Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Sir Arthur C Clarke உடனான எண்ணப் பகிர்வுகள்!

Featured Replies

புகழ்பெற்ற விஞ்ஞான புனைகதை ஆசிரியர் Sir Arthur C Clarke உடனான சில எண்ணப் பகிர்வுகள்!

IMG4930-1229380808.jpg

அனைவருக்கும் வணக்கம்,

இன்று/நாளை 16.12.2008 அன்று இந்த வருடம் மறைந்த உலகப்புகழ் பெற்ற விஞ்ஞான புனைகதை ஆசிரியர் மதிப்புக்குரிய Sir Arthur C Clarke அவர்களின் 91வது பிறந்தநாள். நான் சிறீ லங்காவில இருந்தபோது Sir Arthur C Clarke அவர்களுடன் வாழ்வியல், விஞ்ஞானம் சம்மந்தமாக எனது பல சிந்தனைகளை பகிர்ந்து இருந்தன்.

1997ம் ஆண்டில இருந்து ஒவ்வொருவருடமும் அவருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து அனுப்புவது. கடைசியாக சென்றவருடம் அவரது 90வது பிறந்ததினத்திற்கு ஒரு Teddy bearம் பூச்செண்டும் வாங்கி அனுப்பி இருந்தன். நன்றி கூறி பதில் அனுப்பி இருந்தார். அதுவே அவருடனான எனது கடைசி எண்ணப்பரிமாற்றம். 16.12.1917ம் ஆண்டு பிரித்தானியாவில பிறந்த Sir Clarke இந்தவருடம் 19.03.2008 அன்று அவர் எம்முடனான தனது நீண்டபயணத்தை நிறைவுசெய்துகொண்டார்.

இந்தமுறை அவரது பிறந்தநாளுக்கு வழமைபோல அவருக்கு ஒன்றும் என்னால அனுப்பமுடியவில்லை. ஏன் என்றால் இப்போது அவர் நினைவுகள் தவிர, அவர் உயிரோடு இல்லை. இவருடனான அனுபவத்தையும், நான் இவருடன் பரிமாறிய விடயங்களையும் நான் ஒரு காலத்தில வசதிகள், வாய்ப்புக்கள் எனக்கு கிடைக்கும்போது, நான் எனது வாழ்வை நிலைநிறுத்திய பின் ஆங்கிலத்தில புத்தகமாக எழுதலாம் எண்டு நினைச்சு இருந்தன்/இருக்கிறன். Sir Arthur C Clarke அவர்களுடன் நான் பெற்ற எனது ஒரு சில சுவாரசியமான அனுபவங்களை மட்டும் உங்களுடன் மிகச்சுருக்கமாக இங்கு பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறன்.

நான் 1997ம் ஆண்டு எனது நீண்டகால சிந்தனை ஓட்டங்களின் விளைவாகவும், தற்செயலாக எனக்குள் ஏற்பட்ட ஒரு ஆர்வமிகுதி காணமாகவும், எனது கருத்துக்களை யாருடனாவது உடனடியாக பகிர்ந்துகொள்ள வேணும்போல இருந்திச்சிது (அப்ப எண்ட வயசு கிட்டத்தட்ட 18க்கும் 24க்கும் இடையில இருக்கும் எண்டு சொல்லலாம்). அப்போது எனது எண்ணங்களை, கருத்தின் ஆழத்தை ஒரே ஒருவர் தவிர வேறு ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது எண்டு நான் உறுதியாக நம்பி இருந்தன். அந்த ஒரே ஒருவராக நான் அப்போது நினைத்தது Sir Arthur C Clarke அவர்கள்தான்.

முதல் சந்திப்பு:

நான் Sir Arthur C Clarke அவர்களது இல்லத்துக்கு சென்று என்னைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம் ஒன்றை அவரது செயலாளரிடம் சொல்லிவிட்டு... ஒரு கடதாசியும், பேனையும் தருமாறு கேட்டன். அவருக்கு நான் கதைத்த விதமும், எண்ட வயசும், மற்றது வழமையான இயல்பான பயமும் சேர ஆச்சரியத்துடன், அத்தோட பயபக்தியுடன் நான் கேட்டவற்றை உடனடியாக தந்தார்.

