Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

EU வுக்கு முன்னால் உரிமை போர் பெல்ஜியம் பிறஸல்ஸ்..

Featured Replies

சரி நெடுக்கு வந்தாச்சு.. கூடவே இளைஞன் நிக்கிறார்.. கேக்கவா வேணும்..

இது 20 பக்கங்களை தாண்டி ஓட வாழ்த்துக்கள்.. :D

  • Replies 56
  • Views 6.1k
  • Created
  • Last Reply

எங்கள் தெருவில் 500 செம்மறி ஆடுகள் ஊர்வலம் போயின.

SPAIN_SHEEP_DO80645577132a7ea.jpg

அவை வீதியின் நடுவே சென்றன.

ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன.

அவை தம் வரிசையிலிருந்து விலகாமல் சென்றன.

விதிமுறைகளை மதித்து நடக்கும் (செம்மறி) ஆடுகள்.

அவை தம்மை ஏய்த்து பிழைக்கும்

அதிகார வர்க்கத்துக்கெதிராய் கலகம் செய்யாமல்

அமைதியாக நடந்து போயின

அவை நல்ல (செம்மறி) ஆடுகள்.

அவை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக சென்றதால்

நாளை அவற்றுக்கு "நல்ல ஆடுகள்" என்று பட்டமளிக்கப்படும்.

அவை எதிர்ப்பட்ட வாகனங்களை முட்டாமல்,

வீதியோர வீட்டுக்கதவுகளை மோதாமல்,

அமைதியாக தம்பாட்டுக்கு சென்றதால்

நாளை முதல் குளிப்பாட்டி தம்வீட்டின்

படுக்கையறையில் வைத்து அவர்கள் பேணுவார்கள்

எது எப்படியிருப்பினும்,

அவை கிளர்ந்தெழாமல், அமைதியாக சென்றதால்

நாளை அவற்றை அவர்கள் கொல்ல மாட்டார்கள் (?)

:D

* சத்தியமாக செம்மறி ஆடுகள் இன்று ஊர்வலம் போயின.

நான் சாளரத்தை திறந்து நின்று வேடிக்கை பார்த்தேன். :D

ஏன் ஒரேயொரு செம்மறி ஆடு மட்டும் மஞ்சளும் சிவப்பும் றிபன் கட்டியிருக்கு?

முக்கியமான கேள்வி. :D

அதுக்கு மட்டும் தான் கொம்பு இருக்கு. அதான் அது மட்டும் துணி கட்டியிருக்கு.

Edited by இளைஞன்

அட கடவுளே.. யாழ் சனமெல்லாம் வந்திருக்கு.. நான் ஆரையும் காணலையே.. :D 'கொஸ்லார்' வஸ் ஊர்வலம் ஆரம்பிக்கும் இடத்தில வந்து சனத்தை இறக்க முயற்சிக்க, பாவம் நம்ப குமாரசாமியர் அதுக்க இருப்பார்னு ஊர்வலம் தொடங்கும் இடத்துக்கு போகச் சொல்லி அனுப்பினோம்.. :D

வீதியில காரணம் கூறாம.. இருங்க எழும்புங்கனஇனு ரண்டு மூனஇறு முறை இருத்தி எழுப்பி.. என்ரை முழங்கால ஒரு வழி பண்ணிட்டாங்கப்பா.. பண்ணிட்டாங்க.. :D

அமைதியாக தம்பாட்டுக்கு சென்றதால்

நாளை முதல் குளிப்பாட்டி தம்வீட்டின்

படுக்கையறையில் வைத்து அவர்கள் பேணுவார்கள்

:D

இளைஞனின் கவிதை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. :D

முக்கியமான கேள்வி. :D

அதுக்கு மட்டும் தான் கொம்பு இருக்கு. அதான் அது மட்டும் துணி கட்டியிருக்கு.

ஆமா.. அதீன்ரை தலையிலயும் மஞ்சள் சிவப்பு கலர் துணிதான் கட்டியிருக்கப்பா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றன். செம்மறி ஆட்டிற்கு கொம்பை மூடிக் கட்டினது, வெளியாட்கள் அல்ல...

அதுக்கு மட்டும்தான் ஈழப் பற்றிருக்கு. மற்றதுகள் எல்லாம் அடையாளத்தை மறைச்சுக்கொண்டு.......

