Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம்

சென்னை : சென்னையில் பிரபல எழுத்தாளர் சுஜாதா என அழைக்கப்படும் ரங்கராஜன் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. இவர் சிவாஜி, அந்நியன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வச‌னம் எழுதியுள்ளார்.

தினமலர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

su.jpg

என் கண்ணீர் அஞ்சலிகள்.

பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம்

திகதி : Wednesday, 27 Feb 2008, (sindu)

sujatha003yg6.jpg

சென்னையில் பிரபல எழுத்தாளர் சுஜாதா என அழைக்கப்படும் ரங்கராஜன் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. இவர் சிவாஜி, அந்நியன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

பொறியியல் பட்டதாரி.பெங்களூரில் உள்ள மத்திய அரசின் பாரத மிகுமின் நிறுவனத்தில் (பெல்) பொறியாளராகப் பணியாற்றினார்.

வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை தாங்கினார். ஸ்ரீரங்கத்தில் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த அவர், சென்னை எம்.ஐ.டி.யில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

தமிழ் உரைநடை வரலாற்றில் பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரைப் போலவே சுஜாதாவின் உரைநடையும் ஒரு மைல்கல்.

"தினமணி கதிர்', "குமுதம்' ஆகிய வெகுஜன பத்திரிகைகள் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களை விசிறிகளாக பெற்றவர். அதேசமயம், தீவிரமான சிற்றிதழ்களிலும் தனது படைப்புகளை அளித்து தமிழ் இலக்கியத்துக்கு முக்கிய பங்களித்தவர். குறிப்பாக மூத்த பத்திரிகையாளரும், "தினமணி' முன்னாள் ஆசிரியருமான கஸ்தூரி ரங்கன் நடத்திய கணையாழி சிற்றிதழில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடைசி பக்கத்தை மிக சுவாரஸ்யமாக எழுதியவர். ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் அப்பகுதியில் அவர் எழுதியவை அன்றைய இளம் தலைமுறையினரை பெரிதும் கவர்ந்தன.

ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ், ஹாரால்டு ராபின்ஸ் போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் மயக்கத்தில் கிடந்த இளம் தலைமுறையை தன் எழுத்தால் தமிழின் பால் ஈர்த்தவர். நவீன தமிழ் சிறுகதை உலகில் குறிப்பிடத்தக்க பல சிறுகதைகளை எழுதியவர் எழுத்தாளர் சுஜாதா. அவற்றில் குறிப்பிடத்தக்கது, ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பு.

70களில் சிற்றிலக்கிய இளைஞர்கள் குழு ஒன்று தொகுத்த குருஷேத்ரம் தொகுப்பில் வெளியான "தனிமை கொண்டு' என்ற சிறுகதை பின்னாளில் குமுதத்தில் நைலான் கயிறு நாவலாக விரிந்து, அவருக்கு லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றுத் தந்தது.

தமிழ் உரைநடையில் நகைச்சுவையை அதன் உயர்ந்த எல்லைகளுக்கு கொண்டு சென்றவர் சுஜாதா என்றால் அது மிகையில்லை. (அவரது "மாமா விஜயம்' என்ற சிறுகதையை படித்துப் பாருங்கள்...)

அறிவியல் புனை கதைகள்... அறிவியல் புனை கதைகளை தமிழ் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. கணேஷ்வசந்த் என்ற கதாபாத்திரங்களை உருவாக்கி, அந்த பாத்திரங்களை மையப்படுத்தி கதைகள் எழுதினார்.

அரசர் காலத்தை நவீன காலத்தோடு ஒப்பிட்டு, அவர் எழுதிய சிறுகதைப் தொகுப்பில் நகைச்சுவையும், உண்மைத் தகவல்களும் இழையோடும்.

திரைப்படத் துறையில்... பொறியாளர், எழுத்தாளர் என தொட்ட துறைகளில் எல்லாம் முத்திரை பதித்தார் சுஜாதா. இதைத் தொடர்ந்து, திரைப்படத் துறையில் கால் பதித்தார். நடிகர் கமலுடன் இணைந்து, விக்ரம் படத்தில் பணியாற்றினார். அந்தப் படத்தில் கதை வசனம் எழுதினார்.

