Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுத்திருப்பதே நலம் : கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை : இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா, இல்லையா என்பதை அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பதுதான் நலம் என்று தான் கருதுவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கை பிரச்னை குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைப் பிரச்னையில் கட‌ந்த ஐம்பதாண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்து விட்டேன், இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டுவிடுகிறேன்.

இதனிடையே மத்திய அரசின் அயலுறவு‌ச் செயலர் சிவசங்கர் மேனன், இன்றைக்கு இலங்கை சென்றுள்ளதும் முக்கியமானதாகவே கருத வேண்டியுள்ளது.

எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் -இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பதுதான் நலம் என்றும் - நலமான முடிவுக்கு இந்தியப் பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

http://www.nigazhvugal.com/index.php?optio...am&Itemid=3

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை : இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா, இல்லையா என்பதை அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பதுதான் நலம் என்று தான் கருதுவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஓமோம்... பொறுத்திருங்கோ... அப்பதான் மிச்சமிருக்கிற தமிழனும் செத்துப்போயிடுவான். பிறகென்ன பிரச்சினையே இல்லை... சும்மா ஜம்மெண்டு கவிதை ஒண்டை இழுத்து விடலாமெல்லே... :)

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி மீது நாம் முழு நம்பிக்கை வைக்க வேணும். அவர் என்ன செய்யவும் தயாராக இருக்கும் ஒரு உலகத் தமிழினத் தலைவர். நாம் பொறுத்திருக்க வேணும், அப்ப தான் அவர் எழுதப் போகும் "எங்கு சென்றொழிந்தனை தமிழ?" என்ற கவிதையை யாழில் வாசித்து ஆகா ஓகோ இவரல்லோ நாம் தேடும் உலகத் தமிழ் தலைவன் என்று பலர் வந்து புகழ் மாலை சூட (இதுக்கு நல்ல வசனம் ஒண்டு இருக்கு, எழுதினால் வெட்டிப் போட்டு என்னையும் தூக்கி விடுவார்கள், அதனால் எழுதவில்லை) நாம் களித்திருக்கலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்
:):(

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செத்தொழியப் போகும் ஈழத்தமிழினத்துக்கு இரங்கல் பா ஒன்று முரசொலியில் ரெடி ஆகும் வரை பொறுத்திருங்கள் என் கண்மணிகளே..

ஒரு சில நாட்கள் போதாது அத்தனை தமிழ் மக்களையும்

இலங்கை படைகள் கொன்று குவிப்பதற்கு ஜயா

கணக்குப் பார்த்து வடிவா ஒரு அறிக்க விடுங்கோ,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிய பற்றி என் கணிப்பீடு

புரட்சித்தலைவி ஜெயலலிதாவோட மள்ளு கட்டுறதில முதலாவது ஆள் கருணாநிதி தான்..

ஈழ மக்களுக்கு நல்லது செய்யிறேன் என்று சொல்லி தொடர்ந்து ஏமாத்திற பழக்கம் கருணாநிதிட்ட தான் இருக்கு..

சின்ன பிள்ளைகள் ஆகிய நாங்கள் அவருக்கு வைச்ச பெயர்- கவிதை மன்னன்

அவர் தமிழிழ் அடி கடி சொல்லுற வாத்தை இது தான் ( நான் இலங்கை தமிழ்ர் பிரச்சனைய பற்றி மன்மோகன் சிங்கோட கதைச்ச நான் அவர் எனக்கு உறுதி அழிச்சவர் இதுக்கு ஒரு முடிவு எடுக்கிறேன் என்று.. இந்த டைலாக்கை 100 தரம் சொல்லி இருப்பார் ஆனால் அங்கை காரியம் நடந்த பாடு இல்லை..

மனித சங்கிலி என்ர ஒரு போராட்டத்தை ஆரம்பிச்சு வைச்சார். ஆனால் அது கடசில ஒரு கண் துடைப்பு நாடகம் மாரி போச்சு.

