Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிருடன் உள்ளார் - தமிழ்நெட்

Featured Replies

தலைவர் நலமாக உள்ளார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தலைமையக புலனாய்வுப் பொறுப்பாளர் அறிவழகன் தெரிவித்துள்ளார்

Tamilnet

புலிகளின் தலைமை இன்னமும் செயற்படுகிறது - தமிழ் நெற்!

LTTE leadership safe: Tiger intelligence official

[TamilNet, Friday, 22 May 2009, 09:49 GMT]

Head of International Secretariat of the Intelligence wing of the LTTE, Mr. Arivazhakan, who contacted TamilNet Friday categorically denied the reports that the LTTE leader Mr. Velupillai Pirapharan has been killed. Mr. Arivazhakan urged the global Tamil community not to trust the "engineered rumours," being spread by the Government of Sri Lanka and its military establishment.

"Our beloved leader is alive," he said and added that the LTTE leadership will make contact with its people at a suitable time in future.

"These rumours have been set afloat to confuse the global Tamil community which has been voicing support for the liberation of Tamil Eelam," he further said.

Mr. Arivazhakan, who verified his identity through a senior reporter in Sri Lanka, did not reveal his location due to security reasons.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார்: விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறை

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அறிவழகன் தமிழ்நெட் இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணாத்தில் தொடர்பு கொள்வார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு உலகு எங்கும் பரந்து விரிந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஆதரவுக்குரலை அடக்கி ஒடுக்கும் முகமாக சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது என்றார் அவர்.

http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d424OO3a030Mt3e

Edited by kuddipaiyan26

தற்போது தலைவர் வந்து தன்னை வெளிக்காட்டவேண்டுமென்றிலை.

அவர் பாதுகாப்பாக இருந்து வழிகாட்டினாலே போதும், அடுத்த கட்டத்துக்கான போராட்டத்துக்கு உலகத்தமிழர்கள் தயாராகவே உள்ளோம்.

எமது அவலம் நீங்கவேண்டும், கலங்கம் விலகவேண்டும், விடுதலை அடையவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

நம் இனத்தில் சிலர் என் இப்படி கீழ் தரமாக இருகின்றனர்? தலைவர் உள்ளார் என்று எப்போதோ சொல்லபட்டு விட்டது ..........ஏன் நம்ப மறுக்கிறார்கள். ஆதாரம் கேட்கிறார்கள். அவரால் முன்னெடுக்கபட்டு இன்று போராடவடிவம் மாறி ஆலவிருட்சமாக் புலம்பெயர் உறவுகளால் முன்னெடுக்க படுகிறேதே.ஏன் இந்த அவநம்பிக்கை.......அவர் தகுந்த நேரம் வெளி வருவார்........அது வரை பொறுத்து இருக்க கூடாதா ? கருத்துகளை கூறி இன்னும் அவரை சிக்கலுக்குள் உட்படுத்தவேண்டுமா? காலத்தின் தேவை கருதி முன்னரும் இப்படி மறைந்து இருகிறார். முகமூடி ....போலிஉடலை குழந்தை கூட கண்டு நகைக்கும் .........இது புரியாவிலையா இந்தமடையருக்கு ..உங்கள் கடமையினை முன்னெடுங்கள் மிகுதி தானாகவே நடக்கும் இதை விடுத்து இந்த ஆதாரம் தேடும் வேலை தேவையா ? ........சிந்தியுங்கள் மக்களே ........

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த

முருகனுக்கே அவன் நிகரானவன்

கடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்த

பகை முடித்து புகழ் படைத்த மகுறொளியாற்றின்

பண்பலை அடக்கத்தில் வாழ்ந்த நம்பாட்டன்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

மனதுக்கு மிகவும் ஆறுதலான செய்தி.

தலைவர் பற்றிய செய்தி கேட்டதில் இருந்து நிம்மதியே இன்றி இருந்த மக்களுக்கு மிகவும் ஆறுதலான அதேவேளை புதிய உத்வேகத்தை இச்செய்தி தரும் என்றே நினைக்கிறேன்.

