Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளி சாத்திரியுடன் ஒரு பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் இயக்கத்தில் பங்காற்றிய அனுபவம் உள்ள பதிவர் திரு. சாத்திரி அவர்களுடன் ஒரு பேட்டி காண வேண்டும் என்று நெடுநாளைய ஆவல் எனக்கு இருந்தது. தமிழ் சசியின் பேட்டியுடன் ஒரு போராளியின் பேட்டியையும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். போராட்ட கால அனுபவங்களை விசாரித்து விரிவாக பேசியிருக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி ஈழச்சிக்கல் நகர வேண்டிய சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவற்றை கேள்விகளாக கேட்டு பதில் பெறுவதே தற்போதைக்குத் தகும். அரசியல் தீர்வை அடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை போராளிகளை சந்தித்து வீர காவியங்களை சிலாகிப்போம்.

பணிகளுக்கு மத்தியில் எனது வலைப்பூவிற்காக அவர் நேர்முகம் தர ஒப்புக்கொண்டமைக்கும், நேரம் ஒதுக்கியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இப்போதும் இருக்கிறீர்களா? இயக்கத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளீர்களா?

நான் புலிகள் இயக்கத்தில் இப்பொழுது உறுப்பினராக இல்லை. ஆனால் ஈழத்தமிழரின் நியாயமான போராட்டத்திற்கு தொடர்ந்தும் என்னாலான அனைத்து உதவிகளையும் செய்தபடிதான் இருக்கின்றேன்.

போராளி இயக்கத்தில் நீங்கள் இணைந்ததன் பின்னணி என்ன? இயக்கத்தில் இருந்தபோது எம்மாதிரியான பங்களிப்பை செய்தீர்கள்?

போராட்ட இயக்கத்தில் நான் இணைந்ததற்கு காரணம் 83 ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம்தான். எல்லோரையும் போலவே எந்தக்கவலைகளுமற்ற ஒரு பள்ளிமாணவனாக திரிந்தகாலம். இலங்கை அரசியல் பற்றியோ போராட்டம்பற்றியோ எவ்வித அக்கறைகளும் இல்லாமல், படிப்பு, விளையாட்டு, களவாய் படம்பார்த்தலென்று திரிந்த கனாக்காலங்கள் அவை. அப்படித்திரிந்த 83ம் ஆண்டு யூலைமாதம் 24ந்திகதி பாடசாலைக்கு போய்க்கொண்டிருந்தபொழுது வாகனத்தில் வந்த இலங்கை இராணுவதினர் எங்கள் பாடசாலை வாசலில் இறங்கி கண்மூடித்தனமாய் துப்பாக்கியால் சுட்டு விட்டு சென்றார்கள். அதில் எனது பாடசாலை மாணவர்கள் மூவரும் நான்கு பொதுமக்களும் இறந்து போனார்கள்.இறந்துபோன மாணவர்களில் என்னுடைய வகுப்புத்தோழனும் ஒருவன். அதுதான் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. அந்த மாணவனை கொல்லுமளவிற்கு அவன் செய்த குற்றமென்ன? அவனது எதிர்காலத்தை எப்படியெல்லாமோ கனவு கண்ட அவனது தாய் தந்தையர்கள் செய்த குற்றமென்ன? அதில் இறந்து போன மற்றைய பொதுமகள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இப்படி பல கேள்விகள். அதனைத்தொடர்ந்து யூலை 25-26ந்திகதிகளில் நடந்தேறிய தமிழினப்படுகொலையும் அனைத்து உடைமைகளையிழந்து யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய சம்பவங்களும் காரணமாய் அமைந்துவிட்டது. பின்னர் இயக்கத்தில் இணைந்த பின்பு அதன் உறுப்பினர்கள் என்னென்ன பங்களிப்பினை செய்வார்களோ அத்தனையையும் செய்தேன்.

விடுதலைப் புலிகளின் வரலாறை சுருக்கமாக இங்கு கூற முடியுமா?

