Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் வாசித்த, வாசிக்கும் புத்தகங்களும் நாவல்களும்: நிழலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு துப்பறியும் நாவல்கள் வாசிக்க விருப்பம்.

டேன் பிறவுன் எழுதிய "ஏஞ்சல்ஸ் அன்ட் டீமன்ஸ்" (Angels & Demons, by Dan Brown) படியுங்கள். இவர் தான் டாவின்சி கோட் எழுதியவர்.

Edited by Justin

  • Replies 54
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜஸ்டின் .

  • 6 months later...
  • தொடங்கியவர்

மீண்டும் தொடர்கின்றேன்.........................................

....

கடந்த வருடம் நவம்பரின் பின் எந்த புத்தகங்களும் வாசிக்க கூடிய மன நிலை இல்லாமல் போய் ரணமும் வேதனையுமான உணர்வுகளுடனேயே வாழ்க்கை கழிந்தது. தினம் தினம் வந்து கொண்டிருந்த சாவு பற்றிய செய்திகளும், தோழர் தோழியரின் இழப்புகளும், நில ஆக்கிரமிப்புகளும் பெரும் மனசிச்சிதைவை நோக்கி என்னை நகர்த்தி கொண்டிருந்தன. ஆயினும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் விரைவில் அந்த சூழ்நிலைகளை தகர்த்து கொண்டு வெளியே வந்த பின் மீண்டும் இந்த திரியினை தொடர்வதற்குரிய சூழ்நிலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நான் காத்திருந்தேன்.

ஆனால், எந்த சூழ்நிலையிலும் நாம் கற்பனை பண்ணியிருக்காத ஒரு பெரும் பின்னடைவும் அதனூடான மனித அவலமும் நிகழ்ந்தேறிய பின், முழுத் தமிழ் தேசிய போராட்டமும் இயங்குதிசை அற்று ஒரே புள்ளியில் குவிந்து இருக்கும் இன்றைய சூழ்நிலையில் சாவு செய்திகளும் அவல செய்திகளும் என் காதுகளுக்கு எட்டாத இன்றைய ஒரு பொய் 'அமைதி' நிலையில் மீண்டும் இந்த திரியினை தொடரவும் மீண்டும் புத்தகங்கள் வாசிக்கவும் முயல்கின்றேன்.

இந்த பொய்யான 'அமைதி, மீளமுடியாத மானுடச் சிக்கலை தமிழர்களுக்கு தரப் போகின்ற இந்த மயான 'அமைதி நிலையும்' இதற்கு முன்னர் ஏற்பட்ட பெரும் மனித அவலமும் என் மொழியினை முற்றிலுமாக சிதைத்து விட்டது. ஒரு விடயத்தினை தெளிவாகவும், திறனாகவும் என்னால் எழுத முடியும் என்று நம்பிக்கை தந்த என் மொழி இன்று என்னை விட்டு வெகு தூரம் போய்விட்டது. எதனை எழுத முயன்றாலும் அதனை எழுதும் போது இயலாமையும் எரிச்சலும் குற்ற உணர்வும், அதனால் மற்றவர்களை குற்றம் சாட்டும் மொழியுமே வந்து கலக்கின்றது. இவற்றில் இருந்து வெளிவரவாவது சில விடயங்களை மீண்டும் எழுத / தொடர விரும்புகின்றேன்.

இந்த திரியில் நான் ஏற்கனவே பயன் படுத்திய மொழிப் பயன்பாட்டிற்கும் இனி எழுத போகின்ற மொழியிற்கும் இடையில் இருக்கக்கூடிய வேறுபாட்டில் எமது மொத்த அவலத்தின் சிதைவும் பதிந்து இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நிழலி...எல்லா விதமான புத்தகங்களை பற்றியும் எழுதுங்கள்.தமிழ் புத்தகங்களையும் தெரிவு செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போஅலோ கோலோ (Paulo Coelho) என்ற பிரபல பிரேசில் நாட்டு எழுத்தாளரின் திறம் மிகு படைப்புகளில் ஒன்று...."அல்கெமிஸ்ட்" (The Alchemist) என்ற நாவல்.

முதலில் போர்ச்சுகீசிய பாசையில் எழுதப்பட்ட இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வாசிக்க மிக இலகுவாக இருக்கும்.

எளிய நடைமுறையில் எழுதப்பட்ட இந்நாவல் கருத்துகளை மட்டும் ஆழமானதாய் கொண்டு இருக்கும்.

இந்த கதையில் வருபவன் - தனது விருப்பத்தை சாதிக்க பாதி உலகம் வரை அலைந்து திரிந்து - தனது இலக்கு என்ன, அது இருந்தது தனது காலடியில் தான் என்பதை உணர்ந்து வருவது தான் கதை. இந்த கதையில் குறிப்பிட படும் செயல்பாடுகளை வெறும் செயல்பாடுகளாய் மட்டும் விளங்கி கொள்ளாமல், ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தை விளக்குவதற்காக நடைபெறுகிறன என்று விளங்கி கொள்ள வேண்டும். ஆணித்தரமாக ஒரு விருப்பு எமது அடிமனதில் தோன்றுமாயின் அது நடந்தே தீர வேண்டும் என்ற நியதி இந்த பிரபஞ்சத்தில் எழுத பட்டு இருக்கும்.... - அது எவ்வாறாகினும் நடந்தே தீர நாம் விடாமுயற்சியில் ஈடுபடுவோமாயின், பிரபஞ்சமே எமக்கு வளைந்து கொடுக்கும் அதை நடத்தி வைக்க... என்ற கருத்து தான் கதையின் மையம்... கதை வாசிப்பதில் நாட்டம் இல்லாதவர்களும் இதை வாசித்து வாழ்கையில் கொஞ்சம் நம்பிக்கை, பிடிப்பு கொண்டு இருக்கிறார்கள்...

இந்த புத்தகத்தை மிக பத்திரமாக நெடுநாள் வைத்து இருந்தேன்.... அண்மையில் வேலையிடத்தில் ஒரு கிரகசேர்க்கை மிகவும் தன்னம்பிக்கை அற்று மனமொடிந்து வாழ்கையை தொலைத்தது போல அடிக்கடி ஏதாவது சொல்லி அறுத்து கொண்டே இருந்தது - அது இந்த புத்தகத்தை வாசித்து பிரயோசன படும்...இல்லாட்டி கொஞ்சம் என்னை என்றாலும் அறுக்காமல் இருக்கும்...என்று எண்ணி அதிடம் கொடுத்தேன்...

