Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லிங்காஷ்டகம்

Featured Replies

பிரம்மமுராரி சுரார்சித லிங்கம் ... என்னும் லிங்காஷ்டகம் யாரிடமாவது ஒலிவடிவில் இருகிறதா???

யாருக்கும் அந்த சுலோகங்களின் பொருள் தெரியுமா?? தெரிந்தவர்கள் கூறுவீர்களா?

நன்றி ...

  • Replies 67
  • Views 26.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கவரிமான், கீழுள்ள தளத்தில் பாருங்கள்.

தம் அன்றாட அவசர வேலக்கிடையே அலைகடல் போல் அலையும் நம் மனது அமைதியடைய, மகிழ்ச்சியுடன் இருக்க தினமும் கேளூங்கள் பாலு அவர்களின் தேனினும் இனிமையான குரலில் லிங்காஷ்டகம்.

ஓம் நமச்சிவாயா

ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்

சிறிதும் கலங்கம் இல்லா சிவ லிங்கம்

பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்

காமனை எரித்த கருனா லிங்கம்

ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்

வளர் அறிவாகிய காரண லிங்கம்

சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்

தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்

தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்

பங்கஜ மாலையை சூடிய லிங்கம்

முந்திய வினைகளை போக்கிடும் லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவர் கனங்களின் அர்ச்சன லிங்கம்

தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்

சூரியன் கோடி சுடர்ந்விடும் லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

எட்டு தளத்தினில் எழுந்திடும் லிங்கம்

எல்லாம் ஆகிய காரண லிங்கம்

எட்டு தரித்திர நீக்கிடும் லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரின் உருவின் பூஜைக்கோர் லிங்கம்

தேவ வணமலரை ஏற்றிடும் லிங்கம்

பரமண அதணாய் பரவிடும் லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டக இதை தினமும்

சிவ சந்நிதியில் சொல்வார்

சிவலோக காட்சியுடன்

சிவன் அருளும் கொள்வார்கள்.

http://spbdevo.blogspot.com/2007/07/blog-post_12.html

Edited by nunavilan

  • தொடங்கியவர்

றொம்ப நன்றி அண்ணா... :D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான பதிவு.

கேட்ட கவரிமானுக்கும், போட்ட நுனாவிலானுக்கும் நன்றி.

5ம் பந்தி -- 3வது வரி : முந்திய வினைகளை போக்கிடும் லிங்கம்.

8ம் பந்தி -- 3வது வரி : பரமண அதணாய் பரவிடும் லிங்கம்.

  • 3 weeks later...

லிங்காஷ்டகம் ஒளி வடிவில்

Edited by vettri-vel

பாடலை பாடுபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் - நன்றி!

லிங்காஷ்டகம் ஒரு குழந்தை பாடுகிறது

  • தொடங்கியவர்

இணைப்பிற்கு நன்றி அண்ணா... :)

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் அருமையானவோர் முயற்சியாகும். சமஸ்கிருத சுலோகங்கள் தமிழில் மொழிபெயர்த்தும் தரப்பட்டுள்ளமை பாராட்டத் தக்கது.

இதைப் பார்க்கும் போது எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகின்றது.

பொதுவாக கிறிஸ்தவப் பிரார்த்தனைகளின் போது அன்றைக்குப் பாடப்படப்போகும் பாடல்கள் வாசிக்கப்படப்போகும் பைபிள் வசனங்கள் போன்றவற்றை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு அனைவரிடமும் கொடுக்கும் வழக்கமுண்டு.

அவ்வாறே இந்துக் கோயில்களிலும் சொல்லப்படவுள்ள சமஸ்கிருத மந்திரங்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்களை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆலயநிர்வாகம் அச்சிட்டு வழங்கினால் பூஜையின்போது பக்தர்கள் சொல்லப்படும் மந்திரங்களில் முழுமையாக ஒன்றித்து வணங்க ஏதுவாக இருக்கும்.

