Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா கடைசியில 'சப்' எண்டு போச்சே...... :D:D

  • Replies 163
  • Views 23.2k
  • Created
  • Last Reply

மாற்றங்களுக்கு நாங்களும் ஒத்துழைக்கின்றோம் :D

பி.கு:டக்கு, என்ன இங்கு படமா ஓடுது? கிகிக்கிகிகி

மொகன் அண்ணா நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் ஐயா!

நீங்கள் எடுக்கும் இந்த முடிவு நான் சில வருடங்களாக எதிர்பார்த்ததுதான்.

இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் எடுத்த இந்த முடிவு பல பாரதூரமான விளைவுகளை புலம்பெயர் மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும்.

நீங்கள் எதிர்பார்த்தவை இங்கே உருவாகாமை என்னவோ உண்மைதான். அதை உருவாக்க வேண்டிய என்னைப்போன்றவர்களும் தவறிவிட்டோம். மன்னிக்கவும்.

அதற்காக இணையதளத்தை முற்றுமுழுதாக மூடிவிடாதீர்கள்.அது நீங்கள் எம் வருங்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம்.

தயவு செய்து தொடர்ந்து நடத்துங்கள்.

எனதருமை யாழ்கள சகோதர சகோதரிகளே!

நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டு நல்ல கருத்துக்களை எழுதுங்கள்.நல்ல ஆக்கங்களை படையுங்கள்.வேண்டாவிவாதங்களை தவிருங்கள்.நல்லதையே செய்யுங்கள்.

நான் யாழில் நீண்டகாலமாக பார்வையாளனாகவே இருந்தேன். மீண்டும் பார்வையாளனாகவே இருக்கவிரும்புகின்றேன்.

இன்றிலிருந்து எனதருமை யாழ்களத்தில் கருத்தெழுதுவதை நிறுத்திக்கொள்கின்றேன்.

இதை கண்ணீர்மல்க தெரிவிக்கின்றேன்.

எனதருமை உறவுகளே எப்போதாவது அல்லது எங்கேயாவது உங்களை நான் நேரடியாக சந்தித்தால் அது நான் செய்த புண்ணியம்

இப்படிக்கு

குமாரசாமி

குசா.. பந்தி பந்தியா எழுதினாத்தான்.. கட்டுரை.. சிறந்த படைப்பு என்பதல்ல அர்த்தம். இரண்டு வரிக்குறளுக்குள்ளும் 4 வரி நாலடியாருக்குள்ளும் அடங்கியுள்ளவை.. பந்தி பந்தியா பெரிய படிப்பு படிச்சவை எழுதிய பலவற்றுள் தேடியும் கிடைக்காது.

அந்த வகையில்.. உங்களின் பல கருத்துக்கள் சமூகத்துக்கு இரத்தனச் சுருக்கமாக அமைந்து செய்திகளையும் தந்திருக்கின்றன.

எதிர்காலத்தில் களம் இன்னும் பட்டை தீட்டப்படும் போது.. உங்களின் கருத்துக்களும் இன்னும் இன்னும் பிரகாசிக்கும். எனவே ஒதுங்குவது என்ற உங்கள் முடிவை மாற்றிக் கொண்டு எம் போன்ற உங்களின் கருத்துக்களில் சமூகத்தின் ஒரு செய்தியைக் காண்பவர்களுக்காக எழுத வேண்டும். வாருங்கள்..! எழுதுங்கள். :icon_mrgreen:

ச்சா கடைசியில 'சப்' எண்டு போச்சே...... :(:icon_mrgreen:

போனதடவை மோகன் அண்ணை கூப்பிடும் போது சோமாலியாவிலை போய் ஒளிந்து கொள்ளும் போதே நினைத்தேன்.. உங்களுக்கு இப்பிடி ஒரு உயர்ந்த உள்ளம் இருக்கு எண்டு...

