Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொட்டு அம்மான் நோய்வாய்ப்பட்டுள்ளார்! பிரபாகரன் குறித்த வதந்தி பொய்யானது!!

Featured Replies

அஜீவன் யாழ் என்ற கிணற்றுக்குள் மழைத்துளியாக உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்!

பாவம் தவளைகள் என்ன செய்யும்!

  • Replies 70
  • Views 11.6k
  • Created
  • Last Reply

"பொட்டு அம்மான் நோய்வாய்ப்பட்டுள்ளார்! பிரபாகரன் குறித்த வதந்தி பொய்யானது!!"

தலைப்பே அதுதானே. வதந்தி பொய்யானது. வதந்தி எப்படிப் பொய்யாகும்? :unsure::rolleyes:

பறாவாய் இல்லை நல்லா தான் குத்துறிங்கள் :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மின்னல்.

இதே செய்தியை

அங்கு செய்திக்கு கொடுப்பவர்களே எமக்கு அனுப்பும் போது

இங்கே இணைக்க வேண்டியுள்ளது.

பலதை தவிர்க்கிறோம்

அவற்றை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

உதாரணமாக

ரொய்ட்டர் போன்ற செய்தி நிறுவனங்கள் ஒரே செய்தியை உலகம் முழுவதும் அனுப்புகிறது.

அவற்றை தொலைக் காட்சிகள் - வானோலிகள் மற்றும் செய்திதத்தாள்கள் கொண்டு வருகின்றன.

அனைத்துக்கும் ரொய்டர் என்று போடுவதோ சொல்வதோ இல்லை.

அதற்கு காரணம்

அவர்களிடமிருந்து பணம் கொடுத்து வாங்குகிறார்கள்.

இங்கும் பணம் கொடுத்து வாங்கப்படும் போது

அதை வெளியிடும் விதம் வேறு............

நீங்கள் எங்கே இருந்து எடுத்தீர்கள் என்ற கேள்வியை

நாம் , அனைத்து ஊடகங்களிடமும் கேட்டால்

வரும் பதில் என்னவாகும்?

..................

அண்மையில் எனக்கு வந்த கேள்வி இது:-

அவருக்கு எனது பதில் இது:

வதந்திகள் யுத்த காலத்தில் உலவும்.

சுகயீனம் அல்லது சிறு காயம் கூட ஏற்பட்டிருக்கலாம்.

வெங்காயம் வெட்டும் போது

விரல் வெட்டுப்படுவதே இயல்பு என்றால்

யுத்த களத்தில் காயப்படுவது பெரிய விடயமே இல்லை?

பிரபாகரன் ஒன்றும் சினமா ஸ்டார் இல்லை.

அவர் தளத்தில் நேரடியாக போராடும் ஒரு தலைவர்.

அவருடைய பலம் , எதிரிகளுக்கே அது தெரியும்!

இவர்கள் சொல்வது போல இல்லை என்றே சிங்கள ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள்.

நன்றி!

அன்புடன்

அஜீவன்

உண்மைகளை வெளியிடும் போது பலருக்கு கோபம் வரலாம்.

ஒருவர் நோய் வாய்ப்படுவது இயல்பானது.

இது ஒன்றும் பெரிய விடயமேயில்லை.

தேவையானதை மறைக்கலாம்

மனிதனுக்கு சுகவீனமே ஏற்படாதா?

இதென்னப்பா கொடுமை!

சுகயீனமாக இருந்து வழமைக்கு வந்து விட்டதாக செய்தி இருக்கே

பின்னர் என்ன?

எதுவும் நன்மைக்கே!

அரச ஊடகங்களின் செய்திதயாரிப்புக்கு உண்மை மருந்துக்கும் சேர்க்கப்படுவதில்லை என்பது உலகம் அறிந்த உண்மை இதனால்தான் தமிழர்தரப்பு இதையிட்டு அலட்டிக்கொள்வதே இல்லை,

எனவே யதார்த்தம் பதார்த்தம் என்று சொல்லி இவற்றுக்கு விவரணம் செய்வது அரச ஊடகங்களுக்கு முட்டுகொடுப்பது போல் ஆகுமே அன்றி வேறொன்றும் இல்லை!

முப்பது ஆண்டுகளாக அரசபடைகளால் வெற்றிகொள்ளப்பட முடியாத பலம் புலிகளிடம் இருக்கின்றது என்பது காலம் கண்ட உண்மை!

ஆனால் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் அதை கிள்ளி எறிந்துவிடும் வகைக்கு சிறுமைப்படுத்துவதும் காலம் காலமாக நாம் பார்த்துவருகின்ற பொய்மைகள் ஏன் என்றால் வெல்லமுடியாது என்ற நிலமை உண்மையாகின்ற போது வெற்றி நடிப்புத்தான் ஆட்சியை தக்கவைக்கின்ற பிழைப்பு!

