Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பனிப்புயல் படங்கள்

Featured Replies

பனிப்புயல் படங்கள்: டொரன்ரோ / மார்க்கம்.

இன்று என்னால் எடுக்கப்பட்ட சில புகை படங்கள்.... இதன் தரம் மிக குறைவு. இன்றுதான் வாழ்க்கையில் முதல் தடவையாக பனி புயல் மத்தியில் வாகனம் செழுத்தி இருக்கின்றேன். மிக சாதாரண அரசாங்க வேலை பார்த்தவரின் மகன் என்பதால் கார் வாங்குவது ஒரு கனவாக இருந்தது. கனடா வந்தே அது சாத்தியமானது. அப்படி வாங்குகையில் (ஒரு பழைய கார்) அப்பா அதனை பார்க்க இவ் உலகிலேயே இல்லை என்பதுதான் யதார்த்தம்

காலம் எவரதும் வாழ்க்கைகாக காத்திருப்பதில்லை.....

2921221000104558986S600x600Q85.jpg

2125094800104558986S600x600Q85.jpg

2258583720104558986S600x600Q85.jpg

2623601790104558986S600x600Q85.jpg

Edited by நிழலி

  • Replies 69
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பனிமழை என்றால் நல்ல விருப்பம். அழகான காட்சிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

நாங்கள் சூழலை நேசிப்பவர்கள். காரை வெறுப்பவர்கள். அதனால் பனிப் புயலை சைக்கிளில் சென்று சந்தித்து மகிழ்ந்திருக்கிறோம். ஓடும் சைக்கிள்.. பாதையில்..சரிவில் சறுக்கி.. விழ அதனோடு கூடி விழுந்து பனிப்பொழிவுக்குள் புதையுண்ட நினைவுகள்.. மாறாத சுகங்கள்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுக்கு நன்றி நிழலி. நாளையும் பனிப்புயலாம். மேலும் தெளிவான படங்களை எடுத்து இணையுங்கள்.

இஞ்ச பனிப்புயலோ என்ன கருமமோ... குளிர் சரியாய் கூடியிட்டுது. என்னதான் வீட்டுக்க சூடு வந்தாலும் குளிர் குளிர்தான். நேற்று பல்கலைக்கழகம் கூட நடக்கவில்ல. மூடீட்டாங்கள் 11.00 மணியோட. சினோவுக்க நீண்டதூரம் நடக்கிறது அதுவும் காத்து அடிக்கேக்க நடக்கிறது கொடுமையான அனுபவம்.

நானும் உங்களை மாதிரி சாதாரண அரசாங்க வேலை பார்த்தவரின் மகன் நான். நானும் கனடாவுக்கு வந்த ஒரு வருசத்தில கார் ஆசை வந்து $28,000 க்கு finance பண்ணி ஒண்டு வாங்கினது. பிறகு ஓடோ ஓடு எண்டு ஓடி கனடா, அமெரிக்கா பெருந்தெருக்கள் எல்லாம் அளந்து பார்த்து கடைசியில விபத்து ஒண்டுலையும் சிக்கினபிறகு (அது எண்ட பிழையில அடிபட இல்லை) காரை வித்துபோட்டு பொடிநடை பழகீட்டன். நகரத்துக்க இருகிறதால எனக்கு கார் இப்ப தேவைப்பட இல்லை. ஆனால்.. தள்ளி இருக்கிற ஆக்கள் கார் இல்லாட்டி குளிருக்க விறைச்சு சாக வேண்டியதுதான். ஒழுங்கான நேரங்களுக்கு பேருந்தும் வராது. குளிருக்க நிண்டு வழிமேல் விழி வைச்சு காத்து இருக்கவேணும்.

பழைய கார் எண்டு சொல்லி இருக்கிறீங்கள். பரவாயில்லை. அதுதான் நல்லது. புதுக்காரை வாங்கினால் ஆக்களுக்கு படம் காட்டலாம். அது தவிர வேறு பெரிசாய் உபயோகம் ஒண்டும் இல்ல. இப்ப நல்ல பழைய கார்கள் மிகவும் நல்லாய் ஓடுது. பெரிய பெரிய தலைகள் பழைய கார்தான் பாவிக்கிறது. அது பாதுகாப்பானதும் கூட. :)

குளிர் என்றவுடன் இங்கை குளிருது ( இங்கையும் பனிகொட்டி கரைந்துவிட்டது) கொட்டுறதிலை பிரச்சினை இல்லை நடக்கேக்க வழுக்கும் பாருங்க கடவுளே நிறைய தடவை விழுந்து எழுந்திருக்கின்றேன் வழுக்கி . . .

