைக்க கூடாது அடிக்க ஆட்களை அனுப்பி வைக்கிறேன் என்று தாலி அறுக்க ஆலோசணை பெற தான் :D )..சாத்திரி அங்கிள் முதலிலே ஒன்றை கவனத்தில் எடுக்க வேண்டும் பாருங்கோ தாலி கட்டுறபடியா தானே அறுக்கவேண்டி வருது சோ கட்டாமலே இருந்திட்டா இந்த பிரச்சினை இருக்காது :) தானே இதை பற்றி என்ன நினைக்கிறியள் வேண்டுமென்றா தாலிக்கு பதில் இலை,குழையால செய்த ஏதாவது ஒன்றை கட்டிவிடலாம் பிரச்சினை இல்லை தாங்களாகவே சில நாட்களிளே கழற்றி வைத்திவிடுவார்கள் :lol: என்ன நான் சொல்லுறது சரியோ...இவ்யூ டோன்ட் மைன்ட் என்னையும் உங்க அசிடண்டா சேர்த்து கொள்ளமுடியுமா என்ட சீவியை அனுப்பிவைக்கிறேன்!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ் 2008 (அட யாரோ எனக்கு முதலே சொல்லிட்டீனம் உண்மையா நான் தான் சொல்ல நினைத்தனான் அதுகுள்ள யாரோ முந்திட்டீனம் ஆனா அவரின்ட பெயர் நேக்கு தெரியாது :lol: )..

"Mixing one's wines may be a mistake,

but old and new wisdom mix admirably." :)

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள நிர்வாகத்தினருக்கு அன்பான வேண்டுகோள் !

தாலியறுப்பு ஆலோசனைகள் என்ற சாத்திரியின் கட்டுரை தொடர்பில் வந்த கருத்துக்கள் எதையும் களநிர்வாகம் நீக்க வேண்டாமென வேண்டுகிறேன்.

மேற்படி பிரச்சனையானது கருத்தாடித் தீர்வு காணப்படுவதையே விரம்புகிறேன். ஏற்கனவே இது தொடர்பாக நான் எழுதி ஒருபேப்பரில் வெளியான கட்டுரை தொடர்பில் வந்த சர்ச்சைகள் சம்பந்தப்பட்ட பெண்ணை பாதிக்கும் விடயங்களாக இருந்தமையால் அந்தப்பெண்ணின் வேண்டுதலுக்கமைய தாலியறுப்பு தலைப்பு களநிர்வாகத்தினால் மூடப்பட்டது.

ஆயினும் சிலர் தங்களது தனிப்பட்ட குரோதங்களை சம்பந்தப்பட்ட பெண்ணின் கருத்து என தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள். நான் எழுதிய கட்டுரை தொடர்பாக நான் எனது கருத்துக்களை எழுதவுள்ளேன். தயவுசெய்து யாழ் கள நிர்வாகம் இப்பகுதியை மூடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

அபி அஞ்சலி நீங்கள் உங்களுக்குள் உள்ள உள்வீட்டுச் சிக்கல்கலை எப்படியும் தீர்த்துக் கொள்ளுங்கள். அதற்குள் எனது கட்டுரையை இழுத்து உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை கொட்டாதீர்கள்.

மற்றும் அபி அவர்களே நீங்கள் லண்டனில் இருந்து பதிவுத்தபாலில் திருமதி சுதானந்தன் அவர்கள் எழுதியதாக உங்களால் சொல்லப்படும் கடிதம் அனுப்பியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. ஆனால் இதுவரை ஒருபேப்பர் அலுவலகத்துக்கோ அல்லது மின்னஞ்சலுக்கோ வந்து சேரவில்லை. கிட்டத்தட்ட நீங்கள் கடிதம் போட்டு ஒரு மாதம் வரை பதிவுத்தபால் ஏன் தாமதமாகிறது எனத் தெரியவில்லை.

யேர்மனியில் இருக்கும் திருமதி சுதானந்தன் லண்டனிலிருக்கும் உங்களிடம் கடிதத்தை தந்து அனுப்ப வேண்டிய அவசியம்தான் என்ன ? திருமதி.சுதானந்தனின் வீட்டு வாசலிலேயே தபாற்பெட்டியும் ஓட்டற்றிக் மெசினும் இருக்கிறது. அதையெல்லாம் விட்டு ஏன் உங்களிடம் அதுவும் தபாலில் அனுப்பினார் ?

