Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தான் புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்த்தேசியம்

Featured Replies

  • தொடங்கியவர்

">

Edited by kurukaalapoovan

  • Replies 240
  • Views 28.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இஸ்ரேலை போல தமிழர்கள் அறிவார்தமாக இல்லை, பணம் சேகரிப்பது இல்லை, அறிவியல் வளர்ச்சி இல்லை, தாயக பற்று இல்லை எண்று எல்லாம் அளப்பது வெறும் மிகைப்படுத்தல் என்பது உங்களுக்கே தெரியவில்லையா...?? இது கேவலம் இல்லையா...??

இஸ்ரேலை போல தமிழர்கள் பணம் சேகரிப்பது இல்லையா?

யூதன் multi billion industry களை உருவாக்கி billion கணக்கில் பணத்தை உழைத்து, billion கணக்கில் Tax கட்டி அதனால் தான் இருந்த நாடுகளின் அரசுகளையே ஆட்டுவித்தான். Election campaign அரசியல் கட்சிகளுக்கு பணத்தை வாரி இறைத்து யூதர்களின் அரசியல் பலத்தை உயர்தினான்.

தமிழன்?? கந்தசாமி $3 க்கு கொத்துரொட்டி வித்தால் மாடசாமி போட்டி போட்டு $2.50 க்கு வித்து business ஐயும் கெடுத்து கொத்துரொட்டியையும் கெடுப்பான்.

கள்ள மட்டையில் மலை போல் காசு அடித்து வைத்திருப்பான். Benz, BMW, Hummer எண்டு அதிரவைப்பான். ஆனால் தமிழ் சமுதாயத்தின் பொருண்மியத்திற்கு உருப்படியாக ஏதும் செய்யமாட்டான்.

நேர்மையாக வாழுபவன் இரண்டு வேலை செய்து முறிவான். நித்திரைக்கே நேரம் இருக்காது. ஆனால் பல இலட்சத்தில் வீட்டை வாங்கி இருப்பான்.

அறிவியல் வளர்ச்சி இல்லையா

அயன்ஸ்டீன் உட்பட மிகப் பெரிய விஞ்ஞானிகளை உலகிற்கு காட்டியிருக்கிறது யூத இனம். தமிழனின் விஞ்ஞானம்?

ஊடகத்துறை

400, 000 தமிழர் வசிக்கும் கனடாவில் வரும் பத்திரிகைகளை பார்த்தால் .... வெங்காயம் $1 புளி 50 சதம் என்னும் விளம்பரப் பத்திரிகைகளும் மற்றும் போர் செய்தியில் கிளு கிளுப்பூட்டும் பரபரப்பு பத்திரிகையும் தான். எங்கள் இனத்தின் செய்திகளை வேறு இனத்திற்கு சொல்ல ஏதாவது ஒரு ஆங்கிலப் பத்திரிகை?? போய் சிங்களவனை பாருங்கள். வெறும் 10,000 க்குள் இருந்து கொண்டு எத்தனை ஆங்கிலப் பத்திரிகைகளை விடுகின்றான்.

சரி 400, 000 பேர் இருந்து கனடாவின் Mainstream media வில ஏதாவது எமக்கு ஆதரவாக செயற்படுகுதா? ஆனால் பாருங்கள் சிங்களவர்களின் கைங்கரியத்தால், National Post எனும் கனடாவின் முக்கிய தேசியப் பத்திரிகை இலங்கையில் போய் கருணா எனும் தமிழனை பேட்டியெடுத்து எமது கண்ணையே குத்தியிருக்கிறார்கள்.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=27124

http://www.nationalpost.com/news/story.html?id=813314

சரி எதிர்கால சந்ததியையாவது ஊடகத்துறையில் படிக்கவைக்கிறார்களா? எம்மவர்களுக்கு புலம்பெயர் தேசத்தில் தெரிந்த படிப்புகள்: கணனி, மருத்துவம், எக்கவுண்டிங்.

யூதர்கள் எங்கே நாம் எங்கே? மலையும் மடுவும் போல...

