Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பண்ணையின் கவிதை தொகுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியிலே நான் எழுதிய கவிதைகளை இணைக்கலாம் என்று நினைக்கிறேன்.புதிய கவிதைகளையும் நான் இதுவரை களத்திலே எழுதிய கவிதைகளையும் தொகுக்கலாம் என்று எண்ணுகிறேன்.நான் இங்கு எழுதிய கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கின்றது ஆகவே அவற்றை ஒன்றாக சேர்த்தால் பிரயோசனமாக இருக்கும் :) .

முதலில பெண் தெய்வங்களை வணங்கி தொடங்குவம் என்ன. :D

பெண் தெய்வம்

சொல்லாதே பெண்ணே நீயும் உன்

-சொல்லுக்கு பொருளில்லை இங்கு

பொற்சிலையாக நீயிருந்த நேரம் மொய்த்ததோ

-ஆண்கள் கூட்டம்

சிந்தையிலே திடம் கொள்ளு தாயே நீ

-புகட்டிடு பாடம் சில பேர்க்கு

பண்பாடு பேசிடும் மனிதர் கூட்டம் பெண்ணுக்கு

-மட்டும் ஏனோ

காதலென்னும் வலையில் நீ கவிழ்ந்திடாமல்

-வாழ்ந்திடு பெண்ணே

கற்புக்கு அரசி நீதான் உன் கற்பினை

-களபாடுபவன் யாரோ?

நீ செப்பிடு நல் வார்த்தை இவன்

-சிந்தையெல்லாம் சிதறிடும்வண்ணம்

போற்றிடு பெண்ணே உன்னை உன்

- புகழுக்கு யாரிங்கும் தடையில்லை

வீண்கதை பேசித்திரியும் பலரும் இங்கு

-பிறந்ததும் உன்னால் தானே

பெண் எனும் தெய்வம் இல்லையேல் உலகில்

-இன்பத்தின் வழியது எங்கு

வணங்குகிறேன் பெண்ணே உன்னை நீயும்

-ஒரு தாயல்லோ

படிப்பாய் சமூகத்தின் மூடா உன்

-பெண்ணடிமையை அவிழ்த்து

யாழ்களத்தில் உள்ள பெண்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்

  • Replies 54
  • Views 8.1k
  • Created
  • Last Reply

அட அட அட நம்ம சுப்பண்ணையா? தொடங்குங்கோ தொடங்குங்கோ

ஆரம்பமே பெண் தெய்வத்தை வணங்குறீங்க................. நீடூழி வாழ்க :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் உள்ள பெண்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணாவிற்கு

பூவுக்கு நிகரான நம் பெண் தெய்வங்களுக்கு கவிதை வடித்ததற்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு. தொடருங்கள் வாழ்த்துக்கள்!!! :):D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுப்பண்ணா ......தங்கள் கவி வரிகள் அழகு . தொடருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கும் கவிதைகளை அழகாய் தொகுப்பது அழகே.......அதுவும் சிறப்பே.

முதலில பெண் தெய்வங்களை வணங்கி கவிதை தொடங்கியிருங்கியிருக்கிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணா...

கறுப்பி அக்கா சொல்வது போல நீங்கள் எங்கேயும் போக வேண்டாம். (சொறி கறுப்பி அக்கா).

இங்கு யாழிலேயே இருந்து உங்கள் கவித்திறனை வெளிப்படுத்துங்கள்.

:icon_idea::D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணா பெண் தெய்வத்தின் கவிதை நல்லாவே இருக்கு. தொடருங்கோ :D

அப்படியே ஒருக்கா நெடுக்கு தாத்தாவோட போய் இந்த கவிதையை பற்றி கதைச்சு பாருங்கோ :D:icon_idea:

Edited by இன்னிசை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சுப்பண்ணை உங்கடை கவிதை உங்கை ஒருத்தருக்கு விழுந்த சாட்டையடி dancing_elephant.gif:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பெண் எனும் தெய்வம் இல்லையேல் உலகில்

-இன்பத்தின் வழியது எங்கு

சுப்பர் கவிதை "சூப்பர்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அட அட நம்ம சுப்பண்ணையா? தொடங்குங்கோ தொடங்குங்கோ

ஆரம்பமே பெண் தெய்வத்தை வணங்குறீங்க................. நீடூழி வாழ்க

ஆமாம் நானேதான். நன்றி வெண்ணிலா.நீடுழி வாழ்கவோ :(

யாழ்களத்தில் உள்ள பெண்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்

அப்போ ஆண் சிங்கங்களுக்கு

முனி ஆண்களுக்கு எழுதாமல் விடுவனோ அப்புறம் எழுதி போடுறன். :D

சுப்பண்ணாவிற்கு

பூவுக்கு நிகரான நம் பெண் தெய்வங்களுக்கு கவிதை வடித்ததற்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி

இளங்கவி

நன்றி இளங்கவி.