இதைத் தொடர்ந்து, திரைப்பட இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். தான் வசனம் எழுதிய திரைப்படங்களில் தனி பாணியை கையாண்டார் சுஜாதா. நீண்ட வசனம் என்பதை உடைத்து, நறுக்கு தெரித்தாற் போல இரண்டே வரிகளில் வசனம் எழுதினார். இது, அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.

உடல் நலக்குறைவு: பல்வேறு தளங்களிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றிய எழுத்தாளர் சுஜாதா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சில நாள்களாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், புதன்கிழமை இரவு உடல் நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் புதன்கிழமை இரவு 9 மணிக்கு காலமானார். அவருக்கு சுஜாதா என்ற மனைவியும், கேசவ பிரசாத், ரங்கா பிரசாத் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

New India News

சுஜாதா!

உங்கள் வாழ்விற்கு நன்றிகள்!

எனக்கு வாசிப்பில் ஆர்வத்தை தூண்டிய துரோணர்!

அன்புடன்,

சாணா.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்துலகின் முடி சூடா மன்னன்

தமிழ் வாராந்த இதழ்களின் வருமானம் நீங்கள்

உங்கள் இழப்பு தமிழ் உலகனி; பேரிழப்பு

ஆழந்த அணுதாபங்கள்...

அட...இவரா ரொம்ப நன்னா எழுதுவாரே.. :D (என்ட டீபஸ் சிம்பத்தி :D )...எல்லாத்தையும் எழுதினவர் பாருங்கோ ஆனா அவரின்ட தலைவிதியை அவராலே எழுத ஏலாம போச்சே.. :D (அங்கே தான் அங்கால நான் சொல்லமாடேன் :D )...

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வாழ்க்கையில என்னத்தை வேண்டுமென்றாலும் எழுதிடலாம் ஆனா போற நேரத்தை எழுத ஏலாதே" :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி பஞ்-

"வாழ்க்கையில என்னத்தை வேண்டுமென்றாலும் எழுதிடலாம் ஆனா போற நேரத்தை எழுத ஏலாதே" :D

ஏன் முடியாது? 10 மணிக்கு முடியுது எண்டு எழுதி வைச்சிட்டு 10 மணிக்கு ஓடுற ரெயினுக்கு முன்னால குதிச்சா சரிதானே.... உங்களை அப்பிடி செய்ய சொல்ல இல்லை பட்.... :D

ஏன் முடியாது? 10 மணிக்கு முடியுது எண்டு எழுதி வைச்சிட்டு 10 மணிக்கு ஓடுற ரெயினுக்கு முன்னால குதிச்சா சரிதானே.... உங்களை அப்பிடி செய்ய சொல்ல இல்லை பட்.... :D

நோ....நோ மாமா என்ன தான் எழுதி வைத்திட்டு போய் குதித்தாலும்.. :D (நம்ம போற நேரத்தை கரக்டா எழுதவே ஏலாது :D )...அப்படி என்றா அது தான் போற நேரமா இருக்க வேண்டும் :D ...இல்லாட்டி டிரேயின் டிலேயா வரலாம் அல்லது டிரேயின் வந்து உங்களுக்கு முன்னால நிற்கலாம்..இல்லாட்டி கை,கால் போய் தப்பி வாழலாம்.. :) (சோ மாமா போற நேரத்தை நம்மால எழுத முடியாது பாருங்கோ)...என்ன செய்ய சொன்னாலும் நான் செய்யமாட்டேன் மாமா..என்ன பட்...(மாமா என்றாலும் என்னை பார்த்து உப்படி சொல்லி இருக்க கூடாது என்ன :( )...

நாம நினைக்கிறது எல்லாமே நடந்துவிட்டா அது வாழ்க்கை இல்லை மாமா...நாம நினைக்கிறோம் பட் அது எல்லாம் நடக்குதா... :D (ஜம்மு பேபியின் சிந்தனை :D )...இது எப்படி இருக்கு மாமா...என்னொன்றை விட்டிட்டேன் நம்பிக்கை தான் வாழ்க்கை.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நான் சும்மா பகிடிக்கு பட் எண்டு போட ரென்சன் ஆகிட்டிங்கள் போல இருக்கு... பேபியள் ரென்சன் ஆகக்கூடாது

