Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்ன வயசு லட்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில் படிக்கும் போது

எல்லோரும் லட்சியம் வைத்திருப்போம்.அதை லட்சியம் என்று சொல்ல முடியாது ஆசை என்று சொல்லலாம்.நாங்கள் இன்னவாக வர வேண்டும் என(உ+ம்)வைத்தியர்,ஆசிரியர் அப்படி ஆசைப்பட்ட உங்கள் லட்சியம் நிறைவேறியதா?

நான் சின்ன வயதில் இருந்து வக்கீல் ஆக வர வேண்டும் என ஆசைப்பட்டேன் ஆனால் அது நிறைவேறவில்லை.இதைப் பற்ய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சிறிய வயதில் எனக்கு அப்படி ஒரு ஆசையும் இருக்கவில்லை. ஆனால் ஒரு பத்தாம் வகுப்பளவில் பொறியியலாளர் ஆசை வந்தது. அதுவேயாக இருக்கிறேன் இப்போது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எங்கள் மூத்த அண்ணன் மாதிரியே வைத்தியராக வேணுமெண்டு ஆசைப் பட்டன். உங்கள் அண்ணா டொக்ரரா எண்டு கேக்கப் படாது, அவரும் ஆசைப் பட்டார். ஆக முடியேல்ல.

உண்மையில உயர் தரம் படிக்கும் போது வைத்தியராக வர வேணுமெண்டு ஆசையொண்டு வந்தது. எங்கட புள்ளித் திட்டங்கள் தெரியும் தானே? கொஞ்சத்தில பிசகீட்டுது. அதால விலங்கு மருத்துவராகி விட்டன். இதப் போல ஒரு புண்ணியம் சேர்க்கிற வேலை வேறெதும் இல்லை எண்டு விலங்கு மருத்துவரா தாயகத்தில பணியாற்றேக்க தெரிஞ்சுது.

ஏன் மேசையில ஆட்டைக் கிடத்தி பங்கு போட்டனீங்களோ? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேக்கும் இந்த சந்திரமன்டலத்துக்குப்போய் ஆராச்சியெல்லாம் செய்வினமெல்லோ அவே தான் அந்த மொத்தமான உடுப்புப்போட்டுக்கொண்டு துள்ளித் துள்ளித்திரிவினமெல்லோ அவேயல் ஆகவேனுமென்டு அப்பவில இருந்து இப்பவரைக்கும் ஆசைப்பட்டு ஒவ்வொரு நாளும் இரவ 10 மனிக்குப்பிறகு போட்டுவாரன் ஆனா என்ன என்னோட இந்த நயன்தாராவுமெல்லே வாறா நீங்களும் முயன்றுபாருங்கள் முடியும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மேசையில ஆட்டைக் கிடத்தி பங்கு போட்டனீங்களோ? :lol:

:rolleyes: பாவிமக்காள், ஒரு விஷயம் சீரியசா சொல்ல விட மாட்டியளே? நான் சொல்ல வந்தது என்னண்டா மனிசரே மனிசரைக் கொல்லுற உலகத்தில வாயில்லா ஜீவன்களுக்கு வலி போக்கிற தொழில் புண்ணியம் தேடுற தொழில் தானே எண்டு. ஆனா சில நேரம் புண்ணியம் 'உடனடிப் புன்ணியமா" கிடைக்கும். மாட்டுக்குப் பிள்ளைப் பேறு (கன்றுப் பேறு?) பாத்தால் கடும்புப் பால் இலவசமா கிடைக்கும். விழுந்து சாகக் கிடந்த மாட்ட எழுப்பி விட்டால் பழம் பிஸ்கற் எண்டு வீடு தேடி வரும்.

ஜஸ்டின்,

நீங்கள் விலங்கியல் மருத்துவராக இருக்கிற விசயம் பெருமைக்குரிய விசயம். இங்கு விலங்கியல் மருத்துவர்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிது. நான் அண்மையில சீ.பீ.சி வானொலியில விலங்கியல் மருத்துவத்தில புகழ்பெற்ற கனேடிய மருத்துவர் ஒருவரிண்ட பேட்டியை கேட்டு இருந்தன். அருமையாக பலப்பல விசயங்களை சொல்லி இருந்தார்.

