Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழா உனக்கு மானம் இருந்தால் இதை பார்!

Featured Replies

தன்மானம் உள்ள தமிழராய் செய்து காட்டுவோம்!

மெகா சீரியல்களை மறந்திடுவோம். நம் உறவுகளின் வலிகளை ஒருதடவை நினைத்திடுவோம்.

விடிவெள்ளி, பருத்தியன் உங்கள் கருத்து நியாயமானதே வரவேற்கிறேன்!

அனால் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் எத்தனை பேர் இந்த மெகா சீரியல்களை மறந்திடுவார்கள்? பலருக்கு அது தான் சாப்பாடு கூட... அப்படி போன்றோர் இருக்கும்போது இந்த முயற்சியில் உடனே வெற்றி காண முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.

ஒரு யோசனை... அந்தப் பாலப் போன மெகா சீரியல்களை முன்கூட்டியே பிரதிகள் எடுத்து இலவசமாக கொஞ்சக் நாட்களுக்கு (அல்லது மிக மிகக் குறைந்தவிலையில்) விற்பனை செய்து மக்கள் மாதாந்த சந்தா கடுவைதைக் குறைத்துக்கொள்ள முடியுமல்லவா? எனது கருத்து பிழையாக இருப்பின் மனிக்கவும்.

சில தினகளுக்கு முன்பு, ஒரு தமிழ் லண்டன் வானொலியில் விளம்பரம் ஒன்று கேட்டேன்... லண்டனில் சினிமா அரங்கில் வெளிவரும் ஒரு தமிழ் சினிமாவுக்கான விளம்பரம்... மக்களை ஆர்பாட்டத்திக்கு வரவழைக்கும் ஒரு தமிழ் வானொலி தான் இந்த சினிமா விளம்பரமும் அறிவித்தது (அனுமதி: 15 வயதிக்கு மேற்பட்டவர்கள் என்று)... எப்படி மக்கள் ஆர்பாடத்திக்குப் போவார்கள்?? கவலைக்குரிய விடையம்.

  • கருத்துக்கள உறவுகள்

தன் மானத்தமிழனாய் என்றோ புறக்கணித்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

27490350.png

தமிழா உனக்கு மானம் இருந்தால் இதை பார்!

விடிவெள்ளி , சிறு திருத்தம்

சன் TV கருணாநிதியின் மகனின் தொலைக்காட்சி அல்ல , அது மருமகனின் தொலைக்காட்சி .

உண்மையில் இந்த தொலைக்காட்சிகள் எல்லாம் ஈழத்தமிழருக்கு எதிரான செயல்பாட்டையே கொண்டிருக்கின்றன .

ஜெயா தொலைக்காட்சியில் கூட 20,000 மக்கள் இறந்ததை பற்றி கூறியதாக அறிந்தேன் .

மேற் கூறிய தொல்லைக் காட்சிகளுக்கு இன்னும் இந்தச் செய்தி கிடைக்கவில்லைப் போலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

27490350.png

தமிழா உனக்கு மானம் இருந்தால் இதை பார்!

ஈழ உறவுகளே,

தமிழக தமிழன் இன உணர்விழந்து, மரக்கட்டையாய் மாறி வெகு நாளாகிறது. தமிழின தலைவர் என்று நம்மை எல்லாம் ஏமாற்றிய கிழ நரி அதற்கான ஏற்பாடுகளை வெகு தந்திரமாகவும், சாமர்த்தியமாகவும் நடத்தி விட்டது. ஏனெனில் இவர் இளைய வயதில் இருந்தது போன்று துடிப்பாக இன்றிய தமிழன் இருந்தால், தனது பதவி, சொத்து, சுகம் எல்லாம் அம்போ என்ற எண்ணத்தில்தான்.

1. ஜெயலலிதாவின் காலத்தில் மது கடைகள் எல்லாம் அரசுடைமையாக்கப்பட்டன. தமிழின தலைவர் வந்தால் அதை மாற்றுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அவரோ அதை மேலும் லாபகரமாக்கி, நிலையானதாக செய்து விட்டார்.

2. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை வாங்கி, இலவச தொலைகாட்சியில் ஆட்டமும், பாட்டமும் பார்த்துக்கொண்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டிஸ்கவரி சனல் மற்றும் காட்டூன் தவிர்ந்த வேறு எந்த தொலைக்காட்சிகளும் வீட்டில் பார்ப்பதில்லை

சில நாட்களாக தாயகச் செய்திகள் பார்த்துக் கண்ணீர் வடித்த நமது புலம்பெயர்ந்த சமுதாயம் தன்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு மறுபடி இந்திய சின்னத்திரையைப் பார்த்துக் கண்ணீர் விடத் தொடங்கிவிட்டது. இதற்கு மாற்றீடாக எதையாவது உருவாக்கினாலன்றி விமோசனமே கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை இல்லாது ஒழிக்க வேண்டுமாயின் அதை இரண்டு விதமாக செய்யலாம்.

