Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜயோ என்ட கோமணம்....நான் கழற்றமாட்டேன்!!

Featured Replies

ஜயோ... நான்... கழற்றமாட்டேன்... கழற்றமாட்டேன்.. என்னை.. விட்டிடுங்கோ என்னை.. விட்டிடுங்கோ.. என்று அவலகுரல்....!!

நடந்தது என்ன......!!

இருபேப்பருக்காக ஜம்மு பேபி எழுதியது!!

அன்று 08/01/2008 சிட்னியில வெய்யில் சொல்லி வேளையிள்ளை அப்படி கொழுத்தி கொண்டிருந்தது வீட்டிற்குள்ள இருக்க முடியவே இல்லை...எங்கையாவது சொப்பிங் சென்டரில போய் நின்றா நல்லா இருக்கும் என்று (அரைவாசி பேர் சொப்பிங் சென்டரில இதற்கு தான் நிற்கிறவை இல்லாட்டி கடலை போட :) ).. யோசித்து அப்படியே நண்பனையும் கூட்டி கொண்டு போவோம் என்று நண்பணிண்ட வீட்டை போனா அங்கே தான் இந்த அவல குரல்...கேட்ட எனக்கு பெரிசா ஒரு எவக்டும் இருக்கவில்லை ஏனென்றா நம்ம அவலகுரல் இல்லை தானே யாரின்டையோ அவலகுரல் தானே என்ன நடந்திருக்கும் என்று விடுப்பு பார்கிறதிலையே என் மனம் குறியாக இருந்தது நான் என்ன செய்ய மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள் நம்ம பெரிசுகள்....

என்ன நடக்கிறது என்று அறியும் ஆவலுடம் நண்பணிண் வீட்டு கதவை தட்டினேன் நண்பண் வந்து கதவை திறந்துவிட்டான்...உடனே நான் அவனிடம் என்ன பிரச்சினையிடா ஒரு அவலகுரல் கேட்டது என்று சொல்ல அவன் ம்ம்ம்ம் என்று சொல்லி கொண்டு என் பாட்டாவிற்கும்,பாட்டிக்கும் சண்டை நீயே போய் பாரு என்று சொல்ல எனக்கு சரியான சந்தோசம் :wub: மற்ற ஆட்களின்ட சண்டையை பார்க்கிறது என்றா நேக்கு கொள்ளை பிரியம்...நானும் அங்கே போய் பார்த்தா அந்த பாட்டி எனி நீங்க கோமணம் அணியகூடாது இது அவுஸ்ரெலியா என்று திட்டுறா தாத்தாவோ இல்லை நான் கழற்றமாட்டேன்.......கழற்றமாட்டே??் என்று கண்களிள் இருந்து கண்ணீர் வர கதறி அழ தொடங்கிட்டார் :( இதை பார்த்து எனக்கு ஒன்றும் பீலிங் வரவில்லை மாறாக சரியான சந்தோசம் இதை போய் (இருபேப்பரில) எழுதினா நம்ம புகழ் எங்கையோ போயிடும் என்று தான் வேறேன்ன.. :)

நினைத்திருந்தா நான் போய் அவையின்ட பிரச்சினையை தீர்த்து இரண்டு பேரிற்கும் நல்லதை எடுத்து கூறி பிரச்சினையை தீர்த்து இருக்கலாம் ஆனா நேக்கு அப்படி மூளை ஓடவில்லை இதை போய் எழுதி ஈழத்து பெண்கள் இன்னும் ஆண்களை ஒடுக்கு வைத்திருக்கிறார்கள் என்று பெரிசா எழுதி சமுகபிரச்சினையை தீர்கிறேன் என்று நானும் புகழைதேடி கொள்ளளாம் தானே நாட்டில எத்தனையோ பிரச்சினைகள் எல்லாம் நடக்குது அதை எல்லாம் எடுத்து எழுதலாம் அதை எல்லாம் எடுத்து எழுதினா என்ட பெயர் டேமேஜ் ஆகிடும் என்ட இமேஜ் குறைந்திடும் அல்லவா இப்படியான விசயத்தை எழுதினா தானே நான்கு ஆண்கள் எனக்காக குரல் கொடுப்பார்கள் அப்ப சமுகத்தில நானும் ஒரு பெரிய ஆள் ஆகிடுவேன் அல்லவா... :wub:

(அட நடந்தது என்ன என்று சொல்ல வந்து கனக்க உளறிட்டன் போல மன்னித்து கொள்ளுங்கோ இப்ப விசயதிற்கு வாரேன்....)

