Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்ல்ஸ் அன்டனி தளபதி அமிதாப் வீரமரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக தீபனின் உடல் அல்ல. நீண்ட நாட்களாக அவரை தெரியும். அவரின் பற்கள் காணொளியில் உள்ளது போல இடை வெளிகள் கொண்டவை அல்ல.

சிங்களமும் துரோகமும் வதந்திகளை மிக வேகமாகப் பரப்பித்தமிழ் மக்களை குழப்புவதில் மும்மரமாக உள்ளன.

  • Replies 96
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக தீபனின் உடல் அல்ல. நீண்ட நாட்களாக அவரை தெரியும். அவரின் பற்கள் காணொளியில் உள்ளது போல இடை வெளிகள் கொண்டவை அல்ல.

நீங்கள் சொல்வது சரி தான் நுனா அண்னை..

அவ முகத்தை மட்டும் தான் காட்டினம்..ஏன் உடம்பை காட்ட வில்ல.. எல்லாம் சுத்து மாத்து தான்...உடம்பை காட்டினா தங்கட பொய் புளுக்கு எல்லாம் வெளிய வந்திடும் என்ர பயத்தில தான் Photoimpact ல மிஸ் பண்ணின போட்டவ போட்டுட்டு பில்ம் காட்டுறாங்கள் :(

நடப்பது போர். இதில் இழப்புகள் தவிர்க்க முடியாதவை. தற்பொழுது நேருகின்ற இழப்புகளை விடுதலைப் புலிகள் உடனுக்குடன் அறிவிப்பது இல்லை. உறவினர்களுக்கே சில நாட்கள் கழித்துத்தான் செய்தி போகின்றது.

எங்கள் தளபதிகளின் வீரச்சாவு குறித்த செய்திகள் விடுதலைப் புலிகளால் மறுக்கப்படும் வரை உண்மையான செய்தியாகவே பார்க்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தளபதிகளின் வீரச்சாவு குறித்த செய்திகள் விடுதலைப் புலிகளால் மறுக்கப்படும் வரை உண்மையான செய்தியாகவே பார்க்கப்படும்
.

ஓமோம் ஒவ்வொரு நாளும் வி.புலிகளின் தளபதிகள் இருக்கிறார்கள் என்று இடாப்பு கூப்பிட்டால் தான் நீங்கள் நம்புவீர்களோ? :(

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த வரையில் இது தீபன் அண்ணா இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உவர் சபேசன்ர கதையை விடுங்கோ. 1988/89 இல் இந்தியா தலைவரைக் கொன்றதை எவரும் அப்போது மறுக்கவில்லை. அதற்காக தலைவர் உயிரோடு இருக்காமலா போனார். சந்திரிக்கா சூசை.. பொட்டம்மானை.. தலைவரை எத்தனை தரம் கொன்றார். அத்தனை தடவையும் மறுப்பறிக்கையா விட்டுக்கொண்டிருந்தனர். அதுவல்ல போராளிகளின் வேலை..!

சிங்களவனே சொல்லிட்டான் தளபதிகள் இறந்திட்டினம் என்று. இந்த நிலையில் அவை உயிரோட இருந்தால் இன்னும் பாதுகாப்பு அதிகமே தவிர.. குறைவில்லை.

ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றில் தளபதிகள் விசிற்றிங் லெக்சரேர்ஸ் அல்ல. சரத் பொன்சேகா போல கொழும்பில் இருந்து கொண்டு ரீவி திரையில் சண்டைகளைப் பார்ப்பவர்கள் அல்ல எமது தளபதிகள். தலைவரில் இருந்து கடைசிப் போராளி வரை நேரடியாக களத்தில் நிற்பவர்கள். அவர்களிடை மரணம் என்பது இயல்பானதே. ஒருவர் விழ மற்றவர் அதன் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செல்வதே எதிரியை வீழ்த்தும். கலங்கி நிற்பதோ.. அறிக்கை வரும் வரை காத்திருப்பதோ அவசியமற்றது.

தமிழரின் வீர மரபைப் புரட்டிப்பாருங்கள். அதன் படி நில்லுங்கள்..! எமது பலத்தை புகலிடத்தில் அரசுகளிடம் காட்டுங்கள்..! :(

Edited by nedukkalapoovan

அது.

.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த வரையில் இது தீபன் அண்ணா இல்லை.