தலைவர் நீடூழி வாழ வாழ்த்துக்கள். தலைவரின் அருமையை இப்போது இன்னும் இன்னும் மக்கள் உணர்ந்திருப்பார்கள்..! :rolleyes:

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

Leader safe: LTTE's Intelligence Official

http://tamilnational.com/news-flash/1112-l...e-official.html

Edited by தேசம்

தலைவர் எங்களுடன் இருக்கிறார். தலைவரின் உறுதியை நாம் எல்லோரும் பற்றிக்கொள்வோம். செயற்படுவோம் எல்லோரும் செயற்பாட்டாளர்களாவோம். முதலாவது நாம் திருந்துவோம். குறிப்பாக செயற்பாட்டாளர்கள் திருந்தவேண்டும்.

தொல்லை கொடுக்காமல் வேலைசெய்யவேண்டும்

இங்கே தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களில் தமிழுணர்வாளர்கள் பங்கெடுக்கும் போது ... காவல்துறையினரால் படமெடுக்கப்படுவது.

போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது பிற்காலங்களில் தேவையில்லாமல் வழக்குகள் போடுவது... அச்சுறுத்தப்படுவது போன்ற பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது...

அதனையெல்லாம் மீறி சகித்துக்கொண்டே போராட்டங்களில் மக்கள் கலந்து கொள்கின்றனர்... நடத்துகின்றனர்.

ஐரோப்பாவில் இத்தகைய கீழ்த்தரமான அடக்குமுறை நிச்சயம் இருக்காது .... மக்கள் அனைவரும் தொடர்ந்து போராடுங்கள் நாம் ஓய்ந்து விடுவோம் என்று எண்ணி இருக்கும் எதிரியை நிலை குலைய வைக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
தலைவர் நீடூழி வாழ வாழ்த்துக்கள். தலைவரின் அருமையை இப்போது இன்னும் இன்னும் மக்கள் உணர்ந்திருப்பார்கள்..!
  • கருத்துக்கள உறவுகள்

நம் இனத்தில் சிலர் என் இப்படி கீழ் தரமாக இருகின்றனர்? தலைவர் உள்ளார் என்று எப்போதோ சொல்லபட்டு விட்டது ..........ஏன் நம்ப மறுக்கிறார்கள். ஆதாரம் கேட்கிறார்கள். அவரால் முன்னெடுக்கபட்டு இன்று போராடவடிவம் மாறி ஆலவிருட்சமாக் புலம்பெயர் உறவுகளால் முன்னெடுக்க படுகிறேதே.ஏன் இந்த அவநம்பிக்கை.......அவர் தகுந்த நேரம் வெளி வருவார்........அது வரை பொறுத்து இருக்க கூடாதா ? கருத்துகளை கூறி இன்னும் அவரை சிக்கலுக்குள் உட்படுத்தவேண்டுமா? காலத்தின் தேவை கருதி முன்னரும் இப்படி மறைந்து இருகிறார். முகமூடி ....போலிஉடலை குழந்தை கூட கண்டு நகைக்கும் .........இது புரியாவிலையா இந்தமடையருக்கு ..உங்கள் கடமையினை முன்னெடுங்கள் மிகுதி தானாகவே நடக்கும் இதை விடுத்து இந்த ஆதாரம் தேடும் வேலை தேவையா ? ........சிந்தியுங்கள் மக்களே ........

நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. நாம் தலைவர் குறித்த விசமப் பிரச்சாரத்தில் விழுந்து பதமநாதன் ஐயா சொன்னதையும் நம்பாததால் இப்போது உளவுத்துறை அறிக்கை விடும் அளவுக்கு வந்திருக்கிறது. தலைவர் இல்லை என்கிற செய்தி உண்மையிலேயே எம்மால் சிறந்த முறையில் கையாளப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவில் புலிகள் மீதான தடையை அடுத்தமுறை நீடிப்பது சிக்கலாகிப் போயிருக்கும். அப்படியே அவர்கள் தடையை நீடித்திருந்தாலும் யாராவது ஒரு தமிழார்வலர் தடைக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் நிலை இருக்கிறது. சிந்திக்கிறோமா நாம்?