பிறக்கு ஈழ மக்களுக்கு உணவுப் பொருட்க்கள் குடுக்க போறேன் என்று ஒரு நாடகத்தை ஆடினார்.. அங்கினேக்க ஈழ மக்களுக்கு கொஞ்ச உணவுப் பொருட்க்கள் போய் சேந்தீச்சு- இதில நகைச்சுவை என்ன என்ரா நெடுமாறன் ஐயா ஈழ தமிழருக்கு செத்த உணவு வகைகல அனுப்பி வைக்க உதவாத கருணாநிதி பிறக்கு தான் ஈழ தமிழனுக்கு உனவு அனுப்பி வைச்சார்

இவர பற்றி எழுதிட்டே போக்கலாம்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் தன்னுடைய பதவி முடியும் வரை ஒரு பிரச்சனையை வைத்திருக்கத்தானே வேண்டும்... அதுவரைக்கும் கொஞ்சம் பொறுங்கோவன். அவருக்கு தன் பதிவிதானே முக்கியம்.. எவ்வளவு கச்ரப்பட்டு அம்மாவிட்ட இருந்து பிடுங்கினவர்... சும்மா லேசில விட்டுடுவாரா....! கலைஞரா கொக்கா..!

கடைசித்தமிழன் இறக்கும் வரை அவர் இற(ங்)க்கமாட்டார்... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்...பா...!

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கதிகமாக விமர்சிப்பது அவ்வளவு நல்லதல்ல.

இவர் 40 வருடஙகளக இதை தான் செய்கிரார். சைவ மதத்தை கிண்டல் பண்ணியே தனது வங்குரொத்து நிலையை மூடி மறைத்து விட்டார். Railway strike இன் போது தண்டவாளத்தில் தலை வைத்து ஆர்பாட்டம் செய்தவர் அல்லவா இவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கதிகமாக விமர்சிப்பது அவ்வளவு நல்லதல்ல.

:) அளவுக்கு அதிகமாக எமக்காக அறிக்கை விடுவதும் அழகல்ல :(

Edited by putthan

திருமாவளவன் குறித்து கருணாநிதி விமர்சனம்

தொல். திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக காலவரையற்ற உண்ணாநோன்பைத் துவக்கிவிட்டார் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்து மத்திய அரசு என்ன செய்யவிருக்கிறது என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறி இருக்கிறார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி திருமாவளவன் நேற்று சென்னையை அடுத்த மறைமலை நகரில் உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார்.

இதுவரை திருமாவளவனின் போராட்டம் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த முதல்வர் கருணாநிதி, தனது கட்சியனருக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் சில நாட்கள் முன்பு திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் திராவிடர் கழகச் செயலாளர் வீரமணி தன்னை வந்து சந்தித்தபோது மத்திய அரசிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பிரச்சினை குறித்து பேசுவதாக வாக்களித்தும், தன்னிச்சையாக திருமாவளவன் உண்ணாநோன்பில் இறங்கிவிட்டார் என்று விமர்சித்துள்ளார்

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவன் குறித்து கருணாநிதி விமர்சனம்

மத்திய அரசிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பிரச்சினை குறித்து பேசுவதாக வாக்களித்தும், தன்னிச்சையாக திருமாவளவன் உண்ணாநோன்பில் இறங்கிவிட்டார் என்று விமர்சித்துள்ளார்

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

இவர் இதை எத்தைனை தரம் தான் சொல்லுவார் :(:):D

Edited by kuddipaiyan26

இவர் இதை எத்தைனை தரம் தான் சொல்லுவார் :(:):D

தன்னை கூப்பிட்டு தொடங்கி வைக்க சொல்லி கேக்கவில்லை என்னும் கோபத்திலாக இருக்கலாம்... இதிலையும் அரசியல் லாபம் கண்டு இருக்க முடியும்தானே....

