Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொட்டு அம்மான் நோய்வாய்ப்பட்டுள்ளார்! பிரபாகரன் குறித்த வதந்தி பொய்யானது!!

Featured Replies

பொட்டு அம்மான் நோய்வாய்ப்பட்டுள்ளார்!

பிரபாகரன் குறித்த வதந்தி பொய்யானது!!

கடந்த 13ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் , கிளிநொச்சி மருத்துவ மனையில் வைத்து சத்திர சிகிச்சைக்கு உட்படத்தப்பட்டதன் பின்னர் பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளாதாகவும், அவர் தற்போது வழமையான நிலைக்கு திரும்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

தவிரவும் விமானக் குண்டு தாக்குதலினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கால் ஒன்றை இழந்துள்ளார் என சிறீலங்காவின் சில ஊடகங்கள் மற்றும் சிறீலங்கா அரசு பரப்பிய வதந்தி முற்றிலும் பொய்யானது என்றும் தெரிய வந்துள்ளது.

http://www.ajeevan.ch/content/view/299/1/

  • Replies 70
  • Views 11.6k
  • Created
  • Last Reply

அஜீவன் நல்லா செய்யிறியள் :lol:

:lol:

நாங்களும் இனி செய்தி களமொன்றை தொடங்கி.... நாங்களே செய்தியையும் இயற்றி பிரசுரிச்சா என்ன எண்டு யோசிக்குறன்.

  • கருத்துக்கள உறவுகள்

கயிறு விட மேலும் சிலர் யாழில். வாழ்க உங்கள் தொண்டு.வளர்க உங்கள் பணி(னி). :lol::D

பொட்டு அம்மான் நோய்வாய்ப்பட்டுள்ளார்!

பிரபாகரன் குறித்த வதந்தி பொய்யானது!!

கடந்த 13ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் , கிளிநொச்சி மருத்துவ மனையில் வைத்து சத்திர சிகிச்சைக்கு உட்படத்தப்பட்டதன் பின்னர் பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளாதாகவும், அவர் தற்போது வழமையான நிலைக்கு திரும்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

தவிரவும் விமானக் குண்டு தாக்குதலினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கால் ஒன்றை இழந்துள்ளார் என சிறீலங்காவின் சில ஊடகங்கள் மற்றும் சிறீலங்கா அரசு பரப்பிய வதந்தி முற்றிலும் பொய்யானது என்றும் தெரிய வந்துள்ளது.

http://www.ajeevan.ch/content/view/299/1/

அஜீவன் அண்ணா

இப்படியான செய்திகளை நேரடியாக மொழிபெயர்ப்புச் செய்யாது செய்தியை பெற்ற ஊடகத்தின் பெயரையோ அல்லது கொழும்பு ஆங்கில ஊடகம், சிங்கள ஊடகம் என்றோ மேற்கோள் காட்டி செய்தி எழுதுங்கள்.

எந்தவித ஆதரமுமில்லாத இவ்வாறான செய்திகளை நேரடியாக மொழிபெயர்ப்பு உங்களின் தளத்தில் போடுவது உங்களின் சொந்தச் செய்தியாகவே அமையும். அந்த செய்திக்குப் பொறுப்பானவர் நீங்களே! என்றே அமையும். இது நீங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புகிறீர்கள் என்ற நிலையை உருவாக்கும்.

அஜீவன் நல்லா செய்யிறியள்

இப்படிக்கு

புலம்பெயர் மந்தைகள் சங்கம் :lol:

  • தொடங்கியவர்

அஜீவன் அண்ணா

இப்படியான செய்திகளை நேரடியாக மொழிபெயர்ப்புச் செய்யாது செய்தியை பெற்ற ஊடகத்தின் பெயரையோ அல்லது கொழும்பு ஆங்கில ஊடகம், சிங்கள ஊடகம் என்றோ மேற்கோள் காட்டி செய்தி எழுதுங்கள்.