விடுதலைப்புலிகளின் வரலாற்றினை ஒரு கேள்வி பதில் பகுதியில் ஒரு பதிலில் சுருக்கமாக கூறிவிடமுடியாது. ஆயுதவிடுதலைப்போரின் ஆரம்பம் பற்றி அதனுடன் சம்பந்தப் பட்டவர்கள் பெரும்பாலானவர்களின் உதவியுடன் ஒரு புத்தகத்தை எழுதும் பணியில் இருக்கிறேன். ஆனால் இயந்திர வாழ்வாகி விட்ட புலம்பெயர் சூழலில் வேறு பல பணிகளையும் செய்துகொண்டு புத்கத்தினையும் எழுதி முடிப்பது சிரமமாகவே உள்ளது. முடிந்தளவு விரைவில் அதனை எழுதி முடிப்பேன் அதில் ஈழப்போராட்ட வரலாறு விரிவாக இருக்குமென நினைக்கிறேன்.

விடுதலைப் புலிகளின் இன்றைய உண்மையான பலம் என்ன? அவர்கள் இப்போது பின் வாங்குவது உண்மையா?

விடுதலைப்பலிகளின் இன்றை பலம் மட்டுமல்ல ஆரம்பகாலத்திலிருந்தே அவர்களது பலம் வெளியில் எவரிற்குமே தெரியாது. அதுதான் அவர்களது பலம். காரணம் அவர்களிடம் ஆட்பலம் ஆயுத பலத்தைவிட ஆன்மபலமே பல சமர்களின் திருப்பு முனையாக அமைந்தது.எனவே ஆன்மபலத்தை அளவிடமுடியாது. அடுத்தது புலிகளின் பின்வாங்கல்கள் இதுதான் முதற் தடைவையல்ல. இதற்கு முன்னரும் பலதடைவைகள் பல இராணுவ அதிகாரிகளும். அரசியல் வாதிகளும் இதுதான் புலிகளின் கடைசிக்காலம் என்று அடித்துச்சொன்னபொழுதெல்லா

சாத்திரி ஆடம்பரமில்லாது திறந்த மனதுடன் எல்லோருடனும் இனிமையாகப் பழகுபவர். நகைச்சுவை உணர்வுடன் கூடிய அவரது பதிவுகள் மூலம் ஓரளவு அவரைப் பற்றி அறிந்திருந்தாலும் இப் பேட்டி மூலம் மேலும் பல தகவல்களை அறியக் கூடியதாக இருந்தது. இணைப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் மானிப்பாய்க் கிராமத்தை சேர்ந்தவன்

நானும் இந்த கிராமத்தவன் தான் ,என்று சொல்லி பெருமை படுவோம்

மானிப்பாயர் சிறந்த படைப்பாளிகளாக்கும் போல

நல்ல பதிவு கந்தப்பு. கந்தப்புவும் சாத்திரியும் இளம் ஆட்கள் என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது. நான் அவர்கள் 50களில் இருப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். :(

நானும் இந்த கிராமத்தவன் தான் ,என்று சொல்லி பெருமை படுவோம்

மானிப்பாயர் சிறந்த படைப்பாளிகளாக்கும் போல

எங்கட ஊரிலையும் ஆக்கள் கோயிலுக்கு கோழிகள், ஆடுகள், மசிருகள், எண்று நிறைய படைக்கிறவர்கள்... அவர்களையும் படைப்பாளிகள் எண்டு ஒத்து கொள்ளுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு. சாத்திரியார் இயக்க பெயர்கள் , சம்பவங்களை எழுதும் போதே ஏதோ ஒரு விடுதலை இயக்கத்தை சார்ந்தவர் என்று நினைத்தேன் நான் நினைத்தது சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்ந்து கொண்ட இரு தாத்தாக்களுக்கும் நன்றிகள் [நம்ம சாத்திரியா] :(