அப்ப அந்த தாத்தா கழற்றமாட்டேன் கழற்றமாட்டேன் என்ட பரம்பறையே கோமணம் தான் போட்டவை என்னால ஏலாது என்று கத்த பாட்டியோ அது ஊரில இது அவுஸ்ரெலியா இங்கே கழற்றினா தான் மதிப்பு சரியோ இங்கே தாலியை கழுத்தில போட்டிருந்தா மதிப்பு கோமணத்தை கழற்றினா தான் மதிப்பு என்று ஒரே வாக்குவாதம்..இதற்குள்ள பாட்டியின் சகோதரியும் இணைந்துவிட்டா அது தானே யாரும் இங்கே கோமணம் கட்டுவீனமா (ஆனா இவ்வளதிற்கும் அந்த பாட்டி சேலை தான் போட்டிருக்க இவ்வளவு கதைக்கிறவா ஜீன்ஸ் போட்டிருக்கலாம்....)...பாவம் அந்த தாத்தா கழற்றமாட்டேன்........கழற்றமாடேன் என்று கத்தவும் இருவரும் சேர்ந்து தாத்தாவின் கபர்ட்டில் இருந்த கோமணத்தை எல்லாம் எரித்துவிட்டார்கள்..தாத்தா இறுதியா ஜயோ..ஜயோ..என்ட கோமணம் என்று கத்தியது என்னும் என் காதில் ஒலிக்கிறது!! :D

அக்சுவலா இதை எல்லாம் வடிவா பார்த்து கொண்டிருந்தனான் ஏனென்றா பெரிசுகளையோட எல்லாம் சண்டைபிடிக்க கூடாது அவையிட்ட நல்ல பிள்ளை பெயர் வாங்க வேண்டும் அல்லவா (இல்லாட்டி நான் ஒருக்கா 000 போன் அடித்து அது தான் அவுஸ் பொலிசிற்கு சொல்லி இருந்தா தாத்தாவின் உரிமை காப்பாற்றிபட்டிருக்கும்)பட் அப்படி செய்தா அந்த வீட்டிற்குள்ள என்ட புகழ் முடிந்து போயிருக்கும் அல்லவா அது தான் அப்படி ஒன்றும் நான் செய்யவில்லை அப்படியே என்ட வீட்டை வந்து நேராகா (இரு பேப்பரிற்கு எழுதி கொண்டிருக்கிறேன்).. :lol:

அக்சுவலா இது சமூகத்தில் ஒரு ஆணிண்ட உரிமை பறிக்கபட்டிருக்கு இரண்டு பெண்களாள இது காலம் காலம் தொடர கூடாது இல்லாட்டி எங்களின்ட பிள்ளைகளும் இதை தான் அநுபவிக்கும்..(ஆமாம் என்னவோ எங்களின்ட பிள்ளைகள் கோமணம் தானே கட்டபோகுதுகள் செமகாமேடி)...ஆகவே இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில இதை நான் இரண்டுபேப்பரில எழுதுறேன்..(இந்த இரு பேப்பரில எழுதினா எல்லா பிரச்சினையும் முடிந்திடுமா இல்லாட்டி இரு பேப்பரை வாசிக்கிறவர்கள் எல்லாரும் அதன் படி தானே செய்யீனம் என்ன கொடுமை...).

இப்படி நான் (இரு பேப்பரில ) எழுதினா நாலு பேர் என்னை தூக்கிபிடிக்க என்னும் நாலு பேர் நபி,வபி என்று சில பேர் என்னை திட்ட நான் பெரிய ஆள் ஆகிடமாட்டேனா என்ன நான் சொல்லுறது...அதற்காகவே யாரும் என்னை திட்டுங்கோ அதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் அத்தோடு என்னமொன்று நான் என்னத்தை எழுதுறனோ அதை நீங்க பாராட்ட தான் வேண்டும் மாறாக விமர்சனம் செய்ய கூடாது அது எனக்கு பிடிக்காது என்னை பற்றியும் என்ட ஆக்கத்தை பற்றியும் நல்லதா சொல்ல வேண்டும் சொல்லிட்டேன் இல்லாட்டி எல்லாரையும் திட்டி தான் நான் விடை தருவேன் சரியோ!! :D