நல்லா இருக்கு. தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

நன்றி சுவி. நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுவேன்.

நன்றி சுப்பண்ணா ......தங்கள் கவி வரிகள் அழகு . தொடருங்கள் .

நன்றி நிலாமதி அக்கோய்

அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கும் கவிதைகளை அழகாய் தொகுப்பது அழகே.......அதுவும் சிறப்பே.

முதலில பெண் தெய்வங்களை வணங்கி கவிதை தொடங்கியிருங்கியிருக்கிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரவு தூங்கும் காலையிலே பணி செல்லும் வேளையிலே பெண் ஒருத்தியை கண்ணுற்றேன் சாலை ஓரத்தில்.அவளா என் கனவு(தே)வதை ??? என் மனதிலோ பல கேள்விகள் பாருங்கள் நீங்களும் தெரிந்தால் சொல்லுங்கள் :icon_idea:

காலையில் கனவு(தே)வதை

காலையில் காதல் என் கண்களில் தேடல்

கண்டேன் ஓர் பெண் அழகின் சிற்பமாய்

என் கனவு(தே)வதை நீதானோ ?

என்னை கவர்ந்த புன்னகை அதுவும் உன்னிடமோ?

வெள்ளிக்குடம் உன் கழுத்தில் குடியுண்டோ?

பொன்மீன் கண்ணிரண்டில் என் காதல் விழிக்குமோ?

உன் கண்களில் உண்டா என் காதலின் விம்பம்?

கன்னத்து குழியினுள் என் காதல் நீர் தேங்குமோ?

இளமையின் வறுமை உன் இடையினுள் உண்டோ ?

செந்தமிழ் தேகத்தில் என் உணர்ச்சிகள் தூங்குமோ?

மெல்லிய வார்த்தையால் என் தூக்கத்தை கலைப்பாயோ?

பூவின் மலர்ச்சி உன் முகத்தில் பூக்குமோ?

ஏழையின் பசி போல் உன் ஆசைக்கு முடிவுண்டோ?

வானத்து நிலவோ கானகத்து பூங்குயிலோ?

சொல்லடி பெண்ணே நீ என் (தே)வதையா ??? :D

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லடி பெண்ணே நீ என் (தே)வதையா ???

இதில் என்ன கேள்விக்குறி.......நிச்சயமாக தேவதை தான்......வதையா..இருக்கமுடியாது

சுப்பண்னையின் கனவில் வரும் தேவதையே நனவில் வர நேரமில்லையோ? :icon_idea:

வயசு போன காலத்திலை காணுற கனவுக்கு ஒரு அளவே இல்லையோ :D:D

அட..சித்தபுவின் கவிதை தொகுப்பா..பா..வாழ்த்துகள் சித்தப்பு கவிதை தொகுப்பில் பல மர்கள் மலரட்டும்..அந்த மலர்களை நுகரும் ஒரு தேனீயாக நானும்..ம்.. :blink:

சித்தபுவின் கவிதை தொகுப்பில் வலம் வர காத்திருக்கிறேன்..ன்..!! :icon_mrgreen:

எல்லாம் சரி சித்தப்பு..பு ஆனா உங்க கவிதை தொகுப்பில என்னை பத்தியும் ஒரு கவிதை வரனும் சொல்லி போட்டன் ஏன் எண்டா அப்ப தான் யாழ்கள வரலாற்றில எண்ட பேரும் நிலைத்தி நிற்கும்..ம்.. :o (எனக்காக இதை கூட செய்ய மாட்டியளோ சித்தப்பு..பு).. :o

காலையில் வந்த எந்த தேவதையை கேட்கிறியள் சித்தப்பு.??..!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணா நீங்களுமா??? சரி சரி எழுதுங்கோ.அப்பிடியே ஆண்சிங்கங்கள் எங்களையும் புகழ்ந்து ஒண்டு எழுதிறதுதானே

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்களத்தில் இருக்கும் பெண்களுக்கா?.....

என்ன சுப்பண்ணை யாழ்க்களத்தில் பெண்கள் இருக்கிறார்களா?

நான் அறிந்து ஒரு சிலர் அவர்களையும் இப்போதெல்லாம் காணக்கிடைப்பதில்லை...

கவிதை நன்றாக இருக்கிறது.. தொடருங்கள்.

