Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி இராணுவம் வசம்-அரச தரப்பு அறிவிப்பு

Featured Replies

வீரகேசரி இணையம்- கிளிநொசியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் தற்போது தேசிய கொடி பறப்பதாக ஆளுங்கட்சி பேச்சாளர் அமைச்சர் மைத்திரி பாலசிறிசேன தெரிவித்துள்ளார்.இது தேசிய ரீதியில் பெற்ற ஒரு வரலாற்று வெற்றியென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் கிளிநொச்சி நகரினுள் தற்போது நுழைந்து அங்கே பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுளுகல்ல தெரிவித்துள்ளார்.

வீரகேசரி

கொழும்பு பட்டாசு வெடிச்சத்தத்தினால் அதிர்ந்து கொண்டிருக்கின்றது.

வாழ்த்துக்கள்

குறிப்பு

இப்ப நான் சொல்லியிருக்கின்றன் இன்னும் கொஞ்நாளிலை மகிந்த எங்களிற்கு திருப்பி வாழ்த்து சொல்லவேணும்

  • தொடங்கியவர்

கிளிநொச்சியை கைப்பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் சில மணித்தியாலங்களில் - மஹிந்த 4 மணிக்கு உரையாற்றவுள்ளா.

கிளிநொச்சியை கைப்பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியிடப்படும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக தகவல் மையம் தெரிவித்துள்ளது. 57வது படையணியினர் இரணைமடு நகர் மற்றும் பரந்தன் பிரதேசத்தை நேற்று கைப்பற்றியதுடன் கிளிநொச்சிக்குள் பிரவேசித்திருப்பதாக ஊடக தகவல் மையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார். இதனால் இன்னும் சில மணித்தியாலங்களில் படையினர் கைப்பற்றி விடுவர் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை நாட்டுமக்களுக்கு இது தொடர்பில் மஹிந்த மாலை 4 மணிக்கு உரையாற்றவுள்ளா

www.globaltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்
:lol::lol::(
  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் சொல்லுறேன்.. சிங்களவன் அழிய போரான்... சிங்க கொடிய இதுக்கு முதலும் ரத்வத்தை என்ர நொன்டி எற்றினவர்.. பிறக்கு புலிக்கொடிய இயக்கம் அந்த இடத்தில பறக்க விடேல..

பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக

ம்ம்ம்கும்..

சரி கிளிநொச்சியும் போட்டுது, சோவும் முடிஞ்சுது,

இனித்தமிழனெண்டு இருக்கிறவங்கள் களத்தில நில்லுங்கோ........

மஹிந்தவின் பேச்சினை தொடர்ந்து கொழும்பே அதிர்ந்த வண்ணம் இருகின்றதாம். வெடிகுண்டு தாக்குதல் உட்பட. சேரிச் சிங்களவன் எல்லாம் சாரத்துடன் நடுச்சந்தியில் நின்று வெடி போடுகின்றானாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இணையம்- கிளிநொசியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் தற்போது தேசிய கொடி பறப்பதாக ஆளுங்கட்சி பேச்சாளர் அமைச்சர் மைத்திரி பாலசிறிசேன தெரிவித்துள்ளார்.இது தேசிய ரீதியில் பெற்ற ஒரு வரலாற்று வெற்றியென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் கிளிநொச்சி நகரினுள் தற்போது நுழைந்து அங்கே பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுளுகல்ல தெரிவித்துள்ளார்.

வீரகேசரி

கொழும்பு பட்டாசு வெடிச்சத்தத்தினால் அதிர்ந்து கொண்டிருக்கின்றது.

