Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனிப்புயல் படங்கள்

Featured Replies

உண்மையிலேயே குளிர்காலத்தில் நான் கொஞ்சம் கலர் மாறிடுவேன். அது ஒரு வகையில் சந்தோம்

மேலும் முன்பு விழுந்த நோ உண்டான இடத்தில் அடுத்த குளிர்காலத்திலும் கட்டாயம் வலி இருக்கும். இது எனது அனுபவம்.

  • Replies 69
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பனிப்பொழிவு ஏற்பட்ட சற்று பின் சறுக்கி விழச் சந்தர்ப்பம் குறைவு. ஆனால் பனி உருகும் போதோ அல்லது உப்பைப் போட்டு பனியின் உருகுநிலைக்குரிய வெப்பநிலையை குறைக்கும் போதோ.. சறுக்கி விழச் சந்தர்ப்பம் அதிகம். அதற்கான எச்சரிக்கைகள் பெரும்பாலும் தரப்பட்டிருக்கும்.

பனி காலத்தில் கிறிப் கூடிய காலணிகளை அணிவது.. சறுக்கி விழுவதை ஓரளவு குறைக்கும்.

பனி உருகும் போதோ.. அல்லது உப்புப் போட்டு உருகத் தூண்டும் போதோ.. சிறிது நிதானமாக நடந்தால் பிரச்சனையில்லை. அல்லது உருகாத பனி மீது கால் வைச்சு நடக்க வேண்டும். குறிப்பாக.. வீதியின் ஓரங்களில் உருகாத பனி இருக்கும். அதில் கால் வைத்து விரைவால நடந்து போயிடலாம்..!

பனிகாலத்துக்கு உகந்த காலணி மாதிரி..

http://www.wiggle.co.uk/images/northwave%2...anion%20new.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி வாசிக்க சிரிப்பாவும் இருக்கு, கவலையாவும் இருக்கு.கவனமா நடந்து திரியுங்கோ , அண்ணா ,எதுக்கும் உதவிக்கு அருவியைக் கூட்டிக் கொண்டு போங்க :wub::rolleyes:

அவர் சரியான பிசி ஆள். அத்தோடுஅவரைக் கூட்டிட்டுக் கொண்டு போய், அவர் விழுந்தாலும், காத்தடிச்சு பறந்தாலும் நான் தான் கஸ்டப்படணும்.

அது சரி நீங்கள் ஏன் வெள்ளையாகனும் எண்டு ஆசைப்படுறீங்கள்.. :lol:

அதுவா! கொஞ்சம் பழுப்பாக இருந்தால் தானாம் சீதனத்தை கூட்டிக் கேட்கலாமாம்.... கொழும்பில் ஒரு வீடு, கனடாவில் ஒரு நீச்சல் தொட்டி வாங்க வேண்டாமா??

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சரியான பிசி ஆள். அத்தோடுஅவரைக் கூட்டிட்டுக் கொண்டு போய், அவர் விழுந்தாலும், காத்தடிச்சு பறந்தாலும் நான் தான் கஸ்டப்படணும்.

ஏன் அருவி காத்தில பறக்கிற மாதிரியோ இருக்கிறார்?

அதுவா! கொஞ்சம் பழுப்பாக இருந்தால் தானாம் சீதனத்தை கூட்டிக் கேட்கலாமாம்.... கொழும்பில் ஒரு வீடு, கனடாவில் ஒரு நீச்சல் தொட்டி வாங்க வேண்டாமா??

பின்னர் கனடாவில வேண்டிற நீச்சல் குளத்தை மெயின்ரைன் பண்ண கொழும்பில வேண்டிற வீட்டைத்தான் விக்கவேணும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அருவி காத்தில பறக்கிற மாதிரியோ இருக்கிறார்?

இறுக்கிக் காற்று அடிச்சால் சொல்லுகின்றேன். ஒட்டாவாவில் வைத்துப் பிடிச்சுக் கொள்ளுங்கள்.