இந்த நடைமுறையைப் பரவலாக்கி கோயில்களெங்கும் செய்யும்போது தற்போது புரியாத மொழியில் அர்ச்சனை செய்கிறார்களென்ற பிரச்சனை அடியோடு மறைந்து போவதோடு எதிர்காலத்தில் தமிழ்மக்கள் வடமொழியிலும் நன்கு பரிச்சயமடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

இது பெரிய கடினமான வேலைபோல் தோன்றவில்லை. ஆலயநிர்வாகிகள் மனது வைத்தால் இலகுவில் நடைமுறைப்படுத்தலாம்.

இருமொழியிலும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வழிபாடுகள் நடைபெறும்போது பக்தியுணர்வும் உச்சமடையும் வாய்ப்புக்களுள்ளன.

யாராவது செய்யத் தொடங்குவார்களா? இது எனது ஐடியா.

அருமையான இணைப்புகள் நன்றி

இது மிகவும் அருமையானவோர் முயற்சியாகும். சமஸ்கிருத சுலோகங்கள் தமிழில் மொழிபெயர்த்தும் தரப்பட்டுள்ளமை பாராட்டத் தக்கது.

இந்துக் கோயில்களிலும் சொல்லப்படவுள்ள சமஸ்கிருத மந்திரங்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்களை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆலயநிர்வாகம் அச்சிட்டு வழங்கினால் பூஜையின்போது பக்தர்கள் சொல்லப்படும் மந்திரங்களில் முழுமையாக ஒன்றித்து வணங்க ஏதுவாக இருக்கும்.

இந்த நடைமுறையைப் பரவலாக்கி கோயில்களெங்கும் செய்யும்போது தற்போது புரியாத மொழியில் அர்ச்சனை செய்கிறார்களென்ற பிரச்சனை அடியோடு மறைந்து போவதோடு எதிர்காலத்தில் தமிழ்மக்கள் வடமொழியிலும் நன்கு பரிச்சயமடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

இது நல்ல யோசனை! அப்படி செய்தால் கோவில்களில் தப்பு தப்பாக மந்திரம் சொல்லி ஏமாற்றும் சில பிறவிகளும் திருந்த வாய்ப்பு வரும்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லிங்கம்

லிங்கம் (சிவலிங்கம்) பிறப்பினூடான வழிபாடு ஆணாதிக்க ஆபாசத்தின் தோற்றமாகும்.

பதம புராணம், ஸ்ரஸ்தி காண்டம் அத்தியாயம் 17 இல் பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம். ரிஷி பத்தினிகள் இதைக் கண்டு சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம்.

மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதி படுத்தினராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர் எங்கள் ஆணாதிக்க பக்திமான்கள்.

இதையே லிங்கபுராணத்தில் ரிஷி ஒருவர் வீடு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணை கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்த நேரம் வீடு திரும்பிய ரீஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழ கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்ற பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்த பிண்டத்தையே வழிபடும் *** இந்துக்கள்.

கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க இந்து வடிவங்கள், அதிலும் மீள் வக்கிரபுணர்ச்சியை உருவாக்கி வழிபடும் பண்பாட்டு கோயில்கள் இருக்கும் வரை ஆணாதிக்கம், இந்துராஜ்சியத்தின் பொதுவான ஒழுக்கமாக சட்ட திட்டமாக இருப்பது தவிர்க்கமுடியாது அல்லவா?

Edited by வலைஞன்

அண்ணை பகுத்தறிவு,

எனக்கு ஒரு கயானீஸ் நண்பன் ஒருத்தன் லிங்கம் என்ன எண்டு நீங்கள் சொன்ன அர்த்தத்தில் முன்பு ஒருக்கால் சொன்னான். அவன் கூட பகிடிக்குத்தான் அப்படி சொன்னான் எண்டு நான் நினைச்சன். ஆனால்.. நீங்கள் இவ்வளவு தூரம் ஆராய்ஞ்சு சொல்லி இருக்கிறீங்கள். இது உண்மையோ பொய்யோ எண்டு யாராவது விசயம் தெரிஞ்ச ஆக்கள் தான் சொல்லவேணும்.