ஊரில கண்டறியாத புள்ளித்திட்ட முறையில எல்லாத்தையும் பாகுபடுத்தி நாறவச்சு இருக்கிறாங்கள். இதனால ஒன்றைவிட மற்றொன்று பெரிசு - இல்லாட்டிக்கு விஷேசம் எண்டு சனத்துக்க குழப்பம். உயிரியல் விஞ்ஞானம் கிடைச்சு யாழ் பல்கலைக்கழகத்தில படிச்சு பிறகு பெரிய ஆராய்ச்சிகள் செய்து அரிய சேவைகள், திட்டங்கள் எல்லாம் செய்த ஆக்கள் சிலரின்ட சாதனைகளை மருத்துவபீடத்துக்கு போன பலர் நினைச்சும் பார்க்க முடிய இல்லை. இதேமாதிரியே..

விலங்கியல் மருத்துவத்திலையும் நீங்கள் பல சாதனைகள் செய்யலாம். மனிசரிண்ட மருத்துவம் படிச்சால் ஆக மனுசருக்கு மாத்திரம்தான் வைத்தியம் பார்க்கலாம். ஆனால்.. உங்கட பிரிவில எத்தனையோ விதமான விலங்கினங்களுக்கு சேவை செய்யலாம் - வாழ்வு கொடுக்கலாம் - அதுகளிண்ட துன்பங்களை போக்கலாம்.

யாழுக்கையும் ஒரு விலங்கியல் மருத்துவர் இருக்கிறார் எண்டு நினைக்க சந்தோசமாய் இருக்கிது. வாழ்த்துகள் ஜஸ்டின்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டினுக்கு வேலைப் பிரச்சினை இல்லை.. ஆடு, மாடு, கோழி கிடைக்காட்டிலும் யாழில சில ஆக்கள் இருக்கினம்தானே..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளை பகிர்ந்து கொண்ட டங்குவார்,ஜஸ்டின்,வில்லன், முரளி ஆகியோருக்கு நன்றி.

Edited by rathy

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்,

நீங்கள் விலங்கியல் மருத்துவராக இருக்கிற விசயம் பெருமைக்குரிய விசயம். இங்கு விலங்கியல் மருத்துவர்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிது. நான் அண்மையில சீ.பீ.சி வானொலியில விலங்கியல் மருத்துவத்தில புகழ்பெற்ற கனேடிய மருத்துவர் ஒருவரிண்ட பேட்டியை கேட்டு இருந்தன். அருமையாக பலப்பல விசயங்களை சொல்லி இருந்தார்.

ஊரில கண்டறியாத புள்ளித்திட்ட முறையில எல்லாத்தையும் பாகுபடுத்தி நாறவச்சு இருக்கிறாங்கள். இதனால ஒன்றைவிட மற்றொன்று பெரிசு - இல்லாட்டிக்கு விஷேசம் எண்டு சனத்துக்க குழப்பம். உயிரியல் விஞ்ஞானம் கிடைச்சு யாழ் பல்கலைக்கழகத்தில படிச்சு பிறகு பெரிய ஆராய்ச்சிகள் செய்து அரிய சேவைகள், திட்டங்கள் எல்லாம் செய்த ஆக்கள் சிலரின்ட சாதனைகளை மருத்துவபீடத்துக்கு போன பலர் நினைச்சும் பார்க்க முடிய இல்லை. இதேமாதிரியே..

விலங்கியல் மருத்துவத்திலையும் நீங்கள் பல சாதனைகள் செய்யலாம். மனிசரிண்ட மருத்துவம் படிச்சால் ஆக மனுசருக்கு மாத்திரம்தான் வைத்தியம் பார்க்கலாம். ஆனால்.. உங்கட பிரிவில எத்தனையோ விதமான விலங்கினங்களுக்கு சேவை செய்யலாம் - வாழ்வு கொடுக்கலாம் - அதுகளிண்ட துன்பங்களை போக்கலாம்.

யாழுக்கையும் ஒரு விலங்கியல் மருத்துவர் இருக்கிறார் எண்டு நினைக்க சந்தோசமாய் இருக்கிது. வாழ்த்துகள் ஜஸ்டின்!

நன்றி முரளி. விலங்கு மருத்துவத்தின் மகத்துவம் அதைப் படிக்க ஆரம்பித்த முதல் ஆண்டிலேயே எனக்கு விளங்கி விட்டது. இப்போது நான் செய்யும் கலாநிதிப் பட்ட ஆய்வு கூட எனது விலங்கு மருத்துவத் துறை சார் நிபுணத்துவத்தினால் தான் செய்யக் கிடைத்தது. நீங்கள் விலங்கு மருத்துவத்தின் நகைச்சுவை கலந்த பக்கத்தை அறிய விரும்பினால் இங்கிலாந்து விலங்கு மருத்துவர் ஜேம்ஸ் ஹெரியற் (James Herriot) றின் நூல்களைப் படித்துப் பாருங்கள். மிகவும் அருமையானவை.

