Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன்துறை கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப். கேணல் இலக்கியா, கடற்புலிகளின் கொமாண்டோ லெப். கேணல் குபேரன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள். :icon_idea::rolleyes:

  • Replies 50
  • Views 11.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ் கடலில் ஆகுதியான மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

மாவீரர்களிற்கு வீரவணக்கம் !

தங்கட கப்பல் இஞ்ச செய்தியில சொன்னமாதிரி சேதம் அடைய இல்லை எண்டு பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில படங்களும் போட்டு இருக்கிது. நாங்கள் குசியில குதிச்சுக்கொண்டு இருக்கிறம் கப்பல் தாண்டுட்டுது எண்டு. தமிழ் ஊடகங்களும் காதில பூ சுத்த துவங்கீட்டுதோ?

தோல்வியோ வெற்றியோ தாயகத்துக்காக போராடுகின்ற போராளிகளின்ட தியாகங்கள் புனிதமானது. ஆனால்.. தோல்வியில முடிஞ்ச தாக்குதலை வெற்றியில முடிஞ்சது மாதிரி காட்டுறதுல இருந்து என்ன விளங்கிது எண்டால் எங்கட சனம் கப்பல் புரண்டுட்டுது எண்டு ஏதாவது கதை சொன்னால்தான் அமைதியாக இருக்கும் எண்டாதலையாக்கும்.

முன்பு சாணக்கியன் இஞ்ச "போராட்டம் தாயகத்தில இருக்கிற மக்களுக்கானது ஒழிய வெளிநாடுகளில இருந்து படம் பார்க்கிற ஆக்களுக்காக இருக்கக்கூடாது" எண்டு சொன்னதுக்கு அட நீ ஒரு துரோகி எண்டு கண்டபடி பேச்ச்சு விழுந்துச்சிது யாழில. ஆனால் நிலமையைப் பார்த்தால் எல்லாம் வெளிநாட்டில இருக்கிற ஆக்களை சந்தோசப் படுத்துறதுக்குத்தான் செய்திகள் வெளியிடப்படுகிது மாதிரி இருக்கிது.

யாழுக்க வெட்டி ஒட்டி மகாசனங்களை குசிப்படுத்திக்கொண்டு இருக்கிற ஆக்கள் புதினமும், தமிழ்நெட்டும் சொல்லிறது மாத்திரம் உண்மை மிச்சம் எல்லாம் பொய் எண்டுற ஒரு மனநிலைய ஏற்படுத்தி மக்களுக்கு போதை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

உதயன் பத்திரிகையும் இன்னும் மக்களை குசிப்படுத்தும் படியாக உள்ளபடி சொல்லாமல் நல்லாக்கூட்டி எழுதுறத இன்னும்தான் கைவிடவில்லை போல இருக்கிகுது.

தோல்வியோ வெற்றியோ தாயகத்துக்காக போராடுகின்ற போராளிகளின்ட தியாகங்கள் புனிதமானது. ஆனால்.. தோல்வியில முடிஞ்ச தாக்குதலை வெற்றியில முடிஞ்சது மாதிரி காட்டுறதுல இருந்து என்ன விளங்கிது எண்டால் எங்கட சனம் கப்பல் புரண்டுட்டுது எண்டு ஏதாவது கதை சொன்னால்தான் அமைதியாக இருக்கும் எண்டாதலையாக்கும்.

உண்மை தான் புலிகள் சொன்னதாக வேற? சொல்லி இருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

தங்கட கப்பல் இஞ்ச செய்தியில சொன்னமாதிரி சேதம் அடைய இல்லை எண்டு பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில படங்களும் போட்டு இருக்கிது. நாங்கள் குசியில குதிச்சுக்கொண்டு இருக்கிறம் கப்பல் தாண்டுட்டுது எண்டு. தமிழ் ஊடகங்களும் காதில பூ சுத்த துவங்கீட்டுதோ?

தோல்வியோ வெற்றியோ தாயகத்துக்காக போராடுகின்ற போராளிகளின்ட தியாகங்கள் புனிதமானது. ஆனால்.. தோல்வியில முடிஞ்ச தாக்குதலை வெற்றியில முடிஞ்சது மாதிரி காட்டுறதுல இருந்து என்ன விளங்கிது எண்டால் எங்கட சனம் கப்பல் புரண்டுட்டுது எண்டு ஏதாவது கதை சொன்னால்தான் அமைதியாக இருக்கும் எண்டாதலையாக்கும்.

முன்பு சாணக்கியன் இஞ்ச "போராட்டம் தாயகத்தில இருக்கிற மக்களுக்கானது ஒழிய வெளிநாடுகளில இருந்து படம் பார்க்கிற ஆக்களுக்காக இருக்கக்கூடாது" எண்டு சொன்னதுக்கு அட நீ ஒரு துரோகி எண்டு கண்டபடி பேச்ச்சு விழுந்துச்சிது யாழில. ஆனால் நிலமையைப் பார்த்தால் எல்லாம் வெளிநாட்டில இருக்கிற ஆக்களை சந்தோசப் படுத்துறதுக்குத்தான் செய்திகள் வெளியிடப்படுகிது மாதிரி இருக்கிது.

