Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாங்குளம், குமுளமுனை ராணுவத்தினர் வசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவ ரீதியில் என்ன நடந்தாலும் அதைப்பற்றி நமக்கு என்ன விளங்கப் போகிறது? அவ்விடயங்களை அதற்கு உரியவர்களிடமே விட்டுவிட்டு அங்களாலான பணிகளை இங்கிருந்து மேற்கொள்வோம்.

ஏற்கனவே ஒருமுறை சொன்னது போல இக்காலகட்டத்தில் சிங்களத் தளங்களிலும் கருத்தாடும்போது தாக்கங்கள் ஏற்படவே செய்யும். அதை மீறி மனதை ஒரு நிலையில் வைத்திருக்கும் பக்குவம் இல்லாவிட்டால் புலம்பல்கள் மட்டுமே மிஞ்சும். அந்த உறுதி இல்லாதவர்கள் அத்தகைய தளங்களை ஒதுக்குவது நல்லது.

  • Replies 50
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாமும் சாதாரன மனிதர்கள்தானே வெற்றியைக்கண்டால் குதிப்பதும், தோல்வியைக்கண்டால் சலிப்பதும் இயல்புதான் அதில் தப்பேதுமில்லை.

இருப்பினும் சிலவிடயங்களில் அதாவது சில சந்தர்ப்பங்களில் ஏற்படும் சில தோல்வியின்போது கடந்தகால, நடைமுறைச்சாத்தியமான அனுபவங்களை சிந்தித்துப்பார்க்க தவறிவிடுவதும் எமது அறிவின்மை அல்லது அறிவுக்குறைவு என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தயங்ககூடாது.

இன்று நாம் எல்லோரும் நிலத்தின் இழப்பைத்தான் பெரிதுபடுத்தி (சிங்களவன் உட்பட) கூத்தாடுகின்றோம்.

எமது மைந்தர்களைப்பொறுத்தவரை நிலத்தை மீட்பதும், போராடுவதும் கைதேர்ந்த கலை. இருப்பினும் எமது எதிரி தனது முழு வளத்தையும் பிரயோகித்து அரசியலில் எங்களைவிட பன்மடங்கு முன்னிலையில் நிற்கின்றான், அதை முறியடிப்பதுதான் இன்றைய எங்களது அவசியம்.

புலம்பெயர்ந்து வாழும் எங்களில் எத்தனைபேர் இந்த முயற்சியில் இறங்கியிருக்கின்றோம்? யாரினதும் மனதை புண்படுத்துவதற்காக இந்தகருத்தை நான் முன்வைக்கவில்லை இருப்பினும் தளத்தில் எமது மைந்தர்கள் தமது பொறுமையை கடைப்பிடித்து, எத்தனையோ உயிர்களையும் அர்பனித்து, நீங்கள் கூறுவதுபோல் மீட்ட மண்ணின் கணிசமானதையும் இழந்து சர்வதேசரீதியில் தாம் சுதந்திரபோராளிகள்தான் என்பதை செயல்முலம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்ற ஸ்ரீலங்காவின் பிரச்சாரத்தை நம்பிய(இந்தியா உட்பட) சர்வதேசநாடுகள் இன்றைய சந்தர்ப்பத்தில் செய்வதறியாது திணறுமளவிற்கு எமது மைந்தர்கள் அரசியலில் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

இருப்பினும் நான் நினைகின்றேன் இப்போது அவர்கள் அந்த பொறுமையின் எல்லையில் நிற்கின்றார்கள் என்று.

இருப்பினும் மாவிரர்நாள்வரை பொறுமையை கடைப்பிடிக்கவேண்டிய ஒரு அவசியமும் உள்ளது.

இதைவிட இன்னும் ஒருவிடயத்தையும் நாம் எதிர்பார்க்கலாம் அதாவது எதிரி இன்று எல்லா இடமும் அகல கால்வைத்துவிட்டான், இதுதான் அவன்செய்த பெரியதப்பும், விடுதலைப்புலிகளின் எதிர்பார்ப்பும்.

இறுதியாகவும், உறுதியாகவும் ஒன்றுமட்டும் புரிகிறது அதாவது சிங்களவன் தமிழனிடம் இனிமேல் வாங்கப்போவது சரித்திரம் படைக்கும் ஒரு இறுதியான மரண அடியாகத்தான் இருக்கும்.

