Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவளின் காதலன்

Featured Replies

பல நாள் தவமிருந்து

விரதங்கள் பல பிடித்து

கிடைத்த வரம் இவள்

கொட்டிக்கிடக்கும் சந்தோசத்தில்

மணம் வீசும் மலராய்

தினமும் வளர்ந்து மங்கையானாள்

வந்தான் ஒருவன்

மலர் என்றான் தேன் என்றான்

உலகில் நீயே அழகி என்றான்

அன்பிற்கு நீயே அகராதி என்றான்

மயங்கிப் போனாள்

அன்பிற்கு புது அர்த்தம் சொன்னான்

காதலை கண்ணால் கற்பித்தான்

உறவை புது வழியில் ஒப்பித்தான்

அவனின் காதல் மொழியில்

அவள் சிறைப்பட்டுப் போனாள்

தன்னை மறந்து தன்னையே கொடுத்தாள்

பழத்தை உண்டதும் அவன் பறந்து போனான்

காத்திருந்தாள் காதலன் வரவில்லை

காதல் பொய்த்த பின்னும் காத்திருக்கிறாள்

காதலனுக்காக அல்ல

சூதுவாது எதுவும் அறியா

அந்த பிஞ்சு உயிருக்காய் ........

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையாய் வந்த கதை நன்று .........சிலரது வாழ்கை இப்படியும் ஆகி விடுவதுண்டு....

.அவளது மனஉறுதி பாராட்ட படவேண்டும். நிகே பாராட்டுக்கள். .... ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னை மறந்து தன்னையே கொடுத்தாள்

பழத்தை உண்டதும் அவன் பறந்து போனான்

காத்திருந்தாள் காதலன் வரவில்லை

காதல் பொய்த்த பின்னும் காத்திருக்கிறாள்

காதலனுக்காக அல்ல

  • தொடங்கியவர்

நன்றி நிலாமதி அக்கா

உங்கள் கருத்துக்கு

காதல் என்ற பெயரால் பல பெண்கள் ஏமாந்து தமது வாழ்க்கையையே

தொலைக்கும் சம்பவங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

எப்போதுதான் இந்த பெண்கள் நல்லவர்களை பிரித்து உணரக் கற்றுக்கொள்வார்களோ....................

  • தொடங்கியவர்

காதலில் கொஞ்சம் காமமும் உண்டு என்று கவிஞர்கள் சொல்வர் அதுக்காக ..............

நன்றி pirasaanth

உங்கள் கருத்துக்கு

காதலில் காமம் இருக்கலாம்

அனால் காமமே காதலாகி விடக்கூடாது

இன்று காதலே வியாபாரமாகிவிட்டதே...........

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை அழகு.

காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதே வழமையாகிட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

காதலில் ஏமாற்றம் என்பது பெண்ணுக்கு மட்டும் என்றில்லை. ஆண்களுக்கும் அந்த வலி ஏற்படுவதுதான். சில சமயங்களில் அது ஆண்களுக்குச் சம்பவமாகவும், பெண்களுக்குச் சரித்திரமாகவும் அமைந்துவிடுவதுண்டு!!!

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்படாதைங்கோ சுவி

suvy Posted Today, 05:20 PM

காதலில் ஏமாற்றம் என்பது பெண்ணுக்கு மட்டும் என்றில்லை. ஆண்களுக்கும் அந்த வலி ஏற்படுவதுதான். சில சமயங்களில் அது ஆண்களுக்குச் சம்பவமாகவும், பெண்களுக்குச் சரித்திரமாகவும் அமைந்துவிடுவதுண்டு!!!

உங்களைப்பற்றியும் யாராவது கதைப்பினம் பொறுமையாக இருங்கள்.

அது சரி என்ன அனுபவமோ?

  • தொடங்கியவர்

நன்றி கறுப்பி உங்கள் கருத்துக்கு

ஒருவரை பார்த்தவுடன் ஏற்படும் அதீத நம்பிக்கைதான் ஏமாற்றத்தில் முடிகிறது .

இதே போல் கண்டவுடன் வரும் காதல்தான் தோல்வியில் முடிகிறது .

