Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஜெயலலிதா உண்ணாவிரதம்

Featured Replies

இது தேர்தல் நாடகந்தான் என்று எல்லோருக்குமே புரியும். இந்தியாவின் தேர்தல் களத்தில் தமிழீழப் பிரச்சனையே துரும்பாகப் போகிறது என்று செய்தியும் வந்திருக்கிறது. அம்மாவா? ஐயாவா? தமிழக மக்களா?

  • Replies 54
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் பிரச்சனை இப்போ ஊறுகாயாகிவிட்டது தேர்தல் போதைக்கு?!!

அடடா என்ன நடிப்பு என்ன நடிப்பு இவவுக்கு செவாலியர் விருது கொடுக்க ஏற்பாடு செய்யவேணும் (நடிகர் திலகி வாழ்க வாழ்க)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும், சென்னையில் தனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஐயய்யோ ........

இலங்கை தமிழருக்காக , ஜெயா அக்கா குரல் எழுப்பியமையால் ......... ,

ஐயா , அக்காவை கைது பண்ணப்போகிறாரே ........

சோ. சாமி , சு .சாமி ...... , எப்போ எமக்காக உண்ணாவிரதம் இருந்து உண்டியல் வைப்பார்களாம் .

எதுக்கும் அக்கா வைக்கின்ற உண்டியல் , பெரிசா இருக்கட்டும் .

தமிழ்நாட்டு.... புலத்து.... ஈழத்து.... தமிழர்கள் எல்லாரும் தமிழ்நாட்டு தேர்தல்... வழமைகள்.... இம்முறை புதுமைகள் எல்லாம் சேர்ந்து பெரும் எதிர்பார்ப்பை எதிபார்த்துள்ளோம் அது அவர்களுக்கும் (தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும்) எமக்கும் (உண்மையான தமிழருக்கும்) தெரியும் யார் அவியப்போறோமே ஆண்டவனுக்குத்தான் (இருந்தால் வெளிச்சம்) தெரியும்... :lol::o:D

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா உண்ணா விரதம் இருந்தா ஐயா சும்மா இருப்பாரா?ஐயா தீக்குளிக்கிறது தான் நல்லது.அது தான் இப்ப வேலை செய்யும்.

ஐயகோ உடன் பிறப்பே இது நீ தந்த உயிர் என்னைத் தடுக்காதே நான் தீக்குளிக்கப் போகிறேன்.பிரதமர் நாத்தழுதழுக்கப் பேசியதால் எனக்காக ஒரு தொண்டர் தீக்குளிப்பார.;

:lol::o:D:(:D:D

அப்படியே ஒரு 5 பக்கத்தில் 13 வயது தொடக்கம் 85 வயது வரை எனது சாதனைகள் என்று தற்பெருமை அறிக்கை வேறு வரும். கடைசியில் அப்பாவி தமிழ்நாட்டு தமிழன் தலையில் ஆயிரம் சோடி செருப்பு புகழ் அம்மாவும் உண்ணாவிரத புகழ் ஐயாயும் சேர்ந்து மிளகாய் அரைக்க தேர்தல் நாடகம் வெற்றிகரமாக முடியும். பிறகு பழையபடி...மருமளே வருக திருமகளே வருக என்டு ஐயா சோனியா புகழ் பாட....புலி அடிக்க வருது பொடா வேணும் தடா வேணும் என்டு அம்மா புலம்ப எங்களுக்கும் மண்டை காய துவங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் குத்துக் கரணமெண்டு பால்குடிக்கும் தெரியும். ஆனா ஒரு நன்மையிருக்கு. இதப் பார்த்து முனாகானா தானும் ஒரு ரண்டு நாளாவது உண்ணாவிரதம் இருக்க வெளிக்கிடும். இருக்கட்டும். முனாகானா உண்ணாவிரதம் முடிக்கிற பழச்சாறு குடிக்கேக்க மறக்காம யாராவது அதுக்குள்ள கொஞ்சம் சயனைட் போட்டு விடுங்கோ, புண்ணியமாப் போகும்! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாவும் சூப்பரா பெர்பொமன்ஸ் பண்ணுறாங்க...! புரட்சி தலைவி அல்லவா...! அதுசரி எனக்கு ஒரு சந்தேகம் அம்மா சாகும் வரை உண்ணா விரதமா அல்லது ஒரு நாள் உண்ணா விரதமா ? சாகும் வரை உண்ணாவிரதமென்றால் அவவின் உண்ணாவிரதம் மிகவும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.... ஒரு £500 காசு போனாலும் பரவாயில்லை உடனடியாக இந்தியாவுக்கு போய் அவவின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு கடைசி நேரத்தில் பழச்சாறு குடுக்க கொண்டுவருபவரின் கிளாசையென்றாலும் கீழே தட்டி விட்டு அவவின் உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக முடித்துவைக்க உதவுவேன்... '' அவ தமிழீழத் தமிழருக்கு எவ்வளவோ பண்ணியிருக்கிறா... நாங்கள் இதை பண்ண மாட்டோமா...!'' எங்கையோ கேட்ட வசனம் மாதிரியில்ல...!