நாங்கள் ஒரு கருத்து களம் துறப்பம் எண்டு என்னை நீங்கள் கேட்டது என்ன மாதிரி போகுது....?? :o

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன்.பாரபட்சமில்லாமல் கொஞ்சம் கடுமையாக இருக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு களத்திலும், தனிமடல், மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் messenger மூலம் கருத்துப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

கருத்துக்களத்தில் நான் செலவு செய்யும் நேரம் மிக அதிகம் அத்துடன் பணம். இவ்வளவு நேரம், பணம் செலவு செய்து எந்தளவுக்கு பயன் எனப் பார்த்தால் அதன் அளவு மிகவும் குறைவு. ஒரு குறிப்பிட்ட அளவு பயனான கருத்துக்களைத் தவிர அதிகமாக தூரநோக்கற்றதும், அரட்டையானதுமான கருத்துக்கள், அவைகளை மட்டுறுத்த வேண்டிய தேவைகள் போன்ற சூழலினாலேயே களத்தினை தொடர்ந்து நடாத்துவதா, விடுவதா என்ற ஒரு மனப் போரட்டம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நேற்று "யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?" என தெரிவித்திருந்தேன். எனினும் அனைவரினதும் வேண்டுகேளுக்கிணங்க நிச்சயம் சில மாற்றங்களுடன் களம் தொடர்ந்து இயங்கும்.

மோகன் அண்ணா , பலரின் வேண்டுகோளுக்கு இணங்க , உங்கள் முடிவை மாற்றிக் கொண்டமைக்கு மிக்க நன்றி .

நான் யாழில் நீண்டகாலமாக பார்வையாளனாகவே இருந்தேன். மீண்டும் பார்வையாளனாகவே இருக்கவிரும்புகின்றேன்.

இன்றிலிருந்து எனதருமை யாழ்களத்தில் கருத்தெழுதுவதை நிறுத்திக்கொள்கின்றேன்.

இதை கண்ணீர்மல்க தெரிவிக்கின்றேன்.

எனதருமை உறவுகளே எப்போதாவது அல்லது எங்கேயாவது உங்களை நான் நேரடியாக சந்தித்தால் அது நான் செய்த புண்ணியம்

இப்படிக்கு

குமாரசாமி

சரி மோகன் அண்ணா, யாழை தொடர்ந்து நடாத்துவதில் பிரச்சனையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து வையுங்கள். உங்களின் சகோதரன் போல கேட்கிறேன். ஏனெனில் இத்தளம் பல தமிழ் நாட்டு நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது மட்டுமல்லாமல் அவர்களின் பங்களிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நன்றி வேலவன் போன்ற சகோதரர்களுக்கு.

மோகன் அண்ணா 10 வருடங்கள் உங்களின் பின்னால் பல இன்ப துன்பங்களிலும் பங்காற்றிய அக்காவுக்கு நன்றிகள் பல சொல்லி விடை பெறுகிறேன்.

நான் யாழ் களத்தில் யாருடனும் சண்டை போடவிரும்மவில்லை அதனால் எனது கருத்துக்கள் எல்லோரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்க்காக எழுதப்படுவது

அதனால் என்னருமை முகம் தெரியாத சகோதரர்களிடம் இருந்து கண்ணீர் மல்க விடை பெற்றுக்கொள்கின்றேன் நன்றி

உங்கள் ஆக்கங்களை படையுங்கள் நான் வாசகனாக :icon_mrgreen::o:(

குமாரசாமியண்ணை , நுணாவிலான் , முனிவர் நீங்களும் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளும் படி அன்பாக வேண்டுகின்றேன் .

இவ்வளவு பழகிவிட்டு எல்லோரும் ஒரு நாளில் , எங்களை உதறிவிட்டுப் போவது வேதனையாக உள்ளது . வாருங்கள் நண்பர்களே .

என்னப்பா இப்படி ஒவ்வொருவராக குண்டை தூக்கி போடுறியள்? இப்படி இவ்வொருவராக விலகினால்.......?? :o:( :(

தயவுசெய்து உங்கள் முடிவை மாற்றுவீர்களா?

(நுணாவிலான் மீண்டும் கருத்து எழுத தொடங்கியுள்ளமை சந்தோஷமான விஷயம். நன்றி) :icon_mrgreen:

சக உறவுகள் கவனித்தீர்களோ தெரியாது. குமாரசாமி அண்ணையும், முனிவரும் இனிமேல் கருத்து எழுதமாட்டார்களாம். வெறுமனே பார்வையாளராக மட்டும் இருப்பார்களாம். இப்படி ஒவ்வொருவராக விலகினால்.....?? உறவுகளே தயவுசெய்து உங்கள் முடிவை மாற்றுவீர்களா?