நான் Sir Arthur C Clarke அவர்களின் மேல்மாடி அலுவலக அறையில இருந்த ஒர் மேசையில இருந்து கிடுகிடு எண்டு முன்பக்கமும், பின்பக்கமுமாக ரெண்டு படங்கள், சில சூத்திரங்கள் மாதிரி கொஞ்சத்தை சில நிமிடங்களில எழுதிக்குடுத்து அதை Sir Clarke அவர்களிடம் காட்டுமாறு சொல்லிவிட்டு நாளைக்கு வருவதாக சொல்லிவிட்டு வந்திட்டன். சேர்.ஆர்தர்.சீ.கிளார்க் அவர்கள் பக்கத்து அறையில நடப்பவற்றை அவதானித்துக்கொண்டு இருந்தார்.

மறுநாள் நடைபெற்ற சம்பவம்:

மறுநாள் Sir Clarke வீட்டுக்கு போனன். சிறிதுநேரத்தில அவரது செயலாளர் ஒரு கடிதத்துடன் வந்து அதை என்னிடம் தந்தார். நான் நன்றி சொல்லிவிட்டு திரும்ப வீட்டுக்கு வந்தன்.

எனக்கு அவர் எழுதிய கடித்ததில அவரால் சொல்லப்பட்டவை:

Sir Arthur C Clarke அவர்கள் தன்னைப்பற்றி எழுதி மிகவிரிவாக இருந்தார். தான் நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும், எனது சிந்தனைக்கு தன்னால உடனடியாக பதில் கூற - Comment பண்ண முடியவில்லை என்றும், அதற்காக தனது வருத்தங்களையும் தெரிவித்து இருந்தார். எனக்கு முயற்சியில வெற்றிபெற வாழ்த்துகளும் கூறி இருந்தார்.

நான் அவருக்கு கடதாசியில எழுதியவை:

அந்தக்கடதாசியில முன்பக்கமும், பின்பக்கமும் நான் எழுதினவிசயத்திண்ட சாரம்சம் என்ன எண்டால் 1945ம் ஆண்டு ஆர்தர்.சீ.கிளார்க் அவர்கள் முதன்முதலாக செயற்கைக்கோள் - Satellite பற்றி சொன்ன கருத்திண்ட மறுதலையாக இருந்திச்சிது. ஒவ்வொரு தாக்கத்துக்கும், சமனானதும், எதிரானதுமான மறுதாக்கம் இருக்கிறது மாதிரி, அவர் கற்பனையில ஏறுவரிசையில போய் சிந்திச்ச ஒரு விசயத்தை நானும் கற்பனையில இறங்குவரிசையில சிந்திச்சு எனது கருத்தை சொல்லி இருந்தன்.

அந்தக் கற்பனை ஆராய்ச்சியில கடைசிவரியில நான் அவருக்கு சொன்னவிசயம் என்ன எண்டால் Dr Arthur C Clarke (சேர் பட்டம் அவருக்கு 1998ம் ஆண்டுதான் கிடைத்தது) அவர்கள் இப்பநோய் வாய்ப்பட்டு இருக்கிறார். அவர் பழையபடி ஆரோக்கியம் பெறுவதற்கு – வழமைக்கு திரும்புவதற்கு உள்ள ஒரே ஒரு வழிமுறை என்ன எண்டால் அவரைப்பற்றி செயற்கைக்கோள்கள் – Satellites கதைகள் எழுதவேணும் எண்டு.

இதைவாசிக்க உங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம். செயற்கைகோள்கள் - Satellites எப்படி அவரைப்பற்றி கதைகள் எழுதமுடியும்?

ஒரு கருத்திண்ட பெறுமதி அதுபற்றி ஆழமான அறிவு உடையவனுக்கு மட்டும்தான் விளங்கும். அந்த ஆழமான அறிவு உடையவராக நான் அப்போது இனம்கண்டு கொண்டது Sir Arthur C Clarke அவர்களை மட்டுமே.

Sir Clarke அவர்களுடனான முதல் சந்திப்பின் பின்னராக நடைபெற்ற சம்பவங்கள் பற்றி நான் இங்கு கூறமுடியாது. சேர்.கிளார்க்குடனான எனக்கும் அவருக்கும் இடையில நடந்த சூசகமான சம்பவங்கள் பற்றி எனக்கும் அவருக்கும் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது எண்டு சொல்லலாம். ஏன் என்றால் அவை அனுபவங்கள். நான் இவற்றை முன்பு சொன்னமாதிரி ஒருகாலத்தில வசதிவரும்போது – ஒரு சிறிய நூலாக வெளிவிடுவன். அந்த எண்ணம் இன்னமும் பத்துவருசத்தால கைகூடுமோ இல்லாட்டிக்கு இருவது வருசத்தால கைகூடுமோ... இல்லாட்டிக்கு எனக்குள்ளேயே மட்டும் அனுபவங்களாக இருந்துவிட்டு போகுமோ எண்டு காலம் தான் பதில் சொல்லவேணும்.