சின்ன வயதில் படிக்கும் போது

எல்லோரும் லட்சியம் வைத்திருப்போம்.அதை லட்சியம் என்று சொல்ல முடியாது ஆசை என்று சொல்லலாம்.நாங்கள் இன்னவாக வர வேண்டும் என(உ+ம்)வைத்தியர்,ஆசிரியர் அப்படி ஆசைப்பட்ட உங்கள் லட்சியம் நிறைவேறியதா?

நான் சின்ன வயதில் இருந்து வக்கீல் ஆக வர வேண்டும் என ஆசைப்பட்டேன் ஆனால் அது நிறைவேறவில்லை.இதைப் பற்ய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். :D

ரதி நீங்கள் சொன்னது போல் எல்லாருக்கு ஆசை உண்டு..ஆனால் நிறை வேறுவதுதான் கஸ்ரம்... எனக்கு நிறய ஆசை இருந்தது.. எல்லாமே உலகத்தில் தெரிந்து இருக்க வேண்டும் என்று..முடிந்த வரை கத்து இருக்குறன் படித்து இருக்கன்.. என்னோட பெரிய ஆசை நான் accounting fieldla எல்லாமே தெரிந்து இருக்கணும் ..படித்தன் என்னால் கடசி வருடத்தை மட்டும் முடிக்க முடிய வில்லை.. படிக்குறதுக்ககவே லண்டன் வந்தன்.. எனது விசா பிரசனையால் எனது கடசி வருடம் மட்டும் முடிக்க முடியாமல் இருக்குறேன்.. எனது கண்ணிர் உடன் காத்து இருக்குறேன்..எனது படிப்பய் முடிப்பதர்க்காய்.. நல்ல கேள்வி ரதி இது நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைப்பது நடப்பதில்லை அதனால் நான் ஆசைப்படுவதில்லை அப்படி வரவேண்டும் இப்படி வரவேண்டும் என்று :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் நீங்கள் பாம்பை வெட்டி இருக்கிறீங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சின்ன வயதில் ஓர் ஆசிரியனாக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. என் வயதை ஒத்தவர்களுடன் சேர்ந்து பல மரங்களுக்குப் பாடம் சொல்லி, கணக்குக்கேட்டு அடிபோட்ட அனுபவங்களும் இருந்தது. ஆனால் க.பொ.த சாதாரணம் படித்தபோது நானும் ஒரு சத்திரசிகிச்சை நிபுணராக வரவேண்டும் என்ற ஆசை மேலோங்கியது. ஆனால் அந்த ஆசையும் அற்றுப்போனது. அதன் பிறகு இலண்டனுக்கு வந்து கற்றது பொறியியல், தற்போதைய தொழிலும் அதுவே. ஆனால் இங்கேதான் எனது இளவயது ஆசையும் நிறைவேறியது. அதுதான் ஆசிரியர் என்று எல்லோரும் அன்பாக அழைப்பது. எனக்குப் பிடித்ததும் அதுவே. எம்மிளம் சந்ததியினர்க்கு எம்மினிய தமிழ்மொழி, கலை, கலாச்சாரங்களை கற்பிப்பதற்கு உதவுவது ஒருவித மனநிறைவையும் தருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ஜினியராக வரத்தான் விரும்பினன்! வினாத்தாள் திருத்துபவர் அதிலுள்ள பதிலைத்தான் பார்த்தாரே தவிர எனது விருப்பத்தைப் பற்றி கொஞ்சமும் நினைக்கேல்ல. அதனால எனக்கும் ஜஸ்ரின் மாதிரி சிறு சறுக்கல். அவர் மனுச வைத்தியத்துக்குப் பதில் மாட்டு வைத்தியம் செய்கிறார், நான் என்ஜினியருக்குப் பதில் வாகன என்ஜினுக்கு நியரில(பக்கத்தில்) நின்டு வேலை செய்யிறன்.

அவரின் வேலையில் பிழை வந்தால் அப்படியே தூளையும், உப்பையும் போட்டு எண்ணைத் தாச்சிக்குள் தள்ளிவிடலாம்.

நம்ம வேலையில் பிழைவந்தால் அப்படியே மூட்டை கட்டி இரும்பு உருக்கிற இடத்துக்கு அனுப்பிவிடலாம்.

நானும் எங்கள் மூத்த அண்ணன் மாதிரியே வைத்தியராக வேணுமெண்டு ஆசைப் பட்டன். உங்கள் அண்ணா டொக்ரரா எண்டு கேக்கப் படாது, அவரும் ஆசைப் பட்டார். ஆக முடியேல்ல.