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனைப்புக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியிட்ட அடிக்கடி எம்.எஸ்.எனில நச்சரிச்சு கேக்கிற கேள்விகளை பேட்டி எண்டா வடிவில ஒண்டா கேட்டிருக்காங்க, அதுசரி பலாலி, வளலாய் பக்கத்துக்க சாத்திரி பேய் மாதிரி உலாவாறவராம் அதுகளை பற்றி கேட்கல்லையே?? (அட அதுக்காக கூந்தலழிகளை சைட் அடிக்கத்தான் அங்கினை உலா வாறாவர் எண்டு தப்பா நினைக்ககூடாது).. :)

எனக்கு ஒரு சந்தேகம் , அதை அடிக்கடி கேட்கனும் எண்டு நினைச்சுக்கொண்டு மறந்திடுவன்.. அந்த கருப்பழகன் ச்சீ இருளழகனிண்ட புகைப்படம் இருக்கா??? :lol::lol::lol:

சரி இறுதியாக சாத்திரியை பற்றி சீரியசா சொல்லனும் எண்டா.. சாவு எண்டு கோட்டை தட்டிப்பார்த்துவிட்டு வந்தவர், தமிழினத்துக்காக தனது கடமையை செம்மையாக செய்திருக்கிறார், அத்துடன் தமிழினத்துக்க்காய் போராட வெளிகிட்டு தனது குடும்பத்தில் சொந்தத்தில் பலரை இழந்திருக்கிறார், நகைச்சுவையாக கதைக்கும் அவரின் இறந்தகாலங்கள் துன்பகரமானவை மயிர்குச்செறிய வைப்பவை...

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு எல்லாம் கேட்டவர் சாஸ்திரிட்ட ஆனால் ஏன் அவர் இயக்கத்தை விட்டு விலகினார் என்று கேட்கவில்லை?

இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் அத்தியாவசியம் . பல கேள்விகள் அநாவசியமானவை.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு எல்லாம் கேட்டவர் சாஸ்திரிட்ட ஆனால் ஏன் அவர் இயக்கத்தை விட்டு விலகினார் என்று கேட்கவில்லை?

கருத்தக்கள் சொன்ன அனைவரிற்கும் நன்றிகள். உங்கள் கேள்வி பலரின் மனதிலும் எழும்.. இது நியாயமான கேள்விதான். நான் குறுகிய கால இடைவெளியில் இரண்டு தடைவைகள் மோசமான காயங்களிறறகுள்ளானதால் அன்றைய கால கட்டத்தில் போதிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காததனால் எனது பொறுப்பாளரே என்னை நாட்டிலிருந்து வெளியேறி சிகிச்சை பெற்றுக்கொள்ளச் சொல்லி அனுப்பிவைத்திருந்தார்

தனது குடும்பத்தில் சொந்தத்தில் பலரை இழந்திருக்கிறார், நகைச்சுவையாக கதைக்கும் அவரின் இறந்தகாலங்கள் துன்பகரமானவை

:)

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியிட்ட அடிக்கடி எம்.எஸ்.எனில நச்சரிச்சு கேக்கிற கேள்விகளை பேட்டி எண்டா வடிவில ஒண்டா கேட்டிருக்காங்க, அதுசரி பலாலி, வளலாய் பக்கத்துக்க சாத்திரி பேய் மாதிரி உலாவாறவராம் அதுகளை பற்றி கேட்கல்லையே?? (அட அதுக்காக கூந்தலழிகளை சைட் அடிக்கத்தான் அங்கினை உலா வாறாவர் எண்டு தப்பா நினைக்ககூடாது).. :)

எனக்கு ஒரு சந்தேகம் , அதை அடிக்கடி கேட்கனும் எண்டு நினைச்சுக்கொண்டு மறந்திடுவன்.. அந்த கருப்பழகன் ச்சீ இருளழகனிண்ட புகைப்படம் இருக்கா??? :lol::lol::lol:

சரி இறுதியாக சாத்திரியை பற்றி சீரியசா சொல்லனும் எண்டா.. சாவு எண்டு கோட்டை தட்டிப்பார்த்துவிட்டு வந்தவர், தமிழினத்துக்காக தனது கடமையை செம்மையாக செய்திருக்கிறார், அத்துடன் தமிழினத்துக்க்காய் போராட வெளிகிட்டு தனது குடும்பத்தில் சொந்தத்தில் பலரை இழந்திருக்கிறார், நகைச்சுவையாக கதைக்கும் அவரின் இறந்தகாலங்கள் துன்பகரமானவை மயிர்குச்செறிய வைப்பவை...