சேர்.ஆர்தர்.சீ.கிளார்க் அவர்களை கெளரவப்படுத்தி சிறீ லங்கா அரசாங்கம் முத்திரைகளை முன்பு வெளிவிட்டது. அப்போது சேர்.கிளார்க் அவர்கள் எனக்கு ஒரு மடல் எழுதி சிறீ லங்கா அரசாங்கம் வெளிவிட்ட அவரது முத்திரையை தபால் உறையில ஒட்டி அனுப்பி இருந்தார். அந்தக்கடிதத்தை ஸ்கான் பண்ணி நீங்களும் பார்க்கிறதுக்கு இதில கீழ இணைச்சு இருக்கிறன்.

IMG4930-1229380206.jpg

Sir Arthur C Clarke அவர்கள் இறந்தபோது நான் முன்பு யாழில ஊர்ப்புதினத்தில ஒரு செய்தியை விரிவாக இணைச்சு இருந்தன். அதன் இணைப்பு:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36259&hl=

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி,

மகிழ்ச்சி.

உங்களின் ஆர்வம் ஏற்படுத்திய ஒரு விஞ்ஞானியுடனான சந்திப்பும் அதை இங்கு பகிர்ந்து கொண்டமைக்கும்.

'"நாளை நாளை என்று எந்த விடயத்தையும் தள்ளிப்போடாதைங்கோ, இப்ப இங்க எழுதின மாதிரி உங்கள் அனுபவங்களை எழுதி அதைசேமிச்சு வையுங்கோ பிறகு அதை எப்படி ஒரு புத்தகத்துக்கு ஏற்ற வசனங்களாக மாற்ற வேண்டும் என்பதை வடிவமையுங்கோ. அதுதான் நல்லது.

'உங்கள் அனுபவங்களால் பலர் பயன் பெறக்கூடும் அல்லவா?!!!

"சோம்பல் மிகக்கெடுதி பாப்பா" :D

Edited by Thamilthangai

ஆதர் சி கிளர்க்குடனான உங்கள் அனுபவத்தின் எண்ணப் பகிர்வுக்கு நன்றி முரளி.

உங்கள் புத்தகம் வெளியிடும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் :)

  • தொடங்கியவர்

நன்றி தமிழ்தங்கை, மல்லிகைவாசம்.. ஒவ்வொண்டையும் செய்யுறதுக்கு குறிப்பிட்ட சில காலசூழ்நிலைகள் அமையவேணும். சரியான நேரத்தில - சரியான விதமாக - சரியான தகமைகளை விருத்திசெய்த பின்னர் - சரியானவர்கள் முன்னிலையில ஒரு விசயத்தை - சரியான வகையில சொன்னால் தான் - செய்தால்தான் நான் சொல்கின்ற விசயங்களில வெற்றி பெற முடியும் எண்டு நினைக்கிறன். மற்றது.. புதிய புதிய அனுபவங்களை பெறேக்க பழைய விசயங்களை வித்தியாசமான கோணங்களில நோக்கலாம். தவிர நாலைஞ்சு விசயங்களில ஒரே நேரத்தில தலையைக்குடுத்தால் கடைசியில ஒண்டும் உருப்படியாய் செய்து முடிக்க ஏலாது. அத்தோட ஒரு விசயத்தை செய்கின்றதால வரக்கூடிய பின்விளைவுகள் பற்றியும் யோசிச்சு, அதன் மூலம் எனக்கோ மற்றவர்களுக்கோ பாதிப்புக்கள் வாரதவகையில - அதற்கு ஏற்றபடிதான் காரியம் செய்யமுடியும். இதனால இதனால ஒண்டுக்கும் அவசரப்பட இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முரளி, உங்கள் நூல் வெளியிடும் முயற்சியை பின்போடாது தொடருங்கள். உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தமிழ்தங்கை, மல்லிகைவாசம்.. ஒவ்வொண்டையும் செய்யுறதுக்கு குறிப்பிட்ட சில காலசூழ்நிலைகள் அமையவேணும். சரியான நேரத்தில - சரியான விதமாக - சரியான தகமைகளை விருத்திசெய்த பின்னர் - சரியானவர்கள் முன்னிலையில ஒரு விசயத்தை - சரியான வகையில சொன்னால் தான் - செய்தால்தான் நான் சொல்கின்ற விசயங்களில வெற்றி பெற முடியும் எண்டு நினைக்கிறன். மற்றது.. புதிய புதிய அனுபவங்களை பெறேக்க பழைய விசயங்களை வித்தியாசமான கோணங்களில நோக்கலாம். தவிர நாலைஞ்சு விசயங்களில ஒரே நேரத்தில தலையைக்குடுத்தால் கடைசியில ஒண்டும் உருப்படியாய் செய்து முடிக்க ஏலாது. அத்தோட ஒரு விசயத்தை செய்கின்றதால வரக்கூடிய பின்விளைவுகள் பற்றியும் யோசிச்சு, அதன் மூலம் எனக்கோ மற்றவர்களுக்கோ பாதிப்புக்கள் வாரதவகையில - அதற்கு ஏற்றபடிதான் காரியம் செய்யமுடியும். இதனால இதனால ஒண்டுக்கும் அவசரப்பட இல்லை.

