Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் இன்று இரவு வான் பாதுகாப்புப் பொறிமுறை இயக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வசி மற்றும் ஜஸ்றின் சும்மா பிடுங்குப்பட இதுவாநேரம்.எங்கள் பலகீனம் எப்பவும் மாறாது. ஆனால் எங்கள் பலம் இப்ப கொஞ்ச நாளாக பல மடங்கு உயர்திருக்குது.(புலத்து நம்மவர்களின் எழுச்சி நிகழ்வுகள்.)

சனமெழும்பின மாதிரி பங்களிப்புகளும் நான்கு எண்களைத் தொட்டால் மட்டுமே, அங்காலும் சில அலுவலுகள் நடக்குமெண்டுமொரு விசயமிருக்குதுங்கோ. அதையும் ஒருக்கா எல்லாரும் சேர்ந்து ஏதாவது, அதாவது ஒரு பத்துப் பத்துப் பேராவெண்டாலும் சேர்ந்து உரிய ஆக்களிட்டை அணுகிக் குடுத்தமெண்டால் நல்லது. என்ன சொல்லுறீங்கள் இதைப்பற்றி...... சொல்லுறனெண்டு கோவிக்காதையுங்கோ.!

  • Replies 94
  • Views 17.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் தண்ணிக்குள்ளால நெருப்புக் கொண்டு போவார்.நாங்கள் தொடர்ந்து அவர் கையைப் பலப்படுத்துவோம்.உங்களால் ஏலாது ஆயுதங்களைப் போடுங்கோ எண்டு சொன்னவையள் இப்ப என்ன சொல்லப்போயினம்.ரண்வேயும் இல்லாமல் பெற்றோலும் இல்லாமல் விமானம் பறந்திருக்குது.

அட... அதுகும் இல்லாமல் இண்டைக்கு காலைமை எரிஞ்சு கிடந்த விமானமெல்லே எழும்பி பறந்திருக்கு.... :lol::lol:

சர்வதேஎச விமான நிலையம் அருகில் சுட்டு வீழ்த்தபட்ட விமானம் என படம் வெளியிட்டு உள்ளார்கள்...

tamil_1318826c.jpg

http://www.telegraph.co.uk/news/worldnews/...al-Colombo.html

Daily Mirror பத்திரிகையும் Breaking News‏ என செய்தி போட்டு படங்களை வெளியிட்டுள்ளது.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=41258

புலிகளை குறுகிய நிலப்பரப்புக்க அடைச்சாச்சு.. 99 யுத்தம் முடிஞ்சுது.. விமான ஓடுபாதையெல்லாம் அழிச்சாச்சு.. புலிகள் இனி தப்ப முடியாது, ஒரே வழி புலிகள் கடலுக்க போய் குதிக்க வேண்டியதுதான்.. இப்படி சொன்னவை...

அதை பூசி மெழுக புலிகளின் விமானம் விழுந்திட்டுது என்பதை மட்டும் பரப்பிக் கொண்டிருக்கினம்.

கேள்விகள் வரக்கூடாது என்பதில் நல்ல அவதானம். சிங்களவனின் பிரச்சாரத் தன்மை அபாரம்

இது கரும்புலித்தாக்குதல் என்று புலிகள் அறிவித்துள்ளார்கள்

தாங்கள் சுட்டுவீழ்த்தியதாக கதை வேறு... நடந்ததை எப்படித் திரித்துள்ளார்கள்.

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்கா வான்படைத் தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான

கேணல் ரூபன்

லெப்.கேணல் சிரித்திரன்

ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 'நீலப்புலிகள்' என்ற தேசிய விருதும் இந்த இரு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இந்த இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

***** ******* ********

எனது கருத்தை மீளப்பெற்றுக் கொள்கின்றேன் . மன்னிக்கவும் நண்பர்களே .

வான் கரும்புலி வேங்கைகளுக்கு வீரவணக்கம் .

Edited by தமிழ் சிறி

தமிழீழத்தின் முதல் வான் கரும்புலிகளுக்கு அஞ்சலிகள்

air_20090221001.jpg

பெரிய முக்கிய தாக்குதலாக இருக்க வேண்டும்.. தாக்குதல் சேதங்களை மறைக்க சிங்கள அரசு மேற்கொண்ட பிரச்சாரமே 'புலிகளின் விமானத்தை சுட்டுவீழ்த்தினோம்" என்பது..

இது புரியாமல் நாங்களும் அவனின் பிரச்சாரத்தை நம்பி அவனின் இணையத்தில் இருக்கும் செய்திகளை இங்கு போடுகிறோம். அவனின் பிரச்சாரம் பிபிசி அல்ஜசீரா முதல் பல சர்வதேச செய்தி ஊடகங்களிலும் வலம் வருகிறது.. இனியாவது அவதானமாக இருங்கள் நண்பர்களே...!

  • கருத்துக்கள உறவுகள்

கரும் புலிகளுக்கு வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

வான் கரும்புலி வீரர்களுக்கு வீர வணக்கங்கள்..!

இதேவேளை, விடுதலைப் புலிகளின் இரண்டாவது வானூர்தி புத்தளம் ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக புத்தளம் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர் என்று அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

??????

  • கருத்துக்கள உறவுகள்

??????

என்ன அப்பு ,

விக்குதோ , கொழுவுதோ .......

  • கருத்துக்கள உறவுகள்

வான் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!!!!எத்தனை பெறுமதியான சொத்துக்கள் அவர்கள் தமிழரின் உளவுறுதியை வான்வரை உயர்த்தியவர்கள். நம்மிடம் நவீன விமானங்கள் இல்லாததே இவர்களின் இழப்புக்கு காரணம். புலம் பெயர்ந்த தமிழர்களே காலம் அறிந்து செயற்படுவீர்.இந்த அடி ஆக்கிரமிப்பாளர்களுக்கும் புலிகளை அழிக்க நினைப்பவர்களுக்கும் கொடுக்கப்பட்ட நெத்தியடி!!!!!

தலைவர் மாவீரர்களை பிரிய முடியாமல் பிரியாவிடை கொடுத்திருக்கிறார் என்பது அவர்பிடியில் தெரிகிறது மாவீரர்கள் கலக்கமின்றிச் சிரிக்கிறார்கள் தலைவர் உள்ளே அழுகிறார்.இதயத்தில் ஆயிரம் எரிமலைகள!; தலைவரின் அகத்தின் உறுதி முகத்தில் முகத்தில் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்

kk.jpg

deepam11.gif

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள் வேங்கைகளே

என்ன அப்பு ,

விக்குதோ , கொழுவுதோ .......

எனக்கு இல்ல கேகலிய ரம்புக்வெலவுக்கு

Edited by nishanthan

  • கருத்துக்கள உறவுகள்

ர்ழஅந » செய்திகள் » வான் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

வான் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

21. 02. 2009இ 11:40 செய்திகள் எத்தனை பெறுமதியான சொத்துக்கள் அவர்கள் தமிழரின் உளவுறுதியை வான்வரை உயர்த்தியவர்கள். நம்மிடம் நவீன விமானங்கள் இல்லாததே இவர்களின் இழப்புக்கு காரணம். புலம் பெயர்ந்த தமிழர்களே காலம் அறிந்து செயற்படுவீர்.இந்த அடி ஆக்கிரமிப்பாளர்களுக்கும் புலிகளை அழிக்க நினைப்பவர்களுக்கும் கொடுக்கப்பட்ட நெத்தியடி!!!!!

இது தான் அது!

வான் கரும்புலி வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.