நான் எழுதிய கட்டுரையில் எதுவும் புனைவு இல்லை இதற்கான புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளன. உங்களுக்கு இதில் தர வேண்டிய தேவையில்லையென்பதால் இங்கு தரவில்லை. சட்டப்படியான தீர்வுகளுக்கு கொடுத்துள்ளேன். நீங்கள் இது தொடர்பான வழக்கு நடைபெறும் இடத்தில் வந்தால் காட்டலாம்.

சம்பந்தப்பட்ட மரணம் பற்றியும் அந்த மரண வீட்டில் பெரியோர் சிலரால் செய்யப்பட்ட அசிங்க அநாகரிக காட்டுமிராண்டித்தனங்களையெல

Edited by இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடடடா வேலை செய்யிற இடத்திலை வேலை குறைந்திருந்த நேரம் பொழுது போகட்டுமே எண்டு சாந்தி ரமேஸ் எழுதின கட்டுரையை வைச்சு பகிடியாய் இருக்கட்டும் எண்டு ஒரு பதிவை எழுதினன். ஆனால் இப்ப ஏன் எழுதினன் எண்டு யோசிச்சு யோசிச்சு அழவைச்சிட்டாங்கள். அடுத்ததாக தாலியறுப்பு சம்பவமும் தொடர்ந்து அந்த கட்டுரை அதனைத்தொடர்து சர்ச்சைகள் சாந்தி ரமேசிற்கு தொலைபேசி மூலமான மிரட்டல்கள் அனைத்தும் இப்பொழுது ஜெர்மன் காவல்தறையின் கவனத்திற்கு எடுத்தச்செல்லப்பட்டு சம்பவங்கள் வழக்காக மாறி காவல்துறையின் ஆரம்ப விசாரணைகள் தொடங்கி விட்டபடியால்.இனி சம்பத்தப் பட்வர்கள் நீதிமன்றத்தில் தங்கள் பிரச்சனைகளை முடித்து கொள்ளட்டும்.இதுக்குள்ளை நாங்கள்: ஏதாவது கலகப்பாய் சிரிச்சிட்டு போவம். கருத்தாட விரும்பினால் சாந்தியோ அல்லது கள நிருவாகமோ நீக்கிய அந்தக் கட்டுரையை பொருத்தமான இடத்தில் போட்டு விட்டு கருத்தாடலாம்.என்பது இந்த அடியவனின் கருத்து :):D:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபி எழுதியது..இதில் சம்பந்த்ப்பட்டபெண் ஒரு பேப்பருக்கு தனது கைப்பட எழுதி அனுப்பிய மறுப்பறிக்கையின் பிரதியை இங்கு தருகிறேன்.

மேலதிக விபரங்கள் தேவைப்படின் தனிமடலில் தொடர்புகொள்ளவும்.

வணக்கம் அபி நீங்கள் குறிப்பிட்டது போல ஒரு பேப்பரிற்கு எந்தவிதமான ஒரு கடிதமும் கிடைக்கப்பெறவில்லையென்று ஒரு பேப்பரின் பெர்றுப்பாசிரியர் கோபியை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது உறுதிப்படுத்தியுள்ளார் . அடுத்ததாக ஒரு பேப்பரிற்கு சம்பந்தப் பட்ட பெண் எழுதிய கடிதம் ஒரு பேப்பரிற்கே கிடைக்காத பொழுது அதன் பிரதி மட்டும் எப்படி உங்களிற்கு கிடைத்தது் . சரி அது உங்கடை பிரச்சனை.ஆனால் மறுப்பறிக்கை அனுப்பிறது பற்றி கேட்பதற்காக சம்பந்தப் பட்ட பெண்ணின் தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல தடைவை முயன்று கொண்டு இருக்கின்றேன்.இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ப கிடைத்தால் அவரிடமே கேட்டு சொல்கிறேன் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அபி ஏதோ விளையாட்டுக் காட்டுற மாதிரி இருக்குது. இப்பிடி ஆட்களை misrepresent பண்ணுறதையும் ஜெர்மன் பொலிஸில போட்டுக் குடுத்தால் தான் திருந்துவார்கள். அது சரி, சாந்தியின் கட்டுரையை நாங்கள் வாசிக்க முடியாதா? அவரது ஒரு பேப்பர் புளொக்கில் போடவும் அனுமதி இல்லையாமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபி ஏதோ விளையாட்டுக் காட்டுற மாதிரி இருக்குது. இப்பிடி ஆட்களை misrepresent பண்ணுறதையும் ஜெர்மன் பொலிஸில போட்டுக் குடுத்தால் தான் திருந்துவார்கள். அது சரி, சாந்தியின் கட்டுரையை நாங்கள் வாசிக்க முடியாதா? அவரது ஒரு பேப்பர் புளொக்கில் போடவும் அனுமதி இல்லையாமா?