இப்படி எந்த விதத்தில் புலம்பெயர் சமுதாயத்தை நினைத்து பெருமைப்படுவது?

ஆனால் மதம் தான் இதற்கெல்லாம் காரணம் என நான் சொல்லவரவில்லை.

யூதர்கள் எங்கே நாம் எங்கே? மலையும் மடுவும் போல...

இப்படி எந்த விதத்தில் புலம்பெயர் சமுதாயத்தை நினைத்து பெருமைப்படுவது?

ஓமண்ணை தமிழன் மிகவும் கெட்டவன், மூடன்.... !! பிறகு அவனுக்கு ஏன் தமிழீழம்...???

  • கருத்துக்கள உறவுகள்

எங்களாலை எங்கடை வசதிக்கு ஏற்ற மாதிரி 50 டொலரோ நூறு டொலரோ வன்னியிலை அல்லல் படுற உறவுகளின் பசியைப் போக்கக் கொடுக்க முடியும். இன்னும் எங்களால் கொடுக்க முடியவில்லையே எண்டு நாங்கள் கவலைப் பட்டுக்கொண்டிருக்கேக்கை எங்களுடன் புலம்பெயர்ந்து வாழுற உறவுகள் என்ன செய்கிறதுகள் எண்ட இரு நூறு யூரோவிற்கு தேங்காய் வாங்கிக் கொண்டுவந்து தேங்காயை உடைக்குதுகள். காசை விரயமாக்கி வாங்கின தேங்காய்களும் யாருக்கும் பயன்படாமல் போகிறது. இப்படி விரயமாக்கிற பணத்தை வன்னியிலை துன்பப்படுற மக்களற்குக் கொடுத்தால் அவர்களின் பசியைப் போக்க உதவும் எண்ட நல்ல நோக்கத்திற்காகத்தான் தேங்காய் உடைக்கும் உறவுகளைத் தெளிவு படுத்தி எமது மக்களின் பசியைப் போக்க உதவுகங்கள் என்பதற்காகத்தான் குறுக்காலை போன அண்ணை இதனை இணைச்சவர்.

அதெப்படி மின்னலண்ணை.. சொல்லுறீங்க தேங்காய்ப் பணம் 100% விரயம் ஆகுது என்று.

ஏன் தேங்காய் வாங்கிறவை கொடுக்கிற பணம்.. எங்க ஆகாயத்துக்கா போகுது. அதுவும் தமிழரின் கைக்குத்தானே போகுது.

சிறீலங்காவில இருந்து.. இந்தியாவில இருந்து.. இறக்குமதி செய்து.. அதிக விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடுறதை நிற்ப்பாட்டிப் போட்டு உள்ளூரிலேயே சலாட்டையும்.. பாணையும் சாப்பிட்டுக் கொண்டும்.. மிச்சம் பிடிக்கலாம் தானே... தமிழ் கடைகளை இழுத்து மூடலாம் தானே.

தேங்காய் விற்கிற தமிழ் கடைக்காரர்.. அல்லது கோவில்காரர் ஈழத்துக்கு பங்களிக்கினம் தானே. பங்களிக்காதவையை பங்களிக்க மரியாதையாக் கேட்கலாம் தானே. நீங்கள் இப்படிக் கேட்டால் புறக்கணி சிறீலங்கா போல உங்களைப் புறக்கணிப்பினமே தவிர.. யதார்த்தத்துக்கு ஒவ்வாத கற்பனைகள்.. மக்களிடம் செயல்வடிவம் பெறாது பாருங்கோ..!