நல்லது சுப்பண்ணை. தொடருங்கோ.

இளங்கவி: ஏன் பெண்கள் பூக்களுக்கு நிகரானவை? அவையும் ரெண்டு, மூண்டு நாளில் காஞ்சு சருகாகிடுவினமே?

பெண்கள்: அடிக்க வராதேய்ங்கோ ப்ளீஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் என்ன கேள்விக்குறி.......நிச்சயமாக தேவதை தான்......வதையா..இருக்கமுடியாது

நிச்சயமாக தேவதைதான் ஆனால் என் கனவில் வந்த பெண்ணும் நான் நேரில் பார்த்த பெண்ணும் ஒன்றாக இருந்தால் இல்லாவிட்டால் அப்படி ஒரு நினைப்பை எனக்கு தந்தது வதை தானே அதான் அப்படி போட்டேன் புத்தா :lol: .

சுப்பண்னையின் கனவில் வரும் தேவதையே நனவில் வர நேரமில்லையோ?

வயசு போன காலத்திலை காணுற கனவுக்கு ஒரு அளவே இல்லையோ

வெண்ணிலா அது சும்மா தெரியும்தானே.ஐயோ கனவே வாறதில்லையப்பா :)

அட..சித்தபுவின் கவிதை தொகுப்பா..பா..வாழ்த்துகள் சித்தப்பு கவிதை தொகுப்பில் பல மர்கள் மலரட்டும்..அந்த மலர்களை நுகரும் ஒரு தேனீயாக நானும்..ம்.

சித்தபுவின் கவிதை தொகுப்பில் வலம் வர காத்திருக்கிறேன்..ன்..!!

எல்லாம் சரி சித்தப்பு..பு ஆனா உங்க கவிதை தொகுப்பில என்னை பத்தியும் ஒரு கவிதை வரனும் சொல்லி போட்டன் ஏன் எண்டா அப்ப தான் யாழ்கள வரலாற்றில எண்ட பேரும் நிலைத்தி நிற்கும்..ம்..(எனக்காக இதை கூட செய்ய மாட்டியளோ சித்தப்பு..பு)..

காலையில் வந்த எந்த தேவதையை கேட்கிறியள் சித்தப்பு.??..!! :wub:

அப்ப நான் வரட்டா!!

நன்றி மகனே,அச்சோ உங்களை பத்தி ஒரு கவிதையோ எழுதிட்டால் போச்சு. காலையில் வந்த எந்த தேவதையோ அப்புறம் சொல்லுறன் :lol::lol:

சுப்பண்ணா நீங்களுமா??? சரி சரி எழுதுங்கோ.அப்பிடியே ஆண்சிங்கங்கள் எங்களையும் புகழ்ந்து ஒண்டு எழுதிறதுதானே

ஆமாம் நானே தான் சாத்திரி நன்றி.ஆண்களை பத்தி எழுதாமல் இருப்பனோ எழுதி போடுறன் சரியே :)

யாழ்க்களத்தில் இருக்கும் பெண்களுக்கா?.....

என்ன சுப்பண்ணை யாழ்க்களத்தில் பெண்கள் இருக்கிறார்களா?

நான் அறிந்து ஒரு சிலர் அவர்களையும் இப்போதெல்லாம் காணக்கிடைப்பதில்லை...

கவிதை நன்றாக இருக்கிறது.. தொடருங்கள்.

நன்றி வல்வைசகாரா , யாழ்களத்தில் இருக்கும் பெண்களுக்காகவும் பெண்கள் பெயரில் இருக்கும் ஆண்களுக்காகவும் எழுதினேன் :lol: .யாழ் களத்தில் பெண்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள்.

நல்லது சுப்பண்ணை. தொடருங்கோ.

இளங்கவி: ஏன் பெண்கள் பூக்களுக்கு நிகரானவை? அவையும் ரெண்டு, மூண்டு நாளில் காஞ்சு சருகாகிடுவினமே?

பெண்கள்: அடிக்க வராதேய்ங்கோ ப்ளீஸ்.

நன்றி ஈஸ் கண்டு கனகாலம் எப்படி இருக்கிறிங்கள்? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களுக்கு கவிதை ஓன்று எழுதினவுடனே எல்லாரும் ஆண்களிக்கு இல்லையா என்கிறார்கள் சரி அவர்களுக்கு எழுதுவம் என்று நினைச்சால் நேற்று தூங்கப்போகும் போதுதான் இந்த கவிதை வந்தது சரி பாருங்கோவன்.

ஆண்மகன்

நீயில்லை என்றால் பிறப்பிங்கு ஏது?