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் என்றவுடன் இங்கை குளிருது ( இங்கையும் பனிகொட்டி கரைந்துவிட்டது) கொட்டுறதிலை பிரச்சினை இல்லை நடக்கேக்க வழுக்கும் பாருங்க கடவுளே நிறைய தடவை விழுந்து எழுந்திருக்கின்றேன் வழுக்கி . . .

வந்த புதிதில் தெரியத்தனமாக வேகமாக நடந்து, தண்ணி தான் கிடக்கு என்று நினைத்து நடந்தெல்லாம் சறுக்கி விழுந்திருக்கேன். சிலநாள் வீட்டிலேயே வலியால் இருந்துமிருக்கின்றேன். வலி எல்லாம் வலிக்கவில்லை..... ஆனால் பல தடவை பள்ளி போகும் குழந்தைகள் முன்னால் விழுந்தது தான் ஏதோ கொஞ்சம் மானக்கேடாக இருந்தது...

இது பரவாயில்லை. நான் வந்து சேர்ந்த அடுத்த வாரம் மனைவியின் நண்பிவீட்டிற்கு சென்றிருந்தோம். அவர்கள் வீடு சற்று ஏற்றத்தில் இருந்தது. போகும்போது தெரியவில்லை. இறங்கும்போது நிறைய அனுபவப்பட்டேன். கால் வைத்ததுதான் தெரியும் கண் திறந்து பார்த்தேன். எங்கேயோ விழுந்து கிடக்கின்றேன். அவ்வளவு சறுக்கல் வாழ்க்கையில் முதல் வழுக்கலே அதுதான் ( வேறை நிறைய இருக்குங்கோ ) . அன்றிலிருந்து பனி விழுகின்றது என்றாலே கால் பயப்படத்தொடங்கிவிடும்.

நான் ஓரிருமுறைதான் வழுக்கி விழுந்திருக்கிறேன். அதுவும் வந்த புதிதில்தான். நான் பனியின்போது, அன்னநடையிலும் மெதுவாகத்தான் நடப்பேன். அதுவும் ஹீல்ஸ் வைச்ச பாதணியோடுகூட நடந்திருக்கிறேன் என்றால் பாருங்களேன்.

:wub::)

இதுவரைகாலமும் ஸ்காபரோவில் இருந்தபடியால், பனிப்புயல்களின்போது, பேருந்தில்தான் பயணம் செய்தேன். ஆனால், இப்ப மார்க்கம் வந்தபின்பு, காரில் போகவேண்டிய கட்டாயம். அதனால் வேலைக்கு லீவு போடுவதும் அதிகரித்து விட்டது. எங்கள் வீதி வேறு மிகவும் சிறியது. ஆகவே நேரம் சென்றுதான் வழிப்பார்கள். இன்றுகூட பனியில் என் கார் புதைந்ததால், வேலைக்கு 1 மணிநேரம் பிந்தித்தான் போனேன். என்னைப் பொறுத்தவரை, வாழ்வதற்கு ஸ்காபரோ போன்ற இடம்தான் சிறந்தது. எல்லாமே அருகில் இருக்கும். ஆனால் இங்கு, பால் வாங்குவதற்குக்கூடக் காரில் செல்ல வேண்டிய கட்டாயம். :):D

  • தொடங்கியவர்

கடந்த வருடம் தான் பனியையும், பனிப்புயலையும் வாழ்வில் முதல் முறையாக நான் பார்த்தது, மிக. மிக ரசித்து பார்த்தேன். ஏற்கனவே பலர் பனியில் சறுக்கி விழுவது பற்றி நன்கு பயப்படுத்தியிருந்ததால், பெரிய சப்பாத்து வாங்கி போட்டு விழாமல் தப்பிவிட்டேன். வீட்டிற்கு முன்பாகவே பேருந்து தரிப்பிடமும் இருந்ததால் போக வர இலகுவாக இருந்தது. இன்னமும் எனக்கு பனி பற்றிய ஆச்சரியமும் விருப்பமும் குறையவில்லை. கடும் பனிபுயல் வீசும் போது நேற்றும் வெளியே கொஞ்ச நேரம் நின்று அனுபவித்து பார்த்தேன்.