முதலாவது அதற்கு வேண்டப்படாததை செய்வது.

அல்லது வேண்டியதை செய்யாமல் விடுவது

உதாரணமாக ஒரு மரத்தை அழிப்பதற்கு

ஒன்றில் அதன் வேருக்கு சுடு நீர் ஊற்றலாம்.

அல்லது அதற்கு தண்ணீரை ஊற்றாமல் விடலாம்

அதாவது பிரச்சினையும் தீர்வும் எமது கையிலே.

  • கருத்துக்கள உறவுகள்

வணங்கா முடி ........நல்ல கருத்து........பாராடுக்கள.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பு தப்பு

தமிழா! உனக்கு மானம் இருந்தால் இதைப்பார்க்காதே கலைஞர்,கே.டி(கேடி) தொ.கா, சன் தொலை.கா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேக்கு மானம் இல்ல :lol:

தொலைகாட்சி பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டது. யாழ் இணையத்தளத்தில் தான் கூடுதலான நேரம், போகிறது... மற்றப்படி ibc வானொலி கேட்பேன், அதுவும் இப்போ under construction... :lol:

Edited by குட்டி

உதை புறக்கணிச்சுப்போட்டு மானாட மயிலாட எங்கபோயாம் பார்க்கிறது

உதை புறக்கணிச்சுப்போட்டு மானாட மயிலாட எங்கபோயாம் பார்க்கிறது

மானாட மயிலாட என்று போட்டு மனுசர் தானே ஆடுதுகள்...

உதுகள் எல்லாத்தையும் புறக்கனிச்சுப் போட்டு, ஈழம் கிடைக்க எமது கடமையை முதலில் செய்வோம், அதன் பின்பு ஈழக் காடுகளிலும் வீடுகளிலும் உண்மையாக ஆடும் மானையும் மயிலையும் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானாட மயிலாட என்று போட்டு மனுசர் தானே ஆடுதுகள்...

உதுகள் எல்லாத்தையும் புறக்கனிச்சுப் போட்டு, ஈழம் கிடைக்க எமது கடமையை முதலில் செய்வோம், அதன் பின்பு ஈழக் காடுகளிலும் வீடுகளிலும் உண்மையாக ஆடும் மானையும் மயிலையும் பார்க்கலாம்.

யார் எங்கட சனமா?

மான் மரை என்று பிரட்டல் வைத்து விடுங்களே தவிர ஆட வைத்தெல்லாம் பொறுமையா இருந்து பார்க்கிராதாவது?!! :D

மயில்ல பிரட்டல் வைக்காதுகள் என்று ஒரு நம்பிக்கை....ஆனால் சூப் வைத்து குடிக்கலாம்...சொல்ல ஏலாது! :)

யார் எங்கட சனமா?

மான் மரை என்று பிரட்டல் வைத்து விடுங்களே தவிர ஆட வைத்தெல்லாம் பொறுமையா இருந்து பார்க்கிராதாவது?!! :icon_idea:

மயில்ல பிரட்டல் வைக்காதுகள் என்று ஒரு நம்பிக்கை....ஆனால் சூப் வைத்து குடிக்கலாம்...சொல்ல ஏலாது! :D

ம்ம்ம்... :) சொல்லேலாது

  • கருத்துக்கள உறவுகள்

தன்மான உணர்வென்பதும், ஆக்கிமிப்புக்கு, அத்துமீறலுக்கு எதிரான உணர்வென்பதும் சொல்லி வருவதல்ல.

அதாவது ஒரு எடுத்தக்காட்டிற்காக.... " கனகரும் பொன்னரும் அயல்வீட்டினர். நண்பர்களும் கூட. அது ஒரு மழைக்காலம். அயல்வீட்டு நண்பரான கனகர் வேலியடைத்துக் கொண்டிருக்கின்றார். எதேச்சையாக ஒரு கதியால் சற்றுத் தள்ளிப் பொன்னரின் வளவுக்குள் வந்துவிட்டது. பொன்னரின் கை அவரையறியாமலே முற்றத்தில் ஓரமாகக் கிடந்த கோடாரியை பற்றுகிறது. சற்று நேரத்தில் கனகரின் வேலி சாய்ந்து கிடக்கிறது. கேள்விப்பட்ட கந்தசாமி விதானையார் ஓடிவந்து மிதியுந்தை நிறுத்தும் ஓசை கேட்கிறது......... " இப்படி ஒரு மான ரோச உணர்வு அது நன்பனாயினும் அத்துமீறலை அனுமதிக்காத நிலை............ . இந்தக் மானாட மயிலாடவில எங்களுக்கு வருமா?