அதுசரி உண்ணாவிரத சலசலப்பில உண்டியல் கவனமப்பா...?

அடுத்து கலைஞரின் அதிர்ச்சி செய்திக்கும் காத்திருங்கோ...! '' காட் அட்டாக்'' வராமல் இருக்க இப்பவே முன்னெச்சரிக்கயாக இருங்கோ...?

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ. உண்ணாவிரதம் ஒரு திருப்புமுனை: சிவாஜிலிங்கம் எம்.பி.

திருச்சி: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் திருப்புமுனையாக அமையும் என இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருச்சி உழவர்சந்தையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு இலங்கைத் தமிழ் எம்.பி. சிவாஜி லிங்க ராஜா பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

இலங்கையில் தமிழர்களை காப்பற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதாஅறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த போராட்டம் இலங்கைதமிழர் பிரச்சினையில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமையும். இதன்மூலமாக மத்திய,மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்றார்.

-தட்ஸ்தமிழ்

உண்ணாவிரதப் போராட்டம் - 9ம் தேதிக்கு மாற்றினார் ஜெ.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிற 10ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்று திடீரென அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது போராட்டத்தை 9ம் தேதியே மேற்கொள்ளப் போவதாக தற்போது அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கை தமிழர்களுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் அ.தி.மு.க. சார்பில் 10-ந் தேதி நடைபெறுவதாக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்து விட்ட நிலையில் மேற்படி உண்ணாவிரத அறப்போராட்டம் 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2009/03...-9.html#cmntTop

அம்மா என்றால் சும்மா, இல்லேடா அவ இல்லேனா யாரும் இல்லைடா .

கக்கக்ககாபோ

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா என்றால் சும்மா, இல்லேடா அவ இல்லேனா யாரும் இல்லைடா .

கக்கக்ககாபோ

மருத்துவர் நீங்கள் உங்கள் அம்மாவை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்

கட்சி தொண்டர்களின் நிர்பந்தம் காரணமாகவும் ,கட்சி மக்கள் சார்ப்பாகவும் இந்த உண்ணாவிரத்தை கைவிடுவதென முடிவெடுப்பார் பாருங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ. உண்ணாவிரதம் ஒரு திருப்புமுனை: சிவாஜிலிங்கம் எம்.பி.

திருச்சி: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் திருப்புமுனையாக அமையும் என இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருச்சி உழவர்சந்தையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு இலங்கைத் தமிழ் எம்.பி. சிவாஜி லிங்க ராஜா பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

இலங்கையில் தமிழர்களை காப்பற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதாஅறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த போராட்டம் இலங்கைதமிழர் பிரச்சினையில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமையும். இதன்மூலமாக மத்திய,மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்றார்.

-தட்ஸ்தமிழ்

கிழிஞ்சுது போ!!!!!!

தமிழக கட்சிகளில் பல ஈழத்தமிழர்களுக்காக கடந்த பல மாதங்களாக குரல்கொடுத்துக்கொண்டிருக

Edited by Manithaasan

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ. உண்ணாவிரதம் ஒரு திருப்புமுனை: சிவாஜிலிங்கம் எம்.பி.

திருச்சி: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் திருப்புமுனையாக அமையும் என இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருச்சி உழவர்சந்தையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு இலங்கைத் தமிழ் எம்.பி. சிவாஜி லிங்க ராஜா பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

இலங்கையில் தமிழர்களை காப்பற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதாஅறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த போராட்டம் இலங்கைதமிழர் பிரச்சினையில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமையும். இதன்மூலமாக மத்திய,மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்றார்.

