Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடியார்களே... நான் பசியாய் இருக்கிறேன், எனக்கு சாப்பாடு தாருங்கள்

Featured Replies

என் பதிவிலும் இப்படத்தை இட்டுள்ளேன்..படத்தை உருவாக்கிய உள்ளத்திற்கு நன்றிகள் : http://thooya.blogspot.com/2008/09/blog-post.html

  • Replies 125
  • Views 11.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாரத்தில் எத்தனை தடவை வீட்டுக்கு வெளியில் உணவு உண்பீர்கள் (குடும்பமாக)..???!

வாரத்தில் எத்தனை தடவை பணம் கொடுத்து சினிமா பார்ப்பீர்கள் (தியேட்டர் அல்லது சிடி..!)??!

வாரத்தில் எத்தனை தடவை மது அருந்துவீர்கள்..??!

வாரத்தில் எத்தனை சிகரட் குடிப்பீர்கள்..??!

சரி நெடுக்கர், நீங்கள் சொல்லவருவது என்ன?

A) இந்த செலவுகள் கோயில் செலவோடு ஒப்பிடும் போது மிக மிக அனாவசியமானவை. ஆகவே கோயிலில் செய்யும் செலவுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

B) கோயிலில் மட்டுமல்ல எல்லா விதத்திலும் எமது வீண் செலவை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்புதல் உகந்தது.

உங்கள் நிலைப்பாட்டை தயவுசெய்து தெளிவாகச் சொல்லுங்கள். (A or B)?

Edited by காட்டாறு

வெறும் பேச்சுடனும் , விமர்சனத்துடனும் நிற்கும் எம்முடன் ஒப்பிடும் போது , செயலில் (ஆத்திகம் , நாத்திகம் என்ற பேச்சுக்கு அப்பால்), படத்தை உருவாக்கிய அந்த அன்பர்கள் பாராட்டுதற்குரியவர்கள்

Edited by பல்லவன்

  • கருத்துக்கள உறவுகள்

சரி நெடுக்கர், நீங்கள் சொல்லவருவது என்ன?

A) இந்த செலவுகள் கோயில் செலவோடு ஒப்பிடும் போது மிக மிக அனாவசியமானவை. ஆகவே கோயிலில் செய்யும் செலவுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

B) கோயிலில் மட்டுமல்ல எல்லா விதத்திலும் எமது வீண் செலவை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்புதல் உகந்தது.

உங்கள் நிலைப்பாட்டை தயவுசெய்து தெளிவாகச் சொல்லுங்கள். (A or B)?

லொட்டோ.. உரசும் காட்.. கம்பிளிங்.. ரேஸ்.. தண்ணி.. சிகரட் என்று.. எத்தனை தமிழர்கள் அதிஸ்டத்தை.. போதையை.. நம்பி புலம்பெயர்ந்த நாடுகளில் காசைக் கொட்டுகிறார்கள். அவையும் விரையம் தானே.

கோவில்களில் பூசைக்கும்.. அர்ச்சனைக்கும்.. பாலுக்கும்.. தேங்காய்க்கும் கொட்டும் பணத்தை.. கோவில்களை உண்டியலாக்கி.. சேகரித்து.. தாயகத்துக்கு அனுப்ப கோவில்கள் தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட முன் வர வேண்டும். விளையாட்டு விழாக்கள் மூலம் திரட்டப்படும் பணம்.. தாயகத்துக்கு முழுமையாகப் போய் சேர்வதாக யாழ் களமும் கூட நம்புகிறது... அந்த நம்பிக்கையை கோவில்கள் பெற வேண்டும்.

ஏனெனில்.. இந்த தலைப்பில் சம்பந்தப்பட்டவர்.. கோயில் தேங்காயை வைத்து.. இப்படத்தை உருவாக்க முதல்.. சுவிஸில் நடந்த ஆடம்பரமான.. தமிழர் விளையாட்டு விழா (தமிழீழம் என்ற பதம் அங்கு உள்வாங்கப்பட்டிருந்தது) தொடர்பில் போடப்பட்ட படங்களோடு.. ஒரு வேளை உணவுக்காக மாடு மேய்க்கும் அதே வயதை ஒத்த வன்னிச் சிறுவர்களின் படத்தை போட்டு.. அவனுக்காக எழுப்பட்ட குரல்.. "இவர்களின் தரமும் நிலையும் உயர வேண்டும்" என்ற விண்ணப்பம் உடனடியாகவே வலைஞனால் தணிக்கை செய்யப்பட்டிருந்தது. அந்தளவுக்கு யாழ் களம்.. ஆடம்பர வடிவில் அமைந்திருக்கும்.. விளையாட்டு விழாக்களூடு... செலவு செய்யப்படும் மக்களின் பணம்.. தாயகத்துக்கு உதவுவதாகவும்.. தமிழீழ உணர்வை இளையோர் மத்தியில் வளர்ப்பதாகவும் நம்புகிறது.

ஆனால்.. கோவில்களை மையப்படுத்தி வந்த இந்தக் கருத்தும்.. அடிப்படையில் நான் அங்கு அத்தலைப்பில் இட்ட படத்தின் அடிப்படையில் அமைந்த ஒன்று என்று சொல்லலாம்.

ஆனால் கோவில்களில் சில, தாயக மக்களுக்கு செய்யும் பங்களிப்பை கூட கருத்தில் எடுக்காது.. வழமையான.. நாத்திகவாத கண்ணோட்டம் மிக இது இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளது.

கோவில்களூடு தாயகத்துக்கு ஆற்றப்படும் பங்களிப்புகள் பற்றி எவ்வித கவனிப்பும்.. இன்றி கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

ஆடம்பர விளையாட்டு விழாக்களூடு.. தென்னிந்திய திரை, சின்னத்திரை.. தாரகைகள் மற்றும் புலம்பெயர்ந்த கலைக்குஞ்சுகளின்.. நாடக.. நாட்டிய... டிஸ்கோ.. இன்னிசை.. கானக்குயில்களோடு.. திரட்டப்படும் பணம்.. 100% தாயகத்தை அடைவதாக எண்ணிக் கொள்கிறோம். ஆனால்.. கோவில்களினூடு.. தேங்காய் வாங்கி வரும் பணமோ.. பால் வாங்கி வரும் பணமோ.. இல்ல.. இதர உதவிகளோ... தாயகத்துக்கு போவதில்லை என்று நம்ப வைக்கப்படுகிறோம்.

என்னே வேடிக்கையாக இருக்கிறது. இதற்குள்.. ஏயாம் பியாம்.