எந்தவித ஆதரமுமில்லாத இவ்வாறான செய்திகளை நேரடியாக மொழிபெயர்ப்பு உங்களின் தளத்தில் போடுவது உங்களின் சொந்தச் செய்தியாகவே அமையும். அந்த செய்திக்குப் பொறுப்பானவர் நீங்களே! என்றே அமையும். இது நீங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புகிறீர்கள் என்ற நிலையை உருவாக்கும்.

நன்றி மின்னல்.

இதே செய்தியை

அங்கு செய்திக்கு கொடுப்பவர்களே எமக்கு அனுப்பும் போது

இங்கே இணைக்க வேண்டியுள்ளது.

பலதை தவிர்க்கிறோம்

அவற்றை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

உதாரணமாக

ரொய்ட்டர் போன்ற செய்தி நிறுவனங்கள் ஒரே செய்தியை உலகம் முழுவதும் அனுப்புகிறது.

அவற்றை தொலைக் காட்சிகள் - வானோலிகள் மற்றும் செய்திதத்தாள்கள் கொண்டு வருகின்றன.

அனைத்துக்கும் ரொய்டர் என்று போடுவதோ சொல்வதோ இல்லை.

அதற்கு காரணம்

அவர்களிடமிருந்து பணம் கொடுத்து வாங்குகிறார்கள்.

இங்கும் பணம் கொடுத்து வாங்கப்படும் போது

அதை வெளியிடும் விதம் வேறு............

நீங்கள் எங்கே இருந்து எடுத்தீர்கள் என்ற கேள்வியை

நாம் , அனைத்து ஊடகங்களிடமும் கேட்டால்

வரும் பதில் என்னவாகும்?

..................

அண்மையில் எனக்கு வந்த கேள்வி இது:-

அன்பின் அஜீவன்

பிரபாகரனின் கால் ஒன்று கழட்டப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி ஏற்பட்டுள்ளது. அது உண்மையா அல்லது பொய்யா என்று விசாரித்துப்பார்க்கவும்.இத்

Edited by AJeevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றைய தினம்(22.02.2008) ஒன்பது பாகையிலை ஒளிபரப்பாகிற தொலைகாட்சி ஒன்றில் இந்த செய்தி முக்கிய செய்தியாக வாந்தியெடுக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா உங்களைநான் நம்பிகின்றேன் ஏன்னென்றாள் உங்களின்நெட்வேற்க் சரியான இடத்திள்இருந்து பெறப்படுகின்றது. அதை நீங்கள்வெளிப்படுத்தமுடியாத

  • தொடங்கியவர்

அஜீவன் அண்ணா உங்களைநான் நம்பிகின்றேன் ஏன்னென்றாள் உங்களின்நெட்வேற்க் சரியான இடத்திள்இருந்து பெறப்படுகின்றது. அதை நீங்கள்வெளிப்படுத்தமுடியாத நிலையிள் இருக்கின்றீர்கள் வெளிப்படுத்தவும் வேன்டாம். காரனம் இராணுவத்தின் உழவுதுறைக்கு கிடைத்துவிடும்.அதனாள் சில செய்திகளிற்கு ஆதாரம்கொடுக்கவேன்டாம்;.நன்றி

. (மன்னாரிலே ஒருடோரவும்7இராணுவத்தினரும் காணாமளல் போன செய்தி உங்களிற்குத்தான் முதலில் கிடைத்ததை நான் அறிவேன். உங்களிற்க்கு உடனுக்குடன் செய்தி வருவதை.)

நன்றி வசந்தன்.

ஓம் , அன்று எல்லா இடமும் தேடினோம் கிடைக்கவில்லை

எங்கிருந்து கிடைத்தது என்று அன்று யாரோ கேட்டது

ஞாபகத்துக்கு வருகிறது? :lol:

அதை நம்ப சில நாள் ஆனது?

உண்மையென்றால் நிச்சயம் தேவை கருதி வரும்.

இதனால் பாதிப்பாகும் என்றால் அது தவிர்க்கப்படும்.