நடைபெற்றுக் கொண்டிருப்பது தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்கான போராட்டம் என்பதை நாம் மறந்து விடுகிறோம். இது வெறுமனே கிளிநொச்சிக்கான போராட்டமல்ல. இறுதி இலட்சியத்தை அடையும் வரை பின்வைக்கும் காலைக் கூட நிதானமாக வைக்க வேண்டிய கட்டத்திலே தமிழினம் நின்று கொண்டிருக்கிறது. சார்க் மாநாட்டுப் போர்வையில் வந்த இந்தியப் படைகளின் நேரடித் துணையோடு 17க்கு மேற்பட்ட நாடுகளின் அனைத்து வளங்களின் துணையோடு ஆக்கிமிப்பாளன் நிற்கிறான். இதை தன்னம்தனியாக தமிழினம் தனது மக்களின் பலத்தில் நின்று எதிர்கொள்கிறது. தொடர்ந்தும் எதிர்கொள்ளும்..........

  • கருத்துக்கள உறவுகள்

. .இது தேசிய ரீதியில் பெற்ற ஒரு வரலாற்று வெற்றியென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அப்ப 97 ஆண்டு கிளிநொச்சிய பிடிக்கேக்க அது வரலாற்று வெற்றி இல்லையோ..இப்ப மட்டும் அது வரலாற்று வெற்றியாம் யாருக்கு கதை சொல்லுரான் இந்த முட்டால் சும்மா ஏதோ எல்லாம் புலம்புறான் இந்த முட்டா

ராசா கிளிநொச்சி மறுபடியும் எங்கள் கைக்கு வரும்..அது மட்டும் இடத்தை வடிவா சுத்தி பாருங்கோ மாம்பழன் சாப்பிட ஆசையா இருந்தா போய் சாப்பிடுங்கோ.. இனி சண்டை என்டா ஒயாத அலை 4 தான் இருக்கும். அப்ப எல்லாத்தையும் அதில தமிழ் படை காட்டும்..

Edited by kuddipaiyan26

என்ன தான் நடக்கம் நடக்கட்டுமே ! இருட்டினில் நீதி மறையட்டுமே ! என்றாலும் நீயும் கலங்காதே ! எம் தலைவன் இருக்கிறான் கலங்காதே !

வெறும் நிலங்களை கைப்பற்றுவதன் மூலம் புலிகளை பலவீனமாக்க முடியாது. நடப்பவை ஓரளவு கசப்பானாதாய் இருந்தாலும் முடிவு நிச்சயம் இனிப்பானதாய் தான் இருக்கும். இது திண்ணம்.

வெறும் நிலங்களை கைப்பற்றுவதன் மூலம் புலிகளை பலவீனமாக்க முடியாது. நடப்பவை ஓரளவு கசப்பானாதாய் இருந்தாலும் முடிவு நிச்சயம் இனிப்பானதாய் தான் இருக்கும். இது திண்ணம்.

அனேகமாக இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு பகுதியினர் இராணுவத்தின் பிரதேசம் நோக்கி இடம்பெயர்வது இப்போது தவிர்க்க முடியாத விடயம். மாவிலாறு தொடங்கி இப்படித்தான் சொல்கின்றோம். பின் தளம் இல்லாது மரபு அணியாக போராட முடியாது. கெரில்லா போராட்டமாக மீண்டும் மாறுவது என்பது மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பது

இனி ஒரு வேளை புலிகள் ஒரு தாக்குதலை தொடங்கினால் அது ஓயாத அலைகள் 4 அல்ல என்று நினைக்கின்றேன். அது ஓயாத அலைகள் 5 ஆக பெயர் சூட்ட வேண்டும். ஓயாத அலைகள் 4 ஈழப்போர் 3 இல் யாழ் மீட்க ஆரம்பித்து (ஆனையிறவு கைப்பற்ற பின்னான காலகட்டத்தில்) பின் சர்வதேச அழுத்தத்தினாலும், போராளிகளின் எண்ணிக்கை குறைவாலும் நிறுத்தப்பட்டது. அனேக புலம் பெயர் ஊடகங்கள் இதனை குறிப்பிடுவது இல்லை

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் நிலங்களை கைப்பற்றுவதன் மூலம் புலிகளை பலவீனமாக்க முடியாது. நடப்பவை ஓரளவு கசப்பானாதாய் இருந்தாலும் முடிவு நிச்சயம் இனிப்பானதாய் தான் இருக்கும். இது திண்ணம்.

