Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுத போராட்டம் இன்று முடிவிற்கு வந்துவிட்டதை புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் -- மனோ கணேசன் எம்பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத போராட்டம் இன்று முடிவிற்கு வந்துவிட்டதை புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் -- மனோ கணேசன் எம்பி :

2143Mano%20Ganeshan%20J.jpg

புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்துவிட்டது. இந்த உண்மையை புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். புலம் பெயர்ந்துள்ளவர்களின் போராட்டங்கள் தமிழினத்தின் பிரச்சினைகளை இன்று உலகறிய செய்திருப்பது உண்மை. ஆனால் தாய்நாட்டிலே வாழ்கின்ற தமிழ் மக்களின் வரலாற்றுக் கேள்விகளுக்கு புலிகளின் ஆயுதப்போராட்டமும், அதைச்சார்ந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் கவனஈர்ப்பு போராட்டங்களும் விடைகளை கொண்டுவரவில்லை என்ற கசப்பான உண்மை புரிந்துக்கொள்ளப்படவேண்டும

எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

அவர்கள்தான் இந்த நிஜவுலகில் வாழ்வதில்லையே?

நிஜத்தை பார்க்க, கேட்க, அறிய அவர்கள் விரும்புதில்லை!

பின்னர் எப்படி அவர்களால் புரிந்து கொள்ள முடியும்?

உண்மையை சொன்ன உங்களுக்கு விரைவில் அவர்கள் வழங்கும் பட்டம் மட்டும் நிச்சயம்!

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

அவர்கள்தான் இந்த நிஜவுலகில் வாழ்வதில்லையே?

நிஜத்தை பார்க்க, கேட்க, அறிய அவர்கள் விரும்புதில்லை!

பின்னர் எப்படி அவர்களால் புரிந்து கொள்ள முடியும்?

உண்மையை சொன்ன உங்களுக்கு விரைவில் அவர்கள் வழங்கும் பட்டம் மட்டும் நிச்சயம்!

அதுவும் சரிதான்..! பிரச்சினை என்னெண்டால் நீங்கள் ஆகலும் முந்தி.. புலம்பெயர் தமிழர் ரொம்பப் பிந்தி, ஏற்றுக்கொண்டதில‌..! :lol:

இதைப் பற்றி கருத்துச் சொல்ல இவர் யார் ???????????????????????

ஆயுத போராட்டம் "இன்று" முடிவிற்கு வந்துவிட்டதை புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் :lol: :lol: :lol:

நேற்று இன்று வேறு நாளைதான் யாவருக்கும் முக்கியம் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பற்றி கருத்துச் சொல்ல இவர் யார் ???????????????????????

இவரும் ஒரு தமிழர்தானே..! கருத்துச் சொல்லும் உரிமை தற்போதைய நிலையில் இவருக்கு இல்லையா?

இபோது இப்படிச் சொல்வார்கள், ஆனால் மீண்டும் புலிகள் பலம் பெற்றால் ஓடிச் சென்று தலைவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வார்கள். அந்தக் கூத்தைத் தான் 2002இல் பார்த்தோமே. ஆறுமுகன்,சந்திரசேகரன் (தலைவர் பல இமலய இராணுவ வெற்றிகளின் பின் போர் நிறுத்தம் செய்ய அவரின் முன் நின்று கொண்டே கருநாய் நிதியை தலைவர் என்றவன்), ரவூப் கக்கீம் :lol: :lol: :lol: :lol: :lol: .

இவர் சொல்வதும் நியாயம் தானே...

புலம்பெயர் தமிழர்கள் உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்...இன்னொரு ஆயுத போராட்டம் ஈழத்தில் சாத்தியமா????????

உண்மையை சொன்ன உங்களுக்கு விரைவில் அவர்கள் வழங்கும் பட்டம் மட்டும் நிச்சயம்!

உண்மையை சொல்ல போனால் போராட்டம் எக்கெடு கெட்டு போனாலும் நானும் எனது குடும்பமும் நிம்மதியா இருந்தால் போதும் என்டு வெளிநாட்டுக்கு வந்து விட்டு...இங்கிருந்துகொண்டு புலிகள் விடக்கூடாது அடிக்கோனும் புடுங்க வேணும் என்டு துள்ளின ஆக்கள் தான் அந்த பட்டத்துக்கு மிக பொறுத்தமானவர்கள்

எமது ஆயுதப் போராட்டத்தினைப் பற்றிக் கதைப்பதற்கு இவருக்கு அருகதை இல்லை.