உங்கட கருத்தை வழிமொழியிற அதே கணத்தில் இன்னொன்றையும் சொல்ல வேணும் முரளி, இப்ப எழுத வேண்டும் என்றிருக்கின்ற ஆர்வம் போகப்போக ஆறிப்போகுமே தவிர அனலா எரியாது. சில விடயங்களைச் சூட்டோடு சூட்டாகச்செய்ய வேணும்..இப்ப எழுதி வையுங்கோ பிறகு அதை உங்களுக்கு ஏற்ற விதத்தில் வடிவமையுங்கோ. ஏனெனில் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் கடந்த நொடியை விட வேலைப்பளுவும், சுமைகளும் அதிகமாக்குமே தவிரக்குறையாது என்பது நான் கண்ட அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடேப்பா எங்கடை முரளியா?

பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளிக்கு

நான் உங்களை யாழில் அதிகம் சந்திக்கவில்லை... ஒருதடவை நடிகர் அஜித் சம்மந்தமான விவாதத்தில் கலந்து கொண்டேன்...பின்னர் நீங்கள் எனது கவிதை ஒன்றுக்கு வாழ்த்தியிருந்தீர்கள் அத்துடன் சரியென்று நினைக்கிறேன்...

எப்படியோ உங்கள் அனுபவப்பகிர்வு மிக அருமையாக இருந்தது...

சில நேரங்களில் நாங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக புகழ்பெற்றவர்கள்/ புகழ் பெறுவார்கள் என்று நாங்கள் சிறுவயதில் இருக்கும் போது புரிவதில்லை. உதாரணம் சில வருடங்களுக்கு முன் நான் லண்டனில் இரசாயனத்துறையில் பட்டப்படிப்பில் இருந்தபோது எங்களுடைய பகுதி நேர பேராசிரியர் ஒருவரின் இரசாயனத் துறைக் கண்டுபிடிப்பொன்று நான் பட்டப் படிப்பு முடித்து வெளியாகி இரண்டுவருடங்களுக்குள் நடந்தது. அதை வாசித்தபோது... அட.... இவர் என் பேராசிரியராச்சே...! என்பதோட சரி... ஆனால் அவரின் ஆராய்ச்சிகள் மேலும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன...

ஆனால் உங்களுக்கு உலகப் புகழ் பெற்ற ஒருவருடன் சந்திப்பு எப்பவோ நிகழ்ந்திருக்கிறது... அந்த அனுபவத்தை நீங்கள் எழுத்தாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் அவரைப் பற்றி மக்கள் அறியாத சில பக்கங்களையும் அறிந்து கொள்ளமுடியும் உங்களின் திறமைகளும் உலகுக்கு தெரியவரும்.