இப்படி தான் என்ர மனசிலையும் தோன்றுது விடிவெள்ளி..

வேலுபிள்ளை மகனுக்கு என்றும் வீரம் குறைவது இல்லை .. இது காலம் சொன்ன உண்மை..

நடைபெற்றுக் கொண்டிருப்பது தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்கான போராட்டம் என்பதை நாம் மறந்து விடுகிறோம். இது வெறுமனே கிளிநொச்சிக்கான போராட்டமல்ல. இறுதி இலட்சியத்தை அடையும் வரை பின்வைக்கும் காலைக் கூட நிதானமாக வைக்க வேண்டிய கட்டத்திலே தமிழினம் நின்று கொண்டிருக்கிறது.

சார்க் மாநாட்டுப் போர்வையில் வந்த இந்தியப் படைகளின் நேரடித் துணையோடு ஆக்கிமிப்பாளன் நிற்கிறான்.

இதை தன்னந்தனியாக தமிழினம் தனது மக்களின் பலத்தில் நின்று எதிர்கொள்கிறது. தொடர்ந்தும் எதிர்கொள்ளும்..........

:lol::lol::(

ஆம் தொடர்ந்தும் எதிர்கொள்ளும்!

எதிர்கொண்டு தமிழினம் நிச்சயம் வெல்லும்!!!

Let them win the battles but the Tamils will win the war!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

பாலகுமாரன் அண்ணை என்ன சொன்னவர்.. ஒரு சிறிய நிலப்பகுதியில் இருந்து கொண்டு தான் எமது மண்ணை மீட்கும் போரை நாம் ஆரம்பிக்க வேண்டி இருக்கும் என்று. அந்தச் சிறிய மண்.. வன்னியின் வடகிழக்குக்குள் தான் அடங்கி இருக்கிறது.

பாலகுமாரன் அண்ண.. அப்பவே சொல்லிட்டார்.. கிளிநொச்சி என்ன.. நாளை ஆனையிறவும் போகலாம்..!

போராட்டம் என்பது ஒன்றும் கலியாணம் செய்து பிள்ளைகுட்டி பெறுவது போன்றதல்ல. எத்தனையோ புறக்காரணிகளோடு.. எதிரியின் அசுர பலத்தைச் சந்திக்க வேண்டும். பரந்துகிடக்கும் எதிரி.. ஏ 9 பாதையூடு போகட்டும். அதுதான் நல்லம். முகமாலை.. கிளாலி.. ஆனையிறவு.. நாளை.. இராணுவத்தின் வசம் என்று செய்தி வரலாம்..!

ஆனால் போராட்டம்.. தொடரும்..!

நெடுக்ஸ் தெளிவாகதான் இருக்கிறீர்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி அமெரிக்க இந்திய தூதுவர்கள் எல்லாம் வந்து ஆரவாரம் செய்து கொடி தூக்குவினம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெற்றிவாகை சூடிமகிழும் சிங்கள பேரினவாத வெறிபிடித்தவர்களுக்கு வாய்க்கரிசி வெகுவிரைவில்.

சபதம் சபதம் சபதம் சாபம் சாபம் சாபம்

மகிந்தா கோஸ்டியினருக்கு வெகுவிரைவில் வாய்க்கரிசி

நெடுக்ஸ் தெளிவாகதான் இருக்கிறீர்.

கீழே உள்ளதும் நெடுக்ஸ் நேற்று சொன்னவை

அவர்கள் சொல்வதை காலதாமதமானாலும் செய்கிறார்களே. நாம்...???! எல்லாவற்றையும் இழக்கிறோம். எனி இழக்க ஒன்றுமில்லை எனும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைப் போல.. நிலமை போய்க்கிட்டு இருக்குது...! :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தெளிவாகதான் இருக்கிறீர்.