தயவுசெய்து கோடரியைத் தேடவேண்டாம். அது உங்களின் காணொளிப் பெட்டியைச் சாய்த்து விடலாம். தொலைபேசியால் இணைப்பு வேண்டாம் என்று நிறுத்திவிடலாம்.

நாம் இந்த யாழில இவை பற்றி எழுதி குத்தி முறியுறது தான் ஒழிய வேறு ஒரு கோதாரியும் நடப்பதில்லை... என்னிடம் சில கேள்விகள்

1. புறக்கணி சிறீ லங்கா என்பதை ஏன் முக்கிய தமிழ் தேசிய ஊடகங்கள் முக்கிய விடயமாக கருதி அதற்கேற்றாப் போல் கருத்துகளை வெளியிடுவதில்லை. புதினம், தமிழ்நெட் போன்றவையும் புலம் பெயர் வானொலிகள், தொலைக்காட்சிகள் இது சார்பாக எந்தளவு செயற்படுகின்றனர்?

2. இதே போல் தான் தமிழக தொல்லைக் காட்சிகளை புறக்கணி எனும் விடயமும்... கனத்த மெளனம் தான் எம் தமிழ் தேசிய ஊடகங்களில் நிலவுகின்றது. அது ஏன்?

3. இத்தனை வருடத்தில் எமக்கான இசை, எமக்கான சினிமா என்று ஏன் எம்மால் ஈடுபட முடியுது இல்லை. எமக்கான இலக்கிய படைப்புகள் நிறைய இருக்கு. ஆனால் ஏன் கலைப் படைப்புகள் இல்லை?

4, இவை பற்றி எழுதுகிற நான் உட்பட எத்தனை பேர் மக்களை காயடிக்க வைக்கும் இந்திய / தமிழக சினிமாவை பார்க்காமல் விடப் போகின்றோம்? (எப்ப கந்தசாமி திருட்டு சி டி யில் ரிலீஸ்?)

:நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களை கருத்தியல் ரீதியாக மாற்றி இவற்றை புறக்கணிக்க வைக்கமுடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. ஒரு ஈழத்தமிழனான எனக்கு தெரியாதா எங்களின் சீத்துவம் எப்படி என..?

ஆனால் மேற்குறித்த தொலைக்காட்சிகள் விரட்டியடிக்கப்பட வேண்டியவைதான். தொழில்நுட்பத்தில் கார்ட் செயாரிங் என ஒரு நுட்பம் இருக்கிறது. இதனை ஒரு உள்சுற்று பரப்புரையில் இறங்கி தொடருங்கள். கார்ட் வாங்காமலேயே இந்த தொலைக்காட்சிகளை பார்க்கலாம் என மக்களை உசுப்பேத்தி - மக்களை கார்ட் வாங்கவிடாமல் செய்யுங்கள்.

பிறகு தொலைக்காட்சிகள் தாங்களாகவே மூட்டையைகட்டும்.

மற்றும்படி மக்களுக்கு எடுத்துசொல்லி அவர்கள் புறக்கணிப்பார்கள் எனில்..

ஐயாம் வெரி சாரி..

ஈழத்தமிழனா கொக்கா..

  • கருத்துக்கள உறவுகள்

. தொழில்நுட்பத்தில் கார்ட் செயாரிங் என ஒரு நுட்பம் இருக்கிறது. இதனை ஒரு உள்சுற்று பரப்புரையில் இறங்கி தொடருங்கள். கார்ட் வாங்காமலேயே இந்த தொலைக்காட்சிகளை பார்க்கலாம் என மக்களை உசுப்பேத்தி - மக்களை கார்ட் வாங்கவிடாமல் செய்யுங்கள்.

i can help card sharing techniques if any one want know larn mail me srilankakilltamill@googlemail.com

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை கருத்தியல் ரீதியாக மாற்றி இவற்றை புறக்கணிக்க வைக்கமுடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. ஒரு ஈழத்தமிழனான எனக்கு தெரியாதா எங்களின் சீத்துவம் எப்படி என..?