அந்த அடியுடனும், வெடியுடனும் மலர இருக்கும் புதியஆண்டு, தமிழரின் விடிவு ஆண்டாக மலரும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

Edited by Valvai Mainthan

தமிழிழம் வேண்டுமென விரும்புவார்களும், தமிழ் தேசியப்போராட்டத்தை தீவிரமாக ஆதரிப்பவார்களும் தங்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்க விரும்பும் வரை தமிழிழப் போராட்டம் முடிவின்றி டர்ந்து செல்லும்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழிழம் மலரட்டும் என்று கூறி தீலிபன் அண்ணை வீரச்சாவடைந்து 21 வருடங்கள் கழிந்துவிட்டது. முழு மக்களும் திரளுவதற்கு முன் ஆக குறைந்தது இளைஞர் யுவதிகளாவது திரண்டு புலிகளின் வேண்டுகோளை நிறைவேற்றி இருந்தாலே தமிழிழம் மலர்ந்திருக்கும்.

எல்லோருக்கும் தமிழிழம் வேண்டும் எனபது ஆசை ஆனால் மற்றவர்கள் போராடி வெற்றி பெறட்டும் தங்கள் அதிலிருந்து கொண்டு சிங்களவனுக்கு முன் நெஞ்ச நிமிர்த்தி சவால் விட விரும்பினால் அவர்களின் தமிழிழ கனவு பலிப்பது இலகுவான காரியமல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலத்திற்குரிய இளைஞர்கள் எல்லோரும் தமது கடமையை செய்ய தவறுவதால் எமது போராட்டம் அடுத்த சந்ததியினருக்கு சுமத்தப்படுகிறது.

1995 இல் மண்டைதீவு தாக்குதல் மற்றும் புலிப்பாய்ச்சல் நடவடிக்கைக்குபின் விடுதலைப்புலிகளினால் ஒரு அறிக்கை விடப்பட்டது. அதில் தமக்கு இருந்த ஆளாணி பற்றாக்குறையால்தான் பாலலியில் இருந்தும் தீபகற்பத்தில் இருந்தும் சிங்கள இராணுவத்தை விரட்ட முடியவில்லை இதனால் பத்தாயிரம் புதிய போராளிகள் இருந்தால் யாழ்ப்பாணம் முழுமையாக மீட்க முடியும் எனவே போராட்டத்தில் இணைய வருமாரு அறிவிக்கப்பட்டது.

புலிகள் எதிர்பார்த்ததை விட மிக குறைவான புதியவார்களே போராட்டத்தில் இணைந்தவார்கள். இதனால் தம்மிடமிருந்த வளங்களை பாதுகாக்க பின்வாங்க வேண்டிய சூழ்நிலை புலிகளுக்கு உருவாகியது. அன்று யாழில் போராட்டத்தில் இணைக்கூடிய பருவத்தில் இருந்தும் இணையாத பலர் இன்று புலத்தில் வாழ்ந்து கொண்டு புலிகள் எல்லா இடத்தை விட்டு பின்வங்குகிறார்கள் என்று பிதறுவதில் என்ன பலன்.

95 ஆம் ஆண்டை விடுத்து 2000 ஆண்டுக்கு வருவோமானால் புலிகள் ஆனையிறவினை கைப்பற்றி யாழ்பாணத்தை கைப்பற்ற முயன்ற போது யாழ்பாணத்தில் பலர் எங்களுக்கு தெரியும் பொடியங்கள் விடமாட்டன்கள் எப்படியும் யாழ்பாணத்தை பிடித்துவிடுவார்கள் என்று கூறி கொண்டே புலிகள் வந்தால் தங்களுடைய பிள்ளைகளை இயக்கத்தில் சேர்த்து விடுவார்கள் என்ற பயத்தில கொழும்புக்கும் வெளி நாட்டுக்கும் அனுப்பியவார்கள்.

2002 இல் சமதான உடன்படிக்கைக்கு பின் யாழ்பாணத்திற்கு அரசியல் போராளிகள் வந்தார்கள். சமதான காலத்திலும் நாங்கள் வலுவாக இருக்க வேண்டும் அப்பதான் பிரச்சினை உருவாகும் போது வெற்றி பெற முடியும் என கூறி இயக்கத்தில் இணையுமாறு பரப்புரை செய்யப்பட்டது. போராட்டத்தில் பற்றுள்ளவார்கள் இணைந்தார்கள்.

பலர் இப்ப என்ன சண்டையில்ல தானே நாங்கள் சண்டை தொடங்கும் போது இணைகிறோம் என கூறிக் கொண்டு தாங்களை புலி ஆதரவளராக இராணுவத்திற்கு வெளிப்படையாக அடையாளம் கட்டினார். இராணுவமும் சண்டை வரட்டும் எல்லாம் கவனிக்கிறம் என்று கூறிக் கொண்டே எல்லோரையும் படம் பிடித்து வைத்தார்கள்.