சரி உங்களுக்கு அடிக்கிற தேங்காய் விரயமாகுது என்ற கவலை இருந்தால் .. நீங்களே அதிக வருவாய் தருற மாதிரிக்கு தேங்காயை இறக்கி கோவில் காலங்களில விற்று அதில வாற வருவாயை ஈழத்துக்கு அனுப்பலாம் தானே. உடைக்கிற தேங்காயைக் கூட சேகரித்து வேறு உற்பத்தியாளர்களுக்கு விற்க ஏதாவது ஏற்பாடு செய்யலாமே. மக்களிடம் உள்ள இந்தப் பழக்கத்தையே ஈழத்துக்கு வருவாய் ஆகிற மாதிரிக்கு நீங்கள் ஆக்கலாம் தானே..! அதை விட்டிட்டு.. உங்கட இயலாத் தனத்துக்கு சனத்தைத் திட்டிக் கொண்டு.. சமயத்தைப் பார்த்து திட்டிக் கொண்டு.. உப்படி இணையத்தில குளறித்திரியுறது தேங்காய் அடிக்கிறதிலும் மோசமான செம்மறியாட்டுத்தனமாத்தானே தெரியுது..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

..! அதை விட்டிட்டு.. உங்கட இயலாத் தனத்துக்கு சனத்தைத் திட்டிக் கொண்டு.. சமயத்தைப் பார்த்து திட்டிக் கொண்டு.. உப்படி இணையத்தில குளறித்திரியுறது தேங்காய் அடிக்கிறதிலும் மோசமான செம்மறியாட்டுத்தனமாத்தானே தெரியுது..! :(:lol:

நெடுக்கு இப்படி கத்துறவர்களுக்கு ஏதோ குறைபாடுகள் இருக்கு போல அவைகளை பிடிச்சு கோவிலிலையோ அல்லது பெரியார் சிலைக்கு முன்னுக்கோ வைத்து ஒரு ரெண்டு ரெண்டு தேங்காய் தலையில அடிச்சுவிட்டால் அவர்களுக்கு எல்லா தோசமும் போயிடும் நீங்கள் என்ன நினைக்கிறிங்கள் :lol::) ? ஆனால் அந்த தேங்காய் ஈழத்தில இருந்துதான் வரவேணும் அதுவும் அடிச்சு முடிய சிதறுற எல்லாத்தையும் அள்ளி ஈழத்துக்கு தான் அனுப்பிவைக்கவேணும். எங்க ஆக்களை பிடியுங்கோ நான் அடிக்கிறன் . ஈழத்தில என்ன ஒரு பற்று :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமண்ணை தமிழன் மிகவும் கெட்டவன், மூடன்.... !! பிறகு அவனுக்கு ஏன் தமிழீழம்...???

அப்படி இருப்பதால் தான் அவனுக்கு தமிழீழம் தேவை.

நான் புலம் பெயர் தமிழனைத் தான் சொன்னேன்.

பிரபாகரனும் தமிழன் தான்.

தமிழன் பெருமைப்படக்கூடிய விடயங்கள். பிரபாகரன், புலிகள்.

முடிந்தால் புலம்பெயர் தமிழரின் சாதனைகளை சொல்லுங்களேன்...

நானொன்றும் உங்களை எதிர்பதற்காகவோ அல்லது வாக்குவாதம் செய்வதற்காகவோ சொல்லவில்லை. மாறாக புலம் பெயர்ந்து இருக்கும் என்னித்தின் இயலாமையை எண்ணி வேதனையில் தான் சொல்கின்றேன். உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்.. ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு உச்சக் கட்டத்தில் செயற்படுகிறதா என்று...

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் அண்ண.. நீங்க தேங்காய் உடைச்சு வீணாகிறது பற்றி கதைக்கிறீங்க..

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்.................

பிரான்சில என்ன செய்கிறீர்கள்????????

இதில் ஆடுபவன் ஒருவன் எனது மைத்துனன்????

மின்னல் அண்ண.. நீங்க தேங்காய் உடைச்சு வீணாகிறது பற்றி கதைக்கிறீங்க..

">

அதெப்படி மின்னலண்ணை.. சொல்லுறீங்க தேங்காய்ப் பணம் 100% விரயம் ஆகுது என்று.

ஏன் தேங்காய் வாங்கிறவை கொடுக்கிற பணம்.. எங்க ஆகாயத்துக்கா போகுது. அதுவும் தமிழரின் கைக்குத்தானே போகுது.

