Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்தக்கதை: வாழ்க்கையில அவலம் வரும்... அவலம் வாழ்க்கை ஆனால்... ?

Featured Replies

  • தொடங்கியவர்

விரிவான தகவல்களுக்கு மிக்க நன்றி நெடுக்ஸ். கேரளா சிகிச்சை பற்றி நீங்கள் சொன்ன அதே அபிப்பிராயத்தையே நானும் கொண்டிருந்தேன். ஆனாலும்.. அவள் பெற்றோரின் நம்பிக்கை, முக்கியமாக கடவுள் நம்பிக்கைக்கு குறுக்கே ஏன் நிற்பான் என்று நான் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் கூறுவதுபோல் அங்கு சென்று ஏதாவது செய்வது என்றால் நிச்சயம் இங்குள்ள வைத்தியர்களுக்கும் அறிவிக்கவேண்டும். பிறகு இந்தியாவில் ஒருமாதம் நின்று சிகிச்சை செய்துவிட்டு இங்கு வந்ததும் ஏதாவது சிக்கல் வந்தால் அது வேறு சோலியாய் போயிடும். ஏராளனின் மின்னஞ்சல் என்னிடம் உள்ளது என்று நினைக்கின்றேன், நீங்கள் இங்கு பதிந்த தகவலை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடுகின்றேன், நன்றி நெடுக்ஸ்.

  • Replies 136
  • Views 17.2k
  • Created
  • Last Reply

மிக்க நன்றி குட்டி, மல்லிகைவாசம்.

....

இதேபிரச்சனை எனது ஓர் மருமகளுக்கும் உள்ளது. அவள் இங்கு கனடாவில் பிறந்தபின்னரே இந்தப்பிரச்சனையை கண்டுபிடித்தார்கள் என்று நினைக்கின்றேன். ஓர் சிறுநீரகத்தில் பிரச்சனை, வேலை செய்யவில்லை என்றார்கள். மற்றது.. தசைகள் பலவீனம் அற்றதாக காணப்பட்டன. அத்துடன் சமநிலைப்படுத்தி உடலை வைத்து இருப்பது அவளுக்கு சற்று கடினமாக இருந்தது.

அவளை பின்னர் கடந்த பல வருடங்களாக பிரத்தியேக, சிறப்பு குழந்தைகள் இல்லத்தில்விட்டு இப்போது அவளுக்கு பன்னிரண்டு வயசு என்று நினைக்கின்றேன் பல முன்னேற்றங்கள் தெரிகின்றன. முன்புபோல் விதம்விதமான மருந்து மாத்திரைகள் எல்லாம் பாவிப்பது இல்லை. இப்போது சாதாரண பிள்ளைகள் போல் அவள் செயற்பாடுகளில் நிறைய முன்னேற்றம் தெரிகின்றது. ஆனால் பேசுவதற்கு மட்டும் அவளால் இயலாது. நானும் அவளைக்காணும் சமயங்களில் அவளை பிடித்து இழுத்து வைத்து அம்மா அப்பா என்று சொல்லிக்குடுக்கிறது. கூட்டிக்கொண்டு நடக்கும்போதும் ஏதாவது சொல்லிக்கொடுத்து முயற்சி செய்வது. அவள் செவிகளில் ஏதும் பிரச்சனை இல்லை. நன்றாக உள்ளன. ஆனால் அவளால் பேசமுடியாது.

அவள் பெற்றோர் இந்தியாவிற்கு சென்று தொடர்ந்து சிகிச்சை செய்து பார்க்கலாம் என்று யோசித்து உள்ளார்கள். கேரளாவில் ஏதோ மூலிகை வைத்தியம் மூலம் வியாதிகளை குணமாக்கக்கூடிய ஓர் பிரபல வைத்தியசாலை உள்ளதாம். அங்கு கூட்டிக்கொண்டுபோனால் அவளுக்கு இன்னமும் முன்னேற்றம் வரும் என்று திடமான நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள். நீங்கள் இப்படி மூலிகை மருத்துவம் பற்றி கேள்விப்பட்டு யாராவது உடல் உபாதைகள் குணமாகி ஏதும் கேள்விப்பட்டு இருக்கிறீங்களோ? அது ஏதோ மூங்கில் சோலையினுள் வைத்திசாலை உள்ளதாம். இங்கிருந்து போன, ஆங்கில வைத்தியத்தினால் கைவிடப்பட்ட ஒருவர் தனக்கு பூரணசுகம் கிடைத்தமையால் இவர்களையும் அவளை அங்கு கூட்டிக்கொண்டுபோய் காட்டுமாறு சொல்லியுள்ளார்.

நெடுக்காலபோவன் மிக விரிவான விளக்கம் தந்துள்ளார். கரும்பு இந்த speech (language) theraphy இணைப்பைப் பாருங்கள் இதில் உள்ள கருத்துக்கள் ஏதும் ஒரு விதத்தில் பயன் பட்டால் சந்தோசம்.

http://kidshealth.org/parent/system/ill/speech_therapy.html#

http://www.growingkids.co.uk/SpeechTherapy.html

கடவுள் உங்கள் மருமகளை மற்றப் பிள்ளைகள் போல் பேச அருள் புரிவார், நம்பிக்கையாக செயல்படுங்கள்! <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதேமாதிரி என் நண்பனின் பிள்ளைக்கு...அழுதாலோ சிரித்தாலோ கதைத்தாலோ சத்தம் வெளியே வராது.

இப்போது அந்த பிள்ளைக்கு ஐந்து வயதிருக்குமென்று நினைக்கின்றேன்.