படைப்பின்னடைவுகளின் பாதிப்புக்களில் இருந்து ஆட்சியின் பிழைபைக் காப்பாற்ற ஊடகங்களில் தலையில் பொய்யை சுமப்பிக்கிறார்கள் நம்பகத்தன்மை செத்து முப்பது வருடப் பிணமாக இருக்கும் அரச ஊடகங்களின் செய்தி தலைப்புக்களுக்கு நாம் மூக்கைப் பொத்தி நாற்றத்தை தவிர்த்தால் மட்டும் போதுமானது.

பனங்காய் என்னராசா? என்னணை நடந்தது? :unsure:

பின்ன என்ன....... புடம் போடுகிறோம் பேர்வழிகள் எண்டு அடிப்புடிக்கவைக்கிறாங்கள்.

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இனி எங்கு புலிகள் தாக்க போகிறார்கள் என்ற செய்தியும் விரைவில் வரும் என எதிர்பார்போமாக யாழ் தவளைகளே. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் யாழ் என்ற கிணற்றுக்குள் மழைத்துளியாக உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்!

பாவம் தவளைகள் என்ன செய்யும்!

எத்தனை மழைதுளிகள் விழுந்தாலும் கிணற்று தவளைகளின் வாழ்க்கை கிணற்றுக்குள்தான்.

ஆனால் இந்த மழைதுளி அமில மழைதுளி. கிணற்றையே நச்சாக்கிவிடும்.

ஏற்கனவே ஒரு தொலைக்காட்சிக்கும் யாழில் விளம்பரம்

நல்லா போகுது....

நெருப்பு போன்ற தளங்களில் வரும் செய்திகளையும் யாழில் போடலாமே... :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒரு தொலைக்காட்சிக்கும் யாழில் விளம்பரம்

நல்லா போகுது....

நெருப்பு போன்ற தளங்களில் வரும் செய்திகளையும் யாழில் போடலாமே... :unsure::unsure:

தொலைக்காட்சிக்கா அது எது வசி :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் உங்கள் நோக்கத்தில் சரியாகவும் சிந்தனையில்தெளிவும் செயலில் வேகமும் எடுத்த காரியத்தில் சுயநலம் இல்லாதவரை யாருக்கும் பயப்படத்தேவையோ பணிந்து போக வேண்டிய அவசியமோ இல்லை அதை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் உங்கள் பணியை தொடருங்கள்:

சாத்திரியின் கருத்தை நானும் வழி மொழிகிறேன். யாழ்க் களத்தில் எழுத ஆரம்பித்தபோது என்மீது அக்கறையுள்ள உலகறிந்த விடுதலை ஆர்வலர்கள் சிலர் அது கண்மூடித்தனமானா கடும்போக்காளர்களது களம். எழுத வேண்டாம் என்று தடுத்தனர். அவர்கள் மூன்று காரணங்களைச் சொன்னார்கள். 1.புலம் பெயர் ஆர்வலர்களின் கடும்போக்கு இறுதியில் எதிரிக்கே சாதகமாக அமைக்கிறது. உதாரணம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்த குற்றச் சாட்டுகளை எதிரி பயன்படுத்தியது. 2. கடும்போக்கை நீங்களும் அங்கீகரிப்பதாக அமையும். 3. எவித பொறுப்பும் இல்லாது சேற்றை வாரி இறைப்பதையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு அனாவசியமாக முகம் கொடுக்க நேரும்.

யாழில்தான் எழுதித்தான் வெளிப்படவேண்டும் என்கிற அவசியம் ஒன்றும் எனக்கில்லை ஆனாலும் புலம் பெயர்ந்த எம்மவர்களோடு பேசாமல் இருக்கிறதும் கடும்போக்குத்தான் என்றும் அதைவிட அவர்களது கருத்துக்களுக்கு முகம் கொடுக்கிற ஜனநாயகமே அவசியமானது என்றும் நான் அவர்களுக்குச் சொன்னேன்.

யாழ்க்களம் இதுபற்றி சிந்திக்க வேண்டும் என்பதற்க்காகவே இதனை இங்கு எழுதுகிறேன். அஜீவன் தமிழ் ஆர்வம் உள்ள ஒரு ஊடகவியலாளர். யாழ்க்களத்தில் ஊடகவியலாளர்கள் எழுதலாம் என்றால் அஜீவன் எழுதுவது தொடர்பாக கருத்தாடலாமேஒளிய அஜீவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியாது.

விடுதலைக்கு கிஞ்சித்தும் உதவாத சுயநல அரஜகத்தால் புலம் பெயர்ந்த நாடுகளில் ஜெதேக்களை உருவாக்கும் போக்கு இனியும் வேண்டாம்.

Edited by poet

  • தொடங்கியவர்

சாத்திரியின் கருத்தை நானும் வழி மொழிகிறேன். யாழ்க் களத்தில் எழுத ஆரம்பித்தபோது என்மீது அக்கறையுள்ள உலகறிந்த விடுதலை ஆர்வலர்கள் சிலர் அது கண்மூடித்தனமானா கடும்போக்காளர்களது களம். எழுத வேண்டாம் என்று தடுத்தனர். அவர்கள் மூன்று காரணங்களைச் சொன்னார்கள். 1.புலம் பெயர் ஆர்வலர்களின் கடும்போக்கு இறுதியில் எதிரிக்கே சாதகமாக அமைக்கிறது. உதாரணம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்த குற்றச் சாட்டுகளை எதிரி பயன்படுத்தியது. 2. கடும்போக்கை நீங்களும் அங்கீகரிப்பதாக அமையும். 3. எவித பொறுப்பும் இல்லாது சேற்றை வாரி இறைப்பதையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு அனாவசியமாக முகம் கொடுக்க நேரும்.