ஒரு மாவீரனின் தாய் சொல்லட்டும்... நான் தலைவணங்குகின்றேன்

Edited by பருத்தியன்

  • கருத்துக்கள உறவுகள்

இபோது இப்படிச் சொல்வார்கள், ஆனால் மீண்டும் புலிகள் பலம் பெற்றால் ஓடிச் சென்று தலைவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வார்கள். அந்தக் கூத்தைத் தான் 2002இல் பார்த்தோமே. ஆறுமுகன்,சந்திரசேகரன் (தலைவர் பல இமலய இராணுவ வெற்றிகளின் பின் போர் நிறுத்தம் செய்ய அவரின் முன் நின்று கொண்டே கருநாய் நிதியை தலைவர் என்றவன்), ரவூப் கக்கீம் :lol: :lol: :lol: :lol: :lol: .

சிவப்பு எழுத்துக்களில் எழுதப்பட்ட அரசியல்வாதிகளுடன் மனோ கணேசனை ஒப்பிடாதீர்கள் . தனக்கு பல ஆபத்துக்கள் இருந்தபோதும் , வடக்கு , கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விட அவர் எமக்காக பல தடவைகள் குரல் கொடுத்துள்ளார் .

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை விட ஆயுதப்போராட்டம் மூலம் இறுதித் தீர்வு என்பது முடிவுக்க வந்து விட்டது என்பது பொருத்தமாக இருக்கும்். எதிர்காலங்களை பற்றி இப்போது எதிர்வு கூற முடியாது. நிகழ்காலம் இந்தக் கூற்றுக்கு ஏற்புடையது. இந்திய இராணுவத்தின் நெருக்கடி மிகுந்த கால கட்டத்தையும் ஜெயசிக்குறுய் போன்ற காலகட்டத்தையும் ஆயுதப்போர் கடந்தது வந்தது. இதற்கு காரணம் நெருக்கடியான காலகட்டத்தில் எல்லாம் மக்கள் பால் ஆயுதப்போராட்டம் சார்ந்திருந்தது. இன்று ஒட்டுமொத்த மக்களும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே நிலைபெறக் கூடிய பிரதேசங்கள் இருக்கின்றது ஆனால் மக்கள் துணை இன்றி நிலை பெற முடியாது. இது குறித்து முனனர் எழுதிய ஒரு ஆக்கத்தில் எழுதியிருந்தேன்.

http://www.yarl.com/forum3/index.php?showt...71&hl=sukan

நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது எமக்கெல்லோருக்கும் தமிழீழம் பெரும் விருப்பமாக உள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்கள் யாழ் குடாநாட்டில் வாழ்பவர்கள் தென்னிலங்கையில் வாழ்பவர்கள் கிழக்கில் வாழ்பவர்கள் அனைவரும் சுதந்திரமாகவே வாழ விரும்புகின்றனர். ஆனால் இவர்கள் அனைவரின் பெரு விருப்புக்காகவும் வன்னி வாழ் மக்கள் முடிந்தவரை சக்தி உள்ள வரை போராடிப்பார்த்தனர். வன்னிப் பெருநிலப்பரப்பில் பெரும்பான்மை இளைய சமூதாயமே இன்று தொலைந்து விட்டது. இதை விட ஒரு தியாகத்தை செய்ய முடியாது. மிஞ்சியது உயிருள்ள உடல்களும் அதன் மேல் ஆடைகளும். இழப்பதற்கு அது இரண்டையும் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. தமிழீழம் தமிழீழ மக்கள் அனைவரும் தமிழீழத்தில் இருந்து போராடும் போதே சாத்தியமாகும் என்பதை புரிந்து கொள்ளுதல் அவசியமானது.

ராஜபக்சவின் ஆட்சி ஆரம்பமான காலத்தில் யாழில் வெகுசனப்போராட்டங்கள் தன்னெழுச்சி கொண்டது. மாணவர் போராட்டங்கள் எழுச்சி கொண்டது. குறுகிய காலத்தில் இதே நிலை தலைகீழாக மாறியது. அரச இயந்திரம் அவ்வாறு முடுக்கி விடப்பட்டது. யாழை கைப்பற்றும் பெரும் திட்டங்கள் மக்களால் முறியடிக்கப்பட்டது. மிகச் சிரமப்பட்டு உள் நகர்த்திய தளபாடங்கள் மக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டது. போராளிகளின் அசைவுகள் முடக்கப்பட்டது. இதே ஒரு நிலைக்கு நாளை வன்னி மக்கள் நிச்சயம் தள்ளப்படுவார்கள். மக்களோடு சேர்ந்தியங்கும் போராட்டமே இலக்கு நோக்கி நகரும். மக்களில் இருந்து விலகி போராட்டம் எதுவும் இல்லை. இன்று மக்கள் போராட்டத்தில் இருந்து விலத்தப்பட்டது மட்டுமன்றி அதற்கான எண்ணத்தில் இருந்தும் விலக்கப்படுகின்றனர்.