ஒரு கேள்வி : ஈழம் என்றது காரணப் பெயரா? அப்பிடியென்டால் தமிழீழம் என்றால் என்ன அர்த்தம?

Edited by Snegethy

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் நல்ல விளக்கம்.எங்கள் பிரச்சனையைத் தீர்த்து வைத்தால் நாங்கள் ஏன் அவர்களுக்கு பிரச்சனை கொடுக்கப்போகிறோம்.உங்களால் தான எங்களுக்குப் பிரச்சனை என்று பெல்ஜிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சொல்ல வேணும். பிரச்சனையைத் தீர்க்காவிட்டால் வேறு இடத்தில் உங்கள் பாராளுமன்றத்தை வையுங்கோ என்று சொல்ல வேணும். ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிற்கு மாற்றினாலும் எங்கள் பிரச்சனை தீரந்தால்தான் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்ற அளவுக்கு நிலமை உருவாகவேணும்.எங்கட பிரச்சனையைத் தீர்க்காட்டி இந்தியாவிலதான் ஐரோப்பிய பாராளுமன்றத்தை அமைக்கவேணும் என்ற நிலமை உருவாக வேணும்.இளையோர் பாரிய குற்றம் எதுவும் செய்யவில்லை. கவனயீர்ப்பை கொஞ்சம் வேகமாய் காட்டியிருக்கினம்.இது ஆரம்பம்.இவ்வளவு சனம் கூடின மாதிரிக்கு முஸ்லிம் கள் என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேணும்.

வீதியில காரணம் கூறாம.. இருங்க எழும்புங்கனஇனு ரண்டு மூனஇறு முறை இருத்தி எழுப்பி.. என்ரை முழங்கால ஒரு வழி பண்ணிட்டாங்கப்பா.. பண்ணிட்டாங்க

நான் கடைசிவரை இருக்கல.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா.. இடையில் 2, 3 கறுத்தை ஆடுகளும் நிற்கின்றனவே!

உண்மை தான் இளஞன் இங்கு இருக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக் குச் சுயமாகச் சிந்திக்க முடியாது.பலர் இது எதோ விளங்க்கப்படுத்தி அழுத்தம் குடுக்கும் நடவடிக்கைய்காப்பார்க்கிறார

:D

இளைஞனின் கவிதை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. :D

கவிதையா? :D

ஆமா.. அதீன்ரை தலையிலயும் மஞ்சள் சிவப்பு கலர் துணிதான் கட்டியிருக்கப்பா.. :D

நான் வரேல இந்த விளையாட்டுக்கு.

ஆமா.. இடையில் 2, 3 கறுத்தை ஆடுகளும் நிற்கின்றனவே!

ஓமென்ன :D

எந்த ஆடாவது கரையில ஏறி கதவில முட்டினால்,

வீதியில் வருகிற வாகனங்களில் முட்டினால்,

கலகம் செய்யத் தூண்டினால்,

அதுகள காட்டிக்கொடுக்க அனுப்பப்பட்ட ஆடுகள்

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே ஆளாளுக்கு செம்மறி.. பன்னாடை என்று திட்டிக் கொண்டே இருங்கோ.அதுதான் கடைசியில நீங்கள் உங்கள் இனத்துக்குச் செய்ததா இருக்கும்..!

செம்மறிகள் போறதை கவனிச்சுக் கொண்டு அதுகள் நம்ம வழிக்கு வருகுதில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறதும்.. ஒரு செம்மறித்தனம் தான். போராட நினைக்கிறவன்.. புரட்சி செய்ய நினைக்கிறவன்.. கூட்டத்தைக் கூட்டுறது பற்றி சிந்திக்கமாட்டான். தன்ர சிந்தனையை செயற்படுத்திறது பற்றித்தான் சிந்திப்பான். ( உதாரணத்துக்கு முருகதாஸ்.. முத்துக்குமார். (அவை தெரிந்தெடுத்த போராட்ட வழிமுறை சரியோ தவறோ தம்மால் இயன்றதன் உச்சத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்..!)

இவ்வளவு கூட்டம் வந்தால் தான் நான் போராட்டம் ஆரம்பிப்பன் என்றிருந்தால்.. இன்று ஒரு சேகுவராவும் கிடைச்சிருக்கார்.. ஒரு பிரபாகரனும் கிடைச்சிருகார்.