குரல்வளையில் பிரச்சனை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்களாம்.

ஒருசில வருத்தங்கள் வயது ஏறஏற மாறலாம் என வைத்தியர்கள் தெரிவித்தாலும் பெற்றோரின் கவலைகளை யாராலும் தீர்க்க முடியாது.

ஆனால் உண்மையான மூலிகை வைத்தியத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு.

  • தொடங்கியவர்

மிக்கநன்றி குட்டி. குமாரசாமி அண்ணா, இவள் நன்றாய் சத்தம் போடுவாள், உரத்து கத்துவாள். புளுகம் வந்தால் ஆ ஊ என்று சத்தம் போட்டு புரட்டி எடுப்பாள். பேச முடியாமல் காணப்படுவதற்கு நெடுக்ஸ் சொன்னது போன்ற காரணத்தையே நானும் நினைக்கின்றேன். தசைகள் பலவீனம் அடைந்தமையால் மற்றும் மூளையிலும் செயற்பாட்டு பகுதிகளில் எங்காவது பலவீனம் காணப்படலாம். இதனால் பேசமுடியாமல் உள்ளதோ தெரியாது. மூலிகை வைத்தியத்தில் சிலருக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. ஆனால் இந்தக்காலத்தில் எல்லாம் விளம்பர மயப்படுத்தப்பட்டுள்ளதால்.. மூலிகை வைத்தியமாக இருப்பினும் காசை குறிவைத்து வைத்தியம் செய்யப்படுவதால் கொஞ்சம் யோசிக்கவேண்டி உள்ளது.

Edited by கரும்பு

இரண்டு விடயங்கள்.

முதலாவது கேரள ஆயுள்வேத வைத்தியம்.இது யாருக்கு எந்த அளவில் உதவும் என் எனக்கு தெரியாது.எனது அக்காவும் அத்தானும் கோட்டைக்கல் என்ற இடத்தில் போய் 3 மாதம் நிண்டுவிட்டு வந்தவர்கள்.அக்காவிற்கு மூட்டு நோ,வெரிகோஸ் வெயின் போன்ற பல பிரச்சனகள் இருந்தன.வந்து சொன்னார்கள் நீங்கள் எல்லோரும் கடைசி 5 வருடத்திற்கு ஒருமுறையாவது போய் வாருங்கள் சிகிச்சை முடிந்து வெளிவரும் போது 10 வயது குறைந்த உணர்வு உண்டாகும் என்று.அங்கு அவர்களது சாப்பாடுதான் சாப்பிடவேண்டும் ஆயுர்வேத முறைப்படி எண்ணெய் மசாச்,அதைவிட அவர்களது மூலிகை மருந்துகள் பாவிக்க வேண்டும்.பின்னர் எனது பெற்றோரும் அடுத்த அக்காவும் போட்டுவந்தார்கள்.அந்த அக்காவிற்கு எக்ஸிமா போன்று உடம்பு முழுக்க ஒரு சொறித்தன்மையும்,கறுப்பு அடையாளங்களும்(சைரஸ்) கனடாவில் போகாத ஸ்பெசலிஸ்டுக்கள் இல்லை.கோட்டைகல் போய் வந்து இப்போ எதுவித அடையாளங்களும்,சொறியும் இல்லை.அங்கு முழுக்க வெளிநாட்டவர்களே இருப்பதாகவும் நல்ல சுற்றாடலில் மிக வசதிவாய்ந்த ஆயுர்வேத சிகிச்சை என்று சொன்னார்கள்.கூகிளில் போய் கோட்டைகல் ஆயுர்வேதம் என்று அடித்தால் முழு விபரமும் வரும்.

அடுத்து ஓட்டிசம் பற்றியது.இங்கு எமது பிள்ளைகளுக்கு பலருக்கு இந்த பிரச்சனை இருக்கின்றது.பிள்ளை தோற்றத்தில் சாதாரணமாகவே இருப்பார்கள் அவர்களின் மூளை கொஞ்சம் பின் தங்கியதாகவே இருக்கும்.அந்த பிரச்சனையை பெற்றோர் உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ளும் பாக்குவம் வந்து பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.பிரச்சனை தெரியாமல் பிள்ளைகளை போட்டு திட்டித்தீர்ப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை..ஓட்டிசம் வைத்தியத்தால் குணமடைய வைக்க முடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்கள் மருமகளுக்கு விரைவில் குணமடையும் கவலைப்பட வேண்டாம்...கேரளா வைத்தியம் பற்றி நானும் கேள்விப்பட்டு உள்ளேன் அது உண்மை எனத் தான் போய் வந்தவர்கள் சொல்கிறார்கள் ஆனால் அங்கேயே பல காலம் தங்கி இருக்க வேண்டும்.