யாழுக்க வெட்டி ஒட்டி மகாசனங்களை குசிப்படுத்திக்கொண்டு இருக்கிற ஆக்கள் புதினமும், தமிழ்நெட்டும் சொல்லிறது மாத்திரம் உண்மை மிச்சம் எல்லாம் பொய் எண்டுற ஒரு மனநிலைய ஏற்படுத்தி மக்களுக்கு போதை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

உதயன் பத்திரிகையும் இன்னும் மக்களை குசிப்படுத்தும் படியாக உள்ளபடி சொல்லாமல் நல்லாக்கூட்டி எழுதுறத இன்னும்தான் கைவிடவில்லை போல இருக்கிகுது.

உங்கள் கருத்தும் சிறீலங்கா கடற்படைப் பேச்சாளரின் கருத்தும் ஒரேவிதமாக உள்ளன.

எந்த ஒரு கடற்தாக்குதலின் போதும்.. (அது அரசால் முறியடிக்கப்பட்டதாக இருக்கலாம்.. அல்லது தோல்வியில் முடிந்ததாக இருக்கலாம் )படங்களை பிரசுரிக்காத சிறீலங்கா கடற்படை தாக்குதல் நடந்து 3 தொடக்கம் 4 மணித்தியாலத்துக்குள் எப்படிப் படங்களை களமுனையில் இருந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தது..??! இத்தனை அவசரத்துக்கான அவசியம் என்ன..??!

கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்ட கரும்புலிப் படகு எங்கே..??! சிதறிச் சின்னாபின்னமாகி மிதக்கும் ஒரு பகுதிப் படகின் படத்தை மட்டும் போட்டிருக்கிறார்கள். அதே படத்தைப் போல தடயத்தை பலதடவை யுரியுப் காணொளியில் கண்டிருக்கிறேன்.

அதுமட்டுமன்றி.. அவர்கள் இணைத்துள்ள படங்கள் தாக்குதலின் பின்னால் எடுக்கப்பட்ட படங்கள் தான் என்று எதனை வைத்து உறுதி செய்கிறீர்கள். அதுமட்டுமன்றி.. சேதமானதாக போடப்பட்டுள்ள படம் மிக அருகாமையில் இருந்து எடுக்கப்பட்டு கப்பலை இனங்காணாத படிக்கு போடப்பட்டுள்ளது. அந்தச் சேதமான கப்பல் இன்றையதுதான் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது..???!

அதுமட்டுமன்றி ஏன் மற்றைய இரு கப்பல் படங்களும்.. கொழும்பில் நங்கூரம் இட்டு நின்ற போது பல காலத்துக்கு முன்னரே எடுத்தபடமாக இருக்க முடியாது.

திருமலை துறைமுகத்தில் நடந்த கரும்புலித் தாக்குதலில்.. சிறிது சேதம் என்ற கப்பல் 15 நிமிடத்திலேயே மூழ்கிப் போனது எப்படி..??!

ஆக.. விடுதலைப்புலிகளும்.. ஏ எவ் பி போன்ற சர்வதேச ஊடகங்களும்.. உள்ளூர் செய்தி ஸ்தாபனமான உதயனும் அறியத்தகாத உண்மையை.. அல்லது கள நிலவரத்தின் தன்மையை உங்களுக்கு சிறீலங்கா பாதுகாப்பமைச்சகம் காட்டிவிட்டது.. படம் போட்டு என்கிறீர்களா..???!

விடுதலைப்புலிகள் மூழ்காத கப்பலை மூழ்கியதாகச் சொன்னதில்லை. மோதல்கள் தோல்வியடைவதும்... வெற்றியடைவதும்.. சண்டைகளில் சகஜம். ஆனால்.. விடுதலைப்புலிகளை விட பாதுகாப்பமைச்சுச் சொல்வது சுத்த உண்மை.. அதுவும் படம் போட்டுச் சொல்வது உண்மை என்ற நியாயப்படுத்தல்.. உண்மையைச் சொல்வதாக இல்லை. மட்டுமன்றி நடுநிலையானதான அணுகுமுறை என்பதாகவும் இல்லை.

இத்தனை படங்களும் வெளியாகிய பின்னும்.. பிபிசி போன்ற ஊடகங்கள்.. ஒரு கப்பல் மோசமான சேதம் என்ற செய்தியை திருத்தவில்லையே.. ஏன்..??! கடற்படை சொல்வது போல சிறிது சேதம் என்று அவர்களுக்கு எழுத ஆங்கில வார்த்தைகள் இல்லை என்பதாலா..???! :rolleyes::o

(One of the merchant vessels -- MV Nimalawa -- was crippled and the other was damaged," said a defence official who declined to be named. He said a salvage operation was underway. - afp)

(The Tamil Tigers have attacked two merchant ships carrying supplies to Jaffna in northern Sri Lanka, badly damaging one, defence officials say. - bbc)

எங்களுடைய இணையத் தளங்கள் தங்களின் மொழிபெயர்ப்புத் திறமையைச் சிறப்பாகச் செய்து இரண்டு கப்பல்களையும் மூழ்கடித்துள்ளன. நிமலாவ கப்பலுக்கு அருகே புலிகளின் படகு வெடித்துச் சிதறியதால் அந்தக் கப்பலுக்கு சிறிய சேதம் மாத்திரமே ஏற்பட்டதாகவும் மற்றைய கப்பலுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் புலிகளின் இரண்டு படகுகளே அழிக்கப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் பதிவு இணையத்தினர் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி கடற்படையின் இரண்டு வழங்கல் கப்பல்களையும் தாக்கியழித்துள்ளனர். எப்போதுதான் இவர்கள் திருந்ததப் போகிறார்களோ?

