Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலிரவு.

Featured Replies

வாழ்த்துகள் தாத்தா. தலைப்பு ஒன்றும் தவறல்ல. எத்தனை பேர் வேறு எண்ணங்களுடன் இந்த பகுதியை பார்க்க வந்தோம். இப்படியான தலைப்புக்குள்ளும் நல்ல கதைகளைத்தருவது எழுத்தாளரின் திறமை. தொடருங்கள்.

  • Replies 52
  • Views 17.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில் மட்டுமல்ல : உங்கள் கதையில் கூட பயிற்சி பெறாத பெண்களை படையில் முன்னிறுத்துவது போல யதார்த்தமே இல்லாத விதத்தில் கதை புனைந்திருக்கிறீர்கள்.

போர்க்களத்தில் இருக்காதவர்களுக்கு இது சினிமா பாணிதான். ஆகா..ஓகோதான்..ஆனால் போர்க்களத்தில் இருந்தவர்களுக்கு இது ஒரு மட்டமான ஆதர்சனம். நன்கு பயிற்சி பெற்றவர்களே போருக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் அன்றுதான் LMGயை கையில் தொடுவதாக கதை வடித்திருக்கிறீர்களே? நீங்கள் எல்லாம் இனிப்பு போல் விசம் ஏற்றுபவர்கள். இப்படியான கருத்துகள் எமது போராட்டத்தில் பயிற்சி இல்லாத அப்பாவிகளை தள்ளிவிடுவது போன்ற கருத்தை பலர் மனதில் உருவாக்கிவிடும்.

நீங்கள் எதையும் எழுதுங்கள்.பரவாயில்லை. பாராட்டலாம். ஆனால் நாட்டிலோ அல்லது அந்த போராட்ட களத்திலோ இல்லாதவர்கள் அது குறித்து கற்பனைக் கதைகளைக் கூட எழுதும் போது அவதானமாக இருங்கள்.

இது கோபத்தினால் எழுந்த வரிகளல்ல. அதை புரிந்து கொள்வீர்களோ தெரியாது?

( முதற் தடவையா முதலாவது இரவுத் தாக்குதல் என்று தான் குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமன்றி அந்தப் புதிய போராளியோடு ஒரு அனுபவம் மிக்க ஆண் போராளியை நெருங்க நிறுத்தி இருக்கிறேன், அந்தப் புதிய போராளிக்கு வழிகாட்ட என்று எனது கதை தெளிவாகவே கூறிச் செல்கிறது. அதை ஏன் நீங்கள் உணரவில்லை..??! :D:lol: )

உங்கள் பார்வையில் தான் தவறிருக்கிறது. பயிற்சிக்குப் போகும் போது இல்லாத பயம்.... உண்மையான சண்டைக்களத்துக்குப் போகும் போது வருவது இயல்பானது. அதனால் தான் புதிய போராளிகளோடு அனுபவம் மிக்க போராளிகளை சேர்த்து அனுப்புவார்கள். இதுதான் யதார்த்தம்.

சண்டைக் களத்தை பார்த்தவன் மட்டுமன்றி அங்கேயே நீண்ட காலம் வாழ்ந்தவன். அந்த வகையில் நான் அறிந்த உண்மை அனுபவங்களை கலந்தே கதையை எழுதி இருக்கிறேன்..!

நான் அல்ல விசத்தை கக்குவது. இப்படி ஒரு குறை உள்ளதாகக் கூறிக் கொண்டு.. நீங்கள் உங்கள் எண்ணத்தில் தோன்றும் விசத்தை என்னைக் காரணம் காட்டி விதைக்கிறீர்களே தவிர.. நான் அப்படியான எண்ணத்தை வெளிப்படுத்த முயலவில்லை..!

எனிமேல் உங்கள் மனதில் உதிக்கும் விசத்தை பகிரங்கமாக எழுத முதல் ஆழ சிந்தித்துவிட்டு எழுத முற்படுங்கள்..!

இதை நான் கோபமாகப் பார்க்கவில்லை. விமர்சனமாகவே பார்க்கிறேன். விமர்சனங்களை எதிர்கொள்ளும் பலம் இல்லாமல் நான் ஒன்றை எழுதுபவன் அல்ல..! ஆனால் விசம் என்ற பதப்பிரயோகத்தை வன்மையாகவே எதிர்க்கிறேன்..! அது விமர்சனத்துக்கு அப்பாலான உங்களின் வழமையான என் மீதான காழ்ப்புணர்வில் அமைந்த குற்றச்சாட்டாகவே தனித்துப் பார்க்கிறேன். :lol::lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுக்கு சொல்லலை நெடுக்ஸ்..உங்க கதைகள் அருமையாக இருக்கு. சின்னதா ஒரு கருவை வச்சு சின்னதாவே எழுதிடுறிங்க..நல்லாயிருக்கு.

