Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்மனாதனின் அறிக்கை பற்றி தமிழ் நெட் கூறுவதைப் பாருங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்மனாதனின் அறிக்கை பற்றி தமிழ் நெட் கூறுவதைப் பாருங்கள்

Claims and scepticism sans evidence

[TamilNet, Monday, 25 May 2009, 00:53 GMT]

The head of the LTTE’s Department of International Relations on Sunday announced that the LTTE Leader Velupillai Pirapaharan attained martyrdom fighting the military oppression of the Sri Lankan state on 17 May. However, the LTTE’s Department for Diaspora Affairs (DDA) told TamilNet that it would not comment without explicit authorisation from the LTTE leadership. In the meantime, the Intelligence Department of the Tigers reiterated on Sunday that the LTTE leadership is safe and it will re-emerge when the right time comes.

Tamil Nadu leaders, Mr. Vaiko and Mr. Pazha Nedumaran have expressed scepticism Sunday on the reports of Mr. Pirapaharan's demise.

Meanwhile, the general opinion prevails is that Colombo has failed in conclusively establishing the evidence for Pirapaharan's demise. It has not taken any credible efforts to verify evidence either.

Failure in the responsibility of coming out with the truth also falls on the Indian Establishment. The Indian Intelligence has recorded all the details of LTTE leader's physiognomy when it has taken him into custody in mid-80's in India. It should have verified his death with evidence at least for its legal purposes. But observers think that India maybe having its own reasons for its silence.

Even 'omnipotent' powers of the information age have not come out with any authentic statement.

As TamilNet is being heavily pressed by its readership to know the truth, it has become a necessity to state that TamilNet doesn't take any responsibility for any of the stands taken, as these are beyond its independent verification.

புலம்பெயர் மக்களே அவதானமாக அறிக்கைகளை ஆய்வு செய்யுங்கள்

[பிரித்தானிய நேரம் : May 24th, 2009 at 21:12]

லங்கா தீபா என்ற சிங்களப் பத்திரிகையில் „காட்டிலிருந்து தப்பிய புலிகளை கட்டுப்படுத்தல்...'என்ற கட்டுரை வடிவிலான செய்தியை உலகத்தமிழ் செய்திகள் இணையத்தளம் 22.05.09 அன்று மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தது.

இவ்வாய்வுக் கட்டுரையின் கருத்து மையமாக லங்காதீபா பத்திரிகை புலம்பெயர் மக்களின் தமிழீழ விடுதலைக்கான எழுச்சியை தளர்நிலைக்கு கொண்டுவருவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் திரு.கே.பத்மநாதனை குறி வைத்து இலங்கை அரசு செயலாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இதனடிப்படையில் இன்று திரு.கே.பத்மநாதன் அவர்களால் வெளியிடப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவரின் மரணம் தொடர்பானதாக கூறப்பட்ட செய்தியாகும்.

ஒரு முக்கியமான விடயத்தை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் மனக் கிலேசமடையவோ அல்லது கலக்கமடையவோ தேவையில்லை. புலம்பெயர் தமிழர்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

தமிழர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்காக பல சதிகள் இடம்பெறுகின்றன. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உயிரோடு பாதுகாப்பாக இருக்கிறார்.அவரின் பாதுகாப்பான இடத்தை அறிய முயற்சிக்கும் நடவடிக்கைகளே இன்று வெளிவந்த அறிக்கை.

சர்வதேசத்திற்கு பொறுப்பாக ஒருவரை நியமித்து அவரின் அறிவித்தல்கள் மூலமாக தமிழர்களை முரண்பட வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் போரில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பிளவுபட வைப்பதன் நோக்கமாக இந்த அறிவித்தல்களை நோக்க வேண்டியள்ளது.

திரு.கே.பத்மநாதன் அவர்களால் வெளியிடப்பட்ட தகவலானது அவருக்கு அதற்கான நெருக்கடி ஏன் எந்தச் சூழ்நிலையைக் கொண்டது என்பதை மிகவும் தெளிவு பெற வேண்டும்.

சம்பந்தப்பட்ட அறிக்கை நிச்சயமாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்ட செயலாகும்.

சர்வதேச உளவு நிறுவனங்களின் முனைப்பான செயல்பபாடுகளுக்குள் சர்வதேசத் தொடர்பாளர் சிக்குண்டுள்ளார், அவர் அதற்குள்ளிருந்து தன்னை சுதாகரித்துக் கொண்டு இயல்பு நிலைக்கு வரச் சில நாட்களாகும்.

புலம்பெயர் தமிழர்களையும் சர்வதேசத் தொடர்பாளரையும் முரண்பட வைக்கக்கூடிய சூழ்நிலை தோன்றியுள்ளது. இந்த விடயத்தில் புலம்பெயர் மக்கள் கூரான கத்தியில் நடப்பது போன்றதே.

இன்னும் கொஞ்சம் இது பற்றி ஆய்வு நோக்கில் எழுதலாம்.ஆனால் அது பாதகமான நிலையை ஏறபடுத்தும் என்பதனால் சிலவற்றை தவிர்த்துக் கொள்கின்றேன்.

எனவே திரு.கே.பியின் கடிதத்தை கருத்தில் கொண்டு உங்களுக்குள் கலக்கத்தை ஏற்படுத்த வேண்டாம்.தமிழீழத் தேசியத்தலைவர் பாதுகாப்பாக உயிரோடு இருக்கின்றார்.இந்தக் கடிதத்திற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கின்றது.அந்தக் காரணத்தை இங்கே எழுத விரும்பவில்லை.நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.இக்கடிதம் ஒரு நிர்ப்பந்த நிலையாகக்கூட கருத இடமுண்டு.

இலங்கை ஜனாதிபதியை போர்க் குற்றவாளியாக்குகின்ற பாரிய நடவடிக்கையினை தடுக்கும் தடைகளில் ஒன்றாக இக்கடிதத்தைப் பார்க்க முடிகின்றது.