யாழில்தான் எழுதித்தான் வெளிப்படவேண்டும் என்கிற அவசியம் ஒன்றும் எனக்கில்லை ஆனாலும் புலம் பெயர்ந்த எம்மவர்களோடு பேசாமல் இருக்கிறதும் கடும்போக்குத்தான் என்றும் அதைவிட அவர்களது கருத்துக்களுக்கு முகம் கொடுக்கிற ஜனநாயகமே அவசியமானது என்றும் நான் அவர்களுக்குச் சொன்னேன்.

யாழ்க்களம் இதுபற்றி சிந்திக்க வேண்டும் என்பதற்க்காகவே இதனை இங்கு எழுதுகிறேன். அஜீவன் தமிழ் ஆர்வம் உள்ள ஒரு ஊடகவியலாளர். யாழ்க்களத்தில் ஊடகவியலாளர்கள் எழுதலாம் என்றால் அஜீவன் எழுதுவது தொடர்பாக கருத்தாடலாமேஒளிய அஜீவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியாது.

விடுதலைக்கு கிஞ்சித்தும் உதவாத சுயநல அரஜகத்தால் புலம் பெயர்ந்த நாடுகளில் ஜெதேக்களை உருவாக்கும் போக்கு இனியும் வேண்டாம்.

நன்றி கவிஞரே

ஒரு சிலர் புலியாக இருப்போர்.

பலர் புலியாக வேசம் தாங்கி வருவோர்.

இங்கே ஒரு செய்திக்கா நடக்கும் நிலை கண்டால்

பிரபாகரன் அவர்களோ அல்லது பொட்டு அம்மான் அவர்களோ கூட

நம்மவர் புலம் பெயர் நாடுகளில்

செய்யும் கூத்துகளை நினைத்தால் நிச்சயம் வாய் விட்டு சிரிப்பார்கள். :o

அங்கிருந்து வந்தவர்களோடு பேசுகிறேன் பழகுகிறேன்.

அவர்களிடம் இருக்கும் தன்மைகள் என்னை வியக்க வைத்துள்ளன.

அவ்வளவு தெளிவானவர்கள்...........

அவர்களிடம் இருக்கும் தன்மைகளில்

இங்கே துளி கூட அதைக் காண முடியாது.

எனது விவாதங்களுக்கு கூட

அவர்களிடமிருந்து வரும் பதில் மகிழ்வானவை.

நம்பிக்கை கொடுப்பவை.

அவர்களால் உண்மை - வேசம் இவற்றை கணிப்பிட முடிகிறது.

இங்கே

நண்பனைக் கூட எதிரியாக்கும் கருத்துகள்

எல்லை மீறும்..........!

அதுவே புலம் பெயர் நாடுகளின் தமிழர் பிளவுக்கு காரணம்!

எனக்குத் தெரிந்து இப்படிக் கூக்குரல் போட்ட

ஏகப்பட்டவர்கள் இன்று எதிரிகளின் மடியில்.

கடந்த காலத்தில் இது போல

துள்ளிக் குதித்தவர்கள் பட்டியலை

எடுத்துப் பார்த்தால் அது குருடனுக்கு கூட தெரியும்?

அதே போல நினைத்து சிரிக்கத்தான் சொல்லும். :lol:

அனைத்து தமிழ் ஊடகங்களும் ஏதோ ஒரு விதத்தில்

இணைந்து கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

அதை அவரவர் செய்தி தளத்தில் இணைப்பதும்

இணைக்காமல் விடுவதும் அவரவர் பொறுப்பு.

எமது செய்தி தளத்தில் கூட புதினம் : சுடர் ஒளி செய்திகளை இன்றும் இணைத்து இருக்கிறேன்.

இவைஇவர்களோடு மட்டும் நின்று விடாது.

ஏனையவர்களோடும் தொடரும்.

எமக்கு தெரியாத ஒன்று உங்களுக்கு தெரிய வரும்.

உங்களுக்கு தெரியாத ஒன்று எமக்கு தெரிய வரும்.

பகிர்வதில் நட்பு மேலோங்கும்.

நம் பலம் அதனால் அதிகரிக்கும்.

எமது செய்தி தளத்தின் கரு தற்போது உருவாகி மட்டுமே உள்ளது.

அது இன்னும் பிறக்கவே இல்லை.

அதற்கு காலம் இருக்கிறது.

இது பரீட்சார்த்த முன்னோட்டம் மட்டுமே!

சுவிஸ் ஊடகங்களோடு பணி புரியும் போது பார்க்கும்

நிலை நம்மவரிடம் இல்லவே இல்லை.