உலகின் 4 வது பெரிய இராணுவத்தை.. அதுவும் தமிழீழ மண்ணை முற்றாக ஆக்கிரமித்திருந்த இராணுவத்தை.. விடுதலைப்புலிகள் எதிர்கொண்டிருக்கிறார்கள். அன்று அவர்கள் போராட்டம் "0" க்கு போய் விட்டது என்று கருதி சோர்ந்திருப்பின்.. இன்று... கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது என்று சிங்களவன் அறிக்கை விட வேண்டியே இருந்திருக்காது. கிளிநொச்சி சிங்கள நகராக இருந்திருக்கும்.

விடுதலைப்புலிகள்.. சிறீலங்கா சிங்களப் படையை எதிர்கொள்ளவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் கீழ் சர்வதேசத்தையும் எதிர்கொள்கிறார்கள் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அதில் புலிகளைப் பயங்கரவாதிகள் ஆக்கியதில்.. தமிழர்கள் சிலருக்கும் பங்குண்டு.

நாம் எமது கெளரவத்துக்காக போர் செய்ய முடியாது. போர் தந்திரங்கள் கெளரவம்.. வெட்டி பேச்சுக்காக வகுக்கப்பட முடியாது. விடுதலைப்புலிகள் ஆள் மற்றும் ஆயுத வளங்களை தக்க வைத்துக் கொண்டு.. எதிரியின் எதிர்கால சவால்களைச் சந்திக்கவும் தம்மை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதையெல்லாம் கவனிக்கின்ற போது.. கிளிநொச்சி பின்னகர்த்தல் நிச்சயம் தலைவர் எடுத்த நல்ல முடிவு என்றே நான் கருதுகிறேன்.

புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாம் போராளிகளின் பலத்தை பலமடங்கு எவ்வளவு விரைவாக கட்டியெழுப்ப உதவிறமோ.. அவ்வளவுக்கவ்வளவு.. எமது தேசத்தின் விடிவு எம்மை நெருங்கும். சிங்களவனின் அறிவைப்பைக் கேட்டு ஒப்பாரி வைப்பின்.. அவன் இந்த அறிவிப்பை என்ன எதிர்பார்ப்போடு விடுறானோ.. அதை பூர்த்தி செய்து கொடுத்து எதிரிக்கு உதவி நின்றதையே நாம் செய்கிறோம் என்பதை மறக்கக் கூடாது.

சிங்களவன் வெல்லட்டும்.. அது பிரச்சனையில்ல. நாம் எமது மண்ணை மீட்க என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். கிளிநொச்சி போனாலோ.. இல்ல ஆனையிறவு போனாலோ போராட்டம் ஓயாது. ஏனெனில் இதெல்லாம் போய் இருக்கேக்கதான் தலைவர் 10 பேரோடு போராட ஆரம்பிச்சவர். அன்றிலிருந்து புலிகளை பூண்டோடு அழிக்கிறம் எண்டவை.. இன்றைக்கு கிளிநொச்சி பிடிச்சதா அறிக்கைவிட்டு கொள்ளினம். உலக ஊடகங்கள்.. புலிகளின் நாட்டுத் தலைமையகம் பிடிபட்டது என்று செய்தி போடுது.

ஆக சிறீலங்கா கிளிநொச்சியை.. தமிழீழத்தின் நகர் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலை.. 1972 ஆண்டு இருக்கவில்லை...! இதை உருவாக்கிய தலைவருக்கு.. தமிழீழத்தை மீட்கும் வழியும் தெரிஞ்சிருக்கும். அதற்கு பக்கபலமாக நிற்க வேண்டியது உலகத்தமிழினமே. அது அழுது கண்ணீர் வடிப்பதும்.. சோகத்தில் வீழ்வதும்.. புலிகளைத் திட்டுவதும்.. நிச்சயம்.. எதிரி இன்று பெற்ற சாதாரண இராணுவ வெற்றியை 5 மடங்கு அதிகமாக்கும்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு விட்ட வழி, காலம் இட்ட கட்டளை என்று தேசியத் தலைவர் கிளிநொச்சியின் விட்டுக்கொடுப்பைச் சூசகமாக உணர்த்திவிட்டார். அகலக்கால் பதிக்கும் எதிரியை அழித்தொழிக்க மரபுவழி தற்போதைக்கு உகந்ததல்ல. மரபு வழியுத்தமொன்றைச் செய்ய எதிரி வாங்கிக் குவித்திருக்கும் ஆயுதங்களினால் எதுவித பிரயோசனமும் இல்லாதுபோக மீண்டும் கரந்தடி வழிமுறைகளால் எதிரியைத் திக்குமுக்காடச்செய்ய தற்போதுள்ள போதிய பலத்துடனேயே இந்த விட்டுக்கொடுப்பு நடைபெற்றிருக்கிறது. ஆகவே கவலைப்பட எதுவுமில்லை.