திரு.கே.பி அவர்கள் இனி ஜனநாயக ரீதியாகவே இப்போராட்டம் இடம்பெறும் என்று சொன்ன வாரத்தைப் பிரயோகத்தின் மூலம் அவரின் இக்கட்டான சூழ்நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

றோ,இன்ரர்போல்,சிஐஏ போன்றவற்றின் செயல்பாடுகள் எப்படியானவை என்பதை நீங்கள் அறிவீர்கள். திரு.கே.பி அவர்கள் இச்சூழ்நிலைக்குள் அகப்பட்டுக் கொண்டாரா என்ற கேள்வியைத் தவிர்க்க இயலாது.

புலம்பெயர் மக்கள் மத்தியில் தமிழீழ உணர்வைச் சிதைக்கும் திட்டமாவே இக்கடிதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் மீது பிரயோகிக்கும் இராஜதந்திர அழுத்தத்தைப் போன்றதொரு அழுத்தத்தை தமிழர்கள் மீது பிரயோகிக்கபபட்டு வருகின்றது. அதற்கான காரணம் தமிழர்களின் முனைப்பான வல்லமையேயாகும்.

வன்னிநிலப்பரப்பின் படுகொலை வெளிச்சத்திற்கு வருவதைத் தடுப்பதற்கும் தடைமுகாம்களில் 10,000 புலிப் போராளிகளிருப்பதாகக் கூறி இன்னும் 10,000 தமிழர்களை படுகொலை செய்ய அரசு எடுக்கும் நடவடிக்கையை தமிழர்கள் அவதானிக்க தவற வேண்டும் எனபது அரசின் திட்டமிடலாகும்.

எனவே தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பாக வெளிவந்த செய்தி ஒரு சதிச் செயல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

-அங்கயற்பிரியன்-

http://www.tamilseythi.com/tamileelam/kp_240509.html

ஆய்வு எழுதியே தமிழனை அகதியாக்கிவிடுவார்கள் போல கிடக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி நண்பரே,

தலைவர் பிரபாகரன் ஒரு செவ்வியில், "தமிழர்களின் பலகீனங்களில் ஒன்று, அவர்களுக்கு யாரையாவது பிடித்து விட்டால், அவரை தெய்வத்திற்கு சமமாக உயர்த்தி ஒரு பெரிய உருவகம் கொடுத்து விடுவார்கள். பிறகு அவர் மீதே எல்லா பொறுப்புகளையும் சுமத்தி விட்டு, தாங்கள் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். ஒவ்வொரு தமிழனும் தங்களின் பங்களிப்பை முழுமையாக செய்ய வேண்டும். நான் என்னுடைய பங்களிப்பை அளித்துக்கொண்டுள்ளேன். " என்று கூறியுள்ளார். அவர்தான் நம்மை சோதிப்பதாக எடுத்துகொள்ளுவோமே? நமது முழு பங்களிப்பையும் செலுத்த வேண்டிய நேரமல்லவா இது? ஆகவே, கதிர்காமம் முருகன் தன் பிள்ளையினை பார்த்துகொள்ளுவான் என்று அவன் மீது பாரத்தை போட்டுவிட்டு, நாம் நம் உச்ச கட்ட பங்களிப்பை செலுத்த வேண்டும்.

அன்புடன்,

சீனிவாசன் சென்னப்பன்.

விழ விழ எழுவோம்; ஒன்றாய் விழ ஒன்பதாய் எழுவோம்.

ஒன்றன் பின் ஒன்றாகாப் புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டன.கடைசி நிமிடம் வரை யாரோ காப்பற்றுவார்கள் என்னும் நம்பிக்கை தலமைக்கு ஊட்டப்படுள்ளது.மிகவும் நெருக்கமனாவர்களாலேயே இவ்வாறான அதீத நம்பிக்கை ஊட்டப்படுள்ளது.அத்தோடு கடந்த வருடம் தாய்லாந்தில் கேபி கைது செய்யப்பட்டார் என்று ஒரு செய்தி வந்தது.இரண்டு நாட்களின் பின் அவ்வாறக ஒன்றும் நடைபெறவில்லை என்று செய்தி வந்தது.பிரணாப் முகர்ஜி அன்று தாய்லாந்து சென்று இருந்தார்.இவை எல்லவற்றையும் சேர்த்துப்பாக்கையில் சர்வதேச ரீதியாக பெரிய சதி ஒன்று நடி பெற்றுள்ளதாகவே படுகிறது.

அய்யா,

தொடர்ந்து ஆராட்சிகளையும் , அறிக்கைகளையும் விட்டு தமிழினத்தை இன்னும் பாதாளத்துக்கு தள்ளிவிடாமலும், இன்னும் தமிழினத்தில் பிளவுகளை ஏற்படத்தாலும் இருப்பதென்றால் முதலில்இது சம்பந்தமான கருத்துக்களை பரவவிடவதைத் தவிர்த்து அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு எப்படி உதவலாம் என்பதைப்பற்றி ஆராட்சி செய்தால் அது பேருதவியாக இருக்கும்

ஒன்றன் பின் ஒன்றாகாப் புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டன.கடைசி நிமிடம் வரை யாரோ காப்பற்றுவார்கள் என்னும் நம்பிக்கை தலமைக்கு ஊட்டப்படுள்ளது.மிகவும் நெருக்கமனாவர்களாலேயே இவ்வாறான அதீத நம்பிக்கை ஊட்டப்படுள்ளது.அத்தோடு கடந்த வருடம் தாய்லாந்தில் கேபி கைது செய்யப்பட்டார் என்று ஒரு செய்தி வந்தது.இரண்டு நாட்களின் பின் அவ்வாறக ஒன்றும் நடைபெறவில்லை என்று செய்தி வந்தது.பிரணாப் முகர்ஜி அன்று தாய்லாந்து சென்று இருந்தார்.இவை எல்லவற்றையும் சேர்த்துப்பாக்கையில் சர்வதேச ரீதியாக பெரிய சதி ஒன்று நடி பெற்றுள்ளதாகவே படுகிறது.

நாரதர், நீங்கள்சொல்வதை பர்த்தால், இந்தியா கே.பி யை புடித்துவைத்துக்கொண்டு புலிகளை தாங்கள் விரும்பிய கோணத்தில் பின்வாங்கவைத்து. கடைசிவரை சண்டை நிக்குமெண்டு நம்பிக்கை கொடுத்து.. இருதியில் அழித்து.. இப்போது எமகு விடுதலைப்போருக்கு கே.பி யை தலைமையாக்கி, மீண்டும் எம்மை ஆட்டிப்படைபதே நோக்கமும் அதையே குறிவைய்த்து கடந்த இரண்டு வருடமாக சதி நடக்குது என்பதுபோல் உங்கள் போஸ்ட் இருக்கிறது..