மற்றவையின்ட பிரைவசி மேல எனக்கு அக்கறையே இல்லை நாங்க படம் எல்லாம் போடுவோம் அந்த தாத்தாவின்ட எல்லாம் அவருக்கு விருப்பம் இருக்கோ விருப்பம் இல்லையோ என்பது எல்லாம் நமக்கு முக்கியமல்லாது தாத்தாவின் படத்தை போடுறோம் என்று வேற ஆட்களின்ட படத்தை எல்லாம் இந்த இரண்டு பேப்பர் போடாது சரியோ ஏனென்றா இங்கே இருக்கிறவை எல்லாம் பேபிகள் எல்லாருக்கும் 19 வயசை விட குறைய சிலரை தவிர...

ஆகவே கோமணம் என்பது இந்து மதத்தவரை சார்ந்த்தது ஆகவே அதனை பாவிக்க வேண்டாம் என்று சொன்னதிலும் ஒரு நியாயம் இருக்கு (இது தான் பகுத்தறிவு என்று சொல்லுறது ஒன்லி இரண்டு பேப்பரில இருக்கிற ஆட்களிற்கு மட்டு தான் மிச்ச ஆட்களிற்கு இல்லை)...ஓ இன்னொன்றை சொல்ல மறந்துட்டேன் இப்படி எல்லாம் எழுதுறேனேன் நான் என்னவோ ஜேர்னலிசம் போய் யூனியில 5 வருசம் படித்து போட்டு வந்து எழுதுறேன் என்று நினைத்து போடாதையுங்கோ நமக்கும் அதற்கும் வெகு தூரம் சில முட்டாள் பயல்கள் அங்கே எல்லாம் போய் 5 வருசத்தை வீணாக்கினம் அக்சுவலா எங்களின்ட இருபேப்பர் குழுவில இருக்கிற எல்லாரும் அந்த பக்கம் போகாம வந்த ஆட்கள் தான் இப்படி சில மாட்டர்களை எழுத நம்மன்ட சனம் (பாவம் அவைக்கு என்ன தெரியும்) விசிலடித்துவிட ஒரு மாதிரி நாமளும் நின்றுபிடித்து விட்டோம்...இந்த இரகசியத்தை தப்பு தவறி கூட ஒருபேப்பர் காரர்களிற்கு சொல்லிபோடாதையுங்கோ... :lol:

மீண்டும் மற்றுமொரு (நமக்கு பெயர் வாற மாதிரி இசு வந்தா) சந்திக்கிறேன் இல்லாட்டி நம்ம இருபேப்பரில இருக்கிற மிச்ச ஆட்கள் எழுதுவீனம் சரியோ!!

இரு பேப்பருக்காக,

ஜம்மு பேபி,

சிட்னியில் இருந்து!!

இருபேப்பர்

இதழ் 1

"நீங்க குறுக்கால போனா நாங்க நெடுக்கால போவோம்"

இரு பேப்பர் குழுமம்

பிரதம ஆசிரியர் -எழுத்துலகின் ஜாம்பவான் மதிபுகுரிய நெடுக்ஸ் தாத்தா அவர்கள்.

துணை ஆசிரியர் -எழுத்துலகின் மைல்கல் டாக்டர்.கறுப்பி அக்கா (கறுப்பி அக்காவிற்கு பட்டம் கொடுத்தா அவா மறுபடி எனக்கு ஒரு பட்டம் தருவா என்ற நப்பாசை தான்)..

நிர்வாக ஆசிரியர் -அதிரடி எழுத்தாளர் அன்பிற்கும்,பாசதிற்கும் உரிய வசபண்ணா.

விசேட செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள்-(இதுவரையில் எனி தொகை அதிகரிக்கலாம் என்று நம்பபடுகிறது)

1)கள்ளுகொட்டில் விசேட செய்தியாளர் -திரு.குமாரசுவாமி அவர்கள் (அட அட கள்ளுகொட்டில இருக்கிறவை எல்லாரையும் செய்தியாளர் ஆக்கின பெருமை நம்ம பத்திரிகைக்கே சாரும்)

2)திரு.சுண்டல் அவர்கள் -கடலை போட்டு கொண்டிருந்தவை எல்லாம் செய்தியாசிரியர்கள் என்ன கொடுமை.

3)திரு.பனங்காய்- அண்ணண் மழைக்கு கூட பள்ளிகூடம் ஒதுங்கவில்லை என்று ஒரு பேட்டியில சொல்லி இருந்தவர்..

