Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைத்திய ஆலோசனை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இளையபிள்ளை தாமதத்துக்கு மன்னிக்கவும்.அவவொடு தொடர்புகளை ஏற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.அவவிக்கு தெரியவில்லை அவ என்ன மாத்திரைகள் எடுத்தா என ஆனால் அவவின் இடது சிறுநீரகம் சரியான அளவில் இருந்ததாகவும் வலது சிறுநீரகம் மாத்திரம் R/KIDNEY IS SEEN IN THE PELVIC CAVITY.(PRE SACRAL AREA)எனச் சொல்லப்பட்டதாகவும் சொன்னார் இதனால் ஏதாவது பாதிப்பு வருமா? அத்தோடு நீங்கள் சொன்ன மாதிரி அவவின் அப்பமாவிற்கு இளநரை இருந்ததாகவும் சொன்னார்.

நாங்கள் புலம் பெயர் நாட்டில் போத்தலில் வரும் குடி தண்ணீரை மட்டும் பாவிப்பதால் அது உடம்புக்கு ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா?

குளிக்கும் போது சூடான தண்ணீரீல் குளிப்பதால் தலை முடி பாதிப்படைவதைப் போல எங்களது தோலுக்கும் ஏதாவது பாதிப்பு வருமா? உங்களுக்கு நேரமிருந்தால் பதிலளிக்கவும் மிக்க நன்றி.

  • Replies 56
  • Views 26.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடது சிறுநீரகம் சரியான அளவில் இருந்ததாகவும் வலது சிறுநீரகம் மாத்திரம் R/KIDNEY IS SEEN IN THE PELVIC CAVITY.(PRE SACRAL AREA)எனச் சொல்லப்பட்டதாகவும் சொன்னார்

இது பிறப்பில் இருந்தே இவ்வாறாக இருந்திருக்க வேணும். அதிகம் ஜோசித்து பயப்பிட வேண்டாம்!

குழந்தை கருப்பையில் வளரும் போது அதன் சிறுநீரகங்கள் மூன்று பரிமாணங்களை தாண்டியே சாதரண மனிதனின் சிறுநீரகங்கள் இருக்கும் இடத்தில், இருக்கும் வடிவத்தில் வந்து சேர்கிறன.

ஆரம்ப கால வளர்ச்சியின் பொழுது, சிறுநீரகங்கள் அடி வயிற்றிற்குள் தான் உரு பெறுகின்றன. பின்பு தொடரும் பரிமாணங்களின் போது அவை வளர்ச்சி பெற்று மேல் நோக்கி பயணித்து கடைசியாக தங்கள் இலக்கை (இருக்க வேண்டிய இடங்களை) அடைகிறன.

எல்லோருக்கும் இந்த இடப்பெயர்வு சீராக நடப்பதில்லை. சில குழந்தைகளுக்கு (1/1000) கருவில் இருக்கும் போது சில ரத்த நாளங்களின் இருப்பிடங்கள் - சிருநீரகம் மேல் நோக்கி பயணிப்பதை தடுப்பதாக அமைவதால் - வளர்ச்சி பெற்ற அந்த சிருநீரகம் அடி வயிற்றிலேயே நிரந்தரமாக குடி கொண்டு விடுகிறது....

இந்த படம் வளர்ச்சி அடைந்து சிறுநீரகம் எந்த இடங்களை வந்து அடைந்து இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது:

(எமது ஈரல் வலப்புறத்தில் மேல் வயிற்றில் அதிக இடத்தை பிடித்துள்ளதால், எல்லோருக்குமே வலப்புறத்தில் உள்ள சிறுநீரகம் சற்றே பதிவான இடத்தில் தான் வந்து அமரும்)

kidney_diagram_1.jpg

ஆனால் kidney in pelvic area என்றால் நான் முன்கூறிய இடப்பெயர்வு தடை பட்டு போய் கீழ் வயிற்றேலேயே சிறுநீரகம் தங்குவதால் இவ்வாறாக இருக்கும்.

anatomy_Ectopic_Kidney.jpg

இது x-ray மற்றும் எனேயே scanning இன் போதே அறிய வரும்.