கிரகம் அடுத்த கிழமையும் தொடர்ந்து அறுக்க - கேட்டேன், "அம்மணி நீ நான் தந்த புத்தகத்தை பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று... "எந்த புத்தகம்?! ஒ... ஐயோ நான் அதை எங்கேயோ வைத்து விட்டு மறந்து விட்டேன் - வீட்டுக்கு கூட எடுத்து போகவில்லை!! என்ற - "வெங்காயம் - வாழ்கையில் நம்பிக்கையை தான் தொலைத்து விட்டது என்றால் - கையில் கொடுத்த - நான் இவ்வளவு காலம் கவனமாய் வைத்திருந்த புத்தகத்தையும் தொலைத்து விட்டது! கியல வேடக் நை!!!" ^_^ என்று நினைத்து விட்டு கடுப்பேறி பேசாமல் இருந்து விட்டேன்.... !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் தொடர்கின்றேன்.........................................

....

-------

ஒரு விடயத்தினை தெளிவாகவும், திறனாகவும் என்னால் எழுத முடியும் என்று நம்பிக்கை தந்த என் மொழி இன்று என்னை விட்டு வெகு தூரம் போய்விட்டது. எதனை எழுத முயன்றாலும் அதனை எழுதும் போது இயலாமையும் எரிச்சலும் குற்ற உணர்வும், அதனால் மற்றவர்களை குற்றம் சாட்டும் மொழியுமே வந்து கலக்கின்றது. இவற்றில் இருந்து வெளிவரவாவது சில விடயங்களை மீண்டும் எழுத / தொடர விரும்புகின்றேன்.

இந்த திரியில் நான் ஏற்கனவே பயன் படுத்திய மொழிப் பயன்பாட்டிற்கும் இனி எழுத போகின்ற மொழியிற்கும் இடையில் இருக்கக்கூடிய வேறுபாட்டில் எமது மொத்த அவலத்தின் சிதைவும் பதிந்து இருக்கும்

நிழலி அண்ணா, இன்று தான் இந்த திரியை பார்த்தேன்...ஆக்கபூர்வமாய் உள்ளது.. சுவரசசியமாக போகிறது...

மீண்டும் இந்த திரியில் எழுத நீங்கள் முன்வந்திருப்பது சந்தோசம்...உங்களுக்கு நல்ல தமிழறிவு இருக்கிறது... ஈழத்து அவலங்களின் பாதிப்பு உங்கள் எழுத்தில் இருந்தாலும், தங்கள் எழுத்து தரமாகவே இருக்கும் என்று நம்புகிறேன்... (மூக்கு நோண்டுவது தவிர்த்து! :wub: !!)

உங்களது தனிப்பட்ட திரியில் நான் வாசித்த நாவலை பற்றிய பதிவையும் திணித்து விட்டேனோ என்று தோணுகிறது ^_^ ... நீங்கள் இதுவரை அந்த புத்தகத்தை சந்திக்கா விட்டால், சந்தர்ப்பம் கிடைத்தால் வாங்கி வாசியுங்கள். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

:o

  • தொடங்கியவர்

தொடருங்கள் நிழலி...எல்லா விதமான புத்தகங்களை பற்றியும் எழுதுங்கள்.தமிழ் புத்தகங்களையும் தெரிவு செய்யுங்கள்.

என் கணினி தொழில் சம்பந்தமான புத்தகங்களை ஆங்கிலத்தில் வாசிப்பதை தவிர மற்ற அனைத்தும் தமிழில் தான் வாசித்துள்ளேன். முக்கியமாக ஆங்கிலத்தில் வாசிப்பது கிடையாது. ஒன்றி தமிழ் புத்தகங்கள் அல்லது தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட நாவல்கள்/கட்டுரைகள் என்பனவற்றையே வாசிக்க ஆர்வம். பழம் தமிழ் இலக்கியங்களில் சித்தர் பாடல்களும், கபிலரின் கவிதைகளும் வாசித்துள்ளேன்

உங்களது தனிப்பட்ட திரியில் நான் வாசித்த நாவலை பற்றிய பதிவையும் திணித்து விட்டேனோ என்று தோணுகிறது ^_^ ... நீங்கள் இதுவரை அந்த புத்தகத்தை சந்திக்கா விட்டால், சந்தர்ப்பம் கிடைத்தால் வாங்கி வாசியுங்கள். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

உங்களைப் போல் எல்லோரும் தாம் வாசித்த விடயங்கள், நூல்களை இந்த திரியில் அறியத்தந்தால் பெரும் உதவியாகவும் சுவரசியமாகவும் இருக்கும்.

  • தொடங்கியவர்

தொடர்ச்சி அறுந்தமையால் மீண்டும் இதனை இணைக்கின்றேன்

பகுதி 2

புத்தகத்தின் பெயர்: குழந்தை போராளி

சுய சரிதம், எழுதியவர்: சைனா கெய்ரெற்சி

தமிழாக்கம்: தேவா

வெளியீடு:கருப்பு பிரதிகள்

அண்மைக் காலங்களில் என்னை மிகவும் பாதித்த ஒரு வாசிப்பு என்றால் அது இந்த சுயசரிதம் தான். ஒன்பது வயதிலேயே குழந்தை போராளியாக்கப்பட்ட பெண்ணான 'சைனா கெய்ரெற்சியின்' பறிக்கப் பட்ட குழந்தை பருவத்தின் துயரம் எனக்குள் இட்டுச் செல்லும் வலிகள் ஏராளம். 'சைனா' வின் சரிதத்தையும் அவ்வாறு குழந்தை போராளியாக மாறிய அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகளையும், போராளியாக்கப் பட்டபின் ஏற்பட்ட கடும் பாலியல் துன்புறுத்தல்களையும், ஊட்டப் பட்ட போர் வெறியையும் புரிந்து கொள்ளும் போதுதான் ஏன் எல்லா மனித உரிமைவாதிகளும் அமைப்புகளும் குழந்தைகள், சிறுவர்கள் போராளியாக்கப் படுவதை கடுமையாக எதிர்கின்றன என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது.