சிறீலங்காவில இருந்து.. இந்தியாவில இருந்து.. இறக்குமதி செய்து.. அதிக விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடுறதை நிற்ப்பாட்டிப் போட்டு உள்ளூரிலேயே சலாட்டையும்.. பாணையும் சாப்பிட்டுக் கொண்டும்.. மிச்சம் பிடிக்கலாம் தானே... தமிழ் கடைகளை இழுத்து மூடலாம் தானே.

தேங்காய் விற்கிற தமிழ் கடைக்காரர்.. அல்லது கோவில்காரர் ஈழத்துக்கு பங்களிக்கினம் தானே. பங்களிக்காதவையை பங்களிக்க மரியாதையாக் கேட்கலாம் தானே. நீங்கள் இப்படிக் கேட்டால் புறக்கணி சிறீலங்கா போல உங்களைப் புறக்கணிப்பினமே தவிர.. யதார்த்தத்துக்கு ஒவ்வாத கற்பனைகள்.. மக்களிடம் செயல்வடிவம் பெறாது பாருங்கோ..!

சரி உங்களுக்கு அடிக்கிற தேங்காய் விரயமாகுது என்ற கவலை இருந்தால் .. நீங்களே அதிக வருவாய் தருற மாதிரிக்கு தேங்காயை இறக்கி கோவில் காலங்களில விற்று அதில வாற வருவாயை ஈழத்துக்கு அனுப்பலாம் தானே. உடைக்கிற தேங்காயைக் கூட சேகரித்து வேறு உற்பத்தியாளர்களுக்கு விற்க ஏதாவது ஏற்பாடு செய்யலாமே. மக்களிடம் உள்ள இந்தப் பழக்கத்தையே ஈழத்துக்கு வருவாய் ஆகிற மாதிரிக்கு நீங்கள் ஆக்கலாம் தானே..! அதை விட்டிட்டு.. உங்கட இயலாத் தனத்துக்கு சனத்தைத் திட்டிக் கொண்டு.. சமயத்தைப் பார்த்து திட்டிக் கொண்டு.. உப்படி இணையத்தில குளறித்திரியுறது தேங்காய் அடிக்கிறதிலும் மோசமான செம்மறியாட்டுத்தனமாத்தானே தெரியுது..! :lol::)

தேங்காயை காசு கொடுத்து வாங்கி உடைக்கிறவனுக்கு என்ன நன்மை கிடைக்கிறது. காசும் வீண் தேங்காயும் வீண்தானே!

தேங்காயை சிறிலங்காவிலே அல்லது இந்தியாவிலிருந்தோ நான் ஆயிரம் டொலருக்கு தேங்காய் வாங்கி இரண்டாயிரம் டொருக்கு விற்றால் வருவது ஆயிரம் டொலர் வருவாய்.

நான் வருவாயைக் கொடுத்தால் ஆயிரம் டொலர்கள் மக்களிற்குக் கிடைக்கும், எனக்கு தேங்காய் வாங்குவதற்காக தேங்காய் உடைக்கும் அறிவுமேதைகள் மக்களிற்குக் கொடுத்தால் இரண்டாயிரம் டொலர்கள் கிடைக்குமல்லாவா?

நீங்கள் மதத்தின் மீது பற்று வைத்திருப்பது நம்பிக்கை வைத்திருப்பது அதற்காக வக்காளத்து வாங்குவது வேறு. தாயகத்pல் மக்கள் இன்னல்பட்டுக்கொண்டிருக்கும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் எமது மக்கள் இன்னல்பட்டிருக்கும் பொழுது, கோயில்களில் அரச்சனை அபிசேகம் மயிர் மண்ணாங் கட்டியெண்டு பணத்தை சில முதலைகளிற்கு வழங்குறது, தேங்காய் உடைக்கிறது இரவு விருந்து நடத்துறது களிப்பாட்டங்களை நடத்துறது. தங்களிற்கே பயன்படாது தேவையற்று பணத்தை விரயமாக்கிறது. எண்டு புலம்பெயர்ந்தவர்கள் செய்யும் கூத்துக்கள் எல்லாவற்றிற்றையும் வெளிப்படுத்துங்கள். மகிழ்ச்சியாக வரவேற்கிறோம்.

