Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் ரகுவரன் காலமானார்

Featured Replies

சென்னை : பிரபல கோலிவுட் சினிமா வில்லன் நடிகர் ரகுவரன் காலமானார். ஏழாவது மனிதன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரகுவரன் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார். நடிகை ரோகினியை இவர் திருமணம் செய்துள்ளார். சமீப காலமாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர் சென்னை மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் மிகவும் உடல்நலம் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

ஆதாரம் தினமலர்

அட...அட நேக்கு அழுகை அழுகையா வருது.. :( (ஜம்மு பேபியின் வேவரிட் வில்லன் நடிகர் அல்லோ :lol: ) அவருக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலிகள்.. :D (இதில இருந்து ஜம்மு பேபி ஒரு பொயிண்டை கச் பண்ணிட்டு அதாவது கீரோவாக இருந்தாலும் வில்லனாக இருந்தாலும் :lol: )...ஒரு நாள் கண்டிப்பா போய் தான் ஆக வேண்டும் என்று..(நிசமா என்னால முடியல்ல :lol: )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா கீரோ எல்லாம் வாழ்க்கையில கீரோவும் இல்லை வில்லன் எல்லாம் வாழ்க்கையில வில்லனும் இல்ல"... :D

ரகுவரன் நடிப்பில் ஜம்மு பேபியை கவர்ந்த காட்சி..(ம்ம்ம்...சிறந்ததொரு வில்லன் நடிகர் என்பது யாராலும் மறக்க முடியாது :) )..

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

இன்று என்ன துன்பியல் நாளா ..? சிறந்த நடிகர். போதையின் பிடியில் சீரழிந்தவர் ...

என் ஆழ்ந்த அனுதாபங்கள் & கண்ணீர் அஞ்சலிகள் ..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் & கண்ணீர் அஞ்சலிகள்

நடிகர் ரகுவரன் இன்று காலை உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தார்.

நடிகர் ரகுவரன் 'ஏழாவது மனிதன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்

காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு அவர் வில்லன், குணச்சித்திர

நடிகர் என பல பரிணாமங்களில் தமிழ் மற்றும் பிற மொழிகளில் ஜொலித்தார்.

அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் விசுவின் 'சம்சாரம் அது

மின்சாரம்', 'பாஷா', 'சிவா', 'அமர்க்களம்' 'காதலன்', 'லவ் டுடே', 'முகவரி',

'முதல்வன்', 'சிவாஜி' போன்ற பல படங்களை குறிப்பிடலாம். கடைசியாக

அவர் 'சில நேரங்களில்' என்ற படத்தில் நடித்துள்ளாôர்.

ரகுவரன் நடிகை ரோகினியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அவரின் போதைப் பழக்கமே குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்பட காரணமாக

அமைந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும்

பிரிந்து வாழ்கின்றனர். இவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.

நடிகர் ரகுவரன் சமீபகாலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இவர் சிகிச்சைக்காக சென்னை மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் மரணமடைந்தார்.

தினமணி

என்னத்தைச் சொல்ல... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

rohini-raghuvaran250_19032008.jpg

சென்னை: பிரபல நடிகர் ரகுவரன் காலமானார். அவருக்கு வயது 59.

வில்லன், ஹீரோ, குணசித்திரம் என பல்வேறு பாத்திரங்களில் நடித்த மிகச் சிறந்த நடிகர் ரகுவரன்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரகுவரன் பல காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நிலை மிகவும் மோசமாகி சென்னை த்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இன்று காலை 6 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.

என்பதுகளில் தமிழில் அறிமுகமான முக்கிய நடிகர்களில் ஒருவர் ரகுவரன். அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம், மக்கள் என் பக்கம், மனிதன், ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா மற்றும் முதல்வன் படங்கள் மறக்க முடியாதவை. 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

கே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர் படத்தில் சைகோத்தனமான வில்லன் என்ற பாத்திரத்துக்கு புதிய பரிமாணம் கொடுத்திருப்பார் ரகுவரன்.

இடையில் கூட்டுப்புழுக்கள், மைக்கேல் ராஜ், என்வழி தனிவழி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இதில் கூட்டு புழுக்களில் அவரது எதார்த்தமான நடிப்பு மறக்க முடியாதது.

ரஜினிக்கு மிகப் பிடித்த நடிகர்களில் ஒருவர் ரகுவரன். அதனால்தான் அவரை தனது பெரும்பாலான படங்களில் நடிக்கச் செய்திருந்தார்.