வேற்று ஊடகமாக இருந்தாலும்

நண்பர்களாக சந்தித்துக் கொள்கிறார்கள்

பலதை பரிமாறிக் கொள்கிறார்கள்.

தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஒரு தேவைக்காக தொடர்பு கொண்டால்

இதோ தொலைபேசி இலக்கம்

தொடர்பு கொண்டு பேசு என்கிறார்கள்.

நம்மவர்

தரகர் வேலை பார்த்து உள்ளதையும் நாறடித்து விடுகிறார்கள்.

அது வேதனையான விடயம்!

ஒரு செய்திக்காக என்னை தடை செய்ய கோஸம் வேற?

அல்கோய்தா மாதிரி கத்தியோட நிக்கிறது மாதிரி

நினைத்து பார்த்து சிரிக்கத்தான் என்னால் முடிகிறது.

சும்மா சொால்லக் கூடாது

நல்ல இலவச விளம்பரம்.

நல்லாயிருக்கு என்றால் யாரும் பார்க்க மாட்டாங்கள்.

போட்ட ஒரு செய்திக்கு அஜீீவனை பின்னி எடுக்கிறாங்க என்றால்

கை தட்ட , விழுந்தவனை சாத்த ஒரு கூட்டம் நிரம்பி வரும்.

அது மாதிரி......... நல்ல feed back. :wub:

யார் சொன்னா

என்னை அண்ணா என்று அழைக்கச் சொல்லி

அடே என்றால் கூட

நான் பேசுவேன்.

அது என்னை அழைப்பதாக இருந்தால்...........!

நான் அப்படி சாதாரணமான ஒருவன்.

எதிர்கால சந்ததிகள் எம்மை பார்ர்த்து காறி உமிழும் நிலைக்கு

காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்கள் என்று சொல்லும் நிலைக்கு

தயவு செய்து யாரும் எமது எதிர்கால சமுதாயத்தை பேச வைக்காதீர்கள்.

உலகம் உருண்டை என்று சொன்ன

ஒருவனை கொன்று விட்டு

பின்னர் ஏற்றுக் கொண்டவர்கள் போன்ற

கலிலேயோ காலத்து மக்கள் இன்னும் இருக்கிறார்கள்? :wub:

எதிர்க்கும் அளவுக்கு பலமாவோரும் இருக்கிறார்கள்!

எதிர்க்கும் போது பின் வாங்குவோரும் இருக்கிறார்கள்!!

இதை எதிர்காலம் தீர்மானனிக்கும்............

நாளைய சமுதாயம் இன்றைய சிந்தனையின் பிரசவம். :lol:

கருத்துகளை முன் வைத்த அனைவருக்கும் நன்றி!

அய்யா!

யாழ் களத்தில யாரும் ஆய்வு கட்டுரை எழுதலாம், அதை யாரும் விமர்சிக்கலாம்... இதனால் பல சந்தேகங்களும் கலையலாம்...

ஆனாலும் செய்திகள் என்று வரும்போது சற்று அவதானமாக இருக்கவேண்டும், ஆதாரங்கள் இல்லாத செய்திகள் பூமறாங் மாதிரி எழுதியவைரையே தாக்கும்.

செய்திகள் எழுதினா இவ்வளவு எதிர்ப்பு வராது... ஆனாலும் செய்திகள் இயற்றியதா கருதப்படுமிடத்து எதிர்க்கருத்துக்கள் எழவே தோன்றும்... இதுகூட நல்லதுதான்...

என்ன சூறாவளி உங்களுக்கு தெரியாதா நாங்கள் எல்லாம் கடும்போக்காளார்கள் அதாவது குறுக்காலபோவான் மொழியில சொன்னா புலம்பெயர் மந்தைகள்; இப்படித்தான் எழுதுவம்.. :lol: மென்போக்காளார் போல பூசி மெழுகத் தெரியாதுங்கோ.

இப்படிக்கு

யாழ் கடும்போக்காளார் சங்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பின் அஜீவன்

தூற்றுபவர்கள் தூற்றட்டும் போற்றுபவர்கள் போற்றட்டும். நல்லதை காதில் போட்டுக்கொண்டு மற்றவைகளை தூக்கி கடாசிஎறிந்துவிட்டு தொடருங்கள் உங்கள் பணியை. மனம் தளரவேண்டாம்.

அன்புடன்

சங்கர்லால்

யாழ்க் களத்தில் எழுத ஆரம்பித்தபோது என்மீது அக்கறையுள்ள உலகறிந்த விடுதலை ஆர்வலர்கள் சிலர் அது கண்மூடித்தனமானா கடும்போக்காளர்களது களம். எழுத வேண்டாம் என்று தடுத்தனர்.

ஆஆ உடம்பெல்லாம் புல்லரிக்குது பொயட்..

யாழ் இவ்வளவு பிரபலமானதுக்கு காரணமே இந்த

கடும்போக்குத் தன்மைதான் என்று தெரியுது.

பூசி மெழுகத்தான் நிறைய தளம் இருக்கே பொயட்...