4)திரு.புத்தன் -கோசிப் உலகின் நம்பர் 1

5)- - - - - - அட என்ன என்று பார்கிறியளோ இப்படி ஒரு செய்தியாளரோ என்று பார்க்கிறியளோ அது தான் இல்லை இந்த இடத்தில ஒருத்தரை நியமித்தனாங்க ஆனா அவர் வால் பிடிக்கிறார் என்று அது தான் இரண்டு பக்கமும் ஆமா போடுறது அப்படிபட்ட செய்தியாளர் வேண்டாம் என்று எமது பிரதம ஆசிரியரே அவரை விலக்கிவிட்டார்.....(நீங்களே அவர் யாரேன்று ஊகித்து கொள்ளுங்கோ)

6)திரு.சுகண் அண்ணா - சிறப்பு விசேட செய்தியாளர்

7)திரு.சாணக்கியன் அண்ணா - செய்தி அலசல்

8) செல்வி.வெண்ணிலா-பிராந்திய செய்தியாளர்

திருமதி.இன்னிசை -பிராந்திய செய்தியாளர்

9)திரு.குட்டிமாமா -வெட்டி ஒட்டும் செய்தியாளர் (ஆனா எங்கே இருந்து ஒட்டினோம் என்று போடமாட்டோம்)

10)திரு.வான்வில் -இன்னும் பயிற்சியில்

இவர்களுடன் ஜம்மு பேபியும் தவழ்ந்து பழகிறது இது இரு பேப்பர் செய்தி குழுமம்............இருபேப்பர் செய்தி குழுமம் தரமான ஆக்கங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறது (தரமான ஆக்கம் என்றா எங்களின்ட கண்ணிற்கு எது தரம் என்று படுதோ அதை தான் தரம் என்று எடுப்போம் பிறகு நீங்க தப்பா நினைத்திடகூடாது சரியோ).......

ஆகவே இருபேப்பர் குழுவிற்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த இதழில் சந்திக்கும் வரை விடை பெறுவது!! :) (அடுத்த இதழில மட்டும் என்னத்தை சொல்ல போறோம் கோமணத்தை காப்பாற்ற வழிமுறைகள் சொல்லிடமாட்டோமா...)

இருபேப்பர் செய்தி குழுமம்!!

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

வணக்கம் ஜம்மு அண்ணா,

இரு பேப்பருக்காக நீங்கள் எழுதிய நேரடியாக பார்த்த சம்பவம் :wub: மிகவும் சுவையாக இருந்தது. இந்த இரு பேப்பருக்கான அப்பப்போ வரும் விசேட நிருபராக என்னையும் இணைக்கும் படி உங்களிடம் விண்ணப்பித்திருந்தேன்(சம்தி

அட ஜம்முக் கண்ணா

அப்படியே நெஞ்சை நக்கிட்டீர் போம். கோமண விசயம் எழுதப்போய் எங்கே நிர்வாக ஆசரியர் என்பதை நிர்வாண ஆசிரியர் என்று எழுதிடுவீரோ என்று பயந்திட்டன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. :lol::wub:

அப்ப அந்த தாத்தா கழற்றமாட்டேன் கழற்றமாட்டேன் என்ட பரம்பறையே கோமணம் தான் போட்டவை என்னால ஏலாது என்று கத்த

ஜம்மு அப்போ உங்கட நண்பனும் உந்த பரம்பரை என்ற வரிசைக்குள் அடங்குவாரோ :lol:

அட எப்படித்தான் இப்படி எல்லாம் எழுதுறியளோ

அதுசரி எப்ப உந்த "இருபேப்பர்" வரத்தொடங்கினது ஜம்முபேபி? :wub: வாராவாரம் வெளியிடுங்கோ பேப்பரை.

நல்லா இருக்கு உங்கள் இதழியல் பயணம் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.. பேராண்டி.. முடியல்ல.. நான் உண்மையில இந்த உலகிலதான் இருக்கேனா... என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கிறேன்...ஐயோ ஐயோ ஐயோ... என்ன பதவி... எத்தனை உயர்வு.. ஒரே நொடியில.. இந்தளவுக்கு உயர்ந்திட்டனா...என்ன ஒரு தகுதி எனக்கு... ஆஆஆஆஆஆஆஊஊஊஊஊஊஊஉ

என்னப் பெத்த ஆத்தா.. நான் சாதிச்சிட்டன் ஆத்தா... இதையெல்லாம்.. நீ இணையத்தில காணாமல் இருக்கிறியே ஆத்தா.......