இந்த திரியை நான் முன்பு பார்க்கவில்லை. குட்டி கூறியது மாதிரி எல்லோருக்கும் ஒரு குறையுண்டு. நம்பிக்கையுடன் அதிலிருந்து மீண்டு வருவதே வாழ்க்கை. கரும்பு உங்கள் தன்னம்பிக்கை சந்தோசமளிக்கிறது. உங்கள் மருமகள் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அர்ஜுன் கூறிய 'ஒட்டிசம்' பல குழந்தைகளுக்கு உண்டு. ஆனால் இந்த குறைபாடு ஒருத்தருகொருத்தர் வேறுபடும். பிறப்பிலேயே இப்படி வருகிறது. சில குழந்தைகளுக்கு MMR (Measles, mumps and rubella vaccination) தடுப்பூசி போடுவதாலும் வருவதாக ஒரு வதந்தி உண்டு. பிரித்தானியாவில் இதற்காக ஒரு வழக்கு நடந்தது. எனக்கு நெருங்கிய ஒரு சிறுவனுக்கு இது உண்டு. அவனுக்கு 11 வயது. சில வேலை நாங்கள் கூறுவதையே திரும்பக் கூறுவான் (Ecolalia ). இந்தப் பழக்கம் நன்றாக குறைந்து விட்டது. ஒரு விஷயத்தை தொடர்ச்சியாக அவதானிக்க மாட்டான். ஆனால் இவனிடம் ஒரு தனித் திறமை உண்டு. வருடத்தின் திகதியைச் சொன்னால் உடனடியாக அதன் கிழமையை கூறுவான். அத்துடன் Raw Maths (பெருக்குதல் பிரித்தல்) நன்றாக வரும். பெரியவர்களை விட விரைவாகச் செய்வான்.

இதை பற்றி யாருக்கும் தெரியுமா?

  • தொடங்கியவர்

நன்றி அர்ஜுன், ரதி, தப்பிலி. அர்ஜுன் நீங்கள் சொன்னமாதிரி கூகிழில் தேடிப்பார்த்தேன். இதில் முதலாவதாக உள்ளதா நீங்கள் கூறும் வைத்தியசாலை? அவர்கள் இப்படி சொல்லி என்னிடம் விபரம் பெற்று தருமாறு சொன்னதும் நான் முன்பு ஒருமுறை தேடல் செய்தபோது வேறொரு வைத்தியசாலையின் பக்கத்திற்கு சென்று பார்த்தேன். அதை இங்கு காணவில்லை.

http://www.google.ca/#hl=en&biw=1366&bih=642&&sa=X&ei=mS6zTPrEOsuOnwemnfCoBg&ved=0CBgQvwUoAQ&q=kottakkal&spell=1&fp=2c5dd9c2b2d3395f

http://www.aryavaidyasala.com/%28S%283b44h555o4v5yi45yaqcyq55%29%29/index.aspx

http://www.kottakkalayurveda.com/

http://www.kottakkal.net/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை நான் முன்பு பார்க்கவில்லை. குட்டி கூறியது மாதிரி எல்லோருக்கும் ஒரு குறையுண்டு. நம்பிக்கையுடன் அதிலிருந்து மீண்டு வருவதே வாழ்க்கை. கரும்பு உங்கள் தன்னம்பிக்கை சந்தோசமளிக்கிறது. உங்கள் மருமகள் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அர்ஜுன் கூறிய 'ஒட்டிசம்' பல குழந்தைகளுக்கு உண்டு. ஆனால் இந்த குறைபாடு ஒருத்தருகொருத்தர் வேறுபடும். பிறப்பிலேயே இப்படி வருகிறது. சில குழந்தைகளுக்கு MMR (Measles, mumps and rubella vaccination) தடுப்பூசி போடுவதாலும் வருவதாக ஒரு வதந்தி உண்டு. பிரித்தானியாவில் இதற்காக ஒரு வழக்கு நடந்தது. எனக்கு நெருங்கிய ஒரு சிறுவனுக்கு இது உண்டு. அவனுக்கு 11 வயது. சில வேலை நாங்கள் கூறுவதையே திரும்பக் கூறுவான் (Ecolalia ). இந்தப் பழக்கம் நன்றாக குறைந்து விட்டது. ஒரு விஷயத்தை தொடர்ச்சியாக அவதானிக்க மாட்டான். ஆனால் இவனிடம் ஒரு தனித் திறமை உண்டு. வருடத்தின் திகதியைச் சொன்னால் உடனடியாக அதன் கிழமையை கூறுவான். அத்துடன் Raw Maths (பெருக்குதல் பிரித்தல்) நன்றாக வரும். பெரியவர்களை விட விரைவாகச் செய்வான்.

இதை பற்றி யாருக்கும் தெரியுமா?

ஒட்டிசம் என்பது பல் வேறு நடத்தைகளை வெளிக்காட்டக் கூடிய ஒரு நரம்பியல் குறைபாடு. சில ஒட்டிசம் உள்ள நபர்கள் அபரிமிதமான திறமைகள் ஒன்றை அல்லது பலவற்றைக் கொண்டிருப்பது இந்தக் குறைபாடு கண்டுபிடிக்கப் பட்ட காலத்திலிருந்தே ஆவணப் படுத்தப் பட்டிருக்கு. அஸ்பேர்கர் சின்ட்றோம் (Asperger syndrome) என்பது இப்படி அபரிமித திறமை வெளிப்படும் ஒட்டிச வகை. அண்மையில் அஸ்பேர்கர் சின்ட்றோம் உடைய ஒரு பிரிட்டிஷ் இளைஞன் அமெரிக்காவின் கணணி வலையமைப்புகளைச் சீர்குலைத்த ஒரு அதி புத்திசாலியாக அடையாளம் காணப்பட்ட செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. என்ன தான் தனித் திறமை இருந்தாலும் சமூகத்தில் மற்றவர்களுடன் உறவாட இயலாமை காரணமாக இந்த வகை ஒட்டிசம் கொண்டவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ இயலாமல் போகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்பு விடா முயற்சிக்கும் அனுபவ பகிர்விர்ற்கும் நன்றி.