இந்தியாவில் தடை நீங்கினால் உலக அளவில் அது நின்றுபிடிக்காது. அதனால் இத்தோடு இந்தப் பிரச்சினையை விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியும் இதனை ஒப்புக் கொள்வது போலவே செயற்பட்டிருக்கிறான்.

பிரபாகரனின் உடல் என்று அவன் காவித்திரிந்த உடலை எரித்து விட்டானாம். பல வழங்குகளில் பிரபாகரனை சம்பந்தப்படுத்தி வைத்திருக்கும் எதிரி ஒரு குற்றவாளியின் இறந்த உடலை எரிக்கும் தகமையை நீதிமன்றத்திடம் இருந்து பெற வேண்டும். அன்றில் அதைப் புதைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதனையும் செய்யாமல் தான் கொன்றதாகச் சொன்ன தளபதிகள் மற்றும் பிரபாகரனின் உடலை எரித்துவிட்டதாக இன்று எதிரி செய்தி வெளியிட்டுள்ளான். இது உண்மையில் அவன் நடத்திய நாடகத்திற்கு அவனே ஒரு முடிவை எழுதியது போல் இருக்கிறது.

Prabhakaran’s body cremated

By Dianne Silva

The military yesterday said the body of LTTE leader Vellupillai Prabhakaran was cremated in Mullaitivu on Wednesday.

“His body was cremated in Mullaitivu and treated like the body of any other terrorist,” Military spokesman Udaya Nanayakkara told the Daily Mirror yesterday.

The Media Centre for National Security (MCNS) Director General Lakshman Hulugalle confirmed the report saying: “His body was treated like that of any other terrorist and cremated. That is all we have been informed,” he said.

dailymirror.lk

தலைவரெண்டு எதிரி சொல்லி அதை கருனா போய்ப்பார்த்த படங்கள் என்னிடத்தில் உள்ளன, அவைகளை எப்படி பிரசுரிப்பது?

அது தலைவர் எண்டு சொன்னால் டக்கிளசே நம்பமாட்டான்.

இன்னும் எத்தனை பேர் அறிக்கைவிட்டால் நம்புவீர்கள் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்று.இதைத்தானே அன்றே எங்களுக்காக சர்வதேச ரீதியாக பனியாற்றிவரும் செ பத்மநாதன் அவர்களும் உருதியுடன் கூறியிருந்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரியின் பிரசாரத்தில் சிக்குண்டு இன்னமும் வெளிவர முடியாமல் இருப்பதால் தான் இன்னமும் இப்படியான கதைகள் வந்துகொண்டு இருக்கின்றன. நிலாமதி அக்கா சொன்னது அனைத்திலும் உண்மை, எனவே தலைவரின் விருப்பப்படி மக்கள் போராட்டத்தை புலம்பெயர் நாடுகளில் மேலும் விரிவுபடுத்துவோம். அவர் தோன்றவேண்டிய சந்தர்ப்பத்தில் தோன்றுவார்.

தலைவர் தோன்ற முதல் மகிந்தவையும் அவன் கும்பலையும் போர்க்குற்றங்களில் சிக்கவைத்து அவனின் முடிவை நாங்கள் வெடிகொளுத்தி கொண்டாடும் வரை போராடுவோம்.

