Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாவனாவைத் தேடி சொன்ன வார்த்தைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க கஜனின் மனதிலும் ஒரு வித பதட்டம் அதிகரித்தது. வழமைக்கு மாறாக இதயம் விரைந்து அடித்துக் கொண்டது. இதயத் துடிப்பின் சத்தத்தை காதுகள் கூட உணர முடிந்தது. கால்களில் ஒரு வித நடுக்கம் பற்றிக் கொண்டிருந்தன. நெற்றியால் வியர்த்து ஊர்த்திக் கொண்டிருந்தது. இவ்வளவுக்கும் மத்தியில் கண்களைக் கூர்மையாக்கி அவள் மிக நெருங்கி வரும் வரை காத்திருந்தான்.

வெள்ளை வெளீர் என்ற பள்ளி உடையில் உயர்தர மாணவிக்குரிய மிடுக்குடன் பாவனா தோழிகள் சகிதம் நடந்து வந்து கொண்டிருந்தாள். வழமையாக காணும் பாவனாவாக அன்றி அன்று அவளின் முகத்தில் அழகு ஒளிவீசிக் கொண்டிருந்தது. நேற்றிரவு முகத்தை பசைகள் தடவி வெளிர்க்க வைத்திருப்பாளோ என்ற எண்ணத்தை மனதில் பறக்க விட்டபடி..

எக்ஸ்கியூஸ் மி.. ஐ அம் கஜன்.. கான் ஐ காவ் யுவர் நைஸ் ரைம் ரு ரோக் பிளிஸ்.. என்று பாவனாவுக்கு மிக அருகில் சைக்கிளை நிறுத்திக் கொண்டே கேட்டான்.

ஓ.. கஜன்.. நீங்களா. என்ன இன்றைக்குப் புதிசா பெரிய புதிர் போடுறீங்க. வழமையா ரியுசனில தேவையென்றால் ஓடி வந்து கதைப்பீங்க. இன்றைக்கு இங்கிலீசில பீட்டர் விடுறீங்க.. ஓ என் தோழிகள் இருக்கினம் என்றோ.. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும். அதுசரி என்ன விசயம் சொல்லுங்க.

இல்ல பாவனா.. உங்க கூட தனிய கதைக்கனும். ஒரு ஐந்து நிமிசம் அந்த மரத்தடிக்கு வருவீங்களா?

ஓ.. தாரளமா கதைக்கலாமே. ஐந்தென்ன பத்து நிமிடமே கதைக்கலாமே.

இவள் என்ன.. கேட்க முதலே கதைக்கலாம் என்று சம்மதிக்கிறாள். நான் இவள் இப்படி இருப்பாள் என்றே எதிர்பார்க்கல்லையே. இவளின் அழகுக்கு இவள் வெளில தனியக் கதைக்க பெரிய பில்டப் பண்ணுவாள் என்றெல்லோ நினைச்சன். எதுஎப்படியோ.. எனக்கு, நான் சொல்ல வந்த விசத்தைச் சொல்லிடனும் அவ்வளவும் தான்... என்று மனதுக்குள் எண்ணியபடி..

நன்றி பாவனா என்றான்.

எதுக்கு நன்றி.. பதிலுக்கு கேட்டாள் அவள்.

கதைக்க சம்மதிச்சதுக்கு.

இதுதானே வேணாங்கிறது. உங்களட்ட டவுட் கேட்டு எத்தனை தரம் ரியுசனில கதைச்சிருப்பன். வந்திட்டார்ய்யா.. விசயத்தைச் சொல்லுங்க.

அதுசரி உங்கட ஏலெவல் எக்ஸாம் றிசல்ட் எப்படி. ஸ்கூலில இருந்து ரிசல்டை எடுத்திட்டீங்களோ?

இப்பதான் எடுத்துக் கொண்டு போறன். அதுசரி.. உங்களுக்கு நல்ல பெறுபேறு என்று கேள்விப்பட்டன். நேற்றே பேப்பரில உங்கட பெயர் வந்ததைக் கண்டிருந்தன்.

ஓம்.. பாவனா. எனக்கு நல்ல பெறுபேறுதான். உங்களுக்கு எப்படி?

எனக்கும் பறுவாயில்லை. நான் நினைச்சது போலத்தான் வந்திருக்குது என்றாள்.

அப்படியா. நல்ல சந்தோசம். என்ன செய்யிறதா உத்தேசம்.