அவர்கள் தாராளமாக அங்கே எழுதலாமே.. இந்த

புலம்பெயர் மந்தைகள் தளத்தில்தான் எழுதனும் என்று

இல்லைதானே? :lol:

பொயட் நீங்க நல்லவரா கெட்டவரா? :lol:

கடும் போக்கற்ற தமிழர் வேணுமெண்டா ஆணந்த சங்கரிதான் சரி... தமிழர்கள் எல்லாரும் இழிச்சவாயல் எண்டு நினைக்ககூடாது

அஜீவன் சில முக்கிய செய்திகளை இணைக்கும் போது ஒரு தடவைக்கு இருதடவை அவற்றை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று கோரப்பட்டுள்ளதே தவிர இதை ஏன் தனிப்பட்ட தாக்குதல்களாக கருதுகிறீர்கள்?

தமிழர்களை சோர்வடையச் செய்து, விடுதலை உணர்வை மழுங்கச் செய்யும் வண்ணம், தவறான பல செய்திகளை தமிழர்கள் மத்தியில் பரப்ப சிறீலங்கா அரசின் அடிவருடிகளும் புலனாய்வுத்துறையினரும் செய்யும் தகிடுதத்தங்களும் செப்படிவித்தைகளும் ஊடகத்துறையில் இருக்கும் நீங்கள் அறியாததல்ல.

பொட்டு அம்மான் பற்றி நீங்கள் எழுதிய செய்தி எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பது தெரியவில்லை! களத்தில் நிற்பவர்களை மனச்சோர்வடையச் செய்யக்கூடிய இது போன்ற தவறான செய்திகளை கேள்விக்கு உள்ளாக்குவதையோ அல்லது அந்த செய்திகளில் மறைந்திருக்கக் கூடிய நோக்கங்களை இட்டு சந்தேகப்படுவதையோ எப்படி கடும் போக்காளர்களின் காட்டுக் கத்தல் என்று ஒதுக்கி விட முடியும்?!!! மென் போக்கு என்பது ரோம் நகர் எரியும் போது நீரோ மன்னன் போல் பிடில் வாசித்துக் கொண்டிருப்பதா?

நல்ல ஊடகவியலாளர்கள் தங்களின் சர்ச்சைக்குறிய கருத்துக்களோ செய்திகளோ விமர்சிக்கப்படும் போது, வாசகர்களின் உணர்வுகளை நாடி பிடித்துப் பார்க்க அதை ஒரு சந்தர்ப்பமாக எடுக்க வேண்டுமே ஒழிய, கடும் போக்கு, காட்டுக்கத்தல் என்றெல்லாம் புலம்பக்கூடாது. ஒரு தவறான செய்தியை தவறென்று சொல்வது எப்படி தவறாகும்?

சிறீலங்காவில் இருந்து உங்களுக்கு செய்தி வழங்கும் நண்பர்களில் சிலர் ஏன் சிறிலங்கா புலனாய்வுத்துறையுடனும் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கக் கூடாது?! அவர்கள் சில உண்மையான செய்திகளுடன் சில வதந்திகளையும் கலந்து தந்து, நீங்கள் அறியாமலேயே ஏன் உங்களையும் தங்கள் பரப்புரைகளுக்கு பயன்படுத்தக் கூடாது?!! இப்படியான சிந்தனை போக்கு கடும் போக்கு அல்ல, முன்னெச்செரிக்கை! காலம் கற்றுத்தந்த பாடம்!!

"In wartime, truth is so precious that she should always be attended by a bodyguard of lies."

---Winston Churchill---

போர்க்காலத்தில் உண்மைகள் கூட செய்திகளாக வருவது மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்கிறார் சேர்ச்சில். அதுவும் எதிரியின் பாசறையில் இருந்து வரும் செய்திகள் இரட்டிப்பு கவனத்துடன் அலசி ஆராயப்பட வேண்டும். அஜீவன் அதை இனி செய்வீர்கள் என்று நம்புகிறேன். மற்றும்படி நீங்கள் ஏதோ உள் நோக்கத்துடன் இந்த செய்தியை பிரசுரித்ததாக நினைக்கவில்லை.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணையின் செய்தியில் கடந்த13ம் நாள் உடல்நலம் குன்றி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இங்கேயுள்ள படம் இம்மாதம் 18ம் நாள் லெப்.கேணல் தவம் மற்றும் மேஜர் புகழ்மாறன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வின்போது எடுக்கப்பட்டது.

18ம் திகதி வெளில வந்த பொட்டம்மான் டம்மி..! 13ம் திகதி காட் அற்றாக் வந்த பொட்டம்மான் தான் உண்மை. யாழ் கடும்போக்காளர்கள் மந்தைகள். அவர்களுக்கு சிந்திக்கத் தெரியாது. அதால நாங்க சந்தியில சிந்து பாடுவம்..!

இப்படித்தான் 1989இல் தலைவரை இந்தியப்படை கொன்ற பின்னர் இன்றும் சிலருக்கு சந்தேகம். இருப்பது உண்மையான வே. பிரபாகரனா இல்ல டம்மியா என்று..! அப்படியானவர்களும் பத்திரிகை.. ஊடகம் நடத்தலாம். அதற்கெல்லாம் ஒரு தகுதி தேவை இல்லைத்தானே..!