தலைவரையும் முக்கிய உருப்பினர்களையும் குறைத்துமதிப்பிடவாண்டம்

இந்தப் பத்மனாதனின் இரு அறிக்கைகள் பற்றியும் அதன் பின்னான விளைவுகள் பற்றியும் இங்கு சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது, கடந்த 17 ஆம் தேதி சிங்களம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் ஆடிய கோரத் தாண்டவத்திற்கு ஒருநாள் முன்னதாக(16 ஆம் தேதி) இந்தப் பத்மனாதனின் அறிக்கையில் தான் தலைவருடன் 4 மணிநேரம் தொடர்ந்தும் தொடர்பில் இருந்ததாகவும், அவர் இன்னமும் மக்களுடன் சேர்ந்து வன்னியில் நிற்பதாகவும்,நலமுடன் இருப்பதாகவும் கூறியிருந்தார். ஒரு சதுரக் கிலோமீற்றருக்கும் குறைவான பகுதியொன்றில் மக்களும், போராளிகளும் முடக்கப்பட்ட நிலையில் இவரின் அறிக்கை தலைவரைச் சிங்களம் மிக இலகுவாகக் குறி வைக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து விட்டதோ என்று நான் சந்தேகிக்கிறேன். அதுவரையிலும் தலைவரின் இருப்பை அறியாது திணறிக்கொண்டிருந்த சிங்களத்துக்கு இவரே வழிகாட்டி விட்டதாக நான் நினைக்கிறேன். அதேபோல் சூசையின் கடைசிப் பேட்டியிலும் இவரிடம் தாம் தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்ததாகவும் சரியான பதில் வரவில்லை என்றும் கூறியிருந்தார்.

ரெண்டாவது, பி.பி.சி இற்கு இவர் வழங்கிய இன்றைய பேட்டியில் போராளிகள் மக்களுடன் மக்களாக கலந்து இருப்பதாக அடித்துக் கூறியிருக்கிறார். இவரின் பேட்டியைத் தொடர்ந்து சிங்களம் வெளியிட்டுள்ள அறிக்கையைப் பாருங்கள்."தடுப்பு முகாம்களிலுள்ள புலிகளைக் களையெடுத்த பின்னர்தான் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களுக்கு அங்கே பணியாற்ற இடம் தர முடியும் " என்று திட்ட வட்டமாக அறிவித்திருக்கிறது. இவரை யார் கேட்டார்கள் போராளிகளின் இருப்பைக் காட்டிக் கொடுக்க வேண்டுமென்று?

ஆகவே இந்த இரண்டு அறிக்கைகளுமே இவரின் நோக்கத்தை எடுத்துக் காட்டப் போதுமானவை. இவர் உண்மையிலேயே தான் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறாராஅல்லது எல்லாம் ஒரு திட்டத்துடந்தானா என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தம் என்று கதைச்சுக் கதைச்சே... தமிழன் தோற்றான். பிறகுமா.. அது அப்படி நடந்திருக்கும்.. இது இப்படி நடந்திருக்கும் என்று இறந்த காலத்தைப் பற்றி கதைச்சுக் கொண்டிருக்கிறீங்க.

அப்பவே சொன்னது.. சிறீலங்கா இராணுவத்தை 1998 நிலையில வைச்சு மதிப்பீடு செய்யக் கூடாது என்று. இறுதியில் என்ன ஆச்சு.. புலிகளும் தான் அளவு பிரமானமில்லாமல் ஒரு பெரிய தோற்றப்பாட்டைக் காட்டைப் போய்.. இந்த நிலை வந்திருக்குது.

எனிச் செய்ய வேண்டியதைப் பற்றிக் கதையுங்கோ.. முன் யோசனைகளை வையுங்கோ. எமது போராட்டம் வெல்லப்படவில்லை என்றால்... ஈழத்தில் தமிழனுக்கு விடிவில்லை என்பது மட்டும் நிஜம். இதை விட நாம் எதையும் நிதர்சனத்தில் பெரிதாக தரிசிக்கப் போவதில்லை.

இப்போ தேவை மக்களின் அவலங்களைப் போக்குவதும்.. மக்களின் உரிமைகளை வெல்வதற்குமான சரியான போராட்ட வழிமுறையும் அதை முன்னெடுத்துச் செல்வதற்கான வலுவூட்டலுமே..! அதைச் செய்ய முயலுங்கள். மீண்டும் மீண்டும்.. உங்கள் உங்கள் கற்பனைக்கு தோன்றுவதை எல்லாம் செய்தியாக்கி உங்களிடம் நல்ல கற்பனைத் திறமையுள்ளதாக பறைசாற்ற இது அல்ல நேரம்..! :(:icon_idea:

இப்போ தேவை மக்களின் அவலங்களைப் போக்குவதும்.. மக்களின் உரிமைகளை வெல்வதற்குமான சரியான போராட்ட வழிமுறையும் அதை முன்னெடுத்துச் செல்வதற்கான வலுவூட்டலுமே..! அதைச் செய்ய முயலுங்கள். மீண்டும் மீண்டும்.. உங்கள் உங்கள் கற்பனைக்கு தோன்றுவதை எல்லாம் செய்தியாக்கி உங்களிடம் நல்ல கற்பனைத் திறமையுள்ளதாக பறைசாற்ற இது அல்ல நேரம்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் பாருங்கோ......

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இருந்து மாணவர் குழாம் விடுக்கும் அவசர அறிவித்தல்

"மிதி வெடி கவனம்" என்ற அபாய எச்சரிக்கை தமிழீழ மக்களுக்கு 3 தசாப்த காலமாக எச்சரிக்கப்படுகின்றது. எவ்வளவு சவால்கள்இ எவ்வளவு சாபக்கேடுகள்இ தாண்டியும் எமது தமிழ் இனம் சரித்திரம் படைக்கின்றது. புது வரலாறு எழுதுகின்றது. இன்னும் இன்னும் எவ்வளவோ சரித்திரம் படைக்க இருக்கின்றது. இவை அனைத்தையும் பாரிய சவால்களுக்கு மத்தியிலேயே தாண்ட வேண்டிய கட்டாய கடமைப்பாடு தமிழனாகிய ஒவ்வொருவருக்கும் உண்டு.