ஆனால் யாழில் மட்டும் மக்கள் நல்லூர் திருவிழாவை புறக்கணிக்க வேண்டும் :)

Edited by காட்டாறு

ஆனால் யாழில் மட்டும் மக்கள் நல்லூர் திருவிழாவை புறக்கணிக்க வேண்டும் :)

நீங்கள் எதற்கு ஆட்டுக்குள்ளை மாட்டை விடுறியள்?

வருஷத்தில் ஒரு நாளில் வருகிற கோயில் திருவிழாவில் ஒவ்வொரு பைந்தமிழரும் பைத்தியம் பிடித்தமாதிரி பத்து தேங்காயை கையில் எடுத்து உடைக்கிறதால தமிழ் இனத்திற்கு ஏற்படுகிற செலவு = 100 கோடி டாலர்.

தேங்காய் உடைக்கவிட்டால் தமிழ் இனத்திற்கு மிச்சம் = 100 கோடி டாலர்.

இந்த 100 கோடி டாலர் இல் எவ்வளவு செய்யலாம். 100 152மீ.மீ. ஆட்லெரி வாங்கலாம். அதுக்கு 1 கோடி குண்டுகள் வாங்கலாம். சீனன்ர கொஞ்ச காச விட்டெறிஞ்சால் அவன் F7 ஐ துண்டு துண்டா களற்றி அனுப்புவான். பிறகு அதைப்பொருத்தி சிங்களவனுக்கு அடிக்கலாம்.

இவ்வளவு விஷயமும் இந்த தேங்காயிக்குள்ள தான் இருக்கிது. அது தெரியாம சனங்கள் கண்டபடி உடைக்குதுகள். தேசத்துரோகம். யாழ் கள பொருளியல் நிபுணர்கள் எத்தனை தரம் கத்தியும் என்ன பிரியோசனம் ? சரி தேங்காய் காசை ஆயுதம் தான் வேண்டி முடிக்கோனும் எண்டு இல்லை. ஒரு கைத்தொழிலில் தானும் முதல் இட்டிருக்கலாம். அப்பிடிச் செய்திருந்தால் இண்டைக்கு தமிழ் இனம் ஜப்பான் காரனோட போட்டி போட்டிருக்கும். ஒரு தேங்காயில எல்லாத்தையும் வீணாக்கிப் போட்டோமப்பா. சே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எதற்கு ஆட்டுக்குள்ளை மாட்டை விடுறியள்?

சம்பந்தப் பட்டவருக்கு புரியும்.

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=435586

  • தொடங்கியவர்

நவீன இஸ்ரேலின் தந்தையும் அதனை வென்றெடுத்த சயனிசம் இயக்கத்தின் தந்தையும் எனப்படும் தியடோர் கேர்ல்ஸ்:

http://en.wikipedia.org/wiki/Theodor_Herzl

http://www.herzl.org/upload/ListItems/AttachedFile_513.ppt

அவர் சயனிசம் இயக்கத்தை உருவாக்குவதற்கு முன்னர் புலம்பெயர்ந்த யூதர்களின் வாழ்க்கை பற்றி எழுதிய முக்கியமானதாக கருதப்படும் நாடகம் the new ghetto

http://www.jafi.org.il/education/herzl/his...sneueghetto.htm

கேர்ல்ஸ் இன் ஏனைய ஆக்கங்கள் நாட்குறிப்புகள்

http://www.jafi.org.il/education/herzl/popuplisting.html

புலம்பெயர்ந்த யூதர்களின் தேசிய உணர்வற்ற சுயநலப்போக்கு, புலம்பெயர்ந்த தேசங்களில் அந்தந்த சமூகங்களோடு இணைந்து வாழாத தன்மை, அதனால் சம்பாதித்துக் கொண்ட எதிர்ப்பலைகள், யூதர்கள் பின்பற்றிய அன்றைய வாழ்க்கை முறைகள் சவால்களிற்கு புறம்பான பழமைவாத பழக்க வழக்கங்கள் மதச் சம்பிரதாயங்கள் பற்றிய விரக்த்தி மற்றும் சயனிசம் இயக்கத்தின் தோற்றுவாய் பற்றி நீண்ட காணொளி ஆவணம்