விடுதலைப்புலிகள்.. சிறீலங்கா சிங்களப் படையை எதிர்கொள்ளவில்லை. சர்வதேசத்தை எதிர்கொள்கிறார் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். நாம் எமது கெளரவத்துக்காக போர் செய்ய முடியாது. போர் தந்திரங்கள் கெளரவம்.. வெட்டி பேச்சுக்காக வகுக்கப்பட முடியாது. விடுதலைப்புலிகள் ஆள் மற்றும் ஆயுத வளங்களை தக்க வைத்துக் கொண்டு.. எதிரியின் எதிர்கால சவால்களைச் சந்திக்கவும் தம்மை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நாமும் போராளிகளின் பலத்தை பலமடங்கு எவ்வளவு விரைவாக கட்டியெழுப்ப உதவிறமோ.. அவ்வளவுக்கவ்வளவு.. எமது தேசத்தின்

விடிவு எம்மை நெருங்கும். சிங்களவனின் அறிவைப்பைக் கேட்டு ஒப்பாரி வைப்பின் அது அவன் இந்த அறிவிப்பை என்ன

எதிர்பார்ப்போடு விடுறானோ அதை பூர்த்தி செய்து கொடுத்து எதிரிக்கு உதவி நின்றதையே நாம் செய்கிதோம் என்பதை மறக்கக் கூடாது.

:lol::lol::(

Edited by vettri-vel

தற்போது புலிகளிடம் உள்ள நிலம் யாழ் மாவட்டத்தை விடப் பெரியது. இதை தக்க வைப்பார்களானல் போராட்டம் பாதிப்படையாமல் இருக்கும்.

யாழ் மட்டுமே கட்டுப்பாட்டில் இருக்கும் போது போராட்டம் எப்படி வளர்ந்தது என்று தெரியும்.

புலிகள் தனிய இராணுவ நடவடிக்கைகளை மாத்திரம் எதிர்கொள்ள வில்லை தனுடன் அரசியல் சதுரங்கத்துக்கும் முகம் கொடுக்கவேண்டியுள்ளார்கள்.....

ராஜபக்ஸவுக்கு இனித்தான் நெருக்கடி... தமிழர்களுக்கான தீர்வை அவரால் முடிந்தால் முவைக்கலாம்.... தொடர்ந்து புலிகள் தடுத்துக்கொண்டிருந்தால் புலிகள்தான் நெருக்கடிக்கு ள் இருப்பார்கள்.

சிங்களத்தை நெருக்கடிக்குள் தள்ளவேணுமா இருந்தால் அவர்களே பிரச்சாரப்படுத்திய வெற்றியிலக்கை அதிகளவான இளப்புக்களுடன் அவர்கள் அடையவேண்டும் அதேநேரம் புலிகளும் தமது பலத்தை தக்க

வைக்கவேணும்... இதுவே இன்று ரடைபெறுகிறது இதை விட இங்களுக்குள்ளான வளத்துடன் இன்றய உலக ஒழுக்குடன் வேறென்ன செய்யமுடியும்?

எங்களுக்கு வேண்டியது எங்களின் இலக்கேயொழிய சிங்களவனுடன் போட்டிக்கு நிப்பதில்லை... இன்னும் சொல்லப்போனால் இந்த நேரத்தில்தான் நாங்கள் உலகநாடுகளிடம் இலங்கை அரசாங்கத்தை

அரசியல் தீர்வொன்றுக்கு போகும்படி தூண்டவேண்டும்.... வெறுமனே சோர்வது வீன் விரயமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.