மக்களே தலைவரைப் பற்றிய வதந்தியைப் பரப்பி எங்களைக் குளப்பி மகிந்த கொன்றொளித்த 1 லட்சம் மக்களின் கொலையை மறைக்கப் பார்க்கிறான் இது இன்னமும் புரியவில்லையா...? தயவுசெய்து இன்னமும் நடந்து கொண்டிருக்கும் கொலைகளை நிறுத்தப் போராடுவோமாக...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க தமிழ் வளர்க தமிழ் எல்லாம் தலை

கனடா உலகத் தமிழர் அமைப்பு ஏன் உறுதிப் படுத்தாத செய்தியை வெளியிட்டது

நேற்று இரவு கனடாவில் (ரொரண்டோ) உலகத் தமிழர் அமைப்பானது தேசிய தலைவர் அவர்கள்19 ஆம் திகதி அன்று கொல்லப் பட்டு விட்டதாகவும் தாம் அதனை உறுதியாக தெரிவிப்பதாகவும் தம் உறுப்பினர்களுடன் இடம் பெற்ற விசேட கூட்டத்தில் அறிவித்துள்ளது. உ.த வின் ஒவ்வொரு உறுப்பினரும் இதனை பக்குவமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறும். தலைவர் இறந்ததை புலிகள் இன்று உத்தியோக பூர்வமாக செ.பத்மநாதன் மூலம் உலகிற்கு அறிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர். தாம் தலைவர் இறந்தையிட்டு சில பாடல்களை புதிதாக இயற்றி ஒலிப்பதிவு செய்ய கொடுத்துள்ளதாகவும் அதனை இன்று மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூட கூறியுள்ளனர்.

கனடா முழுதும் வாழும் தமிழ் மக்கள் இந்த செய்தியினால், மிக மிக குழப்பம் அடைந்தும், கதறிக் கொண்டும் சித்த பிரம்மை பிடித்தது போல் ஒவ்வொரு தமிழ் கடைகள் முன் குழுமி நின்று அழுது குழறுகின்றதை காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த அறிவிப்பினை சில தமிழ் வானொலிகளும் அறிவுத்துள்ளதாக கூறுகின்றனர் (நான் வானொலியில் இதனை கேட்கவில்லை).

உலகத் தமிழர் அமைப்பு ஏன் இவ்வாறு புலிகளால் உத்தியோக பூர்வமாக அறிவிக்காத ஒரு விடயத்தினை அறிவிக்க முனைந்தது? அதன் அறிவிப்பு வந்த பின் தான் தமிழ்நெட் தலைவர் இறக்கவில்லை என்றதை மீண்டும் உறுதிப் படுத்தி செய்தி சொல்லியுள்ளது. அவ்வாறெனில் உலகத் தமிழர் அமைப்பும் மக்களுக்கு இராணுவத்தின் செய்திகளை பரப்பிக் கொண்டு இருக்கின்றதா?

அணமைக் காலமாக உ.த அமைப்பின் பல செயல்பாடுகள் கடும் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றன என்று கனடா வாழ் தமிழ் மக்கள் கூறுகின்றனர்

:எனது இந்த பதிவுக்கான முழுப் பொறுப்பும் நிழலி யான நான் ஏற்றுக் கொள்கின்றேன்: நிழலி.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசியத் தலைவர் குறித்த சிறிலங்காவின் பொய்ப் பிரச்சாரம்

தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து சிறிலங்கா அரசு பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரம் குறித்து தமிழ் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. சர்வதேசத்தையும் சிங்கள மக்களையும் ஏமாற்றும் நோக்குடனும் திட்டமிட்ட ரீதியிலும் பரப்பப்பட்டு வரும் இந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு பின்னால் பாரிய நோக்கங்களை சிறிலங்கா கொண்டிருக்கின்றது.

தலைவர் குறித்து வெளியிடப்படுகின்ற செய்திகள் உண்மையில்லை என்பதை ஏற்கனவே விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் செ.பத்மநாதன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, சிறிலங்கா பரப்புகின்ற பொய்பரப்புரைகள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை குழப்பமடைய வைத்து, புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டங்களை செயலிழக்கச் செய்யும் பாரிய திட்டமும் அடங்கியிருக்கின்றது என்பதை மறந்துவிட வேண்டாம்.