அஜீவன் தொடர்பில் பல விமர்சனங்கள் இருக்கின்றன. அவர் விமர்சனங்களை உள்வாங்கிறாரோ இல்லையோ தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கிக் கொள்ளுறார். அதுவும் ஒரு வகையில நல்ல விளம்பரம் தானே..! :lol::lol:

Edited by nedukkalapoovan

என்ன சூறாவளி உங்களுக்கு தெரியாதா நாங்கள் எல்லாம் கடும்போக்காளார்கள் அதாவது குறுக்காலபோவான் மொழியில சொனா புலம்பெயர் மந்தைகள்; இப்படித்தான் எழுதுவம்.. :o மென்போக்காளார் போல பூசி மெழுகத் தெரியாதுங்கோ.

இப்படிக்கு

யாழ் கடும்போக்காளார் சங்கம்

வசி அண்ணா இந்த சங்கத்தில் இணைந்து கொள்ள என்ன தகுதி வேண்டும் என்று சொல்லவே இல்லை :lol: ...சொன்னா நானும் இணைந்து கொள்ள தான் பாருங்கோ.. நேக்கும் உந்த சங்கம் ரொம்பவே பிடித்து போச்சு.. :lol: .

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

1920பதில் கொம்யூனிசக் கடும்போக்ககாளர்களை விமர்சித்து தீவிர கம்ம்யூனிசம் சிறுபிள்ளைகவாதக் கோளாறு (Left-Wing" Communism: An Infantile Disorder, V.I.Lenin, written in May 1920 ) என்கிற கட்டுரையை லெனின் எழுதினார். என்னிடம் பிரதி இல்லை. யாரிடமாவது இருந்தால் இங்கு அதனை பிரசுரித்து இந்த விவாதத்துக்கு உதவுங்கள்.

1920பதில் கொம்யூனிசக் கடும்போக்ககாளர்களை.......

20ம் ஆண்டு போய் கனக்க காலமாவிட்டுது.... இப்ப லெனினுமில்லை... பழய ரசியாவுமில்லை.... எங்களின் போராட்டமே எங்களுக்கு நல்ல பாடம்...

எங்களின் கடந்த கால பட்டனுபவங்கள் பற்றி தைலைவர் அவர்களே கடந்த மாவீரர் உரையில் சொல்லியும் இருக்கிறார்... ஆகவே எமது பாதையை நாமே தெரிவுசெய்வோமாக..

நன்றி வணக்கம்.

சிறீலங்கா புலநாய்வுத்துறையை மேற்கோள் காட்டி

புலிகளிற்கு ஆயுதங்கள் வந்திறங்கியிருக்காம் எண்டதை வைச்சு விறுவிறுப்பாக கட்டுரை எழுதுவம்.

புலிகள் இராட்சத சொல் அடிக்கிறார்களாம் எண்டதை பல்குழல் ஏவுகணையாக ஆய்வு செய்து முடிப்பம்.

ரோந்துப் படகைக் காணவில்லை எண்டால் டோராவை காணவில்லை எண்டு கதை எழுதுவம்.

உதுகளுக்கு ஏன் எதிரியின் பாசறையில் இருந்து வருகுது எண்டு யோசிக்கிறது இல்லை?

காலி இராணுவத்தளபாட களஞ்சியத்தில் தீ விபத்தாம். பல கோடி மதிப்புளள ஆயதங்கள் எரிந்து நாசம்.

மின்னேரிய முகாமில் இருந்த 15200mm நீண்ட தூர பீரங்கிகளை 2 காணவில்லையாம்.

பலாலியில இருந்த 5 ஒலிகனை காணவில்லையாம்.

திருகோணமலையில துறைமுகத்தில கட்டியிருந்த 3 சுப்பர் டோராவை காணவில்லையாம்.

வவுனியாவில இருந்த 7 கூகாரை காணவில்லையாம்

களமுனையில் இறக்கும் படையினரை புதைக்க இரகசி ஏற்பாடுகள்.

களமுனையில் இறக்கும் படையினரை புதைக்க விசேட படையணிகள்.

களமுனையில் இறக்கும் படையினரை தடையங்கள் இன்றி எரிப்பதற்கு உயர்தொழிநுட்ப உபகரணம்.

பயிற்சிக்காக இன் காலை கிளம்பிய 3 மிகை ஒலி விமானங்களின் 1 திரும்பி வரவில்லை. முல்லைத்தீவு கடலுக்கு மேல சுத்திப்போட்டு வன்னியில் தாழ்வாக விமானம் ஒன்று பறந்தாம்.