பிரம்மனவன் படைப்பில் நீ புனிதப்பிறவியையா

நீயில்லை என்றால் பெண்ணுக்கு சுகம் உண்டோ ?

இகழ்ந்திடுவார் உன்னை நீ இறங்காதே

தூற்றிடுவர் உன்னை துவளாதே நீ ஆண்மகன்

வாள் எடுத்து போர் செய்வாய் போர்க்களத்திலே

பலர் வாழ்வுக்கு அன்னமிடுவாய் உன் வாழ்நாளிலே

அப்பா என்றால் உருகிடுமே உன்மனது

ஐயா என்றால் உயர்ந்திடுமே உன் பண்பு

தனக்கென வாழ்ந்திடும் உலகிலே நீ பிறர்க்கென வாழ்வாய்

உழைத்திடுவாய் ஓய்வின்றி உன் குடும்பம் காத்திடவே

நோயொன்று வந்தாலும் இல்லை என்பாய் பிறர்க்கென்றால் கலங்கி நிற்பாய்

துக்கத்தில் அழாவிட்டால் துன்பம் உனக்கு இல்லையா ?

உண்மையறியா உலகம் சொல்லட்டும் நீ வருந்தாதே

ஓர் தொழில் செய்யும் தெய்வத்துக்கே கோவிலுண்டு நம் நாட்டிலே

பல தொழில் செய்யும் உனக்கு இல்லையே கோவில்

காதலென்றால் நீ கொடுத்திடுவாய் உயிரையே

வாழ்தல் என்றால் நீ உருக்கிடுவாய் ஊனையே

உன்னை போற்றிப்பாட எனக்கிங்கு வார்த்தையில்லை

உன்னை பாடாவிட்டாலும் நான் இங்கு மனிதனில்லை - ஆதலால் படுகிறேன்

படைப்பவன் கடவுளானால் நீயும் கடவுளப்பா

யாழ்களத்திலுள்ள ஆண்மகன்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மகன்

நீயில்லை என்றால் பிறப்பிங்கு ஏது?

பிரம்மனவன் படைப்பில் நீ புனிதப்பிறவியையா

நீயில்லை என்றால் பெண்ணுக்கு சுகம் உண்டோ ?

இகழ்ந்திடுவார் உன்னை நீ இறங்காதே

தூற்றிடுவர் உன்னை துவளாதே நீ ஆண்மகன்

வாள் எடுத்து போர் செய்வாய் போர்க்களத்திலே

பலர் வாழ்வுக்கு அன்னமிடுவாய் உன் வாழ்நாளிலே

அப்பா என்றால் உருகிடுமே உன்மனது

ஐயா என்றால் உயர்ந்திடுமே உன் பண்பு

தனக்கென வாழ்ந்திடும் உலகிலே நீ பிறர்க்கென வாழ்வாய்

உழைத்திடுவாய் ஓய்வின்றி உன் குடும்பம் காத்திடவே

நோயொன்று வந்தாலும் இல்லை என்பாய் பிறர்க்கென்றால் கலங்கி நிற்பாய்

துக்கத்தில் அழாவிட்டால் துன்பம் உனக்கு இல்லையா ?

உண்மையறியா உலகம் சொல்லட்டும் நீ வருந்தாதே

ஓர் தொழில் செய்யும் தெய்வத்துக்கே கோவிலுண்டு நம் நாட்டிலே

பல தொழில் செய்யும் உனக்கு இல்லையே கோவில்

காதலென்றால் நீ கொடுத்திடுவாய் உயிரையே

வாழ்தல் என்றால் நீ உருக்கிடுவாய் ஊனையே

உன்னை போற்றிப்பாட எனக்கிங்கு வார்த்தையில்லை

உன்னை பாடாவிட்டாலும் நான் இங்கு மனிதனில்லை - ஆதலால் படுகிறேன்

படைப்பவன் கடவுளானால் நீயும் கடவுளப்ப.

நல்ல வரிகள் சுப்பண்ணை வாழ்த்துக்கள்

Edited by muneevar

நல்லாயிருக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

சகலதும் சிவமயம்..சிவன் இன்றி சக்தி இல்லை,"உன்னை போற்றிப்பாட எனக்கிங்கு வார்த்தையில்லை" என்று யாரும் கவி பாட வேண்டிய அவசியமில்லை காரணம் ஆண் இல்லையெனில் இவ்வுலகு இல்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் கவிதைகள் எல்லாம் பிரமாதம்.நீங்கள் ஆண்,பெண் என்று இரன்டு பகுதியையும் திருப்தி படுத்துறமாதிரி பூந்து விளையாடி இருக்கிறள்.அரசியலில உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.