இந்த இடப்பெயர்வு தடையானதால் சிறுநீரகத்தின் செயலாற்றல் பெரும்பாலும் பாதிக்க படுவதில்லை. ஆனால் ஏற்கனவே அடி வயிற்றில் இருக்கும் எனேயே உடல் உறுப்புகளுடன் இட ஒதுக்கீட்டுக்கு இடைஞ்சல் பட வேண்டி இருக்கும். நான் மேற்சொன்னது போல ஆயிரத்தில ஒரு குழந்தைக்கு அவ்வாறாக இருந்தாலும்.... அது வெளிக்காட்டுவது குறைவாகவே இருக்கும்.

வேறு ஏதாவது வயிற்று வலி, சிறுநீரக கோளாறு என்று மருத்துவமனை போக வேண்டி வரும் போதே சிலருக்கு இந்த நிலைமை இருப்பதாக அறிய வரும். அதற்கு சத்திர சிகிச்சை எல்லாம் தேவை இல்லை. பிரச்சனைகளை குறைக்கும் பட்சம் மருத்துவம் செய்வதே போதுமானது.

சிறுநீரகம் ஒன்று செயற்பாடு- சுத்தமாக இழந்தவர்களே மீதி இருக்கும் இன்னொன்றை வைத்து நிறைய காலம் பிரச்சனையின்றி வாழலாம். உங்கள் உறவினரிடம் சொல்லுங்கள், சிறுநீரகம் இருக்கும் இடத்தில் தான் இவருக்கு முறைப்பாடு இருக்கே தவிர அதன் செயற்பாட்டில் பிரச்சனை இல்லாத வரை, அவர் கவலை பட தேவை இல்லை.

சிறுநீரக செயற்பாட்டில் பாதிப்பு வருமாயின்:

-நீர்த்தேக்கம் உடலில் ஏற்படும், இதனால் கால்கள், பாதகங்கள் அதிக அளவிலான வீக்கத்தை காட்டும்.

-உடல் கழிவுகளான urea ரத்தத்தில் அதிகளவில் இருக்குமாயின் வாயில் ஈய/ இரும்பு தன்மைக்கு உரிய ஒரு வகை metalic சுவை தென்படும். அதை தொடர்ந்து சத்தி குணமாக இருக்க கூடும்.

-ரத்தத்தில் சிவப்பணுவின் எண்ணிக்கை குறைய கூடும். இதனால் உடற்சோர்வு வழமைக்கு மாறாக இருக்கும். தலைசுற்று மயக்கம் போன்றவை ஏற்படலாம்.

மேற்கூறிய முறைப்பாடுகள் இனி வரும் காலங்களில் வருமாயின் உங்கள் உறவினரை மருத்துவ உதவி உடனே நாட சொல்லுங்கள். மற்ற படி, பிரச்சனைகள் தாங்களாக உரு பெறாத பட்சத்தில் அவற்றை ஜோசித்து தலையை குழப்புவது நல்லது அல்ல.

மேலும் நீங்கள் கேட்ட bottled water குடிப்பது பற்றி.... pipe தண்ணியில் சில இடங்களில் அதிக அளவு calcium chloride இருக்கிறது. நீங்கள் தண்ணீர் சூடாக்கும் kettle பார்த்தாலே தெரியும் எவ்வளவு படிக்கிறது அதில் என்று.....அவ்வாறான இடங்களில், bottle தண்ணி குடிப்பது நல்லது தான். அதிக அளவு sodium உள்ள bottle தண்ணியும் சிறப்பானது அல்ல. என்னை கேட்டால் water filter வாங்கி pipe தண்ணியையே வடிகட்டி குடிப்பது நல்லது என்பேன். bottle ஆல் வரும் குப்பையும் குறையும், செலவும் கொஞ்சம் குறையும்!