-தட்ஸ்தமிழ்

கிழிஞ்சுது போ!!!!!!

எங்கே கிழியும் புலவர் ,

கிழியுறது எண்டால் ...... ,

முதலிலில் ஜெயா அக்காவுக்கு தான் முதலில் கிழியும் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் .

இது என்ன புது கதை.. யாரை ஏமாற்ற பாக்குறா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் எல்லாம் புலிகள் என்று சொன்னவராச்சே .இப்ப எப்படி உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்.? புலிகளுக்கு ஆதரவளிக்கப்போகிறாரா? தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை விளங்கவே முடியவில்லை.!!!

என்ன செய்யப் போகிறோம் என்று நோக்கமில்லாமலே கொம்மா முடிவெடுத்திருக்கிறார். இனி கொய்யா பாடு திண்டாட்டமே. நகர்வு எதிர் நகர்வு என்று தேர்தல் காலம் முடியும் வரை தமிழ் பிரச்சனை தமிழ் நாட்டுக்குள் சூடு பிடிக்கப் போகிறது. அது முடிந்ததும் நமது பிரச்சனை இவர்களால் தமிழ் நாட்டில் காற்றுப் போன பலூன் போன்று ஆக்கப்பட்டுவிடும்.

கொம்மா தலை சுற்றி விழுந்தாலும், கொய்யா ஆசுப்பத்திரியில் போய் குப்புறப் படுத்தாலும் நாம் எமது சுயபலத்தில் உறுதியாக நின்று கொள்வோம். அந்தப் பலமே இவர்களுக்குப் பேசுவதற்குப் பொருளாகவிருக்கும்.

இந்தக் கிடாய் ஏறிகளின் , அறிக்கைகளை நாம் நகைச்சுவையாக பார்த்தால் ...... நல்லது . :rolleyes:

ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் போக்கினை எதிர்த்து அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகிய தமிழருவி மணியன் வழங்கிய நேர்காணல்

http://www.tamilnaatham.com/audio/2009/mar...vi_30090308.m3u

:wub:

வேற ஒன்னும் இல்லீங்க சுப சாமிக்கு குடுத்த முட்டைஅபிசேகம் தான் அம்மாவை உண்னாவிரதம் இருக்கும் நிலைக்கு கொண்டுவந்திருக்கு. எங்கே அடிச்சா எங்க வழிக்கும்ன்னு வக்கீல்கள் நல்லவே தெரிஞ்சுவச்சு இருக்காங்க.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் உங்கள் எவரது விமர்சனமும் எமக்கு விளங்கவில்லை

nஐயலலிதா என்பவரை எனக்கு மிகவும் பிடிக்கும்

காரணம்

எதையும் செய்து முடிக்கக்கூடிய அவரது நெஞ்சுரம்

எமக்கு சரியோ பிழையோ

அவரைப்பொறுத்தவரை

இரண்டில் ஒன்று நேரே சொல்பவர்

அப்படிப்பார்க்கையில் கருணாநிதி என்ற பின்னால் குத்தும் துரோகியைவிட

எதிரி என்று என்று நேரே சொல்லும் இவர் மேலானவர்

ஆபத்தற்றவர்

அதேநேரம் இவரை மட்டும் நாம் எம் பக்கம் இழுத்துவிட்டோம் என்றால் இந்தியாவில் எவன் ஆண்டாலும் நாம் கவலை கொள்ளத்தேவையில்லை

ஒரு சொல்லிலேயே ஆட்டிப்படைக்கக்கூடியவர்

அப்படியாயின் இவரை மாற்றி எம்பக்கம் இழுக்கமுடியுமா என்ற கேள்விக்கு என் பதில்

முடியும்

அது எமது பலத்தினால்......

எமது தொடர் வெற்றிகளால்......

இந்தவாரம் வருகின்ற செய்திகள் தொடருமானால்.....

வெற்றிகள் தொடருமானால்.....

சிங்களப்படை தோற்கும் அறிகுறி தென்படுமானால்.....

பிரபாகரனே வீரன் என்று இவர் வாயால் மீண்டும் சொல்வது தவிர்க்கமுடியாததாகிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.