ம்ம்.. டாக்டருக்குப் படிக்கிறதுதானே எங்களின் விருப்பம்.

என்ன இவள் எங்களின் என்றாள். என்னையும் சேர்த்துச் சொல்லுறாளோ. எதற்கும்.. இதை இன்னும் கொஞ்சம் கேள்விகள் கேட்டு தெளிவாக்கிக்கிறது நல்லம்.

என்ன பாவனா எங்களின் விரும்பம் என்றீங்க.. அது உங்களின் விருப்பம் மட்டும் தானே?

ஏன் உங்களுக்கும் டாக்டருக்குப் படிக்கத்தானே விருப்பம். மாவட்டத்திலிலேயே முதலாவதா வந்திருக்கிறீங்க என்றாள் பாவனா பதிலுக்கு.

ஓஓ.. இவள் என்னையும் மனசிலை வைச்சுக் கொண்டுதான் கதைக்கிறாள் போல. அப்ப நான் சொல்ல வந்த பிரதான விசயத்தை சொல்லிட வேண்டியது தான்.. என்று எண்ணியபடி மனசுக்கு தெம்பூட்டிக் கொண்டு..

பாவனா.. உண்மையில.. உங்களை ஏன் கூப்பிட்டனான் என்றால்.. உங்களட்ட ஒன்றைச் சொல்லத்தான். அது வந்து..

தயங்காமல் சொல்லுங்கள். நான் உங்களை ஒன்றும் பண்ணமாட்டன் என்று வார்த்தைகளால் பதிலுக்கு தெம்பூட்டினாள் பாவனா.

அது வந்து.. மீண்டும் மனதில் தயக்கம் எழ வாத்தைகளை இழுத்தான் கஜன்.

கெதியா சொல்லுங்கோ. நான் போகனும். தோழிகளை பாதி வழியில விட்டிட்டெல்லே வந்திருக்கிறன். பிளீஸ் கஜன்.

என்ன.. இவள் இவ்வளவு அவசரப்படுகிறாள். ஒருவேளை இவளுக்கும் என் மீது... ம்ம்.. அப்ப நல்லதாப் போச்சு... பயமில்லாமல் சொல்ல வேண்டியதுதான்..

இல்ல பாவனா.. நீங்க நடிகை பாவனாவா இல்ல சும்மா பாவனாவா..?!

அடப்பாவி.. இதைக் கேட்கவா இவ்வளவு பில்டப். நான் சும்மா பாவனா என்றாள் முகத்தை நெளித்துக் கொண்டே.

சரி சரி.. சும்மா தமாசுக்கு கேட்டேன். உண்மையில உங்களிட்ட சொல்ல வந்தது என்னவென்றால்.. என்றவன் திடீர் என்று.. நேரடியாச் சொல்ல ஒரு மாதிரியா இருக்கு.. இந்த கடிதத்தைப் படிச்சிப் பார்த்திட்டு.. உடன பதில் சொல்லுங்க.. என்று கடிதத்தை நீட்டீனான்.

உடனே அதை வாங்கிப் படித்த பாவனா.. வார்த்தைகள் வெளிவராமல்... விறைத்துப் போய் நின்றாள்.

அவள் விறைப்புக்குக் காரணம்.. அவன் எழுதிய வார்த்தைகள் அல்ல. அவனின் முடிவுதான்.

"நான் தமிழீழ விடுதலைக்கு வித்தாக கரும்புலிப் போராளியாகப் போகிறேன்" என்ற வார்த்தைகள் தான் அவை.

அவனின் கடிதத்துக்கு சொல்லப் பதில்கள் இன்றி அவன் முகத்தையே பார்த்தபடி கண்கள் கலங்க அவ்விடத்தில் இருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்தாள் பாவனா.

பதிலுக்கு முகத்தில் புன்னகையை உதிர்த்தபடி.. "போயிட்டு வாறன்.." சொல்லி.. சைக்கிளில் பறந்தான்.. புலிவீரன்.

யாவும் கற்பனை.

Edited by nedukkalapoovan

உடனே அதை வாங்கிப் படித்த பாவனா.. வார்த்தைகள் வெளிவராமல்... விறைத்துப் போய் நின்றாள்.

அவனின் கடிதத்துக்கு சொல்லப் பதில்கள் இன்றி அவன் முகத்தையே பார்த்தபடி கண்கள் கலங்க அவ்விடத்தில் இருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்தாள் பாவனா.