எமது போராட்டத்தினை பயங்கரவாதமாக சித்திகரிக்க பயன்படும் ஆதாரங்களில் ஒன்று சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பதாகும். அப்படி சேர்க்கப் பட்ட சிறுவர்களுக்கு நடக்கும் பயங்கரங்கள் பற்றி உலகம் ஏற்கனவே அவ்வாறு சேர்க்கப் பட்ட சிறுவர்களின் துயர் மிகுந்த கதைகளை கேட்டு அறிந்து வைத்திருப்பதாலாகும். ஆனால் எமது சூழலும், இயக்க நடை முறைகளும், போராட தூண்டும் அரச பயங்கரவாதமும் முற்றிலும் வேறு வேறானவை என்பதை இந் நூல் வாசித்து முடிக்கும் போது என்னால் உணர முடிகின்றது. உலகம் ஒரே வகையான வர்ணத்தினை எல்லா இடமும் பூச முற்படுவதன் பின்னணி, சிறுவர்களை போராளியாக்கும் அரசியலையும், அரசுகளையும் என்றுமே அவை ஆதரித்து வந்தமையாலாகும்.

'சைனா கெய்ரெற்சி' (இனி இவரை 'சைனா' என்றே அழைக்கின்றேன்) உகண்டாவில் 1976 இல் 'துற்சி' இனக் குழுமத்தில் பிறக்கின்றார். அம்மாவை அப்பா சைனா பிறந்த பின் துரத்தி அடிக்கின்றார். தாயன்பு கிடைக்காது வளரும் சைனா கொடுமையும், சித்திரவதைகளும் செய்யக் கூடிய பாட்டியினால் ஆரம்ப காலங்களில் வளர்க்கப்படுகிறார். தந்தையாலும் பாட்டியாலும் மோசமான சித்திரவதைகளுடன் வளர்க்கப் படும் காலங்களில் பல தடவை கைகளும் கால்களும் அடி உதைகளின் மூலம் முறிக்கப்படுகின்றன. ஆப்பிரிக்க கண்டம் முழுதும் பரவிக் கிடக்கும் பெண் அடிமைத்தன முறைகளில் இவை மிக சாதாரண நிகழ்வாக போகின்றன. தந்தை இன்னொரு பெண்ணை மணம் முடிக்கின்றார். இப்பொது பாட்டியிடம் இருந்து தந்தையின் புதிய மனைவிற்கு 'சைனா' வை வளர்க்கப் படும் பொறுப்பு மாறுகின்றது, ஆனால் அதே சித்திரவதைகளும் அடி உதைகளும் தொடர்கின்றன். சைனா ஒன்பதாவது வயதில் தன் உண்மையான தாயை தேடி தனியே பயணம் போகின்றார். போகும் போது வழி தவறுகின்றது. ஈற்றில் போராளிகளின் பயிற்சி முகாமை தவறுதலாக சென்றடைகின்றார்

அது உகண்டாவில் 'இடி அமீன்' காலத்தின் அடுத்த கட்டம். மில்ரன் ஒபாடேக்கு (சனாதிபதி) எதிராக `NRA (National Resistance Army) என்ற இயக்கம் துற்சிகளின் ஆதரவை பெற்று கிளர்ச்சி செய்கின்றது. அரசு அமைக்கும் அதிகாரம் தமக்கு வேண்டும் என்று இவ் அமைப்பு போரிட்டது. அதில் தான் `சைனா`உள் வாங்கப் படுகின்றார். குறுகிய ஆயுதப் பயிற்சியின் பின்னர் நேரடியாக கள முனைக்கு அனுப்பபடுகின்றார். அப் படையின் (ண்றா) தளபதிகள் தமக்கு முன்பாக குழந்தை படையணிகளையே அனுப்புகின்றனர். முற்றிலும் குழந்தைகளாலான படைகள் தான் கடும் பலத்துடன் இருக்கும் உகண்டாவின் படையணிகளுடன் போரிடுகின்றனர். நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் குழந்தைகள் கொல்லப் படுகின்றனர். சண்டையின் பின் தளபதிகளால் போர் வெறியூட்டப்படுகின்றனர். கைது செய்யப் பட்ட எதிரிகளை அடித்தே கொல்லும் பணிக்கு குழந்தைகளையே பயன்படுத்துகின்றனர். தளபதிகள் படையணியில் இருக்கும் பெண் குழந்தைகளுடன் சல்லாபிக்கின்றன்றனர். தமக்கு விரும்பிய குழந்தை பெண் போராளிகளை பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகின்றன

  • தொடங்கியவர்

குழந்தை போராளி பற்றிய என் குறிப்பின் தொடர்ச்சி

உலகம் விடுதலை போராட்டங்களை எப்படி பார்க்க விளைகின்றது, ஊடகங்கள் எப்படி அவற்றை பார்க்கின்றன என கேள்விகள் எழும்போது, அவை வெறும் அரசியல் ரீதியில் மட்டும் அன்றி தமது சொந்த அனுபவங்களினூடும், தாம் அருகில் இருந்து கேட்ட அனுபவங்களின் சாராம்சத்துடனும் கூட பார்க்க முனைகின்றன என நம்புகின்றேன். சைனா கெய்ற்ரெற்சி இணைந்து கொண்ட அமைப்புகளின் இயக்கங்களின் தலைவர்கள் எல்லாம் தம்மை மட்டுமே முன்னிலைப் படுத்தி அற்ப சுகங்களிற்காக பெரும் எண்ணிக்கையில் குழந்தை போராளிகளை படையில் பலவந்தமாக இணைக்கும் தலைவர்களாகவே இருக்கின்றனர் (இது ஆபிரிக்க போராட்ட இயக்கங்கள் பலவற்றில் இன்றும் காணக் கிடைக்கும் ஒரு விடயம்). அவர்கள் தம்மை தேசியத்தலைவர்களாக கூறிக் கொள்கின்றனர். தாம் சார்ந்த இனத்தின் மீட்பர்களாக தம்மை உருவகப் படுத்துகின்றனர். இவற்றினை அவர்கள் பெரிய வளர்ந்தவர்களை விட சிறியவர்களை இலகுவில் நம்ப வைக்க முனைகின்றனர். எனவே அதிகம் கூடிய அளவில் சிறுவர்களை படையில் சேர்க்கின்றனர். தாம் கடவுள்கள் போன்றவர்கள் என்றும் சூரியனின் வம்சம் என்றும் சொல்லி தம்மை பின் பற்ற சொல்கின்றனர். ஈற்றில் அற்ப பதவிகளை அடைந்த பின் அந்த சிறுவர்களை தம் வக்கிரம் நிறைந்த பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர்.