முதலில்.. உங்கள் உங்கள் மனச்சாட்சியை.. தொட்டுக் கேளுங்கள்.. உண்மையில் நீங்கள் எத்தனை சதவீதம்.. தாயகத்தில் உள்ள அப்பாவி மக்கள் மீது உண்மையான மனிதாபிமானத்தில் இருந்து உதவி செய்ய முற்படுகிறீர்கள் என்று. அவ்வாறு செய்ய முற்படும் போது.. கோவில்களில் விரையமாவது மட்டும் கண்ணுக்குத் தெரியாது.. எத்தனையோ பல விடயங்களில் பணம் விரையமாவது தெரியும். அவை அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை கோவில்களினூடு மக்கள் செலவு செய்யும் பணத்தைக் கொண்டு தாயகத்துக்கு அளிக்கப்படும் பங்களிப்புக்கள் பெருக வகை செய்யப்பட வேண்டும்.

அதற்கு ஏற்ப... புலம்பெயர்ந்த தமிழர்கள் அநாவசிய செலவுகளுக்கு என்று.. (சுற்றுலாப் பயணங்கள்.. விளையாட்டு விழாக்கள்.. திரை.. சின்னத்திரை நட்சத்திரங்களின்.. நாட்டிய நாடகங்கள்.. இன்னிசை.. கானக்குயில்கள்.. மற்றும்.. சினிமா.. தண்ணி.. சிகரட்.. சாமத்தியவீடு.. திருமணப் பாட்டிகள்.. பேர்த்டே பாட்டிகள்.. 60ம் கலியாணப்பாட்டிகள்.. பாபி கியூப்பாட்டிகள்.. இன்னும் இன்னும்..!) கோடிக்கணக்கில் கொட்டும் பணத்தையெல்லாம் மீதப்படுத்தி.. தாயக உறவுகளுக்கு அனுப்ப இப்பட்டத்தை மாற்றி அமைத்தீர்கள் என்றால்.. அது வரவேற்கத்தக்கது.

வெறும்.. கோவில் தேங்காயிலும்.. கோவில் பாலிலும்.. தாயக உறவுகளின் உதவிப் பணம் கரைவதாக கண்ணீர் வடிப்பது.. முற்றிலும் 100% நாத்திக.. நீலிக் கண்ணீர்..!

எனவே இத்தலைப்பில் உள்ள இப்படத்தை எக்காரணம் கொண்டும்.. நான் காட்சிப்படுத்தவோ வேறு விளம்பரங்களுக்கோ கொண்டு செல்வதை செய்ய மாட்டேன்.

நான் மக்களின் மதச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் அதேவேளை.. கோவில்கள் சில உண்மையான அர்ப்பணிப்புடன்.. கோவில்களில் மக்கள் செய்யும் செலவின்றும் குறித்த தொகையை மீதப்படுத்தி.. தாயகத்துக்கு தந்து வருவதை புலம்பெயர் நாடுகளில் உள்ள எல்லாக் கோவில்களும் முன்னுதாரணமாகக் கொண்டு.. பிரிவினைகள் அகற்றி முழுமையான மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் செய்ய முன் வருதலையே இங்கு வேண்டுகோளாக வைக்க விரும்புகின்றேன்.

அதேபோல்.. இதர நிகழ்வுகளால் பெறப்படும் பணமும்.. 100% தாயகத்துக்குப் போவதை உறுதி செய்ய வேண்டியதும்.. புலம்பெயர் தமிழர்கள் பணியாகும். அதுமட்டுமன்றி அனைத்து அநாவசிய செலவுகளையும் தவிர்த்து.. தாயகத்துக்கு உதவி தாயகத்தின் சிவில்.. மற்றும் பாதுகாப்பு கட்டுமானங்கள் மற்றும் மக்களின் பொருளாதாரம் சிறப்புற புலம்பெயர்ந்த தமிழர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும். அதற்கேற்ப வகையில் இத்தலைப்பில் உள்ள படம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

எந்த சந்தர்ப்பத்திலும், எமது விடுதலைப் போராட்டத்தை எவரும் இந்து மதம் சார்பாகவோ, அல்லது பிற மதங்களை இழுத்தோ கதைத்ததில்லை. அதன் நோக்கம் என்பது தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டமாகவும், அவர்களின் மொழி பண்பாடு காப்பாற்றுவதற்காகவும் தான் வலியுறுத்தி வந்திருக்கின்றோம் என்பதையிட்டுப் பெருமிதம் அடைகின்றோம்... இல்லையா???

ஆனால் இந்த விளம்பரமூடாக சொல்ல முயலும் செய்தியை இந்து மதத்திற்கெதிராக மாற்ற முனைந்தது இவர்கள். அதில் உள்ள நியாயத்தன்மையை நீங்களும், அல்லது வெற்றிவேலும் கூட ஆதரித்திருந்தீர்கள். ஆனால் இப்படி மாற்ற முனைந்தபோது தான் மற்றவர்களின் தவறுகளையும் திருத்தி செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றீர்கள்.

அதை ஏன் ஏற்க இவர்களால் முடியவில்லை எனப் புரியவில்லை.

இப்படியான திசைதிருப்பல்கள் மூலம் மக்கள் படும் அவலங்களை மறைத்து இதையே மட்டும் பிரச்சாரமாக மாற்ற யாழ் நிர்வாகத்தினரும் துணை போகின்றனர். இவர்களின் நோக்கமும் புலப்படுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

குகதாசன்!

நான் எதற்கு வக்காலத்து வாங்கினேன்???????? :):D:D

தேங்காய் உடைப்பதன் தத்துவம்

கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.

தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும்இ நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

குகதாசன்!

இதை நான் நக்கல் செய்வதற்குத்தான் இங்கு இணைத்தேன். இந்த "தத்துவக் கதையை" ஏற்கனவே யாழ் களத்தில் நுணாவிலான் இணைத்திருந்தார்.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry392245

உங்களுக்கு பகிடி வெற்றி தெரியாது போல் இருக்கிறது

தேசியப் பணியில் எமது ஆலயங்கள்

ஐரோப்பாவின் மிகப் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் எடுக்கப்பட்ட படங்கள்

berlin201vd9.jpg

slhamm2ln4.jpg

பாவம் புலம்பெயர் டமில்ஸ். மனம் நொந்து போயிருவினம். வன்னி மக்கள் ... என்ன.. வாழ வழி அத்ததுகள். அதுகள் ரோட்டில கிடந்தான்ன? காட்டில கிடந்தான்ன? தேவையெண்டு எப்பவாசும் எங்களுக்கு தோணினா ஏதோ பிச்சைக்காரனுக்கு போடுற மாரி போடுவம். அதுக்காக எங்கட மனத்தை நோகடிச்சோ? நல்ல கதை என்ன?