சிவாஜியில் கூட சில காட்சிகளில் நடித்திருந்தார் ரகுவரன்.

சமீபத்தில் ரிலீசான தொடக்கம் படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்திருந்தார் ரகுவரன். அவர் நடித்து கடைசியாக வந்த படம் சில நேரங்களில். இதில் சைக்கோத்தனமான மருத்துவர் வேடத்தில் நடித்திருந்தார்.

யாரடி நீ மோகினி, அஜீத்தின் புதிய படம் ஆகியவற்றிலும் அவர் நடித்து வந்ததார்.

ரோகிணியுடன் திருமணம்- பிரிவு:

ரகுவரனுக்கு குடி போதைப் பழக்கம் இருந்தது.

அவரை இந்த கொடிய பழக்கத்திலிருந்து மீட்க முயன்றவர்களில் ஒருவர்தான் ரோகினி. நாளடையில் இந்த பழக்கம் காதலாக மாறியது. நடிப்புத் தொழிலில் மிக உச்சத்தில் இருந்த நேரத்தில் ரோகினியை திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகள் இருவரும் இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்தனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். ரகுவரனை போதைப் பழக்கத்திலிருந்து திருத்த முடியவில்லை என்றும், அவருடன் தொடர்ந்து வசிப்பது கடினம் என்பதாலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் ரோகிணி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் போதையிலிருந்து இப்போது முழுவதுமாக மீண்டுவிட்டதாக ரகுவரன் கூறியிருந்தார்.

இடையில் தனது மகனை மட்டும் அடிக்கடி பார்த்து வந்தார் ரகுவரன்.

நடிப்பைத் தவிர இசையில் தீவிர ஆர்வம் இருந்த்து ரகுவரனுக்கு. சில இசை ஆல்பங்களையும் தயாரித்திருந்தார். தீவிர சாய் பாபா பக்தரான ரகுவரன் தனது மகனுக்கு சாய் சித்தார்த் என்றே பெயர் சூட்டியிருந்தார்.

ரகுவரன் வாழ்க்கைக் குறிப்பு:

1948ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கோவையில் பிறந்தவர் ரகுவரன். இவரது குடும்பத்தின் பூர்வீகம் கேரளா.

ஏழாவது மனிதன் படம்தான் ரகுவரன் நடித்த முதல் படம். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரகுவரன் பின்னர் வில்லன் கேரக்டர்களுக்கு மாறினார். இதுதான் அவரது பன்முக நடிப்புக்கு வழிவகுத்தது. வித்தியாசமான வில்லத்தனத்தைக் காட்டி நடித்த ரகுவரனுக்கு குறுகிய காலத்திலேயே பெரும் பெயர் கிடைத்தது.

சத்யராஜுடன் நடித்த மக்கள் என் பக்கம், பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் கலக்கினார்.

ஒரு மனிதனின் கதை என்ற தொலைக்காட்சித் தொடரில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதில் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் குடிகாரனாக மாறி கடைசியில் எப்படி சீரழிகிறான் என்பதுதான் அந்த தொடரின் கதை.

ரகுவரனின் நடிப்புக்குப் பெயர் போன படங்கள் அஞ்சலி, பாட்ஷா, புரியாத புதிர், முதல்வன் என பல படங்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ரகுவரன். அவருடன் நடிக்காத ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், விஷால், சூர்யா, சிம்பு, தனுஷ் ஆகியோருடனும் நடித்துள்ளார் ரகுவரன். இளம் நடிகர்களுக்கு நல்ல ஆலோசகராகவும் விளங்கினார்.

தனது நடிப்பாற்றலால், தென்னாட்டு அல் பசினோ என்றும் புகழப்பட்டவர் ரகுவரன். அவரது மரணம், தமிழ்த் திரையுலகுக்கு பெரும் இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

இரங்கல்:

ரகுவரனின் மறைவு பல நடிகர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ரகுவரன் உண்மையிலேயே ஒரு இணையில்லா நடிகர் என்றும் அவரது மறைவு தன்னை பெரும் துயரத்துக்கு உள்ளாக்கியிருப்பதாகவு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் ஆகியோரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

thatstamil.com

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களும், அஞ்சலிகளும். :D:D

போதையின் பாதையில்

புத்தியை விட்டார்..

தொழிலை விட்டார்..

குடும்பத்தை விட்டார்..

திருந்திய போது தாமதம்..

உயிரையே விட்டார்..