கொதி தண்ணியில் நீராடுவது காய்ந்த தோல் தன்மை உடையவர்களுக்கு நல்லது அல்ல. எண்ணெய் பதம் குறைவான தோல் உள்ளவர்கள், சிலநேரம் தங்கள் தோல் காய்ந்து சிறிதளவில் வெடிக்கும் அளவை கூட கண்டிருப்பார்கள். அவர்கள் அதிகம் சோப் பாவிப்பதையும், கொதி தண்ணீரில் குளிப்பதையும் குறைத்தல் நலம். கொதி நீர் எமது உடலின் இயற்கை எண்னைபதத்தை குறைக்கும்.

அதே நேரம், குளிர் தண்ணிர் குளியல் இந்த நாட்டிற்கு ஏற்றது அல்ல, அதால் தோலில் உள்ள பிசகு தன்மை, தூசி போன்றவை சீராக சுத்த படுத்த முடியாது. மெல்லிய சுடு தண்ணிர் தான் அழுக்கை அகற்றுவதற்கும், தோலின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

தலை மயிர் கொட்டுவதை விரும்பாதவர்கள் : கொதி தண்ணியில் முளுகுபவர்கள் - நீங்கள் அப்படி முழுகும் போதும், துவாயால் வேகமாக மண்டையை தேய்த்து துடைக்கும் போதும் - ஜோசிக்க வேண்டியது - ஊரில் கோழிக்கு செட்டை உரிக்கும் முன் சுடுதண்ணியில் ஏன் போடுகிறார்கள் என்று :huh: !!! உடல் வெப்பம் அதிகரிக்கும் போது தோலில்/ மண்டை ஓட்டில் உள்ள சிறு துவாரங்கள் திறந்து கொள்கிறன. அதால் சிலர் உயிராய் நினைக்கும் மயிர் எல்லாம் உதிர்ந்து போவது சுலபமாகிறது! போதாகுறைக்கு கொதி தண்ணி முளுகலை தொடர்ந்து மண்டையை துவாயால் மாய்த்து எடுக்கும் போது, மிச்ச சொச்ச தலை மயிரும் கோழி செட்டை போல் கழண்டு வரும்.... :huh:

இது கொதி தண்ணி குளியலின் போது எனக்கே உதித்த ஞானம் :wub: ! அனால் சுடுதண்ணியை குறைக்காமல் குளித்து முடித்தேன்! எல்லாம் அவரவர் விருப்பம்..... உயிரே அதுக்குரிய காலத்தில் போகும்- மயிர் போனால் என்ன?! என்பது எனது தனிப்பட்ட கருத்து :lol: !! ஆனால் முடிந்தால் கொதி தண்ணீர் முழுகல்/ குளியலை தவிருங்கள்...உங்கள் நன்மைக்காக... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி , இதன் தலைப்பை வைத்திய ஆலோசனை என்று மாற்றி விடுங்களேன் .

தலைமுடி என்று இருக்க ...... தலை மயிர் இல்லாத ஆக்கள் இந்தப்பக்கம் எட்டியும் பார்க்க மாட்டினம் . :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இளையபிள்ளை.

தமிழ்சிறியின் விருப்பத்திற்கு ஏற்ப வைத்திய ஆலோசனை என மாற்றப்பட்டு உள்ளது.

Edited by ரதி

நன்றி இளையபிள்ளை.

மீண்டும் ஒரு கேள்வியுடன் வந்துள்ளேன்.

நல்ல வெயில் காலம் இப்போ. இருநாட்களுக்கு முன் நண்பர் எல்லாரும் சேர்ந்து பிள்ளைகள் விளையாட பக்கத்தில் உள்ள பூங்காவுக்கு போனோம்.

நண்பர் ,எனக்கு எல்லாம் கொசு குத்தியது. ஆனால் நண்பருக்கு கொசு குத்திய இடத்தில் ஒரே கடி பின் பொக்களமாக வீங்கி மஞ்சள் நிறமான நீராக வடிகிறது.

வைத்தியரிடம் செல்லும் படி சொன்னேன் அவர் அதை பெரிதாக எடுத்ததாக தெரியவில்லை.