மக்களை செம்மறிகள் என்று திட்டி எமது இயலாமைகளை மறைக்க நாம் ஒரு சாட்டு தேடிக் கொள்ளுறம் அவ்வளவே. அவங்கள் கூட்டத்தில வெளிப்படையா சொல்லிட்டு பதுங்கினாங்கள். நாங்கள் அவங்களை செம்மறிகள் என்று திட்டிட்டு பதுங்கப் போறம். அவங்கள் கலைஞ்சு போகச் சொல்லேக்க வராத துணிவு வீட்ட போய் செம்மறியாடுகளை பார்த்த பின் அவர்களை திட்ட மட்டும் வருகுது. அதுதான் வித்தியாசம். இதுதான் புரட்சி???! இதுதான் இளைஞர்களின் அதிகார மையங்களை தட்டிக் கேட்கும் பாங்கு..??!

ம்ம்ம்.. இதுகளால பாதிக்கப்படுற மக்களுக்கு விமோசனம் ஏதுமில்லை. புகலிடத்தில் போராடும் தரப்புக்கள் இரண்டாக பிளவுபடப் போகுது போல. இரண்டு தரப்பாலும்.. தொடர்ந்து போராட முடியாத வலிப்பு..! இது தமிழர்களின் பிறவி இயல்பு. :D :D :D

Edited by nedukkalapoovan

கனடா தமிழ்விசன், தமிழ்வன் தொலைக்காட்சிகளில சுவிஸ், பெல்ஜியம் நிகழ்வுகளை நேர் அஞ்சல் செய்தார்கள். நன்றாக இருந்திச்சிது. கனடாவில் செய்யமுடியாத பல விசயங்களை அங்கதான் செய்யலாம்.

போராட்டங்களை செய்கின்ற பொழுது சிறிது புத்திசாலித்தனமும் வேண்டும். பெல்ஜியத்தில் திடீரென்று நடத்தப்பட்ட வீதி மறிப்புப் போராட்டம் சற்றுப் பிசகியிருந்தாலும் அசம்பாவிதத்தில் முடிந்திருக்கும்.

இது தன்னெழுச்சியாக நடந்த ஒன்று. சில இளைஞர்கள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு குதித்தார்கள். பின்பு அவர்களைத் தொடர்ந்து வேறு பலரும் இறங்கினார்கள். ஒரு மணித்தியாலம் வரை வீதி மறிக்கப்பட்டிருந்தது.

இதை அடுத்து பல ஊடகங்கள் அங்கே வந்தன. இது அந்தப் போராட்டத்தின் வெற்றி. இதற்கு மேல் வேறு பயன் அதில் வரப் போவது இல்லை.

ஆனால் சிலர் இன்னும் அதிகமாக எதிர்பார்த்து வீதியிலேயே கிடந்தார்கள். அவர்களை எழுப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

பலர் வீதியில் இறங்க அஞ்சிய போது, இந்த இளைஞர்கள் துணிந்து வந்தார்கள். இப்படியானவர்கள்தான் இப்பொழுது தேவை. ஆனால் இவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமலும் இருக்க வேண்டும்.

நாம் ஒன்றாக இறங்கி ஒன்றாக திரும்ப வேண்டும்: இறங்குவதில் பிரச்சனை வரவில்லை. ஒன்றாக திரும்புவதுதான் சற்றுப் பிரச்சனையாகி விட்டது.

Edited by சபேசன்

ஓம். செய்திருக்கலாம். ஆனால், எங்களால் தான் எல்லாம் குழம்பியது என்று எம்மவரே எம்மைக் கைவிட்டு போயிருப்பார்கள். வேடிக்கை பார்க்க மட்டுமே அவர்களால் முடியும். எம்மோடு இணைந்து கலகம் செய்ய அவர்களால் முடியாது. எம்மைப் பிரச்சனைக்குரியவர்களாக மாற்றிவிட்டு அவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். அதுதான் உண்மை. :D

இது உண்மைதான்.. லண்டனில் நடந்த கூட்டத்தில் கூட மக்களை பெடியன்கள் உள்ள போக சொல்ல யாரும் போக முன் வர வில்லை.. பாவம் சில பெடியன்கள் அடி கூட வாங்கினாங்கள்.. பெடியளை பிரச்சனையில் மாட்டி வைத்து விட்டு சில மக்கள் விலகி விட்டார்கள்..