ஏனையவர்களும் தங்களுக்கு தெரிந்த வகையில் தங்கள் சூழலில் உள்ள வசதிகளை பயன்படுத்த வேண்டும். நான் யாழில் கார் வாங்கும் போது எனது நண்பன் சொன்னது, இனிமேல் இந்த காரின் நன்மை தீமை எல்லாரையும் விட எனக்குத்தான் கூட தெரிய வேண்டும் என்று. பலசந்தற்பங்களில் மெக்கனிகிடம் கொண்டு போகும் போது நான்தான் சொல்லுவேன்..இது அப்படி, அது அப்படி..அதில கைவைக்காதிங்கோ, இதை ஒருக்கா செய்துதாங்கோ...அதுபோல் எமது உடல் பற்றின தகவல்களும், பிரச்சனைகளும் எல்லோரையும் விட எங்களுக்கு கூடுதலாக தெரிய வேண்டும். நீங்கள் அதற்க்கு உதாரணமாக உள்ளீர்கள். எல்லாம் வைத்தியர் பாப்பார், அவருடைய குளிசை, ஆபரேஷன் பார்க்கும் என்றால் சரிவர போவதில்லை.

மற்றது தனிப்பட்ட ரீதியில் கோரள, மற்றைய மருத்துவ முறைகளில் நம்பிக்கை இல்லை. பெரும்பாலான சந்தர்பங்களில் சிலவழித்த காசுக்கு மனத்திருபிதியுடன் வருவார்கள்/ அல்லது திருப்தி மாதிரி காட்டிக்கொள்வார்கள். எனக்கு தெரிய ஒருவர் மூட்டு வருத்ததிர்ற்கு போனவர்.."நல்ல ட்ரீட்மென்ட் என்று சொன்னார்" உண்மையில் அதற்கு பெரும்தொகை பணத்தை சிலவளித்து..ஓய்வு எடுத்ததுதான் செய்த வேலை. அந்த ஓய்வை வீட்டில் படுத்திருந்தாலும் அந்த வருத்தம் கொஞ்சம் குறையும். இப்ப என்வென்றால், எடுத்த ஓய்விற்கு மேலாக வேலை செய்து போய் வந்த சிலவு கட்ட வேண்டும்.

மற்றவற்றை பற்றி பிறகு எழுதுகிறேன்..

ஆஸ்திரேலியாவில் தங்கம் வென்ற தமிழனையும் வாழ்த்துகிறேன்..அந்த திரி காணவில்லை..நான் லீவில் போட்டுவர

ஒட்டிசம் என்பது பல் வேறு நடத்தைகளை வெளிக்காட்டக் கூடிய ஒரு நரம்பியல் குறைபாடு. சில ஒட்டிசம் உள்ள நபர்கள் அபரிமிதமான திறமைகள் ஒன்றை அல்லது பலவற்றைக் கொண்டிருப்பது இந்தக் குறைபாடு கண்டுபிடிக்கப் பட்ட காலத்திலிருந்தே ஆவணப் படுத்தப் பட்டிருக்கு. அஸ்பேர்கர் சின்ட்றோம் (Asperger syndrome) என்பது இப்படி அபரிமித திறமை வெளிப்படும் ஒட்டிச வகை. அண்மையில் அஸ்பேர்கர் சின்ட்றோம் உடைய ஒரு பிரிட்டிஷ் இளைஞன் அமெரிக்காவின் கணணி வலையமைப்புகளைச் சீர்குலைத்த ஒரு அதி புத்திசாலியாக அடையாளம் காணப்பட்ட செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. என்ன தான் தனித் திறமை இருந்தாலும் சமூகத்தில் மற்றவர்களுடன் உறவாட இயலாமை காரணமாக இந்த வகை ஒட்டிசம் கொண்டவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ இயலாமல் போகிறது.

நன்றி ஜஸ்டின் உங்கள் தகவலுக்கு.

நானும் இந்த இளைஞனைப் பற்றி வாசித்தேன். இதை கவனத்தில் எடுக்கிறேன்.

  • தொடங்கியவர்

நன்றி எரிமலை. அர்ஜுன், தப்பிலி, ஜஸ்ரின் எழுதிய ஒட்டிசம் சம்மந்தமான பிரச்சனைகள் நமது குழந்தைகளிடையே வழமையில் காணப்படுமாயின் இதுபற்றி நீங்கள் விரிவான ஓர் கருத்தாடலில் உங்கள் தகவல்களை பகிர்ந்துகொண்டால் பலருக்கு பயனுள்ளதாய் அமையுமே.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா Autism நிலைகளும் ஓரளவினதல்ல. குழந்தையாக இருக்கும் போது பல குழந்தைகளில் இவை வெளிப்படுத்தப்படுவதில்லை. அவர்கள் வளர்ந்து ஒரு இரண்டு மூன்று வயதை அடையும் போதே இது பெரிதும் தோன்ற ஆரம்பிக்கும். அல்லது பெற்றோரால் உணரப்பட ஆரம்பிக்கும். அப்போது பெற்றோர் அக்குழந்தைகள் மீது அன்பும் கவனமும் அதிகம் செலுத்த வேண்டும். இது மூளை சம்பந்தப்பட்ட ஒரு மரபணு சார்ந்த நிலை ஆகும். இந்த நிலைக்கு குழந்தைகளை குறை சொல்லக் கூடாது.

குழந்தையாக இருக்கும் போது அப்பா அம்மா சொன்ன குழந்தை திடீர் என்று அதை நிறுத்தும். கைகளை தட்டி ஓசை எழுப்பும். தலையை உடலை சுற்றி மகிழும். ஒரே விடயத்தை திரும்ப திரும்ப செய்ய முற்படும்.