எண்டு ஏதாவது எழுதினா அஜீவன் அண்ணா உங்களுக்கு நல்ல தொடர்புகள் இருக்கு ஒருவரும் தராத செய்திகளை தாறியள் அதுவும் நீங்கள் வேகமாக தாறியள் :wub:

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் தொடர்பில் பல விமர்சனங்கள் இருக்கின்றன. அவர் விமர்சனங்களை உள்வாங்கிறாரோ இல்லையோ தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கிக் கொள்ளுறார். அதுவும் ஒரு வகையில நல்ல விளம்பரம் தானே..! :wub::wub:

:wub:

அஜீவன் அண்ணா

தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அவருக்கு கடும் காயம், 116 மெய்காப்பாளர்கள் கொல்லப்பட்டனர். அவருக்கு ஏற்பட்ட நீரிழிவு நோயினால் குணமடையாததனால் கை கழற்றப்பட்டது, கால் கழற்றப்பட்டது என்று அரச தரப்பு வெளியிடும் பரப்புரைகள் போன்றதே பொட்டு அம்மான் நோய்வாய்ப்பட்டார். இதயப்பாதிப்பிற்குள்ளானர் என்ற செய்தியும்.

எதிரி என்ன நோக்கத்திற்காக தலைவர் தொடர்பான செய்திகளை வெளியிடுகிறானே அந்த நோக்கத்திற்கு துணை புரிவதாகவே பொட்டு அம்மான் குறித்த செய்தியும் அமையும். புலி வேசம் போடுபவர்கள் இப்படியான தவறுகள் விடலாம். புலியாக இருக்கும் நீங்கள் இப்படித் தவறுகளை விடக்கூடாது என்பதற்காகவே எனது கருத்து அமைந்தது. ஆனால் போராட்டத்திற்குத் தேவையான ஒன்றையே தாங்கள் அந்தச் செய்தி மூலம் மேற்கொண்டதாக எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். வாழ்க.

மன்னார் கடற்பரப்பில் கடற்படையின் படகு காணாமல்போனமை தொடர்பான செய்தியை நீங்கள் முதலில் யாழில் இணைத்திருந்தீர்கள். பல மணிநேரம், ஏன் ஒரு நாள் கழிந்த பின்னரே மற்றைய ஊடகங்களில் அச்செய்தி வந்து. ஆனால் அண்ணா இன்றுவரை அந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் உரிமை கோரவேயில்லை. அத்துடன் அப்பகுதியில் 300 தமிழக படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் அவற்றில் இரு படகிலிருந்தே தாக்குதல் நடத்தப்பட்டதாவும் கடற்படையால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படியொரு சம்பவம் நடைபெறவே இல்லையென தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் பி.பி.சியிடம் தெரிவித்தும் இருந்தனர் . இச்சம்பவம் குறித்த அரச தரப்பு ஊடகஙகள் வெளியிட்ட செய்திகளில் பல்வேறு முரண்பாடுகள் காணப்பட்டது. இது அரச தரப்பின் ஒரு நாடகமாக இருக்கலாம் என்றே நான் உட்பட சில உறுப்பினர்கள் அந்த பதிவிற்குள் எழுதியிருந்தோம்.

குறித்த கடற்படைப்படகு, பொட்டு அம்மான் குறித்து செய்தி தந்தவர்கள் குறித்து சற்று வழிப்பாக இருங்கள். அல்லது அங்கிருந்து வந்தவர்களை சந்தித்திருப்பதாக எழுதியிருக்கிறீர்கள் முடிந்தால் அவர்களை மீண்டும் சந்தித்து அரச புலனாய்வுத்துறை எந்தத்த வழிகளில் தனது செயற்பாட்டை மேற்கொள்ளுமெனக்கேளுங்கள் சரியான விளக்கங்களை அளிப்பார்கள். நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கவிஞரே

ஒரு சிலர் புலியாக இருப்போர்.

பலர் புலியாக வேசம் தாங்கி வருவோர்.

இங்கே ஒரு செய்திக்கா நடக்கும் நிலை கண்டால்

பிரபாகரன் அவர்களோ அல்லது பொட்டு அம்மான் அவர்களோ கூட

நம்மவர் புலம் பெயர் நாடுகளில்

செய்யும் கூத்துகளை நினைத்தால் நிச்சயம் வாய் விட்டு சிரிப்பார்கள். :lol:

அங்கிருந்து வந்தவர்களோடு பேசுகிறேன் பழகுகிறேன்.

அவர்களிடம் இருக்கும் தன்மைகள் என்னை வியக்க வைத்துள்ளன.

அவ்வளவு தெளிவானவர்கள்...........

அவர்களிடம் இருக்கும் தன்மைகளில்

இங்கே துளி கூட அதைக் காண முடியாது.

எனது விவாதங்களுக்கு கூட

அவர்களிடமிருந்து வரும் பதில் மகிழ்வானவை.

நம்பிக்கை கொடுப்பவை.

அவர்களால் உண்மை - வேசம் இவற்றை கணிப்பிட முடிகிறது.

இங்கே

நண்பனைக் கூட எதிரியாக்கும் கருத்துகள்

எல்லை மீறும்..........!

அதுவே புலம் பெயர் நாடுகளின் தமிழர் பிளவுக்கு காரணம்!

எனக்குத் தெரிந்து இப்படிக் கூக்குரல் போட்ட

ஏகப்பட்டவர்கள் இன்று எதிரிகளின் மடியில்.