யாவும் கற்பனை.

விறைத்தது இக்கதையை வாசிப்போரின் மனங்களும் தான்... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விறைத்தது இக்கதையை வாசிப்போரின் மனங்களும் தான்... :)

அப்படிச் சொல்லக் கூடாது. எத்தனையோ அண்ணாமார் அக்காமார்.. தம்பிமார்.. தங்கைமார் இப்படி முடிவெடுத்திருக்கினம்..!

(வாசகர்கள் சுவாரசியம் இழக்காதிருக்க.. பதில் கருத்தைச் சுருக்கிக் கொண்டுள்ளேன்.) :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"நான் தமிழீழ விடுதலைக்கு வித்தாக கரும்புலிப் போராளியாகப் போகிறேன்" என்ற வார்த்தைகள் தான் அவை.

கதையின் முடிவு எதிர் பாராதது , நான் கதையை வாசிக்கும் போது நினைத்தேன் வழக்கம் போல கஜன் , பாவனாவுக்கு காதல் கடிதம் தான் கொடுக்கப் போகிறார் என்று .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையின் முடிவு எதிர் பாராதது , நான் கதையை வாசிக்கும் போது நினைத்தேன் வழக்கம் போல கஜன் , பாவனாவுக்கு காதல் கடிதம் தான் கொடுக்கப் போகிறார் என்று .

ம்ம்..! எதிர்பாராத விதமாகத்தான் போராளிகள் உருவாகின்றனர். :lol:

அட பாவமே நெடுக் தாத்தா இப்படி ஏமாத்துவியள் என நான் நினைக்கலை :)

அச்சோ கதையின் முடிவை சொன்னேன் பா நான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் முடிவு எதிர் பாராதது , நான் கதையை வாசிக்கும் போது நினைத்தேன் வழக்கம் போல கஜன் , பாவனாவுக்கு காதல் கடிதம் தான் கொடுக்கப் போகிறார் என்று .

தமிழ் சிறி

இல்லையா பின்ன எத்தனை பேருக்கு கொடுத்து இருக்கிறீர்கள் என்று எனக் அல்லவா தெரியும் :lol::)

அடி வேண்டியதை மறந்திட்டிங்க போல :D:D:lol:

கதையில் திடீர் திருப்பங்கள் ஒரு படி மேல் அமைந்துள்ளது நன்றி நெடுக்ஸ்

இருந்தாலும் நான் காதல் கடிதம் கொடுக்கமாட்டேன்

அட நான் எண்ட பாவனா..னா எண்டு பயந்தே போயிட்டன்..!!.. :D

ம்ம்..பாவனாவை தேடி சொன்ன வார்த்தைகள்..கதையினை படிக்கும் போது இனிக்கிறது தாத்தாவிற்கு என் வாழ்த்துகள் முதலில்..ல்..!!.. :)

அது சரி தாத்தா..தா மிணகட்டு அந்த வீரன் வந்து ஏன் இந்த பாவனாவிற்கு இப்படி ஒரு கடிதம் கொடுக்கனும் அதை ஒருக்கா எனக்கு சொல்லுறியளோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி தாத்தா..தா மிணகட்டு அந்த வீரன் வந்து ஏன் இந்த பாவனாவிற்கு இப்படி ஒரு கடிதம் கொடுக்கனும் அதை ஒருக்கா எனக்கு சொல்லுறியளோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஐயோ.. இருவரும் ஒரே ரியுசனில படிச்சிருக்கினம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்திருக்கினம். அதுமட்டுமன்றி பெறுபேறுகள் பற்றி அறியுறதோட.... பொடியன் தன்னை கரும்புலியா அர்ப்பணிக்கிறதைச் சொல்லி இருக்கிறான்.. தன் தோழிக்கு..! அவன் அவளை ஒரு நல்ல தோழியாகவும் நினைத்திருக்கிறான்..! :)

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ்

கதை நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்.

கதையில் கைக்கூ என்றால் இந்தவரிகள்தான் :lol:

"நேற்றிரவு முகத்தை பசைகள் தடவி வெளிர்க்க வைத்திருப்பாளோ என்ற எண்ணத்தை மனதில் பறக்க விட்டபடி.."

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ்! பாவனா யோசனையுடன் போறதைப் பார்த்தால் கஜனுக்கு முன்பாகவே பாசறைக்குப் போயிடுவா போலிருக்கு. கதையை நல்ல முடிச்சுடன் முடித்திருக்கிறீர்கள்.