ஏன் அப்படி அவருக்கு மாத்திரம் வித்தியாசமான அறிகுறி. ஏதாவது மருந்து எடுக்கணுமா? அப்படி யானால் அன்ரிபயோற்றிக் எடுக்கனுமா?

உங்கள் பதில்கள் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதால் இங்கு பதிந்துள்ளேன்.

நன்றி. அன்பான இரவு வணக்கங்கள்.

Edited by நேசன்

உங்கள் நண்பருக்கு மற்றவர்களை விட கூட sensitive ஆன தோலாய் இருக்கலாம்... அதனால் கொசு கடி ஒருவகை alergy ஆக வெளிக்காட்டலாம்....

இன்று ஒரு நாளைக்கு piriton அல்லது zirtek என்ற குளுசைகள் - இரண்டில் ஏதும் ஒன்று - இரு வேளை போட்டு பார்க்க சொல்லுங்கள். பெரும்பாலும் இரண்டொரு நாளில் மாறி விடும்.

piriton அல்லது zirtek இரண்டிற்கும் prescription தேவை படாது... நீங்கள் வசிக்கும் நாட்டில் prescription கேட்டார்கள் கடையில் என்றால் - அது இல்லாமல் வாங்க கூடிய "anti-histamine" வகை குளுசை ஏதும் கேட்டு வாங்க சொல்லுங்கள். கிழமை கணக்கில் போட தேவை இல்லை. ஒரீரு நாட்களில் சரியாக வேண்டிய விடயம்...

பாதிக்க பட்ட இடத்தை சொறிந்து புண்ணாக்க வேண்டாம்... நகத்தில் இருக்க கூடிய வெளிகிருமிகளை காயத்திற்கு அறிமுக படுத்த வேண்டாம்....மற்றும் படி - ஒன்றும் இல்லை. :rolleyes:

மேலும் பிரச்னை இருந்தால் குடும்ப வைத்தியரிடம் போக சொல்லுங்கள்...

இரவு வணக்கங்கள் நேசன்.

ரதி, வைத்திய ஆலோசனை என்று சிறி அண்ணா சொல்லி மாற்றியது இருக்கட்டும்...அதென்ன கீழ இலவசம் என்று?! கல்லா பெட்டியில் தான் இருக்கலாம் என்று தான் சிறி அண்ணா அப்படி மாற்ற சொன்னதை சொன்னார்!!! :rolleyes:

மருத்துவத்தில் தெரிந்ததை கூறுகிறேன், தெரியாததை அறிந்து கூற முயற்சி செய்கிறேன். ஒரு விளக்கத்திற்காக மட்டும் எனது குறிப்புகளை பாவியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலவசமென்று போட்டதை நானும் கண்டிக்கிறேன்.. :rolleyes: .......யாழ் கள உறவுகளுக்கு மட்டும் என்று போடலாமா டாக்குத்தர் ஐயா ?

Edited by நிலாமதி

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இளையபிள்ளை ,

எனக்கு சிலவேளை தடிமனும் , தலையிடியும் சேர்ந்து வருகுது . அது ஏன் ?

அதை நிப்பாட்ட என்ன செய்யலாம் ?

  • கருத்துக்கள உறவுகள்

இளையபிள்ளை ,

எனக்கு சிலவேளை தடிமனும் , தலையிடியும் சேர்ந்து வருகுது . அது ஏன் ?

அதை நிப்பாட்ட என்ன செய்யலாம் ?

ஒரு பெக் பிரண்டி அடியுங்கோ எண்டு இளைய பிள்ளை சொல்ல விருப்பமோ? அது சரி..இளையபிள்ளையை கொஞ்ச நாளா காண இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெக் பிரண்டி அடியுங்கோ எண்டு இளைய பிள்ளை சொல்ல விருப்பமோ? அது சரி..இளையபிள்ளையை கொஞ்ச நாளா காண இல்லை..

இளையபிள்ளையை காணாத ஏக்கத்தில் தான் இந்த தலையிடியும் , தடிமனும் எனக்கு வந்ததோ ...... தெரியாது .