ஜஸ்ரின் கட்டுரை என்னுடைய வலைப்பூவிலும் உள்ளது கீழே உள்ள இணைப்பில் போய் பாருங்கள்

http://sathirir.blogspot.com/2007/12/blog-post_17.html

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் நெடுக்காலைபோவானுக்கு !

ஆதாரங்களை உங்கள் முன் வைத்தால் அதற்கான தீர்வை ஐ.நாவில் போய் தீர்த்துவிடுவீர்கள் அதுதான் தமிழ்பேசும் நல்லுலகிற்கு தரப்படவில்லை. ஏன் அத்தகைய சிக்கலை உங்களுக்குத் தருவான் என்ற நல்நோக்குத்தான்.

அதிலும் சம்பந்தப்பட்ட சகோதரி வற்புறுத்தலின் பெயரில் மறுப்புச் சொல்லச் செய்யப்படுவதாகவும் ஒரு தரப்புச் சொல்கிறது.

இந்த எதிர்த்தரப்பாக உங்களுக்கு நேற்று இரவு தனிமடலில் 2மணித்தியாலம் செலவிட்டு தந்துவிட்டேன். நான் தந்த விளக்கங்களின் பின் உங்களுக்க தர எதுவும் மிச்சமில்லை.

இப்படி இந்த விடயம் சிக்கலாக்கப்படுகிறதே தவிர.. அதன் சமூக நோக்கத்தை குறித்த பெண்மணியின் மனிதாபிமானத் தேவையை எவரும் கருத்தில் எடுத்துச் செயற்படுவதாகத் தெரியவில்லை.

இக்கருத்தில் நீங்களும்தான் அடக்கம். நீங்கள் ஒரு நடுநிலையாளன் கருத்தாளன் என்றெல்லாம் சொல்கிறீர்கள். சம்பந்தப்பட்டவரின் துயர் அடங்கிய ஒளிப்பதிவை அல்லது ஒலிப்பதிவை கேட்டு அவரது துயரைக்கூட்டவே விரும்புகிறீர்கள் என்பது புலனாகிறது. (இல்லையென்று 2பக்க நீளத்துக்கு எழுதுவீர்கள் பதில் பறவாயில்லை நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன்)

பாதிக்கப்பட்டவர்களை எங்கே எங்கள் உறவுவலை கருத்துச் சொல்ல விட்டது. இப்பிடிச் சொல் இல்லாவிட்டால் இயலுமானவரை இழிவுபடுத்துவோம் என்று மிரட்டினால் பெண்ணால் மட்டுமல்ல ஆணாலும் தன்பக்க நியாயத்தை சொல்ல முடியாது. அதையும் தாண்டி சொல்ல வந்தால் பெண்ணியம் ஆணியம் வீணியம் என்று கதையளப்பீர்கள்.

உண்மை எது பொய் எதுவென்ற குளப்பம் இருக்க எப்படி ஆதாரமில்லாமல் யாரோ ஒருவர் தனிமடலில் உங்களை தொடர்பு கொண்டு துயர் பகிர்ந்தார் என ஒரு நடுநிலையாளன் பொய்யை எழுத முடியும் ?

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தனிப்பட்டவரின் பிரச்சனையை இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லதென நினைக்கின்றேன்.

இது தனிப்பட்ட பிரச்சனையல்ல.

சம்பிரதாயத்தின் பெயரில், மதத்தின் பெயரில் பண்பாட்டின் பெயரில் ஒரு சமூகத்தில் நிகழ்த்தப்படும் கொடுமை இது.

இதைப் பற்றி பொதுவில் விவாதிப்பது அவசியம்.

இறுதி நிகழ்வின் போது தாலியை கழற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதும், பெரும்பாலான பெண்கள் மிகவும் துன்பப்பட்டு கதறி அழுது அதைக் கழற்றுவதும் பல சாவு வீடுகளில் நடக்கின்றது.

தாலியைப்: போட்டு வரச் சொல்லி, பின்பு சிலர் அதைக் கழற்றி கணவனை இழந்த பெண்ணை துன்புறுத்துகின்ற ஒரு சம்பிரதாயம் தேவையா?