டண் வளலாயை நினைத்தால் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாடவேணும் போலை இருக்கு ஆனால் இப்ப எல்லாரும் பேரப்பிள்ளையளோடை இருப்பினம் எதுக்கு வில்லங்கம். :wub::o

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி அண்ணா நான் சும்மா அறிந்து கொள்வதற்காக தான் கேட்டேன் தப்பென்றால் மன்னிக்கவும்.

சாத்திரி எண்டுற புனைபெயரை ஏன் தெரிவு செய்தீங்கள்? அதுக்கு பின்னால ஏதும் கதை இருக்கிதோ? அல்லது எழுந்தமானமாக தற்செயலாக தேர்வு செய்த பெயரோ? இதுக்கும் பதில் சொல்லுங்கோ சாத்திரி அண்ணை.

மற்றது...

நீங்கள் உடம்பிலபட்ட காயங்கள் எல்லாம் இப்ப ஆறீயிட்டுதோ? அதால இப்ப வேற உபாதைகள் ஒண்டும் இல்லையோ? வெளியில வந்து சிகிச்சை பெறவேண்டிய நிலை எண்டால் பெரிய காயமாய் இருக்கும் எண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி.. வேற ஒரு இயக்கத்திலும் இருந்து செயற்பட்டதா சொல்லக் கேள்விப்பட்டிருக்கன். அதுவும் உண்மையோ..??! :lol: :lol:

ஊரில.. சும்மா போறவை வாறவை எல்லாம் ஒரு காலத்தில பப்பாக்காயை இடுப்பில செருகிட்டு.. கட்டம் போட்ட சேட்டை வெளில தூக்கி விட்டிட்டு.. இயக்கம் என்று திரிஞ்சவை என்று ஆக்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன். சாத்திரியண்ண.. அந்த மாதிரி ஆளில்லைத்தானே. ஏன்னா புலில ஈடுபாட்டோட இருந்தவங்க.. இயக்கத்தை விட்டு வெளில வந்தாலும்.. தன்னைப் புலி என்று இனங்காட்டிக்கிறதில்ல.. பொதுவா. அதுதான்.. கேட்டன்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி எண்டுற புனைபெயரை ஏன் தெரிவு செய்தீங்கள்? அதுக்கு பின்னால ஏதும் கதை இருக்கிதோ? அல்லது எழுந்தமானமாக தற்செயலாக தேர்வு செய்த பெயரோ? இதுக்கும் பதில் சொல்லுங்கோ சாத்திரி அண்ணை.

மற்றது...

நீங்கள் உடம்பிலபட்ட காயங்கள் எல்லாம் இப்ப ஆறீயிட்டுதோ? அதால இப்ப வேற உபாதைகள் ஒண்டும் இல்லையோ? வெளியில வந்து சிகிச்சை பெறவேண்டிய நிலை எண்டால் பெரிய காயமாய் இருக்கும் எண்டு நினைக்கிறன்.