ஆனால் மேற்குறித்த தொலைக்காட்சிகள் விரட்டியடிக்கப்பட வேண்டியவைதான். தொழில்நுட்பத்தில் கார்ட் செயாரிங் என ஒரு நுட்பம் இருக்கிறது. இதனை ஒரு உள்சுற்று பரப்புரையில் இறங்கி தொடருங்கள். கார்ட் வாங்காமலேயே இந்த தொலைக்காட்சிகளை பார்க்கலாம் என மக்களை உசுப்பேத்தி - மக்களை கார்ட் வாங்கவிடாமல் செய்யுங்கள்.

பிறகு தொலைக்காட்சிகள் தாங்களாகவே மூட்டையைகட்டும்.

மற்றும்படி மக்களுக்கு எடுத்துசொல்லி அவர்கள் புறக்கணிப்பார்கள் எனில்..

ஐயாம் வெரி சாரி..

ஈழத்தமிழனா கொக்கா..

காவடியாரே ...... கார்ட் செயாரிங் முறையை உள் சுற்றில் விடுறது தானெ , பிறகேன் அதை பொத்தி வைச்சிருக்கிறியள் .

ஆனால் கவனம் உள் சுற்றிலும் ஒட்டுக்குழு பூந்திடும் .

பிற்குறிப்பு : நான் ஈழத்தமிழன் ஓசி என்றால் பொலிடோலும் குடிப்பேன் , சிங்கள பேப்பரும் வாசிப்பேன் . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு பிரச்சனையுமில்லை. யாழில அதை பற்றி தனியாகவும் எழுதமுடியும். ஆனா எழுதி முடிசஇசு ஒரு 3 நிமிசம் கூட விடாமல் மோகன் கத்தியால வெட்டினா கடுப்பாயிடுவனெல்லோ..

கார்ட் செயரிங் எண்டறது ஒரு கள்ள வேலையும் இல்லை. ஒரு ஜம்பது அறுவது பேருக்கு ஒரு கார்ட்.. என்றளவில...

எல்லோருடைய ரிசீவரும் இணையத்தால இணைக்கப்பட்டிருக்கும். அதெல்லாம் ஒரு மெயினிடத்தில இணைஞ்சிருக்கும். அந்த மெயின் இடத்தில சகல தொலைக்காட்சிக்குமான ஒரிஜினல் கார்டடுகள் இருக்கும். உங்கட ரிசீவர் என்ன செய்யும் என்டால் இணையத்துக்கால ஓடிப்போய் அந்த மெயின் இடத்தில இருக்கிற கார்ட்டை ரீட் பண்ணிட்டு ஓடிவந்து சற்றலைட்டில இருந்த வாற சிக்னலுக்கு சொல்லும்.. ஓமோம் இவர் கார்ட் வைச்சிருக்கிறார். ஆள் பிரச்சனையில்லை.. சவுண்டை விடு. அல்லது வீடீயோ சவுண்ட் ரண்டையும் விடு எண்டு. பாவம் சற்றலைட் சிக்னலார் ஏமாந்து விட்டுடுவார். இதுதான் கார்ட் செயாரிங்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு பிரச்சனையுமில்லை. யாழில அதை பற்றி தனியாகவும் எழுதமுடியும். ஆனா எழுதி முடிசஇசு ஒரு 3 நிமிசம் கூட விடாமல் மோகன் கத்தியால வெட்டினா கடுப்பாயிடுவனெல்லோ..

-------

-------

மோகன் அண்ணா , இப்போ பந்து உங்கடை பக்கம் .

இதனால் வரும் நன்மை , தீமைகளை .......... ஆற , அமர யோசித்து உங்கள் முடிவை சொல்லுங்கள் .

காவடிக்கு , கத்தியால வெட்டி கடுப்பேத்தாதேங்கோ . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கார்ட் செயரிங் எண்டறது ஒரு கள்ள வேலையும் இல்லை. ஒரு ஜம்பது அறுவது பேருக்கு ஒரு கார்ட்.. என்றளவில...

கண்ணுக்கை தூசுவிழுந்து உறுத்துதெண்டு மிளகாய் வெட்டின கையாலை கண்ணை கசக்கிக்கொண்ட மாதிரி இருக்கு இந்த யோசனை.

விதிகளையும் சட்டங்களையும் மீறி செயல்படுவதால் தமிழனின் துன்பம் ஒருபோதும் தீராது.

அதுபோக காவடியாரின் யோசனை நினைத்த பயனை கொடுக்குமா என்பது சந்தேகம்.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.