Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்னல் தாக்கி 3 படையினர் பலி- 63 பேர் காயம்

Featured Replies

பொலநறுவ மாவட்டம் மின்னேரியாவில் சிறிலங்காப் படையினரின் பயிற்சித்தளத்தில் மின்னல் தாக்கி 3 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 63 படையினர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

மின்னலின் இப்பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்கா இந்தியா உட்பட நாடுகள் கண்டிக்க வேண்டும் என்று இத்தாக்குதலை அடுத்து அவசரமாகக் கூடிய சிறீலங்காவின் பாதுகாப்புச் சபையில் கோத்தபாயவின் கோரிக்கையை அடுத்து மகிந்த கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சரத் பொன்சேகா மின்னலுக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ரகசியத் தொடர்புகளை கண்டறியும் சாதனங்களை " பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் கீழ்" தமது படையினருக்கு தந்துதவ வேண்டும் என்று இந்தியா சீனா ரஷ்சியா பாகிஸ்தான் இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகளை அவசரமாகக் கேட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே சிறீலங்கா அரசு கரும்புலிகளுக்கு அறிவித்தது போல காலம் தாழ்த்தாது மின்னலை பிடிப்பவர்களுக்கு அல்லது அதை சரணடைய வைப்பவர்களுக்கு 2கோடி ரூபாவும் வெள்ளை மாளிகைக்கு அருகில் வசிக்க அமெரிக்க கிரீன் காட்டும் வாங்கித் தருவதாக அறிவித்துள்ளது.

இத்தாக்குதல் குறித்து கருத்துக் கூறிய இக்பால் அத்தாஸ் புலிகளுக்கும் மின்னலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ரகசியத் தொடர்பே உலகில் முதன் முதலில் ஒரு ஆயுதக் குழுவுடன் மின்னல் ஏற்படுத்திய தொடர்பு என்று கூறியதுடன் இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் அமெரிக்காவைக் கூட புலிகள் நினைத்த நேரத்தில் தாக்கலாம் என்று எச்சரித்தார்.

இந்தியப் பாதுகாப்பமைச்சர் இது குறித்துக் கூறுகையில் இந்தியா இத்தாக்குதலின் பின் நிலவரங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கூறினார்.

புலம்பெயர்ந்த மக்களின் ஆய்வாளர்கள்.. புலிகளுக்கும் மின்னலுக்கு எவ்வகையில் தொடர்புகள் ஏற்பட்டன என்பதை பற்றி தீவிரமாக யோசித்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன..!

ஏப்ரல் பூல்.. செய்தியல்ல நான் எழுதியவை.

Edited by nedukkalapoovan

:lol: பிந்தி கிடைத்த செய்திகளின் படி மகிந்தா

சகோதரர்கள் இந்த இரகசியத்தை

தமது இரகசிய புலனாய்துறையூடாக கண்டறிந்துள்ளதாக

கொத்தபாய .காம் தெரிவித்துள்ளது... :lol:^_^:(:D:wub::wub::wub: .

யார் நம்ம யாழ் கள மின்னலா தாக்கினார்? :wub::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனாதிபதி ஓட்டைவாயா அமெரிக்காவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இது உண்மையில் மின்னல்தான் தாக்கியதா அல்லது புலிகள் ஏதாவது புதுவிதமான ஆயுதங்களை பாவித்துள்ளனரா என்றறிய அமெரிக்க நிபுணர்களை உடனடியாக அனுப்பி வைக்கும்படி.

புலிகள் ஏதோ முறையில் மின்னலை இராணுவ தளத்தின் மீது தாக்க வைத்துள்ளனர். பெரும்பாலும் இராணுவத்தினர் பதுங்கு குளிகளில் இருப்பதனால் அதிக சேதம் இல்லாமல் தப்பித்துக் கொண்டனர். மனிதாபிமனம் இல்லாத புலிகள் மினஇனல் மூலம் தாக்குதலை அறிமுகப்பத்தியது உலகத்திற்கே பெரும் ஆபத்து. அதனால் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து புலிகளை அழிக்க வேண்டும் என்று கேலிக்குரிய ரம்புக்கவெல பத்திரிகையாளர் மகா நாட்டில் கூறியுள்ளார்.