சாதகம் பார்த்து திருமணம் செய்யும் நம்மவர்கள் அதில் வைக்கும் நம்பிக்கையை விட.. இரத்தப் பரிசோதனை.. மரபணு பரிசோதனைகள் செய்து அவற்றின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டால்.. இப்படியான குழந்தைகளை உருவாக்கும் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கலாம். இதுகளைச் சொன்னா.. உவர் பெரிய விஞ்ஞானி என்று சொல்லி தட்டிக்கழிக்கும் சமூகத்தில் இருந்து கொண்டு நல்லதை சொல்லவோ செய்விக்கவோ வாய்ப்புக் குறைவாகவே உள்ளது. ஏன் மேற்குநாடுகளில் வாழும் நம்மவர்கள் ([பெற்றோர்கள்) மரபணு பரிசோதனைக்கு இணங்குவதையே செய்ய பயப்படுகின்றனர்.

மேலும்.. Autism spectrum என்று அதில் பல அளவீட்டு நிலைகள் உள்ளன. பிள்ளைகளை தொடர்ச்சியாக பல மூளை பயிற்சி செயற்பாடுகளுக்கு உட்படுத்தி அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று கண்டறியலாம். அதற்கேற்ப அவர்களுக்கு பாடசாலைகளில் கல்வி மற்றும் வாழ்க்கைத் தேவைக்கான சிறப்பு வசதிகள் பயிற்சிகள் அளிக்கக் கோரலாம். மேற்கு நாடுகளில் அரசாங்கங்கள் இவ்வாறான குழந்தைகளுக்கு முழு அளவிலான உதவிகள் வழங்குவதுடன் பெற்றோருக்கு disability living allowance என்று வாராந்தம் பண உதவித்தொகையும் அளிக்கின்றன.

Autism குறிப்பாக Mild (குறைந்த நிலை) நிலையில் உள்ளவர்களின் அந்த நிலையில் இருந்து முற்றாக வெளிவர வாய்ப்பு இருக்கிறது. மூளையின் செயற்பாட்டை பயிற்சிகள் மூலம் வழமை நிலைக்கு உயர்த்துவது இதில் அடங்குகிறது.

தற்போது gene therapy மூலம் இதனை குணப்படுத்தும் ஆராய்ச்சிகள் வெற்றி கண்டுள்ளன. இருந்தும் இன்னும் சில காலத்தின் பின்னே தான் அவை மேற்குநாடுகளில் வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படலாம்.

Edited by nedukkalapoovan

குழந்தையாய் இருக்கும் பொழுது நான் முன்னைய பதிவில் கூறிய சிறுவனிடம் வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. 3 வயதிலேயே இசைப் பெட்டியில் (Multi CD Stereo) தனக்கு விரும்பிய பாடலை தெரிவு செய்து போடுவான். கை தட்டுவது, ஆடிக்கொண்டிருப்பது (Rocking ), மற்றவர்களைப் பார்த்து பிரதி பண்ணுவது போன்ற பழக்க வழக்கங்கள் நீண்டகாலமாய் இருந்தது. இப்பொழுது நன்றாக குறைந்து விட்டது. 9 வயது வரை பேச்சு அவ்வளவாக வரவில்லை. இப்பொழுது நன்றாக கதைக்கிறான். தமிழில் மிக ஆர்வம். தமிழ் சஞ்சிகைகளைப் பார்த்து எழுதிப் பழகுவான். ஒவ்வொரு ஆங்கில சொல்லுக்கும் தமிழ் கருத்துக் கேட்பான். அவனுடைய நிலையில் முன்னேற்றம் தெரிவதாகத்தான் நினைக்கிறேன். தாய் தந்தையரின் ஒத்துழைப்பு நிறைய உண்டு. பாடசாலையில் பாடங்களில் உதவுவதற்கு உதவியாளர் உண்டு.

மற்றைய குறைபாடுகள் போல ஒட்டிசம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் மத்தியில் இக்குறைபாடு அதிகம் உள்ளது என்பது எனது தனிப்பட்ட கணிப்பு. அறிவயல் காரணம் தெரியவில்லை. புலம்பெயர் தமிழர் மத்தியில் இதனைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

நான் இக்குறைபாடு உள்ளவர்களை இலங்கையில் காணவில்லை. சிலவேளை அங்குள்ள வாழ்க்கை முறைகளில் குழந்தை வளர வளர இக்குறைபாடு மெல்ல மெல்ல குணமாகிறதோ தெரியாது.

நெடுக்ஸ் கூறியபடி எதிகால சந்ததினரின் நலன் கருதி திருமணத்தின் முன் 'மரபணு பொருத்தம்' பார்ப்பது அவசியம். இன்றுள்ள அறிவயல் வளர்ச்சியை எங்களின் தேவைகளுக்கு பாவிக்க வேண்டும்.