சிறந்த நடிகன்.. யாரோ மிகப் பரிச்சயமான ஒருவரை இழந்ததாக மனம் நினைக்கிறது...

ஆழ்ந்த அனுதாபங்கள்

சிறந்த நடிகன்.. யாரோ மிகப் பரிச்சயமான ஒருவரை இழந்ததாக மனம் நினைக்கிறது...

ஆழ்ந்த அனுதாபங்கள்

கண்ணீர் அ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போன வாரம் தான் எல்லோருக்கும் பிடித்த நடிகன் (வில்லன்) ரகுவரன் பற்றி எழுதினோம். இவ்வாரம் அவர் எங்களுடன் இல்லை. ரகுவரன் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக்கவர்ந்த நடிகர்களில் முக்கியமானவர் அமரர் ரகுபரன்.

அவரை இழந்து தவிக்கும் சகல தரப்பினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனிதர் ரகுவரன்

Wednesday, 19 March, 2008 02:40 PM

.

சென்னை, மார்ச் 19: நடிகர் ரகுவரன் மரியாதை தெரிந்த நல்ல மனிதர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

.

சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகர் ரகுவரன் உடலுக்கு மலர்மாலை வைத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: "இது எங்க பூமி' என்ற படத்தில் தான் நாங்கள் இருவரும் ஒன்றாக நடித்தோம். அவர் ஒரு நல்ல மனிதர். நல்ல நண்பர். மரியாதை தெரிந்தவர்.

கதாநாயகனாக அறிமுகமான போதிலும் குணசித்திர நடிப்பில் சிறந்து விளங்கியவர்.

"திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு நீங்கள் ஆதரவு தருவதால் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்' என்று அடிக்கடி என்னிடம் ரகுவரன் கூறுவார்.

இன்று காலை சட்டசபைக்கு போகும் போது தான் எனக்கு தகவல் கிடைத்தது. அவசரம் அவசரமாக கிளம்பி இங்கே வந்திருக்கிறேன். என்னால் அவரது மறைவை இன்னும் நம்ப முடியவில்லை.

கடைசி காலத்தில் கோயில், குளம் என்றும் புண்ணியத் தலங்களில் ஈடுபாடு காட்டினார். நேற்று வரைக்கும் மிகுந்த நம்பிக்கையுடன் வாழ்க்கையை அவர் எதிர்கொண்டார்.

ரகுவரனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

malaisudar.com

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கமல் ஏன் இவருடன் நடிக்கவில்லை? தன்னை மிஞ்சிவிடுவார் என்ற பயமா?

மேலும் ரகுவரனுக்கு கூட்டுப்புழுக்கள் படத்தில் நடிக்கும் போது அமலாவில் காதல் வந்ததாம், ஆனால் அமலா தன்னை ஏற்பாரோ மாட்டரோ என்று காதலை சொல்லாமலே விட்டுவிட்டதாக ரகுவரனே முன்பு ஒருமுறை கூறியிருந்தார்.

எனது விருப்பமான வில்லன் குணசித்திர நடிகரான ரகுவரனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

2000 ஆண்டு யிலை மாத " ஆனந்த விகடன் " சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டி ஓன்றில் கேட்கப்பட்ட கேள்வி n அதற்கு ரகுவரன் கொடுத்த பதில்.

கேள்வி - உங்களுக்கு பிடித்தமான அல்லது ஆச்சரியமான நிகழ்வு என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள் ?

ரகுவரன்- நான் சினிமாவுக்கு நடிக்க வந்தது நான் சிறந்த வில்லன் நடிகனாக இருப்பது உலகத்து ஏழு அதிசயங்கள் ஏழு இல்லை இல்லவே இல்லை இவை எவையும் எதுவுமே இல்லை எனது அதிசயமெல்லாம் அயல்நாட்டில் வெறும் ஆயிரக்கணக்கானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஓரு அரசாங்கத்தையே உலுப்பி எடுத்துக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளையும் பிரபாகரனையும் தான் அதிசயமாக பார்க்கிறேன்.