'சைனா' வின் இந்த சுய சரிதத்திற்கும் அது தொட்டுச் செல்லும் விடயங்களைப் பற்றியும் அது உலகில் எழுப்பும் கேள்விகளைப் பற்றியும் ஆகக் குறைந்தது 10 பக்கங்களாவது எழுதலாம். எம் தேசிய விடுதலைப் போராட்டத்தினை கரிசனையுடன் பார்க்கும் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது. சிறுவர் படை சேர்ப்பு எனும் ஒன்றின் இன்னொரு பக்கத்தையும் அது எந்தளவுக்கு எம் போராட்டத்தில் கருத்தியல் ரீதியாக கபடத்தனமாக எதிரியால் கையாளப் பட்டுள்ளது என்பதையும் புரிய உதவும். தான் கொண்ட இலட்சியத்திற்காய் தன் பிள்ளைகளை கூட களத்தில் பலி கொடுத்த தலைவனுக்கும், தான் படையில் சேர்த்த பெண் பிள்ளைகளை வன்புணர்வு கொண்ட விடுதலை இயக்கங்களின் தலைவர்களுக்கும் இடையான வேறுபாடு புரியும்

Edited by நிழலி

நிழலி அண்ணா குழந்தைப் போராளியின் சுயசரிதை படித்தேன். நன்றாகவும் ஆக்கபூர்வமானதாகவும் உள்ளது. அடுத்த திரியை வாசிக்க ஆவலாக உள்ளது. நன்றி அண்ணா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக்கபூர்வமான திரி நிழலி...

வாழ்கையில் பாதி அகதியாக உள்நாட்டிலும், மீதி வெளிநாட்டிலும் சென்றதால் ஓர் இடத்தில்லிருந்து வாசித்த அனுபவம் இல்ல்லை. சமீபத்தில் இரண்டு தமிழ்ப்புத்தகம் சென்னையிலிருந்து வாங்கிவந்து வாசித்தேன், கள்ளிக்காட்டு இதிகாசம் மற்றும் கருவாச்சி காவியம், இரண்டுமே என்னை அந்த கிராமங்களுக்குச் சென்று வாழ்க்கை நடத்திய மாதிரியும் மற்றும் முடியும் போது அந்த கிராமத்தை விட்டு வெளியேறிய போன்ற ஒரு எண்ணத்தையும் உருவாக்கியது. இரண்டுமே இலகுவாக வாசிக்ககூடியவை.

சிறுவயதில் எங்களால் கிரகிக்கவோ, விளங்கவோ முடியாத எத்தனையோ விடையங்கள் இப்போது புரிகிறது. முக்கியமாக நீங்கள் யாரும் கிராமப்புறங்களில்லிருந்து வந்திருந்தால் இப்புத்தகதின் பல இடங்களில் உங்களை தொடர்புபடுத்தமுடியும்.

சிவராம்தான் என்னை ரஷ்ஷிய நாவல்கள் வாசிக்க தூண்டினார் என நினைக்கின்றேன்.

மிக்காயில் சலகாவ் எழுதிய 'அவன் விதி' என்ட புத்தகம் வாசித்தீருக்கிறீங்களா?

அண்ணே.. அந்த சென் ஜோன்ஸ் கொலிஜ் லைபிரரி டீச்சரை நல்ல ஞாபகம்.. நான் என்பாட்டுக்கு தேமேயெண்டு தமிழ் புத்தகங்களை எடுத்துக்கொண்டிருக்க.. அவதான் என்னை புடிச்சுவைச்சு ரெண்டு தமிழ் புத்தகம் எடுத்தா ஒரு ஆங்கில புத்தகமும் எடுக்கவேண்டும் எண்டு பிரச்சினையெல்லம் பன்னி... என்னை வண்ணர்பண்ணை லைபிரரியில் சரணடையபண்னினவ....

அதல்லாம் ஒருகாலம்.... என்ன ஒரு இனிமையான வாழ்க்கை.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு திரி. வாசிக்கும் பழக்கம் குறைந்து வரும் நாளில் மிகவும் நல்ல முயற்சி. நான் வாசித்த நூல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

பாஸ்ட் பூட் (macdonalds,Taco..உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவர்கள் (உண்மையை அறிந்து கொள்ள விரும்புபவர்கள்

Fast food nation by Eric Schlosser வாசித்து பாருங்கள். மிகவும் சுவாரசியமான நூல்.

  • 6 months later...
  • தொடங்கியவர்

நாவல்:'ம்'

எழுதியவர்: சோபாசக்தி

0.

இந்த நாவலைப் போல் இதுவரைக்கும் என்னை முற்றிலுமாக ஆக்கிரமித்த நாவலை படிக்கவில்லை. உணர்வுத் தளத்தில் அது எழுப்பிய அதிர்ச்சியும், என் பயன்பாட்டு மொழியில் அது ஏற்படுத்திய செழுமைமிக்க வீச்சும், என் அரசியல் தளத்தில் அது எழுப்பிய கேள்விகளும் ஏராளம். என் அம்மாவில் இருந்து, என்னுடன் பழகிய அனைத்து புத்தகம் வாசிக்கும் பழக்கமுள்ள / பழக்கம் இல்லாத நண்பர்கள் வரை இந்த நாவலை கொடுத்து வாசிக்குமாறு தூண்டி இருக்கின்றேன். அதனை வாசித்த அனைவரையும் ஆழ ஊடூருவி உழுக்கிய நாவலாகவே இது இருந்தது

என் சிறந்த நண்பன் ஒருவனுக்கு இந்த நாவலை கொடுத்து விட்டு இதனை வாசித்து முடித்த பின் உன்னால் எனக்கு தொலைபேசாமல் இருக்க முடியாது என்று கூறினேன். சில நாட்களின் பின் அவன் அதிகாலை 3 மணிக்கு தொலைபேசியில் அழைத்தான். "இப்பதாண்டா வாசித்து முடித்தேன்.. முடித்த பின் என்னால் சரியாக நித்திரை கொள்ள முடியாமல் அதைப் பற்றியே சிந்தனை போகுது.. வெளியே வந்து ஒரு சிகரட்டை பத்த வைத்துக் கொண்டு உன்னோட கதைப்பம் என்று தொலைபேசியில் அழைத்தேன்' என்றான்.

புலம் பெயர் எழுத்தாளர் ஒருவரால், வெலிகடை படுகொலையையும் கந்தன் கருணை படுகொலையையும் ஒரே நிரையில் வைத்து எழுதிய இந்த நாவலை உங்களில் சிலர் நிச்சயம் வாசித்து இருப்பீர்கள்.

1.