இருக்கலாம். ஆனால் எமக்கு அது அவசியமா..??! அவர் தீபனா இருந்தால் கூட பறுவாயில்லை. அவர் சண்டைக்களத்தில் இறந்தார். போர் வீரர்கள் களத்தில் இறப்பது இயல்பு. அவரின் இடத்தை நிரப்பிக்கொண்டு அவர்களின் இலட்சியத்தை வெல்வதே இப்போதைய தேவை. அதைப்பற்றித்தான் சிந்திக்க வேண்டும். மாண்டவர் மீளப்போவதில்லை..! :(

சிறீலங்கா அரசு சொல்கிறது. உடலங்களைக் கைப்பற்றி இருக்கிறம் என்று. ஆனால் அவர்களின் ஒளிப்படங்களை (வீடியோவில் தலையை காட்டினதோட சரி) வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஏதெண்டு தெரியாமல் சும்மா உளறாதேங்கோ... புலிகளின் அறிவித்தல் இன்னும் வரவில்லை.

ஒரு வீர தளபதியின் மரணத்தை நிச்சயம் புலிகள் மறைக்க மாட்டார்கள்.... இதுவரை வீரமரணத்தை புலிகல் மறைத்ததாக எந்த வரலாறுமில்லை.

இப்படித்தான் நானும் நினைக்கிறேன்

இந்த இடத்தில் நான் அதிகமாக வாதிட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை.

இன்றைக்கும் உங்களில் பலர் கற்பனை உலகில் வாழ்கிறீர்கள் என்பதை நினைக்கின்ற பொழுது வருத்தமாகவும் அச்சமாகவும் இருக்கின்றது.

"விடுதலைப் புலிகள் இடங்களை விட மாட்டார்கள், அப்படி விட்டால் அது எதிரிக்கு வைக்கும் பொறி, விடுதலைப் புலிகளின் தளபதிகள் கொல்லப்பட்டதாக எதிரி அறிவித்தால், அது பொய்ப் பிரச்சாரம்"

இப்படியான சிந்தனைக்குள்ளேயே இன்றைக்கும் இருக்கிறீர்கள்.

போரில் இறக்கும் போராளிகள் பற்றிய அறிவிப்பை உடனடியாக விடுகின்ற காலம் போய் பல மாதங்கள் ஆகி விட்டது. இன்றைக்கு விடுதலைப் புலிகள் குடும்பத்தினர்களுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கின்றார்கள்.

இங்கே பல விடயங்களை கூறி வெளிப்படையாக கருத்து வைக்க முடியாத நிலையில் இருக்கின்றேன். கற்பனை உலகில் இருந்து வெளியே வந்து உண்மையை துணிவோடு எதிர் கொள்ளுங்கள் என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

இதே போல் என் தமிழ்நெட் நண்பர்களின் மூலம் ஒரு சில தகவல்களை பெறக் கூடியதாக இருந்தாலும் இங்கு வெளிப்படையாக சொல்ல முடியாது இருக்கின்றது. தமிழ்நெட் கூட சில விடயங்கள் தெரிந்தாலும் இன்று முழுதும் மயான அமைதி காக்கின்றது. எதிரிக்கு நன்கு தெரிந்த விடயத்தினை தமிழ் மக்களுக்கு தெரிய வைக்காமல் விடுவதில் என்ன நன்மை இருக்கின்றது என்பது தான் புரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம். ஆனால் எமக்கு அது அவசியமா..??! அவர் தீபனா இருந்தால் கூட பறுவாயில்லை. அவர் சண்டைக்களத்தில் இறந்தார். போர் வீரர்கள் களத்தில் இறப்பது இயல்பு. அவரின் இடத்தை நிரப்பிக்கொண்டு அவர்களின் இலட்சியத்தை வெல்வதே இப்போதைய தேவை. அதைப்பற்றித்தான் சிந்திக்க வேண்டும். மாண்டவர் மீளப்போவதில்லை..! <_<

சிறீலங்கா அரசு சொல்கிறது. உடலங்களைக் கைப்பற்றி இருக்கிறம் என்று. ஆனால் அவர்களின் ஒளிப்படங்களை (வீடியோவில் தலையை காட்டினதோட சரி) வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. :unsure:

என்னை மன்னிக்கவும் இதை எழுதுவதற்கு மற்றவர்களை பற்றி எனக்குத் தெரியாது நெடுக்ஸ் ஆனால் தீபன் அண்ணா இறந்திருந்தால் எனக்குக் அது கவலை தான் அதை எப்படி வெளிக் காட்டாமல் இருப்பது.

அது தீபன் அண்ணாவாக இருந்தால் எல்லோருக்கும் அறிவித்து இருக்கலாம் சிங்கள ஊடகங்களில் எல்லாம் படம் போட்ட பின் அதை மறைத்து என்ன பிரயோசனம்?அதனால் புலம் பெயர் நாட்டில் மக்கள் வீதியில் இறங்கி போராட மாட்டார்கள் என்பது பொய். தமிழ்செல்வன்,பால்ராஜ் அண்ணா இறந்த பின்னரும் புலம் பெயர் நாட்டில் போராட்டம் தொடராமலா போய் விட்டது?