இது பற்றிய சிந்தனையை வளர்ப்பதற்கு இவ் விவாதம் உதவட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பிரதாயத்தை, சமுதாயத்தை, சமயத்தை சீர்திருத்துவதற்கு இது தருணமல்ல அதற்குரிய சந்தர்ப்பங்கள் இன்னும் நிறைய வரும். முதலில் எமக்கு அதாவது எம் மண்ணுக்கு ஆக வேண்டியதை பாருங்கள். ***

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

:) என்னப்பா இது? இதுவரை தாலியறுப்பு என்ற ஒன்றை எமது சமுதாயத்தில் நான் கேள்விப்படவில்லை, இந்திய சினிமாவில் ,சின்னத்திரைகளில் தான் பார்த்திருக்கிறன். ஒரு வேளை புலத்தில் உள்ளவர்கள் வேலைவெட்டி இல்லாம இதுகளை பார்த்திட்டு அப்படி செய்ய முற்படினமோ தெரியல.

குமாரசாமி!

இது போன்ற சம்பிரதாயங்களை நீங்கள் ஆதரிப்பதாக வெளிப்படையாக சொல்வதற்கு என்ன தயக்கம்?

***

ஒன்று காட்டு மிராண்டித்தனங்களுக்கு ஏதாவது விளக்கம் சொல்லி சப்பைக்கட்டுக் கட்டுவது, அல்லது இது தருணம் அல்ல என்று சொல்லி திசை திருப்புவது.

ஆரம்பத்தில் "தனிப்பட்ட பிரச்சனை" என்று சொல்லி தட்டிக் கழிக்க முனைந்தீர்கள்.

இப்பொழுது "தருணம் இது அல்ல" என்று சொல்கிறீர்கள்.

உங்களுடைய உண்மையான நோக்கம் எமக்குப் புரிகிறது.

இது தருணம் இல்லை என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

மாற்றத்திற்கு உரிய சந்தர்ப்பங்கள் எப்பொழுது வரும்?

மண்ணுக்காக ஏதாவது செய்வது என்பது உங்களுடைய பார்வையில் எவை எவை?

இக் கேள்விகளுக்கு தயவு செய்து உங்களுடைய பதிலை தாருங்கள்

*** மேலே தணிக்கை செய்யபப்ட்ட கருத்துக்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அபிப்பிராயங்கள் வெளியிடும் போது..அடுத்தவரின் சோக நிலையை உணர்ந்து அவர்களுக்கு மேலும் வலியூட்டத் தக்க வடிவங்களில் செய்யாதீர்கள். குறிப்பாக ஊடகங்கள் நடத்துபவர்கள்.. குறித்த பெண்ணின் படத்தைக் கூட அவரின் அனுமதியின்றி இங்கு பிரசுரித்து செய்தி வெளியிட்டதாக குறிப்பு உண்டு.

..! :)

நெடுக்காலை போனவனே நீங்கள் குறிப்பிடும் படத்தை இணைக்கிறேன் பாருங்கோ.

***

இப்படத்தை செய்த 19வயது இளைஞருக்கு இப்படியெல்லாம் வரும் எனத் தெரியாது. கட்டுரைக்கு பொருத்தமான படமொன்று செய்துதரக்கேட்டபோது அந்த இளைஞர் செய்து தந்தார். ஆனால் இதற்குள் தொடர்பில்லாத ஒருவரை தொடுப்பிட்டவர்களுக்கே இது வெளிச்சம்.

நெடுக்கு உங்களின் நேர்மையை ஒருதரம் பரிசீலனை செய்யுங்கள்.

மருண்ட.வன் கண்ணுக்கு ஏதோவெல்லாம் பேயென்பார்கள். அதுபோல்தான் உங்கள் கண்ணும்.

Edited by வலைஞன்
படம் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவரின் முகத்தை திரு.அபி அவர்களுக்கு நன்றாகவே தெரியும். சம்பந்தப்பட்டவருக்கு இதனை காட்டுங்கள்.

திரு.அபி அவர்கள் அந்தப்பெண் தன்னிடம் வேண்டிக்கொண்டதற்கு அமையவே அவரது கடிதத்தை ஒரு பேப்பருக்கு அனுப்பியதாக கூறுகிறார். ஆயினும் இதுவரை றோயல் மெயில் ஏன் நித்திரை கொள்கிறதென்பது புரியாத புதிராகவே உள்ளது.