சிறிலங்காவினால் வெளியிடப்பட்டுள்ள அந்த ஒளிப்படக் காட்சியை சர்வதேச ஊடகமான AFP 'வரைகலைப் படம்' என்பதை பார்வையாளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்ற முன் அறிவித்தலுடன் காட்சியை (AFP காட்சியைப் பார்வையிட) ஒளிபரப்பியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விளைகின்றோம்.

அத்துடன், ஆரம்பத்தில் வரிச் சீருடையுடன் படங்களை வெளியிட்டிருந்த சிறிலங்கா, பின்னர் சேற்றுக்குள் கிடந்ததாகக் கூறி வெற்றுடம்பில் சேறுகளை பூசி படங்களை வெளியிட்டிருந்தது. ஆடையுடன் இருந்தவரின் உடம்பில் எவ்வாறு சேறு வந்தது என்ற அடிப்படைச் சிந்தனை கூட இன்றி சிறிலங்கா சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக வெளியிட்டிருக்கும் இவ்வாறான படங்கள் குறித்து தமிழ் மக்கள் எந்தவிதத்திலும் குழப்பமடையத் தேவையில்லை.

இதற்கு மேலும் அந்தப் படங்களில் உள்ள தவறுகளையும், ஏமாற்றுத் தனங்களையும் நீங்களே புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகின்றோம்

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

கனடா உலகத் தமிழர் அமைப்பு ஏன் உறுதிப் படுத்தாத செய்தியை வெளியிட்டது

நேற்று இரவு கனடாவில் (ரொரண்டோ) உலகத் தமிழர் அமைப்பானது தேசிய தலைவர் அவர்கள்19 ஆம் திகதி அன்று கொல்லப் பட்டு விட்டதாகவும் தாம் அதனை உறுதியாக தெரிவிப்பதாகவும் தம் உறுப்பினர்களுடன் இடம் பெற்ற விசேட கூட்டத்தில் அறிவித்துள்ளது. உ.த வின் ஒவ்வொரு உறுப்பினரும் இதனை பக்குவமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறும். தலைவர் இறந்ததை புலிகள் இன்று உத்தியோக பூர்வமாக செ.பத்மநாதன் மூலம் உலகிற்கு அறிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர். தாம் தலைவர் இறந்தையிட்டு சில பாடல்களை புதிதாக இயற்றி ஒலிப்பதிவு செய்ய கொடுத்துள்ளதாகவும் அதனை இன்று மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூட கூறியுள்ளனர்.

கனடா முழுதும் வாழும் தமிழ் மக்கள் இந்த செய்தியினால், மிக மிக குழப்பம் அடைந்தும், கதறிக் கொண்டும் சித்த பிரம்மை பிடித்தது போல் ஒவ்வொரு தமிழ் கடைகள் முன் குழுமி நின்று அழுது குழறுகின்றதை காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த அறிவிப்பினை சில தமிழ் வானொலிகளும் அறிவுத்துள்ளதாக கூறுகின்றனர் (நான் வானொலியில் இதனை கேட்கவில்லை).

உலகத் தமிழர் அமைப்பு ஏன் இவ்வாறு புலிகளால் உத்தியோக பூர்வமாக அறிவிக்காத ஒரு விடயத்தினை அறிவிக்க முனைந்தது? அதன் அறிவிப்பு வந்த பின் தான் தமிழ்நெட் தலைவர் இறக்கவில்லை என்றதை மீண்டும் உறுதிப் படுத்தி செய்தி சொல்லியுள்ளது. அவ்வாறெனில் உலகத் தமிழர் அமைப்பும் மக்களுக்கு இராணுவத்தின் செய்திகளை பரப்பிக் கொண்டு இருக்கின்றதா?

அணமைக் காலமாக உ.த அமைப்பின் பல செயல்பாடுகள் கடும் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றன என்று கனடா வாழ் தமிழ் மக்கள் கூறுகின்றனர்

:எனது இந்த பதிவுக்கான முழுப் பொறுப்பும் நிழலி யான நான் ஏற்றுக் கொள்கின்றேன்: நிழலி.