வாழ்நாள் தோறும் அவலங்களை சந்தித்து பல படுகொலைகளையும் கண்ணுற்று சித்திரவதைகளையும் அனுபவித்த ஒரு மனிதனின் உணர்வுகளும், நியாயங்களும், அவனது ஆசை, காமம், கோபம் என்பனவும் இவற்றை அனுபவிக்காத ஒருவரால் புரிந்து கொள்ளப்பட முடியுமா? அப்படிப்பட்ட ஒருவரிடம் போலிப் புனைவுகளை கட்டமைப்பாக கொண்ட ஒரு சமூகம் எதனை எதிர்பார்க்கும்? ஆகக் குறைந்தது அப்படிப் பட்டவரை புரிந்து கொள்ளவாவது அது பிரயத்தனம்படுமா?

எம் விடுதலைப் போராட்டத்தின் மறக்கமுடியாத அவலங்களையும் துரோகங்களையும் ஒருவன் எதிர் கொள்கின்றான். வெலிகடைச் சிறையில் அவன் முன்னால் அவனது சக நண்பர்களில் இருந்து சிறுவன் வரை வெட்டிக் கொல்லப்படுகின்றனர். வெளியே வந்த கொஞ்ச நாளில் இயக்க மோதல்களால் அவனது இனத்தைச் சேர்ந்தவர்களாலேயே வலிகளை அனுபவிக்கின்றான். பின் புலம்பெயர்கின்றான். அவனுக்கும் கல்யாணம் நடக்கின்றது, மனைவியுடன் உடலுறவு கொள்கின்றான், பிள்ளை பிறக்கின்றது,பிள்ளையை வளர்க்கின்றான்

எல்லாம் நல்லபடியாகத்தான் நடக்கின்றன. ஆனால் அத்தனை அவலங்களை அனுபவித்த/கண்ட ஒரு மானுட மனம் தானியங்கும் சமூகத்தின் விதிகளை ஏற்றுக்கொள்ளுமா? எந்த விதிகள் அவனது இன்னல்களை தடுக்க முனையவில்லையோ அல்லது அந்த இன்னல்களைத் தந்ததோ, அதே விதிகளுடன் அவனால் என்றுமே சமரசம் செய்ய முடியுமா? ஒரு மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுதான் அவலங்களை எதிர்கொள்ள முடியும். மனித மனோவியலும் அதற்கேற்றாப் போல்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த குறிப்பிட்ட அளவு எல்லை மீறும் போதும் சமூகம் அந்த மனிதனை எப்படி எதிர்கொள்ளும்

அவன் மீறுகின்றான்...மரபு எல்லைகளை மட்டுமன்றி மானுட உறவின் வேலிகளைக் கூட மீறுகின்றான். அவனுக்கு அது நியாயமாக படுகின்றது. அவனது நியாயங்களை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா இல்லையா என்பதற்கு அப்பால் எம் தனி மனித நியாயங்கள் அவனது இன்னல்களை தடுக்க முனையாமல் தோற்றன என்பதையாவது ஏற்றுக் கொள்ள வேண்டி வருகின்றது.

2.

இந்த நாவலின் முடிவையோ அல்லது கதையையோ எழுதினால் இந்த நாவலை பற்றி எழுதுகின்றேன் என்ற ரீதியில் அதனை கொலை செய்ததாகி விடும். எனவே தவிர்க்கின்றேன்

நாவல் முழுதும் படிமங்களாக கிடக்கும் நாம் கண்ட, கேட்ட, அனுபவித்த துயரங்களை கடக்கும் போது ஏதோ ஒரு புள்ளியிலாவது எம்மை கண்டு கொள்ள முடிகின்றது. நாமும் அந்த துயரங்களின் சிறு அளவினையாவது நிச்சயம் அனுபவித்திருப்போம் அல்லது கடந்து போயிருப்போம் எனும் போது நாவலுக்கும் எமக்குமான இடைவெளி மிகவும் குறைகின்றது. நாவலை வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நாவலில் நாமும் ஒரு பாத்திரமாக மாறுகின்றோம். வலிகளை அனுபவிக்கின்றோம், அழுகின்றோம், ஆக்ரோசப்படுகின்றோம், தப்பித்து புலம்பெயர்கின்றோம். ஈற்றில் நாவல் முடிவில் 'நாம் இப்படிச் செய்ய மாட்டோம்' என்று சமாதானம் செய்கின்றோம்

நாவலில் வெலிகடை படுகொலைக்கும் கந்தன் கருணை படுகொலைக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமை நெஞ்சை சுடுகின்றது. வெலிகடையில் அறுத்தெறியப்படும் சிறுவனின் இரத்தமும், கந்தன் கருணையில் கொல்லப்படும் முன்னால் போராளியின் இரத்தமும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன எனும் உண்மை நாவலில் கடந்து போகையில் வெறுமை அப்பிக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை (கூடவே குற்றவுணர்வும்)

3.

புலம் பெயர் தமிழ் இலக்கியத்தில் சோபா சக்தியின் பங்களிப்பு மிக உயர்வானது. அவரது அரசியலை வெறுப்பவர்கள் அவரது இலக்கியத்தையும் வெறுப்பது வேதனை. எனதும் அவரதும் அரசியல் பார்வைகளும், அடிப்படை கருத்துகளும் முற்றிலும் வேறானவையாக இருப்பினும் அவரது இலக்கிய படைப்புகள் அனைத்தும் என்றுமே என் விருப்பிற்குரியவை. இப்படிச் சொல்வது கூட ஒரு வகை முன்னெச்சரிக்கையாக போய்விடுகின்றது தமிழ் தேசியத்தின் பெயரால் வழங்கப்படும் 'துரோகி' எனும் இலவச பட்டமளிப்பால்

4.

கனடா எங்கும் தமிழ் புத்தக கடைகளில் 'ம்' இன் இரண்டாம் பதிப்பை வாங்கலாம் (முருகன் புத்தகசாலையில் நிறைய கிடக்கு). நிச்சயம் ஐரோப்பாவிலும் ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

================================================================

மிக்காயில் சலகாவ் எழுதிய 'அவன் விதி' என்ட புத்தகம் வாசித்தீருக்கிறீங்களா?

அண்ணே.. அந்த சென் ஜோன்ஸ் கொலிஜ் லைபிரரி டீச்சரை நல்ல ஞாபகம்.. நான் என்பாட்டுக்கு தேமேயெண்டு தமிழ் புத்தகங்களை எடுத்துக்கொண்டிருக்க.. அவதான் என்னை புடிச்சுவைச்சு ரெண்டு தமிழ் புத்தகம் எடுத்தா ஒரு ஆங்கில புத்தகமும் எடுக்கவேண்டும் எண்டு பிரச்சினையெல்லம் பன்னி... என்னை வண்ணர்பண்ணை லைபிரரியில் சரணடையபண்னினவ....

