Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்க் உச்சி மாநாட்டின் பாதுகாப்புக்கென 3000 இந்தியச் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் இலங்கையில் களமிறங்கவுள்ளனர்

Featured Replies

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான இராசதந்திரிகள் குழுவினரின் இலங்கைக்கான திடீர் பயணத்தின் நோக்கம் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விடயங்களே இவர்களின் வருகையின் முக்கிய கருப்பொருளாக அமைகின்றன.

சார்க் உச்சி மாநாட்டின் போதுஇ வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தே இந்திய உயர் அதிகாரிகள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்திய உயர் அதிகாரிகளின் பாதுகாப்பு திட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்ததை அடுத்து இரு தரப்பினரிடையே பாகாப்பு உடன்பாடு ஒன்றும் கைச்சாத்திடப்பட்டதாகத் தெரியவருகிறது.

சார்க் உச்சி மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வருகின்ற போதிலும், இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இந்திய அரசு பொறுப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த உடன்பாட்டில் உள்ள இரு முக்கிய விடயங்கள்…

1. சார்க் உச்சி மாநாடு இடம்பெறும் காலத்தில் இந்தியக் கடற்படையினரால் இலங்கைத் தீவைச் சுற்றிலும் பாதுகாப்பு வழங்குவது.

2. சார்க் உச்சி மாநாட்டின் உள்ளகப் பாதுகாப்புக்காக 3000 இந்திய சிறப்பு பாதூகாப்பு படையினர் இலங்கையில் களமிறக்குவது.

மேற்கூறப்பட்ட விடயங்களே இந்திய உயர் அதிகாரிகளின் வருகையின் போது எட்டப்பட்ட உடன்பாடுகள் எனத் தெரியவருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (21-06-2008) அன்று இந்திய உயர் அதிகாரிகளான இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கே. நாராயணன், இந்திய வெளிவிவகாரச் செயலர் சிவசங்கர் மேனன், இந்திய பாதுகாப்புச் செயலர் சிறீ விஜே சிங் ஆகிய உயர் பீடத்தினரே கொழும்பு வந்தடைந்திருந்தனர்.

இந்தியாவுடனான எட்டப்பட்ட பாதுகாப்பு உடன்பாட்டுக்கு ஜேவிபி கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியசிறப்புப்படை சார்க் உச்சி மாநாட்டின் உள்ளகப் பாதுகாப்புக்காக மட்டும் வராது. இதில் வேறு காரணமாகவும் இருக்கும்.

மணி ஓசை வரும் முன்னே! யானை வரும் பின்னே!!

யானையை அடக்கும் ஆயுதமும் அகிலத்தில் இருக்கத்தான் செய்கிறது. அங்குசத்தையும் பயண்படுத்தலாம், ஆழ குழித் தோண்டி அதில் இறக்கியும் விடலாம். அது அவரவர்களின் சாமார்தியத்தை பொருத்தே அமையும். குறிப்பறிந்து விட்டால் குவலயத்தில் குறுக்கு புத்திகொண்டோரை கூரிய புத்தியால் வென்றிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் படை வருவதற்கான சாக்கு சாக்கு மாநாடுதான் என்றாலும் அது திரும்பிப் போய்விடுமா என்பதில்தான் பலத்த சந்தேகம் உருவாகிறது. இந்தியா ஏதோ இனியும் விட்டு வைக்க முடியாது என்னும் உறுதியான முடிவொன்றை எடுத்திருப்பதுபோலத் தெரிகின்றது. தலைக்கு மேலே வெள்ளம் போய்விட்டது. இனிச் சாணென்ன முழமென்ன?

சீனாவும் பாகிஸ்தானும் வரிந்து கட்டிக்கொண்டு களத்திலிறங்க வாய்ப்புகள் உள்ளன போலத் தெரிகின்றது. ஜேவிபியினர் ஒருபுறமும், ஜிகாத் குழுக்கள் மறுபுறமுமாக அதற்கு ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படக்கூடும்.

அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்;தானிலும் இறங்கியுள்ளது போலவோர் நடவடிக்கையாக இது அமையலாம். நேபாளத்திலும் இந்தியாவின் பிடி மாவோயிஸ்டுகள் ஆட்சி பீடமேறியுள்ளதால் தளர்ந்து போயுள்ளது அதனால் அமெரிக்காவின் ஆசீர்வாதத்தோடு இலங்கையில் உடனடியாகப் பிடியை இறுக்க இந்தியா தீர்மானித்து விட்டது போலவே தெரிகின்றது.