யாரது பிடரில தட்டிறது.. வாழ்க்கையில சந்தோசமா இருக்கவும் விடுறாங்கல்லையே..... ஓ.. மோகன் சாரா... சாறி சார்.. கண்மின் தெரியாமல் உளறிட்டனா.... எல்லா பேராண்டி தந்த இலவசப் பதவி எனும் சம்பைன்.. செய்த வேலை..!

( இதை அப்படியே வீட்டுக்க கொள்ளையடிக்க ஒரு ஊசி போட்டு பூட்டைத் திறந்து நுழைஞ்ச உடன வீட்டில் உள்ள சாமாங்களைப் பார்த்து வடிவேல்... சொல்லுவாரா அதோட அப்படியே ஒத்திக்குங்க..!) :lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.. பேராண்டி.. முடியல்ல.. நான் உண்மையில இந்த உலகிலதான் இருக்கேனா... என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கிறேன்...ஐயோ ஐயோ ஐயோ... என்ன பதவி... எத்தனை உயர்வு.. ஒரே நொடியில.. இந்தளவுக்கு உயர்ந்திட்டனா...என்ன ஒரு தகுதி எனக்கு... ஆஆஆஆஆஆஆஊஊஊஊஊஊஊஉ

என்னப் பெத்த ஆத்தா.. நான் சாதிச்சிட்டன் ஆத்தா... இதையெல்லாம்.. நீ இணையத்தில காணாமல் இருக்கிறியே ஆத்தா.......

யாரது பிடரில தட்டிறது.. வாழ்க்கையில சந்தோசமா இருக்கவும் விடுறாங்கல்லையே..... ஓ.. மோகன் சாரா... சாறி சார்.. கண்மின் தெரியாமல் உளறிட்டனா.... எல்லா பேராண்டி தந்த இலவசப் பதவி எனும் சம்பைன்.. செய்த வேலை..!

( இதை அப்படியே வீட்டுக்க கொள்ளையடிக்க ஒரு ஊசி போட்டு பூட்டைத் திறந்து நுழைஞ்ச உடன வீட்டில் உள்ள சாமாங்களைப் பார்த்து வடிவேல்... சொல்லுவாரா அதோட அப்படியே ஒத்திக்குங்க..!) :lol::wub:

தண்ணி போட்டு பினாத்துற மாதிரி இருக்கே :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி போட்டு பினாத்துற மாதிரி இருக்கே :lol::wub:

ஐயோ ஐயோ.. நீங்க வேற.. இன்னும் பாட்டில கலந்துக்கல்லையா... வாங்க வாங்க.

ஓசிப் பதவி கிடைக்கிறது... அத்தனை லேசு இல்ல... அதுதான் இத்தனை வெறி... இதைத்தான் சொல்லுறது பதவி வெறி என்று..! :lol::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டேய் ஜமுனா! உந்த சின்ன வயதிலையே பழம் திண்டு கொட்டை போட்டுட்டாயடா :wub:

இது மற்றவர்களின் பிரச்சனையில் குளிர்காய்பவர்களுக்கு சாட்டையடியல்ல உலக்கை இடி :wub: எனக்கு உந்த இருபேப்பர் கதை ஊரிலை "தீப்பொறி"பேப்பர் பார்த்த மாதிரி இருக்கு :lol:

என்னயிருந்தாலும் கோவணத்திலை இருக்கிற சுவாரசியம் மற்ற ஒண்டுலையுமே இல்லை(காற்றோட்டமானது) :lol:

எழுதடாச்செல்லம் எழுது இந்த கிழவன் எப்பவும் உன்ரை பக்கந்தான் :)

அட......... அட................... என்ன கு.சா

கொடியிலை காயப்போட்டதை காப்பாத்துற நப்பாசை போல. :lol: நடக்கட்டும் ............... :wub: நடக்கட்டும்..................

3)திரு.பனங்காய்- அண்ணண் மழைக்கு கூட பள்ளிகூடம் ஒதுங்கவில்லை என்று ஒரு பேட்டியில சொல்லி இருந்தவர்..