கார் ஓட்டுவதுதான் செரியான கஷ்டமாக இருக்குது. இங்கு வந்து தான் முதன் முறையாக கார் ஓட்ட பழகினதால முதல் அனுபவமே பனிக்காலத்தில் ஓட்டும் அனுபவமாக ஆகிப்போட்டுது. நான் பார்த்து வலது பக்கம் திருப்பினால் அது சறுக்கி கொண்டு இடது பக்கமாக திரும்புது. எனக்கு முன்பாக ஒரு கார் பனியில் சறுக்கு குந்து ஒன்றில் ஏறி விட எனக்கு வயிற்றை கலக்க தொடங்கிட்டு.

  • தொடங்கியவர்

படங்களுக்கு நன்றி நிழலி. நாளையும் பனிப்புயலாம். மேலும் தெளிவான படங்களை எடுத்து இணையுங்கள்.

இந்த படங்கள் பனிபுயலின் போது எடுத்தவை. எவ்வளவோ முயன்றும் வெளிச்சத்தினை கூட்ட முடியவில்லை. பனிப்புயலின் போது இருந்த அதே இருட்டு தான் படத்திலையும் வந்து இருக்குது. நான் வேறு சில நல்லா படம் எடுக்க தெரிந்த ஆட்கள் எடுத்த பனி புயல் படங்களை பார்த்து இருக்கன். நல்லா வெளிச்சமாக இருக்கும். எப்படி எடுத்தார்கள் என்று தெரியவில்லை. எனது கமறா ஓரளவுக்கு நல்ல கமரா. Olympus DSLR (Digital SLR) 10.1 MP கமரா. ஆனால் எனக்குத்தான் சரியாக எடுக்க வருகுது இல்லை. பனியில் நல்ல துலக்கமாக வெளிச்சமாக எடுக்கும் முறை தெரிந்தால் சொல்லவும்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனிப்புயலின் வேகத்துக்கு எங்களால் நடக்க முடியுமா? அதுவும் காற்றுக்கு எதிர்த்திசையென்றால் காலையும் எடுத்து வைக்க முடியேல்லை. மூக்கு, காது இருக்கா என்று தொட்டுப்பார்க்க கையுக்கு உணர்ச்சியில்லை அது இரத்தம் ஏறி விறைச்சுப்போட்டுது. 'கடவுளே....தாயக நினைவுகள் தான் அப்ப வந்து சூடேற்றும்"...

ஒட்டாவாவில் அதிக குளிர், இம்முறை பனிப்பொழிவு ரொரண்டோவில் தான் அதிகம் என நினைக்கின்றேன். நாளைய வானிலை எச்சரிக்கை அறிக்கை சொல்லி இருக்கிறாங்கள்.

மகிழூந்தில் போறவை கவனமா ஓட்டுங்கோ தற்போதைக்கு தூரப்பயணங்களைத் தூரத்திலேயே வையுங்கோ 300ற்கும் மேற்பட்ட விமானப்பயணங்கள் ரத்துப்பண்ணி இருக்கினம்.

நாளைக்குத்தான் உண்மையான பனிக்காலம் தொடக்கம் அதுக்கு முதலே வாட்டு வாட்டு என்று வாட்டிப்போடுது. ஒட்டாவாவில் பேருந்துகள் வேலை நிறுத்தம் வேறு கொடுமையாக்கிடக்கு. நிலமை.

  • தொடங்கியவர்

இப்ப மார்க்கம் வந்தபின்பு, காரில் போகவேண்டிய கட்டாயம்.

அட... நானும் மார்க்கம் தான்.