  • தொடங்கியவர்

suvy Posted Today, 04:50 PM

காதலில் ஏமாற்றம் என்பது பெண்ணுக்கு மட்டும் என்றில்லை. ஆண்களுக்கும் அந்த வலி ஏற்படுவதுதான். சில சமயங்களில் அது ஆண்களுக்குச் சம்பவமாகவும், பெண்களுக்குச் சரித்திரமாகவும் அமைந்துவிடுவதுண்டு!!!

நன்றி சுவி உங்கள் கருத்துக்கு

உண்மைதான் சுவி .என்ன செய்வது ஏமாறுபவர்கள் தம் குணத்தை மாற்றிக்கொள்ளும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இக்கவியில் பொருட் பிழை உண்டு.

காதலன் வந்தான்.. புளுகினான் தள்ளினான்.. அதில் மயங்கினாள்.. தன்னையே கொடுத்தாள்.. அப்புறம் காத்திருக்கிறாள்.. பிஞ்சு உயிருக்காய்.

ஏன் அபோசன் செய்ய மறந்தாள்..???! பறந்து போனதின்.. எச்சம் எதற்கு.. ஏன் அதற்காக காத்திருக்கனும்..??!

மயக்க என்ன காதல்.. போதையா.. போதை வஸ்தா..?! அது போதையல்ல. எல்லாரும் சுயபுத்தியோட தான் காதலிக்கினம். தெரிஞ்சு கொண்டு தான் மனசால மட்டுமல்ல உடலாலும் உறவாகினம். பிறகு பழி மட்டும்.. பழத்தை தின்றிட்டு பறந்திட்டான் என்று ஒப்பாரி வைக்கினம். அவை செய்த தவறுகளை இலகுவா மறந்திடினம்.. இல்ல மறச்சிடினம்.

காய் பழமாகி தின்னும் வரை அனுமதிக்கேக்க.. போற அறிவு ஏன் அப்புறம் மட்டும் திட்ட வந்திடுது..??!அதையும் மறந்து தொலைக்க வேண்டியதுதானே..! :mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

nedukkalapoovan Posted Today, 06:07 PM மயக்க என்ன காதல்.. போதையா.. போதை வஸ்தா..?! அது போதையல்ல. எல்லாரும் சுயபுத்தியோட தான் காதலிக்கினம். தெரிஞ்சு கொண்டு தான் மனசால மட்டுமல்ல உடலாலும் உறவாகினம். பிறகு பழி மட்டும்.. பழத்தை தின்றிட்டு பறந்திட்டான் என்று ஒப்பாரி வைக்கினம். அவை செய்த தவறுகளை இலகுவா மறந்திடினம்.. இல்ல மறச்சிடினம்.

காய் பழமாகி தின்னும் வரை அனுமதிக்கேக்க.. போற அறிவு ஏன் அப்புறம் மட்டும் திட்ட வந்திடுது..??!அதையும் மறந்து தொலைக்க வேண்டியதுதானே..! :D

உதுகள சொல்ல போனால் பெண்களுக்கு எதிராக பேசுராங்கள் என்றுசொல்லுராங்கப்பா என்ன உலகமடா இது :(

அண்ணாத்தை நெடுக்கு உடல் சுகத்தை அனுபவித்து ஓட போறவனின் நடத்தையை கூட கண்டு கொள்ள முடியாத பெண்களப்பா கட்டுபாடப்போட்டா நடக்குமா என்ன காலங்கடந்த பின்பே புத்தி வருகிறது பெண்களுக்கு :D:D

உங்க கவி அழகு அதில் உள்ள உன்மைகளும் அழகு நிகே :D

தன்னை மறந்து தன்னையே கொடுத்தாள்

பழத்தை உண்டதும் அவன் பறந்து போனான்

காத்திருந்தாள் காதலன் வரவில்லை

காதல் பொய்த்த பின்னும் காத்திருக்கிறாள்

காதலனுக்காக அல்ல

சூதுவாது எதுவும் அறியா

அந்த பிஞ்சு உயிருக்காய் ........