mms://il12.cast-tv.com/list_vod_shofar/Languages/english/Herzel-eng.wmv

காணொளி mms streaming என்பதால் வின்டோஸ் மீடியா பிளேயரில் File -> Open URL என்று ஆரம்பித்து அதில் mms://il12.cast-tv.com/list_vod_shofar/Languages/english/Herzel-eng.wmv என ஆரம்பிக்கும் விலாசத்தை பிரதி செய்து Browse என திறக்கவும்

Edited by kurukaalapoovan

  • தொடங்கியவர்

சயனிசம் புலம்பெயர்ந்த யூதர்கள் மத்தியில் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளிற்கு முன்பு யூதர்கள் ரோமர்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தாயகத்தில் நடத்தி தோற்றுப் போன போராட்டங்கள் பற்றி

http://en.wikipedia.org/wiki/First_Jewish-Roman_War

  • தொடங்கியவர்

thiruchi_20080924001.jpg

2349704852_9a7663bc53.jpg

2349662416_386bf5463f.jpg

2731301005_bb03c11196.jpg

குருக்ஸ் கணொளிக்கான இணைப்பு சரியா எனப் பார்க்கவும்.

பல மில்லியன் செலவழித்து கோவில் கட்டி பல ஆயிரம் பவுண்டு செலவழித்து திருவிழாச் செய்யிற காசு என்ன தென்ன மரத்திலையா காச்சு வருது?

கோவில் நடாத்துபவர்கள் எங்கிருந்து இத்தகைய பெரும் தொகைப் பணத்தைப் பெறுகின்றனர்?

  • தொடங்கியவர்

veeramani_protest_20080923004.jpg

434608583_8814c93190_o.jpg

434608841_db4359bcdc_o.jpg

434608035_89b103c72e_o.jpg

veeramani_protest_20080923005.jpg

veeramani_protest_20080923006.jpg

434607961_61ffb8b935_o.jpg

கோவில்களுக்கு செல்லும் மக்கள் எந்த தமிழ் தேசிய போராட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொள்வது இல்லை என்றோ அல்லது இது போன்ற ஈழத்தமிழர் ஆதரவு ஊர்வலங்களில் பங்கெடுக்கும் தமிழக மக்கள் கோவில்களுக்கு சென்று தேர் இழுப்பது இல்லை என்றோ எதை வைத்து குறுக்கர் சொல்கிறார்?

சும்மா... குறுக்காலும் மறுக்காலும் போய் கொண்டிருந்தால் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு போய்ச்சேர முடியாது.

செக்கு மாடு எவ்வளவு நேரம் ஓடினாலும் செக்கை சுற்றியே ஓடும் என்பது இதை தானோ??! :)

ஆனாலும் இந்த அங்கப்பிரதட்சணம் எல்லாம் கொஞ்சம் டூ மச் தான்! :lol:

நான் திருவிழாக்களுக்கு கோவில்களுக்கு சென்று பல வருடங்களாகி விட்டதால், இந்த கண்கொள்ளா காட்சிகளை இங்கே இன்னும் காணவில்லை!

இவை தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!

ஆனால்! அப்படியான கோரிக்கைகளை மக்களிடம் எடுத்து செல்வதற்கு இந்த வெட்டி ஒட்டும் புரட்சிகள் அல்ல சரியான வழிமுறை!

இன்னும் சொல்லப்போனால் இது மாதிரியான வெட்டி ஒட்டும் புரட்சிகள், திருவிழாக்களுக்கு செய்யப்படும் மறைமுக தூண்டுதலும் விளம்பரமும் ஆகும்!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசில பகுத்தறிவுவாதிகள் இங்குமட்டுந்தான் தேசியம்,சமூகம் என்று கொத்துக்கொத்தாக அளப்பார்கள்!