இந்து மதம் எண்டுறது வெறும் சிவலிங்கம் மட்டும் இல்ல. நீங்கள் சொன்னமாதிரி ஆயிரம் அர்த்தத்தில பலர் இந்து மதத்தை மாத்திரம் இல்ல எல்லா மதங்களையும் கிண்டல் அடிப்பீனம்.

நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு கூடாத விசயங்களை கழித்துவிடுதலே போதுமானது. ***

Edited by வலைஞன்

லிங்கம்

லிங்கம் (சிவலிங்கம்) பிறப்பினூடான வழிபாடு ஆணாதிக்க ஆபாசத்தின் தோற்றமாகும்.

பதம புராணம், ஸ்ரஸ்தி காண்டம் அத்தியாயம் 17 இல் ???!!! :mellow::(:D

பகுத்தறிவாளரே இதுவா நம் கேள்விக்கு பதில் என்று கேட்டு விடாதீர்கள்! வெட்டிய இடத்தில் தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள் :D

Edited by வலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

லிங்காஷ்டகம் ஒளி வடிவிலும் ,பாலசுப்பிரமணியத்தின் குரலிலும் கேட்கும் போது மனதில் இனம் புரியாத புத்துணர்ச்சி ஏற்படுகின்றது. இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லிங்கம் பற்றி புராணத்தில் இருப்பதை எழுதியிருக்கிறார்கள். :mellow: இன்னும் பல கடவுள்கள் செய்தவற்றைப் பற்றி புராணங்கள் சொல்வதை பார்க்கத்தானே போகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் சொல்லாத ஒன்றை இவர் புதுசாகச் சொல்லப் போகின்றாராம். புராணக்கதைகள் பக்தியின் வெளிப்பாடு அல்ல என்பது பற்றிப் பல விவாதங்கள் நடந்தாகி விட்டது.

லிங்கம்

லிங்கம் (சிவலிங்கம்) பிறப்பினூடான வழிபாடு ஆணாதிக்க ஆபாசத்தின் தோற்றமாகும்.

பதம புராணம், ஸ்ரஸ்தி காண்டம் அத்தியாயம் 17 இல் பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம். ரிஷி பத்தினிகள் இதைக் கண்டு சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம்.

மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதி படுத்தினராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர் எங்கள் ஆணாதிக்க பக்திமான்கள்.

இதையே லிங்கபுராணத்தில் ரிஷி ஒருவர் வீடு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணை கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்த நேரம் வீடு திரும்பிய ரீஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழ கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்ற பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்த பிண்டத்தையே வழிபடும் *** இந்துக்கள்.

கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க இந்து வடிவங்கள், அதிலும் மீள் வக்கிரபுணர்ச்சியை உருவாக்கி வழிபடும் பண்பாட்டு கோயில்கள் இருக்கும் வரை ஆணாதிக்கம், இந்துராஜ்சியத்தின் பொதுவான ஒழுக்கமாக சட்ட திட்டமாக இருப்பது தவிர்க்கமுடியாது அல்லவா?

அருமையான தகவல் தோழர். பதிவுக்கு நன்றி! :D

பெண்கள் எல்லாம் சிவலிங்கத்தை இனி வழிபடும் முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

விதண்டாவாதம் செய்வதும்.. உட்பொருளை அறியும் ஞானமின்மையுமே.. இங்கு சமயம் சார்ந்த பகுத்தறிவாகி நிற்கிறது. இவை பகுத்தறிவல்ல.. படிக்காதறிவு..!

சிவலிங்கம் என்பதன் உண்மைப் பொருள்..

மூலவர் :

கருவறையில் உள்ள சிவலிங்கமே மூலவர்.லிங்கம் என்பது ஓர் அடையாளமே.லிங்கம் என்பதை லிம் + கம் எனப் பிரிப்பர். லிம் என்றால் அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்குமிடம் என்றும் கம் என்றால் ஒடுங்கிய பொருள் மீண்டும் தோன்றுமிடம் என்றும் பொருள்.காண முடியாத இறைவனைக் காணும் ஒரு அடையாளமே சிவலிங்கம்.

லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்மபாகம் என்றும், ஆவுடையார் (நடுப்பாகம்) விஷ்ணுபாகம் என்றும், பானம் (மேல் குவளை) ருத்ரபாகம் என்றும் அழைப்பர். சிவலிங்கம் பல வகைப்படும்.தானே தோன்றியது சுயம்புலிங்கம். விநாயகர், ராமன், முருகன் போன்ற கணங்களால் ஸ்தாபிக்கப்பட்டது கணலிங்கம். இருடிகள் ஸ்தாபித்தது தைவீக லிங்கம், மனிதர்கள் செய்து வைத்தது மானுடலிங்கம் எனப்படும்.

சிவலிங்கத்தை வழிபட்டால் யாவற்றையும் வழிபட்டதாகப் பொருள் கொள்ளப்படும். நினைத்தாலும், தரிசித்தாலும் அப்படியே.சிவலிங்க வழிபாட்டுப் பெருமையை 28 ஆகமங்கள் விரிவாகப் பேசுகின்றன. இக் கலியுகத்தில் சிவனுடைய சக்தியை அறியப் பாரெங்கும் பல "லட்சக்கணக்கான சிவத்தலங்கள் உள்ளன. ஒரே தலத்தில் பல விதமான லிங்கங்கள் உள்ளன.கலியுகத்திற்கு சிவஞானமே சிறந்த ஞானம்.

ஆலய வழிபாட்டின் நோக்கம் மிருகத்தன்மை ஒழிய வேண்டும். மனிதத் தன்மையும் அடங்க வேண்டும். தெய்வத் தன்மையை ஒளி வீசச் செய்ய வேண்டும் என்பதே.

http://www.aaraamthinai.com/aanmeegam/2003...23aanmeegam.asp

உட்பொருளை அறியும் ஞானமின்மையுமே..

உட்பொருளை அறிந்ததால் தான் பகுத்தறிவு பிறக்கிறது. லிங்கத்தின் மூலம் எது என்பதை அறிந்ததால் தான் நகைப்பு மலர்கிறது :D

  • கருத்துக்கள உறவுகள்

உட்பொருளை அறிந்ததால் தான் பகுத்தறிவு பிறக்கிறது. லிங்கத்தின் மூலம் எது என்பதை அறிந்ததால் தான் நகைப்பு மலர்கிறது :D

இப்படி நீங்களாகவே சொல்லிக் கொள்கிறீர்களே தவிர.. உட்பொருளை அறிந்த அறிவு வெளிப்படவில்லையே...! நீங்கள் பேசிக் கொள்வதெல்லாம்.. அறியாமைகளின் பிரதிபலிப்புக்கள். அவைதான் இங்கு பகுத்தறிவாகக் காட்டப்படுகின்றன. அவ்வளவும் தான். :(

லிங்கம் என்ற சொல்லுக்கே பல பொருள் உண்டு. ஆனால் நீங்கள் ஆண்குறி என்பதை இலக்கு வைத்து ஆன்மீகப் பொருளை மறைக்கச் செய்கிறீர்கள். இது பகுத்தறிவல்ல. படிப்பறிவற்ற நிலை..!

-இறைவனின் வடிவம்

-நோய்க்கான அறிகுறி

-ஒரு புள்ளி அல்லது மறு

-சான்று அல்லது சான்றுக்கான வழிமுறை

-விளைவு அல்லது முதற் காரணத்தில் இருந்து உருவாகும் ஒன்று.

-பால் குறிக்கும் இலக்கணக் கருத்துரு.

-ஆண்குறி.

என்பனவும் அடங்கும்.

http://ta.wikipedia.org/wiki/

லிங்கம் என்பது ஆண்குறி. ஆண்குறி என்பது பால் குறிக்கும் இலக்கணக் கருத்துரு. இந்த ஆண்குறித் தத்துவம் விளைவு அல்லது முதற்காரணம் பற்றி சிந்தனையின் வெளிப்பாடு ஆகும். பிறப்பின் சான்று அல்லது சான்றுக்கான வழிமுறையும் இந்த ஆண்குறிதான். மனித உருவாக்கத்தின் ஒரு புள்ளி பற்றி சிந்தித்தால் அங்கும் ஆண்குறி வருகிறது.