ஆனால் அபி இரக்கப்பட்டு உதவிய பெண்ணின் வீட்டுக்குப் பக்கத்துக் கதவு இன்ரனெட்கபே இருக்கிறது. அதில் போய் தனது கருத்தை ஒரு பேப்பருக்கு நேரடியாக அனுப்பியிருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு யேர்மனியிலிருந்து உங்களுக்கு லண்டன் அனுப்பி பின்னர் அதை நீங்கள் ஒருபேப்பருக்கு அனுப்ப வேண்டிய தேவையேன் ?

மற்றும் அந்தப்பெண்ணிடம் பழைய ஒரு பேப்பர்கள் இருக்கின்றன அதிலிருந்து முகவரியை எடுத்து நேரடியாக அனுப்பியிருந்திருக்கலாம். இதில் 4வது நபரின் தலையீட்டின் நோக்கம் ? அபி இதற்கு நீங்கள் தான் பதில் தர வேண்டும்.

ஒரு பேப்பருக்கு உங்கள் கடிதம் கிடைத்ததா என்பதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது செய்யப்படவில்லை. அவசரஅவசரமாக கருத்துக்களத்தில் போடும் தேவையேது ? அப்படி உங்கள் கடிதம் கிடைத்து ஒரு பேப்பர் உங்கள் கருத்தை பிரசுரிக்காமல் விட்டிருந்தால் நீங்கள் கருத்துக்களத்தில் வந்து நீதி கேட்டிருக்கலாம்.

உங்கள் கருத்துமீதும் அந்தப்பெண்மீதான கரிசனை மீதும் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும் சம்பந்தப்பட்ட சகோதரி வற்புறுத்தலின் பெயரில் மறுப்புச் சொல்லச் செய்யப்படுவதாகவும் ஒரு தரப்புச் சொல்கிறது. இந்த எதிர்த்தரப்பாக உங்களுக்கு நேற்று இரவு தனிமடலில் 2மணித்தியாலம் செலவிட்டு தந்துவிட்டேன். நான் தந்த விளக்கங்களின் பின் உங்களுக்க தர எதுவும் மிச்சமில்லை.

அடிப்படையில் ஒரு உண்மைச் சம்பவம் சார்ந்து.. இந்தத் தாலி அறுப்புக் கட்டுரை வரைந்தவர்களும் சரி.. அக்கட்டுரையால் பாதிக்கப்பட்டவர்களும் சரி சமூகத்தை நோக்கி தங்கள் கருத்துக்களைச் சொல்ல முற்படும் போது ஆதாரங்களை முன் வைத்திருக்க வேண்டும். ஆதாரங்கள் இல்லாத போது உண்மைகள் கலந்து கட்டுரைகள் புனையப்பட்ட உள்ள வாய்ப்பை நிராகரிக்க முடியாது. அதற்காகத்தான் ஆதாரம் தேவை என்று சொல்லப்படுகிறதே தவிர குறித்த சகோதரியை எவ்வகையிலும் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அல்ல..!

குறித்த கட்டுரைக்கு எதிராக எமக்கு தனிமடல் மூலம் தகவல் தந்த கள உறவு தான் ஏன் அப்பதிவை இடுகிறேன் என்பது உட்பட பல தனிப்பட்ட விபரங்களையும் தந்திருக்கிறார்.

எம்மைப் பொறுத்தவரை நாம் கருத்தாளர்கள். வாதப் பிரதிவாதக் கருத்துக்களூடு நடை பயில்பவர்கள். கருத்தியலை நியாயத்தை வாதங்கள் சொல்லும் ஆதார அம்சங்கள் தொடர்பிலும் நிறுவக் கூடிய சாத்தியங்கள் தொடர்பிலுமே எதிர்வு கூற முடியும்.

நாம் நேரடியாக ஒரு தனிப்பட்டவரின் விடயத்தில் தலையீடு செய்ய முயற்சிக்கவில்லை. அதேபோல் குறித்த கள உறவு எமக்கு அனுப்பி வைத்தத தரவுகள் தரவுக் காப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் நாம் அதைப் பாவித்து ஒரு கருத்தாடலுக்காக அல்லது சமூகப் புரட்சி பண்ணுறம் என்று காட்டுவதற்காக ஒரு மனிதனின் சுயத்துடன் சம்பந்தப்பட்ட உணர்வுகளோடு விளையாடிப் பார்க்கவும் விரும்பவில்லை.

கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் அவற்றை அனுப்பி வைத்த உறவுகளின் எண்ணத்தாக்கங்கள் பற்றிய வெளிப்பாட்டை மட்டுமே நான் வெளியிட்டேன்..! அதில் நியாயம் அநியாயம் என்பதை நான் எனது சொந்த கருத்தியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது. காரணம்.. அது அடுத்தவரின் சுயத்தைப் பாதிக்கலாம். அதுமட்டுமன்றி நான் தீர்மானங்களை எடுத்து கருத்துக்களை வைக்க.. அதற்கான ஆதாரங்கள் என்னிடமோ.. சமூகத்திடமோ வழங்கப்படவில்லை.

"தாலி அறுப்பு" என்ற பதப் பிரயோகம் மிகைப்படுத்திய ஒன்று என்பதை இலகுவாகப் புரிந்து கொள்கின்றேன்.

கணவன் இறந்ததும் தாலியைக் கழற்றி வைப்பது இந்துக்களின் வழமையான நடைமுறை..! கிறீஸ்தவர்கள் சேர்சில் வைத்து ஆராதணை செய்வார்கள். இப்படியான சமூக மத சம்பிரதாயங்கள்.. மனித நாகரிக வளர்ச்சியில் தோன்றி வந்துள்ளன. இடையில் அருகியும் போயுள்ளன.

தாலியைக் கழற்றி வைப்பதற்கு குறித்த பெண் தயங்கியதால்.. அதை கழற்ற வற்புறுத்தி இருப்பார்கள். அது தவறானதாக இருப்பினும்.. தாலி அறுப்பு என்ற பதப் பிரயோகம் இவ்வன்முறைத்தனத்தைச் சொல்வதற்கான சரியான வடிவமல்ல..!

காரணம்.. கணவன் இறந்த பின் தான் தாலியை கழற்ற சொல்கிறார்கள். காரணம் தாலி கணவனின் அடையாளமாக மனைவியிடம் இருக்கும் என்பதால்.. அது அவரின் ஞாபகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் என்பதால். இந்தச் சாதாரண உண்மையை உணராமல்.. இதற்கு தாலி அறுப்பு என்ற பதமிட்டது என்னைப் பொறுத்தவரை சரியானதாகத் தெரியவில்லை.

கணவனின் மரண வீட்டில் தாலி வன்பறிப்பு என்று தலைப்பிட்டிருக்கலாம். இச்சம்பவத்தை சம்பந்தப்பட்டவர்களின் மற்றும் மக்களின் மனங்களை நோகடிக்காத வகையில் சமூகக் கண்ணோட்டத்தோடு சமூக அநியாயத்தைச் சொல்ல என்று தெளிவுற தலைப்பிட பல வழிகள் இருந்தும்.. குறித்த தலைப்பில் தாலி அறுப்பு என்ற பதப்பிரயோகம் கடுமையான நிலையை தோற்றுவிக்கக் கூடியது என்பதை உணராது இருந்ததையிட்டு.. அதுவும் ஒரு அனுபவமிக்க எழுத்தாளர் இப்படி சமூக உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் தலைப்பிட்டதை ஏற்றுக் கொள்வது கடினமான செயலாகவே உள்ளது. அதைச் சுட்டிக்காட்டவே தான் இத்தலைப்பில்..

கோவிலில் கள்வர்கள் தாலி அறுப்பதை சொன்னேன். அங்கு தாலி அறுப்பு என்பது கணவன் இருக்க.. தாலியை வன்பறித்தல் என்றாகிறது. சில ஊர்களில் கணவனை பிரிந்து வாழும் பெண்களை கோபத்தில் பேசும் போது அறுதாலி (அறுதலி) என்பதை சொல்லக் கேட்டிருக்கிறேன்.இப்படிப் பேசுவதும் பெண்களாகவே இருந்திருக்கின்றனர்.. இதற்கான உண்மைக் காரணம் அல்லது விளக்கம் என்பது இன்னதுதான் என்றது எனக்குத் தெரியாது..!

சுருங்கக் கூறின்.. ஒரு தனிமனிதனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சோகச் சம்பவத்தின் பின்னணியில் இருந்து எழுந்த ஒரு நிகழ்வை கட்டுரையில் வெளிப்படுத்த அதற்கு இட்ட தலைப்பு முதற்கொண்டு.. அதனை அணுகிய வழிமுறைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் சமூகப் பார்வைக்கு கண்ணியமானதாக இல்லை என்பதை என்னால் உணரக் கூடியதாக இருக்கிறது. அதை வெளிப்படுத்துவதே எனது பதிவுகளின் நோக்கம். இதில் குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட எவரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தை செய்த 19வயது இளைஞருக்கு இப்படியெல்லாம் வரும் எனத் தெரியாது. கட்டுரைக்கு பொருத்தமான படமொன்று செய்துதரக்கேட்டபோது அந்த இளைஞர் செய்து தந்தார். ஆனால் இதற்குள் தொடர்பில்லாத ஒருவரை தொடுப்பிட்டவர்களுக்கே இது வெளிச்சம்.