தலைப்பை பார்த்த உடனேயே, தலைப்புக்கு பொதுவாக இருக்கும் ஒரு அர்த்தத்தை உடைப்பதாகவே உங்கள் கதையிருக்கும் என நினைத்தேன்..என் நினைப்பு தப்பாகவில்லை..

இப்படி எத்தனை வீரசகோதர,சகோதரிகள் இருக்கின்றார்கள். அவர்கள் காலத்தில் வாழ்வதே பெருமை தான்...

நன்றி தூயா. :lol:

வாழ்த்துகள் தாத்தா. தலைப்பு ஒன்றும் தவறல்ல. எத்தனை பேர் வேறு எண்ணங்களுடன் இந்த பகுதியை பார்க்க வந்தோம். இப்படியான தலைப்புக்குள்ளும் நல்ல கதைகளைத்தருவது எழுத்தாளரின் திறமை. தொடருங்கள்.

நன்றி Eas. :D

Edited by nedukkalapoovan

( முதற் தடவையா முதலாவது இரவுத் தாக்குதல் என்று தான் குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமன்றி அந்தப் புதிய போராளியோடு ஒரு அனுபவம் மிக்க ஆண் போராளியை நெருங்க நிறுத்தி இருக்கிறேன், அந்தப் புதிய போராளிக்கு வழிகாட்ட என்று எனது கதை தெளிவாகவே கூறிச் செல்கிறது. அதை ஏன் நீங்கள் உணரவில்லை..??! :unsure::) )

உங்கள் பார்வையில் தான் தவறிருக்கிறது. பயிற்சிக்குப் போகும் போது இல்லாத பயம்.... உண்மையான சண்டைக்களத்துக்குப் போகும் போது வருவது இயல்பானது. அதனால் தான் புதிய போராளிகளோடு அனுபவம் மிக்க போராளிகளை சேர்த்து அனுப்புவார்கள். இதுதான் யதார்த்தம்.

சண்டைக் களத்தை பார்த்தவன் மட்டுமன்றி அங்கேயே நீண்ட காலம் வாழ்ந்தவன். அந்த வகையில் நான் அறிந்த உண்மை அனுபவங்களை கலந்தே கதையை எழுதி இருக்கிறேன்..!

நான் அல்ல விசத்தை கக்குவது. இப்படி ஒரு குறை உள்ளதாகக் கூறிக் கொண்டு.. நீங்கள் உங்கள் எண்ணத்தில் தோன்றும் விசத்தை என்னைக் காரணம் காட்டி விதைக்கிறீர்களே தவிர.. நான் அப்படியான எண்ணத்தை வெளிப்படுத்த முயலவில்லை..!

எனிமேல் உங்கள் மனதில் உதிக்கும் விசத்தை பகிரங்கமாக எழுத முதல் ஆழ சிந்தித்துவிட்டு எழுத முற்படுங்கள்..!

இதை நான் கோபமாகப் பார்க்கவில்லை. விமர்சனமாகவே பார்க்கிறேன். விமர்சனங்களை எதிர்கொள்ளும் பலம் இல்லாமல் நான் ஒன்றை எழுதுபவன் அல்ல..! ஆனால் விசம் என்ற பதப்பிரயோகத்தை வன்மையாகவே எதிர்க்கிறேன்..! அது விமர்சனத்துக்கு அப்பாலான உங்களின் வழமையான என் மீதான காழ்ப்புணர்வில் அமைந்த குற்றச்சாட்டாகவே தனித்துப் பார்க்கிறேன். :):wub:

சண்டைக் களத்தை பார்ப்பதும் சண்டையிடுவதும் வெவ்வேறு. வானவேடிக்கை பார்த்தவர்கள் கதை எழுதுவதும் அந்தக்களத்துக்குள்ளே போராடியவனது பார்வையும் வெவ்வேறானவை.

"அந்த வகையில் நான் அறிந்த உண்மை அனுபவங்களை கலந்தே கதையை எழுதி இருக்கிறேன்..! " என்று இப்போது சொல்லும் நீங்கள் "யாவும் கற்பனை" என்று எழுதியது எதற்கு?

இங்கே காழ்புணர்வுக்கு ஏதும் எழுதவில்லை. கதை குறித்த விடயத்தையே எழுதினேன். அதைக் காழ்புணர்வு என ஏன் கொள்ளவேண்டும். அப்படியானால் மற்றவர்கள் மீது நீங்கள் செய்யும் விமர்சனங்கள் அவர்கள் மேல் நீங்கள் கொண்ட காழ்ப்புணர்வாலா? :D

கீழ்வரும் விதத்தில் ஒரு யுத்தகளத்தில் கொஞ்சிக் குலவ அங்கே நேரமில்லை?