நல்ல கதை நெடுக்ஸ். பாராட்டுக்கள். ஆனால் இது நிச்சயமாகக் கற்பனைக் கதைதான். ஏனென்றால், கரும்புலியாகப் போகும் போராளிகள் யாரும் தாங்கள் கரும்புலியாகப் போகப்போகிறோம் என்று சொல்லிவிட்டுச் செல்வதில்லை. வேண்டுமென்றால், தாக்குதல் இலக்கிற்குப் போவதற்கு முன்னர், கடிதங்களை எழுதி, தமது பொறுப்பாளர்களிடம் கொடுப்பார்கள். அவர்களும் இவர் வீரச்சாவடைந்த பின்னரே அக்கடிதத்தை உரியவரிடம் சேர்ப்பார்கள். நீங்கள் இக்கதாநாயகன், போராட்டத்திற்குப் போவதாகக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். கதையில் கொஞ்சம் உண்மைத்தன்மையும் இருந்தால்தான் இரசிக்கப்படும். அதுவும், எமது போராளிகளைப் பற்றி எழுதும்போது, நிச்சயம் உண்மைத்தன்மை வேண்டும். அடுத்த கதை எழுதும்போது, இதைக் கருத்தில் எடுப்பீர்கள் என நம்புகிறேன்.

முதலில் உங்களினதும் ஏனைய கள உறவுகளினதும் கருத்துக்களுக்கு நன்றிகள். :lol:

பாவனா என்ற பாத்திரம் தான் கற்பனை. கஜன் என்ற பாத்திரத்துக்குள் என்னுடைய உணர்வுகளையே அதிகம் புகுத்தினேன். நிச்சயம் இயக்கத்துக்குப் போகும் சூழ்நிலை தோன்றின் நான் கரும்புலியாகவே இணைவேன். தாக்குதலுக்கு போனால் தான் கரும்புலியென்றில்லை. இணையும் போதே சொல்லி இணையலாம் என்று நினைக்கிறேன்.

படிக்கும் காலத்தில் பழகும் தோழிகளில் பலர் (ஊரில.. புலம்பெயர்ந்த இடத்திலும் இருக்காங்க.. ஆனால் அவர்கள் வேற்று நாட்டினராக இருப்பதே அதிகம். ) நேர்மையாகப் பழகக் கண்டிருக்கிறேன். அவர்களுக்குள் தூய்மையான நட்பைப் பார்த்திருக்கிறேன். அந்த வகையிலேயே இதை எழுத முற்பட்டேன். நம்பிக்கை கொண்ட ஒரு தோழியிடம் தன் விருப்பை பகிர்ந்து கொள்வது தப்பில்லைத்தானே..! இருந்தாலும் இப்படியான விடயங்களைப் பகிர்வதில் தயக்கம் இருப்பது வழமை. அதையே கதையிலும் சொல்ல முற்பட்டேன்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கரே. :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ் சிறு கதைக்கு. எதிர்பாராத முடிவு. அது சரி இருவரும் நண்பர்கள் என்றீர்கள். பிறகென்ன கடிதம்.??

முதலில் உங்களினதும் ஏனைய கள உறவுகளினதும் கருத்துக்களுக்கு நன்றிகள். :)

பாவனா என்ற பாத்திரம் தான் கற்பனை. கஜன் என்ற பாத்திரத்துக்குள் என்னுடைய உணர்வுகளையே அதிகம் புகுத்தினேன். நிச்சயம் இயக்கத்துக்குப் போகும் சூழ்நிலை தோன்றின் நான் கரும்புலியாகவே இணைவேன். தாக்குதலுக்கு போனால் தான் கரும்புலியென்றில்லை. இணையும் போதே சொல்லி இணையலாம் என்று நினைக்கிறேன்.