என்று தொடர்ந்திருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சிறந்த வில்லன் நடிகர் யார் என்ற கேள்விக்கு பலர் ரகுவரனையே குறிப்பிட்டு இருந்தனர்.இன்று அவர் நம் மத்தியில் இல்லை.என்றாலும் அவரின் பேரும் புகளும் என்றும் நிலைத்து நிக்கும்.அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில காட்சிகள் ரகுவரனின் நினைவாக

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அணுதாபங்கள் :D:D

  • கருத்துக்கள உறவுகள்

நீரழிவு நோயால் உடல் நலம் பாதிப்பு நடிகர் ரகுவரன் திடீர் மரணம்

3/19/2008 5:25:55 PM

வீரகேசரி இணையம் - ரகுவரன் மதுவுக்கு அடிமையாகி அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் நீரழிவு நோயாலும் அவதிப்பட்டார். அவரது காலில் கட்டிவந்தது. அதை அண்மையில் ஆபரேஷன் செய்து அகற்றினார்கள்.

இதற்காக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சலும் இருந்தது. இன்று அதிகாலை அவரது உடல்நிலை திடீரென்று மோசமானது. அதிகாலை 4.30 மணிக்கு மயங்கிய நிலையில காணப்பட்டார்.

அவரை சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ரகுவரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அவரது மனைவி ரோகினி ஆஸ்பத்திரிக்கு சென்று ரகுவரன் உடலை பார்த்து கதறினார். பின்னர் அவரது உடல் தியாகராய நகர் ஜெகதாம்பாள் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. உடல் அருகே ரோகினி, மகன் சாய்ரிஷியுடன் சோகமாக இருந்தார். தந்தை உடலை கண்டு மகன் சாய்ரிஷி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

உறவினர்களும், திரையுலக பிரமுகர்களும் அங்கு கூடினார்கள். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நாளை மாலை 5 மணிக்கு கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, நடிகர்கள் சத்யராஜ், விஜய், அப்பாஸ், தலைவாசல் விஜய், விவேக், எம்.எஸ்.பாஸ்கர், நடிகை ரேவதி உட்பட ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

ரகுவரன் வில்லன், குணசித்திர வேடங்களில் கலக்கியவர். கத்தி ரத்தம் மூர்க்கத்தனமான சண்டைகள்தான் வில்லன் வேடத்துக்கு தேவை என்பதை உடைத்து அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண மனிதனாக வந்து வில்லத்தனத்தை கச்சிதமாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழில் ஏழாவது மனிதன் படத்தில் அறிமுகமானார். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் குணசித்திர வேடத்தில கலக்கினார். புரியாத புதிர் படத்தில சைக்கோ கணவராக இவர் பேசிய ஐநோ ஐநோ வசனம் பிரபலம். நேருக்கு நேர், அஞ்சலி படங்களில் முக்கிய வேமேற்றார். முதல்வன் படத்தில் இவரது முதல் மந்திரி பாத்திரம் பேசப்பட்டது. ரஜினி படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். மனிதன், ராஜா சின்னரோஜா, முத்து சமீபத்தில் வெளியான சிவாஜி படத்தில் வநதார்.

பாட்ஷாவில் இவர் நடித்த மார்க் ஆண்டனி கேரக்டர் பாப்புலர். கடைசியாக விக்ரமுடன் பீமாவில் நடித்து இருந்தார். தற்போது இந்திர விழா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். டெலிவடிஷன் தொடர்களிலும் நடித்து இருக்கிறார். ரகுவரனுக்கும், நடிகை ரோகினிக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு சாய்ரிஷி (வயது 8) என்ற குழந்தை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆழ்ந்த அனுதாபங்கள்

:D

அற்புதமான ஒரு நடிகர். திரையில் தனது வித்தியாசமான நடிப்பாற்றலால் அனைவரையும் கவர்ந்தவர். அவர் வசனங்களை இழுத்து இழுத்து பேசும் முறை கூட அவர் நடிப்பிற்கு கை கொடுத்தது.

அன்னாருக்கு எமது இதய பூர்வமான அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் அமரர் ரகுவரனுக்கு. ஒரு திரைப் படத்தில் நடக்க இயலாத ஆனால் நம்பிக்கையுள்ள பேராசிரியராக நடித்திருந்தார். அப்படத்தில் அவருக்கு தமிழ்ச் செல்வன் என்று பெயர். திரைப் படத்தின் பெயர் நினைவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போதையின் பிடியில் சிக்கி இருந்தாலும் எல்லோர் மனசிலும் நிரந்தரமான ஒரு பிடிப்பை ஏற்படுத்தியவர் நடிகர் ரகுவரன். திரையில் அவரைப்போல் வில்லனாகவோ, குணச்சித்திரமாகவோ யாரும் அவரிடத்தை நிரப்ப முடியாது. நிஜமாகவே கண்கள் பனிக்கின்றன.

ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாருக்கு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.