"வசந்தி.. ரெடியா இரும்மா.. துணிவோட இரு.. அப்பதான் இந்த உலகத்தில பெண்கள் நாங்கள் நினைச்சதைச் சாதிக்கலாம்." சக தோழியின் வார்தைகள் தெம்பாய் காதில் இறங்கினும் படபடப்புத் தீரவே இல்லை.

அதற்குள்.. அவனிடமிருந்து சிக்னல் வந்தது. இஞ்ச வாங்கோ என்று வாயசைக்காது கைகளால் சைகை செய்து வசந்தியை அழைத்தான்.

ஆரம்பத்தில் தயங்கியவளாய் பின் துணிவை வரவழைத்துக் கொண்டு அவனை நோக்கி நகர்ந்து சென்றாள்.

அவளின் தயக்கத்தை உணர்ந்தவனாய், என்ன பயப்பிடுறீங்கள் போல... முதல் அனுபவம் எல்லோ.. ஆரம்பத்தில கொஞ்சம் படபடப்பும் பயமும் இருக்கத்தான் செய்யும். போகப் போக எல்லாம் பழகிடும்.

அவனின் அந்த வார்த்தைகள் மனசுக்கு தெம்பைத் தர அவனை நெருங்கிச் சென்று அருகில் நின்றாள்.

பயப்பிடாம நான் சொல்லுறதை மட்டும் செய்யுங்கோ அது போதும்.

தயக்கத்துடன்.. "ஓம்" என்றாள்.

அடுத்த கணமே.. துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின.

எதிரியின் காவலரணில் இருந்தும் ரவைகளும் ஆர் பி ஜி கணைகளும் தொடராக கிளர்ந்தெழும்பத் தொடங்கின.

வசந்தி அந்த பொயின்ருக்கு இந்தப் பக்கத்தில இருந்து இப்ப அடியுங்கோ. அங்க இருந்துதான் ஆர் பி ஜியால அடிக்கிறாங்கள்...

"ஓம் அடிக்கிறன்...."

வசந்தியின் கையில் இருந்த எல் எம் ஜி முழங்குகிறது. முதற் தடவையா.. முதலிரவுத் தாக்குதலில்.. வசந்தி நேர்த்தியாக எதிரியின் நிலை நோக்கி தாக்குதலைத் தொடுத்தாள்.

இதெல்லாம் பச்சைக் குழந்தைக்கு சோறு தீத்த நிலாக் கதை சொல்லுற மாதிரி ஒரு விடயம். :lol:

Edited by Thalaivan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சண்டைக் களத்தை பார்ப்பதும் சண்டையிடுவதும் வெவ்வேறு. வானவேடிக்கை பார்த்தவர்கள் கதை எழுதுவதும் அந்தக்களத்துக்குள்ளே போராடியவனது பார்வையும் வெவ்வேறானவை.

"அந்த வகையில் நான் அறிந்த உண்மை அனுபவங்களை கலந்தே கதையை எழுதி இருக்கிறேன்..! " என்று இப்போது சொல்லும் நீங்கள் "யாவும் கற்பனை" என்று எழுதியது எதற்கு?

இங்கே காழ்புணர்வுக்கு ஏதும் எழுதவில்லை. கதை குறித்த விடயத்தையே எழுதினேன். அதைக் காழ்புணர்வு என ஏன் கொள்ளவேண்டும். அப்படியானால் மற்றவர்கள் மீது நீங்கள் செய்யும் விமர்சனங்கள் அவர்கள் மேல் நீங்கள் கொண்ட காழ்ப்புணர்வாலா? :wub:

கீழ்வரும் விதத்தில் ஒரு யுத்தகளத்தில் கொஞ்சிக் குலவ அங்கே நேரமில்லை?

இதெல்லாம் பச்சைக் குழந்தைக்கு சோறு தீத்த நிலாக் கதை சொல்லுற மாதிரி ஒரு விடயம். :unsure:

சண்டைக்களத்தில் வாழ்ந்தவனுக்கு சண்டையைப் பற்றித் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. உங்களைப் போலவே தான் மற்றவையும் என்று எதிர்பார்க்கிறது தப்பு. முதலில் அதைத் திருத்திக் கொண்டு விமர்சனத்தை படைப்பு ரீதியாக வைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

அறிந்த அனுபவங்களை கலந்து கொண்டேனே தவிர உண்மைக் கதை ஒன்றை அப்படியே தரவில்லையே. பெயர் உட்பட அதில் பல விடயங்கள் கற்பனை சார்ந்துள்ள போது.. குறித்த கதை சார்ந்து யாவும் கற்பனை என்பதே சரியானதாக இருக்க முடியும்..! :lol:

ஆம்.. நான் விமர்சனங்களை செய்பவனே. அதிலும் எதிர் விமர்சனங்களை சாரை சாரையாக வைப்பவனே. ஆனால் "நாசூக்காக விசத்தைப் பரப்பும் ஆள்" என்று படைப்புக்கு அப்பால் போய் நின்று படைப்பவனை தாக்குவதை விமர்சனமாகக் கொள்வதில்லை. அதை எவர் செய்யினும் காழ்ப்புணர்ச்சி என்றே கருதுகிறேன். அதையே நீங்கள் செய்திருக்கிறீர்கள்.