உண்மையில உயர் தரம் படிக்கும் போது வைத்தியராக வர வேணுமெண்டு ஆசையொண்டு வந்தது. எங்கட புள்ளித் திட்டங்கள் தெரியும் தானே? கொஞ்சத்தில பிசகீட்டுது. அதால விலங்கு மருத்துவராகி விட்டன். இதப் போல ஒரு புண்ணியம் சேர்க்கிற வேலை வேறெதும் இல்லை எண்டு விலங்கு மருத்துவரா தாயகத்தில பணியாற்றேக்க தெரிஞ்சுது.

நானும் நம்மளுக்கு வைத்தியம் பாக்க இங்க உலவுற ஆட்களில ஒருத்தரும் இல்லையே எண்டு கவலைப்பட்டுக் கொண்டு இருந்தன். ஆகா இப்பத்தான் சரியான ஆள் அம்பிட்டு இருக்கார். வேளை வறேக்க பாத்துக் கொள்ளுவம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் நீங்கள் பாம்பை வெட்டி இருக்கிறீங்களா?

ஓம். ஒரு குட்டி மலைப் பாம்புக்கு முதுகில சத்திரை சிகிச்சை செய்யேக்க உதவி மருத்துவரா இருந்திருக்கிறன். அதுக்குப் பிறகு ரண்டு மூண்டு வேறு ரகப் பாம்புகளில் பிரேத பரிசோதனை செய்திருக்கிறன். எதுக்குக் கேக்குறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நம்மளுக்கு வைத்தியம் பாக்க இங்க உலவுற ஆட்களில ஒருத்தரும் இல்லையே எண்டு கவலைப்பட்டுக் கொண்டு இருந்தன். ஆகா இப்பத்தான் சரியான ஆள் அம்பிட்டு இருக்கார். வேளை வறேக்க பாத்துக் கொள்ளுவம்.

ஆதிக்குத் தனிக் கவனிப்பு "பக்கேஜ்" உண்டு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஓம். ஒரு குட்டி மலைப் பாம்புக்கு முதுகில சத்திரை சிகிச்சை செய்யேக்க உதவி மருத்துவரா இருந்திருக்கிறன். அதுக்குப் பிறகு ரண்டு மூண்டு வேறு ரகப் பாம்புகளில் பிரேத பரிசோதனை செய்திருக்கிறன். எதுக்குக் கேக்குறீங்கள்?

பிறகு பாம்பைத் தாட்டனீங்களோ அல்லது சைனீஸ் ரெஸ்டோரண்டுக்குப் போனதோ??!! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் எனக்கு பாம்பு என்றால் பயம் அது தான் கேட்டனான்.இங்கு வந்து தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ப்ரீத்தி,முனீவர்ஜீ,செல்வமுத்

து சேர்,சுவி,ஆதிவாசி ஆகியோருக்கு நன்றி.சுவியின் கருத்தை வாசித்து சிரித்தேன்.மேலும் யாரவது தங்கள் வித்தியாசமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஞாபகம் தெரிஞ்ச நாளில் இருந்தே எங்க ஊரில் ஒரு சித்த வைத்தியர்(ஆங்கில மருத்துவமும் செய்பவர்) கஸ்டப்பட்டவர்களிடம் காசு வாங்காமல் வைத்தியம் செய்வார். நானும் அவரை மாதிரி வரவேணும் என்பது தான் இலட்சியம் நான்கு வருடங்கள் சித்த மருத்துவம் படித்தேன் அத்தோடு பார்மசி படிப்பும் முடித்தேன் ஆனால் இறுதியாண்டு முடிக்கவில்லை. காரணம் 4,5 தடவை ஆமியிடம் அடி வாங்கினேன். அடிவாங்கினாலும் பரவாயில்லை படிக்க வேணும் என்று இருந்தேன் ஒரு நாள் வல்லைச் சந்தியில் வைத்து ஆமி நான் மருத்துவ மாணவன் என்று அடையாள அட்டை காட்டியும் பின்னி எடுத்தாங்க இனி இருந்து பிரயோசனம் இல்லை என்று 2007 புரட்டாதி கொழும்புக்கு வந்து பிறகு மலேசியா,சிங்கபூரில் 6 மாதம் நின்றிட்டு 2008 மாசி ஜேர்மனிக்கு வந்தேன்.