  • கருத்துக்கள உறவுகள்

தன்னை கூப்பிட்டு தொடங்கி வைக்க சொல்லி கேக்கவில்லை என்னும் கோபத்திலாக இருக்கலாம்... இதிலையும் அரசியல் லாபம் கண்டு இருக்க முடியும்தானே....

இருக்கலாம்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கதிகமாக விமர்சிப்பது அவ்வளவு நல்லதல்ல.

வல்வைமைந்தன், நீங்கள் கருணாநிதி பக்தர் என்று தெரிந்ததாலேயே கேக்கிறன்: நீங்கள் அளவுக்கதிகமா அவரைத் தலையில தூக்கி வைச்சதால என்ன நன்மை விளைஞ்சிட்டுது இப்ப? :)

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவன் குறித்து கருணாநிதி விமர்சனம்

இதுவரை திருமாவளவனின் போராட்டம் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த முதல்வர் கருணாநிதி, தனது கட்சியனருக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் சில நாட்கள் முன்பு திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் திராவிடர் கழகச் செயலாளர் வீரமணி தன்னை வந்து சந்தித்தபோது மத்திய அரசிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பிரச்சினை குறித்து பேசுவதாக வாக்களித்தும், தன்னிச்சையாக திருமாவளவன் உண்ணாநோன்பில் இறங்கிவிட்டார் என்று விமர்சித்துள்ளார்

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

கொஞ்சம் பொறுத்திருக்கலாம் திருமா, அப்ப தான் 'இதோ நானும் என் உயிர் பிரியும் வரை உணவு மறுப்பேன்" எண்டு ஆளும் எதிர்ப் பந்தலில போய் இருந்து, கவனத்தையெல்லாம் தன்ர பக்கம் திருப்பிக் கொண்டிருக்க, அடுத்த நாளே டெல்லியில இருந்து இவருக்கு பழச்சாறு குடுக்க யாராவது வருவினம். அதோட திருமாட சீரியசான உண்ணாநோன்பு அடிபட்டுப்போகும். திரும்பவும் சுழியத்தில இருந்து எல்லாம் தொடங்கும். பொறுத்திருக்கலாம் திருமா! :)

Railway strike இன் போது தண்டவாளத்தில் தலை வைத்து ஆர்பாட்டம் செய்தவர் அல்லவா இவர்.

:(:D:o:D

  • கருத்துக்கள உறவுகள்

இவர்தான் பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா(தமிழா) என்று வசனம் எழுதினவர். அது மட்டுமல்ல புறநானூற்றின் புகழை மறைக்க வந்த புழுதிக்காற்றே! கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே! என்றெல்லாம் எழுதினவர்.இப்ப எல்லாம் அவருக்கே பொருத்தமாக இருக்கிறது.எப்ப வரையும் பொறுப்பது அடுத்த தேர்தல் வரையா? அதுக்குள்ள தமிழன் அழிஞ்சிடுவான்.ஆலோசனையை விட்டிட்டு ஏதாவது ஆக்க பூர்வமா செய்தா நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

'இன்னும் கெஞ்சம் பெறுத்து இருக்கட்டாம் மத்திய அரசு நல்ல முடிவு தரும்மாம்' ம்ம்...ம்ம்... நேற்று செய்தி பார்த்தன்... சிரிப்புதான் வந்தது......

புலிகள் ஏதோ எப்பிடியோ அதிசயம் நடத்தப் போவதாக புலம்பெயர்ந்தவர்களும் தான் காத்திருக்கிறார்கள். அதுவே நேற்றிலுருந்து டாங்கிப்படையணி மூலம் என்று காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கலைஞர் காத்திருப்பதில் என்ன தவறு?

தலைவர் போராட்டத்தை ஆரம்பித்தது கலைஞரை நம்பி அல்ல ஈழத்தமிழரை நம்பி.

தமிழகத்தில் திருமவளவனின் காலவரையற்ற பட்டினி ப்போராட்டத்தை சன் மற்றும் சுயனலவாதி தமிழக முதல்வர் குழும ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன .... ஈழத்தமிழர்களே சன் குழும திரைப்படங்களை புறக்கணித்து இந்த நிலையை மாற்றுங்கள் !!!