குறித்த பகுதி.. குழந்தைக்கு நிலாச் சோறல்ல.. கதைக்குள் முழு நிலவு நாள் போல அமைதியா வாசகனை இழுத்து வர செய்யப்பட்ட சூழல்..! இதையெல்லாம் புரிஞ்சுக்காம விமர்சனம்...???! வேடிக்கையாக இருக்கிறது.. எனினும்.. விமர்சகர்கள் பல வகை. நீங்கள் அதில் கடை வகை.. என்று கருதிக் கொள்வதைத் தவிர.. என்னால்.. உங்களின் கருத்துக்களை வளமான விமர்சனமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..! :):D

Edited by nedukkalapoovan

விமர்சகர்கள் பல வகை. நீங்கள் அதில் கடை வகை.. என்று கருதிக் கொள்வதைத் தவிர.. என்னால்.. உங்களின் கருத்துக்களை வளமான விமர்சனமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..! :):wub:

அதிகமாக ஆத்திரப்படுகிறீர்கள். :) இந்த வார்த்தைகள் விமர்சனங்களை வைப்பவர் மட்டுமே நீங்கள். ஏற்றுக் கொள்பவர் இல்லை என்பதை பறைசாற்றுகிறது :lol::D:unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் நல்லதொருபடைப்பு....

இங்கு போராளிகளைக் கொச்சைப்படுத்துவதாக எந்த இடத்தையும் என்னால் அறியமுடியவில்லை. குற்றச்சாட்டுகளை வீசும்போது அதற்கான ஆதாரங்களையும் வைத்தால் உதவியாக இருக்கும்.

நெடுக்காலபோவான், நீங்கள் சிறந்த படைப்பாளி என்பதை யாழ்க்களத்தில் நீங்கள் முத்திரை பதிக்கும் ஒவ்வொரு வாதவிவாதங்களூடாக என்றோ அறிந்துள்ளேன். உங்களுடைய வார்த்தைப் பிரயோகங்களை ஒரு சிறந்த படைப்பாளியால்த்தான் கையாளமுடியும் என்பதை அனைவரும் அறிவர்

எப்போதுமே நம்மவர்களுக்குள் எடுபடக்கூடியதாக ஒரு படைப்பு இருக்கவேண்டுமென்றால் அதற்காக நாம் கொடுக்கும் தலைப்புகள் கவர்ச்சியாக பார்க்கின்றவர்களை வாசிக்கத் தூண்டுபவையாக அமையவேண்டும். அத்தகை இங்கு அவதானிக்கக் கூடியதாக உள்ய ஒரு நிலைப்பாட்டைத்தான் இங்கு அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்த இடத்தில் யாழ்க்களத்தில் சாத்திரியையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் தன் எழுத்தாளுமைக்கென்று ஒரு தனிப்பாணியையே வைதததிருக்கும் படைப்பாளி இங்கு சாத்திரியை மட்டும் குறிப்பிடுகிறேன் என்று மற்றைய உறவுகள் மனச்சஞ்சலம் அடையவேண்டியதில்லை சமயங்கள் வாய்க்கும் போது ஒவ்வொரு படைப்பாளையை; பற்றியும் எழுதுவேன் இந்தச் சந்தர்ப்பத்தில் சாத்திரி அவ்வளவுதான்

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா , யாழில் அடுத்த தூயவனின் உதயம். :wub::D

ஆகா என்ன நெடுக்க்ஸ் இப்படி ஒரு தலைப்பில எழுதி இருக்கிறாரே

நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும் என்டு

எதிர்பார்த்தேன். நான் எதிர் பார்த்தது போலவே கதையைக்

கொண்டு சென்றுள்ளார். இதுதான் நம்ம நெடுக்ஸ்சின் கதைகளில்

உள்ள சிறப்பு. கடுகு சிறிதாயினும் காரம் பெரிதல்லவா. அதே போல

உங்கட கதை சின்னக் கதை என்டாலும் கதைக்கரு சூப்பர் சூப்பர்.

நெடுக்ஸ் தொடர்ந்தும் நல்ல படைப்புக்களைத்தாருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் நல்லதொருபடைப்பு....