(நுணாவிலான் மீண்டும் கருத்து எழுத தொடங்கியுள்ளமை சந்தோஷமான விஷயம். நன்றி)

அனைவருக்கும் வணக்கம்,

யாழ்கள உரிமையாளர் திரு. மோகன் அவர்கள் யாழ்களத்தின் எதிர்நோக்கு + செயற்பாடு (Vision & Mission ) குறித்து கருத்தாளர்களின் கருத்துகளை வெளிப்படையாக கோரியமை மகிழ்ச்சியை தருகின்றது.

இது போன்ற பல முயற்சிகளை முரளி (மாப்பிள்ளை) மற்றும் பலர் முன்பு முன்னெடுத்தமை நினைவு கூரத்தக்கது!

நாரதர் அவர்களின் ஆலோசனைகளில் (1), (2) என்பவற்றை நானும் ஆதரிக்கிறேன்.

யாழ்களத்தின் நிறுவாகம்:

1) தமிழ்தேசியம் என்ன என்பதை சரியாக இனங்கண்டு,

2) மக்களின் உண்மையான உணர்வுகளை பிரதிபலித்து,

3) அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டி தமிழ்தேசியத்தை வலிமையூட்டி

மக்கள் அனைவரும் நீண்டகால அவலங்கள் யாவும் விரைவில் நீங்கி நல்வாழ்வு வாழ உதவிடவேண்டுகிறேன்!

அன்புடன்,

சாணக்கியன்.

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா.. முனிவர்.. மோகன் அண்ணாவின் முன்னைய நிலைப்பாட்டுக்கு நீங்கள் மட்டுமல்ல காரணம். இங்குள்ள அனைவரும் காரணமே. அதற்காக நீங்கள் எல்லாம் கருத்தெழுதாமல் ஒதுங்கிக் கொள்வது.. யாழை விட்டு நீங்களும்.. யாழும் தனிமைப்பட்டுப் போவது போன்றது.

கு.சா அண்ணா நேசக்கரத்தினூடு உசாராக செயற்பட்ட ஒருவர்.

யாழ் களம் சாதித்ததில் நேசக்கரமும் முக்கியமானது எனலாம். செய்ய முடியாது என்பதை எமது யாழ் உறவுகள் செய்து காட்டினர். பல்வேறு விடயங்களில் எதிர்கருத்துக் கொண்டிருந்தவர்கள் கூட அங்கு ஓரணியில் நின்று.. தாய் மண்ணுக்காக உண்மையான யாழ் களத்தின் உறவுநிலையை பிரதிபலித்து நின்றனர். கருத்தாடல் என்பது வேறு.. கருத்துக்கள உறவுநிலை என்பது அதையும் கடந்தது என்பதை சொல்லி நின்றனர். அதில் கு.சா அண்ணா, முனிவர் போன்றவர்கள் அளித்த உற்சாகம்.. முக்கியமானது.

நிச்சயமாக வெறும் ஆராய்ச்சிக் கட்டுரைகளால்.. நீண்ட பந்தி விளக்கங்களால்.. ஒரு களத்தை இத்தனை வெற்றிகரமாக இயக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. சமூகத்தில் மக்களின் தகவல், கருத்துத் தேவை மட்டங்களை சரியாக இனங்கண்டு.. தேவையான வடிவங்களுக்கு குறுகிய நேரச் செலவழிப்புக்குள் கூடிய தகவலை காத்திரமாகச் சொல்லக் கூடிய வகைக்கு யாழ் களம் பல்தேர்வுக்குரிய அம்சங்களையும் உள்ளடக்கி இருப்பது அவசியம். அவ்வம்சங்கள் காத்திரமான வீச்செல்லையைக் கொண்டிருப்பது என்பது கருத்தாளர்களின் பங்களிப்பின் தன்மையிலேயே தங்கி இருக்கிறது.

அதேவேளை வீணான வார்த்தைப் பிரயோகங்களை.. மட்டம் தட்டல்களை.. மக்களை.. கருத்தாளர்களை தரக்குறைவாக எடைபோடுவதை..போராட்ட விரோத சிந்தனைகளை இங்கு அனுமதிப்பதை ஒற்றுமையோடு எல்லோரும் தவிர்க்க முன் வர வேண்டும்.