மகிந்த ஆட்சிக்கு வந்து யாழ்பாணத்தில் புலி ஆதரவளர்களை இலக்கு வைத்த போது புலிகள் எல்லோரையும் வன்னிக்கு வருமாரு அழைத்தார்கள். சிலர் வன்னிக்கு சென்றார்கள். பலர் தமக்கு உயிர் ஆபத்து என்று தெரிந்தும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து உயிரை பலி கொடுத்துதான் மிச்சம். சண்டை தொடங்கும் போது இயக்கத்தில் இணைவதாக கூறிய பலர் வன்னிக்கு போகமால் கொழும்புக்கும் வெளி நாட்டுக்கும் சென்றுவிட்டார்கள்.

நான் இதை இங்கு கூறியது புலிகள் தாங்களுடைய ஆள்வலத்தை பெருக்கவும் பாதுகாக்கவும் எவ்வளவு சிக்கல் இருக்கு என்பதற்குதான். ஆனால் புலத்தில் இருந்து கொண்டு பலர் புலிகள் அடிக்கல்ல அடிக்கல்ல என்று விரத்தியடைய முடியாது.

போராட்டத்திற்கு பொருளதார உதவி அவசியம் ஆனால் அதைவிட முக்கியமானது ஆட்பலம். ஆட்பலத்தை சிதைக்க முடியாது. புலம் பெயர்ந்த மக்கள் நினைப்பது போல ஆமி முன்னேறும் இடம் எல்லாம் தொடர்ச்சியாக எதிர்சமர் புரிந்தல் புலிகள் பெரும் ஆள் இழப்பை சந்திக்க நேரிடும். அவ்வாறு ஒன்று நிகழ்ந்தால் புலத்தில் இருந்து எத்தனை பேர் போராட்டத்தில் இணைய தயார்?

புலத்தில் நடக்கும் பல விடயங்கள் எழுதலாம் ஆனால் ஒரு விடயத்தை மட்டும் இப்ப செல்லுகிறேன். தமிழ் தேசியம் என மேடையில் முழக்கமிடும் சிலரினதும் தம்மை தேசிய போராட்ட ஆதரவளாராக கண்பிக்கும் சிலரினதும் பிள்ளைகளுக்கு தமிழும் தெரியாது ஈழத்தில் என்ன நடக்கிறது என்றும் தெரியாது. இதை நினைக்க கவலையாக இருக்கு.

ஈழத்தில் புலிகள் பதுங்குவார்கள் தக்க தருணத்தில் பாய்வார்கள். புலத்தில் இருக்கும் நீங்கள் செய்ய வேண்டியது தமிழிழ்த்தை அரசியல் ரீதியாக வென்றெடுப்பது. புலிகள் பாயும் போது சர்வதேசம் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கமால் தடுப்பது உங்களின் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

நாமும் சாதாரன மனிதர்கள்தானே வெற்றியைக்கண்டால் குதிப்பதும், தோல்வியைக்கண்டால் சலிப்பதும் இயல்புதான் அதில் தப்பேதுமில்லை.

இருப்பினும் சிலவிடயங்களில் அதாவது சில சந்தர்ப்பங்களில் ஏற்படும் சில தோல்வியின்போது கடந்தகால, நடைமுறைச்சாத்தியமான அனுபவங்களை சிந்தித்துப்பார்க்க தவறிவிடுவதும் எமது அறிவின்மை அல்லது அறிவுக்குறைவு என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தயங்ககூடாது.

இன்று நாம் எல்லோரும் நிலத்தின் இழப்பைத்தான் பெரிதுபடுத்தி (சிங்களவன் உட்பட) கூத்தாடுகின்றோம்.

எமது மைந்தர்களைப்பொறுத்தவரை நிலத்தை மீட்பதும், போராடுவதும் கைதேர்ந்த கலை. இருப்பினும் எமது எதிரி தனது முழு வளத்தையும் பிரயோகித்து அரசியலில் எங்களைவிட பன்மடங்கு முன்னிலையில் நிற்கின்றான், அதை முறியடிப்பதுதான் இன்றைய எங்களது அவசியம்.