தாய் மண்ணின் விடியலுக்காய் தமது உன்னதமான உயிர்களை ஈந்து வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலிகள் லெப்.கேணல் இலக்கியா மற்றும் லெப்.கேணல் குபேரன் அகியோருக்கு வீரவணக்கங்கள்.

அவர்கள் உதயன் பத்திரிகையை மேற்கோள் கொண்டு அச்செய்தியை இட்டுள்ளனர். இரண்டு கப்பல்களும் மூழ்கிக் கொண்டிருப்பதாக உதயன் செய்தி வெளியிட்டது. பின்னர் அதுவே ஒரு கப்பல் மூழ்க மற்றது பலத்த சேதமடைந்தது என்ற தகவலைச் சொல்லியுள்ளது. படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஒரு ஊடகம் தவறான செய்தியை இட படைத்தரப்பு அனுமதிக்காது. எனவே படைத்தரப்பின் உறுதிப்படுத்தல் இன்றி உதயன் அச்செய்தியை.. பிரசுரித்ததா என்பதே முக்கிய வினவல்.

ஏலவே.. ஏ எவ் பியும்.. ஒரு கப்பல் மூழ்க மற்றது கடும் சேதம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத படையதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது. அதையேன்.. கடற்படைப் பேச்சாளர் திருத்தக் கோரவில்லை..??! :o

Edited by nedukkalapoovan

ஒருமுறை முரளிக்கும் எங்கள் இனப்போராட்டத்தின் ''நடுநிலமை'' :rolleyes: தமிழர்கள் சங்க தலைவர் அ.. அ.. அஜீவன் அவர்களுக்குமான கருத்தரங்கின்போது எனக்கு சிரிப்பை வரவைத்தது முரளியின் தமிழ்தான்.... மிக மிக கஸ்டப்பட்டு யாழ்ப்பாணத்தமிழ் கதைக்க முயற்ச்சி செய்திருந்தார்......

அண்டைக்கு குத்தியாச்சு முத்திரை. :o

Edited by Panangkai

அம்புலி மாமாஸ்,

உங்கட கதைகளுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி! அப்ப நாளைக்கு நாளன்டைக்கு எங்கட வித்துவான்கள் பேராசிரியர்கள் புலிகள் எப்பிடி கப்பலை மூழ்கடித்தார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? ராடார் திரையில் விழாதபடி என்னென்ன நவீன தொழில்நுட்பங்கள் எல்லாம் பாவிச்சார்கள்.. அடுத்த கப்பல் எங்க எப்பிடி கவுழப்போகிது எண்டு கட்டுரைகள் எழுதி எங்கள் எல்லாரையும் தொடர்ந்து குசிப்படுத்தி போதை ஏற்றிக்கொண்டு இருப்பார்கள் எண்டு சொல்லுங்கோ. வெளிநாட்டில இருக்கிற சனமும் பாவம். எத்தின நாளைக்குத்தான் உந்த சீரியல்கள பாத்து பொழுதுபோக்குங்கள்? இப்பிடி குசியாக அம்புலிமாமா கதைகள் சொன்னால் இணையத்துக்கும் வந்து சஞ்சாரம் செய்து பொழுதுபோக்க உதவியாக இருக்கும்.

இதுக்க கதைச்சது இவ்வளவும் காணும். இனி நாங்கள் அங்காலபோய் பெண்களின் மார்பகங்கள் பற்றிய எமது ஆராய்ச்சியை தொடருவமா? என்னையா கொடுமை இது கப்பலைத்தான் பொய்யாக உடைஞ்ச கப்பலை உடையாதமாதிரி காட்டுறாங்கள் எண்டு பாத்தால்... பொண்ணுகளின்ட மார்பகங்களும் கண்ணுக்கு தெரியுறது எல்லாம் பொய்யாம். உள்ளுக்க எல்லாம் ஏதோ சிலிக்கனாம். நாங்கள் நினைக்கிறமாதிரி சதை இல்லையாம். கண்ணை நம்பாதே எண்டு அம்புலிமாம சொல்லிறதுல ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது.

  • கருத்துக்கள உறவுகள்

புலி தோற்பது போலத் தானே கொஞ்ச நாளாகச் செய்தி வருது. எனவே நாங்கள் நடுநிலமை முகமூடி போடுவோம். அப்படியே இருப்பையும் மாற்றிக் கொள்ளுவோம்.