யாரும்.. யாழில் 100% குற்றவாளிகளும் இல்லை சுத்தவாளிகளும் இல்லை. எனவே ஒரு சிலர் மட்டும் தங்களுக்கு தாங்களே தீர்ப்பு வழங்கி யாழை விட்டு ஒதுங்குவது வருந்தத்தக்க நிகழ்வு. எனவே நீங்கள் எல்லோரும் உங்களை மெருகூட்டி.. யாழையும் மெருகூட்ட தொடர்ந்து எழுதனும். எழுதாமல் இருப்பவர்கள்.. பல்வேறு கட்டங்களிலும் பல்வேறு காரணங்களாலும் ஒதுங்கிக் கொண்டவர்கள் காத்திரமான பங்களிப்புக்களோடு யாழில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே எம் எல்லோரினதும் அவா. :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா நன்றி உங்களின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது :icon_mrgreen: .

இரண்டு நாள் லீவில போய் வந்தால் என்னவோ நடந்து : ஏதோ முடிவாகியிருக்கு? நல்ல காலம். நான் வரும் வரையும் யாழை மூடாமல் இருந்ததுக்கு.....தொடர்வதில் மகிழ்ச்சி. :icon_mrgreen: தொடரவேணும்

கு.சா, முனிவர் இருவரும் நலம் தானே!!

நீங்கள் இருவரும் எதற்காக அவசரப்பட்டு வெளியேற வேண்டும்? மோகனே மனம் மாறி களத்தை தொடர்ந்து நடத்துவதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் நீங்களிருவரும் உங்கள் கருத்துக்களால் தொடர்ந்தும் இணைந்திருப்பதே முறையானது. ஒரு நல்ல நட்பானது தனது நண்பனின் இக்கட்டான சூழ்நிலையில் அவனுடன் இணைந்திருந்து கைகொடுத்து காப்பாற்றுவதே. எனவே நீங்கள் இருவரும் யாழ் களத்தின் நல்ல நண்பர்கள் இல்லையா?? தயவுசெய்து தொடர்ந்து இணைந்திருங்கள்.

கு சு சாமி க்கு தெரியும் மாங்குளமும் போக போகிறது இப்பவே மெல்ல கழண்டு விடுவாம் என்று ஆல் எஸ்கேப்.......

  • கருத்துக்கள உறவுகள்

திரு. மோகனுக்கு கோடி நன்றிகள்.உங்கள் இந்த முடிவு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

-------------------------------------------------------------------------------------------------------

என்ன கு.சா மற்றும் முனி குழந்தைப்பிள்ளைகள் மாதிரி கோவிந்நுக்கொன்டு.தயவு உங்கள் முடிவை மாற்றிக்கொன்டு வந்து இந்தச்சந்தோசத்தில் பங்கு கொள்ளுங்கோ.(நுனா மீன்டும் வந்தது மகிழ்ச்சி.)

யாழ் களத்தில் கருத்துக்கள் எழுதுவது மிக குறைவாகினும், தொடர்ந்து வாசகியாகவே இருந்து வந்திருக்கிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது பத்து தடவைகளாவது யாழுக்கு வராமல் இருக்க மாட்டேன் அப்படியிருக்கும் போது மோகன் அண்ணா இப்படி சொன்னது ரொம்பவே மனவருத்தமாக போய்விட்டது. மோகன் அண்ணா உங்கள் முடிவை மாற்றியதற்க்கு ரொம்ப நன்றி.

குமாரசாமி அங்கிள் மற்றும் முனிவர் நீங்கள் தொடர்ந்து கருத்துகளை எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் விரும்பிப்படிக்கும் கருத்துக்களில் கு.சா அங்கிளின் கருதுக்களும் ஒன்று . தயவு செய்து இருவரும் வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் நன்றி மிகவும் நன்றி மோகன்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு களத்திலும், தனிமடல், மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் messenger மூலம் கருத்துப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