இன்று வௌியான தலைவர் பற்றிய இந்த பரப்புரைச் செய்தியானதுஇ ஒரு திட்டமிட்ட சதிவலை. இதனுள் பத்மநாதன் (மு.P) எவ்வாறு விழுந்தார் என்பது பலரின் கேள்விக்குறி? .

நடந்தவை என்னவாக இருக்கும்?? ஆய்வு நடத்த நாம் ஆய்வாளர் இல்லை. ஆனாலும் காதுகளை எட்டிய நம்பதகுந்த செய்திகளின் படி இச் செய்தி நேற்றைய தினமே (23-05-2009) புவுஏ செய்தி சேவைக்கு எட்டியிருந்த போதிலும் அதனை உடனடியாக ஔிபரப்ப புவுஏ தயங்கியது. ஆனாலும் அவசர அவசரமாக கூடிய புவுஏ டீழயசன அச் செய்தியை இன்று ஔிபரப்புவதென முடிவுசெய்தது. அவ்வாறே ஔிபரப்பும் செய்திருந்தது. அது போலவே டீடீஊ தமிழ்ஓசையும் ஒலிபரப்பு செய்திருந்தது. கொதித்தது மக்கள் இரத்தம்இ ஆவேசம் பொங்கியது. ஆனாலும் இச் செய்தியை மறுத்து கருத்து வௌியிட்ட வை.கோபாலசாமிஇ பழ. நெடுமாறன் ஆகியோர் பத்மநாதனை தேச துரோகி என சாடியுள்ளனர். அதே வேளை இன்று மாலை மறுப்பு தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தலைவர் உயிருடனும் நலமுடனும் இருப்பதை உறுதி செய்தார்.

ஒன்றன் பின் ஒன்றாகாப் புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டன.கடைசி நிமிடம் வரை யாரோ காப்பற்றுவார்கள் என்னும் நம்பிக்கை தலமைக்கு ஊட்டப்படுள்ளது.மிகவும் நெருக்கமனாவர்களாலேயே இவ்வாறான அதீத நம்பிக்கை ஊட்டப்படுள்ளது.அத்தோடு கடந்த வருடம் தாய்லாந்தில் கேபி கைது செய்யப்பட்டார் என்று ஒரு செய்தி வந்தது.இரண்டு நாட்களின் பின் அவ்வாறக ஒன்றும் நடைபெறவில்லை என்று செய்தி வந்தது.பிரணாப் முகர்ஜி அன்று தாய்லாந்து சென்று இருந்தார்.இவை எல்லவற்றையும் சேர்த்துப்பாக்கையில் சர்வதேச ரீதியாக பெரிய சதி ஒன்று நடி பெற்றுள்ளதாகவே படுகிறது.

ஏற்கனவே நீங்கள் செய்த இராணுவ ஆய்வுகள் நல்ல பலனை தந்தன. இந்த இக்கட்டான கால கட்டத்திலாவது கொஞ்சம் அடை காக்கப் பழகுங்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில வாரங்களுக்குமுன் வி.புலிகளின் வெளிவிவகாரத் தொடர்பாளர் என்று கூறிக்கொண்டு கே.பியிடமிருந்து முதன்முதலாக அறிக்கைகள் வெளிவரத் தொடங்கியபோது என்னை நானே கேட்ட கேள்வி சர்வதேச மட்டத்தில் தேடப்படும் ஒரு நபரை வி.புலிகள் இப்பொறுப்புக்கு தேர்ந்தெடுத்தது எப்படி சாத்தியமாகும் என்பதுதான். வெளிவிவகாரத் தொடர்பாளர் என்ற பொறுப்பில் உள்ள ஒருவர் தலைமறைவாக வாழ்ந்து கொண்டு இந்தப் பணியைத் தடையின்றி செய்வது சாத்தியமில்லாத ஒன்று. ஒரு தருணத்தில் வி.புலிகளுக்கும் ஐரோப்பிய பிரதிநிதிகளுக்குமிடையில் தொடர்பை ஏற்படுத்த கே.பி யை தேடிக் கண்டுபிடித்து மேல்மட்டத்துக்கு கொண்டுவந்தது நோர்வேயின் எரிக் சூல்கைம். அப்படியானால் இது சர்வதேச சதி என்பது அம்பலமாகிறது.

இதுபோக சில நாட்களுக்கு முன்பாக சர்வதேச புலனாய்வுப் பிரிவின் தலைவர் என்று கூறிக்கொண்டு ஒருவர் சில செய்திகளைச் சொல்ல வந்தார். எனக்குத் தெரிய இவ்வாறு ஒரு பிரிவை வி.புலிகள் கொண்டிருந்ததாக தமிழ்மக்களுக்கு அவர்கள் என்றுமே கூறியது இல்லை. அப்படியிருந்தாலும் இக்காலகட்டத்தில் அதை வெளிப்படையாக தெரியவைப்பது எவ்வளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அறிவழகன் என்று கூறிக்கொள்ளும் அந்த நபருக்கு தெரியாதிருந்தால் அவர் அதன் தலைவராக கூறிக்கொள்ளவே தகுதியற்றவர். இவர் தன்னைத் தானே வெளிப்படுத்திக்கொண்டதிலும் பார்க்க ஒரு சிறந்த வெளிநாட்டுத் தொடர்பாளரைத்தான் தேடிக் கண்டுபிடித்து நியமித்திருக்கவேண்டும்.

வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவு என்று சொல்லும்போது பல சர்வதேச நாடுகள் தமிழர் விவகாரத்தை தமது நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்படுத்தி நோக்கும் ஒரு புதிய அணுகுமுறையை வெளிநாடுகளில் தோற்றுவிக்கும். இதுவரை பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்று கூறிக்கொண்டு சிங்கள அரசு உள்நாட்டில் தமிழரினஇ போராட்டத்தை நசுக்கி அவர்களை துவம்சம் செய்தது போக இப்போது உலக அரங்கில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அமைதிப் போராட்டங்களை சர்வதேச நாடுகளின் பாதுகாப்புக்கு குந்தகமான நடவடிக்கைகளாக கருதப்பட்டு அடக்கப்படவேண்டும் என்ற சதிவேலை பின்னப்பட்டு வருகிறது.