அதல்லாம் ஒருகாலம்.... என்ன ஒரு இனிமையான வாழ்க்கை.......

இல்லை பனங்காய்...தகவலுக்கு நன்றி.. தேடிப்பார்க்கின்றேன்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நான் இக் கதாசிரியரின் கொரில்லா என்ற நாவல் மட்டுமே வாசித்து உள்ளேன்.நீங்கள் எழுதியதை வைத்துப் பார்க்கும் போது இந் நாவலையும் வாசிக்க வேண்டும் போல இருக்கிறது...ஈழத்தில் சிறந்த எழுத்தாளார்களில் இவரும் ஒருவர் ஆனால் இவரெல்லாம் முன்பு புலியில் இருந்து விட்டு தற்போது எதற்கு புலி எதிர்ப்பு புராணம் பாடுகிறார் எனத் தெரியவில்லை...சமீபத்தில் கூட இந்தியாவில் புலிக்கு எதிராக எதோ குறும்படம் எடுக்க தொடங்கி ஏதோ பிரச்சனைப்பட்டார் என ஓர் இனையத்தில் படித்தேன் ஆனால் எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வாசிக்கும் புத்தகங்களைப்பற்றி நாமும் அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். பின்னர் அந்த புத்தகங்களை தேடி வாசிக்கலாம்.

"வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான்" இதுவே என் வீட்டில் எனது றூமில் நான் வைத்திருந்த வாசகம்.

"கண்டதையும் படித்தால் பண்டிதன் ஆகலாம்" இதுதான் எனது பொலிசி (இதன் உண்மை கருத்து வேறு) இதனால் தான் யாழையும் வாசிக்கின்றேன்.

தெரிந்த முதல் கதை-இரட்டை வால் இரண்டு ,கதை - சுஜாதா. ஓவியம் - ஜெயராஜ்.

பின் சுஜாதா,ஜெயகாந்தன்,மாலன்,பாலகுமாரன்,புஸ்பா தங்கத்துரை, பட்டியல் ரொம்ம்ப நீளம்.

பின் டெல்கியில் பொழுதுபோகாமல் ரஸ்ய,அமெரிக்கா லைபிரரிகளில் மெம்பராகி பல ரஸ்ய கதைகள்,அவர்களின் தொடர்பால் 20 சென்சுரி புத்தகசாலை என்று நினைக்கின்றேன் பல மொழி பெயர்ப்பு கதைகள்.(கார்கியின் தாய் முதல் டொல்டோயின் வார் பீஸ் அன் வரை)

பின் எமது எழுத்தாளர்கள் எஸ் பொ, உமா வரதராஜன்,முத்துலிங்கம்,(திகட சக்கரம் அந்தமாதிரி)

பின் ஜெயமோகன்,ராமகிருஸ்னன்,

இப்போ சோபா சக்தி,ஜெயபாலன்,சயந்தன்,சாந்தி என்று தொடருது,

யாருக்கும் இன்னதுதான் வாசித்தால் தான் நல்லாக இருக்குமென்றால் எங்கே கிடைக்கும் என்று அறியத்தருகின்றேன்

  • தொடங்கியவர்

பெயர்: பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் 1 & 2

ஆங்கிலத்தில்: மார்வின் ஹாரிஸ்

தமிழில்: துகாராம் கோபால்ராவ்

வகை: கட்டுரை (சமூகவியல்)

0:

எங்கள் வீட்டில் அப்பா மாட்டிறைச்சி சாப்பிடுவார். ஆனால் அம்மாக்கு பிடிக்காது. சிவன் மாட்டில் ஏறித்தான் Rounds போவார் என்றும் மாடு இந்துக்களின் புனித மிருகம் என்று சொல்லி வீட்டில் சமைக்க மாட்டா. அப்பா பொறுத்தது போதும் பொங்கி எழு சிங்கம் என்ற ரீதியில் தானே சமைத்து உண்ண ஆரம்பிக்க, நான் அவரில் தொற்றிக் கொண்டேன். இன்றும் எனக்கு மிக மிக பிடித்த கறி மாட்டிறைச்சிதான். ஆனால் 'நீ எல்லாம் ஒரு இந்து' வா என என் நண்பர்கள் இன்றும் கேலி செய்வர்

பசு (மாடு) ஏன் புனித மிருகமானது?

********

ஒரு நாள் என் முஸ்லிம் நண்பன் நான் டுபாயில் இருக்கும் போது குளிர்காலம் ஒன்றில் நான் குளிக்க போன நேரம் பார்த்து வழக்கம் போல A/C யினை உச்ச அளவில் வைத்து நான் நடுங்குவதை விளயாட்டாக ரசிக்க காத்து இருந்தான். ஒரு நாள் குளிர் தாங்காமல், "இன்னொரு முறை செய்தால் மவனே உன் சாப்பாட்டில் பண்டி இறைச்சியை கலப்பன்" என்று சொன்னேன். அன்றுடன் என்னுடன் விளையாட்டுக்காக செய்யும் வேலைகளைக் கூட முற்றாக விட்டு விட்டான்

பன்றி என்பது முசுலிம்களின் விரோதியாக ஏன் மாறியது?

*************

"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு" என்று யேசு நாதர் சொன்னார் என்பதை கேட்ட முதல் நாளிலேயே எனக்கு "எப்படி அவரால் இப்படி சாந்தாமாக இருக்க முடிகின்றது" என்று வியந்தேன். ஆனால் இயேசு நாதர் என்பவர் யுத்தம் செய்யும் ஒரு இனக்குழுமத்தில் வந்த ஒரு 'மொசையா' என்று அறிந்த முதல் அதிர்ந்து போனேன்

ஒரு மொசையா எப்படி சமயம் ஒன்றின் ஈடு இணையற்ற கடவுளானார்?

***************

1.