சிறிலங்கா அரசு பிரசுரித்த படத்தில் காட்டப்படுகின்ற உடைந்த குண்டுப்பகுதிக்குப் பின்னால் நிற்பது டோராப் படகே தவிர, கப்பல்கள் அல்ல.

கப்பல்கள் உடைந்ததோ, இல்லையோ வேறு விடயம். ஆனால் புலிகளின் தகவல்பிரிவு வெளியிட்ட செய்தியைத் தான் இங்குள்ள ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றதே தவிர, புலத்து மக்களைக் குசிப்படுத்த அல்ல.

முரளி,

தாக்குதலால் ஒரு சேதமும் இல்லை எனில் ஏன் துறைமுகத்துக்குள் கடற்படை வழக்கமாகாச் செல்லும் வேலை யாட்களை உட் செல்ல ஏன் அனுமதிக்கவில்லை?சர்வதேச பத்திரிகையாளர்களைக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டி இருக்கலாமே?

ஏஎfபி நிறுவனத்தின் செய்தி ஒரு பேர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரையை மேற் கோள்காடியே எழுதப்படுள்ளது.

தாக்குதல் நடாத்த வந்த மூன்று படகுகளில் இரண்டு அழிந்தால் மற்ற ஒன்றுக்கு என்ன நடந்தது?

புல ஊடகங்களில் சிலர் அதிகப்பிரசிங்கித் தனமாக எழுதுகிறார்கள் என்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் இணையம் தான் உண்மை சொல்கிறது என்று எழுதுவது உங்கள் பகுதறிவுக்கு எவ்வாறு படுகிறது?

தங்கட கப்பல் இஞ்ச செய்தியில சொன்னமாதிரி சேதம் அடைய இல்லை எண்டு பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில படங்களும் போட்டு இருக்கிது. நாங்கள் குசியில குதிச்சுக்கொண்டு இருக்கிறம் கப்பல் தாண்டுட்டுது எண்டு. தமிழ் ஊடகங்களும் காதில பூ சுத்த துவங்கீட்டுதோ?

படங்களை சரியா பாத்தீர்களோ...?? எல்லாம் நல்லா விளங்கீட்டுதோ...??

இதை ஒருக்கா பாத்து விளக்கம் தாருங்கோ...!!!

http://www.defence.lk/videos/20081022_LTTE...chant_ships.wmv

அங்கே இணைக்க பட்ட வீடியோவில் இரண்டு கப்பல்களும் நிற்பது போல படம் ஏன் இல்லை எண்டு ஒருக்க விளங்க படுத்துவீங்களோ...?? :rolleyes: உங்களுக்கு விளங்கினதை எங்களுக்கும் சொல்லுங்கோ....!!

MV Ruhuna கப்பலின் பெயரை காட்டினவை MV Nimalawa எண்ட கப்பல் எண்ட ஒண்டை ஏன் காட்டுறது எண்டு ஏன் தூரத்திலை வைத்து காட்டுகினம்...?? கப்பல் தாள இல்லை எண்டால் இரண்டு கப்பலும் அருகருகிலை நிக்ககேக்கை தான் அடி விழுந்தது எண்ட செய்தி பொய்யாக இருக்க வேணும்... காரணம் படத்திலை இரண்டு காப்பலையும் ஒண்டா காணம்....

குறிப்பு: இந்த வீடியோ விலை கடைசி பகுதி எப்போதோ எடுத்ததாக இருக்க வேண்டும்... இண்டக்கும் மதியம் நல்ல வெய்யில் நேரம் சாமான் இறக்கீனம்... இரவு விழுந்த அடியை கவனம் எடுக்காமல் பொத்கு சனத்தை வைத்து இறக்கினம் எண்டது சந்தேகமே...

இது AFP சொல்வது:

"One of the merchant vessels -- MV Nimalawa -- is sinking and the other vessel was damaged," a defence official who declined to be named said.

http://news.yahoo.com/s/afp/20081022/wl_af...ip_081022023730

அடித்தது அடி வாங்கியவனுக்கு தெரியும், அடியின் அருமை! அங்கு சிங்களவன் குழம்பிப் போனானான், எங்கிருந்து உந்த படகுகள் வந்ததென்று?? கேகேஎஸ், பலாலி உயர் பாதுகாப்பு வலயப்பகுதிக்குள்ளேயே தேடுதலாம்!! .... அவன் குழம்பி விட்டான், நாங்கள் ஏண்?

குறிப்பு: இந்த வீடியோ விலை கடைசி பகுதி எப்போதோ எடுத்ததாக இருக்க வேண்டும்... இண்டக்கும் மதியம் நல்ல வெய்யில் நேரம் சாமான் இறக்கீனம்... இரவு விழுந்த அடியை கவனம் எடுக்காமல் பொத்கு சனத்தை வைத்து இறக்கினம் எண்டது சந்தேகமே...