இளங்கவி

வாழ்த்துகள் முரளி. தொடர்ந்து பயணியுங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

நான் 1997ம் ஆண்டு எனது நீண்டகால சிந்தனை ஓட்டங்களின் விளைவாகவும், தற்செயலாக எனக்குள் ஏற்பட்ட ஒரு ஆர்வமிகுதி காணமாகவும், எனது கருத்துக்களை யாருடனாவது உடனடியாக பகிர்ந்துகொள்ள வேணும்போல இருந்திச்சிது (அப்ப எண்ட வயசு கிட்டத்தட்ட 18க்கும் 24க்கும் இடையில இருக்கும் எண்டு சொல்லலாம்). அப்போது எனது எண்ணங்களை, கருத்தின் ஆழத்தை ஒரே ஒருவர் தவிர வேறு ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது எண்டு நான் உறுதியாக நம்பி இருந்தன். அந்த ஒரே ஒருவராக நான் அப்போது நினைத்தது சேர்.ஆர்தர்.சீ.கிளார்க் அவர்கள்தான்.

முரளி , 18 வயதிற்கும் 24 வயதிற்கும் உங்களுக்கு ஏற்பட்ட அந்த தேடல் எல்லோருக்கும் அந்த வயதில் ஏற்படாது .

உங்கள் ஆர்வத்தை குறைக்காமல் தொடர்ந்தும் , உங்கள் எண்ணங்களை விரிவு படுத்துங்கள் .

  • தொடங்கியவர்

நுணாவிலான், தமிழ்தங்கை, வல்வை அண்ணா, இளங்கவி, அஜீவன் அண்ணா, தமிழ்சிறி.. உங்கள் அனைவரினதும் கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்று சேர். ஆர்தர். சி. கிளார்க் அவர்களது பிறந்தநாளன்று அவருடன் சம்மந்தப்பட்ட விடயங்களை உங்களுடன் பரிமாறிக்கொண்டது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது.

நான் பலவிதமான சிந்தனைகள் செய்தேன். பலவிதமான தகவல்களை பரிமாறினேன். ஆனால்.. ஒரு சிந்தனையாளனின் பின்னால் உள்ள... பிரச்சனைகள் எவை என்பது பற்றி நான் சொல்லில கூறமுடியாது. சுழியோடிகள் முத்துகுளிக்கும்போது எவ்விதமான ஆபத்துக்கள் இருக்கின்றனவோ அதையும் விட பல மடங்கு ஆபத்துக்கள் உள்ளது இவ்வகையான சிந்தனைப்பரிமாற்றம். தனிய ஒருவன் தனக்குள் சிந்தித்துவிட்டு அடக்கமாக இருப்பது வேறு. ஆனால்.. பலர் முன்னிலையில ஒரு புகழ்பெற்ற சிந்தனையாளனுடன் எண்ணப்பரிமாற்றம் செய்வது என்பது வேறு. இந்தவகையில.. நான் எனது வாழ்க்கையில இழந்தவை பல.

இப்போது எனது வாழ்கைத்தரம் முன்பு இருந்ததைவிட பலமடங்கு முன்னேறி இருப்பதால் இவை பற்றி உங்களுடன் ஒருசில எண்ணங்களை பகிரக்கூடியதாக இருந்திச்சிது. காலம் கனியும்போது நிச்சயம் எனது சிந்தனைகளை - சேர். ஆர்தர். சீ. கிளார்க்கிற்கும் எனக்கும் இடையில நடைபெற்ற விசயங்கள் எவை - எனது சிந்தனைகள் எவை என்பதை வெளியுலகுக்கு கொண்டுவருவேன். காலம் கனியாவிட்டால் இந்தவிடயத்தை எனது வாழ்க்கையில மறக்கப்பட்ட ஒரு அத்தியாயமாக மூடிவிடவேண்டியதுதான்.

மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பதிவு..

சிந்தனையை வளர்க்கச் சிலர் ஆச்சிரமங்களிற்குப் போவார்கள், சிலர் மார்க்கசிய அறிஞர்களிடம் போவார்கள். இவர்களை விட நீங்கள் சரியான ஞானகுருவிடம் போயிருக்கின்றீர்கள்.. பெற்ற அனுபவங்களையும் கண்டறிந்த விடயங்களையும் பிறருடன் பகிர்ந்துகொள்வது அவர்களின் சிந்தனையை வளர்க்க ஒரு தூண்டுதலாக அமையலாம் :D

  • தொடங்கியவர்

மிகுந்த நன்றிகள் கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு நீங்கள் எங்கேயோ போய்ட்டீங்கள் வாழ்த்துக்கள் :lol:

  • தொடங்கியவர்

நன்றி முனிவர்ஜி.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிற்ற்கு நன்றி மாப்புள்ள அண்ணா. மிகவும் சுவாரசியமான விடயம் அத்துடன் விஞ்ஞானத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒருவருடன் பழகக் கிடைத்தது உங்களுக்குக் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமாகவே நான் நினைக்கிறேன். நானும் சின்னனில இவரிண்ட சில புத்தகங்கள் வாசிச்சு இருக்கிறேன். ஒரு புத்தகத்தின் பேர் "A world beyond space" என நினைக்கிறேன், இப்போது ஞாபகம் இல்லை. உங்களுடைய புத்தகத்தை வெளியிட வாழ்த்துக்கள். சில விசயங்கள் அச்சு வழியில் அல்லது இலத்திரனியல் வடிவில் இல்லாவிட்டால் எதிர்காலச் சந்ததியினருக்கு இல்லது அழிந்துவிடும். புத்தகமாக வெளியிடுவதிலும் இலத்திரனியல் புத்தகமாக வெளியிடுவது ஒப்பீட்டளவில் செலவு குறைந்தது என நினைக்கிறேன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி அண்ணோய்... சொல்லவே இல்லை....!

வாழ்த்த்க்கள்...

10 வருசத்துக்கு பிறகு நூல் வெளியிடேக்க என்னையும் கூப்பிடுவிங்கள் தானே...!

முரளி என்னும் மாப்பிள்ளைக்கு எனது வாழ்த்துக்கள்...எதையும் பின் போடாது உடன் எழுதி இலத்திரனியல் ரீதியில் சேமித்து வைக்கவும்,பின்னர் அச்சிடலாம்...

  • தொடங்கியவர்

மனமார்ந்த நன்றிகள் தும்பளையான், KUGGOO, தங்கச்சி நிரூஜா

Edited by மச்சான்

ஆரம்பத்தில் உங்கள் கருத்துக்கள் ஏதோ கிறுக்கல்கள் போலவே இருந்தன. ஆனாலும் உங்களிடம் நிறைய விசயஞானம் இருப்பதை அப்போதே உணர்ந்து கொண்டேன். உங்கள் கருத்துக்கள் போலவே உங்கள் தேடல்களும் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி. உங்கள்அனுபவங்கள் அனைத்தையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அவை எமக்கும் பிரயோசனமாக இருக்கும். நீங்கள் கூறியது போல் இவற்றைத் தொகுத்து எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிடுங்கள். ஏனெனில் இன்று என்பது நிச்சயமானது, நாளை என்பது கேள்விக்குறி.

பி.கு: சக கருத்தாளர்கள் பற்றிய தங்கள் பதிவுகளை நீங்கள் முடித்ததும் எனது பதில்க் கருத்தை பகிர்வதற்காக நான் காத்திருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாப்ஸ்,அவனவன் ,சைற், அடிச்சுக்கொன்டு திரியிற வயசில நீங்கள் பிரயோசனமான விசயங்களை செய்திருக்கிறிங்கள்.வாழ்த்த

  • தொடங்கியவர்

மிக்க நன்றி சஜீவன். புத்தகம் வெளியிடேக்க உங்களுக்கும் ஓர் அழைப்பிதழ் அனுப்பிவிடுறன்.

ஆரம்பத்தில் உங்கள் கருத்துக்கள் ஏதோ கிறுக்கல்கள் போலவே இருந்தன. ஆனாலும் உங்களிடம் நிறைய விசயஞானம் இருப்பதை அப்போதே உணர்ந்து கொண்டேன். உங்கள் கருத்துக்கள் போலவே உங்கள் தேடல்களும் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி. உங்கள்அனுபவங்கள் அனைத்தையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அவை எமக்கும் பிரயோசனமாக இருக்கும். நீங்கள் கூறியது போல் இவற்றைத் தொகுத்து எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிடுங்கள். ஏனெனில் இன்று என்பது நிச்சயமானது, நாளை என்பது கேள்விக்குறி.

பி.கு: சக கருத்தாளர்கள் பற்றிய தங்கள் பதிவுகளை நீங்கள் முடித்ததும் எனது பதில்க் கருத்தை பகிர்வதற்காக நான் காத்திருக்கின்றேன்.