அரசியல் ரீதியாக எமது உரிமைக்காக போராடுவது குறித்தம் பல்லின தேசிய இனங்களுடன் இணைந்து வாழ்வதன் ஊடாக எமது தனித்துவத்தை பேணுவது குறித்தும் புதிய கதவுகள் திறக்கப்பட வேண்டும். இதை நான் சொல்வது துரோகம் என்றால் நடேசன் மற்றும் புலித்தேவன் போன்ற அரசியல் தலைவர்கள் சரணைடைந்ததுக்கும் இறுதி நேரத்தில் ஆயுதங்களை மெளனிக்கப் போவதாகவும் அரசியல் ரீதியில் தொடரப்போவதாகவும் புலிகள் அறிவித்ததுக்கு அர்த்தம் இருக்காது. ஆயுதப்போரட்டம் மூலம் தீர்வையும் நம்பிக்கையையும் வைத்திருப்பது அவரவர் உரிமை ஆனால் அவ்வாறான உரிமை கொண்டாட வேண்டுமானால் தாயகம் சென்று ஆயுதத்தை கையில் எடுங்கள். உரிமைக்கு உண்மையாக இருங்கள். அரசியல் ரீதியான போராட்டங்களின் திசையை காட்டியபடியே புலிகள் தமது இறுதிக்கணத்தை அமைத்தனர். அதை தொடருங்கள். இல்லை என்று முரண்டு பிடித்தால் யார் என்ன செய்ய முடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

அவர்கள்தான் இந்த நிஜவுலகில் வாழ்வதில்லையே?

நிஜத்தை பார்க்க, கேட்க, அறிய அவர்கள் விரும்புதில்லை!

பின்னர் எப்படி அவர்களால் புரிந்து கொள்ள முடியும்?

உண்மையை சொன்ன உங்களுக்கு விரைவில் அவர்கள் வழங்கும் பட்டம் மட்டும் நிச்சயம்!

உண்மையாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கூட்டமைப்பு,மனோகனேசன் போன்றவரை ஏற்றுக்கொள்ளலாம் , டக்கிளஸ்,கருனா, ஆனந்த சங்கரி போன்ற,துரோகிகளை ஏற்றுக்கொள்ளலாமா? :lol::lol::lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்நிலையில் நமது மக்களின் அகதிவாழ்க்கை தொடர்பிலான கேள்விகளுக்கு விடைகளை தேடுவதிலும், அரசியல் தீர்வு தொடர்பில் நிலவுகின்ற கேள்விகளுக்கு விடைகளை தேடுவதிலும் சமாந்தர போக்கை கடைபிடிக்கவேண்டியது அனைத்து தமிழ் அரசியல் சக்திகளின் வரலாற்று கடமையாகும். இந்த இரட்டை நோங்கங்களை அடைவதற்கு நாம் இலங்கை மண்ணில் இருந்தப்படி ஜனநாயக ரீதியாக செயற்படுகின்றோம். தாய் நாட்டிலே வாழும் மக்களின் மத்தியில் இருந்து செயற்படும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு துணை சக்தியாக மாத்திரமே புலம் பெயர்ந்த தமிழர்களின் எதிர்கால நடவடிக்கைகள் அமையவேண்டும். இதை புலம் பெயர்ந்த தமிழ் முன்னோடிகள் புரிந்துக்கொள்ளவேண்டும்.

இவருடைய கருத்தில் ஓரளவுக்கு உண்மையிருக்கிறது தானே

எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

அவர்கள்தான் இந்த நிஜவுலகில் வாழ்வதில்லையே?

நிஜத்தை பார்க்க, கேட்க, அறிய அவர்கள் விரும்புதில்லை!

பின்னர் எப்படி அவர்களால் புரிந்து கொள்ள முடியும்?

உண்மையை சொன்ன உங்களுக்கு விரைவில் அவர்கள் வழங்கும் பட்டம் மட்டும் நிச்சயம்!

நிஜத்தை தாங்கள் மட்டும் அறிஞ்சு வைச்சு இருக்கிறதாய் பீத்தி கொள்ள வேண்டாம்...