இன்னொரு சேதி

"பிரபாகரனின் மகன்

வடக்கு கிழக்கை விரைவில் ஆளப் போகிறார்." என்று

இலங்கையின் எதிர்காலம் குறித்து சிங்களவர் (தீர்க்கதரிசி) ஒருவர் சொல்லி

இருப்பதாக சிங்கள நண்பர்கள் சொன்னார்கள்.

தீர்வு கிடைக்க வெகு காலம் போகாது போல என்றேன்!

பொய்யாக நடிப்பதை விட உண்மையாக வாழ்வது மேல்!

நன்றி!

Edited by AJeevan

:lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

பனங்காய் என்னராசா? என்னணை நடந்தது? :D

சிங்களவன், வட இந்தியன் நிருபராக செய்தி கொடுக்கும் ஆங்கில தளங்களிலை இருந்து கொண்டு வந்து செய்தியளை யாழிலை ஒட்டினா யாருமே கேள்வி கேக்கிறது இல்லை...

டமிலன் சுயமா எதுவுமே செய்திட கூடாது... என்ன கொடுமை சார் இது...

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் உங்கள் நோக்கத்தில் சரியாகவும் சிந்தனையில்தெளிவும் செயலில் வேகமும் எடுத்த காரியத்தில் சுயநலம் இல்லாதவரை யாருக்கும் பயப்படத்தேவையோ பணிந்து போக வேண்டிய அவசியமோ இல்லை அதை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் உங்கள் பணியை தொடருங்கள்:

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன், இங்கு ஒரு சிலரின் ஆதங்கம், பொட்டு அம்மான் நோய்வாய்ப்பட்டு சுகமடைந்தார் என்று நீங்கள் போட்ட செய்தியல்ல, மாறாக பிரபாகரன் காலிழந்து விட்டார் எண்டு அவர்கள் நம்பிக்கொண்டிருந்த செய்தியை நீங்கள் பொய் எண்டு சொல்லியதுதான் என்று நினைக்கிறேன். இவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் சரியானதைச் செய்யுங்கள்.

  • தொடங்கியவர்

சிலர் உண்மைக்கு புறம்பாக நடப்பவர்கள்.

எது சரியோ அது வரும்.........

நன்றி!

Edited by AJeevan

பொட்டுஅம்மான் அவர்களிற்கு இதயப்பாதிப்பு என்பதையே ஆதாரமில்லாத செய்தி என்று குறிப்பிட்டேன். இதயப்பாதிப்பிற்குள்ளாகாத ஒருவர் அதிலிருந்து தேறிவருகிறார் என்று செய்தியைப் போடும்போது அவருக்கு உண்மையிலேயே பாதிப்பு ஏற்பட்டது உண்மை என்ற எண்ணம் ஏற்படாதா? அரச தரப்பின் தலைவர் மீதான தாக்குதல், காயம் போன்ற பொய் பரப்புரைகளையும் சிங்கள ஊடகச் செய்திகளையும் உடனடியாகவே நாம் நிராகரிக்கிறோம். ஆனால் உங்களைப் போன்றவர்களின் இப்படியான செய்திகளை வெளியிடும்போது உண்மையிலேயே பொட்டு அம்மானிற்கு இதயப்பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்ற எண்ணம் உங்களை நம்புவர்களிடம் வந்துவிடும். (எனது கருத்திற்குப் பின்னர் உங்களிற்கு ஆதரவான பல கருத்துக்கள் வந்துள்ளன. எனவே அவர்கள் பொட்டு அம்மானிற்கு இதயப்பாதிப்பு ஏற்பட்டது உண்மை என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும்)

உங்களது செய்திகளால் அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காகவே மேற்கோள் காட்டுமாறு கூறினேன். யாழில் உங்களின் செய்தியைப் படிக்கு முன்னர் லங்கா ஈ நியூஸில் அந்தச் செய்தியைப் படித்திருந்தேன். லங்கா ஈ நியூசிலிருந்து செய்தியை மொழிபெயர்ப்பு செய்தீர்களோ என்ற எண்ணத்தில்தான் மொழிபெயர்ப்பு என்ற சொல்லையே பயன்படுத்தியிருந்தேன்.