கருத்துக்களத்தில் நான் செலவு செய்யும் நேரம் மிக அதிகம் அத்துடன் பணம். இவ்வளவு நேரம், பணம் செலவு செய்து எந்தளவுக்கு பயன் எனப் பார்த்தால் அதன் அளவு மிகவும் குறைவு. ஒரு குறிப்பிட்ட அளவு பயனான கருத்துக்களைத் தவிர அதிகமாக தூரநோக்கற்றதும், அரட்டையானதுமான கருத்துக்கள், அவைகளை மட்டுறுத்த வேண்டிய தேவைகள் போன்ற சூழலினாலேயே களத்தினை தொடர்ந்து நடாத்துவதா, விடுவதா என்ற ஒரு மனப் போரட்டம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நேற்று "யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?" என தெரிவித்திருந்தேன். எனினும் அனைவரினதும் வேண்டுகேளுக்கிணங்க நிச்சயம் சில மாற்றங்களுடன் களம் தொடர்ந்து இயங்கும்.

கருத்துக்களத்தில் உடனடியாக இல்லாதுவிடினும் படிப்படியாக நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு வழி செய்யப்படும். அம் மாற்றங்களை ஏற்படுத்தவும் சிறிது கால அவகாசம் தேவைபடுகின்றது. அதற்கு உங்கள் ஆலோசனைகளை தாராளமாக இங்கோ, அல்லது தனிமடல் மூலமாகவே அறியத் தாருங்கள்.

இங்கு களத்தில் யாரையும் கருத்துக்கள் எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு விடயம் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள், கருத்துக்கள் இருக்கும். கருத்துக்களை எழுதுங்கள். அவற்றை ஆரோக்கியமாக, எழுத்து நாகரீகத்திற்கு உட்பட்டு எழுதுங்கள். நிச்சயமாக அவை வரவேற்கப்படும்.

உங்கள் ஒத்துழைப்புத்தான் சரியான முறையில் களத்தினைக் கொண்டு நடாத்த உதவும். ஒருவர் தவறாகக் கருத்தெழுதினால் அதை நிர்வாகத்திற்கு சுட்டிக் காட்டுங்கள். முன்னர் குறிப்பிட்டது போல தொடர்ச்சியாக களத்தில் மட்டுறுத்துனர் யாரும் இருப்பதில்லை. அதனால் தவறான கருத்து நீக்கப்படுவதற்கு காலதாமதமாகலாம். அதற்கான சந்தர்ப்பத்தினையும் நிர்வாகத்திற்கு வழங்குங்கள்.

நன்றி

உங்களுடைய கருத்தை நான் வரவேற்கின்றேன் மொகன் அண்ணா

Edited by puspaviji

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒரு கருத்து களம் துறப்பம் எண்டு என்னை நீங்கள் கேட்டது என்ன மாதிரி போகுது....?? :o

Facebook மாதிரி social networking site ஆக ஒன்றை உருவாக்கி குட்டன்களையும், குட்டிகளையும் சாய்த்துக் கொண்டு போவதற்கு வழி பார்க்கின்றீர்களா?

Facebook மாதிரி social networking site ஆக ஒன்றை உருவாக்கி குட்டன்களையும், குட்டிகளையும் சாய்த்துக் கொண்டு போவதற்கு வழி பார்க்கின்றீர்களா?

அப்படி ஏதும் என்றால் என்னையும் கூட்டனிக்கு அழையுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

:o மோகன் அண்ணா

தயவு செய்து தளத்தை நிப்பாட்ட வேன்டாம்..

:( மோகன் அண்ணா

தயவு செய்து தளத்தை நிப்பாட்ட வேன்டாம்..

:oஅட ஒரு கருத்தை எழுதுவதற்கு முன்னர் ஏற்கனவே எழுதிய கருத்துக்களை வாசிப்பதில்லையா?? :)

  • கருத்துக்கள உறவுகள்

:oஅட ஒரு கருத்தை எழுதுவதற்கு முன்னர் ஏற்கனவே எழுதிய கருத்துக்களை வாசிப்பதில்லையா?? :)

வசப்பு அண்ணா நான் மோகன் அண்ணா எழுதினதை தான் பாத்தேன்

கடைக்கு போக்க வேன்டி இறுந்திச்சு அது தான் அவர் எழுதினதை மட்டும் வாசிச்செசு பதில் எழுதினேன் :(

மண்னிக்கவும்.. சரி எல்லாத்தையும் வாசிக்கிரென் :( cool

Edited by kuddipaiyan26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.