இதை விட இங்க பிறந்த ஒரு பொண்ணு முன்னுக்கு போனாள் ஆனால் அவங்க அம்மா அந்த பெண் கையை புடித்து நிறுத்தி விட்டாங்க.. ஆனால் அந்த பெண் அவங்க அம்மா கையாய் உதறி விட்டுக்கு போலிஸ் தள்ளி கொண்டு போனதை கண்டன்.. ஏன் சில பேர் நினைக்குற இல்லை என்று புரிய வில்லை.. அது நம் நாடு நம் மக்கள் என்று.. நான் எல்லாரையும் சொல்ல வில்லை நன்றி

  • தொடங்கியவர்

நேற்று நடந்த சாலை மறியல் சாதாரண ஒரு நிகழ்வு/தொடக்கம் தான். அதுபோன்ற அதன் அடுத்த கட்ட விளைவுகளையும் ஐரோப்பிய அரசுகள் எதிர்நோக்கும். நேற்றைய நிகழ்வும், அதற்கு முந்தைய சில நிகழ்வுகளும் இதைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றன. இதில எதுவும் மூடுமந்திரமில்லை. இது ஒன்றும் புதிதாக சொல்லப்படுகிற விடயமுமில்லை. சவால் விடுக்கப்படுகிற விடயமுமில்லை. இது ஐரோப்பிய அரசுகளுக்கும் நன்றாகத் தெரியும்.

பெல்ஜியம் பொலீஸ் காறன்கள் அடிப்பாங்கள் எண்டு தெரியாது... எண்டு இங்கிலாந்திலை இருந்து வந்து அடி வாங்கின தம்பி ஒருவர் எல்லை தாண்டும் போது கப்பலில் வைத்து சொன்னார்... TYO வை சேர்ந்த பெண்பிள்ளைகள் வந்து முன்னால் ரோட்டில் படுக்க இல்லை எண்றா எலும்பை எண்ணி இருப்பாங்கள் எண்றும் அந்த தம்பி சொன்னார்...

அடி விழும் போது முன்னால் போய் நிக்க மனதிலை ஒரு ஓர்மம் வேண்டும் அந்த பெண் பிள்ளைகளின் மீது மதிப்பு கொஞ்சம் கூடிதான் போய் இருக்கிறது... பெண் பிள்ளைகள் போனதை பார்த்துதான் பின்னாலை மற்றவர்களும் முன்னாலை போனார்கள் எண்று சொன்னார் அந்த தம்பி... விளைவுகளை எண்ணி பார்க்காமல் துணிவதுக்கும் கூட மிகப்பெரிய ஓர்மம் வேண்டும்... எங்கட இளையவர்களுக்கு அது இருப்பது எல்லாரையும் துணிய வைக்கும் என்பது மட்டும் உண்மை...

நான் நடுவிலை வந்ததாலை எதையும் கண்டு கொள்ள முடிந்து இருக்க இல்லை... பெல்ஜியம் போலீஸ் அடிக்கும் என்பது எனக்கு தெரியும் ஆதலால் நான் போய் இளையவர்களை காப்பாத்த முன்னால் போய் படுத்து இருப்பேனோ என்பது சந்தேகம்தான்... ஆனால் அந்த பெண் பிள்ளைகள் செய்தார்கள்... எண்றாலும் நான் அடுத்த முறைகளில் இப்படி நடந்தால் முன்னால் போகும் துணிவை ஏற்படுத்தி கொள்ள இந்த இளையோர் ஏற்படுத்தி வீட்டனர் என்பதில் சந்தேகமே வேண்டாம்...

எல்லா இருட்டுகளுக்கும் முன்னால் போகும் வெளிச்சம் தானே சிறந்த வளிகாட்டி...

  • தொடங்கியவர்

Thousands of Tamils decry Sri Lankan 'genocide'

1 day ago

BRUSSELS (AFP) — Thousands of supporters of a Tamil state protested in Brussels Monday against "genocide" by the Sri Lankan government, urging the European Union to send observers to see the situation on the ground.

"The Sri Lankan soldiers are killing 50 Tamil every day, and that is just in the so-called 'protected areas'," said Siva Ram, a Tamil protester from Paris.

Organisers put the turnout at around 30,000 although police put the figure at 5,000.

"We want to tell the world and Europe to stop the genocide in Sri Lanka," said Suveetsan Sivapula, from Germany.

The noisy protest, organised by the Tamil Youth Organisation, took place 100 metres from where EU foreign ministers were meeting in Brussels' European quarter.