அண்ணா ரொய்ட்டர் என்பது முகவர் செய்தி நிறுவனம். அவர்களின் முதன்மை வேலையே செய்தியை பெற்று ஊடகங்களிற்கு வழங்குவது. அவற்றை ஊடகங்கள் எடுத்து தமது செய்திபோலப் போடுகின்றன. அது பிரச்சினையல்ல.

எடுத்துக்காட்டிற்கு கொழும்பில் குண்டு வெடிக்கிறது. அக்குண்டு வெடிப்பிற்கு புலிகளே காரணம் என்று அரசினால் சொல்லப்படுகிறதென்று வையுங்கள் அது தொடர்பாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டால். செய்தியில் குண்டு வெடிப்பிற்கு காரணம் புலிகள் என்று செய்தியில் குறிப்பிடப்படாது மாறாக குண்டு வெடிப்பிற்கு காரணம் புலிகளென அரச தரப்பினால் சொல்லப்படுகிறது என்றே எழுதுவார்கள். அப்படி உங்களின் செய்தியில் இருக்கவில்லை.

யாழில் நீங்கள் பதிவு செய்த செய்தியில் "பொட்டு அம்மான் நோய்வாய்பட்டுள்ளார் " என்று இருக்கிறது. இப்படி எழுதுவது சரியல்ல. அடிப்படையற்ற செய்திகளை உறுதிப்படுத்தியது போன்று எழுதும்போது பொறுப்பேற்க வேண்டியது நீங்களாவீர்கள் என்றே எழுதினேன். எதிரி செய்யும் பரப்புரை போன்று உங்களின் செய்தியும் அமைந்து விடக்கூடாது என்பதற்காகவே மேற்கோள் காட்டுமாறு கூறியிருந்தேன்.

(உங்கள் இணையத்தளச் செய்தியில் உடல்நலம் குன்றி தேறிவருகிறார் என்று இருக்கிறது. தேறிவருகிறார் என்று மகிழ்ச்சிப்பட்டால் நோய்வாய்பட்டிருக்கிறார் என்றால் கவலையும் ஏற்படும். செய்தியில் சொல்லப்பட்டிருப்பது காய்ச்சலல்ல மாரடைப்பு)

potturh5.jpg

அஜீவன் அண்ணையின் செய்தியில் கடந்த13ம் நாள் உடல்நலம் குன்றி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இங்கேயுள்ள படம் இம்மாதம் 18ம் நாள் லெப்.கேணல் தவம் மற்றும் மேஜர் புகழ்மாறன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வின்போது எடுக்கப்பட்டது.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல செய்தி.

அடுத்த முறை கிளிநொச்சி மருத்துவமனை மீது குண்டுபோடும்வேளை உதவியாக இருக்கும்.

இதையும் அந்த "சிங்கள நண்பர்" சொல்லித்தான் போட்டநீங்களோ?

Edited by பண்டிதர்

பொட்டுஅம்மான் அவர்களிற்கு இதயப்பாதிப்பு என்பதையே ஆதாரமில்லாத செய்தி என்று குறிப்பிட்டேன். இதயப்பாதிப்பிற்குள்ளாகாத ஒருவர் அதிலிருந்து தேறிவருகிறார் என்று செய்தியைப் போடும்போது அவருக்கு உண்மையிலேயே பாதிப்பு ஏற்பட்டது உண்மை என்ற எண்ணம் ஏற்படாதா? அரச தரப்பின் தலைவர் மீதான தாக்குதல், காயம் போன்ற பொய் பரப்புரைகளையும் சிங்கள ஊடகச் செய்திகளையும் உடனடியாகவே நாம் நிராகரிக்கிறோம். ஆனால் உங்களைப் போன்றவர்களின் இப்படியான செய்திகளை வெளியிடும்போது உண்மையிலேயே பொட்டு அம்மானிற்கு இதயப்பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்ற எண்ணம் உங்களை நம்புவர்களிடம் வந்துவிடும். (எனது கருத்திற்குப் பின்னர் உங்களிற்கு ஆதரவான பல கருத்துக்கள் வந்துள்ளன. எனவே அவர்கள் பொட்டு அம்மானிற்கு இதயப்பாதிப்பு ஏற்பட்டது உண்மை என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும்)