சரி ஈசன் மனதை நோகடிக்காமை என்ன செய்யலம் எண்டு யோசிச்சுப் பாக்கிறன்...

தவிக்கும் மக்களின் படஙகளைப் போடுவமோ? சீ சீ சீ. அது பார்க்க அரிகண்டமாயிருக்கும் என்ன? ஏனெண்டா பாருங்கோ எங்கடை சிறார்களின்டை மனம் பாதிச்சிரும். வேணாம்..

வேறையென்ன வழி... ஒண்டுமாய் தோணலியே... சரி இப்ப அதா முக்கியம். வேலைக்கு போகவெணும். பிள்ளயை --,--,--, கிளாசுக்கு கூட்டிக் கொண்டு போகவேணும். இரவு பழைய மாணவர் சங்கத்தின்ற பார்ட்டி ..................

நேரமிருந்தா மனம் நோகாம எப்பிடி சொல்லுறதெண்டதைச் சிந்திப்பம். என்ன..? :)

அடடா அடடா :D

என்ன செய்யிறது ?

கட்டைகாடு சண்டையில் ஒரு கால் போயிற்றுது. தாய் தேப்பன்ற ஆக்கினையால தான் வெளிநாடு வந்தனாங்க. இல்லாவிட்டால் எங்கட மண்ணை விட்டு போறோமே ? முழு பிரம்மசாரி வேற. இரவும் பகலும் வன்னி மக்களின் நினைப்புதான். தாற டோலில் உண்ணாம திண்ணாம கிடந்து மிச்சம்பிடிச்சு ஒரு பகுதியை தாயகத்துக்கு அனுப்பேக்கில்ல உப்பிடி படத்தை போட்டா...... எங்கள மாதிரி வெங்காய "டமில்ஸ்" இற்கு மனம் நோகாம ....?

எங்கட விசுக் கோத்துகளுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறது எங்கட பிழை ! விசுக் கோத்தகளிற்கு விளண்டியிருந்தால் இப்பிடி ஓரு உவத்திரத்தை சந்திச்சிருப்பமே !!!!! இன்னும் நான் உயாந்த சாதி நீ தாழ்ந்த சாதி எண்டு பனி முத்தி கிடக்குது ! அதை மீறி நாங்கள் உதவி செய்திடுவமே !

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

சபேசன் உந்தப் படங்களில் இருப்பவர்கள் யார் யார்?

படத்தில் இருப்பவர்கள் ஜேர்மனியில் உள்ள சிறிலங்காவின் தூதரக அதிகாரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
வெறும்.. கோவில் தேங்காயிலும்.. கோவில் பாலிலும்.. தாயக உறவுகளின் உதவிப் பணம் கரைவதாக கண்ணீர் வடிப்பது.. முற்றிலும் 100% நாத்திக.. நீலிக் கண்ணீர்..!
  • கருத்துக்கள உறவுகள்

வீணாக தேங்காயும் பாலும் போகின்றது என நாம் கவலைப்பட

நீங்கள் சமைத்த சாப்பாட்டில் மீதிபற்றியும் கார்பயணங்கள் மற்றும்...............?????

கதைப்பது அருவருக்கத்தக்கது

வெளிநாடுகளிலுள்ள மக்கள் கடும்உழைப்புமூலமே சீவிக்கின்றனர்

எனவே வீண்விரயம் செய்வர் என்று புத்திசொல்வது சரியல்ல..........

அதேநேரம் மூடநம்பிக்கைகளை சாடுவதும் வாழும்முறைக்குள் நுழைவதும் ஒன்றல்ல???????????

யம்மு, இப்பிடியெல்லாம் நினைத்தால் நாம் எதுவுமே செய்யாமல் சும்மாவே இருக்கலாம். சிறுதுரும்பும் பல்லுக் குத்த உதவும் என்பதுபோல, இது கொஞ்சப் பேரையாவது சிந்திக்கத் தூண்டும். யாழிலேயே இது ஐந்து பக்கத்தைத் தாண்டிவிட்டது. இதைப் பற்றி ரொறன்ரோ வானொலி ஒன்றிலும் பேசியதாக அறிந்தேன். இதைத்தான் பிரச்சாரம் என்பது. நாம் எவ்வளவுக்கதிகமாகப் பிரச்சாரம் செய்கிறமோ அவ்வளவிற்கு எமக்கு நன்மைகள் உண்டு.

புலம்பெயர்நாடுகளில், ஆரம்பகாலங்களில் ஆலயவாசல்களில் உண்டியல்களை வைத்துக் குலுக்கித்தான் காசு சேர்த்தார்கள். நீங்கள் பிட்ஸா வாங்கிச் சாப்பிடும் காசை, கோப்பி வாங்கிச் சாப்பிடும் காசை இதில் போடுங்கள் என்று கூவிக் கூவித்தான் காசு சேர்த்தார்கள். அதற்கு அநேகமான ஆலயங்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை. சிறுகாலத்தின்பின், அடியார்கள், முக்கியமாகச் சிறுவர்கள் புனர்வாழ்வுக் கழக உண்டியலில் போடுவதற்குமெனச் சேர்த்துக் காசு கொண்டுவரத் தொடங்கினார்கள். அதன்பின்னர், மக்களின் வீடுகளில் புனர்வாழ்வுக் கழக உண்டியல்களை வைத்துக் காசு சேர்த்தார்கள். சமாதானக்கால இடைவெளி, தடைகள் ஆகியவற்றால் நிதிச்சேகரிப்பில் பின்னடைவு ஏற்பட்டது. அதனை நாம் மீண்டும் உத்வேகத்தோடு முன்னெடுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இதனை விமர்சிப்பதை விட்டு, அவர்களை ஊக்குவிப்பதே நல்லது. இந்தச் சுவரொட்டிகளை அடித்தவர்கள் நாத்திகவாதிகள் என்று நாம் முடிவுக்கு வருவதும் தவறு. எனக்குத் தெரிந்த தாயகப்பணியில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்களில் பலர் ஆத்திகவாதிகள்தான். மக்கள் அதிகமாகக் குழுமும் இடங்களில் அந்தந்த இடத்திற்கேற்றவகையில் பிரச்சாரம் செய்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. கோயிலுக்கு வரும் மக்களிடம் கோயில் சம்பந்தமான விடயங்களைப் படமாகப் போட்டுத்தான் நோட்டீஸ் அடிக்க முடியும். சினிமாப்படத்தைப்போட்டோ, உணவுப் படங்களைப் போட்டோ நோட்டீஸ் அடிக்கமுடியாது. இப்படி எடுத்ததெற்கெல்லாம் பிழை பிடித்துக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. பிழை பிடிப்பவர்கள் எப்போதும் பிழை பிடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களைக் கணக்கலெடுப்பதை விடுத்து, நாம் எமது கடமைகளைத் தொடர்ந்து செய்வதே இப்போதைய கட்டாயத் தேவை.