இழப்புகள் இருந்தாலும் இல்லை என்றாலும் போராட்டம் தொடரும். ஒரு மாற்று கருத்து ஊடகத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்கள் இப்போது புலி ஆதரவாளர்கள் கூட டிபென்ஸ் எல்கெ[defence lk] ஊடகத்தை தான் அதிகம் வாசிக்கிறார்கள் ஏனெனில் தமிழ்நெற் கூட உண்மையான செய்திகள் தெரிவிக்காமையால் என எழுதியிருந்தார்கள் அது உண்மை தானே.

வணக்கம்

களநிலை நிலை தெரிந்தும் நாம் குறுகிய வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறோம். இலங்கை அரசின்செய்திகளை மாற்றுக்கருத்து ஊடகங்கள்கூட நம்புவதில்லை அதனால்தான் அவர்கள் எமது செய்திகளைப்பார்த்து உறுதிப்படுத்த முனைகிறார்கள். சிங்கள அரசு கூறுவது போல் உண்மையில் தீபன் அண்ணா வீரச்சாவை தழுவியிருந்தால் அது எமக்கெல்லாம் பெருமிழப்புத்தான். ஆனால் இந்த இழப்புக்களை அறிவிப்பதில் பல சிக்கல்கள் இருக்கலாம். சிலவேளைகளில் எதிரிக்குத்தெரிந்த இழப்புகளை விட வேறுயாராவது தளபதிகள் வீரச்சாவடைந்திருந்தால் அவர்களின் இளப்பை எதிரிக்குக் காட்டிக்கொடுப்பது போன்றாகாதா? முதல்நடந்ததை மறைத்து பின்பு நடந்ததைக் கூறினால் அந்த உறவுகளின் வேதனையை சற்றுச்சிந்தியுங்கள். இதேபோல் பல தளபதிகளை பல முறை கொன்றுவிட்டதாக சிங்களம் பொய்ச்செய்தி விட்டிருக்கிறது இதற்கெல்லாம் மறுப்புக்கூறமுடியுமா. கலங்காது பொறுத்திருப்போம.; (உறவுகளே இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே தவறிருந்தால் மன்னிக்கவும்)

அன்பர்களே! இருக்கும் தலைவரையும் மக்களையும் காப்பாறற விரைந்து செயல்படுவோம்!

எப்பிடி?

புலிகளின் குரலில் வந்த வீரச்சாவு அறிவித்தல்கள்...

07/04/2009

லெப் கேணல் அமுதாப் அவர்களின் வீரச்சாவு அறிவித்தல்...

http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

4.15 நிமிடத்தில் இருந்து...

வணக்கங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலி

:rolleyes:

Lt_Col_Amirthap.jpg

deepam11.gif

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலி

:rolleyes:

Lt_Col_Amirthap.jpg

deepam11.gif

புலம் பெயர் தேசங்களில்

புயலாக வந்தவனே

நிலத்தினை மீட்பதுவே

கடமையெனச் சொன்னவனே

சில மணிப்பொழுதுகள்தான்

அலையாகப் பொழிந்தவனே

அன்னை மண்மீட்பில்

உன் கடமை முடிந்ததென

வித்தாக வீழ்ந்தனையோ

விடியலில் நாம் காண்போம்

வீரர்களே உங்களை நாம் !

விடியலில் நாம் காண்போம்

வீரர்களே உங்களை நாம் !

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசங்களில்

புயலாக வந்தவனே

!

2003 ஆண்டு டென்மார்க் நாட்டுக்கும் வந்து இருந்தார்..

நல்ல உள்ளம் கொண்டவர் :rolleyes: ..

இழப்புக்கள் பேரிழப்புக்களாகும் நிலையில் உன்னையும் இழந்தோம். அஞ்சலிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையா கந்தப்பு என்ற பெயரில் கருணா யாழிற்குள் வந்து விட்டான் போல். கவனம் யாழ் உறவுகளே.

இதற்குப் போய் என்னைக் கருணா என்று சொல்லிவிட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப் போய் என்னைக் கருணா என்று சொல்லிவிட்டீர்கள்.

கந்தப்பு , நானும் வாசித்தேன் அந்தப்ப்பதிவை .

மிக விரும்பிய ஒருவரின் மரணச் செய்தியை மனம் ஏற்றுக் கொள்ளவிரும்பாத ஒரு சூழ் நிலையில் அப்படி எழுதியிருக்கலாம் என்றே நிச்சயம் நம்புகின்றேன் .

உங்கள் நாட்டுப்பற்றைப்பற்றி நாம் எல்லோரும் நன்கு அறிவோம் . கவலைப்படாதீர்கள் கந்தப்பு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.