Also on Monday, more than 10,000 Sri Lankan Tamils demonstrated outside the UN's European headquarters in Geneva, accusing the world body of complicity in the "genocide" of Tamils, police said.

An association for Tamils in Switzerland, the Tamil Forum, released a letter to UN Secretary General Ban Ki-moon condemning what it called the evacuation of civilians in Sri Lanka and their placing in "army detention camps".

Last month, EU foreign ministers called for an immediate ceasefire between the Sri Lankan security forces and Liberation Tigers of Tamil Eelam (LTTE) to allow aid in to and civilians out of the conflict zone in the north of the country.

EU External Relations Commissioner Benita Ferrero-Waldner expressed disappointment that the call had not been heeded.

"The situation there is really very, very dangerous," she told reporters after the ministers' meeting.

"Approximately 170,000 people, it seems civilian people, are being trapped in the north part of Sri Lanka and neither the Sri Lankan government nor the LTTE have until now accepted our appeal for an immediate ceasefire," she said.

The EU official said she hoped a mission from the European Union nations and the European Commission would be able to visit the area to assess the situation.

The Sri Lankan military says it has surrounded the Tiger rebels in a narrow strip of land and expects to soon end the guerrillas' decades-long armed struggle for an independent Tamil homeland.

A Sri Lankan diplomat in Brussels said the demonstration here displayed the "desperation of the LTTE who are now confined to a 35-square-kilometre region".

More worrying for the EU ministers, he added, was that the protest also shows the group's strength in Europe, even as its power wains in Sri Lanka.

"That there is this kind of gathering shows the capacity of the LTTE in Europe and that is something Europe should be worried about."

Government forces shot dead at least 32 Tamil Tiger rebels in north-eastern Sri Lanka, the defence ministry in Colombo said Sunday, as troops moved closer to finally defeating the separatist guerrillas.

Sri Lanka's army denies targeting the "safe zone" and in turn accuses the Tigers of fabricating reports of large scale civilian deaths.

The UN believes 150,000 to 180,000 civilians remain trapped in the territory still under rebel control.

"What we want is for the European Union to send people into the 'safe zone' and see what is really happening there, not just listen to what Colombo is telling them and visiting the displacement camps," said another Tamil protester who would not give his name.

The Tamil supporters also called for the Tigers to be taken off international terrorist lists.

"The Tamils are the Tigers, the Tigers are the Tamils," Sivapula said.

http://www.google.com/hostednews/afp/artic...up4mFUl95CWB62A

  • கருத்துக்கள உறவுகள்

http://www.pathivu.com/news/871/54/30/d,view.aspx

இந்த அழுகைகளை நாம் ஆனந்தக் கண்ணீராக எமது கடும் உழைப்பினால் மாற்றுவோம். உறுதி தளராத உடன்பிறப்புக்களே உயிரும் இனிய எம் தேசத்தை மீட்க ஒன்றுகூடிய உங்கள் அனைவரது கரங்களும் எம் தலைவனது கரம்கோர்த்து நிற்கையிலே தடையென்ன தடை. தகரும். விடியும் எம் தேசம். விடியும் வரை ஓயோம். இவ்வுலகில்....

இணைப்பு - பதிவின் பதிவு .

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு மட்டும்தான் ஈழப் பற்றிருக்கு. மற்றதுகள் எல்லாம் அடையாளத்தை மறைச்சுக்கொண்டு.......

ஒரு கேள்வி : ஈழம் என்றது காரணப் பெயரா? அப்பிடியென்டால் தமிழீழம் என்றால் என்ன அர்த்தம?

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%...%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

BELGIUM_16.jpg

எங்கட வலைஞனின் தயாரிப்பில் வந்த பதாதை ஒண்றை சுமந்தவாறு பிரித்தானிய அரசியல் வாதி ஒருவர்....

BELGIUM_20.jpg

BELGIUM_34.jpg

BELGIUM_37.jpg

வாக நெரிச்சல்... உபயம் இளையோர்...

BELGIUM_40.jpg

இதை போல இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரைக்கும் வந்த மக்கள் வெறும் 30 000 என்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை..

BELGIUM_45.jpg

29434688.jpg

70684468.jpg

18417989.jpg

99955038.jpg

44385105.jpg

96631462.jpg

22428917.jpg

57357422.jpg

நன்றி புலிகளின் குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.