ஒம்..தமிழச்சி அக்கா நீங்க சொல்லுறது வாஸ்தவம் தான்..ன் பாருங்கோ..!! :D

ஆனா "நோட்டிஸை" வாங்கி அங்கால வீசிட்டு போவார்கள் இல்லாட்டி..இப்படி யாழ்களத்திள போட பம்பலா இருந்து கதைத்து போட்டு போக நன்னா இருக்கும்..ம்..பிறகு நாளைக்கே தேங்காய் உடைக்க தொடங்கிடுவீனம் பாருங்கோ ஆனபடியா அவையின்ட "வீக் பொயின்டை" பயன்படுத்தி..தி அதில நாம உச்சமா ஏதாவது பயன் அடையுற மாதிரி யோசித்தா நன்னா இருக்கும்.. :D

அதை விட்டிட்டு என்னும் "நோட்டிஸ்" அடித்து கொண்டிருந்தா..தா..(இதால பிரயோசனமில்லை என்பது தான் எண்ட கருத்து).. :D

சரி நீங்க சொல்லி இருக்கிறியள் புலபெயர் நாட்டில ஆலய வாசலில உண்டியல் குலுக்கி தான் முதலில நிதி சேகரித்தார்கள் எண்டு அந்த கருத்துடன் உடன்படுகிறேன்.. :D

ஆனால்..!!

அதே கோயிலிற்கு முன் இந்த "துண்டுபிரசுரத்தை" கொடுத்தா என்ன நடக்கும்..??..ஒண்டுமே நடக்கா ஏன் எண்டா கோயிலில போய் தேங்காய் உடைத்தா தான்..ன் இவையளுக்கு ஒரு ஆத்ம திருப்தி..இப்படியான ஆட்களிட்ட போய் உதுகளை சொல்லி கால மற்றும் நேரத்தை வீணாக்காமல்..அவையின்ட "வீக் பொயிண்டை" எங்களுக்கு சாதகமாக பயன்படுத்துறது தான் சரி எண்டு எனக்கு படுகிறது..!! :)

பிழை பிடிப்பவர்களிடம் தான் நாம் பலவற்றை கற்றுகொள்ளாம் பாருங்கோ தமிழ் அச்சு அக்கா..ஆனபடியா நாளைக்கே உங்களுக்காகவும் ஒரு தேங்காய் அடித்து விடுறன் அதுவும் நிலத்தில போட்டு தேங்காயை உடைக்காம எண்ட தலையில போட்டு உடைத்து விடுறன் என்ன..!! :D

தலையால தேங்காய் உடைக்கிறது தான் இன்னும் நல்லதாம் பாருங்கோ..அது சரி அங்க உடைத்த தேங்காயில மிச்ச மீதி இருக்கோ ஏன் கேட்கிறன் எண்டா கோயிலில அடித்த தேங்காய் சாப்பிட்டா நல்லா இருக்கும் அது தான்..!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இதில தேங்காய் உடைப்பதில் குறை காணுபவர்கள் பொழுது போக்காக படம் பார்க்க போவார்கள், பாருக்கு போவார்கள், கிளப்புக்கு போவார்கள், இல்லை வீட்டில தண்ணி அடிப்பார்கள், பிள்ளையளுக்கு பொழுது போக்க வீடியோ கேம் வாங்கி கொடுப்பார்கள்.

எனக்கும் தேங்காய் உடைப்பதில் துளிஅளவும் விருப்பம் இல்லை ஆனால் ஒரே சமூகத்தை விழுந்து விழுந்து வாருறத விட்டுட்டு உருப்படியா ஏதாவது செய்யலாம்.

உதாரணத்துக்கு எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம் சொல்றேன்.

நானும் நண்பனும் யூனி பாரில ஒரு பிச்சர் பீர் ($12) எடுத்து அடிச்சிட்டு இருக்க தேசிய விரும்பியான ஒரு நபர் அந்த பக்கமாக வந்தார் (அவர் சமூக அந்தஸ்து கருதி குடிப்பதில்லை). வந்து ஒரே லெக்சர். அந்த 12 டொலரை அனுப்பினா அங்கை 12 குடும்பம் ஒரு நேரம் சாப்பிடுமாம். அந்தாளுக்கு பதில் சொல்ல எனக்கு இன்னுமொரு பிச்சர் வேணுமெண்டு போட்டு பதில் ஒண்டும் சொல்லாமல் விட்டுட்டேன். அன்று மாலையே வேறொரு இடத்துக்கு போகும் போது தியேட்டருக்கு பக்கத்தில அதே நபர் தனது நண்பருடன் படம் பார்க்க பொப்கோணுடன் நின்றார். எனக்கு கடுப்பாகிட்டுது. நேரா போய் உந்த காசை (2 பட அனுமதி $20, பெப்கோர்ன் $5) அனுப்பினால் 25 குடும்பம் ஒரு நேரம் சாப்பிடும் எண்டு சொல்ல அவருக்கு மூஞ்சையெல்லாம் கறுத்திட்டுது. அவருது நண்பர் ரென்சனாகி என்னோட ஏதோ கதைக்க வெளிக்கிட இவர் சமாளிச்சு தடுத்திட்டார்.

இதில என்ன சொல்ல வாறேன் எண்டால்:

தேங்காய் உடைக்கிறதில ஒரு பிரயோசனமும் இல்லை. 100 தேங்காய் உடைக்க 100 டொலர் முடியும்.

ஆனால் ஒருநாள் நண்பர்களுடன் வெளியே போனால் 100 - 200 எண்டு போகும்

குடும்பத்துடன் படம் பார்க்க போனால் 50 - 100 எண்டு வேணும் (இப்பவும் ரொறன்ரோ போய் தமிழ் தியேட்டர் வளிய பாத்தா சனம் முண்டியடிச்சுகொண்டு தான் நிக்குது)

பிள்ளைக்கு வீடியோ கொன்சோல் வாங்கி கொடுத்தால் 300 - 400 எண்டு வேணும்

அந்த வீடியேக்கு கேம் வாங்கி குடுத்தால் 60 - 70 எண்டு வேணும்

எல்லாத்துக்கும் மேலால புலம்பிற ஆக்கள் தாங்கள் இருக்கிற 400 000 - 600 000 எண்டு வீட்டை வாங்கி, வங்கி காறனுக்கு மோர்கேச்சுக்கு 800 - 1000 எண்டு வட்டி கட்டுறத விட ஒரு சாதாரண வீட்டை வாங்கி 200 - 300 ஜ் வட்டியா கட்டி மிச்ச 500 - 700 ஊருக்கு அனுப்பினாலும் சனத்தின்ர கஸ்டத்தை கொஞ்சம் தீர்கலாம்.