புலம்பெயர்ந்து வாழும் எங்களில் எத்தனைபேர் இந்த முயற்சியில் இறங்கியிருக்கின்றோம்? யாரினதும் மனதை புண்படுத்துவதற்காக இந்தகருத்தை நான் முன்வைக்கவில்லை இருப்பினும் தளத்தில் எமது மைந்தர்கள் தமது பொறுமையை கடைப்பிடித்து, எத்தனையோ உயிர்களையும் அர்பனித்து, நீங்கள் கூறுவதுபோல் மீட்ட மண்ணின் கணிசமானதையும் இழந்து சர்வதேசரீதியில் தாம் சுதந்திரபோராளிகள்தான் என்பதை செயல்முலம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்ற ஸ்ரீலங்காவின் பிரச்சாரத்தை நம்பிய(இந்தியா உட்பட) சர்வதேசநாடுகள் இன்றைய சந்தர்ப்பத்தில் செய்வதறியாது திணறுமளவிற்கு எமது மைந்தர்கள் அரசியலில் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

இருப்பினும் நான் நினைகின்றேன் இப்போது அவர்கள் அந்த பொறுமையின் எல்லையில் நிற்கின்றார்கள் என்று.

இருப்பினும் மாவிரர்நாள்வரை பொறுமையை கடைப்பிடிக்கவேண்டிய ஒரு அவசியமும் உள்ளது.

இதைவிட இன்னும் ஒருவிடயத்தையும் நாம் எதிர்பார்க்கலாம் அதாவது எதிரி இன்று எல்லா இடமும் அகல கால்வைத்துவிட்டான், இதுதான் அவன்செய்த பெரியதப்பும், விடுதலைப்புலிகளின் எதிர்பார்ப்பும்.

இறுதியாகவும், உறுதியாகவும் ஒன்றுமட்டும் புரிகிறது அதாவது சிங்களவன் தமிழனிடம் இனிமேல் வாங்கப்போவது சரித்திரம் படைக்கும் ஒரு இறுதியான மரண அடியாகத்தான் இருக்கும்.

அந்த அடியுடனும், வெடியுடனும் மலர இருக்கும் புதியஆண்டு, தமிழரின் விடிவு ஆண்டாக மலரும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் எமது கருத்தும்

ஆனால் இதை நாம் எழுதினால்

போர்வெறியர்கள் என்றும்

இதை எழுத எமக்குத்தகுதியில்லையென்றும

என்னது மாங்குளத்தை பிடித்து விட்டார்களா? அப்போ இனி பூநேகரியையும் வெகு விரைவில் கைப்பற்றி விடுவான்கள் பூநகரி போனால் மல்லாவியை புலிகள் தொடர்ந்து வவத்து இருப்பது சாத்தியம் இல்லல...

என்னது மாங்குளத்தை பிடித்து விட்டார்களா? அப்போ இனி பூநேகரியையும் வெகு விரைவில் கைப்பற்றி விடுவான்கள் பூநகரி போனால் மல்லாவியை புலிகள் தொடர்ந்து வவத்து இருப்பது சாத்தியம் இல்லல...

என்னாலை முடியல.

என்னது மாங்குளத்தை பிடித்து விட்டார்களா? அப்போ இனி பூநேகரியையும் வெகு விரைவில் கைப்பற்றி விடுவான்கள் பூநகரி போனால் மல்லாவியை புலிகள் தொடர்ந்து வவத்து இருப்பது சாத்தியம் இல்லல...

என்ன ஒரு இராணுவ மேதை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நம்புங்கள் தமிழீழம் நாளை பிற்க்கும்.

என்னாலை முடியல.

என்னாலையும் தான் தாங்க முடியல மாங்குளம் பறி போனது..

இப்ப தமிழ்நாதத்திலும் ஆய்வுகள் வாறது இல்லை போல.

என்ன ஒரு இராணுவ மேதை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நம்புங்கள் தமிழீழம் நாளை பிற்க்கும்.

ஏன் அண்ணா அப்படி சொல்லுறிங்கள்? :o

Edited by வினித்

  • கருத்துக்கள உறவுகள்

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

வினித்துக் கண்ணா

கொஞ்சம் கொஞ்சம்

இன்னும் கொஞ்சக் காலம்

பொருத்திரு கண்ணா

விடுதலைப் புலிகள் எப்படியானவர்கள்

தலைவர் பிரபாரகன் எப்படியானவர்

என்பதை உலகம் மட்டுமல்ல

உங்களைப் போன்ற தமிழர்களும்

அறிந்து கொள்ளும் காலம் வெகு

தூரத்திலில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வினித் அண்ணை கன காலம் ஊரில இல்லைப் போல... :) நீங்க சொன்ன மல்லாவி, பூநகரி, மாங்குளம் எல்லாம் போட்டுது. :( மல்லாவி கை மாறி கன காலம்.... :o

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஆகக்குறைந்தது ஒரு சாதாரண தமிழனாகவேனும் இருக்க முயற்சிப்போமாக!