தமிழீழப் பிரதேசங்களுக்குள் இந்தியப் படைகள் தற்போதைக்கு நுழைய வாய்பில்லை. ஆனால் கொழும்பில் அவர்களின் பிரசன்னமும் பாக்கு நீரிணையில் சுற்றி வளைப்பும் பாரிய விளைவுகளை உருவாக்கலாம்.

சிங்கள கம்யூனிஸ்டுகளுடன் தமிழர்கள் இணையும் வாய்ப்புகளும் ஏற்படக் கூடும்.

இலங்கை ஒரு வியட்னாமாகச் சந்தர்ப்பங்கள் உள்ளனவோ தெரியவில்லை. தமிழர்கள் தமது உரிமையைப் பெற்றுக்கொள்ள மிகவும் நிதானமாகக் காய் நகர்த்த வேண்டிய காலம் சார்க் மகாநாட்டோடு உருவாகலாம்.

எமக்கு வேண்டியது எமது தேசிய உரிமைகளே என்ற அடிப்படையில் தமிழர்கள் நின்றால் நல்லது நடக்க வாய்ப்புகளுண்டு. இந்தியாவுடன் மீண்டுமொரு நேரடிப் பகையைத் தவிர்த்து நடுநிலையில் நின்று எமது உரிமைகளை விட்டுக் கொடுக்காது தமிழகத்தின் துணையோடு மிகக் கவனமாகத் தமிழர்கள் இந்த விடயத்தைக் கையாளவேண்டும்.

இந்தியப் படையினர் சார்க் மாநாடு முடிந்த பின்னரும் இலங்கையில் தொடர்ந்து நிலைகொள்ள வேண்டுமாயின் சரியான காரணம் வேண்டும். இக் காரணத்தை மகிந்தாவே கூலிக் குழுக்கள் மூலம் ஏற்படுத்தலாம்.

இந்தியாவுக்கு தெரியும் வன்னியில் இராணுவம் சளைத்து கொண்டு வருகிறார்கள் இவர்களீன் மனவுறுதி கடசிகட்டத்துக்கு வரும் போது தான் தலைவர் புலிப்படையை பாய்ச் செய்வார் அந்த நிலை வர கூடது என்று இந்தியா எதிர்பாக்கிரது அது போக சிங்கள இராணுவம் யுத்ததில் வெள்ள முடியாது அல்லது தொடர்ந்து என்ன செய்வது என்ற நிலை வந்தாலே புலிகள் கை ஓங்கியதாக விடும் அனைவருக்கும் தெரியும் இனியும் பேச்சு வார்த்தை அது இது என்று புலிகள் காலம் தல்ல மாட்டார்கள் ஈழம் தான் இந்திய குள்ளநரிகள் வர தொடங்கிவிட்டார்கள் இதன் விளைவுக் எங்களுக்கு கொடுரமாக இருக்கலாம்.................

ஆக குறைந்த்து கொழும்பின் பாதுகாப்பையாவது குறிப்பட்ட காலத்துக்கு இந்திய இராணுவத்திடம் கொடுப்பார்கள் போல் இருக்கிரது....

இந்தியப் படையினர் சார்க் மாநாடு முடிந்த பின்னரும் இலங்கையில் தொடர்ந்து நிலைகொள்ள வேண்டுமாயின் சரியான காரணம் வேண்டும். இக் காரணத்தை மகிந்தாவே கூலிக் குழுக்கள் மூலம் ஏற்படுத்தலாம்.

இந்திய படைகள் இலங்கையில் இருப்பதால் இந்தியாவுக்கு லாபம், மகிந்தவுக்கு என்ன லாபம்.? ஏதாவது எழுத வேணும் எண்டு எழுதுகிறீர்கள் போல.?

Edited by பொய்கை

ஆக குறைந்த்து கொழும்பின் பாதுகாப்பையாவது குறிப்பட்ட காலத்துக்கு இந்திய இராணுவத்திடம் கொடுப்பார்கள் போல் இருக்கிரது....

அப்படியான நோக்கம் இருக்க சந்தர்ப்பமே இல்லைங்கண்ணா. தலைநகரின் பாதுக்காப்புக்கு வேற்று நாட்டு படைகளிடம் என்பது புலிகளை வெல்ல முடியவில்லை எண்று அரசாங்கம் சர்வதேசத்துக்கு அறிவித்ததுக்கு சமன்.

இந்திய இராணுவத்தின் இலங்கை பிரசன்னம் உதவி வழங்கும் மற்றய நாடுகளையும் மகிழ்ச்சி படுத்தாது. இக்கட்டு இலங்கைக்கு தான்.