இப்பிடி மாதம் மாதம் 500$ - 1000$ எண்டு மிச்சம் பிடிச்சு அனுப்பிறத விட்டுட்டு வருடத்தில 100 டொலருக்கு கேங்காய் அடிக்கிறான் எண்டு புலம்புறிங்கள். இங்கு சிலருக்கு தேங்காய் அடிக்கிறது பிரச்சனை இல்லை.... சைவ சமூகத்தில் குற்றம் காணுவதே பிரச்சனையாக உள்ளது. :wub::)

பல கருத்துகளை ஒன்றிணைத்து ஓரு சிந்தனையை வெளிகொணர்ந்துள்ளீர்கள்...... பாராட்டுக்கள்!

ஆனாலும் நீங்கள் சுட்டிகாடடிய பல பிரச்சனைகள் ஒரு பிரச்சனையுடன் ஒவ்வாது உள்ளது. எவ்வாறெனில் தனிமனித பிரச்சனை சமூக பிரச்சனை எனும்போது. சைவ சமய பிரச்சனை பொதுப்பிரச்சனையாகிறது ஆதலால் அதில் மூட நம்பிக்கைகள் தவறான வழிகாட்டல் இருப்பின் அதை சுட்டி காட்டி திருத்தி கொள்ள வேண்டிய அவசியம் யாபருக்கும் உள்ளது. அதை ஏற்றுகொள்வதற்கு உண்மையான இறைபக்தி அவசியாமாகிறது...... அது பலரிடமில்லாதிருப்பதாலேயே சைவ சமயம் எனும் பெயரில் எதையாவது திணித்துவிட வேண்டும் என்ற வெறி மட்டுமே பலரிடம் இருக்கின்றது. அதலால்தான் தவறுகள் முடநம்பிக்கைகள் சுட்டிகாடடபடும் போதெல்லாம் அவர்களால் ஏற்க முடியாது உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வீணாக தேங்காயும் பாலும் போகின்றது என நாம் கவலைப்பட

நீங்கள் சமைத்த சாப்பாட்டில் மீதிபற்றியும் கார்பயணங்கள் மற்றும்...............?????

கதைப்பது அருவருக்கத்தக்கது

வெளிநாடுகளிலுள்ள மக்கள் கடும்உழைப்புமூலமே சீவிக்கின்றனர்

எனவே வீண்விரயம் செய்வர் என்று புத்திசொல்வது சரியல்ல..........

அதேநேரம் மூடநம்பிக்கைகளை சாடுவதும் வாழும்முறைக்குள் நுழைவதும் ஒன்றல்ல???????????

உங்கள் வாழ்க்கை முறைக்குள்ளேயே மூடநம்பிக்கைகள் இருக்கேக்க.. ஏன் கோவிலை மட்டும் சுற்றி அதைக் காண்கிறீர்கள்.. அல்லது காண்பிக்கப்படுகிறீர்கள்..??!

கடினமாக உழைக்கிறீர்கள் சரி.. அதில் எவ்வளவை வீண் செலவு செய்கிறீர்கள் என்று சுட்டிக்காட்டியும் ஏற்றுக் கொள்ள முடியாமல்.. அது வாழ்க்கை முறை என்று சமாதானம் சொல்ல விளைகிறீர்கள்.

பொப்பி வாரம் என்று பொப்பி மலர்களை விற்கின்ற போது காசு கொடுத்து வாங்கி குத்தித் திரிந்துவிட்டு வீசிவிட்டுப் போகிறோம். அந்தப் பணம் பங்களிப்பாக கருதப்படுகிறது. இங்கே பொப்பிக்குப் பதில் தேங்காய். வாங்கி உடைத்துவிட்டுப் போகிறான். அந்தப் பங்களிப்பை தாயகத்தை நோக்கி முழுமையாகத் திருப்புவம் என்ற நோக்கமில்லை.. மூடநம்பிக்கை என்று வரையறுத்துக் கொண்டு.. அதைத் தடுப்பதால் என்ன பயன்..??!

பாபிகியு போட்டு சுட்டிட்டு சாப்பிட்டால் தான் கோழி சுவைக்குமா..??! வழமையா சமைப்பது போல சமைத்தால் சுவைக்காதா..??! ஒரு தடவை பாபிகியு போட ஆகும் செலவும் வெளியிடப்படும் நச்சு வாயுவும் 10 தொடக்கம் 5 தடவை வழமையான சமையலால் ஆகும் செலவுக்கு நிகரானது. இவை மூடத்தனங்களாக தெரியவில்லை. அவை வாழ்க்கை முறைகளாகின்றன. ஆனால்.. கோவிலுக்கு தேங்காய் வடிவில் செல்லும் பங்களிப்பு.. முற்றிலும் மூடத்தனமாகத் தெரிகிறது. அங்கே உடைக்கப்படும் தேங்காய் சேகரிக்கப்பட்டு.. பிற உற்பத்திப் பொருட்கள் செய்ய அனுப்பப்படுகின்றன..!

ஆனால்.. பத்த வைக்கும் சிகரட்டாலும்.. குடிக்கும் சாராயத்தாலும்.. விளையாடும் கம்பிளிங்காலும்.. கழுத்தில் தொங்கும் நாய்ச் சங்கிலியாலும்.. பெட்டையள் தேடி அலையும் பி எம் டபிள்யூக்கள் எரிக்கும் பெற்றோலாலும்.. பார்க்கும் வன்முறை... கவர்ச்சி.. கண்ணீர்.. சினிமா மற்றும் சீரியலாலும்.. அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளை மேடையில் விட்டு.. தொட்டுக்க ஆடிக்க செய்யும் செலவாலும்.. ஐயோ பிரபஞ்சத்தில் கடவுள் இல்லை.. எல்லாம் மாயை என்று சொல்லித் திரிய செய்யும் செலவாலும்.. ஏதேனும்.. உபயோகம்..???! எத்தனை ஏழை மனிதர்களின் பசிக்கு இவை தீனியாகின்றன..???! என்னே வேடிக்கையான நிலைப்பாடுகள். தாங்கள் செய்யும் அறியாமையை கூட சரியாக இனங்காணத்தவறும் மனிதர்கள்.. ஊருக்கு உபதேசிக்க... மட்டும்..??! இதைத்தான் அன்று பாரதி.. நிலை கெட்ட மாந்தர் என்றானோ..??! :):wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒம்..தமிழச்சி அக்கா நீங்க சொல்லுறது வாஸ்தவம் தான்..ன் பாருங்கோ..!! :D