பின்னர் கனடாவில வேண்டிற நீச்சல் குளத்தை மெயின்ரைன் பண்ண கொழும்பில வேண்டிற வீட்டைத்தான் விக்கவேணும். :rolleyes:

அப்ப எதுக்கு பராமரிப்புச் செலவு குறைவு? குறைந்தபட்சம் கனடாவில் ஒரு மலசலகூடத்தையாவது செரந்தமாக வாங்கின்ற முடிவோட தான் இருக்கின்றேன்.

அப்ப எதுக்கு பராமரிப்புச் செலவு குறைவு? குறைந்தபட்சம் கனடாவில் ஒரு மலசலகூடத்தையாவது செரந்தமாக வாங்கின்ற முடிவோட தான் இருக்கின்றேன்.

நடமாடும் மலசலகூடம் என்றால் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம் :lol:

அப்பப்பா எங்க துவங்கி எங்க எல்லாரும் வந்திருக்கிறியள்.

தலை சுத்துது

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்பா எங்க துவங்கி எங்க எல்லாரும் வந்திருக்கிறியள்.

தலை சுத்துது

எப்படிச் சுத்துது? இடம் வலமோ? வலம் இடமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பப்பா எங்க துவங்கி எங்க எல்லாரும் வந்திருக்கிறியள்.

தலை சுத்துது

ரசிகை அக்கா' தலைப்பிலேயே இருக்கே 'பனிப்புயல்" என்று :lol:!!...

மிச்சம் விளங்கும் எண்டு நினைக்கிறன் உங்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய பூர்வீக மக்கள் 37 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு பூராவும் பரவிக்கிடக்கும் பனிப் படிவுகளோடு வெள்ளை கிறிஸ்மஸ் கொண்டாடும் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

கனடிய மக்களுக்கு வெள்ளைக் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..!

_45321617_lorne_thompson1.jpg

எனக்கு இந்தப் பறவையை (Grey Partridge) பிடிச்சுப் பார்க்கனும் போல இருக்குது. கனடாவில் யாராவது.. இதை வீடுகளில் பார்த்திருக்கிறீர்கள்..!

மேலதிக படங்கள் கீழுள்ள இணைப்பில் உள்ளது..

http://news.bbc.co.uk/1/hi/in_pictures/7796558.stm

கழுகு/பருந்து போல இருக்கே!

  • கருத்துக்கள உறவுகள்

கழுகு/பருந்து போல இருக்கே!

இல்லை அது கோழி போன்ற ஒரு பறவை. அப்பாவியானது. :lol:

இல்லை அது கோழி போன்ற ஒரு பறவை. அப்பாவியானது. :lol:

ஓ,,அப்படின்னா சரி

நான் பயந்திட்டன்...அது பார்க்க பருந்து போல இருக்கு ..அதை போய் பிடிக்க ஆசை என்கிறீர்களே என..

என்ர அனுபவம்(பனிக்குள்ள) அதிகம் பாருங்கோ,

நான் இங்க தாபால் நிலையத்தில வேலை செய்யுறன்,

(கடிதம் குடுக்கிற வேலை இல்ல போடுற வேலை)

என்னோட வேலை செய்யிறதில 75% பழசுகள்,அதில 50% பெண்கள் (இளமைக்கு வந்த சோதனை)

(அதுக்காக சாத்திரி,கு.சா,கந்தப்பு தாத்தாக்கள் மாதிரி யோசிக்காதேங்கோ) அதனால மலைப்பகுதிகளுக்கு

அவயல் அனுப்புவது எங்களத்தான்(இங்க ஏறினா மலை இறங்கினா கடல்)எனக்கும் பனி இருக்கிற மலையில வாகனம் ஓடுறது எண்டா ஏதோ மிக்27 ஓடுற உள் உணர்வு,(அதுக்காக முந்தி மிக் எல்லாம் ஒடினதோ எண்டு கேக்கப்பாடாது மிக்கையும் கிபிரையும் பார்த்து மரத்தச்

சுத்தி ஓடின ஞாபகம்).