ஜமுனா,

நான் HFC பள்ளிக்கூடத்திக்கு எதிர்ல இருக்கும் பஸ் ஸ்டொப்பில அடிக்கடி ஒதுங்கினேனாக்கும்.... வாழ்கையை படிக்க.... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட......... அட................... என்ன கு.சா

கொடியிலை காயப்போட்டதை காப்பாத்துற நப்பாசை போல. :wub: நடக்கட்டும் ............... :lol: நடக்கட்டும்..................

என்ன இருந்தாலும் வசம்பர்!

மனுசியின்ரை பழஞ்சீலையை கிழிச்சு அருணாக்கொடியிலை தொங்க விடுற சந்தோசம் எங்கையிருக்கு? :lol:

அதுதான் கோவணத்தை சொன்னனான் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்முண்டா ஜம்மு தான். நல்லா உன்னிப்பா கவனிச்சு எழுதி இருக்கிறியள். :lol:

இரு பேப்பர் எனக்கு நல்லா பிடிச்சிருக்கு தொடர்ந்து எழுதுங்கோ :wub:

வாழ்த்துக்கள் ஜம்மு உங்கள் சமூக பணி தொடரட்டும் :wub:

ஒரு விடயத்தை இன்னொரு கோணத்தில் நையாண்டியாக எழுதுவது அவ்வளவு இலகுவான காரியமில்லை. இதற்குத்தான் சொல்வது வெண்ணெய் தடவி சாட்டையால் அடிப்பது என்று . பேபி வஞ்சகம் இல்லாமல் இரண்டு பக்கத்தையும் வாரி இருக்குது! உ+ம் - இருபேப்பரின் பேபிகள் யாரும் பல்கலைக்கழகம் போய் ஊடகவியல் படிக்கவில்லை என்னும் வரி. இதன் மூலம் இருபேப்பரின் பிரதம் ஆசிரியரையே பேபி வாரிவிட்டிருப்பது அழகு! :lol::wub: பேபியின் திறமைகள் வளர வாழ்த்துக்கள்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை இன்னொரு கோணத்தில் நையாண்டியாக எழுதுவது அவ்வளவு இலகுவான காரியமில்லை. இதற்குத்தான் சொல்வது வெண்ணெய் தடவி சாட்டையால் அடிப்பது என்று . பேபி வஞ்சகம் இல்லாமல் இரண்டு பக்கத்தையும் வாரி இருக்குது! உ+ம் - இருபேப்பரின் பேபிகள் யாரும் பல்கலைக்கழகம் போய் ஊடகவியல் படிக்கவில்லை என்னும் வரி. இதன் மூலம் இருபேப்பரின் பிரதம் ஆசிரியரையே பேபி வாரிவிட்டிருப்பது அழகு! :wub::lol: பேபியின் திறமைகள் வளர வாழ்த்துக்கள்

அதுதான் நீங்க குறுக்கால போனா நாங்க நெடுக்கால போவம் என்று வாசகமே போட்டிருக்கே. நீங்க குறுக்கால போனா நாங்க சீர்வழில போவம் என்று போடல்லையே...! :):lol:

பிரதம ஆசிரியருக்கு வாரினா என்ன விட்டா என்ன.. ஏன்னா போல்ட் மண்டை..! :):wub:

பிரதம ஆசிரியருக்கு வாரினா என்ன விட்டா என்ன.. ஏன்னா போல்ட் மண்டை..! :wub::lol:

ஆஹா! நாம் சொன்னது தலையை வாரி விடுவது இல்லை! காலை வாரி விடுவது! :wub:

போல்ட் மண்டை தானே இப்போது பேபிகளுக்கு மிகவும் பிடிக்கிறது! கவலை

வேண்டாம் :lol:

Edited by vettri-vel

உங்களுக்கு நகைச்சுவை, நையாண்டி, கிண்டல் போன்றவைகள் என்ன என்று சரியாகத் தெரியவில்லை என்று நினைக்கின்றேன்.

நீங்கள் "ஒரு பேப்பரை" கிண்டல் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. "ஒரு பேப்பர்" செய்யாத நையாண்டியா? நீங்களும் தாராளமாக செய்யுங்கள்.