காதலிக்கலாம் அது என்ன தன்னையே மறந்து அவளை குடுப்பது இதுக்கு பெயர்தான் காதலா? பெண்கள் கொஞ்சம் கவனமாய் இருக்க வேணமா?ஆண்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கலாமா?காலச்சாரம் ஒன்று இல்லையா>? தன்னை மறக்கு அளவுக்கு காதலா?காதல் என்ற பெயரில் ஏதோ நடக்குது இதுக்கு பெயர் காதல் இல்லை...

ஆனால் குழந்தைக்கு ஆக வாழும் அந்த பெண்ணை பாரட்டதான் வேணும்.. உங்கள் கவிதை அழகு நிகே..

  • கருத்துக்கள உறவுகள்

இக்கவியில் பொருட் பிழை உண்டு.

காதலன் வந்தான்.. புளுகினான் தள்ளினான்.. அதில் மயங்கினாள்.. தன்னையே கொடுத்தாள்.. அப்புறம் காத்திருக்கிறாள்.. பிஞ்சு உயிருக்காய்.

ஏன் அபோசன் செய்ய மறந்தாள்..???! பறந்து போனதின்.. எச்சம் எதற்கு.. ஏன் அதற்காக காத்திருக்கனும்..??!

மயக்க என்ன காதல்.. போதையா.. போதை வஸ்தா..?! அது போதையல்ல. எல்லாரும் சுயபுத்தியோட தான் காதலிக்கினம். தெரிஞ்சு கொண்டு தான் மனசால மட்டுமல்ல உடலாலும் உறவாகினம். பிறகு பழி மட்டும்.. பழத்தை தின்றிட்டு பறந்திட்டான் என்று ஒப்பாரி வைக்கினம். அவை செய்த தவறுகளை இலகுவா மறந்திடினம்.. இல்ல மறச்சிடினம்.

காய் பழமாகி தின்னும் வரை அனுமதிக்கேக்க.. போற அறிவு ஏன் அப்புறம் மட்டும் திட்ட வந்திடுது..??!அதையும் மறந்து தொலைக்க வேண்டியதுதானே..! :D

இந்த கருத்து பிழையானதல்ல ஒரு விதத்தில் பெண்கள் மேல் மிகவும் அக்கறையும் ஆழ்ந்த அன்பும் கொண்ட ஒருவரால்தான் இப்படியான கருத்துக்களை முன்வைக்க முடியும். காரணம் பெண்கள் ஆண்களிடம் ஏமாந்துவிட கூடாது மிகவும் கண்டிபோடு இருக்கவேண்டும் என்ற அறிவுறுத்தல் இந்த கருத்துக்குள் மறைந்திருப்பது நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆனாலும். காதல் என்பது ஒரு சுவையான அனுபவம். ஒரு ஆணும் பெண்ணும் காதல் உறவில் தம்மை ஒன்றிணைத்தபின்பு உடல் சுகம் என்பது இருவராலும் விரும்பபடும் ஒன்றுதான். அது காதலின் இன்னொரு பக்கம் ஆகவே ஒரே பக்கத்தில் காதலில் நின்றுகொண்டிருக்க முடியாது அது முழுமையான காதலும் ஆகாது. உடல் சம்ந்தமான இணைவை தவறு என்றால் தப்பை இருவரும் செய்கிறார்கள். அது சரியெனபட்டால் இருவரும் தமது காதலின் இன்னொரு பகுதிக்கு செல்கிறார்கள்.

ஆனால் காதல் உறவை முறித்துகொண்டு ஒருவர் மட்டுமே வெளியேறிய பின்பு. இன்னnhருவர் ஏமாற்றபடுகிறார் என்பது நிதர்சனமானது. அந்த நீதியை அவளும் சேர்ந்துதானே படுத்தாள்? என்னும் கேள்வியின் ஊடாக மறைக்கவோ நீதியை கொல்லவோ நினைத்தால். அங்கேதான் ஆணாதிக்கம் பிறப்பெடுக்கின்றது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

  • தொடங்கியவர்

நெடுக்ஸ் தங்கள் சில கருத்துக்கள் நியாயமானதுதான் .

ஆனால் நீங்கள் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியாது .

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் .கல்லே கரையும் என்னும்போது பெண்ணின் மென்மையான மனத்தை கரைப்பது கடினமானதா?