GSP+ நிறுத்தப்பட்டால் அதுக்கு இளப்பீட்டை இந்தியாவால் கூட கொடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய படைகள் இலங்கையில் இருப்பதால் இந்தியாவுக்கு லாபம், மகிந்தவுக்கு என்ன லாபம்.? ஏதாவது எழுத வேணும் எண்டு எழுதுகிறீர்கள் போல.?

கொழும்பின் பார்காப்பை இந்தி இராணுவத்தின் கைகளில் விட்டுவிட்டு அங்கே இருக்கும் இலங்கை இராணுவத்தை களமுனைகளுக்கு பாவிப்பதாகவும் இருக்கலாம்.

அப்படியான நோக்கம் இருக்க சந்தர்ப்பமே இல்லைங்கண்ணா. தலைநகரின் பாதுக்காப்புக்கு வேற்று நாட்டு படைகளிடம் என்பது புலிகளை வெல்ல முடியவில்லை எண்று அரசாங்கம் சர்வதேசத்துக்கு அறிவித்ததுக்கு சமன்

கீ கீ

இப்ப மட்டும் இலங்கை அரசாங்கம் வாங்கும் ஆயுதங்களை பற்றி கேட்டலே தெரியும் வன்னியில் சிங்கள இராணுவம் வாங்கும் அடி அது போக புலிகளிடம் இராணுவம் தோலிவியுறுது என்றவுடன் ஈழம் கிடைக்க இவர்கள் விடமாட்டார்கள்( தாங்கள் இன்னும் உதவி செய்கிறோம் தொடர்ந்து அடியுங்கள் என்று தான் சொல்லுவார்கள்) இல்லை என்றால் 90 ஆண்டே உலகம் ஈழத்தை ஏற்படுத்தி இருகலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

கீ கீ

இப்ப மட்டும் இலங்கை அரசாங்கம் வாங்கும் ஆயுதங்களை பற்றி கேட்டலே தெரியும் வன்னியில் சிங்கள இராணுவம் வாங்கும் அடி அது போக புலிகளிடம் இராணுவம் தோலிவியுறுது என்றவுடன் ஈழம் கிடைக்க இவர்கள் விடமாட்டார்கள்( தாங்கள் இன்னும் உதவி செய்கிறோம் தொடர்ந்து அடியுங்கள் என்று தான் சொல்லுவார்கள்) இல்லை என்றால் 90 ஆண்டே உலகம் ஈழத்தை ஏற்படுத்தி இருகலாம்...

நேட்டேரப்படைகளுக்கு ஆவ்கான் போல

அமெரிக்க படைகளுக்குடூ ஈராக் போல

இந்தியாவுக்கு இலங்கை இருக்கும்

ஆனால் நிச்சயமாக தமிழர்களால் அல்ல???

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தனது வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பதே நல்லது - ஜேவிபி

புதன், 25 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்]

இந்தியா தனது வேலைகளைப் பார்த்துக் கொண்டு இலங்கை விடயத்தில் தலையிடாமல் இருப்பதே எமக்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் நல்லது என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

அண்மையில் இந்தியக்குழு ஒன்று விசேடமாக இலங்கை வந்து ஜனாதிபதி உட்பட பல உயர்மட்டத்தினரை சந்தித்திருப்பதுடன், சம்பந்தன், டக்ளஸ் தேவனந்தா உட்பட்ட தமிழ்த் தலைவர்களையும் சந்தித்துள்ளர். இது சார்க் மாநாட்டை ஒட்டிய ஒரு முன்னேற்பாடுகள் குறித்து பேசுவதற்கான வருகையே என இந்திய, இலங்கை அரசாங்க தரப்புக்கள் சொல்வதை விட மிக முக்கியமான பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்டபாக கருத்து தெரிவித்த ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் மேலும் தெரிவிக்கையில்,

பிராந்திய வல்லாதிக்கம் என்ற பெயரில் இந்தியா, இலங்கை விவகாரங்களில் மூக்கை நுளைப்பதை இனியும் அனுமதிக்கமுடியாது. அப்படி இன்னும் ஒரு தடவை அவர்கள் மூக்கை நுளைக்க நடவடிக்கைகளை எடுப்பார்களேயானால் முளையிலேயே அந்த நடவடிக்கையினை தடுத்தாக வேண்டும்.

இந்தியா மட்டும் இன்றி நோர்வேயோ அல்லது பிற நாடுகளோ எமது நாட்டு விடயங்களில் தலையிடுவதை அனுமதிக்கமுடியாது.