நெடுக்காலபோவான், நீங்கள் சிறந்த படைப்பாளி என்பதை யாழ்க்களத்தில் நீங்கள் முத்திரை பதிக்கும் ஒவ்வொரு வாதவிவாதங்களூடாக என்றோ அறிந்துள்ளேன். உங்களுடைய வார்த்தைப் பிரயோகங்களை ஒரு சிறந்த படைப்பாளியால்த்தான் கையாளமுடியும் என்பதை அனைவரும் அறிவர்

எப்போதுமே நம்மவர்களுக்குள் எடுபடக்கூடியதாக ஒரு படைப்பு இருக்கவேண்டுமென்றால் அதற்காக நாம் கொடுக்கும் தலைப்புகள் கவர்ச்சியாக பார்க்கின்றவர்களை வாசிக்கத் தூண்டுபவையாக அமையவேண்டும். அத்தகை இங்கு அவதானிக்கக் கூடியதாக உள்ய ஒரு நிலைப்பாட்டைத்தான் இங்கு அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்த இடத்தில் யாழ்க்களத்தில் சாத்திரியையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் தன் எழுத்தாளுமைக்கென்று ஒரு தனிப்பாணியையே வைதததிருக்கும் படைப்பாளி இங்கு சாத்திரியை மட்டும் குறிப்பிடுகிறேன் என்று மற்றைய உறவுகள் மனச்சஞ்சலம் அடையவேண்டியதில்லை சமயங்கள் வாய்க்கும் போது ஒவ்வொரு படைப்பாப்புக்களைப் பற்றியும் எழுதுவேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சாத்திரி அவ்வளவுதான்

உங்களைப் போல சாத்திரியைப் போல எனக்கு கதைகள் எழுதிய அனுபவம் இல்லை. என்னுடைய எழுத்துக்களூடு எனது எண்ணங்களை வாசகர்கள் சிறிதள வேணும் பெற்றுக் கொள்ளட்டும் என்பதே எனது எழுத்தின் தொனியே தவிர வேறல்ல.

உங்களின் கருத்துக்கள் ஒரு நேர்த்தியான தன்மையை காட்டி நிற்கின்றன என்று நம்புகிறேன். நன்றிகள். :lol:

ஆகா என்ன நெடுக்க்ஸ் இப்படி ஒரு தலைப்பில எழுதி இருக்கிறாரே

நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும் என்டு

எதிர்பார்த்தேன். நான் எதிர் பார்த்தது போலவே கதையைக்

கொண்டு சென்றுள்ளார். இதுதான் நம்ம நெடுக்ஸ்சின் கதைகளில்

உள்ள சிறப்பு. கடுகு சிறிதாயினும் காரம் பெரிதல்லவா. அதே போல

உங்கட கதை சின்னக் கதை என்டாலும் கதைக்கரு சூப்பர் சூப்பர்.

நெடுக்ஸ் தொடர்ந்தும் நல்ல படைப்புக்களைத்தாருங்கள்

நீங்கள் எப்போதுமே எல்லோருடைய சுய ஆக்கங்களையும் சலிப்புறாமல் வாழ்த்தி வரவேற்கும் ஒருவர். அந்த வகையில் உங்களின் பார்வைகளோடு இந்த வரவேற்பை அளித்திருக்கிறீர்கள். நன்றிகள். :lol:

அதிகமாக ஆத்திரப்படுகிறீர்கள். :lol: இந்த வார்த்தைகள் விமர்சனங்களை வைப்பவர் மட்டுமே நீங்கள். ஏற்றுக் கொள்பவர் இல்லை என்பதை பறைசாற்றுகிறது :):wub::D:unsure:

விமர்சனத்தன்மை இழந்த ஒன்றை விமர்சனமாக இனங்காட்டிக் கொண்ட எனக்கே.. இறுதியில்.. விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாதவன் என்ற பெயரிடல்... ஆகா அற்புதமான விதண்டாவாதம்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஒரு தலைப்பில தாத்தாவின் பெயரா என்று பார்க்க வந்த என்னை தாத்தா எமாற்றவில்லை. தனது பாணியிலேயே நல்லதொரு கருவை குட்டிக்கதை ஆக்கியிருக்கிறார் தாத்தா.