மனமார்ந்த நன்றிகள் வசம்பு. நான் எனது கடைசிப்பதிவை குறிப்பிட்ட கருத்தாடலில இண்டைக்கு இரவு பதிவன். அதன்பிறகு நீங்களும் உங்கள் ஆக்கபூர்வமான எண்ணங்களை அதில சொல்லிவிடுங்கோ. நீங்கள் கனகாலமாக யாழில இருக்கிறீங்கள். நான் சொன்ன யாழில இருக்கிற பிரச்சனைகள் பற்றி உங்கட பார்வையை சொல்வது பலருக்கும் உபயோகமாக இருக்கும் எண்டு குறிப்பாக யாழில இணைந்துள்ள, இணைய விரும்புகின்ற புதியவர்களுக்கு உபயோகமாக இருக்கும் எண்டு நினைக்கிறன். நன்றி!

Edited by மச்சான்

மாப்பிள்ளை உங்கள் புத்தகத்தை இலத்திரனியல் புத்தகமாக பதிய

www.myebook.com

என்னும் இணையத்தளத்திற்கு சென்று முயற்சி செய்யலாம் என்பது சிறு உதவி உமக்கு ஏற்கனவே வேறு தெரிந்து இருக்கலாம். இதனையும் முயன்று பார்க்கவும் சிலவேளை இலகுவானதாக இருக்கலாம்...

நான் கொழும்பு நகரில் சென்றல், நியூ ஒலிம்பியா, செட்டித்தெரு வீதி என்று வயது வந்தவர்களுக்கான சினிமா பார்த்துக் கொண்டு திரிந்த காலத்தில் நீங்கள் உருப்படியான சிறந்த விடயங்களை நாடியுள்ளீர்கள் முரளி. உங்களின் இந்த பதிவும் சிறப்பாக இருக்கின்றது. பகிர்தலுக்கு நன்றி.

மேலும் தொடருங்கள்

  • தொடங்கியவர்

மாப்பிள்ளை உங்கள் புத்தகத்தை இலத்திரனியல் புத்தகமாக பதிய

www.myebook.com

என்னும் இணையத்தளத்திற்கு சென்று முயற்சி செய்யலாம் என்பது சிறு உதவி உமக்கு ஏற்கனவே வேறு தெரிந்து இருக்கலாம். இதனையும் முயன்று பார்க்கவும் சிலவேளை இலகுவானதாக இருக்கலாம்...

மிக்க நன்றி KUGGOO. நீங்கள் எல்லாரும் தருகிற ஊக்கத்தை பார்த்தால் இப்பவே எழுதத்துவங்கவேணும் போல இருக்கிது. சும்மா கதைமாதிரி இருந்தால் கையுக்கு வந்தபடி இஞ்ச எழுதுறமாதிரி எழுதிப்போட்டு போகலாம். ஆனால் இதன்பின்னால ஏராளம் விசயங்கள், கடப்பாடுகள் - பொறுப்புக்கள் எல்லாம் இருக்கிது. நிச்சயம் காலம் கனியும்போது எனது முயற்சி கைகூடும் எண்டு நினைக்கிறன்.

நான் கொழும்பு நகரில் சென்றல், நியூ ஒலிம்பியா, செட்டித்தெரு வீதி என்று வயது வந்தவர்களுக்கான சினிமா பார்த்துக் கொண்டு திரிந்த காலத்தில் நீங்கள் உருப்படியான சிறந்த விடயங்களை நாடியுள்ளீர்கள் முரளி. உங்களின் இந்த பதிவும் சிறப்பாக இருக்கின்றது. பகிர்தலுக்கு நன்றி.

மேலும் தொடருங்கள்

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருமாதிரி வாழ்க்கை கிடைக்கிது. உங்களுக்கு நான் வாழ்ந்தமுறை பிடிச்சு இருக்கிது. எனக்கு நீங்கள் வாழ்ந்தமாதிரி வாழ குடுத்து வைக்க இல்லையே எண்டு இப்ப கவலைப்படுறன். ஏன் எண்டால் நான் இந்த எண்ணப்பரிமாற்றம் காரணமாக வாழ்க்கையில இழந்தவை அதிகம். வெளியில இருந்து பார்க்க சில விசயங்கள் கவர்ச்சியாய் இருக்கும். ஆனால் உள்ளுக்க இறங்கினால் அதில இருக்கிற ஆபத்துக்கள், வேதனைகள், உலைச்சல்களை பார்க்க எல்லாம் சூனியமாகி போயிடும்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நிழலி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.