இங்கு ஒரு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடந்துவருகின்றது. விரைவிலேயே பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட்டு சகல மக்களும் சுமூகமாக வாழும் நிலை ஒன்று உதயமாகிவிடும், இந்த நிலையில் அதைக் குழப்புவதற்கு முயலும் எந்தவொரு சக்தியையும் இந்த நாட்டில் காலூன்ற விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அரசாங்கம் இந்தியக் குழு எதற்காக இங்கு வந்தது என்பதை மூடி மறைக்காமல் வெளிப்படையாக மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

pathivu.com

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய இலங்கை இந்திய ஒப்பத்தந்தின் போது அமைதிப்படையினர் மூவாயிரத்திலிருந்து ஆறாயிரம் படைவரை சிறிய ரக தற்பாதுகாப்பு ஆயுதங்களுடனேயே இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றே அதிகார பூர்வமாக இந்திய அரசு அறிவித்தது ஆனால் அங்கு கனரக ஆயுதங்களுடன் இறக்கப்பட்ட படையினரின் தொகை சுமார் ஒன்றரைஇலச்சம். அதைப்போலத்தான் இந்த மூவாயிரம் எண்ணிக்கையும் இருக்கும். தன்னைத்தானே பாதுகாக்க முடியாத இலங்கை அரசிற்கு ஆயுதமும் கொடுத்து இராணுவத்தையும் கொடுத்து எதுக்கு இவ்வளவு செலவில் ஒரு மகாநாட்டினை இலங்கையில் நடாத்த வேண்டும் பேசாமல் இந்தியாவிலேயே நடத்தலாமே.??அப்படி இந்தியப்படைகள் வந்தாலும் திரும்பிப் போகுமா அல்லது அனல் மின் நிலையத்திற்காக குத்தகைக்கு எடுத்த மூதூர் பிரதேசத்தினை பாதுகாக்கப்போகின்றோம் என்று திருகோணமலையில் முகாம் அமைப்பார்களா??ஆனால் அப்படி ஏதும் நடந்தால் முன்னர் இந்தியப்படை காலத்தில் இலங்கையில் சர்வதேசத்தின் அரசியல் மாற்றங்கள் நடந்ததை விடப் பெரிய மாற்றங்கள் நிகழ இடமுண்டு :o

சார்க் உச்சி மநாடு நடக்கும் பகுதியில் இந்தியப் படையினர் பாதுகாப்புக் கொடுக்கிறது ஒரு புறமிருக்கட்டும். ஏனாம் இலங்கைத் தீவைச் சுத்தி இந்தியக் கடற்படை பாதுகாப்பு கொடுக்கப்போகுதாம்.?

தற்போது இந்தியாவில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை, பொருளாதார பின்னடைவு எல்லாத்தையும் வைத்துப் பாக்கும்போது, புத்தி இருந்தால் பொல்லை கொடுத்து அடி வாங்கும் நிலைமைக்கு இந்தியா போகாது என்றே தோன்றுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இலங்கையில் தங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.உலகுக்கும் , வி.புலிகளுக்கும் தன்னை மீறி எதுவும் நடக்க கூடாது என்பது போல் ஒரு படமெடுப்பு போல் தான் உள்ளது.

சார்க் உச்சி மநாடு நடக்கும் பகுதியில் இந்தியப் படையினர் பாதுகாப்புக் கொடுக்கிறது ஒரு புறமிருக்கட்டும். ஏனாம் இலங்கைத் தீவைச் சுத்தி இந்தியக் கடற்படை பாதுகாப்பு கொடுக்கப்போகுதாம்.?

அது இந்தியபடைகள் வந்த பயத்தில் புலிகள் தப்பி ஓடாமல் காவலுக்கு...

என்னை பொறுத்த மட்டில் சார்க் மானாடு நடக்க முன்னமே சிங்கள இராணுவத்துடன் சண்டையை தொடங்கினால் அவர்கள் திரும்பிவிடுவார்கள்( கொழும்பில் தாக்குதல் செய்ய வேண்டும்)

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ மகிந்தவுக்கு சார்க் மாநாடு என்ற வடிவில் கூரிய ஆப்பு ஒன்று தயாராகி உள்ளது.

1 ) இந்திய ராணுவத்தின் தலையீடு .

2 )ஜே. வீ.பீ. போன்ற இந்திய விரோதக்கட்சிகளின் எதிர்ப்பு .

3 ) பாகிஸ்தான் , சீனா , அமெரிக்கா போன்றவற்றின் காய்நகர்த்தல் .