எடுத்துக்காட்டிற்கு கொழும்பில் குண்டு வெடிக்கிறது. அக்குண்டு வெடிப்பிற்கு புலிகளே காரணம் என்று அரசினால் சொல்லப்படுகிறதென்று வையுங்கள் அது தொடர்பாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டால். செய்தியில் குண்டு வெடிப்பிற்கு காரணம் புலிகள் என்று செய்தியில் குறிப்பிடப்படாது மாறாக குண்டு வெடிப்பிற்கு காரணம் புலிகளென அரச தரப்பினால் சொல்லப்படுகிறது என்றே எழுதுவார்கள். அப்படி உங்களின் செய்தியில் இருக்கவில்லை. பொட்டு அம்மானுக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு தேறி வருகிறார்!" என்றே இருக்கிறது. அதுவே சரியல்ல என்றுறு சொன்னேன். (தேறிவருகிறார் என்று மகிழ்ச்சிப்பட்டால் நோய்வாய்பட்டிருக்கிறார் என்றால் கவலையும் ஏற்படும். செய்தியில் சொல்லப்பட்டிருப்பது காய்ச்சலல்ல மாரடைப்பு)

potturh5.jpg

அஜீவன் அண்ணையின் செய்தியில் கடந்த13ம் நாள் உடல்நலம் குன்றி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இங்கேயுள்ள படம் இம்மாதம் 18ம் நாள் லெப்.கேணல் தவம் மற்றும் மேஜர் புகழ்மாறன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வின்போது எடுக்கப்பட்டது.

மின்னல் நீங்கள் சொல்வது மிகச்சரி. இதுவே எனது நிலைப்பாடும்! "இதய நோய்வாய்ப்பட்டார்" என்று ஆணித்தரமாக கூறாது - "சில சிறீலங்கா செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன" என்று எழுதி இருக்கலாம்.

களத்தில் நிற்கும் போராளிகளை மனச்சோர்வடையச் செய்யும் தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவதற்காக சிறீலங்கா அரச புலனாய்வுத்துறை செய்யும் ஏமாற்று வேலைகளுக்கு துணை போகாமல் இருப்போமாக!

அஜீவன் உங்களை அது போன்றவர்கள் யாரும் பயன்படுத்தி விடாமல் சற்று கவனமாக செயற்படுங்கள். நன்றி!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் உங்கள் நோக்கத்தில் சரியாகவும் சிந்தனையில்தெளிவும் செயலில் வேகமும் எடுத்த காரியத்தில் சுயநலம் இல்லாதவரை யாருக்கும் பயப்படத்தேவையோ பணிந்து போக வேண்டிய அவசியமோ இல்லை அதை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் உங்கள் பணியை தொடருங்கள்:

சாத்திரிக்கு ஒரு கதை.

எனக்கு எப்பவும் சோதினை எண்டால் பயம். பயந்து பயந்து எழுதிப்பொட்டு வந்து அட அதைப் பிழை விட்டு விட்டேனே என்று அங்கலாய்த்து சரி நான் பெயில்தான் என்றூ சொல்லி தலையில அடிப்பது வழக்கம் (கடவுள் புண்ணியத்தில் முடிவு அவ்வளவு தூரம் ஒருக்காலும் போறதில்லை)

எனக்கு சில நண்பர்கள். அனேகமாக ஒரு அரை மாக்சை விட்டிட்டன் போல கிடக்கு என்று சொல்லி எனக்கு பேதி அடிப்பார்கள். கடையில் பார்த்தால் அவர்கள் பெரும் கோட்டை விட்டிருப்பார்கள்.