இந்த நிலையிலிருந்து மீள்வதற்குள்ள ஒரே வழி வி.புலிகளின் சர்வதேச தொடர்பாளர் பொறுப்புக்கு கே.பியை விடுத்து வேறு ஒரு நபரை நியமிப்பதுதான் தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வாக இருக்கமுடியும். அதற்கு உலக அரங்கில் இன்று எம்மத்தியில் வாழும் பொறுப்புள்ள தன்னம்பிக்கையுள்ள சுயலாபம் கருதாத - நன்கு படித்த - அரசியலறிவுள்ள - இவற்றிற்கு மேல் தாய்நாட்டையும் தலைவனையும் நேசிக்கும் தமிழர்கள் உடனடியாக முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Wast your energy here.

Sinhalam do their work

Everyone has to work to bring Rajepaksha regime to The war crime

http://puthinam.com/full.php?2b1VoUe0decYo...d434OO3a030Mt3e

  • கருத்துக்கள உறவுகள்

குழம்பிய குட்டையில் யாரோ மீன் பிடிக்க முயல்வது தெரிகிறது.விடுதலைக்கான போராட்டம் நிலத்திலும் புலத்திலும் எந்தத் தடங்கலுமில்லாமல் தொடரட்டும்.தாயக மக்களை ஆயுத முனையில் அடக்கியாச்சு இனி புலம்பெயர் மக்களை குழப்பி அவர்களின் தொடர்ச்சியான போராட்டஙகளை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும்.அதற்கு வழி புலிகளின் நம்பிக்கையைப் பெற்ற சர்வதேசப் பொறுப்பாளர் மூலமாக அறிக்கை விடுவதே தமிழ் மக்களைக் குழப்பும். வேறு எந்த விதத்திலும் தமிழ்மக்களை குழப்ப முடியாது.தலைவர் தொடர்பான சிறிலங்கா அரசின் பிரச்சாரங்கள் தமிழ்மக்களிடம் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லையோ அதே போல் இந்த அறிக்கையையும் தமிழ் மக்கள் பெரிதாக எடுக்கவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.அறிக்கையில் குறிப்பிட்டபடி யாரும் துக்கவாரம் அனுட்டிப்பதாகத் தெரியவில்லை.30 வருட தியாகமும் தீரமும் நிறைந்த விடுதலைப் போராட்டத்தைச் சிறுபிள்ளைத்தனமாக கொச்சைப் படுத்தி முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளை விடுவது எந்த விதத்திலும் போராட்டத்திற்கு உதவப் போவதில்லை.எங்கோ எதுவோ திரை மறைவில் நடப்பதாகவே எல்லோருக்கும் படுகிறது.சிலர் சொல்வது போல சர்வதேச காய் நகர்த்தலுக்காக செய்வதாக இருந்தாலும் சிறிலங்கா அரசு சொன்ன போதே மௌனமாக இருந்திருக்கலாம்.

ஒன்றன் பின் ஒன்றாகாப் புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டன.கடைசி நிமிடம் வரை யாரோ காப்பற்றுவார்கள் என்னும் நம்பிக்கை தலமைக்கு ஊட்டப்படுள்ளது.மிகவும் நெருக்கமனாவர்களாலேயே இவ்வாறான அதீத நம்பிக்கை ஊட்டப்படுள்ளது.அத்தோடு கடந்த வருடம் தாய்லாந்தில் கேபி கைது செய்யப்பட்டார் என்று ஒரு செய்தி வந்தது.இரண்டு நாட்களின் பின் அவ்வாறக ஒன்றும் நடைபெறவில்லை என்று செய்தி வந்தது.பிரணாப் முகர்ஜி அன்று தாய்லாந்து சென்று இருந்தார்.இவை எல்லவற்றையும் சேர்த்துப்பாக்கையில் சர்வதேச ரீதியாக பெரிய சதி ஒன்று நடி பெற்றுள்ளதாகவே படுகிறது.

அப்படியாயின் ஏன் புலிகளின் தலைமை, கே.பி.யை சர்வதேச தொடர்பாளராக நியமித்தது? அவரை நியமித்த வேளையில் இத்தகைய கேள்விகளை கேட்டிருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

-1- செல்வராசா பத்மநாதனின் பிரித்தானியா Channel4 இற்கான நேர்காணலின் ஒலிவடிவத்தை கவனமாக கேட்டால் தெரியும் அவர் சொல்வது (அல்லது சொல்ல முனைவது) தலைவருடன் 4 மணத்தியாலங்களாக கதைத்தாக அல்ல மாறாக (அந்த channel4 நேர்காணலிற்கு) 4 மணத்தியாலங்களிற்கு முன்னர் கதைத்தாகவே. 4 மணத்தியாலங்களாக கதைத்து என்ற விளக்கத்தை அந்த நேர்காணலை எழுத்து வடிவில் வெளியிட்டவர்கள் தான் கொடுத்திருக்கிறார்கள். தமிழர்கள் விபரங்களில் கவனம் செலுத்துவதில்லை என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

-2- 2004 இல் சமாதான காலத்தில் எந்தவித போர் நெருக்கடி அழுத்தங்கள் மன உழைச்சல்கள் இல்லாத காலத்தில் பல்வேறு பட்ட வழிகளில் வன்னிக்கும் வெளியுலகிற்கும் தொடர்ப்புகள் பேணப்பட்டபோதே பல்வேறு பட்ட கட்டமைப்புகள் சமாந்தரமாக தடைகள் இன்றி நல்ல வசதி வாய்ப்புகளளோடு இயங்கியபோதே தேசத்தின் குரல் பாலசிங்கம் போன்றவர்கள் வெளிநாட்டில் இருந்த போதே தமிழரை வெற்றிகரமாக குழப்பி கருணா பிளவு உருவாக்கப்பட்டது. 2001 பின்னர் புலிகளின் பலம் அதில் தமிழருக்கு இருந்த நம்பிக்கை என்று மொத்தத்தில் 2004 காலம் என்பது எதிரியைப் பொறுத்தவரை தமிழரிற்குள் பிளவை உருவாக்குவதற்கு மிகவும் சவாலான காலம். அன்றே எதிரியால் முடியும் என்றால் இன்று தமிழரை குழப்புவதும் பிளவுபடுத்துவதும் பெரிய விடையம் இல்லை. அந்த வகையில் இது வெறும் ஆரம்பம் தான்.