எனது உறவுகளிலேயே ஒருவர் இருக்கின்றார்.இப்போ வயது 20.பிறந்ததிலே இருந்து எமது கண்முன் வளர்ந்துவருபவர்.மிகவும் அழகான் சிறுவனாக இருந்தார்.8 மாதமளவில் கதை துப்பரவிற்கு இல்லை என்று குடும்ப வைத்தியரிடம் போனார்கள்.ஒரு தமிழ் பெண் வைத்தியர் ஆண்பிள்ளகள் கொஞ்சம் பிந்தித்தான் கதைப்பார்கள் என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டா.பின்னர் ஒரு 3,4 மாதங்களின் பின் அவர்கள்திரும்ப வைத்தியரிடம் போக உள்நாக்கை கொஞ்சம் வெட்டினால் சரியென்று அதையும் செய்தார்கள்.பின் 2 வயது வரை பெரிதாக கதையில்லை ஆனால் அம்மா,அப்பா என ஓரிரு வார்த்தைகள் பேசுவார்.டே கெயருக்கு போகத்தொடங்க அங்கு இவர் ஒருவருடனும் சேருவதில்லை தனியே ஏதோ சத்தம் போட்டபடியே இருக்கின்றார் என சொன்னார்கள்.பின் அவர்களாகவே மொழிபழக்குபவரென ஒருவரை நியமித்து தனிக்கவனம் செலுத்தினார்கள்.இருந்தும் அவர் பேசுவதுதாமதமாகவே இருந்து வந்தது.வேறொரு உறவினரின் ஆலோசனையின் பெயரில் டவுன்ரவுணில் ஒரு மூன்றுமாதங்கள் சத்தம் தான் அவரது பிரச்சனையென்று ஒரு $4000 செலவழித்து ஒரு சிகிச்சை கொடுத்தார்கள்.அந்த சிகிச்சை இவர் தாயின் வயிற்றில் இருக்கும் போது முழுமையாக சத்தங்களி உணரவில்லை என்று அதே சத்தத்தை டேப் பண்ணி இவருக்கு இயர் போன் மூலம் கேட்கப் பண்ணுவார்கள்.பிள்ளை ஊஞ்சலில் ஆடியபடியே ஒவ்வொரு நாளும் 3 மணித்தியாலம் இந்த சத்தத்தை கேட்ட வேண்டும்.அந்த சிகிச்சை வேலை செய்ததோ இல்லையோ என அந்தப் பெற்றோருக்கு இன்றுவரை சரியாகசொல்லமுடியவில்லை.ஆனால் அவர் சும்மா சத்தம் போடுவது கொஞ்சம் குறைததாக சொல்வார்கள்.

பின்னர் அவர் பாடசாலை போக ஆரம்பிக்கும் போது தான் பெரிய பிரச்சனை தொடங்கியது.அவர் போக வேண்டிய பாடசாலையில் இருந்து ஒரு கடிதம் வந்தது உமது மகன் வேறு ஒரு பாடசாலைக்கு கல்வி திணைகளத்தால் சிபார்சு செய்யப்படுகின்றாரென்று

அந்த பாடசாலை குறைபாடுகள் உள்ளவர்களுக்கான பாடசாலை.ஆனால் எல்லோரும் ஒரே குறைபாடுகளுள்ளவர்களல்ல.இதனால் வேறுபல பிரச்சனைகள் அவர்களுக்கு உருவாகத்தொடங்கிவிட்டது.அங்கு இருக்கும் பலவிதமான குறைபாடுள்ளவர்களையும் பார்த்து இவர்கள் பிள்ளை இமிடேட் பண்ண தொடங்கிவிட்டது கல்வித்திணைக்களத்துடன் அவர்கள் எவ்வளோ வாதாடியும் அவர்களால் ஒன்று செய்ய முடியவில்லை.ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு பாடசாலைகளுக்கு 5ஆம் வகுப்புவரை போனார்.அவர்கள்போகாத ஸ்பெசலிட்டுகள் இல்லை.பிரச்சனை ஒன்றென்றாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி தீர்வு சொன்னார்கள்.ஆனால் பலர் இவருக்கு இருப்பது ஓட்டிசம், கைப்பர் அல்ல எனவே றிடிலின் என்ற பிள்ளைகளை அமைதியாக்கி ஒருமனதாக்கும் மருந்தை கொடுக்க வேண்டாம் என்றார்கள்.காரணம் வளர்ந்தபின் பக்க விளைவுகள் ஏதும் வரலாம் அல்லது ஆயுள்முழுக்க எடுக்க வேண்டிவரலாம்.சாதரணபிள்ளைகளுடன் பெரிதாக பழகாததால் பிள்ளை ஒரு மாறுபட்ட குணாம்சங்களுடன் இருந்தது.டீ.வீ நிகழ்சிகள்,படங்கள் பார்த்தால் அந்த நடிகர்களி அப்படியே கொப்பி பண்ணித்தான் கதைக்கும்.தனியா எந்த நேரமும் ஏதோ கதைத்தபடி.

5ஆம் வகுப்பு வர இனியும் தாமதித்தால் ஆபத்து என உணர்ந்த பெற்றோர் தனியார் பாடசாலைகளில் படிப்பிக்க முயற்சி எடுத்து பலரால் நிராகரிக்கப் பட்ட நிலையில் ஓரிடத்தில் அனுமதி கிடைத்தது.இவ்வளவிற்கு கணிதமும்,விஞானமும் அவரின் வகுப்பிற்கேற்ப பழைய பாடசாலைகளில் படிப்பிற்கப் படவில்லை.முதல் வருடம் மிகவும் கஸ்டப் பட்ட அந்தப்பிள்ளை மெதுவாக முன்னேறத்தொடங்கினார்.பழக்க வழக்கங்களும் மெதுவாக மாறத்தொடங்கியது.இருந்தும் தன்னில் இருக்கும் குறைபாட்டை உணரும் நிலை வந்ததால் குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள்ளேயே வாழ்ப் பழகி 10 வகுப்பு வர திரும்ப பப்ளிக் பாடசாலைக்கு போகத்தொடங்கியது

தொடரும்.

ஒருவரின் உடலில் உள்ள குறைபாடு என்பது அவர்களின் குறை அல்ல. அது பார்ப்பவர்களின் மனதில் உள்ள குறை.

நீங்கள் கடந்துவந்த பாதையின் கடினத்தன்மையை புரிந்துகொள்ள முடிகின்றது!அதற்காக எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!!! :D

எதையும் எதிர்கொண்ட அனுபவமும், எதையும் எதிர்கொள்ளும் தைரியமும் இருக்கும்போது.. என்ன கவலை!