தமிழகத்தில் திருமவளவனின் காலவரையற்ற பட்டினி ப்போராட்டத்தை சன் மற்றும் சுயனலவாதி தமிழக முதல்வர் குழும ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன .... ஈழத்தமிழர்களே சன் குழும திரைப்படங்களை புறக்கணித்து இந்த நிலையை மாற்றுங்கள் !!!

நானும் உணர்ந்தேன் , திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள்

நாம் மேலும் திருமாவளவனிற்கு ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் , இந்த ஊடகங்களை வெளிப்படையாக புறக்கணிப்பது என்பது தேவையற்றது, சிக்கலை உருவாக்கும்

Edited by பல்லவன்

இலங்கைப் பிரச்சினையில் முடிந்ததை செய்து விட்டேன்

* "டில்லியின் முடிவுக்காக பொறுத்திருப்போம்'

சென்னை:இலங்கைப் பிரச்சினையில் ஐம்பதாண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்து விட்டேன். இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டுவிடுகிறேன் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி உருக்கமாகக் கூறியுள்ளார். 6 ஆம் பக்கம் பார்க்க...

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலத்துக்கு மேலாக இலங்கையில் தமிழின மக்களின் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக தொடங்கப்பட்ட அறப்போர் தந்தை செல்வா தலைமையில் நடைபெற்று, பல கட்டங்களைச் சந்தித்து இன்று உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி 1956 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க.பொதுக் குழுவில் நான் முன் மொழிந்தும், பெரியவர் பூவாளூர் பொன்னம்பலனார் வழிமொழிந்து நிறைவேற்றப்பட்டதுமான தீர்மானம் என்பதைக் கணக்கிடும்போது அந்த வாய்மைப் போரின் வழித்தடத்தில் நானும் நடந்து வந்திருப்பதையும் அப்படி நடக்கும்போது வசதி வாய்ப்புகளுக்கேற்ப இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும் உரிமைகளுடனும் வாழ்ந்திட என்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அல்லது எதிர்க்கட்சியில் இருந்தாலும் பாடுபட்டிருக்கிறேன். இன்னமும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதையும் உலகெங்கும் இருக்கிற தமிழர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

1983 ஆம் ஆண்டு இந்த போராட்டத்தில் புரட்சிகரமான திருப்பமாகவும், தியாகத்தின் சோகச் சின்னமாகவும், அமைந்தது வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்டோர் கொடுமையான முறையில் கொல்லப்பட்ட நிகழ்ச்சியாகும்.

என்னை சென்னை வந்து சந்தித்து இலங்கைப்பிரச்சினை பற்றி விரிவாக எடுத்துரைத்த தந்தை செல்வா 1977 இல் மறைந்த பிறகு அவருடைய நெருங்கிய நண்பரும், (சில ஆண்டுகளுக்கு முன்பு 1989 இல் கொல்லப்பட்ட) தமிழ்ப் பெரியவருமான நாவலர் அமிர்தலிங்கம் மற்றும் அவர் துணைவியார் மங்கையற்கரசி ஆகியோர் இலங்கைப் பிரச்சினைகளை விளக்கி அந்நாட்டில் தமிழ் மக்கள் அமைதியோடு வாழ்ந்திட இந்தியா உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் தூய தூதர்களாக இங்கு வந்து பெரும் பணியாற்றியபோது பிரதமர் இந்திராகாந்தி போன்றவர்களைச் சந்தித்து அவர்களின் அந்தப் பணிக்கு நானும் துணையாக இருந்து தொண்டாற்றினேன்.

இலங்கையில் தொடர்ந்து தமிழர்களுக்கு இலங்கை அரசும் சிங்களவர்களும் கொடுத்த தொல்லை,புரிந்த கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல என்ற நிலை ஏற்பட, ஏற்பட இலங்கைத் தமிழ் மக்களிடையே ""இப்படி உயிரோடு மெல்ல மெல்ல சாவதைவிட ஒரேயடியாகச் சாகலாம் போரில்' என்று முடிவெடுத்திடும் நிலை உருவாயிற்று.