:rolleyes::o :o :icon_mrgreen:

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பமைச்சு வெளியிட்டுள்ள பிரச்சார ரீதியான காணொளியில்.. ஏன் றுகுணுக் கப்பலின் ஒரு பகுதி மட்டும் காட்டப்படுகிறது. அதன் பக்கப் பகுதிகள் எதுவும் காட்டப்படவில்லை....மிகுதியை ஏன் காட்டவில்லை..??! இரண்டாவது கப்பல் பற்றிய தகவல் இன்றைய சேதத்தை வெளிப்படுத்தும் வகையில்... காணொளியில் காட்டப்படவில்லையே.. ஏன்..???! உண்மையில் அந்தக் கப்பல் பற்றிய இன்றைய தகவலே அந்தக் கானொளியில் இல்லை.. அந்தக் கப்பலுக்கு என்னவாயிற்று..!

சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் ஆழ்கடலில் நின்ற கடற்கரும்புலிகள்.. பாவித்ததாகக் காட்டப்படும் கரும்புலிப் படகின் தோற்றம்.. மிதவையாக எல்லோ தெரியுது..??!

யாழ் குடா தகவல்கள் இன்று பொருட்கள் இறக்குப்படவில்லை எங்கிறது. ஆனால் அரச பிரச்சார காணொளி.. பொருட்கள் இறக்கி அது யாழ்ப்பாண நகருக்கு விநியோகிக்கப்பட்டு.. மக்கள் அதில் புட்டு அவித்துச் சாப்பிடுவது வரை.. காணொளியில் காட்டப்படுகிறது.. ஏன் இத்தனை பிரச்சாரமும்.. அவசரமும்.. இங்கு.

இன்று வன்னிக்களமுனை செய்திகள் எதனையும் பிரசுரிக்காது.. சிறீலங்கா பாதுகாப்பமைச்சு.. இச்சம்பவத்தை மூடிமறைப்பதிலேயே 100% கவனம் செலுத்தியுள்ளதை அவர்களின் காணொளித் தயாரிப்பு விளக்குகிறது. இருந்தும்.. எம்மவர்கள்..???! இன்னும் அதையே நடுநிலை உண்மை என்பதாக மட்டும் இனங்காண்பது..???! :rolleyes::o

Edited by nedukkalapoovan

நிமல்லாவ கப்பலுக்கு நடந்த கதியையும் றுகுணு கப்பலுக்கு ஏற்பட்ட சேதத்தையும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தனது காணொளி மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த காணொளியில் ருகுணு கப்பலைக் கூட முழுமையாகக் காட்ட முடியாத நிலையில் பாதுகாப்பு அமைச்சு இருக்கிறது.

அட அட அண்ணாமார் என்னட்ட பகுத்தறிவு தொடக்கம், நடுவுநிலமை, இருப்பு, செருப்பு எண்டு பல கேள்விகள் கேட்டு இருக்கிறீனம். கொஞ்சம் பொறுங்கோ... வித்துவான்கள்: சிட்டினியில இருந்து சிங்கிடி, ஒஸ்லோவில இருந்து ரம்போ, பாரிஸில இருந்து பழனிமலை எல்லாரும் குசியாக நேற்று நடந்த தாக்குதல் பற்றி வரிக்கிரமமாக அ.. தொடக்கம் ஃ வரை மயிலிட்டி கடலில என்ன என்ன நடந்திச்சிது என்ன என்ன நடக்கப்போகிது எண்டு கெதியில காண்டம் வாசிப்பீனம். அதுகள எல்லாம் வாசிச்சுபோட்டு பிறகு, இக்பால் இளையதுரையுண்ட ஆய்வையும் ஞாயிற்றுக்கிழம வாசிச்சுபோட்டு, அதுக்குபிறகு தராக்கி அவர்களிண்ட ஆவி யாழில என்ன சொல்லிது எண்டு அதுகளையும் ஒருக்கால் வாசிச்சுபோட்டு, பிறகு அம்புலிமா கதைகளையும் வாசிச்சுபோட்டு.. அதுக்குபிறகு எண்ட பகுத்தறிவு, நடுவுநிலமை, இருப்பு, செருப்பு எல்லாத்தையும் பாவிச்சு நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்ல முயற்சிக்கிறன். எண்ட கருத்து நீங்கள் குசியாக இருப்பதற்கு இடைஞ்சலாக இருந்து இருந்தால் தம்பியை மன்னிச்சு கொள்ளுங்கோ.

அப்ப நான் வரட்டா..

அட அட போகும்முன்னுக்கு உங்களுக்கு இதையும் ஒருக்கால் போட்டு காட்டுறன். இது கப்பலுக்க நிண்ட பாம்பாம். புலிகள்தான் இந்தப்பாம்ப முல்லைத்தீவில காட்டுக்க இருந்து வரேக்க விசமத்தனமான முறையில பிடிச்சுக்கொண்டுவந்து ஒரு தற்கொலை தாக்குதல் படகில ஏத்தி அனுப்பிவிட்டவேளாம். உயிரோட பிடிபட்ட இவரை மகரவுக்கு கொண்டுபோய் நேவிக்காரர் தோல் உரிக்கப்போறாங்களாம்.

  • தொடங்கியவர்

முரளி,

புலிவாலை பிடித்தாகிவிட்டது, இனி அதை விட முடியாது! அதை விட்டால் அது முதலில் எங்கள் மேல்தான் பாய்ந்து குதறும்!