என்னவோ மார்க்கம் மார்க்கம் எண்டுறாங்க.. என்ன மார்க்கமப்பா? :wub:

  • தொடங்கியவர்

என்னவோ மார்க்கம் மார்க்கம் எண்டுறாங்க.. என்ன மார்க்கமப்பா? :wub:

இலகுவில் நரகத்திற்கு (அய்யோ இலங்கையை சொல்லவில்லை) போகும் வழியைதான் மார்க்கம் என்று சொல்லுறம்

உலகின் மிக நீளமான சாலையான யங் வீதியின் ஒரு பகுதி பனிப்புயலின் பின்னர் இரவு 11 மணியளவில்....

img1459qe7.jpg

எங்கனைக்க அருவி சொல்லாமல் கொல்லாமல் எங்கட ஏரியாவுக்க திரியுறீங்கள்? கொலீஜ் சப்வேயுக்கு கிட்ட Yonge-Carlton Intersection க்கு கிட்டப்போல இருக்கிது. இரவுல நீங்கள் எதுக்கு உதுக்க எல்லாம் திரியுறீங்கள். உது கூடாத பழக்கம் சரியோ :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருவி சாம பிசாசு தானே அதனால் அவர் இரவில் தான் வெளியில் வருவார் ஆனால் உந்த படத்தை அருவி தான் எடுத்தவர் என்பதை நான் நம்ப மாட்டன் 3 மணிக்கே வேலையில இருந்து வீடு போய் நித்திரை கொண்டவராம் நேற்று பிறகு எழும்பி 11 மணிக்கு படம் எடுத்தவர் என்பதை நம்ப முடியுமோ?

எங்கனைக்க அருவி சொல்லாமல் கொல்லாமல் எங்கட ஏரியாவுக்க திரியுறீங்கள்? கொலீஜ் சப்வேயுக்கு கிட்ட Yonge-Carlton Intersection க்கு கிட்டப்போல இருக்கிது. இரவுல நீங்கள் எதுக்கு உதுக்க எல்லாம் திரியுறீங்கள். உது கூடாத பழக்கம் சரியோ :wub:

அடடா டவுண்ரவுண் பகுதிக்கு இரவில போகக்கூடாதெண்டதெல்லாம் இருக்கிறதா? இரவு வேளையில் டவுண்ரவுண் வீதிகளில் காலற நடைபோவது மிகவும் இனிமையானது... :P

Yonge-Carlton/college Intersection... சரியான இடம்.

அருவி சாம பிசாசு தானே அதனால் அவர் இரவில் தான் வெளியில் வருவார் ஆனால் உந்த படத்தை அருவி தான் எடுத்தவர் என்பதை நான் நம்ப மாட்டன் 3 மணிக்கே வேலையில இருந்து வீடு போய் நித்திரை கொண்டவராம் நேற்று பிறகு எழும்பி 11 மணிக்கு படம் எடுத்தவர் என்பதை நம்ப முடியுமோ?

வேலையில இருந்து 13:30 மணியளவில் வீடு திரும்பியது உண்மை, ஆயினும் வீடு வந்து சேர 15:30 மணியாகிவிட்டது:) . அதன் பிறகெல்லாம் நித்திரைகொள்ளவில்லை (வரும்போதே நித்திரை கொண்டாச்சு >_> )

பனிபுயலால் பாதிக்கப்பட்டோர் அதிகம் போல??

  • கருத்துக்கள உறவுகள்

பனிப்புயலின் படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .

பனி பெய்யும் போது குளிர்வதை விட , அது கரையும் நாட்களில் ( மாசி ,பங்குனி ) ஒரு குளிர் காற்று மிகவும் வாட்டி எடுக்கும் .

காது இருக்கிறதா ? கைவிரல் இருக்கின்றதா என்று சந்தேகம் வந்து தொட்டுப்பார்த்து உறுதி செய்ய வேண்டி இருக்கும் .