தன்னம்பிக்கையும் தளராத மனமும்... உங்களை மேலும் நல்ல நிலைக்கு கொண்டுவரும்! :)

வாழ்த்துக்கள் நண்பா! :)

நட்புடன்...

பார்த்தீபன்

  • தொடங்கியவர்

மிக்க நன்றி பார்த்தீபன்.

+++

இங்குள்ள ஆட்டிசம் சம்மந்தமான கருத்துக்களை இணைத்து ஓர் புதிய திரி ஆரம்பிக்கின்றேன், இதுபற்றி புதிய திரியில் குறிப்பிட்ட உபாதை பற்றியதான விபரம் தெரிந்தவர்கள் கருத்து கூறுங்கள். நன்றி.

உங்களின் இந்த நிலைக்கு காரணம்.. உடலில் உள்ள தசை நார்கள் பலவீனப்பட்டுக் கொண்டு போவதுதான். இலங்கையில் இதற்கு எவ்வாறான சிகிச்சை அளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வழமையாக கூட்டுச் சிகிச்சை முறையே பாவிக்கப்படுகிறது. உங்களின் தசை நார்களை வலுப்படுத்தும் physio therapy முறைகளும் உபகரணங்களும் மேற்கு நாடுகளில் உள்ள. மருந்துகள் மூலம் தசைகளின் செயற்பாட்டை ஊக்கு வித்தலையும் செய்வார்கள். சத்திரசிகிச்சையும் அளிப்பார்கள். சரியான உபரகணங்களை உதவி வழங்கும் கருவிகளை பாவித்து வருவீர்களானால் உங்கள் தசைநார்கள் வலுவிழப்பதை குறைக்க முடியும். மற்றவர்களின் உதவி இன்றி உங்களின் செயற்பாடுகளை செய்யக் கூடிய வகைக்கு அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன் வர வேண்டும்.

இந்தியா போன்ற நாடுகளில் செல்வந்த வைத்தியசாலைகளில் இவை இருக்கும். அதுமட்டுமன்றி stem cell theraphy மூலம் இதனை குணமாக்கலாம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று சொன்னீர்கள். அப்படியான சிகிச்சை முறை இதற்கு பாவிக்கப்படுகிறது தான். அதன் மூலம் உங்களின் பழைய தசைக்கலங்களை நல்ல பலமுள்ள தசைக்கலங்களை செலுத்தி பின்னர் அவற்றை பெருக வைத்து பழைய பலவீனமான தசைகளை படிப்படியாக குறைப்பது இந்த முறையாகும். இது நீண்ட காலம் எடுக்கும் மிகவும் நவீன செலவு கூடிய ஒரு சிகிச்சை முறை. இருந்தாலும் நீங்கள் முயன்று பார்க்கலாம்.

ஆராய்ச்சி ரீதியில் இது ஒரு வெற்றி பெற்ற சிகிச்சை முறையாகும்.

http://www.news-medical.net/news/2009/03/05/46604.aspx

நீங்களும் இந்த நிலையில் இருந்து மீண்டு சாதாரண பிரஜைகள் போல வாழ எனது மனப்பூர்வ வாழ்த்துக்கள். உங்கள் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இறைவனையும் வேண்டுவோமாக.

இலங்கையில் உள்ள உங்களின் டாக்டர்கள் மூலம் ஒரு அறிக்கையைப் பெற்று மேற்குநாடுகளில் சிகிச்சைக்கு என்று விசா பெற்று.. வந்து சிகிச்சை பெற முடியும். அந்த வகையில் சிந்தித்து செயற்பட்டீர்கள் என்றால் நல்லது. இன்றேல் இந்தியாவிலும் சிகிச்சை பெறலாம்.

பிரித்தானியா அவுஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளும் இந்த வசதிகளை அளிக்கின்றன.

http://www.visaforuk.co.uk/medical_treatment.html

(உங்களை தகவலை இன்று தான் படித்தேன். இந்தளவு தாமதத்துடன் எம்மால் இயன்ற பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்.)

நன்றி நெடுக்கண்ணை.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

stem cell theraphy இன்னும் ஆராட்சி வகையிலேயே இருப்பதாகவும் சுண்டெலிகளில் பரீட்சித்து பார்த்த போது சாதகமான முடிவை தந்ததாகவும் ஒரு சிறுவனிடம் பரீட்சித்து பார்த்த போது சிறிய முன்னேற்றம் காணப்பட்டதாகவும் எனது வைத்தியர் தெரிவித்தார்.ஆனால் இதன் மூலம் Duchchune MD மற்றும் Becker MD ஆகியவற்றுக்கே சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவித்தார்.எனக்கு இருப்பது Limb Girdle மது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.ஆனால் அதில் கூட ஏராளமான வகைகள் உள்ளதாகவும் அதுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.எனக்கு நடக்கும் போது கெண்டைப்பகுதியிலும் குதிக்காலுக்கு மேலேயுள்ள நரம்பு பகுதியிலும் பயங்கர நோ இருக்கும் சமீப காலமாக அது அதிகரிக்கிறது என்னால் உணர முடிகிறது.நீச்சல் தசைகளை செயற்திறனுடன் வைத்திருப்பதற்கு உதவும் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது.துரதிஸ்டவசமாக அதுவும் எனக்கு கடினமாக உள்ளது.மற்றவர்கள் போல எல்லாம் செய்ய முடியாவிட்டாலும் எனக்கென்று ஒரு வாழ்க்கை உள்ளதாக உணர்கிறேன்.