ஒரு போராட்டத்தை நடத்தும் தளபதிக்கும் கூட சிலநேரம் பரீட்சை எழுதுவதுபோல சோதனையன நேரம் வரலாம். மிகவும் நிதானமாக முடிவை எடுத்து விட்டு அதுசரி என்று 100வீதம் தெரியும் வரை மனதுக்குள் தவித்தபடி இருப்பார்கள். அந்ந லட்சணத்தில் நாங்கள் கிழிக்கிறமாக்கும் என்று விசப்பலகையில் கதையளக்கிறவர்களுக்கு நீங்கள் வேற வக்காலாத்தா?

உண்மைகளை வெளியிடும் போது பலருக்கு கோபம் வரலாம்.

ஒருவர் நோய் வாய்ப்படுவது இயல்பானது.

இது ஒன்றும் பெரிய விடயமேயில்லை.

தேவையானதை மறைக்கலாம்

மனிதனுக்கு சுகவீனமே ஏற்படாதா?

இதென்னப்பா கொடுமை!

சுகயீனமாக இருந்து வழமைக்கு வந்து விட்டதாக செய்தி இருக்கே

பின்னர் என்ன?

எதுவும் நன்மைக்கே!

(எமக்கு) எதுவும் நன்மைக்கே என்பதைவிட இதுவ எதிரியின் பரப்புரைக்கு நன்மைக்கே என்று சொல்லலாம்.

ஒருவருக்கு நோய் ஏற்படுவது ஏற்படாதா என்பதல்ல பிரச்சினை பொட்டு அம்மான் நோய்வாய்பட்டுள்ளார் என்ற உங்களின் செய்திக்கு அடிப்படையில்லை. அடிப்படையில்லாத செய்தியை நீங்கள் வெளியிட்டுவிட்டு உண்மையைச் சொன்னால் மற்றவர்களிற்குக் கோபம் வரும் எண்டு தத்துவமெல்லாம் சொல்லுறது நல்லாயிருக்கு

சுகயீனமாக இருந்து வழமைக்கு வந்துவிட்டதாக உங்கள் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கலாம். உங்கள் செய்திப்படி அவர் வழமைக்கு வந்தது காய்ச்சல் குணமாகியல்ல இதயப்பாதிப்பு(மாரடைப்பு) குணமாகி.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரின் பாணி DBS போன்றது. சாதகமாக எழுதுவது போல் எழுதி அங்கங்கு ஊசி குத்துமாற் போல் குத்தி மக்களின் போராட்டத்தின் மீதான நம்பிக்கையை தளரச் செய்வது.

துரோக கும்பல்களை கூட ஒட்டுக்குழுக்கள் என்று அழைக்காது மரியாதையாக அழைக்க வேண்டும் என்றவராச்சே.

இவர்களை இனங்காண முடியாமல் இங்கும் பலர் அண்ணா என்று வக்காலத்து வேறு வாங்குகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள நிர்வாகம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணமிது. ஆதரமில்லாமல் எதையும் எழுதவும், எதிரிகளின் துரோகிகளின் பரப்புரைகளை விதைக்கவும் இனிமேலும் யாழ் களத்தில் இடம் கொடுக்கக் கூடாது.

யாரையும் விழித்துக்கொள்ளச் சொல்வதற்கு நம்மால் முடியாது. இவைகளெல்லாம் இங்கு அனுமதிக்கப்படுகிறது. போராட்டத்தின்பால் பற்றும் நம்பிக்கையும் கொண்டவர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்தப்பகுதியில் செய்திகளை அலசி உண்மை கண்டறியப்படுவது சிறப்பாகவே நடைபெற்றுள்ளது. இருவர் தவிர்ந்த அனைவரின் கருத்துக்கள் ஆதாரமான உண்மைகளை முன்வைத்து விளக்கியுள்ளார்கள். அதுவே நமது விழிப்புணர்வை தக்கவைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.