ஆனால் இங்கை சொல்லும் படிக்கு டாக்டரோ,பொறியியலாளனோ இல்லை. இங்கு வந்து 3மாதம் கட்டாயமா வேலைக்கு போகசொல்லி 1மணித்தியாலத்துக்கு 1 யூரோ வீதி கூட்டி,ஐஸ் வழித்தேன் இப்ப ஒரு ரெஸ்ரோரண்ட் இலும் கடையிலும் வேலை செய்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விஞ்ஞானியாக வர வேண்டும் என்ற ஆசை.சின்ன வயது ஆசைதானே.ஆனால் முடியல.என்றாலும் நான் தொடர்ந்து ஆரச்சிகள் செய்து கொன்டு இருக்கிறேன்.எல்லாரும் செய்யும் ஆராச்சிகள்தான்.முடிவுகள் வரும்.ஆனால.இறுதி முடிவுமட்டும் ஒருத்தருக்கும் வராது :wub:

  • 3 weeks later...

எனக்கு உந்த கொம்பியூட்டர் எண்டு ஒண்டை ஒரு நாள் பேப்பரில படிச்சன், அண்டைக்கு ஏனோ தெரியேல்ல எனக்குள்ள ஒரு ஆசை வந்திட்டுது, அப்ப காலகட்டத்தில கஸ்டப்பட்டு தேடியும் ஒண்டும் கண்ணில அம்பிடேல்ல, கடைசியா கொழும்பில வந்துட்டு போகேக்க தான் முதன் முதலா உந்த கொம்பியூட்டரைக்கண்டன், எங்கட வீடு யாழில இருக்குறதால எங்கட வீட்டில நிறைய மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்து படிப்பினம் அப்ப அம்மா சொல்லுவா உவையளை மாதிரி படிக்கவேணுமெண்டு, காலம் எங்க விட்டிச்சு, பேனை இருக்க வேண்டிய கையில கத்தி வந்திட்டுது, புத்தகம் இருக்கவேண்டிய சைக்கிள் கூடையில பெட்டி வந்திச்சு, சீற்றுக்கு கீழ ரைமிங் செயின், செயின் கவருக்குள்ள கேபிள், உள்ள இருந்த சேட்டு வெளியால வந்திச்சு, பெலிட்டில ஜீன்ஸ்ஸோட நிக்காம இன்னம் கொஞ்சம் தங்க ஆரபிச்சிச்சு, எல்ல்லாம் நல்லதுக்கே எண்டுகொண்டு நடந்தே பாதை கடந்தே, இன்று கணனி மென்பொருளியலாளராக உள்ளேன், மேற்கொண்டு படிக்க ஆசைதான், ஆனால் காலம் கைவிட்டுத்துது... அம்மாவிண்ட ஆசைக்கும் பள்ளிக்கூடத்தில உயிரியற் பிரிவு படிச்சன், எங்க பள்ளிக்கூடம் போனாத்தானே... பள்ளிக்கூடத்தில நிக்கேக்க மோட்டச்சைக்கிள் வெளியால நிண்டு சிக்னல் கொடுக்கும், வாடா மச்சான் போகவேணும், அவசரம், எண்டதும் மதிலுக்கு மற்றப்பக்கத்தில் இருப்பன், இது எல்லாத்தையும் விட்டுட்டு இருப்பம் எண்டாலும் முடியேல்ல, கடைசியா என்னோட இருந்தவங்கள் எல்லாரும் உலகத்தை விட்டுட்டுட்டே போட்டாங்கள், ஒவ்வொருந்த்தனும் சொன்னது இண்டைக்கும் காதில ஒலிக்குது.

சின்ன வயசில இருந்து பொழுது போக்கெண்டா ஒண்டுமில்ல நானும் என்னுடைய உலகமும் எண்டு எனக்கெண்டே தனியான ஒரு உலகத்தில இருப்பன், சொந்தம், பந்தம் எல்லாம்தான் என்னோட எதிரி, இப்போதும் சரி இலட்சியம் இருக்கு, ஆனா இப்படித்தான் வாழனும் இப்படித்தான் இருக்கணும் எண்ட கொள்கை எல்லாம் இல்லை, பெற்றோர் இருந்தும் அவர்களின் பேச்சு கேட்காமலே வளந்திட்டன், உப்பிடியே வாழ்ந்திடணும் உப்பிடியே செத்திடனும் என்டதுதான் என்னோட போக்கு... வாழும் வரைக்கும் ஏதாச்சும் நாலு நல்லவிசயம் செய்யோணும் எண்டதுதான் கனவு, இண்டைக்கு வரைக்கும் ஒண்டும் செய்யேல்ல இனியாச்சும் செய்வம் எண்டு பாக்குறன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.