இங்கே உள்ள கள உறவுகளை நையாண்டி செய்வதும் தவறு இல்லை. நான் எத்தனையோ பேரை கிண்டல் அடித்திருக்கிறேன். அதே போன்று என்னைப் பற்றிய கிண்டல்களும் வருவது இயல்பானது. வஞ்சகம் இல்லாமல் எல்லோரையும் கிண்டல் அடித்திருக்கிறீர்கள். படித்து ரசிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அனால் ஒரு பெண் இந்த சமூகத்தால் சித்தரவதை செய்யப்பட்ட போது, கதறிய கதறலை கிண்டல் செய்திருக்கிறீர்களே! அங்கேதான் உங்களுடைய வக்கிரபுத்தி வெளிப்படுகின்றது.

சாத்திரியும் இச் சம்பவத்தை வைத்து நகைச்சுவையாக எழுதியிருந்தார். அதில் அவருடைய நையாண்டி சமூகத்தை நோக்கியதாக இருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கியதாக இருக்கவில்லை.

ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுடைய மதச் சம்பிரதாயத்தை கிண்டல் அடித்துவிட்டார்கள் என்பதற்காக இரக்கமே இன்றி ஒரு பெண்ணின் அழுகையை கிண்டல் செய்கின்றீர்கள்.

உங்களுடைய மதவெறியை நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளீர்கள். நல்லது! தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ நான் கழட்டமாட்டன் எண்டு கத்தினது நான்தான். அதைஉருவினது முனியம்மா. என்ன இருந்தாலும் ஜம்மு இதை வெளியிலை சொல்லியிருக்கக்கூடாது :lol::wub:

ஹய் சாத்து

முனிம்மா உம்மட்டை முழுசா உருவேக்க முனிம்மாவின் சகோதரியுமல்லோ சேர்ந்து உருவியதாக ஜம்மு எழுதியிருக்கு. :wub::lol:

:lol: அட குடுத்து வைச்ச ஆளப்பு நீர். அது தான் உருவியதைச் சொல்லுறன். :wub:

எல்லாரும் உங்கட உங்கட கோவங்கள ஆக்களுக்கு முன்னால கழற்றாமல் இருக்கிறது எப்பவும் நல்ல விசயம். இது நாகரிகம் இல்லை எண்டுறதுக்காக சொல்ல இல்ல. நீங்கள் உங்கட கோவணங்கள கழற்ற பிறகு நாற்றம் தாங்கமுடியாமல் ஒவ்வொரு நாளும் குளிச்சு சுத்தம் சுகாதாரமா இருக்கிற அப்பாவிச் சனம் மயங்கி விழுந்துபோடுங்கள். பிறகு பூச்சி மருந்து அடிக்கிறதுக்கு 911 வேற வரவேணும். இதவிட இதால கொஞ்ச காலத்துக்கு முன்னம் சீனாவில சாஸ் எண்டு ஒரு வியாதி வந்தமாதிரி ஏதாவது தொற்று வியாதிகள் வரவும் வாய்ப்பு இருக்கிது. சோ கீப் யுவர் கோவணம் அட் ட சேப் சீக்கிரட் பிளேஸ்! டோண்ட் சோ இட் இன் புரண்ட் ஒவ்ப் ட பப்ளிக்

கழட்டி கழட்டி என்னத்தைக் கண்டது? தற்சேலாய் வாந்தி கீந்தி வந்தா.. அதையும் இஞ்சை வந்து எடுத்துப் போடுங்கோ.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா! நாம் சொன்னது தலையை வாரி விடுவது இல்லை! காலை வாரி விடுவது! :(

போல்ட் மண்டை தானே இப்போது பேபிகளுக்கு மிகவும் பிடிக்கிறது! கவலை

வேண்டாம் :(

காலையா.. அங்கும் மயிரில்லையே வார. நம்ம பேராண்டி தானே.. பேராண்டியப் பற்றி தெரியாதா என்ன...! :(:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நன்றி ஜம்மு பேபி இருபேப்பரில எனக்கும் பதவி தந்ததிற்கு இது உங்களிற்கே ரொம்ப ஒவரா தெரியவில்லை :lol:

ஜம்மு பேபியின் நகைச்சுவை நல்லா இருக்கு.

பாதிக்கப்பட்ட பெண்ணைப்ப்ற்றி எழுதினால், அவவுக்கு ஒன்றும் நல்லது நடக்கப்போவதில்லை. இனிமேலும் தமிழ் உறவுகள் பாதிக்கப்படாதிருக்கவேண்டும

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபியின் நகைச்சுவை நல்லா இருக்கு.