மாப்பிள்ளை சாத்திரி என்கிற புனை பெயர் உண்மையில் என்னுடையது அல்ல. இன்னொரு நண்பனுடையது. அப்பொழுத நான் சியாம் என்கிற பெயரில் யாழில் எழுதிக்கொண்டிருந்தேன்.அவர் வெளிநாட்டில் வந்து நின்ற சமயம் யாழில் எழுதுவதற்கு தனக்கு ஒரு பதிவு செய்து தரச்சொல்லி என்னிடம் கேட்டிருந்தார்.அவரின் புனை பெயரான சாத்திரி என்பதனை நான் யாழில் பதிந்து கொடுத்திருந்தேன். பின்னர் அவரிற்கு தமிழில் தட்டச்சு செய்யவும் பிரச்சனையாயிருந்து. ஆரம்பத்தில் அவர் சில பதிவுகளைத்தவிர யாழில் எதனையும் எழுதவில்லை சில காலத்தின் பின்னர் அவர் தாயகம் திரும்பும் வேளை மாவீரராகி விட்டார். அவரது நினைவாக நானேஅந்தப் பதிவில் தொடர்ந்து யாழில் எழுதத் தொடங்கி இப்பொழுது எல்லா இடத்திலும் அந்தப் பெயரே நிலைத்து விட்டது. மற்றும்படி நான் இந்த செவ்வியை கொடுத்ததன் நோக்கம் தமிழகத்து உறவுகளிடம் எமது போராட்டம் பற்றி நான் எழுதுகின்ற சில விடயங்கள் அவர்களிடம் போய் சேரவேண்டும் என்பதற்காகவும் அதன் உண்மைத்தன்மையை அவர்கள் புரிந்து கொண்ணவேண்டும் என்பதற்காகவும்தான். மற்றபடி எனக்கு தெரியும் இந்தபேட்டியை யாழில் இணைத்தால் நெடுக்கு மாதிரி யாராவது வந்து நான் ஊரிலை இடுப்பிலை பப்பாசிக்காய் கொண்டு திரிந்ததேனா அல்லது புடலங்காய் கொண்டு திரிந்தேனா என்று என்னுடைய மடியில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்வார்களென்பதால் தான் நான் இணைக்கவில்லை அதனை கந்தப்பு இணைத்துவிட்டார். சரி பரவாயில்லை....மற்றபடி நான் மனதில் பட்ட காயங்களை விட உடம்பில் பட்ட காயங்கள் பெரிய வலியை தரவில்லை .உடம்பில் பட்ட காயங்கள் அவ்வப்பொழுதுதான் வலிக்கும். .........

Edited by sathiri

கோண்டாவில் பாபு அரியாலை அன்ரனி ஆக்களை தெரியுமோ சாத்திரி?

  • கருத்துக்கள உறவுகள்

மற்றபடி எனக்கு தெரியும் இந்தபேட்டியை யாழில் இணைத்தால் நெடுக்கு மாதிரி யாராவது வந்து நான் ஊரிலை இடுப்பிலை பப்பாசிக்காய் கொண்டு திரிந்ததேனா அல்லது புடலங்காய் கொண்டு திரிந்தேனா என்று என்னுடைய மடியில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்வார்களென்பதால் தான் நான் இணைக்கவில்லை அதனை கந்தப்பு இணைத்துவிட்டார். சரி பரவாயில்லை....மற்றபடி நான் மனதில் பட்ட காயங்களை விட உடம்பில் பட்ட காயங்கள் பெரிய வலியை தரவில்லை .உடம்பில் பட்ட காயங்கள் அவ்வப்பொழுதுதான் வலிக்கும். .........

முன்னாள் புலி என்று பேட்டி கொடுக்கேக்க.. நாங்களும் கவனமாத்தானே பார்க்க வேண்டி இருக்குது. இப்ப புலி என்று சொல்லுவினம்.. பிறகு இன்னொரு கட்டத்தில புலிக்கு எதிரா மாறிட்டினம் என்றால்.. புலிக்குத்தான் கெட்ட பெயர். அப்படித்தான் புலி கெட்ட பெயர் எடுத்ததும். உண்மையான புலிகள்.. தங்கள் இயக்கத்தை தாங்களே கெடுத்தது மிகக் குறைவு. புகலிடத்தில இருக்கிறவை எந்த நேரத்தில என்ன வேசம் போடுவினம் என்று யாருக்குத் தெரியும்..!