மல்லாவி போனால் அடம்பனை தக்கவைக்கிறது கடினம்.

புலிகள் என்ன செய்கிறார்கள்? இறுதி யுத்தம் எண்டு காசு வேண்டினார்கள். வெறும் சவுண்டு பாட்டியா போனார்கள் போல கிடக்கு....????

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இராணுவத்தை அதிகம் உள்ளுக்குள் விடமாட்டார்கள் என்று நம்பி யுத்த நிறுத்த காலத்தில் இருந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர்கள் தற்போது என்ன எழுதுவது என்று தெரியாமல் குழம்பியுள்ளனர். அவர்களை நீங்கள் மேலும் குழப்பலாமா?

தோல்வி என சொல்லுவதை நான் எதிர்கின்றேன் இது தோல்வி அல்ல ஒரு இராணுவ பின்னகர்வு அவ்வளவே .எங்கள் தலைவர் எலி அல்ல புலி

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியளா ஏனப்பா இப்படி பிடிவாதம் பிடிக்கின்றீங்க?

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வி என சொல்லுவதை நான் எதிர்கின்றேன் இது தோல்வி அல்ல ஒரு இராணுவ பின்னகர்வு அவ்வளவே .எங்கள் தலைவர் எலி அல்ல புலி

அப்படி போடு

இங்க தான் சிலதுவள் கோழி முட்டைய இட்டுட்டு கொக்கரிக்கும் அதே மாரி தான் சிலதுவள் ஒன்டும் புரியாம சும்மா கொக்கரிக்குதுவள் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: மல்லாவி எப்போது பறிபோனதென்று இங்கு கருத்து எழுதுபவர்கள் சொல்ல முடியுமா? பாலாவிதான் பறிபோனது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மல்லாவி ......? எல்லாம் போனது எண்டு சொல்லுறதில இருக்கிற ஆசையில மல்லாவியையும் ஒருத்தர் சேர்த்துப்போட்டார் என்று நினைக்கிறன். எல்லாம் ஒரு நப்பாசைதான் !?

மல்லாவியை ஆக்கிரமிச்சு மாதக்கணக்காகிவிட்டது

அங்கேதான் கிளிநொச்சிக்கு அடுத்ததாக பெரிய மருத்துவமனை இருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

:o மல்லாவி எப்போது பறிபோனதென்று இங்கு கருத்து எழுதுபவர்கள் சொல்ல முடியுமா? பாலாவிதான் பறிபோனது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மல்லாவி ......? எல்லாம் போனது எண்டு சொல்லுறதில இருக்கிற ஆசையில மல்லாவியையும் ஒருத்தர் சேர்த்துப்போட்டார் என்று நினைக்கிறன். எல்லாம் ஒரு நப்பாசைதான் !?

முதல்ல மல்லாவி எண்ட ஒரு ஊர் நாட்டில இருக்கோ..? இல்லை மோட்டுச் சிங்களவன் சும்மா எடுத்து விடுறானோ??!! :unsure::(:(

தொப்பிக்கல மாத்திரி டமிலர்கள் காதில கடுக்கனுக்கு பக்கத்தில இன்னொண்டு குத்திறாங்களோ? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கன ஊர் பறிபோனதில எது மிச்சம், எது மீதியெண்டு தெரியுதில்ல. குகன் சொன்னபிறகுதான் பாத்தன், மல்லாவி பிடிபட்டுக் கன காலம் போலதான் கிடக்கு.

அதுசரி கிளிநொச்சியும் , முல்லைத்தீவும் இப்ப ஆற்ற கைய்யில கிடக்கு ? எட, அதையாவது விட்டு வைய்யுங்கோ !

முதல்ல நல்ல வைத்தியரா பார்த்துவைக்கவும்

ஏனெனில் போறபோக்கில

கனபேருக்கு வைத்தியர் தேவைப்படுவார்போல கிடக்கு

எனக்கும் சேர்த்துத்தான்

அதால முந்துங்கோ

ஏனென்றால்

மல்லாவி எது

மடு எதுவென்று இப்பவே நீங்கள் குளம்பிறதால சொல்லுறன்

உங்களுக்கு முதலில் தேவைப்படுகிறது

எனக்கு என்னைப்போன்ற பலருக்கு

தலைவரின் மாவீர்உரையோட சரிவரணும்

இல்லையென்றால் நேர கட்டில்தான்????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.