ஆனா "நோட்டிஸை" வாங்கி அங்கால வீசிட்டு போவார்கள் இல்லாட்டி..இப்படி யாழ்களத்திள போட பம்பலா இருந்து கதைத்து போட்டு போக நன்னா இருக்கும்..ம்..பிறகு நாளைக்கே தேங்காய் உடைக்க தொடங்கிடுவீனம் பாருங்கோ ஆனபடியா அவையின்ட "வீக் பொயின்டை" பயன்படுத்தி..தி அதில நாம உச்சமா ஏதாவது பயன் அடையுற மாதிரி யோசித்தா நன்னா இருக்கும்.. :)

அதை விட்டிட்டு என்னும் "நோட்டிஸ்" அடித்து கொண்டிருந்தா..தா..(இதால பிரயோசனமில்லை என்பது தான் எண்ட கருத்து).. :D

சரி நீங்க சொல்லி இருக்கிறியள் புலபெயர் நாட்டில ஆலய வாசலில உண்டியல் குலுக்கி தான் முதலில நிதி சேகரித்தார்கள் எண்டு அந்த கருத்துடன் உடன்படுகிறேன்.. :D

ஆனால்..!!

அதே கோயிலிற்கு முன் இந்த "துண்டுபிரசுரத்தை" கொடுத்தா என்ன நடக்கும்..??..ஒண்டுமே நடக்கா ஏன் எண்டா கோயிலில போய் தேங்காய் உடைத்தா தான்..ன் இவையளுக்கு ஒரு ஆத்ம திருப்தி..இப்படியான ஆட்களிட்ட போய் உதுகளை சொல்லி கால மற்றும் நேரத்தை வீணாக்காமல்..அவையின்ட "வீக் பொயிண்டை" எங்களுக்கு சாதகமாக பயன்படுத்துறது தான் சரி எண்டு எனக்கு படுகிறது..!! :wub:

பிழை பிடிப்பவர்களிடம் தான் நாம் பலவற்றை கற்றுகொள்ளாம் பாருங்கோ தமிழ் அச்சு அக்கா..ஆனபடியா நாளைக்கே உங்களுக்காகவும் ஒரு தேங்காய் அடித்து விடுறன் அதுவும் நிலத்தில போட்டு தேங்காயை உடைக்காம எண்ட தலையில போட்டு உடைத்து விடுறன் என்ன..!! :lol:

தலையால தேங்காய் உடைக்கிறது தான் இன்னும் நல்லதாம் பாருங்கோ..அது சரி அங்க உடைத்த தேங்காயில மிச்ச மீதி இருக்கோ ஏன் கேட்கிறன் எண்டா கோயிலில அடித்த தேங்காய் சாப்பிட்டா நல்லா இருக்கும் அது தான்..!! :D

அப்ப நான் வரட்டா!!

இது பிழைக்கத் தெரிந்தவனின்.. யதார்த்ததை விளங்கிக் கொண்டவனின் கருத்து.

சனம்.. பொழுதுபோக்க சினிமா பார்க்காட்டி எவன் சினிமாவை எடுப்பான். அதேபோல.. சனம் தேங்கோய் உடைக்குது என்றால்.. அதை வைச்சு.. பங்களிப்பை பெறுகிற வழியைப் பார்ப்பம் என்றில்லாம.. அதை நாத்திக வாதமாக்கி.. சாத்தான் வேதம் ஓதித் திரிவது.. தேங்காய் உடைப்பவனை விட.. மோசமான செயல்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சைக் குழந்தை அங்கே

பாலுக்கு அழுதிருக்க

பாற்குட அபிசேகம் நீயிங்கு செய்தால்

என்னைக் கடவுளென்று

மனிதன் வணங்குவானோ சொல்?

சத்தியமாய்

அந்தக் கல்லுக்குள்ளே

நான் இல்லையெடா!

மானிடா!

நான் கருணையுள்ளவன்.

ஏழை நெஞ்சுக்குள் தான்

எப்போதும் இருப்பேனடா!

உன் இரத்த உறவுக்கங்கே

பாதி உயிர் போகையிலே

எப்படி நான் கொலுவிருப்பேன்?

நீயமைத்த மஞ்சத்திலே!

எப்போதடா நான் கேட்டேன்?

இப்போது நீ எனக்கென்று

செய்வதெல்லாம்..

வானமே கூரையாய் உன் உறவு

வாழ்வுக்கு வரமிருக்க

கோபுரக் கோயில் கட்டி

என்னை குடியிருக்க நீ கேட்டால்

எப்படி இருப்பேனடா சொல்?

அப்படி நான் இருந்தால்

மனிதன் வணங்கும் தெய்வம்

எனும் தகுதி

எனக்கிருக்குமோ சொல்?

மானிடா!

நான் கடவுள் எனும் பெயரில்

அந்தக் குடிலில்

குடியிருக்க வேண்டுமடா!

என் கடமை செய்து

கண்ணயர வேண்டுமடா!

உன்னைக் கும்பிட்டுக் கேட்கின்றேன்.

கோடியில் கோயில் கட்டி

அழைத்தென்னைப்

பழிகாரன் ஆக்காதே!

நீயும் பெரும் பாவம் செய்யாதே!

சத்தியமாய் சொல்கின்றேன்

இப்போது

அங்குவர என்னால் முடியாது.

உள்ளம் கோயில் என்றும்

அன்பே தெய்வமென்றும்

எத்தனை முறையடா சொல்வது!

இனி எப்படியெடா?

உனக்கு உரைப்பது

என் பொருளை..

ஏதோ

என்னைத் தேடி வருவதாய்

சொல்லி

தூரவே போகின்றாய்.

வேண்டுதல் என்றெண்ணி

வீண் விரயம் செய்கின்றாய்.

எனக்கு விழா என்று

உனக்கே விழா எடுக்கின்றாய்.

எனக்கு படைப்பதாய் சொல்லி

நீயே தின்கின்றாய்.

ஏழை பசியிருக்க

ஏப்பம் விடுகின்றாய்.

பெயருக்கும் புகழுக்கும்

பெரும் பணம் இறைத்துப் பின்

கொலரை எடுத்துவிடும்

நீயெல்லாம்…?

எப்படி இருக்கலாம்

என் பக்தனாய்?