பெண்கள் எளிதில் எல்லோரையும் நம்பி விடுவதால்தான் இப்படியான தவறுகள் நடக்கின்றன .நான் இங்கு அந்த பெண் செய்தது சரி என்று சொல்ல வரவில்லை .

என்ன ஆண் ஏமாற்றப்பட்டால் அது சமூகத்துக்கு அதிகம் தெரிவதில்லை .காரணம்

அவர்களில் உடல் ரீதியான மாற்றங்கள் நிகழ்வதில்லை .ஆனால் பெண் ஏமாற்றப்படும்போது அவளின் உடலில் ஏற்படும் மாற்றம் சமூகத்துக்கே அவளை

ஒரு குற்றவாளியாக காண்பித்துவிடுகிறது.

இங்கு தப்பு செய்தது இருவராக இருந்தாலும் சமுகம் தூற்றுவது என்னவோ பெண்ணைத்தானே.......

ஏன் அபோசன் செய்ய மறந்தாள்..???! பறந்து போனதின்.. எச்சம் எதற்கு.. ஏன் அதற்காக காத்திருக்கனும்..??!

அபோசன் என்பது கருவை கலைக்குமே தவிர மனதின் காயத்தை கலைக்கப்போவதில்லை .ஆற்றவும் போவதில்லை. அவனது காதல் பொய் எனினும் அவள் அவன் மீது கொண்ட காதல் நியம . இது தவிர இந்த இருவரும் செய்த

தவறுக்காய் தப்பே செய்யாத அந்த பிஞ்சு உயிரை கொள்வது எந்த வகையில்

நியாயம் .

தாய்மை என்பது புனிதமானது .அதை உணரத்தான் முடியுமே தவிர வார்த்தையால் வரையறுத்துவிட முடியாது . அவன் மீது அவள் கொண்ட காதலும் தாய்மை உணர்வுமே அந்த பிஞ்சு உயிரை அவள் எதிர்பார்த்து இருப்பதன் காரணம் .....

  • தொடங்கியவர்

வணக்கம் 'முனிவர் ஜீ'

உதுகள சொல்ல போனால் பெண்களுக்கு எதிராக பேசுராங்கள் என்றுசொல்லுராங்கப்பா என்ன உலகமடா இது :lol:

நியாயமான கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் பெண்கள் எப்பவும் பின் நிற்பதில்லை .

அண்ணாத்தை நெடுக்கு உடல் சுகத்தை அனுபவித்து ஓட போறவனின் நடத்தையை கூட கண்டு கொள்ள முடியாத பெண்களப்பா கட்டுபாடப்போட்டா நடக்குமா என்ன காலங்கடந்த பின்பே புத்தி வருகிறது பெண்களுக்கு :D:D

ஆண்கள் இப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்று தெரியாத பெண் போல இருக்கு .

இந்தியாவில் ஒரு ஆண் 56 பெண்களை திருமணம் செய்த கதை அறிந்திருப்பீர்கள்

இதில் பல திருமணங்கள் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடந்தவை .பெற்றோர்களாலேயே இப்படிப்பட்ட ஒருவனை இனங்காண முடியாத

போது இந்த பெண்ணால் மட்டும் எப்படி முடியும் .............

  • தொடங்கியவர்

வணக்க Maruthankerny

உங்கள் கருத்து நியாயமானதுதான் இங்கு தவறு செய்தது இருவரும்தான் .ஆனால் தாய் என்ற அந்தஸ்தை பெற அவள் தயாராய் இருக்கிறாள் .தந்தை என்ற அந்தஸ்தை பெற அவன் தயாராய் இல்லையே ...