நெடுக்கு உங்களின் நேர்மையை ஒருதரம் பரிசீலனை செய்யுங்கள்.

மருண்ட.வன் கண்ணுக்கு ஏதோவெல்லாம் பேயென்பார்கள். அதுபோல்தான் உங்கள் கண்ணும்.

குறித்த தலைப்புடன் குறித்த புகைப்பட்டங்கள் செலுத்தப்பட்ட பின்னணிகளுடன் கட்டுரையை இணைத்தவர் 19 வயதுப் பையனல்ல. ஒரு ஊடகவியலாளர்.

ஊடகவியல் நடைமுறைகளை அவர் பின்பற்றி 19 வயது இளைஞனையும் வழிநடத்த வேண்டிய நேரத்தில்.. இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்பது.. ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தல்ல..!

ஒருவரின் பிறந்த நாள் படத்தை பிரசுரிக்க.. ஒரு பத்திரிகை எத்தனை ஆதாரங்களை கேட்கிறது. விண்ணப்பப் படிவங்களை தருகிறது நிரப்பி கையெழுத்து வைக்க..!

ஒரு கலந்துரையாடலில் எடுக்கப்படும் விடியோவைக் கூட அனுமதியின்றி பாவிக்க முடியாது.

ஆனால் எமது சொந்த கருத்தியல் ஆதங்கங்களை அல்லது மன ஆதங்கங்களை வெளியிட சகட்டு மேனிக்கு பிறரின் privacy மீறப்படுகிறது என்று தெரிந்தும் மீறி இருப்பது.. வேதனைக்குரிய விடயமே..!

ஒரு பேப்பரும் பல தடவை படைப்பாளிகளின் ஆக்கங்கள் தொடர்பில் ஊடகவியல் நடைமுறைகளை மீறியுள்ளது. அதை இங்கும் சுட்டிக்காட்டியுள்ளேன். இப்படியான பத்திரிகைகள் சமூகத்துக்கு அடுத்தவர்களைத் தோலுரிக்க முதல் தமது நிலையை ஒரு முறை சுத்திகரித்துக் கொள்வது அவசியம். இது குறித்த பத்திரிகையின் மீதான அக்கறையில் தான் சொல்கிறேன்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

காரணம்.. கணவன் இறந்த பின் தான் தாலியை கழற்ற சொல்கிறார்கள். காரணம் தாலி கணவனின் அடையாளமாக மனைவியிடம் இருக்கும் என்பதால்.. அது அவரின் ஞாபகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் என்பதால். இந்தச் சாதாரண உண்மையை உணராமல்.. இதற்கு தாலி அறுப்பு என்ற பதமிட்டது என்னைப் பொறுத்தவரை சரியானதாகத் தெரியவில்லை.

..! :)

அப்படியானால் தாலியை கழற்றினால் கணவனின் ஞாபகங்களும் வாழ்ந்த வாழ்வும் மறந்துவிடமுடியுமென்றால் நல்லதொரு சம்பிரதாயம் தான். இதை கட்டாயம் எங்கள் சந்ததிகளுக்கு கடத்திக்காவிக்கொடுக்க வேண்டும். மண்டபத்தில் வில்லங்கங்கமாக பறித்துவிட்டு அதை திரும்பவும் அதேவீட்டில் கொண்டு போய் வைப்பது கணவனின் ஞாபகத்தை மறக்கப்பட்டுவிடுமென்றும் கருத்தாடும் நிலையில் நிற்கும் நெடுக்காரே உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். மேற்படி விடயத்தை ஊதிப்பெருப்பித்த பெருமை உங்களையும் அபியையுமே சாரும். இத்துடன் உங்களுக்கான பதிலை நிறுத்திக் கொள்ிகிறேன். ஏனெனில் நீங்கள் நீட்டி முழக்கி கருத்தென்று உங்கள் விருப்புகளை திணிப்பதை நேரத்தை செலவளித்து வாசித்து கருத்தாட நேரமில்லை.