படிக்கும் காலத்தில் பழகும் தோழிகளில் பலர் (ஊரில.. புலம்பெயர்ந்த இடத்திலும் இருக்காங்க.. ஆனால் அவர்கள் வேற்று நாட்டினராக இருப்பதே அதிகம். ) நேர்மையாகப் பழகக் கண்டிருக்கிறேன். அவர்களுக்குள் தூய்மையான நட்பைப் பார்த்திருக்கிறேன். அந்த வகையிலேயே இதை எழுத முற்பட்டேன். நம்பிக்கை கொண்ட ஒரு தோழியிடம் தன் விருப்பை பகிர்ந்து கொள்வது தப்பில்லைத்தானே..! இருந்தாலும் இப்படியான விடயங்களைப் பகிர்வதில் தயக்கம் இருப்பது வழமை. அதையே கதையிலும் சொல்ல முற்பட்டேன்..! :lol:

பல விடயங்களைத் தெரிந்திருக்கும், எழுதும் நீங்கள் இதனைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதை நம்ப முடியவில்லை. தூய்மையான நட்பில் இவற்றைப் பகிர்ந்து கொள்வது உண்மைதான். ஆனால், கரும்புலிகள் அதனைவிடவும் மேலானவர்கள்.

நெடுக்ஸ் என்பதால் கதையின் முடிவு வழமைக்கு எதிராக தான் இருக்கும் என்று எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும். போராட்டம் சம்பந்தமாக தான் ஒரு முடிவும் இருக்கும் என எதிர்பார்த்தேன்.

ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை, கஜன் எதற்காக பாவானாவிற்கு இந்த விடயத்தை சொல்ல வேண்டும்? அவர்கள் நெருங்கிய நட்பு கொண்டவர்களாக நீங்கள் காட்டவில்லை. வகுப்பில் பேசுயுள்ளனர். கரும்புலி எனும் பெரிய விடயத்தை எதற்காக பாவனாவிடம் சொல்ல நினைத்தார்?

கதையை சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள் நெடுக்ஸ் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை....இல்லை நெடுக்கர் பொம்புளையளை இந்த கதையிலையும் ஒரு புடி புடிச்சிருக்கிறார் winking0072.gif

என்ன.. இவள் இவ்வளவு அவசரப்படுகிறாள். ஒருவேளை இவளுக்கும் என் மீது... ம்ம்.. அப்ப நல்லதாப் போச்சு... பயமில்லாமல் சொல்ல வேண்டியதுதான்..

இந்த வரி ஏன் சார்?! வாசகர்களை பேய்க்காட்டத்தானே?! :lol::)

ஆங்கிலத்தில ஆரம்பிச்சு.. வாசகரின் சிந்தனைக்கு ஒரு மாறுபட்ட தோற்றத்தை உருவாக்கி, முடிவில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய கதை ஓட்டம் பாராட்டுதற்குரியது.. எனினும் இன்னும் பொறுமையாக கனதியாக எழுதியிருக்கலாம்.. இதைப் பார்க்க எடுத்தமா.. குலுக்கினமா.. கவிட்டுக் கொட்டினமா என்று இருக்கு.. (நல்லாக எழுதக்கூடியவர் என்ற காரணத்தினால் இப்படி ஒரு கருத்தை வைக்கிறேன்.. ) :o

Edited by sOliyAn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை விமர்சனங்களை தந்த உறவுகள் அனைவருக்கும் நன்றிகள். :)

ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை, கஜன் எதற்காக பாவானாவிற்கு இந்த விடயத்தை சொல்ல வேண்டும்? அவர்கள் நெருங்கிய நட்பு கொண்டவர்களாக நீங்கள் காட்டவில்லை. வகுப்பில் பேசுயுள்ளனர். கரும்புலி எனும் பெரிய விடயத்தை எதற்காக பாவனாவிடம் சொல்ல நினைத்தார்?

கதையை சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள் நெடுக்ஸ் :lol:

அவர்கள் இருவரும் படிப்பில் திறமைசாலிகள் என்பது கதையில் இருந்து பெற முடியும் என்று நினைக்கிறேன். அதுமட்டுமன்றி.. படிப்பு சம்பந்தமாக இருவரும் முன்னர் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்ற வகையில் அங்கு ஒரு மட்டுப்படுத்திய, படிப்பு சார்ந்த.. வெளியில் தொடராத ஆனால் பிரேத்தியேகமான தோழமை இருக்கிறது என்பதும் புலப்படுகிறது அல்லவா. அவன் பரீட்சையில் சித்தியடைந்தது அவனைப் பற்றி பேப்பரிலும் வந்த போது எல்லோருடைய எதிர்பார்ப்பும்.. அவன் மேற்படிப்புக்குத்தான் போவான் என்பதாகத்தான் இருக்கும். அதுதான் இயல்பாக எழுவது எமது சமூகத்தைப் பொறுத்தவரை.