அதன் விளைவாக இளைஞர்கள், விடுதலை இயக்கங்கள் சிலவற்றைத் தோற்றுவித்தார்கள். புலிகள் என்றும் ரெலோ என்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.என்றும் ஈரோஸ் என்றும் புளொட் என்றும் ஈ.என்.டி.எல்.எப்.என்றும் புரொடெக் என்றும் டி.ஈ.எல்.எப்.என்றும், இன்னும் பல பெயர்களில் தோன்றிய அந்த இயக்கங்கள்; ஆயுதம் ஏந்தி படைகளையும் குண்டர்களையும் எதிர்க்கும் போராட்டங்கள் தொடர்ந்து இல்லாமல் அவ்வவ்போது நடைபெற்று இரு தரப்பிலும் உயிர்ப்பலிகளுடன் முடிவுற்றுக் கொண்டிருந்தன.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.ஆட்சி நடைபெற்ற போதும் நமது ஆட்சி நடைபெற்ற போதும் அந்த இயக்கங்களையும் இயக்கங்களின் தலைவர்களையும் அறிந்தவர்களில் நானும் ஒருவன். நானும் பேராசிரியரும் தமிழர் தலைவர் கி.வீரமணி, பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் இணைந்து நடத்திய மதுரை ""டெசோ' மாநாடு; 4.5.1986 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவே நடத்தப்பட்டது. அந்த மாநாட்டுக்கு அகில இந்தியத் தலைவர்கள் வாஜ்பாய், என்.டி.ராமராவ், எச்.என்.பகுகுணா, ராம்வாலியா. உபேந்திரா, ஜஸ்வந்த் சிங், ராச்சய்யா, சுப்பிரமணியன் சுவாமி, உன்னிகிருஷ்ணன் மற்றும் பலர் வந்திருந்து கருத்து தெரிவித்து ஆதரவும் அளித்தனர்.

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைக்கு முடிவு காணவும் தமிழ் மக்கள் உரிமைகளுடன், வாழவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும் அந்த மாநாட்டில் போராளிகள் சார்பாக கலந்து கொண்ட பல குழுக்களின் தலைவர்களிடையே ஒற்றுமையில்லை என்பதை வாஜ்பாய் போன்றோர் உணர்ந்து வருந்தி அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.

நானும் அவர்களைத் தனியாக அமர வைத்துப் பேசி"" தங்களுக்குள் சகோதர யுத்தம் தவிர்ப்போம் ஒற்றுமையுடன் செயல்படுவோம்' என்று கையடித்து உறுதிமொழி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். உறுதிமொழி வழங்கப்பட்டதும் உண்மை. அதையடுத்து ரெலோ இயக்கத் தலைவர் சபாரத்தினம் கொல்லப்பட்டதும் உண்மை. சமருக்கஞ்சா சிங்கங்கள் சகலகலா வல்லவர்கள் சதிகளை சாய்ப்பவர்கள் என்றாலும் சகோதர யுத்தத்தைக் கைவிட ஒப்பாத காரணத்தினால் ஒவ்வொரு இயக்கத் தலைவர்களும் கொலையுண்ட கொடுமை நடந்து மாபெரும் சக்தியாகப் பெருகியிருக்க வேண்டிய விடுதலைப்படை பலவீனமுற்றது என்பதை நடுநிலையாளர்கள் மறுத்திட இயலாது.