-3- சர்வதேசத்தைப் பொறுத்தவரை தமிழரிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இயங்காது. இலங்கைத்தீவில் சமாதானம் உருவாகி இயல்பு நிலை வரவேண்டும் என்பது தான் தேவை. இதை போரில் வெற்றி ஈட்டியவர்களின் நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப செய்வார்கள். சிறீலங்கா செய்த மனிதஉரிமை மீறல்களிற்கு ஒரு அடையாள தண்டனையாகுதல் கொடுத்து ஏனைய நாடுகளிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற ஒரு நோக்கம் இருந்தாலும் (இதைக் கூட முன்னணி நாடுகள் தமது நலனிற்கு சாதகமாக்க முடியும் என்றால் தான் கையில் எடுப்பார்கள்) அதை எதிர்கொள்ள சிறீலங்கா பலத்த ஏற்பாடுகளோடு இருக்கிறது. அவற்றை எல்லாம் தாண்டி தோற்றாலும் அது அதிகப்பட்சம் மகிந்தவின் குடும்ப அரசியல்லாகத்தான் இருக்குமே அன்றி சிங்களமோ சிறீலங்காவே அல்ல.

-4- சிங்களத்தைப் பொறுத்தவரை கணிசமான விலையை (தமது உயிர்கள் உடமைகள், கடன்கள் பட்டுத்தான்) தமிழரின் ஆயுதப்போராட்டத்தை நசுக்கினார்கள். அதன் உச்சப் பயனை அடையாது அவர்கள் விடப்போவதில்லை. அதற்கு அப்பால் அவர்கள் எதிர்காலத்தில் இப்படி ஒரு கிளர்ச்சிக்கு ஒரு சிறு சந்தர்ப்பத்தையும் வழங்க முடியாதவாறுதான் மிகுதி விடையங்களை நடத்தி முடிப்பார்கள். எனவே தமிழ் இன அழிப்பின் இறுதி அத்தியாயம் இனித்தான் ஆரம்பிக்கப் போகிறது.

-5- உணர்ச்சிப் பெருக்கின் உச்சத்தில் துரோகிப்பட்டம் கொடுப்பது கவிதைகள் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவது போல் கொள்கைகள் வகுக்கலாம் திட்டங்கள் போடலாம் காலத்திற்கு ஏற்ப (தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல்) உறுதிமொழியும் எடுக்கலாம். ஆனால் அமுல்படுத்துவதற்கு பல்வேறு பட்ட துறைசார் அனுபவம், அறிவு உட்பட்ட மனித மற்றும் பொருளாதார வளங்கள் தேவை. பிரகடனப்படுத்தும் கொள்கைகள் குறிக்கோள்கள் அதை அடைவதற்கான திட்டங்களிற்கு தேவையான வளங்கள் என்ன அவை சார்பில் இன்றைய நிலை என்பதையும் முன்மொழிவது தான் கடினமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊடகங்களின் உளறல்களும், பக்கசார்பான பதற்றங்களும் - இராஜவர்மன்.

தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறார். இருக்க வேண்டும். போராட்டத்தைக் கொண்டு நடத்த வேண்டும் என்ற அவா ஒவ்வொரு தமிழனின் மனதிலும் நிரந்தரமானதாகப் பதிந்ததோடு, பிரார்த்தனையாகவும் அமைந்துவிட்டது. அதுவே எனது பிரார்த்தனையும் கூட. ஆனால் உண்மை அதற்கு மாறுபட்டதாக துரதிஸ்டவசமாக அமைந்துவிட்டால் அதனை அவர் நியமித்த பிரதிநிதியே அறிவிக்கும் போது அதனை நேர்மையாக மக்களிடம் எடுத்துச் செல்வதில் என்ன தயக்கமிருக்கிறது என்பதே எங்களது தற்போதைய கேள்விக்குறி.

தமிழீழத் தேசியத் தலைவரால், தமிழர்களின் தலைமையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட, அதிகாரபூர்வமுள்ள ஒரு தொடர்பாக தற்போது புலம்பெயர் தமிழர்களிற்கு உள்ளவர் திரு. கே.பி. பத்மாநதன். அவ்வாறான ஒருவரின் அறிக்கையின் மீது சேறுபூசுகின்ற அல்லது விமர்சனத்திற்கு உட்படுத்துகின்ற செயலானது எள்ளளவும் பொருத்தமற்றதொன்று என்பதைவிட பத்திரிகா தர்மத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் ஒரு படுபாதகச் செயல் என்பதை நாங்கள் ஏனோ இலகுவாக மறந்து விடுகிறோம்.

தேசியத்தலைவரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒருவரை அவருடைய வார்த்தைகளை உதாசீனப்படுத்துவது என்பது எங்களின் விருப்பு. ஆனால் ஒரு மாபெரும் வீர மரணத்தின் மீது களங்கம் ஏற்படுத்துவது என்பது நாங்கள் இவ்வளவு நாளும் விரும்பியேற்ற தொண்டுக்கு நாங்களே செய்யும் ஒரு வரலாற்றுப் பழி.

ஆகமொத்தம் தமிழீழத் தேசியத்தலைவரின் உத்தியோகபூர்வ நியமனத்தைப் புறந்தள்ளி எதிரிகள் வகுத்த வியூக வலைக்குள் ஒட்டுமொத்த தமிழினத்தையும் தள்ளிச் சிதைக்கும் பணியை நாங்களே செவ்வனே முன்னெடுக்கிறோம்.