வாழ்த்துக்கள் :wub:

நெடுக்கு பவாவிண்ட கதைய வாசிச்சபோது.. அதாவது முதலில வந்த கதைகள் கொஞ்சம் செயற்கைத்தனமாகத்தான் இருந்திச்சிது. ஆனா இப்ப இந்த மூண்டாவது கதை எண்டு நினைக்கிறன் அதில அப்படி உணர்வு வந்தது எனக்கு குறைவாக இருந்தது. மேல ஒருவர் சினிமாத்தனமா இருக்கிது எண்டு சொன்னார். அவர் சொன்னதிண்ட தாற்பரியம் விளக்கிது. முதலில இப்பிடித்தான் இருக்கும். பிறகு பழகினாப்பிறகு இதே படைப்பையே ஆகா ஓகோ எண்டு பாராட்டுற அளவுக்கு இருக்கும்.

சீரியல்கள், சினிமா கூட ஆரம்பத்தில கொஞ்சம் சங்கடமா இருக்கும் என்னடா எண்டு. அதுக்கு பிறகு அதையே இரவு பகலா சனம் ரசிக்கத்துவங்கீடும்... அப்பிடியான எங்களுக்கு நெடுக்கு பபாவிண்ட இப்பிடியான படைப்பு பரவாயில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவன் 'அது யாருக்கெண்டு தெரியாது) ஆனாலும் நீங்கள்தான் தமிழைப்புரிந்து கொள்ளாமல் விதண்டாவாதம் செய்கிறீர்கள். அதே நேரம் இங்கு நெடுக்காலை போவானிற்காக்காக வக்காலத்து வாங்குகின்றேன் என்றும் நினைக்க வேண்டாம் ஏனெனில் இதே நெடுக்காலை போவானுடனும் சில சந்தர்ப்பங்களில் எனக்கு உடன்படாத்துக்களிற்கு நான் எதிர் கருத்துக்கள் எழுதியிருக்கிறேன். உங்களிற்கு தெரியுமா ?? பயிற்சி முகாம்களில் ஆரம்பப் பயிற்சிகளின் பொழுது உண்மையான ஆயுதங்கள் கொடுப்பதில்லை வெறும் மரக்கட்டைகள்தான் கொடுப்பது வழைமை. அதன் பின்னர் பயிற்சி இறுதிகளில்தான் இலகு ஆயுதங்கள் கொடுக்கப்படுவது வழைமை. அதன் பின்னர் அவரவர் திறைமைகள் அவர்களது சூட்டுத்திறன் என்பவற்றை அடிப்படையாக வைத்தும். பின்னர் அவர்களது கள அனுபவங்களை வைத்தும் தான் கன ரக ஆயுதங்களிற்கான பயிற்சிகளும் பாவிக்கும்உரிமைகளும் வழங்கப்படுவது வழமை. எந்தப்பயிற்சி முகாமிலும் எடுத்தவுடனேயே எல்.எம்.ஜி யையோ. ஜி.பி.எம்.ஜி.யையோ ஆர்.பி.ஜி யையோ கொடுத்து ஆரம்ப பயிற்சியை கொடுப்பதில்லை.எனவே எல் எம்.ஜி யை பிடித்த அந்தப்பெண்ணிற்கான் முதலிரவு போல பலரிற்கும் முதல் முதலாய் ஒரு ஆயுதத்தை பிடித்த பலமுதலிரவுகள் அனுபவங்களானது வரலாறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா மொத்தத்தில யாழ்களத்தில கள நிலை செய்தியாளர் ஒருவர், களப் போராளியோருவா், பயிற்சிசயாள்ர் ஒருவர் என்று மூன்று முக்கிய ஆக்கள் வாதாடினம் என்று சொல்லுங்க...!

அதுக்காக குறிப்பிட்ட ஆயுதத்துக்கான பயிற்ச்சி இல்லாமல் முதல் முதல ஆர்.பி.ஜி அடிச்ச கதை எல்லாத்தையும் எல்லாரும் ஏற்றுக்கொள்ள மாட்டினம் பாருங்க...!

இங்கு யாருக்கும் எதிரான விமர்சனம் வைப்பது என் கருத்தில்லை. ஆனால் படைப்பாளியின் கதையின் கரு வித்தியாசமாக இருக்கின்றது. நல்ல எழுத்து நடை வாழ்த்துக்கள்.

ஆனால்...

ஆபாசப்பட விளம்பரம் போட்டு விட்டு ஒரு தாயக விடுதலை நோக்கிய திரைப்படத்தை போடுவது போல இருக்கின்றது. வாசகர்களை கவர்வதற்காக என்ற வாதம் ஒரு படைப்பாளியின் வாதாமக தெரியவில்லை. இங்கு பலர் இந்த தலைப்பு சரி என்று வாதாடலாம். முதல் + இரவு எதாவது ஒன்றின் முதல் இரவு முதலிரவு என்று பொருள்ப்படும் என்பது எமக்கு தெரியும். ஆனால் அதே சமயம் முதலிரவு என்பதற்கான கருத்துக்குக்கு வேறு அாத்தங்களே மக்கள் மனதில் பதிந்து விட்டது.