அவர்களின் சகோதர யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே நான் வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டும் வீணாயிற்று அந்த முயற்சிகள். நானும் பேராசிரியரும் இலங்கைப் பிரச்சினைக்காகவே எங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தோம். என் பிறந்த நாள் விழாவில் 03.06.1986 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உண்டியல் மூலம் நன்கொடையாகக் குவிந்த இரண்டு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவை புலிகள் தவிர மற்ற அமைப்புகள் என் வேண்டுகோளையேற்று நேரில் வந்து பெற்றுக்கொண்டனர். அதற்குப் பின்னர் இலங்கையில் அமைதிப்படை நடவடிக்கை தமிழகம் வந்த இந்தியப் பிரதமர் இளம் தலைவர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட மிகக் கொடுமையான நிகழ்ச்சி இத்தனைக்கும் பிறகு; இன்னமும் இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் நிலைமை உருவாகவில்லை.

இப்பொழுது இலங்கை இராணுவத்திற்கும் இயக்கத்தின் தலைவர்கள் அல்லது தளபதிகளுக்கும் நடக்கிற போராட்டமாக நாம் இதை முக்கியமாக எடுத்துக் கொள்ளாமல் யாருக்கிடையே போர் அல்லது சண்டை எனினும் அங்கே இலங்கையில் செத்துக்கொண்டிருப்பது அப்பாவித் தமிழர்கள் தானே என்ற தாங்க முடியாத வேதனை நம்மைத் துளைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் நமது கழகமும், மற்றக்கட்சிகள் சிலவும், 14.10.2008 அன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். 24.10.2008 அன்று மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தினோம். டெல்லிக்கே 04.12.2008 அன்று பிரதமரிடம் சென்று அனைத்துக் கட்சியினரும் முறையிட்டோம். வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு விரைவில் அனுப்பப்படுவார் என்று பிரதமர் கூறினார்.

பிரணாப் இலங்கை செல்லும் நாள் இன்னும் குறிக்கப்படவில்லை. அது நமக்கு ஏமாற்றமேயாகும். இதற்கிடையே, பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ் , தமிழர் தலைவர் கி.வீரமணி , விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் என்னை 12.01.2009 அன்று சந்தித்து உடனடியாக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றுவர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

நான் உடனே டில்லியுடன் தொடர்பு கொண்டு பேசுவதாக உறுதி அளித்தேன். நான் அவ்வாறு சொன்னதை ஏற்றுக்கொண்டு மூவரும் சென்றார்கள். இந்த மூவர் குழுவினர் என்னைச் சந்தித்து விவாதித்த போது நான் அவர்களிடம் எடுத்துச் சொல்லியவாறு உடனடியாக டில்லியுடன் தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை பிரதமரைச் சந்தித்துப் பேசுமாறு கூறி அவரும் அவ்வாறு பேசி அதை அக்கறையோடு கவனிப்பதாக பிரதமரும் தெரிவித்து அதைத் தொடர்ந்து மாநிலங்கள் அவை கழக உறுப்பினரும் என் மகளுமான கனிமொழி சோனியாகாந்தியிடமும் மத்திய அமைச்சர் வயலார் ரவியிடமும் நிலைமைகளை விளக்கிக் கூறி என்னுடைய கருத்துகளையும் எடுத்துரைத்த நிலையில், இந்தப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியிருப்பது ஆறுதலை அளிக்கிறது.

ஆனால், நண்பர் திருமாவளவன் மட்டும் தன்னிச்சையாக யாரிடமும் அறிவிக்காமல் தானே ஒரு முடிவெடுத்து இந்தப் பிரச்சினையை வலியுறுத்தி ஒரு உண்ணா நோன்பைத் தொடக்கியுள்ளார். எத்தனையோ பேரணிகள், கண்டன ஊர்வலங்கள், பல்லாயிரவர் திரண்ட மாநாடுகள்,உண்ணா நோன்புகள் போன்ற இத்தனையினாலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நமது உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறோம்.

இலங்கைப் பிரச்சினையில் 50 ஆண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்துவிட்டேன். இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டுவிடுகிறேன்.

இதனிடையே, மத்திய அரசின் அயலுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கை சென்றுள்ளதும் முக்கியமானதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பது தான் நலம் என்றும் நலமான முடிவுக்கு இந்தியப் பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

http://www.thinakkural.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.