ஏற்கனவே மானிப்பாய் டக்கிளஸ் தேவானந்தாவின்ர கோட்டையாகவும் விளங்கினதாக் கேள்வி..???! முன்னொரு காலத்தில். இப்ப என்னவோ யார் அறிவார்..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கோண்டாவில் பாபு அரியாலை அன்ரனி ஆக்களை தெரியுமோ சாத்திரி?

புலிகளின்ரை ஆரம்பகால முகாம்களிலை முக்கியமானது அரியாலை நடாவீடு அங்கை இருந்தவை பலர் இப்ப வெளி நாடுகளிலை இருக்கினம். முக்கியமாய் அரியாலை அரசியல் பொறுப்பாய் இருந்த மலரவன்(புன்னாலை கட்டுவன்) உட்பட.ஆனால் வாடல் அன்ரனி என்றொருத்தர் பாசையூர் அல்லது குருநகரை சேர்ந்தவராக இருக்கவேண்டும்.அங்கு இருந்தார்.நீங்கள் கேட்பவர் அவரா தெரியவில்லை??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு எல்லாம் கேட்டவர் சாஸ்திரிட்ட ஆனால் ஏன் அவர் இயக்கத்தை விட்டு விலகினார் என்று கேட்கவில்லை?

நான் தான் பேட்டி கண்டது என்று நினைக்கிறீர்கள் போலக் கிடக்குது. சாத்திரியைப் பேட்டி கண்டவர் மோகன் கந்தசாமி. உடனே யாழ்கள நிற்வாகி மோகன் என்று நினைக்கக் கூடாது.

நல்ல பதிவு கந்தப்பு. கந்தப்புவும் சாத்திரியும் இளம் ஆட்கள் என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது. நான் அவர்கள் 50களில் இருப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். :)

இந்தப் பேட்டியை நான் கேட்கவில்லை. கேட்டது மோகன் கந்தசாமி. பதில் அளித்தது சாத்திரி. யாழில் இணைத்தது தான் நான். இதில் இருந்து எப்படி நான் இளவயது என்று சொல்கிறீர்கள்?

புலிகளின்ரை ஆரம்பகால முகாம்களிலை முக்கியமானது அரியாலை நடாவீடு அங்கை இருந்தவை பலர் இப்ப வெளி நாடுகளிலை இருக்கினம். முக்கியமாய் அரியாலை அரசியல் பொறுப்பாய் இருந்த மலரவன்(புன்னாலை கட்டுவன்) உட்பட.ஆனால் வாடல் அன்ரனி என்றொருத்தர் பாசையூர் அல்லது குருநகரை சேர்ந்தவராக இருக்கவேண்டும்.அங்கு இருந்தார்.நீங்கள் கேட்பவர் அவரா தெரியவில்லை??

நீங்கள் இந்தியன் ஆமி இருந்த காலத்தில் அடிபட்ட ஆக்கள் என்டு நினைச்சன். நீங்கள் பழைய ஆக்கள். மலரவன் இப்போ கனடாவில் இருப்பதாய் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இந்தியன் ஆமி இருந்த காலத்தில் அடிபட்ட ஆக்கள் என்டு நினைச்சன். நீங்கள் பழைய ஆக்கள். மலரவன் இப்போ கனடாவில் இருப்பதாய் கேள்வி.

நீங்கள் சொல்கிற இந்தியனாமி நேரம் நின்ற அரியாலை அன்ரனியை தெரியும்.96 ம் ஆண்டு பாரிசில் சந்தித்திருந்தேன். அரியாலை விசுவத்தடன் திரிந்தார்.பின்னர் ஆளை காணவில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊரிலையும் ஆக்கள் கோயிலுக்கு கோழிகள், ஆடுகள், மசிருகள், எண்று நிறைய படைக்கிறவர்கள்... அவர்களையும் படைப்பாளிகள் எண்டு ஒத்து கொள்ளுங்கள்...

:D எவன் ஒருத்தன் எதையாவது படைக்கிரானொ அவன் படைப்பாளி :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.