எனவே முடியுமானவரை ஒன்றாக வடம் (வால்) பிடிப்போம்! முடியாவிட்டால் கிழே போட்டுவிட்டு ஓடித்தப்புவோம்!

இந்த தாக்குதல்களை பற்றிக் கதைப்பது, குருடன் யானையை தடவிப்பார்த்து அறிந்து கொண்டமாதிரித்தான்!

உண்மை தெரிந்த ஆட்கள், இரண்டே பேர்தான், ஒன்று இராணுவம், மற்றது புலிகள். இருவருமே உண்மைகைளை வெளியால சொல்லப்போவதில்லை. ஒன்றில் பொய் சொல்வார்கள் அல்லது எதுவுமே சொல்லமாட்டார்கள்.

சரி ஏன் அவர்கள் இப்படி செய்கிறார்கள்?

விஜய் படம் பார்க்க என்று ஒரு கூட்டம் இருக்குது.... அதுக்கு கமலின்டை அன்பே சிவம் போட்டால் தொலைக்காட்சி அலைவரிசையை கிரிக்கட் போட்டிக்கு மாத்திப்போடுங்கள்!

நாட்டுநடப்பிற்கு குருவிப்பட வியாக்கியானங்கள் குடுக்கிற கூட்டங்கள் அதையே தொடர்ந்து செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் இருக்கிற இடம் அப்பிடி!

அவர்கள் அப்பிடிக் கட்டின மண்கோட்டை மகிந்தவின்டை காட்டு வெள்ளத்தில படிப்படியா கரைஞ்சு போகேக்கை தோன்றின விடிவெள்ளிதான் தமிழக ஆதரவு.

அது விடிவெள்ளியா இல்லை தோன்றிமறையும் வால் வெள்ளியா என்று இன்னும் உறுதியா தெரியேல்லை! அதுவரை எங்கள் மக்களுக்காக ஒன்றுபடுவோம்

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் கப்பலுக்கு சேதம் இல்லை புலிகள் அறிவிப்பு தவறு என நிறுபிக்க சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சிலரை கூட்டிக்கொண்டுப்போய் காண்பித்திருக்கலாம். அல்லது அந்த மூழ்கியதாக சொல்லப்பட்ட கப்பலிலிருந்தே படம் எடுத்துக் காட்டியிருக்கலாம். தேதியைக் குறிப்பிட்டு வன்னி களநிலை என படம் காட்டுபவர்கள், புலிகளின் தாக்குதல் தோல்வி என பத்திரிக்கையாளர்கள் மூலம் உலகுக்கு காட்டியிருக்கலாமே? புலிகள் இதுவரை பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நான் செய்திகள் படித்ததில்லை. அவர்கள் மீதே நடத்தப்படும் பொய்பிரச்சாரங்களுக்கும் பதில் சொன்னதில்லை. இதில் சிங்களவன் காட்டும் படத்தை பார்த்து புலிகளின் தாக்குதலை கொச்சைப்படுத்துவது புத்திசாலித்தனமா? அல்லது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மில் பலர் நடுநிலைமை என்ற கோட்பாட்டில் தாங்கள் ஈழத்தமிழன் என்பதை மறந்துவிடுகின்றார்கள்.

நடுநிலமைவாதிகளே உங்களுக்கு அன்பான ஒரு வேண்டுகோள்

உங்கள் இனத்துக்காக உங்கள் சகோதரர்கள் ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்கின்றார்கள் எங்களால் ஆயுதமேந்தித்தான் போராடமுடியவில்லை ஆனால் நடுநிலைமைவாதி என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றாமல் ஒருபக்கசார்பாக அதாவது உங்கள் இனத்துக்கு சார்பாக இருக்கலாமே.எத்தனையோ உறவுகள் நீங்கள் தரும் நம்பிக்கையில் தான் இன்று களத்தில் நிற்கின்றார்கள் அவர்கள் நம்பிக்கையை சிதைக்கவேண்டாமே? இந்த போராட்டம் உங்களுக்கானது உங்கள் விடுதலைக்கானது இந்த போராட்டத்துக்கும் போராடுபவர்களுக்கும் உரமூட்டுபவர்களாகவும் அவர்களுக்கு நம்பிக்கை தருபவர்களாகவும் மட்டுமே நாம் இருக்க வேண்டும்.நீங்கள் நடுநிலமைவாதிகளாக இருந்து எதையுமே சாதிக்கபோவதில்லை ஆனால் இந்த போராட்டத்தோடு இணைந்திருந்தீர்கள் என்றால் நாளைய வரலாற்றில் உங்கள் பெயரும் இணைக்கப்படும்.

கப்பலுக்கு என்ன நடந்தது என்பதை புலிகளின் குரலில் 22-10-2008 ஒலிபரப்பிய செய்திவீச்சில் சொல்லபட்டிருக்கின்றது.அதை செவிமடுக்கலாமே?