புராணங்களில் வருவது போன்று சிவன் ஆண்குறியை பல இடங்களில் பயன்படுத்தினால், அங்கு நோயின் அறிகுறி தோன்றும்.

இந்த ஆண்குறியை இந்துக்கள் இறைவனின் வடிவம் என்று வணங்குவார்கள்.

சரி, இப்பொழுது சீரியசான ஒரு கேள்வி!

ஆண்குறியை குறிக்கின்ற லிங்கத்தை பெண்கள் தொட்டு வணங்குவதைப் பற்றி 21ஆம் நூற்றாண்டில் வாழும் யாழ் கள உறவுகள் என்ன நினைக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சிவலிங்கம் என்பது சிவனுடைய லிங்கம் என்பதல்ல பொருள். சிவன் மனித வடிவினன்.. மனிதன் போன்ற ஆணுறுப்பைக் கொண்டவன் என்பது சைவத்தின் உட்பொருள் அல்ல. இவை சைவ சமயத்தை தவறாக இனங்காட்ட என்று சிலர் தமக்குள் வரையறுத்துக் கொண்ட திரிபுகள்.

சிவலிங்கம் என்பது அகிலமும் ஒருங்கிய ஒரு அடையாளக் குறியீடு. அது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை பதி பசு பாசம் எனும் நிலைகளை உணர்த்துகின்றன.

பதி - அகிலத்தின் இயக்கத்துக்கான சக்தியின் நிலை. (இதையே இறைவன் என்று வரையறுக்கின்றனர்)

பசு - தனி உயிர்களின் இயக்கத்துக்கான சக்தியின் நிலை (இதையே உயிர் என்று வரையறுக்கின்றனர்.)

பாசம் - உயிர்களிடையே உணர்வுகளை ஊட்டு அவ்வற்றை பகிர்வித்து உயிர்கள் வாழ ஆசையை அளிக்கும் சக்தியின் நிலை.

இதை எளிமையான உருவவடிவில் அடையாளப்படுத்துவதுதான் சிவலிங்கம்.

அதை தொட்டு வணங்குதலோ.. அல்லது அதைப் பற்றி அறிவதோ எதுவும் கேடானது அல்ல. அது அகிலமும் உயிரும் என்பது பற்றிய ஒரு ஆன்மீகக் குறியீடு என்பதால் மக்கள் தாராளமாக தொட்டு வழிபடலாம்.

ஆண் பெண் என்ற பிரிவினைக்கு அப்பால் எல்லோரும் உயிர்கள். உயிரின் அடிப்படையில் எவரும் சிவலிங்கம் என்ற அந்த அகிலத்தின் இருப்பு இயக்கம் அங்கு உயிரின் இருப்பு இயக்கம் பற்றிய குறியீட்டை வழங்கும் சிவலிங்கத்தை அடையாளப்படுத்தி கெளரவிப்பதில் பிரச்சனைப் படத் தேவையில்லை..!

ஒரு பெரிய அறிவியல் உண்மையின் சிறிய வடிவமோ சிவலிங்கம்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sivalingam.jpg

சிவ சிவா

  • கருத்துக்கள உறவுகள்

யோகக்கலைஞர் சுவாமி தர்மானந்தா அவர்களின் கூற்றுப்படி சிவலிங்கம் என்பது மனதை ஒருநிலைக்கு கொண்டு வரக்கூடிய ஒரு அமைப்பு என்று கூறுகின்றார்...

According to Swami Dharmananda[11] who is a master of Yoga there is a mysterious power in the Linga, its shape has been designed to induce concentration of the mind. Just as the mind is focused easily in crystal-gazing, so also the mind attains one-pointedness, when it looks at the Linga. That is the reason why the ancient Rishis and the seers of India have prescribed Linga for being installed in the temples of Lord Shiva.[12]

- விகிபிடீயா..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.