கடந்த காலத்தில் இது போல

துள்ளிக் குதித்தவர்கள் பட்டியலை

எடுத்துப் பார்த்தால் அது குருடனுக்கு கூட தெரியும்?

அதே போல நினைத்து சிரிக்கத்தான் சொல்லும். :wub:

அனைத்து தமிழ் ஊடகங்களும் ஏதோ ஒரு விதத்தில்

இணைந்து கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

அதை அவரவர் செய்தி தளத்தில் இணைப்பதும்

இணைக்காமல் விடுவதும் அவரவர் பொறுப்பு.

எமது செய்தி தளத்தில் கூட புதினம் : சுடர் ஒளி செய்திகளை இன்றும் இணைத்து இருக்கிறேன்.

இவைஇவர்களோடு மட்டும் நின்று விடாது.

ஏனையவர்களோடும் தொடரும்.

எமக்கு தெரியாத ஒன்று உங்களுக்கு தெரிய வரும்.

உங்களுக்கு தெரியாத ஒன்று எமக்கு தெரிய வரும்.

பகிர்வதில் நட்பு மேலோங்கும்.

நம் பலம் அதனால் அதிகரிக்கும்.

எமது செய்தி தளத்தின் கரு தற்போது உருவாகி மட்டுமே உள்ளது.

அது இன்னும் பிறக்கவே இல்லை.

அதற்கு காலம் இருக்கிறது.

இது பரீட்சார்த்த முன்னோட்டம் மட்டுமே!

சுவிஸ் ஊடகங்களோடு பணி புரியும் போது பார்க்கும்

நிலை நம்மவரிடம் இல்லவே இல்லை.

வேற்று ஊடகமாக இருந்தாலும்

நண்பர்களாக சந்தித்துக் கொள்கிறார்கள்

பலதை பரிமாறிக் கொள்கிறார்கள்.

தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஒரு தேவைக்காக தொடர்பு கொண்டால்

இதோ தொலைபேசி இலக்கம்

தொடர்பு கொண்டு பேசு என்கிறார்கள்.

நம்மவர்

தரகர் வேலை பார்த்து உள்ளதையும் நாறடித்து விடுகிறார்கள்.

அது வேதனையான விடயம்!

ஒரு செய்திக்காக என்னை தடை செய்ய கோஸம் வேற?

அல்கோய்தா மாதிரி கத்தியோட நிக்கிறது மாதிரி

நினைத்து பார்த்து சிரிக்கத்தான் என்னால் முடிகிறது.

சும்மா சொால்லக் கூடாது

நல்ல இலவச விளம்பரம்.

நல்லாயிருக்கு என்றால் யாரும் பார்க்க மாட்டாங்கள்.

போட்ட ஒரு செய்திக்கு அஜீீவனை பின்னி எடுக்கிறாங்க என்றால்

கை தட்ட , விழுந்தவனை சாத்த ஒரு கூட்டம் நிரம்பி வரும்.

அது மாதிரி......... நல்ல feed back. :o

யார் சொன்னா

என்னை அண்ணா என்று அழைக்கச் சொல்லி

அடே என்றால் கூட

நான் பேசுவேன்.

அது என்னை அழைப்பதாக இருந்தால்...........!

நான் அப்படி சாதாரணமான ஒருவன்.

எதிர்கால சந்ததிகள் எம்மை பார்ர்த்து காறி உமிழும் நிலைக்கு

காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்கள் என்று சொல்லும் நிலைக்கு

தயவு செய்து யாரும் எமது எதிர்கால சமுதாயத்தை பேச வைக்காதீர்கள்.

உலகம் உருண்டை என்று சொன்ன

ஒருவனை கொன்று விட்டு

பின்னர் ஏற்றுக் கொண்டவர்கள் போன்ற

கலிலேயோ காலத்து மக்கள் இன்னும் இருக்கிறார்கள்? :D

எதிர்க்கும் அளவுக்கு பலமாவோரும் இருக்கிறார்கள்!

எதிர்க்கும் போது பின் வாங்குவோரும் இருக்கிறார்கள்!!

இதை எதிர்காலம் தீர்மானனிக்கும்............

நாளைய சமுதாயம் இன்றைய சிந்தனையின் பிரசவம். :lol:

கருத்துகளை முன் வைத்த அனைவருக்கும் நன்றி!

பிரபாகரனும்,பொட்டரும் சிரிப்பதுக்கு இருக்கட்டும், முதல் உங்களை பார்த்து உலகம் சிரியாது பார்த்துகொள்ளுங்கள், தமிழ்செல்வன் இறந்ததையும் ஏற்றுக்கொண்டவர்தான் நாம், கட்டுநாயக்கா எரிந்ததையும் ஏற்றுக்கொண்டவர்தான் நாம், எமக்கு தேவை உன்மைச்செய்திகள் மட்டுமே, அதை யாழ்கள உறவாகிய உங்களிடமும் எதிர்பார்க்கிறோம், இல்லை டபிள்கேம் ஆடுவது என்றால் அதற்க்கும் நாம் தயார். :wub::wub::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.