இந்த ருகுணு கப்பலில 94ம் ஆண்டு நானும் பயணித்திருகிறேன்.அப்போது செஞ்சுலுவை சங்க பணியாளர்களின் வழித்துணையோடு செஞ்சுலுவை சங்க கோடியுடனே கப்பல் பயணிக்கும் இதுவே போர்காலத்தில் நடக்கும் வழமை.

ருகுணு கப்பலில் சிவிலியன்களுக்கு உனவு போனது என்றால் கப்பலில் இருந்த செஞ்சுலுவை சங்க அதிகாரிகள் எங்கே செஞ்சுலுவை கொடி எங்கே.???

நடுநிலைவாதி என கோவணத்தை உருவி தலையில் கட்டிகொண்டு வாந்தி எடுப்பவர்களே,வாந்தி எடுக்க வேறு களத்துக்கு போய் வடிவாய் எடுங்கோ யாழ்களத்தில் வேண்டாம் இந்த காலகட்டத்தில் பலரும் பார்கும் இணையம் யாழ்.என்பதை நினைவூட்டுகின்ரேன்.உங்களை சந்தர்பவதிகளாகத்தான் எம்மால் பார்க்க முடிகின்ரது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி,

புலிவாலை பிடித்தாகிவிட்டது, இனி அதை விட முடியாது! அதை விட்டால் அது முதலில் எங்கள் மேல்தான் பாய்ந்து குதறும்!

எனவே முடியுமானவரை ஒன்றாக வடம் (வால்) பிடிப்போம்! முடியாவிட்டால் கிழே போட்டுவிட்டு ஓடித்தப்புவோம்!

இந்த தாக்குதல்களை பற்றிக் கதைப்பது, குருடன் யானையை தடவிப்பார்த்து அறிந்து கொண்டமாதிரித்தான்!

உண்மை தெரிந்த ஆட்கள், இரண்டே பேர்தான், ஒன்று இராணுவம், மற்றது புலிகள். இருவருமே உண்மைகைளை வெளியால சொல்லப்போவதில்லை. ஒன்றில் பொய் சொல்வார்கள் அல்லது எதுவுமே சொல்லமாட்டார்கள்.

சரி ஏன் அவர்கள் இப்படி செய்கிறார்கள்?

விஜய் படம் பார்க்க என்று ஒரு கூட்டம் இருக்குது.... அதுக்கு கமலின்டை அன்பே சிவம் போட்டால் தொலைக்காட்சி அலைவரிசையை கிரிக்கட் போட்டிக்கு மாத்திப்போடுங்கள்!

நாட்டுநடப்பிற்கு குருவிப்பட வியாக்கியானங்கள் குடுக்கிற கூட்டங்கள் அதையே தொடர்ந்து செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் இருக்கிற இடம் அப்பிடி!

அவர்கள் அப்பிடிக் கட்டின மண்கோட்டை மகிந்தவின்டை காட்டு வெள்ளத்தில படிப்படியா கரைஞ்சு போகேக்கை தோன்றின விடிவெள்ளிதான் தமிழக ஆதரவு.

அது விடிவெள்ளியா இல்லை தோன்றிமறையும் வால் வெள்ளியா என்று இன்னும் உறுதியா தெரியேல்லை! அதுவரை எங்கள் மக்களுக்காக ஒன்றுபடுவோம்

சாணக்கியன்! நண்பரே நீங்கள் நோக்கி சொல்லுகின்ற கூட்டம் புலிகளால் வளங்கப்படும் செய்திகளில் ஒரு வீதமும் அவநம்பிக்கை கொள்பவர்கள் அல்ல என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கின்ற போதும், ஏன் அதை தகர்க்க வேண்டும் என்று துடியாத்துடிக்கின்றீர்கள். உங்கள் அறிவுக்கூர்மை பாராட்டப்படுவதற்க்கா? இல்லை உண்மை நிலவரத்தை மக்கள் அறிய வேண்டும் என்ற துடிப்பா? இல்லை சிங்கள ஊடகத்தில் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையா?

சிங்கள மக்களுக்கு போர்நிலவரத்தின் எத்தனை வீத உண்மையான தகவல்கள் தெரியும் என்று கவலைப் பட்டிருக்கின்றீகளா?

அரச ஊடகங்களின் தகவல்கள்தான் தமிழ்மக்களையும் மிக இலகுவாக சேருகின்றது அதில் நூறில் ஒரு பங்கு ஊடகவலு இல்லாத புலிகளின் தகவல்களைத்தான் மக்கள் நம்புகின்றார்கள். இந்த நிலமைக்கு அடிப்படைக் காரணம் என்ன?

நீங்கள் வேறு புலிகள் செய்திகளை இருட்டடிப்புச் செய்கின்றார்கள் என்று அழுகின்றீர்கள்.

உண்மையில் உங்கள் தொழில் விசுவாசத்தின் நிமித்தம் ஒரு அப்பாவியாகவே தோன்றுகின்றீர்கள்.

இந்த ருகுணு கப்பலில 94ம் ஆண்டு நானும் பயணித்திருகிறேன்.அப்போது செஞ்சுலுவை சங்க பணியாளர்களின் வழித்துணையோடு செஞ்சுலுவை சங்க கோடியுடனே கப்பல் பயணிக்கும் இதுவே போர்காலத்தில் நடக்கும் வழமை.