மேற்படி விடயம் தொடர்பில் ஆதாரங்கள் பலவற்றை இக்களத்தின் மூலம் தந்துதவிய நண்பர்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் தாலியை கழற்றினால் கணவனின் ஞாபகங்களும் வாழ்ந்த வாழ்வும் மறந்துவிடமுடியுமென்றால் நல்லதொரு சம்பிரதாயம் தான். இதை கட்டாயம் எங்கள் சந்ததிகளுக்கு கடத்திக்காவிக்கொடுக்க வேண்டும். மண்டபத்தில் வில்லங்கங்கமாக பறித்துவிட்டு அதை திரும்பவும் அதேவீட்டில் கொண்டு போய் வைப்பது கணவனின் ஞாபகத்தை மறக்கப்பட்டுவிடுமென்றும் கருத்தாடும் நிலையில் நிற்கும் நெடுக்காரே உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். மேற்படி விடயத்தை ஊதிப்பெருப்பித்த பெருமை உங்களையும் அபியையுமே சாரும். இத்துடன் உங்களுக்கான பதிலை நிறுத்திக் கொள்ிகிறேன். ஏனெனில் நீங்கள் நீட்டி முழக்கி கருத்தென்று உங்கள் விருப்புகளை திணிப்பதை நேரத்தை செலவளித்து வாசித்து கருத்தாட நேரமில்லை.

மேற்படி விடயம் தொடர்பில் ஆதாரங்கள் பலவற்றை இக்களத்தின் மூலம் தந்துதவிய நண்பர்களுக்கு நன்றிகள்.

அடையாளம் தரும் வாழ்வு என்பது முடிவுறுத்தப்படும். தாலி அணிந்திருப்பதால் மட்டும் நினைவுகளை அழிச்சு வாழ்ந்திடலாமா..???! நினைவுகளாலே எல்லாவற்றையும் காண முடியும் என்றால் ஏன் புகைப்படங்களை எடுத்து வைக்கிறீங்க. வீடியோக்களைப் பதிவு செய்யுறீங்க. அந்தச் சம்பிரதாயங்களையும் தூக்கி வீசுங்களன்.

இவ்விடயத்தில் குறித்த தலைப்பு திணிப்புக்கு உள்ளாகி உள்ளது.. அதுவும் தவறான புரிதல்களுடன் என்பது உங்கள் பதிலினூடு புரிகிறது. வேற ஒன்றும் சொல்வதாக இல்லை.

அதுமட்டுமன்றி சகட்டு மேனிக்கு அடுத்தவர்களின் பிரைவேசி அடங்கிய புகைப்படங்களை பயன்படுத்துவதும் நடக்கிறது..! :)

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியும் பை பை சொல்லி விட்டுப் போயிற்றா, சாத்திரிக்கு இப்ப மூன்றாஞ்சாமம். முடிவுரையை நானே சொல்லி விடுகிறேன். நாசூக்காகச் செய்ய வேண்டிய ஒரு காரியத்தை யாரோ பெரிசுகள் வீடியோ முன்னிலையில் மெகாசீரியல் கணக்காகச் செய்யப் போக அதை ஒரு சமூகப் பிரக்ஞையுள்ள எழுத்தர் தனக்குக் கிடைத்த ஊடகங்கள் மூலம் தனது அபிப்பிராயத்தையும் உணர்ச்சியையும் கலந்து பகிரங்கப் படுத்தி விட்டார். அது சம்பந்தப் பட்ட பார்ட்டிகளைக் காயப் படுத்தியதால் அவர்கள் தனிப்பட்ட ரீதியிலும் நிர்வாக மட்டத்திலும் துலங்கல் காட்டி அந்தப் பிரசுரிப்பும் பொதுப் பார்வையிலிருந்து அகற்றப் பட்டு விட்டது. களத்திற்கு இது வந்த போது சிலர் நடந்த சம்பவத்தை மறந்து சம்பவத்தை விபரிக்கப் பாவித்த சொற்பதம் தவறெனத் திறமையாக வாதாடினார்கள். தாலியறுப்பு என்பதற்கு மாற்றீடாக முன்மொழியப் பட்ட சொற்பதம் "தாலி வன்பறிப்பு": இரண்டுக்கும் உள்ளார்த்த ரீதியாக என்ன வேறுபாடு என்பது முன்மொழிந்த மொழிவல்லாருக்கு மட்டுமே வெளிச்சம். கடைசியில் சிரிப்பு மூட்ட வந்த சாத்திரி எல்லாரையும் சீரியசாக்கி விட்டு ஒதுங்கிக் கொண்டார். சுபம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.