படிக்கும் இடத்தில் (வெளியில் அல்ல) தோழமையோடு பழகிய தோழியோடு படிப்பை மட்டும் பகிர்ந்து கொண்டவன்.. அன்று தன்னை தாய் மண்ணுக்காக அர்ப்பணித்து போராடப் போவதைச் சொல்லச் செல்கிறான். அதை அவன் தன்னை பற்றி பெருமைப்படுத்த அல்ல.. தாய் மண்ணின் தேவை என்ன என்பதை உணர்த்த சொல்கிறான். அது அவளுக்குள்ளும் எதிர்பார்ப்புக்களை மாற்றங்களை உருவாக்கலாம் என்ற நோக்கில் இருக்கலாம்.. அல்லது அவனைப் பற்றிய அவளின், பொதுவானவர்களின் எதிர்பார்ப்பை விட அவனின் மக்களின் தேவை.. என்பது தாயக விடுதலை என்பதை முதன்மைப்படுத்த என்றும் அமையலாம்.

நுணா... எதையும் உடனடியாச் சொன்னா.. சேர்ப்பிரைஸ் இருக்காது. அதனால் அவன் ஒரு கடிதத்தின் மூலம்.. அவளின் மொத்தக் கவனத்தையும் ஈர்க்க அப்படிச் சொல்லி இருக்கலாம் அல்லவா.

நான் வீட்டில் செய்திருக்கிறேன். அம்மா நான் கோவிலுக்குப் போறன் என்றால்.. சில வேளை அம்மா மறுத்திடுவார். ஆனால் இப்படி ஏதாவது அம்மாவின் கவனத்தைக் கவரக் கூடிய வடிவில் சொன்னா அவங்களுக்குள்ள ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்படும். அது பிள்ளைக்கு சாதகமாகவே அமைந்திருப்பதை அனுபவித்திருக்கிறேன்.

பாடசாலையில் ஆசிரியரிடம் நேரடியாகக் கேட்டால் லீவு தரமாட்டார்கள். அதையே கடிதம் மூலம் கேட்டால்.. தருவார்கள். படிப்பிக்கிற ஆசிரியர் தானே.. நேரடியாக் கேட்டால் விசயத்தைச் சொன்னால் அவர் ஞாபகத்தில் கொண்டு லீவு தரலாம் தானே என்று சொல்வதில்லை.

ஒரு மரியாதை..ஒரு மேன்மை.. ஒரு கவன ஈர்ப்பு.. ஒரு வித்தியாசம்.. இவற்றைக் கருத்தில் கொண்டு.. கடிதம் கொடுப்பது வழமை தானே...! :o

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன.. இவள் இவ்வளவு அவசரப்படுகிறாள். ஒருவேளை இவளுக்கும் என் மீது... ம்ம்.. அப்ப நல்லதாப் போச்சு... பயமில்லாமல் சொல்ல வேண்டியதுதான்..

இந்த வரி ஏன் சார்?! வாசகர்களை பேய்க்காட்டத்தானே?! :lol::)

ஆங்கிலத்தில ஆரம்பிச்சு.. வாசகரின் சிந்தனைக்கு ஒரு மாறுபட்ட தோற்றத்தை உருவாக்கி, முடிவில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய கதை ஓட்டம் பாராட்டுதற்குரியது.. எனினும் இன்னும் பொறுமையாக கனதியாக எழுதியிருக்கலாம்.. இதைப் பார்க்க எடுத்தமா.. குலுக்கினமா.. கவிட்டுக் கொட்டினமா என்று இருக்கு.. (நல்லாக எழுதக்கூடியவர் என்ற காரணத்தினால் இப்படி ஒரு கருத்தை வைக்கிறேன்.. ) :o

அவனைப் பொறுத்தவரை.. அவன் மாணவன். அவனுக்குள் உள்ள எண்ணம் என்பது.. எல்லாரும் போல இவளும் அவனைப் பற்றி.. ஒரு சாதாரணமான உயர்தரப் பெறுபேறைப் பெறும் தமிழ் சமூக மாணவன் எப்படி நடப்பானோ அப்படியான ஒரு எதிர்பார்ப்பை கொண்டிருப்பதாக.. எடுத்துக் கொண்டு இப்படி சிந்தித்திருக்கலாம் இல்லையா..! அந்த இடத்தில் அவளின் பேச்சு.. அவன் அவளைப் பற்றி எதிர்பார்த்தது போல இருக்க.. அவன் அப்படி நினைத்திருக்கலாம் இல்லையா..??! ஆனால் உண்மையில் பொதுவானவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் அவன் மாறுபட்டிருக்கிறான்.. அதுதான் கதையே..!