எப்படியோ மகிந்தவுக்கு சார்க் மாநாடு என்ற வடிவில் கூரிய ஆப்பு ஒன்று தயாராகி உள்ளது.

1 ) இந்திய ராணுவத்தின் தலையீடு .

2 )ஜே. வீ.பீ. போன்ற இந்திய விரோதக்கட்சிகளின் எதிர்ப்பு .

3 ) பாகிஸ்தான் , சீனா , அமெரிக்கா போன்றவற்றின் காய்நகர்த்தல் .

உண்மையில் மகிந்தாவுக்கு லாபமாக தான் நடக்கும்

கிழக்கை போல் வடக்கை கைப்பற்றி டக்கிளஸ்டம் கொடுக்கும் வேலைக்கு தான் இந்தியா கொழும்பில் பாதுகாப்புக்கு 30.000( 3000) எண்டு தான் சொல்லுவினம்) அனுபுகிறார்கள் இவர்களை சார்க் மாநாடு முடிந்து இந்தியாவுக்கு திரும்ப எடுகக் சுமார் 6 மாதங்கள் ஆகலாம்..................

இந்த 6 மாதமுன் போததா? :wub:

சூடு பட்ட பூனை பால் பக்கம் போகாது.... 80 கள் போல் இல்லை இப்போது..

எனவே தமிழர்களோடு இந்திய ராணுவம் நேரடி மோதலில் இறங்க வாய்ப்பு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சூடு பட்ட பூனை பால் பக்கம் போகாது.... 80 கள் போல் இல்லை இப்போது..

எனவே தமிழர்களோடு இந்திய ராணுவம் நேரடி மோதலில் இறங்க வாய்ப்பு இல்லை

அது உண்மையாக இருந்தாலும்

80 களில் இருந்த தமிழகமும் இப்போ இல்லை???

சூடு பட்ட பூனை பால் பக்கம் போகாது.... 80 கள் போல் இல்லை இப்போது..

எனவே தமிழர்களோடு இந்திய ராணுவம் நேரடி மோதலில் இறங்க வாய்ப்பு இல்லை

நேரடியாக மோதாது தான் ஆனால் சிங்கள இராணுவத்தின் பாரத்தை( அது தான் சில இடத்து பாத்துகாப்பை பொறுப்பு ஏற்றால்?) இது போதாதா?

பொதுவாக திருமலை கொழும்பு பகுதியில் இந்திய இராணுவம் நிற்க்கும் சதர்பம் இருக்கு

இந்திய படைகள் இலங்கையில் இருப்பதால் இந்தியாவுக்கு லாபம், மகிந்தவுக்கு என்ன லாபம்.? ஏதாவது எழுத வேணும் எண்டு எழுதுகிறீர்கள் போல.?

இந்தியாவை ஜேஆர் அப்படி இழுத்து வேடிக்கை பார்த்தாரோ அப்படி மகிந்த பார்ப்பார் இன்னொரு கசப்புணர்வை உருவாக்குவார் அது மகிந்தவுக்கு இலாபமே

. இணையவனின் கருத்தினை நிதர்சனமாக காணக்கூடியதாக இருக்கும். கைநழுவிப்போகும் நிலையில் எல்லாமே இருக்கின்ற நிலையில் மகிந்த அரசு இந்திய இராணுவத்தை தன்னுடனேயே வைத்திருக்கும் எண்ணம் நிறையவே இருக்கும். அதற்காக எதையும் செய்யக்கூடிய நிலை உருவாகும். அதைவிட இநதிய இராணுவ வருகையானது எமது தமிழீழத்திற்கான வழியே ஆகும். விரைவில் அதை உணருவீர்கள்.

இந்திய படைகள் இலங்கையில் இருப்பதால் இந்தியாவுக்கு லாபம், மகிந்தவுக்கு என்ன லாபம்.? ஏதாவது எழுத வேணும் எண்டு எழுதுகிறீர்கள் போல.?

Edited by Paranee

paranii சொல்வது போல் சரியாஅக செய்ற்ப்பட்டால் ஈழம் ஆனால் இந்திய இரானுவம் ஓட்டுக்குழுக் களை பலப்படுத்த பார்க்கும் . இந்த சமயத்தில் எப்ப்ப எங்கை அடிக்கனும்மென்று அவர்கலுக்கு தெஇர்யும்.

நாம் 10 கருத்து எழுத முன் தலைஅவர் பல அதிரடி திட்டங்கள் போட்டு இருபார்...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.