இதுதான் உ.த. நிழலி. அவர்கள் சொல்வதையும் யாரும் நம்புவார்களா???? வாயில் வருவதை இங்கு எழுத முடியாது.

உண்மையோ பொய்யோ வேற விஷயமா.... அனால் இப்படி மக்களிடையே விடுதலைபுலிகளால் அறிவிக்கப்படாத விடயங்களை வெளியிடுவது முற்றிலும் தவறானது. இந்த செய்தியை நேற்றும் ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். அவர் சொன்னார் உ. த தொண்டர்களுக்கு இப்படி ஒரு விஷயம் நேற்று அறிவிக்கப்பட்டதாக..... இது எப்படி யாரால் உருவாகப்பது..??? இதற்க்கு அந்த 'பொறுப்பாளர்' என்ற ஆக்கள்தான் பதில் அளிக்கவேனும் ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தச்செய்தி அறிந்து பலர் என்னுடன் தொடர்பு கொண்டு கேட்கின்றார்கள்.

எழுதவே முடியவில்லை?:rolleyes:((((((((((( மனப்பாரமா இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்செய்தி அறிந்து பலர் என்னுடன் தொடர்பு கொண்டு கேட்கின்றார்கள்.

எழுதவே முடியவில்லை?:rolleyes:((((((((((( மனப்பாரமா இருக்கு

பிரபாகரன் உயிருடன், பத்திரமாக உள்ளார்-புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புவெள்ளிக்கிழமை, மே 22, 2009, 17:49 [iST]

முல்லைத்தீவு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்திரமாக உள்ளார், உயிருடன் உள்ளார். ஆனால் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவமும், அரசும் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன என்று விடுதலைப் புலிகள் இயக்கம் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதால், பிரபாகரன் விவகாரத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தமிழ்நெட் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,

தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார்.

எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு உலகு எங்கும் பரந்து விரிந்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் ஆதரவுக் குரலை அடக்கி ஒடுக்கும் முகமாக இலங்கை அரசு, தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது.

உலக தமிழ் சமுதாயத்தினர் இந்த பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இன்று தமிழ்நெட் இணையதளத்திற்கு இந்தப் பேட்டியை அளித்துள்ளார் அறிவழகன். இலங்கையில் உள்ள தமிழ்நெட் இணையதள செய்தியாளரை ரகசிய இடத்திலிருந்து தொடர்பு கொண்டு இதைத் தெரிவித்துள்ளார் அறிவழகன். பாதுகாப்பு காரணங்களுக்காக தனது இருப்பிடத்தை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பல்வேறு புலிகள் ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர், செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இருப்பினும் விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த வார்த்தையும் இதுவரை இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ்நெட் செய்தி கூறியிருப்பது பிரபாகரன் விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.(thats tamil)

FROM TAMIL NET

LTTE leadership safe: Tiger intelligence official

[TamilNet, Friday, 22 May 2009, 09:49 GMT]

Head of International Secretariat of the Intelligence wing of the LTTE, Mr. Arivazhakan, who contacted TamilNet Friday categorically denied the reports that the LTTE leader Mr. Velupillai Pirapharan has been killed. Mr. Arivazhakan urged the global Tamil community not to trust the "engineered rumours," being spread by the Government of Sri Lanka and its military establishment.

"Our beloved leader is alive," he said and added that the LTTE leadership will make contact with its people at a suitable time in future.

"These rumours have been set afloat to confuse the global Tamil community which has been voicing support for the liberation of Tamil Eelam," he further said.

Mr. Arivazhakan, who verified his identity through a senior reporter in Sri Lanka, did not reveal his location due to security reasons.