ஆனால் வீட்டில் ?????

இந்த பகுத்தறிவுவாதிகளிடம் பல கேள்விகள் என்னால் இலகுவாக ஓரிரு வரிகளில் கேட்க முடியும்.ஆனால் என் பல்லை நானே குத்தி மணக்க விரும்பவில்லை.

மீண்டும் சொல்கின்றேன் புலம்பெயர்மக்கள் பல விடயங்களை மிதமிஞ்சி ஆடம்பரமாக செய்கின்றார்கள்.இது உண்மை.

அது கோவில் விடயங்களாக இருந்தாலும் சரி பங்களாக்களை வாடகைக்கு எடுத்து திருமண கொண்டாட்டங்களை நடத்தினாலும் சரி எல்லாமே தற்போது மனிதத்தன்மையை மிஞ்சி நிற்கின்றது.

ஏன் கொழும்பில் வாழும் எம் உறவுகளை பாருங்கள்.அவர்கள் செய்யும் ஆடம்பர கொண்டாட்டங்களுக்கு அளவேயில்லை.

எதற்கெடுத்தாலும் எமது ஈழப்போராட்டத்துடன் மதத்தை இழுப்பது அவ்வளவு அழகல்ல.

இஸ்ரேலை பற்றி அடிக்கடி உதாரணம் காட்டுபவர்கள் கவனிக்கவும்.இஸ்ரேல் நாட்டை தங்கள் நலனுக்காக உருவாக்கியவர்கள் மேலைத்தேயவர்கள்.ஏனெனில் அவர்களுக்கு அங்கே ஒர் இடம் வேண்டும் என்பதற்காக.

என்னைப்பொறுத்தவரைக்கும் கட்டிக்கொடுத்த வீட்டை(இஸ்ரேல்நாடு) இஸ்ரேலியர் பராமரிப்பது போன்றும் அதற்கு மேற்குலகம் உதவி செய்வது போலவுமுள்ளது.

  • தொடங்கியவர்

434609033_1b5404467e_o.jpg

veeramani_protest_20080923006.jpg

veeramani_protest_20080923001.jpg

2341453044_92cb837b00.jpg

veeramani_protest_20080923007.jpg

215102260_00e773417a.jpg

434608292_3c6dfd6916_o.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக கனடா தமிழ் இளையோர் 30 மணிநேர உண்ணாநிலை

கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ் இளையோர்கள் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தவுள்ளனர்.

தாயகத்தில் இடம்பெயர்ந்து உண்ண உணவின்றி வாடும் மக்களுக்கு உணவு வழங்கிட ஆதரவு தெரிவிக்குமாறு கோரி இந்த உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை கனடா வாழ் தமிழ் இளையோர்கள் தொடங்கவுள்ளனர்.

இந்த நிகழ்வு 10865 Bayview Ave இல் அமைந்திருக்கும் றிச்மன்ட்கில் பிள்ளையார் கோவிலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26.09.08) மாலை 4:00 மணி தொடக்கம் அடுத்த நாள் சனிக்கிழமை இரவு 10:00 மணிவரை நடைபெறவுள்ளது.

நிகழ்வில் கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் பங்கேற்று தாயகத்தில் அல்லலுறும் எமது மக்களுக்கு ஆதரவு வழங்கிடுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

நிகழ்வு தொடர்பான மேலதிக விவரங்களை அறிய விரும்புவோர் (01) 647 834 1075 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

*******

http://www.puthinam.com/full.php?2bUSrDe0d...2d43bTV2b022Nt3

*******

http://www.puthinam.com/full.php?2bVVpCe0d...d434OR2b021Nv3e

  • தொடங்கியவர்

தியடோர் கேர்ல்ஸ் உடன் சயனிசம் இயக்கத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர் மக்ஸ் நொர்டாவு

http://en.wikipedia.org/wiki/Max_Nordau

  • கருத்துக்கள உறவுகள்

photo11.jpg

photo2.jpg

photo66.jpg

photo57.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.