ஆகா.. கிளம்பிட்டாங்கையா...கிளம்பிட

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு மின்னலும் ஆதரவு.

  • கருத்துக்கள உறவுகள்

:wub: அடிடா சக்கை, எல்லாருமாச் சேர்ந்து தூள் கிளப்புறீங்க போல கிடக்கு ?!!!!!

அதுசரி, இப்ப எந்த மின்னலைப் பற்றிக் கதைக்கிறோம் ???

ஆ.... நம்ம மின்னலா?

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் தாக்குதலில் உயிரிழந்த படையினர் தொகை 4 காக அதிகரித்துள்ளது.

4 SLA soldiers die, 59 wounded, lightning strikes SLA garrison

[TamilNet, Tuesday, 01 April 2008, 16:43 GMT]

Four soldiers of the Sri Lanka army were killed when lightning struck a group of soldiers when they were engaged in physical exercise in Minneriya garrison Tuesday evening around 5:30 p.m. 59 soldiers were injured, Brigadier Udaya Nanayakara, military spokesman told media.

Lightning struck a group of SLA soldiers when they were engaged in physical exercise, according to Udaya Nanayakara.

The wounded soldiers were immediately admitted to the Polonnaruwa general hospital.

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் தந்த பாடம் படைகளுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரவெசரண்ண........யூ ஓல்ரைற்???????????

மின்னலின் இப்பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்கா இந்தியா உட்பட நாடுகள் கண்டிக்க வேண்டும் என்று இத்தாக்குதலை அடுத்து அவசரமாகக் கூடிய சிறீலங்காவின் பாதுகாப்புச் சபையில் கோத்தபாயவின் கோரிக்கையை அடுத்து மகிந்த கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சரத் பொன்சேகா மின்னலுக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ரகசியத் தொடர்புகளை கண்டறியும் சாதனங்களை " பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் கீழ்" தமது படையினருக்கு தந்துதவ வேண்டும் என்று இந்தியா சீனா ரஷ்சியா பாகிஸ்தான் இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகளை அவசரமாகக் கேட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே சிறீலங்கா அரசு கரும்புலிகளுக்கு அறிவித்தது போல காலம் தாழ்த்தாது மின்னலை பிடிப்பவர்களுக்கு அல்லது அதை சரணடைய வைப்பவர்களுக்கு 2கோடி ரூபாவும் வெள்ளை மாளிகைக்கு அருகில் வசிக்க அமெரிக்க கிரீன் காட்டும் வாங்கித் தருவதாக அறிவித்துள்ளது.

இத்தாக்குதல் குறித்து கருத்துக் கூறிய இக்பால் அத்தாஸ் புலிகளுக்கும் மின்னலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ரகசியத் தொடர்பே உலகில் முதன் முதலில் ஒரு ஆயுதக் குழுவுடன் மின்னல் ஏற்படுத்திய தொடர்பு என்று கூறியதுடன் இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் அமெரிக்காவைக் கூட புலிகள் நினைத்த நேரத்தில் தாக்கலாம் என்று எச்சரித்தார்.

இந்தியப் பாதுகாப்பமைச்சர் இது குறித்துக் கூறுகையில் இந்தியா இத்தாக்குதலின் பின் நிலவரங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கூறினார்.

புலம்பெயர்ந்த மக்களின் ஆய்வாளர்கள்.. புலிகளுக்கும் மின்னலுக்கு எவ்வகையில் தொடர்புகள் ஏற்பட்டன என்பதை பற்றி தீவிரமாக யோசித்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன..!

ஏப்ரல் பூல்.. செய்தியல்ல நான் எழுதியவை.