ருகுணு கப்பலில் சிவிலியன்களுக்கு உனவு போனது என்றால் கப்பலில் இருந்த செஞ்சுலுவை சங்க அதிகாரிகள் எங்கே செஞ்சுலுவை கொடி எங்கே.???

கப்பலின் பின் பகுதியில் ஒரு 50 கலிபர் பொருத்தப்பட்டிருப்பதை அரச வீடியோவில் காணலாம். தமிழ் பொதுமக்களுக்கு உணவு எடுத்துச்செல்லும் கப்பலுக்கு எதற்கு 50 கலிபர் ?

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறைத் துறைமுகத்தில் இராணுவத்தினருக்குச் சொந்தமான இரு வழங்கல் கப்பல்கள் புலிகளால் தாக்கியளிப்பு

[22 ஒக்டோபர் 2008, புதன்கிழமை 9:50 மு.ப இலங்கை]

வடக்கே, யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்ற இரு கப்பல்கள் மீது நேற்று அதிகாலை 5.10 மணியளவில் கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் மேக்ஸ் றுகுணு என்ற கப்பல் முற்றாக மூழ்கடிக்கப்பட்டது. எம்.வி.நிமலவல என்ற மற்றைய கப்பல் கடுமையாகச் சேதமடைந்தது.

யாழ். குடாநாட்டில் உள்ள படையினருக்கு ஆயுதங்கள் உட்படப் பிரதான வழங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த கப்பலே தமது விசேட கடற்புலிக் கொமாண்டோக்களால் மூழ்கடிக்கப்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.

பொதுமக்களின் உணவு விநியோகத்துக்கெனக் கூறிக்கொண்டு படையினரின் வழங்கல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் புலிகள் தெரிவித்தனர்.

இந்தக் கரும்புலித்தாக்குதலில் கடற்புலிகளின் மகளிர் பிரிவு துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் இலக்கியா, மற்றும் கடற்புலிகளின் கொமாண்டோ லெப்டினன்ட் கேணல் குபேரன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர் என்றும் விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, காங்கேசன் துறைத் துறைமுகத்தில் தனியார் மற்றும் லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கான 3800 மெற்றிக்தொன் சீமெந்தை ஏற்றிக்கொண்டு வந்து தரித்து நின்ற றுகுணு கப்பலையே புலிகள் தாக்கி மூழ்கடித்தனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். இந்தக்கப்பல் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்தது என்றும் கடற்படையினர் கூறினர்.

"தனியாருக்குச் சொந்தமான பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்திருந்த நிமலவல என்ற மற்றொரு கப்பல் கடற்புலிகளின் தாக்குதலில் சிக்கி பலத்த சேதமடைந்தது. எனினும், அந்தக்கப்பல் மூழ்கவில்லை. அதிலிருந்து பொருட்கள் வேறு கப்பலுக்கு மாற்றப்பட்டுக்கொண்டிருக்கி

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறையில் தாக்கப்பட்ட கப்பலின் அடியில் இராணுவத்தினருக்கான ஆயுதங்கள்

திகதி: 23.10.2008 // தமிழீழம் // [சங்கிலியன்]

'றுகுணு' கப்பல் உட்பட இரு கப்பல்கள் காங்கேசன்துறை கடற்படை தளத்தில் வைத்து நேற்று கடற்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. றுகுணு கப்பல்மூலம் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஊடாக யாழ் குடாநாட்டிற்கு உணவுப்பொருட்கள் அனுப்புவதாக வெளியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டவாறு படைக்கல நகர்த்தல்களுக்கும் படையினருக்கான உணவுப்பொருட்களை ஏற்றியிறக்குவதற்கும் இக்கப்பலை படையினர் பயன்படுத்திவந்தனர்.

கடற்புலிகளால் இக்கப்பல் தாக்கியழிக்கப்பட்டபோது இக்கப்பலின் கீழ்தட்டில் படையினருக்கான ஒருதொகுதி ஆயுதங்களும் சீருடைகளும் களமுனைக்குத்தேவையான அவசிய உணவுப்பொதிகளும் இருந்ததாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சரியாக 7.10 மணியளவில் கடற்புலிகள் இக்கப்பல்கள் மீதான தாக்குதலைமேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே பருத்தித்துறைமுகத்தில் சிறிலங்காப் படையினரது கப்பல் மீது கடற்புலிகள் தாக்குதலை நடத்தியதையடுத்து அத்துறைமுகம் செயலிளந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடற்புலிகளின் காங்கேசன்துறை கடற்படைத்தளம் மீதான தாக்குதலையடுத்து வடமராட்சி மணற்காடு கடற்படைத் தளத்தில் புதிய ராடர் கருவி பொருத்தப்பட்டு கடல்கண்காணிப்பை படையினர் விரிவாக்கி உள்ளனர். ஏற்கனவே குடத்தனை கொட்டோடைப் பகுதியில் ராடர் கருவி பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடற்புலிகளின் தாக்குதலையடுத்து கடற்கண்காணிப்பையும் கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

sankathi.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.