பெண்கள் காதல் என்ற பெயரில் எப்பவும் தமது கற்பை இழந்துவிடக் கூடாது. தாலி

கழுத்தில் ஏறும் வரை கற்பை வேலியாக கொண்டு வாழ்வதே பெண்ணிற்கு

என்றும் பெருமை

நன்றி சுஜி தங்கள் கருத்திற்கு

பெண் தன் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் மீறியதால் தான் இத்தனை சிக்கலும் ...காதலிக்கலாம் ஆனால் காதலுக்காக கற்பை இழந்து விடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்து பிழையானதல்ல ஒரு விதத்தில் பெண்கள் மேல் மிகவும் அக்கறையும் ஆழ்ந்த அன்பும் கொண்ட ஒருவரால்தான் இப்படியான கருத்துக்களை முன்வைக்க முடியும். காரணம் பெண்கள் ஆண்களிடம் ஏமாந்துவிட கூடாது மிகவும் கண்டிபோடு இருக்கவேண்டும் என்ற அறிவுறுத்தல் இந்த கருத்துக்குள் மறைந்திருப்பது நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆனாலும். காதல் என்பது ஒரு சுவையான அனுபவம். ஒரு ஆணும் பெண்ணும் காதல் உறவில் தம்மை ஒன்றிணைத்தபின்பு உடல் சுகம் என்பது இருவராலும் விரும்பபடும் ஒன்றுதான். அது காதலின் இன்னொரு பக்கம் ஆகவே ஒரே பக்கத்தில் காதலில் நின்றுகொண்டிருக்க முடியாது அது முழுமையான காதலும் ஆகாது. உடல் சம்ந்தமான இணைவை தவறு என்றால் தப்பை இருவரும் செய்கிறார்கள். அது சரியெனபட்டால் இருவரும் தமது காதலின் இன்னொரு பகுதிக்கு செல்கிறார்கள்.

ஆனால் காதல் உறவை முறித்துகொண்டு ஒருவர் மட்டுமே வெளியேறிய பின்பு. இன்னnhருவர் ஏமாற்றபடுகிறார் என்பது நிதர்சனமானது. அந்த நீதியை அவளும் சேர்ந்துதானே படுத்தாள்? என்னும் கேள்வியின் ஊடாக மறைக்கவோ நீதியை கொல்லவோ நினைத்தால். அங்கேதான் ஆணாதிக்கம் பிறப்பெடுக்கின்றது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

உங்கள் கருத்து நியாயமானது தான்.சில ஆண்கள்(இங்கு சில பெண்களும்)காதலின் அந்தப்பக்கத்துக்காகமட்டும் காதலிக்கிறார்கள்.சரி இருவருக்கும் அது தான் தேவை என்றால் பின் விழைவுகள் வரமல் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளளாமே.

:lol: அந்த அவசரத்தில் அந்த கவனம் வருமோ? :D

  • தொடங்கியவர்

தீயா ,sagevan , jil

தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் ....

  • கருத்துக்கள உறவுகள்

நிகே உங்கள் கவிதைக்கு என் வாழ்த்துக்கள்

இப்படிப்பட்ட ஆண்களுக்கு ஒரே ஒரு தண்டனைதான் உண்டு

அது ஒரு படத்தில் விவேக்கின் பஞ்சாயத்தீர்ப்பு!!!

தாய்மை என்பது புனிதமானது .அதை உணரத்தான் முடியுமே தவிர வார்த்தையால் வரையறுத்துவிட முடியாது .

தாய்மைக்கு முதன்மை தான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், தவறு செய்யும் ஆண்களுக்கும் மனசாட்சி இல்லாமல் போகுமா? சிலர் அதை வெளிக்காட்டாமல் இருப்பதற்காக குடி, சிகரட் என்று தம்மைத்தாமே அழிக்கிறார்கள்.

பலாத்காரம் செய்தால் அது ஒருவரில் முழுப்பிழை எனலாம். ஆனால் காதலர்களாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, இருவர் ஒன்று சேர்ந்தபின், யாரேனும் ஒருவரில் முழுப்பழியையும் சுமத்தக்கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.

இருந்தாலும் உங்கள் கவிதைக்கு என் வாழ்த்துக்கள் நிகே.