அவர் வருமட்டும் உங்களிடம் உள்ள கைவைத்தியத்தை சொல்லுங்களேன் .

இளையபிள்ளையை காணாத ஏக்கத்தில் தான் இந்த தலையிடியும் , தடிமனும் எனக்கு வந்ததோ ...... தெரியாது .

அவர் வருமட்டும் உங்களிடம் உள்ள கைவைத்தியத்தை சொல்லுங்களேன் .

இளையபிள்ளையை மருத்துவ ஆலோசனை கேட்பதற்குத் தேடுகிறீர்களா? இல்லை, இன்று வெள்ளிக் கிழமை, அராத்துவதற்காகக் ஆள் தேடுகிறீர்களா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இளையபிள்ளையை மருத்துவ ஆலோசனை கேட்பதற்குத் தேடுகிறீர்களா? இல்லை, இன்று வெள்ளிக் கிழமை, அராத்துவதற்காகக் ஆள் தேடுகிறீர்களா? :lol:

இரண்டுக்கும் தான் . :(

இளையபிள்ளை ,

எனக்கு சிலவேளை தடிமனும் , தலையிடியும் சேர்ந்து வருகுது . அது ஏன் ?

அதை நிப்பாட்ட என்ன செய்யலாம் ?

என்ர கைமருந்து... கடும் சாயாக் கறுப்புக் கோப்பிக்குள் கொஞ்சம் மருந்து(பிரண்டி) கலந்து குடியுங்கோ... இருக்கிற இடம் தெரியாமல் தடிமனும் , தலையிடியும் சேர்ந்து போடும்.... :lol:

இரண்டுக்கும் தான் . :(

நினைச்சன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ர கைமருந்து... கடும் சாயாக் கறுப்புக் கோப்பிக்குள் கொஞ்சம் மருந்து(பிரண்டி) கலந்து குடியுங்கோ... இருக்கிற இடம் தெரியாமல் தடிமனும் , தலையிடியும் சேர்ந்து போடும்.... :(

வறுத்த கோப்பிக் கொட்டை வீட்டில் உள்ளது , ஆனால் நீங்க சொன்ன பிரண்டை என்பது வேலியில் படரும் ஒரு தாவரம் தானே ......... :lol:

வறுத்த கோப்பிக் கொட்டை வீட்டில் உள்ளது , ஆனால் நீங்க சொன்ன பிரண்டை என்பது வேலியில் படரும் ஒரு தாவரம் தானே ......... :lol:

:(

எனக்கு அது எல்லாம் தெரியாது சிறி அண்ணா... நான் சொன்னது இதில ஏதாவது ஒண்டு .... :D

remyclub.jpgcognac-brandy4.jpgn3219820000078_MED.jpg

  • கருத்துக்கள உறவுகள்

:(

எனக்கு அது எல்லாம் தெரியாது சிறி அண்ணா... நான் சொன்னது இதில ஏதாவது ஒண்டு .... :D

remyclub.jpgcognac-brandy4.jpgn3219820000078_MED.jpg

இது என்ன சாமான் குட்டி . :D

புதுசா வந்த ஜூஸ் போத்தல் மாதிரி கிடக்குது . :D

இது எங்கை விக்குது . :lol:

இது என்ன சாமான் குட்டி . :D

புதுசா வந்த ஜூஸ் போத்தல் மாதிரி கிடக்குது . :(

இது எங்கை விக்குது . :lol:

இந்தத் திரியில் இதை நான் இணைத்ததுக்கு மன்னிக்கவும்... ரதியும், இளையபிள்ளையும் வந்து, என்னை தோய்ச்சு தொங்கவிடப் போகிறார்கள்... மீ எஸ்காப்...

எனக்கு நித்தா வருது... நான் கனவு காண போறன்.... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை ,

எனக்கு சிலவேளை தடிமனும் , தலையிடியும் சேர்ந்து வருகுது . அது ஏன் ?

அதை நிப்பாட்ட என்ன செய்யலாம் ?