எப்படி நான் உண்பேன்

உன் பாவச் சோற்றை

யாருக்கு நான் உரைப்பேன்

உன் ஈனச் செயலை

உண்மையில்

நான் உண்டு உறங்கி

ரொம்ப நாளச்சு

அந்த ஏழைகளைப்போல்..

தயவு செய்து

என் நிலையை நீ

கொஞ்சம் புரிந்து கொள்

மானிடா!

நான் கண்ணீர் வடிப்பதை

இனியாவது கண்டுகொள்

மானிடா!

எப்படி எப்படியோ என்னை வைத்து

பிழையாய் நீ பிழைக்க

என்ன பாவம் நான் செய்தேன்

அணு அணுவாய் நான் இறக்க

அந்த ஏழைகளைப்போல்

மானிடா!

ஓன்று மட்டும் கேள்

நிச்சயமாக

நீ திருந்தும் போது

நீயின்று வேண்டும் வடிவில்

நான் இருக்க மாட்டேன்.

ஒன்றில் இறந்திருப்பேன்

இல்லை

அன்பென்ற வடிவில் உறைந்திருப்பேன்.

தயவு செய்து முயற்சி செய்

என்னை முழுதாய்க் கொல்ல

அல்லது

அன்பென்ற வடிவில்

என்னை எப்போதும் காண

அது வரை

நான் ஏதும் தவறுரைத்தால்

என்னை மன்னித்து விடு

இல்லை தண்டித்து விடு

வழமை போல

இப்படிக்கு

உண்மையுடன்

உங்கள் கடவுள்

அன்பே தெய்வம்

ஆதவன்

அருமையான கவிதை!

இதை வாசிக்கும் போது கீழே இணைக்கப்பட்டுள்ள

கவியரசர் கண்ணதாசனின் பழைய பாடல்வரிகள் தான் நினைவில் வந்தது

"பல நூல் படித்து நீயறிவும் கல்வி

பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்

பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்

இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்!

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை

தந்து தினம் உழைத்து உயிர் வளர்க்கும் ஏழை

அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்

அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்!

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஒரே ஒரு பார்வையிலே கண்டேனே

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்

அவன் கருணை உள்ள நெஞ்சினிலே

கோவில் கொள்கிறான்!"

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

2.jpg

தாய் பிச்சை எடுக்க பிள்ளை அன்னதானம் கொடுத்தானாம்

எழுதியவர்: வத்திராயன்

Monday, 01 September 2008 01:19

புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் கோவில்களுக்கு அதிக முக்கியம் கொடுக்கிறார்கள். இது ஒரு வகையில் நன்மை உண்டு அதாவது புலம்பெயர் தமிழ் இளையவர்களுக்கு எமது கலை கலாச்சாரங்களை ஊட்டுவதற்கு ஆலயங்கள் சிறப்பாக திகழ முடியும். ஆனால் இன்று எத்தனை ஆலயங்கள் இவ்வாறு செயற்படுகின்றன என்பதனை விரல்விட்டு எண்ண முடியும். அந்தளவிற்கு ஆலயங்கள் தவறான முறைகளில் மக்களை அவர்களுடைய சிந்தனையில் இருந்து தடம் புரள வைக்கும் வகையில் செயற்பாடுகளில் செயற்படுத்தப்படுகின்றன என்பது ஒரு கசப்பான உண்மையாகும். கடவுள் நம்பிக்கை எனும் பெயரில் மக்கள் மத்தியில் உள்ள பல மூட நம்பிக்கைகளை களையாது தொடர்ந்தும் மக்களை அம் மாயையில் வைத்திருந்து பணம் சம்பாதிக்கும் ஒரு வியாபார நிறுவனமாகவே புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள பல ஆலயங்கள் செயறபடுகின்றன. இதனை புரிந்துகொள்ளாது பல மக்கள் தமது பணத்தினையும் நேரத்தினையும் வீணடிக்கிறார்கள் என்பதே வேதனைக்குரிய விடயமாகும்.

இத்தனைக்கும் மேலாக புலம்பெயர் நாடுகள் பலவற்றில் உள்ள தமிழ்மக்களின் பல ஆலயங்கள் அரசியலுடன் நேரடியான தொடர்புகளை பேணுகின்றன. இங்குள்ள சில கோயில்கள் சிறீலங்கா தூதுவராலயங்கள் மற்றும் ஒட்டுக் குழுக்களினாலும் நடாத்தப்படுகின்றன. இவற்றை தெரிந்தும் கூட எம் மக்கள் பல மூடநம்பிக்கைகளில் தொடர்ந்தும் அவ் ஆலயங்களுக்கு செல்கிறனர். இன்றும் சில கோவில்கள் பொது நோக்கங்களுக்காக ஒழுங்கான நிர்வகங்களுடன் இயங்குகின்றன. எனவே அவ் ஆலயங்களுக்கு செல்ல முடியும் எல்லா இடமும் இறைவன் ஒன்றுதான். நமது மனங்கள்தான் வேறுபடுகிறன. பிள்ளையார் எந்தக் கோவிலில் இருந்தாலும் அவர் பிள்ளையார்தான். நான் கோயில்களை இடிக்கவேண்டுமோ அல்லது வழிபடக்கூடாது என்று சொல்லவோ இல்லை. எம்மிடம் உள்ள பல மூடநம்பிக்கைகளை களை எடுக்க வேண்டும். நாம் என்ன செய்கிறோம் என்னத்தை செய்கிறோம் என்ற எண்ணம் எமக்கு சுயமாக தெரிய வேண்டும். எவனாவது சென்னவுடன் செய்ய வேண்டிய தேவை இல்லை.

இன்று (31-08-08) பரிஸ் நகரின் லாச்சப்பலில் உள்ள பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா. இன்று லாச்சப்பல் வீதி முழுமையாக தேங்காயால் மூடப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கான தேங்காய்கள, உணவுகள் என்பன வீணாகப் போகும். இது ஒரு சிறிய உதாரணமே. இதை விட ஆயிரக்கணக்கான யூரோ நாணயங்கள் மக்களிடம் இருந்து ஆலய நடத்துநர்களுக்கு கைமாறும் நிகழ்வுமாகும். இதைவிட இன்னெரு சிறப்பம்சம் எம் இளையோர்கள் சிலர் கத்தி, வாள், மற்றும் போத்தல் சகிதம் வேடுவ வேடம் போட்டு காடுகளில் செய்ய வேண்டிய செயல்களை வீதிகளில் செய்வதனால் சில இடங்களில் இரத்தங்கள் பாயும். இவர்களை இயக்குவதில் சிறீலங்கா தூதரகம் பெரும் பங்காற்றுகிறது.