மேற் சொன்ன பல கேள்விகளை பொருளாதாரவியல் ரீதியில் (பார்வையில்) மிக தெளிவாக ஒருவர் விளக்கின்றார் என்றால், மதிப்பிற்குரிய "மார்வின் ஹாரிஸ்" அவர்கள் தான். பொருள்முதல்வாதமே கலாச்சாரத்தின் மூல கோள் என்பதை விளக்கின்றார்

மத நம்பிக்கைகள் ஒவ்வொன்றும், அந்தந்த காலகட்டத்தில் இருந்த பொருளாதார தேவைகளின் நிமித்தம் ஏற்பட்டது என்று தெளிவாக விளக்கின்றார்

உதாரணமாக, விவசாயத்தை முக்கிய வாழ்வாதாரமாக கொண்ட இந்தியாவில் தோன்றிய மக்கள் கூட்டம் எப்படி விவசாயிகளின் முக்கிய Tool ஆன மாட்டினை தம் இறைச்சியாக கொள்ள முடியும்?

வரண்ட பிரதேசத்தில் ஆற்றின் படுக்கைகளில் குடியேறிய அரபினத்தவர்கள் மனிதர்களைப் போல் தாவர / தானிய உணவு மட்டும் உண்ணும் பன்றியை வளார்த்தால் பஞ்சம் வராதா?

இந்த கட்டுரை தொகுப்பு பற்றி மேலும் தொடர்வேன்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்....இந்தப் பகுதியையும் தொடருங்கள்..அப்படியே பேரிச்சை மரத்துக்கும் போய் தண்ணியை ஊத்தி,உரம் போட்டு வளர்க்கப் பாருங்கள்.பேரீச்சை பட்டுப் போகப்போகிறது.நன்றி.

  • 3 months later...

ஒவ்வொரு இனக்குழுமத்திலும் மதங்களிலும் குரூரம் என்பது ஒரு அம்சமாகவே இருந்திருக்கின்றது என்பதையும் இருந்து வருகின்றதென்பதையும் இந்த கட்டுரைத் தொகுப்பில் அறியக்கூடியதாக இருக்கின்றது. ஐரோப்பியாவில் ஒரு காலத்தில் சூனியக்காரிகள் சாத்தானை வழிபட்டு தீய சக்திகளை பெற்றுக் கொண்டு மக்களுக்கு இன்னல்கள் தருகின்றனர் என நம்பி பலரை மிக மிக கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். ஒரு ஆயிரம் இரண்டாயிரம் என்ற எண்ணிக்கையில் அல்ல, இலட்சக்கணக்காக கொன்றுள்ளனர். சூனியக்காரிகளை மட்டுமல்லாது அவர்களின் முழுக்குடும்பத்தையும் கொடூரமாக கொன்றுள்ளனர்.

மதங்கள் என்பது ஒரு மக்கள் கூட்டத்தின் பொருளாதார, வாழ்வாதார சாரங்களின் கடைந்தெடுக்கப்பட்ட பதார்த்தம் என்றே புரிந்து கொள்ள முடிகின்றது. ஒரு நாத்திகனான எனக்கு இந்த புத்தகம் மிகத் துல்லியமான உண்மைகளை பல சாளரங்களினூடு தரக்கூடியதாக இருந்தது. இன்றும் கடவுளையும் சாத்திரங்களையும் மறுத்து உரையாடும் போது இந்தப் கட்டுரைத் தொகுப்பில் அறிந்த கொண்ட பல விடயங்கள் தானாகவே வந்து விடுகின்றன

  • தொடங்கியவர்

குழந்தை போராளி பற்றிய என் குறிப்பின் தொடர்ச்சி

உலகம் விடுதலை போராட்டங்களை எப்படி பார்க்க விளைகின்றது, ஊடகங்கள் எப்படி அவற்றை பார்க்கின்றன என கேள்விகள் எழும்போது, அவை வெறும் அரசியல் ரீதியில் மட்டும் அன்றி தமது சொந்த அனுபவங்களினூடும், தாம் அருகில் இருந்து கேட்ட அனுபவங்களின் சாராம்சத்துடனும் கூட பார்க்க முனைகின்றன என நம்புகின்றேன். சைனா கெய்ற்ரெற்சி இணைந்து கொண்ட அமைப்புகளின் இயக்கங்களின் தலைவர்கள் எல்லாம் தம்மை மட்டுமே முன்னிலைப் படுத்தி அற்ப சுகங்களிற்காக பெரும் எண்ணிக்கையில் குழந்தை போராளிகளை படையில் பலவந்தமாக இணைக்கும் தலைவர்களாகவே இருக்கின்றனர் (இது ஆபிரிக்க போராட்ட இயக்கங்கள் பலவற்றில் இன்றும் காணக் கிடைக்கும் ஒரு விடயம்). அவர்கள் தம்மை தேசியத்தலைவர்களாக கூறிக் கொள்கின்றனர். தாம் சார்ந்த இனத்தின் மீட்பர்களாக தம்மை உருவகப் படுத்துகின்றனர். இவற்றினை அவர்கள் பெரிய வளர்ந்தவர்களை விட சிறியவர்களை இலகுவில் நம்ப வைக்க முனைகின்றனர். எனவே அதிகம் கூடிய அளவில் சிறுவர்களை படையில் சேர்க்கின்றனர். தாம் கடவுள்கள் போன்றவர்கள் என்றும் சூரியனின் வம்சம் என்றும் சொல்லி தம்மை பின் பற்ற சொல்கின்றனர். ஈற்றில் அற்ப பதவிகளை அடைந்த பின் அந்த சிறுவர்களை தம் வக்கிரம் நிறைந்த பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர்.

'சைனா' வின் இந்த சுய சரிதத்திற்கும் அது தொட்டுச் செல்லும் விடயங்களைப் பற்றியும் அது உலகில் எழுப்பும் கேள்விகளைப் பற்றியும் ஆகக் குறைந்தது 10 பக்கங்களாவது எழுதலாம். எம் தேசிய விடுதலைப் போராட்டத்தினை கரிசனையுடன் பார்க்கும் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது. சிறுவர் படை சேர்ப்பு எனும் ஒன்றின் இன்னொரு பக்கத்தையும் அது எந்தளவுக்கு எம் போராட்டத்தில் கருத்தியல் ரீதியாக கபடத்தனமாக எதிரியால் கையாளப் பட்டுள்ளது என்பதையும் புரிய உதவும். தான் கொண்ட இலட்சியத்திற்காய் தன் பிள்ளைகளை கூட களத்தில் பலி கொடுத்த தலைவனுக்கும், தான் படையில் சேர்த்த பெண் பிள்ளைகளை வன்புணர்வு கொண்ட விடுதலை இயக்கங்களின் தலைவர்களுக்கும் இடையான வேறுபாடு புரியும்