குட்டி தம்பி யாரும் பழி ஆண்கள் மேல் சுமத்த வில்லை என்று நினைக்கிறேன்... தப்பு பண்ணும் போது இருவரின் மேல்தான் தப்பு.. ஒருவரை மட்டும் நாம் சொல்ல முடியாதுதான்...ஆண்கள் சிகிரெட் குடி இது எல்லாம் கவலையில்தான் பண்ணுறார்களா? இது என்ன புது கதை... கவலையை இப்படித்தான் காட்டணுமா??????? சிகிரெட் குடி இதை எல்லாம் பண்ணி விட்டு ஆண்கள் பெண்கள் மேல் பழி போடுவது சரி இல்லை.. அவரவர் பண்ணும் தப்புக்க்கு அவரவர்தான் காரணம்... குடி எல்லாம் இப்போது கவலையில் யாரும் குடிப்பாதாய் தெரிய வில்லை... நண்பர்கள் மதிக்க மட்டார்கள் பாட்டிக்கு போனால் குடிக்கணும் இல்லை என்றால் போன இடைத்தில் மரியதை இல்லை அப்படி எல்லாம் குடிக்குறார்கள்..

ஒரு பெண் ஏமாற்றம் அடைந்தால் தாய்மை பெண்தான் ஏர்க்கிறாள்.. ஆண்களுக்கு அதை பத்தி கவலையே இருக்காது... காதல் என்று வந்தால் பெண்கள் கழுத்தில் தாலி ஏறும் வரை கொஞ்சம் ஆண்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லம்... அவன் நல்லவனாய் இருந்தாலும் பெண்கள் அவதனமாய் இருந்தால் ஆண்களின் ஆசை வார்த்தைக்கு மயங்காமல் இருந்தால் அதுவே நல்லம்..அவர்களிடம் இருந்து எமறாமல் இருக்கலாம்..

உங்கள் கருத்து நியாயமானது தான்.சில ஆண்கள்(இங்கு சில பெண்களும்)காதலின் அந்தப்பக்கத்துக்காகமட்டும் காதலிக்கிறார்கள்.சரி இருவருக்கும் அது தான் தேவை என்றால் பின் விழைவுகள் வரமல் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளளாமே.

அது இதுதான் வேணும் என்று போறவர்களை காதலிக்கிறார்கள் என்று சொல்லாமா> நல்ல அறிவுரை எச்சரிக்கையிடன் இருப்பது நல்லமா> ? இது எந்த நாட்டு காலச்சாரம்... காதல் எவ்வளவு புனிதமானது.. இப்படி போவர்களை நான் காதலர்கள் என்று சொல்ல மாட்டன் நாய்கள் என்றுதான் சொல்லுவன்.. இது என்னோட கருத்து.. யாரயும் நோக அடிக்கனும் என்று சொல்ல வில்லை.. :lol::D

காதலில் கொஞ்சம் காமமும் உண்டு என்று கவிஞர்கள் சொல்வர் அதுக்காக ..............

காதலில் காமம் இருக்கலாம் காமமே காதலாகி விட கூடாது... பார்த்து தங்கள் காதலிக்கு கோபம் வர போகிறது... இப்படி அப்படி கொமென்ஸ் எழுதுறிர்கள் அவர்கள் பார்த்துட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்... எதுக்கு கவனமாய் இருப்பது நல்லம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது இதுதான் வேணும் என்று போறவர்களை காதலிக்கிறார்கள் என்று சொல்லாமா> நல்ல அறிவுரை எச்சரிக்கையிடன் இருப்பது நல்லமா> ? இது எந்த நாட்டு காலச்சாரம்... காதல் எவ்வளவு புனிதமானது.. இப்படி போவர்களை நான் காதலர்கள் என்று சொல்ல மாட்டன் நாய்கள் என்றுதான் சொல்லுவன்.. இது என்னோட கருத்து.. யாரயும் நோக அடிக்கனும் என்று சொல்ல வில்லை.. :lol::wub:

காதலில் காமம் இருக்கலாம் காமமே காதலாகி விட கூடாது... பார்த்து தங்கள் காதலிக்கு கோபம் வர போகிறது... இப்படி அப்படி கொமென்ஸ் எழுதுறிர்கள் அவர்கள் பார்த்துட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்... எதுக்கு கவனமாய் இருப்பது நல்லம்..

ஜயோ..காமம் என்றாலே என்ன என்று தெரியாத அப்பிராணி நான் :lol: அப்பவே நினைச்சன் உந்த கவிஞர் என்று சொல்லுகிற பெரியாக்களின்ரை கருத்தை சின்னப் பிள்ளையள்

சொல்லப்படாது என்று. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.