நான் சும்மா பகிடிக்கு பட் எண்டு போட ரென்சன் ஆகிட்டிங்கள் போல இருக்கு... பேபியள் ரென்சன் ஆகக்கூடாது

பின்னே மாமா...(ஒன்றும் அநுபவிக்காம எப்படி போறது அது தான் மாமாவிற்கென்றாலும் கல்யாணமும் முடிந்து பிள்ளையும் பெற்று போட்டார் :lol: )...நாம இன்னும் பேபியாக்கும் லைவ்வில அநுபவிக்க எவ்வளவு இருக்கு மாம்ஸ்.. :( (பேபிகள் டேன்சன் ஆக கூடாதா ம்ம்ம் எனி டென்சன் ஆகவில்லை :huh: )...மாமோய் நீங்களும் இந்த சுஜாதா அங்கிள் எழுதுற புக்ஸ் வாசிக்கிறனியளோ..(நான் இருந்துவிட்டு வாசிக்கிறனான் பாருங்கோ :wub: )..எல்லாரும் இவரை தான் தங்களின்ட எழுத்தின்ட குரு என்று சொல்லுவீனம் :huh: ..என்னட்ட கேட்டா நான் யாரை சொல்லுவேன் தெரியுமா..(ராணிகாமிக்ஸ் எழுதினவரை தான் :lol: )...ஏன் எல்லாரும் பார்க்கிறீங்க சின்னனில இருந்து நான் இன்ரஸா வாசிக்கிற புக் அது அல்லோ... :wub: (டாடியிட்ட ஏச்சு வாங்கி ஸ்கூலில டீச்சருக்கு தெரியாம ஒளித்து வாசிக்கிறனான் அல்லோ :wub: )...மாமாவும் வாசிக்கிறனியளோ ராணி காமிக்ஸ்... :huh:

அப்ப நான் வரட்டா!!

"பிரிவோம் சந்திப்போம்" பாகம்-1 நாவல் மூலம் என்வாழ்வில் இலட்சியத்தீ மூட்டியவர். அவர் மறைந்தாலும் அவர் எழுத்துக்கள் என்றும் வாழும்.

அன்னாருக்கு என் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சுஜாதாவின் அறிவியல் நூல்களை வாசித்தன் மூலம் பள்ளி நாட்களில் நான் அறிந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர், சிறந்த அறிவியல் எழுத்தாளர்..!

இவரைப் போலவே அறிவியல் செய்திகளை தாய் மொழியில் தர வேண்டும் ஆர்வம் எனக்குள்ளும் எழுந்தது.. ஆனால் முடியல்ல..!

இவர் ஒரு இரசாயனப் பட்டதாரி. அதுமட்டுமன்றி மின்னணுவியல் பொறியியல் பட்டதாரியும் கூட..!

படைப்புக்களால் அறிவூட்டிய கலைஞனுக்கு கண்ணீரஞ்சலிகள். :huh::huh:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுஜாதாவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருடைய இறப்பு செய்தி "சும்மா அதிருதில்லை".. அந்த வசனத்தை தமிழ் சினிமா காரர்கள் மறக்கமுடியுமா என்ன? அஞ்சலிகள்

சுஜாதா மறையும்போது அவருக்கு வயது 72..

அருமையான அறிவியலாளர்..எழுத்தாளர்..சிந்

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தார்,வாழ்ந்தார்,நோய்பட்

ார்,இறந்தார்.....புத்தரின் நான்காவது உண்மை நடந்துள்ளது..

கண்ணீர் அஞ்சலிகள்..

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது எழுத்தாளுமையால் தமிழ்ப்பேசும் உலகில் வியாபித்திருந்தவர் சுஜாதா. எழுதுவதும் பிரசுரமாவதும் இலகுவானதல்ல என்னும் கருத்தை தவிடுபொடியாக்கி ஒரே வேளையில் பல்வேறு ஆக்கங்களால் புதினங்களில் இடம்பெற்றவர்.

இன்றைய தமிழ் எழுத்துலகில் விஞ்ஞானக் கட்டுரைகள், அறிவியல் புனைகதைகள் வலம்வருவதற்கு முக்கிய பங்காற்றியவர். கவிதை இரசனை உடையவர். குறிப்பாக ஈழத்துக் கவிதைகளை இரசித்து தனது எழுத்துகளில் பதிந்தவர். அதிகமாக வாசிப்பவர். இவரது அறிவில் கட்டுரை இலக்கியம் அதிக கவனத்தைப் பெற்றது.