குழந்தைப் போராளியின் சுயசரிதை பற்றிய என் குறிப்பினை வாசித்து பலர், அதனை எங்கு வாங்கலாம் என்று கேட்டிருந்தனர். நான் வழக்காம on-line இல் வாங்கிய இணையம் இப்போது தொழிற்படாமல் போய்விட்டதனால் அவர்களுக்கு பதில் கொடுக்க முடியாது இருந்தது. இப்போது வடலி இணையமும் (வடலியில் பெடிகளில் முக்கியாமனவர்களில் ஒருவர் எமது சக கள உறுப்பினர் சயந்தன் என்பது உங்களுக்கும் தெரியும்தானே) இதனை விற்கின்றது

இங்கே வாங்கலாம்: vadaly.com/

  • கருத்துக்கள உறவுகள்

அ.முத்துலிங்கம் கதைகள்: http://noolaham.net/project/01/46/46.pdf

அக்கா: http://www.noolaham.net/project/13/1210/1210.pdf

அங்க இப்ப என்ன நேரம்: http://noolaham.net/project/01/47/47.pdf

திகட சக்கரம்: http://noolaham.net/project/01/85/85.pdf

மகாராஜாவின் ரயில்வண்டி: http://noolaham.net/project/02/132/132.pdf

வடக்குவீதி: http://noolaham.net/project/01/87/87.htm

வம்சவிருத்தி: http://noolaham.net/project/01/86/86.pdf

ஆஹா... நல்ல இணைப்புகள்...

வடக்கு வீதியை வாசிக்க வேண்டும் என்று இருந்தேன், அதனைத் தந்த தோழனுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.....மிகவும் பயன் உள்ள இணைப்புக்களை இணைத்திருக்கிறார் நுணா அண்ணா.மிகவும் நன்றிகள் அவருக்கு.நன்றி. :D

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல திரி..

நான் வாசித்ததில், குறிப்பிட்டு சொல்லக்கூடியது என்றால் " வோல்காவில் இருந்து கங்கை வரை" முந்தி வாசித்தேன். யாரோ ஒரு முக்கியமானவர் சொன்ன தான் படித்த புத்தகங்கள் என்ற லிஸ்ட் இருந்தது. இந்த கதைகள் எப்படி நதிகர மக்களின் வாழ்வு , அவர்களுடைய வாழக்கை முறை பற்றி சொல்லுவது. நிறைய "A " விடயங்கள் வரும். நான் அதற்காகவே அந்த வயதில் வாசித்தேன்..13 / 14 ...

மற்றது அதே காலத்தில் வாசித்தது "அபிரகாம் லிங்கன்" சுய சரிதம் . நான் இருந்த இடத்தில் இருந்து 100 அடி, 1000 அடி பாய்ந்துள்ளேன் என்றால் அந்த புத்தகத்தின் தாக்கம்தான். நான் வாழ்ந்த இடத்தில் பாடசாலை விடுமுறைக்கு போனால் கேட்டும் கேள்வி "தம்பி வகுப்பு ஏற்றமோ" இதுதான் கேள்வி , அதுதான் அகக் கூடிய எதிர்பார்ப்பு . O /L பாஸ் பண்ணினால் விழா எடுக்காத குறையான ஊர். அந்த இடத்தில் இருந்து சிவனே என்று இப்ப இருக்கிற நிலைக்கு எனது "இலக்குகளை" தீர்மானிக்க அந்த புத்தகம் நிறைய உதவினது..

நிறைய பாலகுமார், புஸ்பா தங்கத்துரை..நோக்கம் தெரியும் தானே. ஏனோ ரமணி சந்திரன், சாண்டியன் பிடிப்பதில்லை..சமுத்திர கனி என்று நினைக்கிறன் "சமுதாய வீதி" என்று ஒரு நாவல் அந்த ஹீரோ மாதிரி கரட்டி எல்லாம் பழகி இப்ப வண்டி தொந்தியோடு உள்ளேன். எயகந்தன் சில புத்தகங்கள்...ஒரு நடிகை நாடகம் பார்க்கிறான், சில நேரங்களில் சில மனிதர்கள்...அடிப்படையில் எல்லாம் எ புத்தகம் தான்..அந்த வயசில் வாசிக்க பிடித்தவை..(அந்த நாவல்களில்/கதைகளில் நல்ல கருத்துக்கள் ஆயிரம் இருந்திருக்கும் ஆனால் பன்றி மாதிரி...

chemistry இல் புலியாக/ஆககுறைந்தது ஒரு நொண்டி புலியாக வந்தது " அந்த பெரிய வீட்டில் இருப்பவர்கள்' என்ற ஒரு ரசியன் புத்தகம். அப்பா நல்லூர் திருவிழாவில் வாங்கிதந்தவர், ஆவர்த்தன அட்டவணை பற்றி...9 ஆண்டில் கரைந்து குடித்து விட்டேன்....

மற்றது இப்ப பெரிய கவலை, படிக்க விரும்புவது, அமெரிக்கன் யுத்தங்கள் பற்றி, பில் கிளிண்டன் பற்றி..."பில் கிளிண்டன்' 2 தடவை புத்தம் எடுத்துக்கொண்டு வந்து திருப்பி கொடுத்தாயிற்று..பார்ப்பம் அடுத்த 3 வருடத்துக்குள் முடிக்கிற திட்டம்...அதை வாசித்த ஒருவர் சொன்னது, அவர் இஸ்ரேல், பாலஸ்தீன பேச்சுவாத்தில் ஒரு பெரிய பாத்திரம் வகித்ததாகவும், போரிவோரின் மனநிலைகள் மிக தெளிவாக எழுதியுல்லாதாகவும் சொன்னார்..வழமைபோல மொன்னிக்காவையும் பற்றி அறியவும் தான் :D

மற்றது நிழலி சொன்ன குழந்தை போராளி பற்றி வாசித்த நினைவு...இங்கே உள்ள லிப்ரர்ய்களில் தட்டி பார்க்கவும். மற்றது பலருக்கும் தெரிந்திருக்கும், தெரியாதவர்களுக்கை, இங்கே கனடாவில் உள்ள நூலங்களில், நாங்களும் புத்தகங்கள் ஒடர் பண்ணலாம். இப்ப ஒரு தமிழ் புத்தகம் தேவைஎன்ன்டால் ...போய் நூலகரிடம் சொல்லி ..ஆர்டர் பண்ணி எடுக்கலாம்...நான் செய்யவில்லை , எனது மனைவியின் நண்பிஒருவர் செய்கிறவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.