உண்மைதான். வாசகர்கள் தடக்குப்படவும் தான் செய்கிறது அந்த இடம். இறுதியில் வாசகர் எதிர்பாராத முடிவை கொண்டு வர.. இப்படியான நடைகள் உதவும் என்றும் கருதினேன்.

நீங்கள் சொன்னது சரி. குட்டிக்கதையாக எழுத நினைத்தேன். அதனால் கதைக்குரிய இலக்கணத்தை மீறினேன். நிச்சயம் அது உங்களைப் போன்ற படைப்பாளிகளுக்கு தெளிவாகத் தெரியும். கதைக்குரிய இலக்கணத்தை உங்களைப் போல எல்லாம் திறமையாகக் கையாளும் திறன் எம்மிடம் இல்லையண்ணா. அதை ஏற்றுக் கொள்வதுதான் நியாயம்..!

அதேவேளை கதை எழுதும் போது எனக்குள் இருந்த உணர்வுகளையும் சொல்ல வேண்டும் அல்லவா. அதற்காகத்தான் மேலே குறித்த வசனத்துக்கு என்ன எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தேன் என்று சொல்லி இருக்கிறேன்.

நன்றி உங்கள் கனதியான கருத்துக்கு..! :o

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை....இல்லை நெடுக்கர் பொம்புளையளை இந்த கதையிலையும் ஒரு புடி புடிச்சிருக்கிறார் winking0072.gif

முடியல்ல.. கு.சா. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்களைத் தெரிந்திருக்கும், எழுதும் நீங்கள் இதனைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதை நம்ப முடியவில்லை. தூய்மையான நட்பில் இவற்றைப் பகிர்ந்து கொள்வது உண்மைதான். ஆனால், கரும்புலிகள் அதனைவிடவும் மேலானவர்கள்.

இயக்கத்தில் இணையச் செல்லும் போது கரும்புலியாக இணையப் போகிறேன் என்று சொல்லிச் செல்பவர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். ஆனால் இயக்கத்தில் இணைந்த பிறகு.. அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது...! அதுதான் இயக்கத்தின் வெற்றியின் ரகசியமும் கூட..! இவனும் அப்படி சொல்லிட்டு இணையப் போகிறானே தவிர.. அவன் கரும்புலியானானா.. அல்லது.. வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டானா என்பதெல்லாம்.. இயக்கம் சார்ந்த விடயங்கள். அதை கதையில் நாம் கையாள முடியாது. அது போராளிகளுக்கு மட்டுமானது என்று நான் கருதுகிறேன்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கருத்தை தெரிவிப்பதில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும் ”நெடுக்‌ஷ்”

இதே போன்ற ஒரு கருத்து, இதே சூழ்நிலை, மிதிவண்டி, காதலை சொல்லுவது போன்று காட்சித்தோற்றப்பாடு உள்ளடங்கலாக ஒரு கதை 2000ம் ஆண்டு் கொழும்பு இந்துக்கல்லூரியில் வெளியான ஒரு நூலில் படித்த ஞாபகம்.....

இதை காப்பி அடித்து விட்டீர்கள் என்டு நான் சொல்லவில்லை.... ஒரே சிந்தனை இருவருக்கு வரலாம்...

அதுவும் இந்த மாதிரியான சிந்தனை ஈழத்தமிழனுக்கு வருவது சிறப்புத்தானே.....

உண்மை பித்தன். மாணவர்கள் சார்ந்த படைப்புக்களின் ஒற்றுமைத் தன்மை இருப்பது சகஜம். ஆனால் நான் நீங்கள் குறிப்பிட்ட கதையைப் படிக்கவில்லை. அப்படி ஒரு கதை அமைந்திருப்பின் அதையும் நிச்சயம் வரவேற்பேன். அதுமட்டுமன்றி.. நான் மிணக்கட்டு கதையோ.. நாவலோ வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டவன் அல்ல..! என்னை அறிந்தவர்கள் எவருக்குமே தெரியாது.. நான் இப்படி எழுதி வருகிறேன் என்று..! சொல்வதுமில்லை..! ஆனால் ரகசியமாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்..! :)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.