Edited by BLUE BIRD

கனடா உலகத் தமிழர் அமைப்பு ஏன் உறுதிப் படுத்தாத செய்தியை வெளியிட்டது

நேற்று இரவு கனடாவில் (ரொரண்டோ) உலகத் தமிழர் அமைப்பானது தேசிய தலைவர் அவர்கள்19 ஆம் திகதி அன்று கொல்லப் பட்டு விட்டதாகவும் தாம் அதனை உறுதியாக தெரிவிப்பதாகவும் தம் உறுப்பினர்களுடன் இடம் பெற்ற விசேட கூட்டத்தில் அறிவித்துள்ளது. உ.த வின் ஒவ்வொரு உறுப்பினரும் இதனை பக்குவமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறும். தலைவர் இறந்ததை புலிகள் இன்று உத்தியோக பூர்வமாக செ.பத்மநாதன் மூலம் உலகிற்கு அறிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர். தாம் தலைவர் இறந்தையிட்டு சில பாடல்களை புதிதாக இயற்றி ஒலிப்பதிவு செய்ய கொடுத்துள்ளதாகவும் அதனை இன்று மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூட கூறியுள்ளனர்.

கனடா முழுதும் வாழும் தமிழ் மக்கள் இந்த செய்தியினால், மிக மிக குழப்பம் அடைந்தும், கதறிக் கொண்டும் சித்த பிரம்மை பிடித்தது போல் ஒவ்வொரு தமிழ் கடைகள் முன் குழுமி நின்று அழுது குழறுகின்றதை காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த அறிவிப்பினை சில தமிழ் வானொலிகளும் அறிவுத்துள்ளதாக கூறுகின்றனர் (நான் வானொலியில் இதனை கேட்கவில்லை).

உலகத் தமிழர் அமைப்பு ஏன் இவ்வாறு புலிகளால் உத்தியோக பூர்வமாக அறிவிக்காத ஒரு விடயத்தினை அறிவிக்க முனைந்தது? அதன் அறிவிப்பு வந்த பின் தான் தமிழ்நெட் தலைவர் இறக்கவில்லை என்றதை மீண்டும் உறுதிப் படுத்தி செய்தி சொல்லியுள்ளது. அவ்வாறெனில் உலகத் தமிழர் அமைப்பும் மக்களுக்கு இராணுவத்தின் செய்திகளை பரப்பிக் கொண்டு இருக்கின்றதா?

அணமைக் காலமாக உ.த அமைப்பின் பல செயல்பாடுகள் கடும் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றன என்று கனடா வாழ் தமிழ் மக்கள் கூறுகின்றனர்

:எனது இந்த பதிவுக்கான முழுப் பொறுப்பும் நிழலி யான நான் ஏற்றுக் கொள்கின்றேன்: நிழலி.

இதனை மையப்படுத்தி புலம் பெயர் தமிழர்கள் தான் இயங்கவேண்டும்.இப்போ இலங்கை பாசிச அரசின் அதனுடன் கூட்டு சேர்ந்தியங்கும் உலக நாடுகளும் விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்து விட்டார்கள்,(இது அவர்களின் வாதம்)காலத்தின் கட்டாயம் கருதி நாங்களும் அதனை ஏற்றுகொள்வதோடு அடுத்த நடவடிக்கைக்கு தயாராக வேண்டும்,அதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன.முதலாவதாக சகல நாட்டிலும் உள்ள அமைப்புகள் ஒன்று சேர்க்கபடுகின்றன.அதன் பின் ஒருதலைமையின் கீழ் மாபெரும் அணியாக தமிழர் இயங்குவார்கள்,முதற்கட்டம் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.ஆகவே அவர்களுடன் இணையுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்

கனடாவின் உலகத்தமிழரின் நடவடிக்கைகள் தற்போது மாற்றமடைந்து வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை.பலவிடயங்களில் மாணவர் சமுதாயத்தோடு முரண்டு வருகிறார்கள்.இன் நடவடிக்கை தொடர்ந்தால் தகுந்த பதிலடி கிடைக்கும்.எல்லோருக்கும் பதவி ஆசை தான்.

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.