பனியில் வழுக்கி விழுந்து , உடலில் எங்கு நோ ஏற்படுகின்றதோ ..... அந்த இடத்தில் அடுத்த வருடமும் அதே நேரம் , நோகும் என்று நகைச்சுவையாக இங்கு சொல்வார்கள் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பனிமழை என்றால் நல்ல விருப்பம். அழகான காட்சிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

நாங்கள் சூழலை நேசிப்பவர்கள். காரை வெறுப்பவர்கள். அதனால் பனிப் புயலை சைக்கிளில் சென்று சந்தித்து மகிழ்ந்திருக்கிறோம். ஓடும் சைக்கிள்.. பாதையில்..சரிவில் சறுக்கி.. விழ அதனோடு கூடி விழுந்து பனிப்பொழிவுக்குள் புதையுண்ட நினைவுகள்.. மாறாத சுகங்கள்..! :icon_mrgreen:

அவனவன் குளிருக்கு நடுங்கிச்சாகிறான்.

இஞ்சை ஒராள் சயிக்கிள் பாதையிலை சறுக்கி சுகம் கண்டதாய் புலம்புறார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் குளிருக்கு நடுங்கிச்சாகிறான்.

இஞ்சை ஒராள் சயிக்கிள் பாதையிலை சறுக்கி சுகம் கண்டதாய் புலம்புறார். :lol:

கு.சா...அகதியாகவோ அல்லது அகதியாக வந்தவர்களை அண்டி குடிபெயர்ந்தவராகவோ அல்லது வேலைக்கு வந்தவராகவோ இருப்பின் இந்த நிலை இருக்கும்.

ஆனால் எனக்கு வரும் போதே எப்படி குளிரை தாக்குப் பிடிக்கிறது அதற்கான உடைகள் என்ன என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அதுமட்டும் அன்றி குளிர்காலத்துக்கு ஏற்ப உணவு வகைகளும் உட்கொள்ள வேண்டும்.

எம்மவர்கள் ஏதோ ஊரில் திரிவது போல காலுக்கு அளவில்லாத பெரிய சப்பாத்துக்களையும் வாங்கிப் போட்டுக் கொண்டு.. தொல தொல ஒற்றை உடுப்போட ஒரு ஜக்கட்டை மாட்டிக் கொண்டு திரிந்தால் குளிராமல் சுடுமா..??!

குளிர்காலத்தில் வெண்ணிற வெப்ப உள்ளாடைகள் அணியுங்கள்.(உடல் வெப்ப இழப்பை குறைக்க..!) பருத்தியை விட்டு கம்பளி உடைகளை அணியுங்கள்.அதைத்தவிர இன்னும் குளிரைத் தாங்க உடுப்புகள் இருக்கின்றன.

காலுறைகளை கம்பளியால் ஆகி இருப்பின் நன்று. இறுக்கமான குளிர்கால பாதணி அணியுங்கள்.

வீட்டு வெப்பநிலையை 21 பாகை செல்சியஸ் இல் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் வைத்திருப்போர் 21 பாகைக்கு மேலே கொண்டு போவது குழந்தைகளின் மூளைக்கு ஆபத்தானது. அதேபோல் 18க்கு குறைவதும் கூடாது.

மின்சாரத்தை மிச்சம் பிடிக்க என்று கீற்றரைப் போடாமல் இருந்தா குளிராம.. சுடுமாக்கும்..!

வெள்ளையள் சமருக்கு எவ்வளவுக்கு எவ்வளவு திறக்குதுகளோ.. வின்ரருக்கு அவ்வளவுக்கு அவ்வளவு மூடுங்கள். அவர்களுக்கு பனி என்றாலும் மகிழ்ச்சி. காரணம்.. அவர்களுக்கு பாதுகாப்பைப் பெறத் தெரியும்.

தலைக்கு நிச்சயம் கம்பளியாலான அல்லது வெப்ப இழப்பைத் தடுக்கும் தொப்பி அல்லது குல்லா அணியுங்கள். அது இறுக்கமாக தலையோடு ஒட்டி இருத்தல் நன்று. காரணம் உடல் வெப்பத்தில் 25% தலை வழியாகவே இழக்கப்படுகிறது. குளிர்காலத்தில்..!

நான் இதையெல்லாம் யுனில சொல்லித் தரேக்க கேட்டு அதன்படி நடக்கிறன். அதால.. குளிரை என்ஜோய் பண்ணுறன்.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :D:icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பானையில் இருந்தால்த்தான் அகப்பையில் வரும் எண்டு ஊரிலை சொல்லுறவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.