ஒருவரின் மறைவின் பின் சாதனைகள் பற்றி நினைவிடலே உயர்ந்தது.வாழும்போது விமர்சனங்ளை முன்வைப்பது தகுந்த மாற்றங்கள் ஏற்படும் என்பதற்காகத்தான்.

இவரது குறிப்பபிடக்கூடிய படைப்புகள் காலங்கடந்தும் வாழும்.

எழுத்தாளர் சுஜாதாவுக்கு, அமைதியான இறுதி வணக்கம்!

சுஜாதாவின் கணேஸ் வசந்த் கதாபாத்திரங்கள் வரும் நாவல்கள் என்னை ஆர்வமாக வாசிக்க வைத்தது.

இவரது 'என் இனிய இயந்திரா" என்னை மிகவும் கவர்ந்த நாவல்.

மறைந்தது அவர்தான் அவரது படைப்புகள் உயிர்ப்புடன் என்றும்

வாழும்.

எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை அமைத்து வாசகர்கள் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த ஒரு அற்புதமான எழுத்தாளர். சிறியோர் முதல் முதியோர் வரை அனைவரையும் தன்பால் ஈர்த்தவர். விஞ்ஞானத்தையும் இலக்கியத்தையும் கலந்து பல அற்புதமான படைப்புகளை தந்தவர். சினிமாவிலும் கதை வசனத்தில் புதுமையான பாணியைப் புகுத்தி வெற்றி கண்டவர். அன்னார் எமைவிட்டுப் பிரிந்தாலும்தமிழ் உலகில் இவரது ஆளுமை என்றுமே நிலைத்திருக்கும்.

அன்னாரின் ஆத்மசாந்திக்காகவும் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்காகவும் எல்லாருக்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

வியாழக்கிழமை, பிப்ரவரி 28, 2008

சென்னை

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

karunanidhi152502802200um5.jpg

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைகிறேன். ரங்கராஜன் எனும் இயற்பெயர் கொண்ட அவர் தமது துணைவியார் பெயரையே சுஜாதா எனப் புனைப் பெயராகக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களையும், இரு நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பல நாடகங்களையும், அறிவியல் சார்ந்த பல ஆய்வு கட்டுகரைகளையும் எழுதிக் குவித்து தமிழ்மொழிக்கு அருந்தொண்டு புரிந்துள்ளார்.

இவரது நாவல்களில் சில திரைப்படங்களாகவும், உருவாகி உள்ளன. புகழ் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றிய சிறப்பினையும் பெற்ற இவர், கணினி அறிவாற்றல் மூலம் அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்துள்ளவர்.

பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் பொது மேலாளராக பணியாற்றியபோது இவரது தலைமையிலான குழுவே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உருவாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய பன்முகத் திறன்கள் வாய்ந்த சுஜாதாவுக்கு 2000ம் ஆண்டில் கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்த நிகழ்வை நினைவு கூர்கிறேன். பெருமைக்குரிய திருமகன் சுஜாதாவின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். இவரது பிரிவால் வாடும் இவரது குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுஜாதாவின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

சுஜாதாவுக்கு நன்றி சொல்வோம் கமல்:

கமல் வெளியிட்டுள்ள செய்தியில், சுஜாதா அவர்களுடைய மரணம் நெருங்குவதை நான் அறிந்தே இருந்தேன். அவரும்தான்.

வழக்கமாக எழுத்தாளர்கள் சமரசம் செய்வதை இழுக்காகவும், தோல்வியாகவும் நினைப்பார்கள். ஆனால் சுஜாதா அவர்கள் சமரசம் செய்து கொள்வது அவசியம், சமுதாயக் கடமை என்றே நினைத்தார்.

அதனால்தான் சிலசமயம் நாம் எதிர்பார்க்கிற வீரியம் குறைந்தது போல ஒரு பிரமை தோன்றும். அவருடைய வாழ்க்கை முறை, நெறி அது.