சோ இந்த தலைப்பை பார்த்தவர்கள் தயாக உணர்வு என்று வந்து படிச்சிருக்க மாட்டினம். மாறாக தாயம் தொடர்பான கதையை விற்க பயன்ப்பட்டதே "முதலிரவு" என்ற தலைப்பு.

அது விடுதவைப்போரையோ, போராளிகளையோ கொச்சைப்படுத்துகின்றது என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளாத போதும் இத்தலைப்பை ஏற்றுக்கொள்ளமுடிவில்லை.

Edited by Paravaikal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறித்த ஆயுதத்துக்குப் புதிய போராளி அதை முதற் தடவையா.. முதலிரவுத் தாக்குதலில்.. பாவிக்கிறாள். அதுவும் அனுபவம் மிக்க போராளி ஒருவரின் துணையுடன்.. அதில் அவள் வெற்றியடையும் போது.. தனித்துவமான துணிச்சலையும் வீரத்தையும் உள்வாங்கிக் கொள்கிறாள் என்பதை கதையை வாசிப்பவர்கள் நிச்சயம் உணர்ந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்..! அதுதான் கதைக்குக் கையாளப்பட்ட அடிப்படை விடயமும்.

சாத்திரியின் அனுபவப் பகிர்வுகள்... நான் அறிந்த, கண்ட அனுபவங்களோடு நெருங்கி இருக்கின்றன.

இது கதை.. அதுவும் கற்பனைக் கதை என்று உரிமை கோரப்பட்ட ஒன்று. இருப்பினும்.. யதார்த்த உலகில் நின்று கொண்டு இதனைப் பார்க்கத் தூண்டி இருப்பது கதை யதார்த்தத்தை அதிகம் பிரதிபலிக்க முற்பட்டதன் விளைவோ என்னவோ தெரியவில்லை..!

தங்களின் கருத்துக்களையும் அழகான விமர்சனங்களையும் பதிந்த இன்னிசை, முரளி, சாத்திரி மற்றும் பறவைகளுக்கு நன்றிகள்.

எனி கதை எழுதும் போது இன்னும் அவதானமாக எழுதிக் கொள்கிறேன். மாற்றம் என்பது இலகுவானதல்ல என்பதை இத்தலைப்பு சிலரில் ஏற்படுத்தி இருக்கும் சஞ்சலத்தில் இருந்து புரிந்து கொண்டேன்..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில சுவாரசியமான விடையம் என்னவென்றால் இந்த முதலிரவு என்ற சொல் இங்கு பலரும் சொன்ன மாதிரி அர்தத்தில்தான் அதாவது முதல் உறவு கொள்ளும் இரவு என்று மட்டும் அர்த்தப்படுத்தப்படுகிறது.இத?? வேண்டும் என்றால் ஊரில் சரி.ஆணால் இங்கு இரவும் ஒன்று தான் பகலும் ஒன்று தான். :wub: அதால இந்த சொல்லுக்கு வேறு அர்தங்களும் கற்ப்பிக்கப்படுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

Edited by sagevan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில சுவாரசியமான விடையம் என்னவென்றால் இந்த முதலிரவு என்ற சொல் இங்கு பலரும் சொன்ன மாதிரி அர்தத்தில்தான் அதாவது முதல் உறவு கொள்ளும் இரவு என்று மட்டும் அர்த்தப்படுத்தப்படுகிறது.இத?? வேண்டும் என்றால் ஊரில் சரி.ஆணால் இங்கு இரவும் ஒன்று தான் பகலும் ஒன்று தான். :lol: அதால இந்த சொல்லுக்கு வேறு அர்தங்களும் கற்ப்பிக்கப்படுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

இப்ப எல்லாம் உடலுறவு பட்டப்பகலில.. பூங்கா வழிய.. பாடசாலைச் சந்துகளுக்க... பல்கலைக்கழக சந்துகளுக்க.. உல்லாச விடுதிகளில.. தெருச் சந்துகளுக்க.. கார்களுக்க... எல்லாம்.. நடக்குது. அது அந்தக் காலம்.. முதலிரவு என்பது உடலுறவு சார்ந்தது என்ற கற்பனை.