ஜெயசிக்குறு உச்சச் சமர் காலகட்டத்தில் கிளிநொச்சி இராணுவ முகாமிற்கும் முறிகண்டியின் வடக்குப் புறமாக இராணுவம் நிலை கொண்டிருந்த இடத்திற்குமிடையே எஞ்சியிருந்த தூரம் வெறும் நான்கு கிலோ மீற்றர்களே…அத் தருணத்தில் போரின் போக்கையே மாற்றத் தேவையான முழுத் தேவைகளையும் செவ்வனே பூர்த்தி செய்யும் செயலை மாத்திரமல்ல கனரக ஆயுதப் பாவனைக்கான விநியோகத்தையும் அதிநவீன ஆயுதங்களையும் களத்திற்கு விநியோகம் செய்தவர் என்று பாராட்டப்பட்டவரை நாங்கள் ஏன் விவாதிக்க வேண்டும்?

34 வருடங்களாக தேசியத் தலைவர் சொன்னவற்றை செய்து கொண்டேயிருக்கும் ஒரு வயதான போராளி என்றுமே மேடைப்பேச்சிற்குப் பழக்கப்பட்டவருமல்ல அல்லது சிலாகித்துச் பேசுதல் அவரது துறையுமல்ல. உள்ளதை உள்ளபடி மக்களிற்கு கூற முற்படுவதை நாங்கள் கிரகிப்பதில் தான் தவறிருக்கிறதே தவிர அவரிடம் எந்தத் தவறையும் நான் காணவில்லை.

வரலாற்றின் முக்கியமான சில சந்தர்ப்பங்களின் சிலர் தங்கள் நேர்மைத்தன்மையை பரிதாபரமாக இழந்து வீண்பழிக்கு ஆளாவதுண்டு. இன்று அவ்வாறான ஒரு துர்ப்பக்கிய நிலைக்கு சில தமிழ்த் தேசியம் சார் ஊடகங்கள் உள்ளாவது மிகவும் ஆபத்தானதொரு நிலைக்கு புலம்பெயர் சமூகத்தையும் தமிழ்த் தேசியத்தையும் இட்டுச் செல்லுவதோடு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரமரணத்தின் மீது சேறு பூசும் கைங்கரியத்தையும் கச்சிதமே செய்து வருகின்றன.

தேசியத் தலைவர் இருந்தால் அவர் தனது இருப்பை நிச்சயம் உறுதி செய்திருப்பார். இது நவீன தொழில்நுட்பக் காலம் ஒரு நிமிட நொடியில் எங்குமே தொடர்பு கொள்ளக் கூடிய வகையிலேயே விடுதலைப்புலிகள், அவர்கள் தலைமை இருந்தார்கள். அவ்வாறானதொரு தொடர்புப் பேணலில் அவர்கள் இருந்தார்கள். எனவே தமிழீழத் தேசியத் தலைவர் இருந்திருந்தால் அவர்கள் அது நிச்சயமாக உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று நம்புவதில் எள்ளளவும் தவறில்லை. ஆனால் அவரின் இறப்பு உண்மையாக இருந்தால் அதற்கான அஞ்சலியைச் செலுத்துவதிலிருந்து மக்களை திசை திருப்புகின்ற, எதிரிகளால் கூடச் செய்ய முடியாத ஒரு துரோகத்தை எமக்குள்ள விடுதலையின் விருப்பின் பேரால் செய்வதென்பது எங்கள் தூக்கத்தை நாங்களே தொலைத்து நிம்மதியற்று உழலும் ஒரு நிலைக்கு, ஒரு பாவ நிலைக்கு எங்களை இட்டு செல்லவே உதவும்.

ஊதியத்திற்கு வேலை செய்யும் கூட்டம் தங்களின் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து எடுத்துச் செல்ல தங்களால் இயன்றவற்றைச் செய்து கொண்டேயிருக்கும். ஆனால் தொண்டு ரீதியில் செயற்பட்ட பத்திரிகா தர்மத்;தைக் கடைப்பிடிக்கும் நாங்களுமா பலியாக வேண்டும்.

இன்று நாங்கள் இழக்க முற்படும் நம்பகத்தன்மையை மீளக் கட்டியெழுப்புவதென்பது மிகவும் சிரமம். அதைவிட தேவையற்ற விதத்தில் செய்திகளின் மீது சத்திரசிகிச்சைகளை செய்ய முனைவது கருணா கூடச் செய்யாத ஒரு மாபெரும் துரோகமாக மாறிவிட்டால் என்ன மகிந்தாவையா ஆதரிக்கப் போகிறோம்? அல்லது ஆனந்தசங்கரியையை முன்பக்கச் செய்தியில் இருத்தப் போகிறோம்?

நாங்கள் மறக்காதிருக்க வேண்டிய ஒரேயொரு விடயம்… வரலாற்றின் முக்கியமான சில சந்தர்ப்பங்களின் சிலர் தங்கள் நேர்மைத்தன்மையை பரிதாபரமாக இழந்து வீண்பழிக்கு ஆளாவதுண்டு. இன்று அவ்வாறான ஒரு துர்ப்பக்கிய நிலைக்கு சில தமிழ்த் தேசியம் சார் ஊடகங்கள் உள்ளாவது மிகவும் ஆபத்தானதொரு நிலைக்கு புலம்பெயர் சமூகத்தையும் தமிழ்த் தேசியத்தையும் இட்டுச் செல்லுவதோடு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரமரணத்தின் மீது சேறு பூசும் கைங்கரியத்தையும் கச்சிதமே செய்து வருகின்றன.

ஏங்களது நிலைப்பாடு பிழையாக இருந்தால் மன்னிப்புக் கேட்டுவிட்டு நாங்கள் மீண்டும் எங்கள் தொடரலாம் என்று நாங்கள் நினைக்கலாம். ஆனால் தேவையில்லாம் ஒரு நிலைப்பாடு எடுக்கும் நிலைக்கு நாங்கள் சென்றதை அதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் தராமல் விடலாம். நாங்கள் தூக்கி வீசப்படலாம். ஏனெனில் நாங்கள் இங்கே புறக்கணிப்பது யதார்த்தத்தை.