விஞ்ஞானமும் கற்றறிந்தவர் என்பதால் எழுத்தை அவர் தொழிலாக நினைக்கவில்லை. தொடரும் ஒரு காதலாகவே நினைத்தார். அதனால் தான் அவருக்கு தன் எழுத்தைதப் பற்றி செறுக்கு இல்லை.

அவருடைய சினிமா எழுத்தை வைத்து தயவு செய்து யாரும் சுஜாதாவை கணித்து விடாதீர்கள். அதுவும் பெரும் சமரசம்தான். சினிமாவுக்காவும், நட்புக்காகவும் அன்புக்காகவும் அவர் செய்து கொண்ட சமரசம்.

இருந்தாலும் சுஜாதா என்னும் அந்தப் பெயரை பெரியதாக வட்டம் போட்டுக் காட்டிய சினிமாவுக்கு ஓரளவுக்கு வேண்டும் என்றால் நன்றி சொல்லிக் கொள்ளலாம். மற்றதெல்லாம் இலக்கியத்திற்கே உரித்தானது.

தர்மம் கிடைக்கும் இடத்தில்தான் பிச்சைக்காரர்கள் கூடுவது போல், கொடுக்கும் இடத்தில்தான் இன்னும் எதிர்பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது, சுஜாதா இன்னும் கொடுத்திருக்கலாம் என்று சொல்வதை விட, கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டிய நேரமாகவே இதை நான் கருதுகிறேன்.

பல விஷயங்களில் அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய எழுத்து ரசனையை, என்னுடைய தமிழ் வாசிப்பு ரசனையை உயர்த்திய முக்கியமான எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். என்னுடைய வாசிப்பு என்று சொல்லும்பொழுது, ஏதோ குறுகிய வட்டம் போல ஆகியது.

தமிழகத்தில் சுஜாதாவைப் படித்தவர்கள் எல்லோருமே வாசக தரத்தில் உயர்ந்தவர்களாகவே கருதுகிறேன். நன்றி தமிழ் உலகம் அவருக்குச் சொல்லும் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.

நாளை உடல் தகனம்:

இப்போது அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுஜாதாவின் உடல் நாளை காலை 8.30 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

பிற்பகல் 1 மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படவுள்ளது.

இயக்குநர் ஷங்கர், நேற்று இரவு முழுவதும் அப்பல்லோ மருத்துவமனையிலேயே சுஜாதாவின் குடும்பத்தினருடன் இருந்தார்.

ஷங்கரின் பெருந்தன்மை:

சில ஆண்டுகளுக்கு முன் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இதே அப்பல்லோ மருத்துவமனையில் சுஜாதா சேர்க்கப்பட்டிருந்தபோது, பல்வேறு தரப்பினரும் அவரை சந்தித்து ஆறுதல் கூறிச் சென்றனர்.

ஷங்கர் மட்டும் ஒரு சூட்கேசுடன் வந்துள்ளார். அதை சுஜாதாவின் படு்க்கைக்கு கீழே வைத்துவிட்டு, அதை அப்புறமா திறந்து பாருங்க என்று சொல்லிவிட்டுப் போனாராம்.

பின்னர் சுஜாதா குடும்பத்தினர் திறந்து பார்த்தபோது லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளது. என்ன இது என்று ஷங்கரை போனில் பிடித்து அவர்கள் கேட்கவே, சாருடைய மெடிக்கல் எக்ஸ்பென்சசுக்கு, தயவு செய்து திருப்பித் தந்துடாதீங்க.. இது எங்க அப்பாவுக்கு நான் செய்ற கடமை மாதிரி என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாராம் ஷங்கர்.

இந்த சம்பவத்தை பின்னர் சுஜாதாவே ஒரு வார இதழில் தெரிவித்து நெகிழ்ந்தது நினைவுகூறத்தக்கது. சினிமா உலகில் இதுபோன்ற நன்றி உணர்வு கொண்டவர்கள் எல்லாம் மிகக் மிகக் குறைவு என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே.

நன்றி தற்ஸ்தமிழ்

வியாழக்கிழமை, பிப்ரவரி 28, 2008

கவிப்பேரரசு வைரமுத்துவின் இரங்கல்

பறிபோன விஞ்ஞான விரல்

சென்னை: சுஜாதா என்கிற விஞ்ஞான விரலை மரணம் பறித்துக் கொண்டு விட்டது. ஆனால் அதன் ரேகைகள் அழிவதில்லை என்று எழுத்தாளர் சுஜாதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு

எழுத்தாளர் சுஜாதாவின் மரணச் செய்தி கேட்டு சில நிமிடங்கள் உறைந்து போனேன்.