இதே மனோ கணேசன் ஐயா கொமும்பில் காணாமல் போதல், பணம் பறித்தல், கடத்தப்பட்டு கொல்ல படுதல் எல்லாவற்றுக்கும் எதிராக கவன ஈர்புக்களை செய்த போது தலையை கக்கூசுக்கை வச்சு இருந்தவை, இராணுவம் வா எண்டு கூப்பிட்ட உடனை, வன்னி சனத்தை வாங்கோ வந்து இராணுவ கட்டுப்பாட்டுக்கை காணாமல் போங்கோ எண்டும்.. புலிகள் தமிழ் மக்களை காணாமல் போகடிக்க இராணுவ கட்டுப்பாட்டுக்கை விட வேணும் எண்டு கொழும்பிலை இருந்து வீர அறிக்கை விட்டவையும் இருக்கினம்...

இப்படி சிங்களவனுக்கு நக்கிறவை எல்லாம் புலம்பெயந்தவைக்கு அறிவுரை சொல்ல வெளிக்கிட்டினம் எண்டது மட்டும் நிஜ உலகிலை இருக்கு எண்டதை புரியாமலா இருக்கிறம் ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'தயா' Good answer

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே தீர்மானித்துவிட்டீர்களா?

அப்படியென்றால் எமது மக்கள் அழியும்போது இனிப்பு பண்டங்கள் பரிமாறி, பட்டாசு கொழுத்தி மகிழ்ந்த மக்களுக்கு தண்டனை கொடுப்பது யார்?என்னய்யா? என்னய்யா சொல்ல வாறீங்க?

காலங்கள் எப்போதும் ஒரேமாதியில்லை அதேமாதிரித்தான் போராட்டமும், புரிந்துகொண்டால் சரி.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைக்கான தீர்வாக நடத்தி வந்த ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதை புலம்பெயர் தமிழர்கள் உணர்ந்துவிட்டனர் ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் புலம்பெயர் உறவுகள் இன்னமும் உறுதியாகவே உள்ளனர், வெளி நாடு வந்துவிட்டோம் எமக்கு எந்த பிரச்சனையுமில்லை என்று விட்டேத்தியாக இராமல் இந்த அரசியல் வாதிகளை விட தம் மக்களின் உயிர்காக்க தம்முயிர் நீத்த புலம் பெயர் உறவுகள் எவ்வளவோ மேல்.

நாம் இன்று எதிர்பார்பது எமது போராட்டத்திற்கு ஆயுதப்போராட்டத்திற்கு மாற்றீடான செயற்திறன் மிக்க திட்டங்களே அதற்கான பதில்களை கூற வேண்டிய கடப்பாடுடையவர்கள் அதனைப்பற்றி பேசாதிருப்பது தற்போதைய தமிழ் தலைமைகளின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அகிம்சைப்போராட்டமாக ஈழப்போராட்டம் முன்பு இருந்தது. அதன்பிறகு ஆயூதப்போராட்டமாக மாறியது. போராளிகளின், வன்னி மக்களின் தியாகத்தினால் இப்போராட்டம் சர்வதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இப்பொழுது புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்கள் இப்போராட்டத்தை இன்னும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நாங்கள் சோர்ந்து விடாமல் தொடர்ந்து கவனயீர்ப்புக்கள், புதிய வழிகள் மூலம் சர்வதேசத்தை எமது பக்கம் இழுக்க செயல் பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டம் என்பது போராட்டம் மட்டுமே

அதனை ஆயுதபோராட்டம், அமைதிப்போராட்டம் அரசியல் போராட்டம் என்று வகைப்படுத்தலிலும் வடிவப்படுத்தலிலும் உடன்பாடு இல்லை

எல்லாப்போராட்டத்திற்கும் மூலகாரணம் ஒன்றே

ஆயுதப்போராட்டத்தினால் துன்பத்தை அனுபவித்தவர்கள் அரசியல் போராட்டத்தினால் அனுபவிக்க மாட்டார்கள் என்பது நிச்சயமில்லை

அரசியல் போராட்டத்தின்போது வெள்ளை வான்களை உற்பத்தி செய்யக்கூடிய கம்பெனிக்கு இலாபம் அதிகரிக்கும்

போராட்டத்தை போராட்டமாகவே எடுக்காது தரம்பிரித்தல் போராட்டத்தின் கூர்முனையை மழுங்கச்செய்யும்

புலம்பெயர் தமிழர்கள், கற்றுக்கொள்ளவேண்டியது ஒன்றே - போராட்டத்தை தரம்பிரிக்கக்கூடாது

Edited by Voyager

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.