இப்ப அந்த நிலையில வைச்சு உதுகளைப் பார்க்கக் கூடாது.. என்றதை அழகாச் சொல்லி இருக்கீங்க. நன்றி உங்கள் கருத்துப் பகிர்வுக்கு. :lol::D

Edited by nedukkalapoovan

கதையாக அருமை...!! (சில ஜதார்த்த பிழைகளை தவிர)

சண்டைக்கு போன புது பிள்ளையிட்டை எதுக்குப்பா எல் எம் ஜி யை குடுத்தனீங்கள்...?? கட்டவுட்டில் பிள்ளை சிறப்பாக செயற்பட்டு அணியையும் கதையையும் காப்பாத்தினா...!! வாழ்த்துக்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையாக அருமை...!! (சில ஜதார்த்த பிழைகளை தவிர)

சண்டைக்கு போன புது பிள்ளையிட்டை எதுக்குப்பா எல் எம் ஜி யை குடுத்தனீங்கள்...?? கட்டவுட்டில் பிள்ளை சிறப்பாக செயற்பட்டு அணியையும் கதையையும் காப்பாத்தினா...!! வாழ்த்துக்கள்...

நன்றிகள் தயா அண்ணன். :D

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படைப்பு தொடருங்கள் ..வாசித்த வாசகர்களின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது "தலையங்கத்தில"விசயம் இருக்கத்தான் செய்கிறது போல கிடக்குது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படைப்பு தொடருங்கள் ..வாசித்த வாசகர்களின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது "தலையங்கத்தில"விசயம் இருக்கத்தான் செய்கிறது போல கிடக்குது...

ம்ம்.. நன்றிகள் புத்ஸ். :)

எனக்கும் இது நல்ல கவர்ச்சி கரமான தலைப்பாகத்தான் தெரிகிறது.

எனக்கும் இது நல்ல கவர்ச்சி கரமான தலைப்பாகத்தான் தெரிகிறது.

இப்பல்லாம் கவர்ச்சியா இருந்தாத்தானே விலை போகுது. அதான் தலைப்பையும் கவர்ச்சியா வைத்திருக்கிறார் போல. எல்லாம் ஒரு விளம்பர யுக்திதான்.

முந்தைய போலில்லாமல் யாழை இப்போ சுத்தியடிப்பது மட்டுமே என் வேலை.

அப்படி கண்ணில் பட்டது நெடுக்ஸோட கதை. தலைப்பை பார்த்ததும் எழுதியவரை பார்த்தேன் "நெடுக்ஸ்" :unsure: எண்டதும் ஏதோ வில்லங்கம் /வித்தியாசம் என்று வாசிக்க தொடங்கினேன். வித்தியாசமாகத்தான் இருந்தது. வாழ்த்துக்கள்!

சில சொற்களுக்கு சில கருத்துக்கள் அப்படியே அமைந்து விட்டது. அதற்கு வித்தியாசமான அர்த்தத்தை சொல்லி இருக்கின்றீர்கள். குருகுலத்தில் சீடர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க பூனை இடைஞ்சலாக இருந்ததால் பூனையை கட்டி வைக்கும்படி சொல்லி குரு படிப்பித்தாரம்.அதுவே பின்னால் பாடம் சொல்லி கொடுக்கையில் பூனை ஒன்று கட்டாயம் கட்டியாக வேண்டும் என மாறினதாம். சுவாமி சுகபோனந்தாவின் மனசே ரிலாக்ஸ் ல் கேட்டென்.அது போல இந்த சொல்லும் ஒரு அர்த்தத்திற்கு பாவிக்க போய் அதுவே அர்த்தமாகி விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முந்தைய போலில்லாமல் யாழை இப்போ சுத்தியடிப்பது மட்டுமே என் வேலை.

அப்படி கண்ணில் பட்டது நெடுக்ஸோட கதை. தலைப்பை பார்த்ததும் எழுதியவரை பார்த்தேன் "நெடுக்ஸ்" :icon_mrgreen: எண்டதும் ஏதோ வில்லங்கம் /வித்தியாசம் என்று வாசிக்க தொடங்கினேன். வித்தியாசமாகத்தான் இருந்தது. வாழ்த்துக்கள்!

சில சொற்களுக்கு சில கருத்துக்கள் அப்படியே அமைந்து விட்டது. அதற்கு வித்தியாசமான அர்த்தத்தை சொல்லி இருக்கின்றீர்கள். குருகுலத்தில் சீடர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க பூனை இடைஞ்சலாக இருந்ததால் பூனையை கட்டி வைக்கும்படி சொல்லி குரு படிப்பித்தாரம்.அதுவே பின்னால் பாடம் சொல்லி கொடுக்கையில் பூனை ஒன்று கட்டாயம் கட்டியாக வேண்டும் என மாறினதாம். சுவாமி சுகபோனந்தாவின் மனசே ரிலாக்ஸ் ல் கேட்டென்.அது போல இந்த சொல்லும் ஒரு அர்த்தத்திற்கு பாவிக்க போய் அதுவே அர்த்தமாகி விட்டது.

வாங்கோ சகி. அறிந்திராத ஒரு விளக்கம் தந்திருக்கீங்க. நன்றிகள்.

பொய்கை.. சுசிதா போன்ற உறவுகளின் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.