சிவாஜி வெள்ளி விழா மேடையில்தான் அவரை இறுதியாகச் சந்தித்தேன். மரணத்திற்கும் அவருக்கும் சில வார இடைவெளிதான் என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியவில்லையே.

ஒரு கடல் சட்டென்று உள் வாங்கி விட்டதைப் போல உணர்கிறேன்.

அவர் பெருமைகள் உள்ளத் திரையில் ஒவ்வொன்றாக ஓடி மறைகின்றன.

அவர் விஞ்ஞானிளின் எழுத்தாளர், எழுத்தாளர்களின் விஞ்ஞானி.

கணிப்பொறி அறிவு மூலம் தமிழுக்கு நவீன நாவு தந்து பேச வைத்தவர். கவிதைப் பறவைகளின் வேடந்தாங்கலாய் விளங்கியவர். நாடு வியந்த நட்சத்திர எழுத்தாளர். தமிழின் அத்தனை வடிவங்களையும் ஆண்டு பார்த்தவர்.

மரணம் தமிழின் விஞ்ஞான விரலை பறித்து விட்டது. ஆனால் விரலின் ரேகைகள் அழிவதில்லை.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைரமுத்து.

நன்றி தற்ஸ்தமிழ்

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

பல் துறை வித்தகர் சுஜாதா அவர்கட்கு கண்ணீர் அஞ்சலிகள். இதோ அவரின் சாதனைகள் சில,

இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் 250 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்திற்கும் மேற்பட்ட அறிவியல் விஞ்ஞான நூல்கள், பல மேடை நாடகங்கள், பெருமளவான கவிதைகளும் எழுதியுள்ளதுடன், புகழ் பெற்ற பல திரைப்படங்களிற்கு கதை, திரைக்கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் அனைத்துப் புகழ் பெற்ற பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளிலும் இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைக்கும் பணியில் மிக முக்கிய பங்காற்றியவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் சுஜாதாவின் எழுத்துக்கள் என்னை ஆகர்ஷித்திருக்கின்றன. அவரது எழுத்துக்கள் மிகவும் அறிவு பூர்வமானவை. நான் அவரை நேரில் அவரது அலுவலகத்தில் போய் சந்தித்தேன். கடந்த வருடம் . அது நல்ல ஒரு தருணமாக இருந்தது. என்னோடு கவிதைகள் பற்றியே கதைத்தார். ஈழத்து கவிஞர்கள் பற்றி நிறைய பேசினார். பிரசாந்தன் தொகுத்த 20 ஆம் நூற்றாண்டு ஈழத்து கவிஞர்களின் தொகுப்பு பற்றி கேட்டார்.

எழுத்தாளர் சுஜாதா பல பேருக்கு வாழ்வளித்திருக்கிறார் .அவரது எழுத்துக்கள் மூலமாக பல பதிப்பகங்கள் நன்றாக சம்பாதித்திருக்கின்றன.

அத்தோடு அவரது எழுத்துக்கள் வாசகர்களை மிகவும் ஈர்த்திருக்கின்றன. அவரது எழுத்துக்களை போட்டி போட்டு தமிழக சஞ்சிகைகள் பிரசுரித்திருக்கின்றன.

சுஜாதா ஒரு சகாப்தம்தான்.

அனஸ்.

'என் வேலையை முடிச்சுட்டேன்'...சுஜாதா!!...

வியாழக்கிழமை, பிப்ரவரி 28, 2008

சென்னை: மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஏராளமான திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம், கதை எழுதியுள்ளார். அவரது பங்களிப்பால் திரையுலகம் பரிமளித்துள்ளது.

சுஜாதாவின் திரையுலக வாழ்க்கை ரஜினிகாந்த், ஜெய்சங்கர் இணைந்து நடித்த காயத்ரி படத்திலிருந்து தொடங்கியது. அவரது நாவலான காயத்ரியை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.