ஒரு கடைக்காரர் இருநூறு தேங்காய் உடைத்தால் அடுத்த கடைக்காரர் முந்நூறு தேங்காய். எதற்காக இவை எல்லாம்? வன்னியில் எம் உறவுகளின் கதறல்களுக்கு மத்தியில் இவைகள் முக்கியமா என சிறிது சிந்திப்போம்.. கோயில்களுக்கு போகத்தான் வேண்டும் எனில் ஒரு தேங்காய் போதும். ஆயிரம் தேங்காய் தேவை இல்லை. மிகுதிப் பணத்தினை உண்ண உணவின்றி வாழும் உறவுகளுக்கு கொடுங்கள்.

உண்மையிலேயே தமிழர்கள் வாழ்வியலில் கோயில்கள், கோயில் திருவிழாக்கள் என்றால் மிக முக்கிய இடம் வழங்கப்படுவதுண்டு. தாயகத்தில் ஒரு கோவில் திருவிழா என்றால் அந்த ஊர் விழாக் கோலம் பூண்டிருக்கும். ஆகவே கோயில்கள் திருவிழாக்கள் என்பன தமிழ்மக்களால் மிகவும் விரும்பப்படுகின்றன. அவற்றை செய்வதிலும் தப்பில்லை. ஆனால் தற்போது தாயகத்தில் எம் உறவுகள் சிங்கள வெறியரின் வெறியாட்டத்தால் உணவுக்காக, ஒரு துண்டு கூரைக்காக மழை வெயில் என்று சொல்ல முடியாத துன்பத்தில் துடித்துக் கொண்டிருக்கையில், களங்களிலும் நம் உறவுகள் உயிரைக் கொடுத்து மண் காத்துக் கொண்டிருகையில் நமக்கு இங்கு கோயில் குளம் என்ற ஆடம்பரமான கொண்டாட்டங்கள் தேவையா? இரத்த உறவுகள் உயிர் வாழத் துடித்துகொண்டிருக்கையில் நாம் இங்கு பட்டு வேட்டியும் காஞ்சிபுரச் சாறியும் உடுத்து தங்க நகைகளுடனும் இறைதரிசனம்(?) செய்து சாகாவரம் பெறப்போகிறோமா??

இங்கு ஒரு கோயில் திருவிழாவுக்கு செல்லும் மக்கள் தொகை பொங்கு தமிழ் போன்ற தேசியத்திற்கு வலுச்சேர்க்கும் பெரியளவிலான தாய் பிச்சை எடுக்க பிள்ளை அன்னதானம் கொடுத்தானாம்

நிகழ்வுகளுக்குகூட வருவதில்லை. ஆனால் தமிழீழம் வேண்டுமாம்(?) சுதந்திரம் கடையில் வாங்கும் பொருளா?? ஒருத்தன் சொல்லியிருக்கிறான் 'தமிழன் என்றல் சொறியும் போது சொறிந்துவிட்டு பின்பு தூங்கிவிடுவானாம்.' இந்த நிலை மாற வேண்டும். நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் சிந்தித்து செயற்படவேண்டும். சிலர் சொல்வார்கள், விடுதலைப்புலிகள் சண்டை ஆரம்பித்தால் ஆதரவாம் இல்லாட்டில் இல்லையாம். என்னையா புலிகள் இயந்திரமா? ஓவ்வொரு போராளியும் எங்களைப் போன்ற ஒரு உயிர் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே அவற்றை எல்லாம் மற்றும் எங்களுடைய பலம் பலவீனம் எதிரியின் பலம் பலவீனம் என்பவற்றையும் கருத்தில் கொண்டுதான் தலைவர் அவர்கள் திட்டங்களை வகுப்பார். உதாரணமாக சில நாட்களுக்கு முன்பு தமிழீழத் தலைநகர் திருமலையில் நடந்த தாக்குதலை குறிப்பிடலாம்.

எனவே நாம் சிறிது காலத்திற்கு எமது தேசத்திற்காகவும் தேசமக்களுக்காகவும் தலைவர் போராளிகளுக்காகவும் உழைத்துவிட்டு, தமிழீழம் அமைந்த பின்பு நாம் அனைவரும் தாயகத்திற்கு சென்று தாயக உறவுகளுடன் இணைந்து தமிழீழத்தின் பிரசித்தி பெற்ற நல்லூர், திருக்கோணேஸ்வரர், வல்லிபுரக் கோவில், வற்றாப்பளை கண்ணகை அம்மன், திருக்கேதீஸ்வரர் போன்ற அனைத்து தலங்களுக்கும் சென்று வடம் பிடித்து தேர் இழுப்போம்.

தாய் பிச்சை எடுக்க பிள்ளை அன்னதானம் கொடுத்தானாம்.

(இந்த வரிகள் நமக்குப் பொருந்த வேண்டாம்(?))

நன்றி: வத்திராயன் வலைப்பூ

http://tamilamutham.net/home/index.php?opt...49&Itemid=9

  • கருத்துக்கள உறவுகள்

தாய் பிச்சை எடுக்க பிள்ளை அன்னதானம் கொடுத்தானாம்.

(இந்த வரிகள் நமக்குப் பொருந்த வேண்டாம்(?))

நல்ல வரிகள்

நல்ல உதாரணம்

புரிந்து கொள்ளுமா என் இனம்???

ஏற்றுக்கொள்ளுமா இவ்வேண்டுகோளை???

இல்லை????.............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உ+ம் - தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில். //

உ+ம் என்றுவருமா? உ-ம் என்று வருமா? ஊரில ஒரு தமிழ் ஆசிரியர் 'உ-ம்' அதாவது 'உ'விலிருந்து 'ம்' வரை என்பதுதான் சரி என்றார். யாருக்காவர் தெரியுமாப்பா? :mellow:

இது பொசிட்வாக திங்க் பண்ண வேண்டிய நெருக்கடியான காலம் அனபடியா உ+ம் கடவது

  • கருத்துக்கள உறவுகள்

உ+ம் என்றுவருமா? உ-ம் என்று வருமா? ஊரில ஒரு தமிழ் ஆசிரியர் 'உ-ம்' அதாவது 'உ'விலிருந்து 'ம்' வரை என்பதுதான் சரி என்றார். யாருக்காவர் தெரியுமாப்பா? :mellow:

உதாரணம் என்ற எழுத பஞ்சியா???

பார்த்தீர்களா?

எதையென்றாலும் சுருக்க வெளிக்கிட்டால்????

அதை அப்படியே ஏற்பதே நல்லது..................???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.