மக்களிற்கு உண்மைகளை மறைத்து அவர்களை யதார்த்த்திலிருந்து புறந்தள்ளி வைத்து "ஆய்வாளர்கள்" என்ற போர்வையிலும் "ஊடகங்கள்" என்ற போர்வையிலும் மீண்டும் மீண்டும் மக்களை யதார்த்திலிருந்து புறந்தள்ளி அவர்களை ஒரு மாயவலைக்குள் வைத்திருந்து தாங்கள் தங்களை நலன்களை பாதுகாக்கும் கைங்கரியத்தை செய்வார்கள். ஆனால் யதார்த்த்தை மக்களிற்கு மறைத்து மீண்டும் மீண்டும் அவர்களை மாயையில் வைத்திருக்க விரும்புபவர்களிற்கு நாங்கள் துணை போகக்கூடாது. உண்மையை உள்ளபடி ஏற்கப்பழகும் மனப்பக்குவத்தை பெற்றால் மாத்திரமே நாங்கள் கொண்ட கொள்கையில் வெற்றி பெற முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

1- செல்வராசா பத்மநாதனின் பிரித்தானியா Channel4 இற்கான நேர்காணலின் ஒலிவடிவத்தை கவனமாக கேட்டால் தெரியும் அவர் சொல்வது (அல்லது சொல்ல முனைவது) தலைவருடன் 4 மணத்தியாலங்களாக கதைத்தாக அல்ல மாறாக (அந்த channel4 நேர்காணலிற்கு) 4 மணத்தியாலங்களிற்கு முன்னர் கதைத்தாகவே. 4 மணத்தியாலங்களாக கதைத்து என்ற விளக்கத்தை அந்த நேர்காணலை எழுத்து வடிவில் வெளியிட்டவர்கள் தான் கொடுத்திருக்கிறார்கள். தமிழர்கள் விபரங்களில் கவனம் செலுத்துவதில்லை என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

:icon_idea:

Before four hours at 3:47

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

கனடா கீதவாணி றேடியோகாரன் தொடர்ந்து பத்மநாதனின் செய்தியை ஒளிபரப்பு செய்கிறார்கள்.

அதை தடுக்க கனடாமக்கள் ஒருவரும் தொடர்பு கொள்ளவில்லையா?

கீதவாணீ றேடியோக்காரன் அண்மையில் மகிந்த கூட்டிய புலம்பெயர் எட்டப்பர் கூட்டத்தில் பங்கு பற்றியவர்.

படங்கள் ஆதாரத்துடன் வந்துள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரையும் துரோகி என்று ஒதுக்கி இப்போ தமிழனுக்கு குரல் கொடுக்க ஒருத்தரும் இல்லை. வெளிநாட்எலை செகுசாக இருந்து கெண்டு சும்மா கதைக்காதேங்கோ. உங்கடை மனவாட்சியை தொட்டு பாருங்கோ.. நீங்கள் எல்லாம் அந்த பாவப்பட்ட மக்களுக்கு என்ன செயஜது கொண்டு இருக்கிஙீந்கள் எண்டு..

தலைவாரால் நியமித்த ஒருவரின் அறிவிப்பை ஏற்க மறுக்கும் நீங்கள் எல்லாம்.... வருகுpது வாயிலை..

சும்மா போய் அவரவர் வேலையை பாருங்கோ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீதவாணீ றேடியோக்காரன் அண்மையில் மகிந்த கூட்டிய புலம்பெயர் எட்டப்பர் கூட்டத்தில் பங்கு பற்றியவர்.

படங்கள் ஆதாரத்துடன் வந்துள்ளன.

ஆதாரத்தை இங்கு போடுங்கள்.

தலைவாரால் நியமித்த ஒருவரின் அறிவிப்பை ஏற்க மறுக்கும் நீங்கள் எல்லாம்.... வருகுpது வாயிலை..

கருணாவும் தலைவரால் நியமிக்கப்பட்ட தளபதிதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாவும் தலைவரால் நியமிக்கப்பட்ட தளபதிதான்.

எல்லாரையும் துரோகி என்று ஒதுக்கி இப்போ தமிழனுக்கு குரல் கொடுக்க ஒருத்தரும் இல்லை. வெளிநாட்எலை செகுசாக இருந்து கெண்டு சும்மா கதைக்காதேங்கோ. உங்கடை மனவாட்சியை தொட்டு பாருங்கோ.. நீங்கள் எல்லாம் அந்த பாவப்பட்ட மக்களுக்கு என்ன செயஜது கொண்டு இருக்கிஙீந்கள் எண்டு..

தலைவாரால் நியமித்த ஒருவரின் அறிவிப்பை ஏற்க மறுக்கும் நீங்கள் எல்லாம்.... வருகுpது வாயிலை..

சும்மா போய் அவரவர் வேலையை பாருங்கோ....

தலைவர் இருக்கிறார் என்று தொடர்ந்து சொல்வதன் மூலம் தான் பலருக்கு நிதி சேகரிப்பு, அது இது வென்று காலத்தினையும் வாழ்க்கையையும் ஓட்ட முடியும். அதனால் தான் போலும் தலைவராலேயே நியமிக்கப் பட்டு, தலைவராலேயே இறுதி வரை தொடர்புகளை மேற்கொண்ட ஒருவர் மீது எந்தவிதமான ஒரு ஆதாரமும் இன்றி துரோகி என பட்டம் சுமத்துகின்றனர். இவற்றை பார்க்கும் மனசாட்சியுள்ள எவரும் இனி வாழ்க்கையில் தமிழ் மக்கள் விடுதலை தொடர்பாக எந்த விதமான ஒரு செயலையும் செய்ய முன்வரமாட்டார்கள். இன்று தலைவரால் நியமிக்கப் பட்ட ஒருவரையே ஆதாரமின்றி துரோகியென பட்டம் சுமத்தும் இவர்கள் நாளை எவரைத் தான் மிச்சம் வைக்க போகின்றனர்?

இறுதி வரைக்கும் எதிரியுடன் போராடி, இறுதி மூச்சு வரை தமிழ் மக்கள் விடுதலை மீது தன் உயிரையே வைத்து, தான் மட்டும் தப்பி ஓடாமல் மக்களோடு பிரிய மனமின்றி இறுதி வரை இருந்த மாபெரும் தலைவனுக்கு ஆகக் குறைந்த கண்ணீர் அஞ்சலியினை கூட செய்ய விடாமல் குழப்பி அடிப்பது மிக கேவலமானதும் வேதனையானதுமான செயல்.

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.