இதையடுத்து சுஜாதாவின் இன்னொரு பிரபல கதையான பிரியாவும் படமானது. இதிலும் ரஜினியே நடித்தார். அதன் பின்னர் கரையெல்லாம் செண்பகப்பூ, நினைத்தாலே இனிக்கும், பொய் முகங்கள், வணக்கத்துக்குரிய காதலியே ஆகிய படங்களும் சுஜாதாவின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான படங்கள்.

ஆர்யபட்டா, 24 ரூபாய் தீவு, அனிதா இளம் மனைவி, நிர்வாண நகரம் ஆகியவை கன்னடத்தில் படமாகியுள்ளன. பத்து செகன்ட் முத்தம் கதையை இயக்குநர் மெளலி, தெலுங்கில் படமாக்கினார். அஸ்வினி நாச்சப்பாவை ஹீரோயினாகக் கொண்டு, அஸ்வினி என்ற பெயரில்

மெளலி படமாக்கினார்.

சினிமாவுக்கென்றே முதன் முதலில் சுஜாதா உருவாக்கிய கதை, திரைக்கதை, வசனம் கமல்ஹாசனின் விக்ரம். இந்தப் படம்தான் தமிழில் அறிவியலை மையமாகக் கொண்டு வந்த முதல் படமும் கூட.

பின்னர் மணிரத்னம் மற்றும் ஷங்கரின் ஆஸ்தான திரைக் கதாசிரியராக பின்னர் மாறினார் சுஜாதா.

இந்தியன், முதல்வன், ஜீன்ஸ், அந்நியன், பாய்ஸ் என ஷங்கரும், சுஜாதாவும் இணைந்து பணியாற்றினர். உச்சகட்டமாக அமைந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி.

இந்தியன், முதல்வன், அந்நியன், பாய்ஸ் என ஷங்கரும், சுஜாதாவும் இணைந்து பணியாற்றினர். உச்சகட்டமாக அமைந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி. ரஜினி படத்துக்கும் தன்னால் வசனம் எழுத முடியும் என்பதை நிரூபித்து சிவாஜி மூலம் பெயர் தட்டிச் சென்றார் சுஜாதா.

தற்போது ஷங்கரின் ரோபோட் படத்திற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தார் சுஜாதா. ரோபோட் என்ற பெயருக்கு மாற்றாக இயந்திரா, இயந்திரன் என்ற பெயர்களையும் அவர் ஷங்கருக்கு பரிந்துரைத்திருந்தார். இந்த நிலையில் காலம் அவரை காவு கொண்டிருக்கிறது.

இதேபோல மணிரத்னத்தின் இருவர், ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால், குரு ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ளார் சுஜாதா. மணிரத்னம் விரைவில் இயக்கவுள்ள அபிஷேக் பச்சன்ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்கவுள்ள படத்திற்கும் அவர்தான் வசனம், திரைக்கதை அமைப்பதாக இருந்தது.

கடைசிப் படைப்பு:

ரோபோட் படத்திற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தார் சுஜாதா. ரோபோட் என்ற பெயருக்கு மாற்றாக இயந்திரன் என்ற பெயரையும் அவர் ஷங்கருக்கு பரிந்துரைத்திருந்தார். இந்த நிலையில் காலம் அவரை காவு கொண்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்புதான் ஷங்கரின் ரோபோட் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துக் கொடுத்தாராம் சுஜாதா. ஸ்கிரிப்ட்டை ஷங்கரிடம் கொடுத்த அவர், ''ஷங்கர் எனது வேலையை முடித்து விட்டேன். இனி எனக்கு டென்ஷன் இல்லை. இதுவே எனக்கு கடைசிப் படமாக இருந்தாலும் கவலை இல்லை'' என்றாராம்.

அதேபோல, ஸ்ரீபிரியாவின் தயாரிப்பில் சிம்ரன் நடிக்க ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ள 'சிம்ரன்' சின்னத்திரையின் முதல் கதையே சுஜாதாவின் கதைதான்.

அதுவே அவரது கடைசிப் படைப்பும் ஆகியுள்ளது.

சுஜாதாவின் மறைவு தமிழ் படைப்புலகத்துக்கு மாத்திரமல்ல கலையுலகத்துக்கும் பேரிழப்பு தான்.

நன்றி தற்ஸ்தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.