சிறு வயதில் ஏராளமான கேலிகள் நையாண்டிகளுக்கு முகம் கொடுத்தாலும் கல்வி என்ற இறைவன் கொடுத்த வரத்தினால் என்னால் மற்றவர்களுக்கு முகம் கொடுத்து வாழ முடிகிறது.இந்த தசை சிதைவு நோயினால் என்னுடைய சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறாத போது மனதுக்கு கடினமாக உணருவேன்.என்றாலும் வாழ்க்கையை வாழவேண்டும் என்ற அவா எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.

Edited by வாதவூரான்

  • கருத்துக்கள உறவுகள்

முரளி, இன்று தான் இந்தத்திரியை வாசிக்கமுடிந்தது. வாசித்து ஒரு கருத்துகூட முன்வைக்கவில்லையே........என்று வெட்கி தலைகுனிகிறேன்.

முரளி, உங்களின் வாழ்க்கைப்போராட்டங்களை பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள். உங்கள் தன்னம்பிக்கைக்கும் கடந்துவந்த வெற்றிப்பாதைக்கும் வாழ்த்துகள்.

நீங்கள் சாதிக்க பிறந்தவர்.

என் மனதில் நீங்கள் உயர்ந்த இடத்தை பிடித்திருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் கரும்பு அவர்கட்கு, ஆரம்பத்திலிருந்து இவ் இடுகையை வாசித்தே வந்துள்ளோன், ஆனால் என்ன காரணமோ தெரியாது கருத்தெழுத முயலவில்லை. ஆனால் தற்போது அதற்கான சந்தர்ப்பம் காரணம் இவ்விடுகையில் அண்மையில் எழுதிய தங்கள் கருத்தை நான் வாசிக்கும்போது ஏதோ மனக்கிலேசத்தில் இருப்பதுபோல் உள்ளது. அனைத்தும் நல்லபடியே நடக்கும் இயற்கையை; வேண்டியபடி, எனது வாழ்த்துக்கள் தங்களுக்கும் எராளனுக்கும் உரித்தாகுக. தேடலே வெற்றிக்கு வழிவகுக்கும் ஏராளன் அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்சியை இணையத்தின்மூலம் பார்த்தேன் சிலவேளை இவ்விடையம் உங்களுக்குப் பயன்படலாம். சித்தவைத்தியம் எனும் ஒரு விடையம் தமிழர் மத்தியில் பிரபல்யம் தற்போது தமிழநாட்டில் மீண்டும் பிரபல்யமாகத் தொடங்கியுள்ளது. ஆனால் இது பல்லாயிரமாண்டு பழைமைவாய்த ஒரு பாரம்பரிய வைத்தியமுறை. தமிழநாட்டில் திரு தேவநாயகம் எனும் பிரபல்யமான சித்தவைத்திய நிபுணர் ஒருத்தர் வாழ்கிறார் பெரிசாகச் செலவுவராது அவரைச் சந்திக்க முயன்றுபாருங்கள். கீழகாணும் இணைப்பை விருப்பமென்றால் பார்க்க முயற்சிக்கவும்.

http://www.thiraimovie.com/video/neeya-naana-12-12-2010/

  • தொடங்கியவர்

நன்றி கறுப்பி, ஞாயிறு.

  • 1 year later...
  • தொடங்கியவர்

யாழ் இணையத்தின் நாளாந்த அறிக்கையில் சில தடவைகள் இவ்விடயமும் இணைக்கப்பட்டுள்ளதை அவதானித்தேன். இப்படியும் ஒரு சமாச்சாரத்தை நான் முன்பு எழுதிப்போட்டது நினைவில் வந்தது.

முக சீர் திருத்த சிகிச்சை என்பது பலபடிமுறைகளைக்கொண்டது. ஒரே தடவையிலோ, இரண்டு, மூன்று தடவைகளிலோ உடனடியாக சீரமைக்கமுடியாது. ஒவ்வொரு தடவையிலுமாக சிறிய சிறிய மாற்றங்களாகவே முன்னேற்ற முடியும்.

இந்த வருடம் ஜனவரி மாத ஆரம்பத்தில் மேலும்மொரு Rhinoplasty சத்திரசிகிகிச்சைக்கு உள்ளாகினேன். நாளை மீண்டுமொரு Rhinoplasty சத்திரசிகிகிச்சை எனக்குள்ளது. இத்துடன் மூக்கில் ஆறாவது தடவையாக கத்தி வைக்கப்படுகின்றது. அதிக பிரயத்தனம் செய்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆரம்பித்த நீண்டபயணம். ஒன்றும் செய்யமுடியவில்லை. இடைவழியில் விட்டுச்செல்லமுடியாது. சத்திரசிகிச்சையில் வெட்டுக்கொத்து வாங்கி பழகிவிட்டது. முன்பு இரண்டு தடவைகள் காதில் கசியிழையத்தை வெட்டி எடுத்து மூக்குப்பகுதியில் வைத்து சத்திரசிகிச்சை செய்தார்கள். நாளையும் காதிலும், மூக்கிலும் வெட்டு உள்ளது. இதன்பின்னர் மொகரக்கட்டை Apperance சற்று முன்னேற்றம் வரும் என்று நினைக்கின்றேன், பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை உங்களுக்கு நடைபெற இருக்கும் அறுவைச்சிகிச்சை மிகச்சிறப்பாக வெற்றிகரமாக நிகழும்...அதற்கு என் மனதின் வாழ்த்துக்கள் கரும்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.