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலுக்கு தமிழீழ மின்னல் படை உரிமை கோரியதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் இந்த மின்னல் தாக்குதலால் தமக்கு நேரடி அபாயம் இல்லை என்ற போதிலும் நிலமையை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஒரு தொகுதி படையினரை தனுஸ் கொடியில் நிலைகொள்ள வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நாறாயணன் தெரிவித்தார்.

Edited by Manivasahan

மின்னலின் சக்தியை வெளிக்காட்ட ஒரு சினிமா படம் தயாரிக்க பட உள்ளது 'மின்னலுக்கு மரியாதை'... சென்னையில் தானாம் முதல் பிரிண்டு...

:wub::):D

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் மின்னல் படையினால் இந்தியாவுக்கு அபாயம் என்பதினால் தமிழகக் கரையோரங்களில் மின்னல் எதிர்ப்பு பிரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளதாக அந்தோணி தெரிவித்துள்ளார் - தினமலர்.

மின்னல் எதிர்ப்புக் கருவிகளை இந்தியா சிறிலங்காவுக்கு வழங்கல் - திவியன.

விடுதலைப்புலிகளின் மின்னல் படையினார் தமிழகத்தில் ஊடுறுவல், அமைதிப்பூங்காவான தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை, கருணாநிதியின் ஆட்சியைக் கலைக்கும்படி புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா கோரிக்கை - ஜெயா தொலைக்காட்சி.

இதுவும் ஏப்பிரல் பூல் செய்தியோ இல்லாட்டி உண்மையில இப்படி நடந்ததோ?

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் காலங்களில் சிங்கள இராணுவத்தைச் சார்ந்த் ஒவ்வொருவரின் தலையிலும் இடி தாங்கி பொருத்தப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா படையினருக்கு எதிரான எமது தாக்குதல் நடவடிக்கை தொடர்பான ஊடக அறிக்கை.

தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான போர் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக அவர்களின் பயிற்சித் தளத்தில் வைத்து நேற்று மாலை எமது சிறப்பு அணியினர் வெற்றிகரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மின்னேரியா கட்டுக்கலியாவ படைய பயிற்சித் தளத்தில் பயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படையினர் வெட்டவெளியில் ஒன்று கூடும்வரை காத்திருந்த எமது அணிகள் திடிரென ஒரு அதிரடிப் பாய்ச்சலை நடத்தின.

இதன்போது பல படையினர் எமது தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தும், படுகாயமடைந்துமுள்ளனர். எமது தாக்குதலால் குழப்பமடைந்த தாக்குதலில் பாதிப்படையாத ஏனைய படையினர் புலிகளின் வான்படையே தாக்குதலை நடத்தியதாக நினைத்து வழமைபோன்று வானை நோக்கி கண்மூடித்தனமாக தமது சூடுகலன்களால் தாக்குதலை நடத்தின.

எனினும் இவர்களை நோக்கி எமது அணியினர் இரண்டாவது தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமது சகாக்களையும் விட்டுவிட்டு கட்டடங்கள், மரங்களிற்குள் கீழ் ஏனைய படையினர் பதுங்கி தப்பித்துக் கொண்டனர். இதனையடுத்து எமது தாக்குதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

இந்த வெற்றிகரத் தாக்குதலின் போது ஐந்து வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் 75 வரையான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா படையினருக்கு எதிராக எம்மால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடியதாக நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:

மின்னல்

தளபதி

சிறப்பு தாக்குதல் அணி

:wub:

பொலன்னறுவை மின்னேறிய கட்டுகுளியாவ இராணுவ முகாமில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த படையினர் மீது நேற்று மின்னல் தாக்கியது. இதில் படுகாயமடைந்த 3 படையினரில் ஒருவர் இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மின்னல் தாக்கியதில் நேற்று 4 படையினர் உயிரிழந்தனர்.இதில் படுகாயமடைந்த 62 படையினர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இவர்கள் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள மேலும் இருவரின் நிலை கவலைகிடமாக உள்ளது எனவும் வைத்தியசால வட்டாரங்கள்

தெரிவித்தன.

http://isoorya.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.