பலதரம் உள் உணர்வு கூடி பனீக்க கொண்டே வாகனத்தை விட்டிருக்கன்,

இருந்தும் வெள்ளையல் என்ன வேலைய விட்டு தூக்கேல (நம்ம முகராசி அப்படி)

Edited by அகதி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் ஆலோசனையைக் கேட்ட பெண்மணி உயிர் தப்பினார். 72 மணித்தியாலங்கள் பனியில் புதையுண்டிருந்தும்..! :)

http://www.cbc.ca/canada/toronto/story/200...r-survival.html

Young & Carlton இல் உள்ள அந்த condo க்கு பேஸ்மண்ட் கிண்ட டிசைன் குடுத்தது நானல்லோ..! :)

எங்கனைக்க அருவி சொல்லாமல் கொல்லாமல் எங்கட ஏரியாவுக்க திரியுறீங்கள்? கொலீஜ் சப்வேயுக்கு கிட்ட Yonge-Carlton Intersection க்கு கிட்டப்போல இருக்கிது. இரவுல நீங்கள் எதுக்கு உதுக்க எல்லாம் திரியுறீங்கள். உது கூடாத பழக்கம் சரியோ :unsure:

நான் இருக்கும் இடத்தில் பொதுவாக பனி புயல் வருவதில்லை. ஆனால் வெப்பனிலை - 20 க்கு கீழ தான் பொதுவாக இருக்கும். - 35 வரை கூட போவதுண்டு. இந்த வெப்பனிலையுடன் காற்றும் சேரும் என்றால் உடல் உணரும் வெப்பனிலை - 45 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருக்கும்.

அண்மையில் எடுத்த சில படங்கள்

winter1kq3.jpg

winter2lt8.jpg

winter3fr2.jpg

winter4zl2.jpg

winter5fs5.jpg

  • தொடங்கியவர்

அருமை குளக்காட்டான்... என்ன செட்டிங்கில் இவை எடுத்தீர்கள் என்று விபரம் தர முடியுமா? என்ன கமறா வைத்துள்ளீர்கள்? வெளிச்சம் இயற்கை வெளிச்சமா அல்லது ஏதேனும் நுட்பம் பயன் படுத்தப் பட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருசிறப்பு உண்டு அதில் புகைப்படங்கள் என்றாலே குளைக்காட்டான்தான் சிறப்பு படங்களிற்கென்றே தனியாக ஒரு பகுதியை வைந்திருந்தவர் குளை ஆனால் அண்மைக்காலங்களாக அவரை காண்பது குறைவு

அருமை குளக்காட்டான்... என்ன செட்டிங்கில் இவை எடுத்தீர்கள் என்று விபரம் தர முடியுமா? என்ன கமறா வைத்துள்ளீர்கள்? வெளிச்சம் இயற்கை வெளிச்சமா அல்லது ஏதேனும் நுட்பம் பயன் படுத்தப் பட்டதா?

நிழலி என்னிடம் அப்படி சிறப்பான புகைப்பட கருவி எதுவும் இல்லை. HP photosmart தான் இருக்கிறது. இயற்கை ஒளியை பயன்படுத்தி தான் எடுத்தேன். பின்னர் பிக்காசாவில் படத்தை மெருகேற்றினேன்.

சாத்திரியார், நீங்கள் சொல்லும் அளவுக்கு புகைப்படம் எழுத்தலில் திறமையுள்ளவன் அல்ல. ஆனால் புகைப்படம் எடுப்பதில் விருப்பம் உண்டு. இப்போ புகைப்படம் எடுப்பதில் அதிக நேரம் செலவிட முடிவதில்லை. அதனால் முன்னர் போல் புகைபடங்களை இணைக்க முடிவதில்லை.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டன் உங்கள் புகைப்படங்கள் ஒரு பெரும் கலைஞன் உங்களுக்குள் ஒளிந்திருப்பதை இனங்காட்டுகிறது. உங்களுடைய இந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது உள்ளத்திற்குள் ஒருவகை அமைதி ஏற்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.