பாதிக்கப்பட்ட பெண்ணைப்ப்ற்றி எழுதினால், அவவுக்கு ஒன்றும் நல்லது நடக்கப்போவதில்லை. இனிமேலும் தமிழ் உறவுகள் பாதிக்கப்படா திருக்கவேண்டும். அப்படிப் பார்க்கையில், ஜம்முவின் நகைச்சுவையுடன் சேர்ந்த சாட்டையடி தேவையனதுதான்.

எம்மவர்கள், சாத்திரம், சம்பிரதாயம் என்ற வட்டங்களுக்குள் நின்றுகொண்டு உறவுகளை நோகடிப்பது குறையவேண்டும்.

நிச்சயமா.. சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள்.. என்ற போர்வையில் மூடநம்பிக்கைகளை தொடரிறது தடுத்து நிறுத்தத்தான் படனும். ஆனால் தடுத்து நிறுத்திறம் என்று கிளம்பி ஒரு கூட்டம்.. தங்களைப் பற்றி விளம்பரம் பண்ணுறதும் தடுத்து நிறுத்தப்படனும்.

மனிதாபிமான ரீதியில் இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளானவையை அணுகி அவர்களுக்கு தேவையான தீர்வை நேரடியா எடுத்துக் கொடுக்கிறதோட.. சட்டரீதியா அணுகி மூடநம்பிக்கைகளைத் தொடர்வதை தடுத்து நிறுத்தனும்.

அதைவிட்டிட்டு.. ஒரு பேப்பரில.. இதையே வைச்சு.. பெண்ணிலைவாதமும்.. தாலிய எதிர்ப்புவாதமும்.. இந்து மத துவேசியமும்.. பேசிறது யாருக்குத் தேவை. இவை பாதிக்கப்பட்ட வருக்கு ஏதாச்சு செய்யுமா..??! எதிர்காலத்தில் மூடநம்பிக்கைகளின் வழி சம்பவங்கள் நடக்காதிருப்பத்தை தடுக்குமா..??!

தமிழர்களின் வீர விளையாட்டு என்று சொல்லி காளைகளுக்கு வெறியூட்டி.. மனிதர்களை அவற்றினோடு மோதவிட்டு கொல்லுறது.. காயப்படுத்திறது.. நடக்குது..! இன்று இந்திய உச்ச நீதிமன்றம் அதற்குத் தடை விதித்திருக்கிறது..! இதற்கான தடையைப் பெற்றுக் கொடுத்தவங்களை யாருக்கும் தெரியாது. சட்ட ரீதியாப் போய் நியாயத்தை எடுத்துச் சொல்ல வேண்டிய இடத்தில சொல்லி தடை பெற்றாயிற்று..!

http://thatstamil.oneindia.in/news/2008/01...jallikattu.html

இத்தடையால் பல மனித உயிர்கள் சேதப்படுவதில் இருந்து காக்கப்பட்டுள்ளன. விலங்குகளை துன்புறுத்துவது தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இதையே பத்திரிகைகளில் எழுதினா என்னாகும்.. தமிழரின் வீரத்தை அதன் பாரம்பரியத்தை அடக்கினம்.. புடுங்கினம்.. என்று மறுவாதம் எழுந்து அது வருசக் கணக்கா தொடர இதை வைச்சு தங்களை விளம்பரப்படுத்தி..அரசியல் கட்சி அமைச்சு ஆட்சியும் நடத்திடுவினம்..! இந்த நிலைகளும் களையப்பட வேணும். இவை மூடநம்பிக்கைகளை விட மோசமானவை..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனால் ஒரு பெண் இந்த சமூகத்தால் சித்தரவதை செய்யப்பட்ட போது, கதறிய கதறலை கிண்டல் செய்திருக்கிறீர்களே! அங்கேதான் உங்களுடைய வக்கிரபுத்தி வெளிப்படுகின்றது.

ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுடைய மதச் சம்பிரதாயத்தை கிண்டல் அடித்துவிட்டார்கள் என்பதற்காக இரக்கமே இன்றி ஒரு பெண்ணின் அழுகையை கிண்டல் செய்கின்றீர்கள்

இவ்வளவு பகுத்தறிவுள்ள நீங்கள் பல இடங்களில் நன்றாக அவதானித்து கருத்து எழுதியிருக்க வேண்டும்.

அதுவும் உங்களுக்கு எப்படி புதிதாக ஒரு ஞானோதயம் பிறந்து விட்டது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.