ஒரு பெக் பிரண்டி அடியுங்கோ எண்டு இளைய பிள்ளை சொல்ல விருப்பமோ? அது சரி..இளையபிள்ளையை கொஞ்ச நாளா காண இல்லை..

இளையபிள்ளையை காணாத ஏக்கத்தில் தான் இந்த தலையிடியும் , தடிமனும் எனக்கு வந்ததோ ...... தெரியாது .

அவர் வருமட்டும் உங்களிடம் உள்ள கைவைத்தியத்தை சொல்லுங்களேன் .

:D

சரியான ஒரு லொள்ளு பிடிச்ச மனுசன்...

அங்கால போய் ஆறுமுகநாவலரிட்ட ஏதோ குறளுக்கு விளக்கம் கேட்டு :D கலாய்க்கிற அதே தொனில தான் இஞ்ச என்னட்டையும் "தடிமன்/ தலையிடி" என்று கேக்கிறியள்..

உங்களை விளங்காதா இந்த அளவிற்கேனும்!! :lol:

இருந்தாலும் மினக்கட்டு தேடிய அன்புக்கு நன்றி...

கொஞ்சம் வேற அலுவல்/ பிராக்கு என்று இருந்திட்டன்...

அடுத்த வெள்ளி அப்போயின்மன்ட் வையுங்கோ- வாறன் அராத்திறதுக்கு! :lol:

:D

எனக்கு அது எல்லாம் தெரியாது சிறி அண்ணா... நான் சொன்னது இதில ஏதாவது ஒண்டு .... :D

remyclub.jpgcognac-brandy4.jpgn3219820000078_MED.jpg

:D:(

நான் இல்லாத நேரத்தில "controlled drugs cupboard" திறப்பை எடுத்து புகுந்து விளையாடி விட்டியள் போல...குட்டி ??!!!!

:)

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது சொந்தக்காரப் பெண் ஒருவர் சில நேரங்களில் நித்திரையில் தான் வீணி வடிக்கிறதாக சொல்லி கவலைப்பட்டார்...இது ஏன் வருகிற‌து....இதைத் தடுப்பதற்கு என்ன வழி...தயது செய்து யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் ...

இளையபிள்ளை இதற்கு பதில் சொல்லவாவது வாருங்கள்.

மருத்துவரீதியா என்ன என்று சொல்லத்தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருநாளும் இரவு படுக்கைக்கு செல்லும்முன்னம் வடிவாக பல் துலக்கிவிட்டு படுத்து பார்க்கச்சொல்லுங்கோ ஏதாவது மாற்றம் கிடைக்கிதோ என்று. சிலருக்கு இயற்கையாக இந்தப்பிரச்சனையை தவிர்க்க ஏலாதோ தெரியாது. பலருக்கு நித்திரை ஆகின உடன வாய் தன்பாட்டில திறபட்டிடும். அப்படியான நிலமையில வாய் நல்லாய் திறந்து இருந்தால் எச்சில் வருவது இயல்புதானே.

  • கருத்துக்கள உறவுகள்

தலயனை உறையை அடிக்கடி மாத்துவது தான் சிறந்த வழி :(

  • 6 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்திற்கு பின் ஒரு மாதிரி இந்தத் திரியை தேடி எடுத்துள்ளேன்...இளையபிள்ளை இப்ப யாழில் இல்லை. ஆனால் இவரா ஜஸ்டின் என்ட சந்தேகமும் எனக்கு இப்ப இருக்கு!...விடயத்திற்கு வருவோம்;

எனக்கு சில சாப்பாடுகள் சாப்பிட்ட பின் வயிறு ஊதுது.அத்தோடு இன்னும் சில சாப்பாடுகள் சாப்பிட்டால் நெஞ்சு எரியுது...இது தொடர்பான மருத்துவ விளக்கம் யாராவது தரமுடியுமா?...முற்கூட்டியே நன்றிகள்.

நான் இரவு 7 மணிக்கு முதல் அல்லது 7‍ -7.30 அரைக்குள் சாப்பிட்டூவேன்.
இரவு சோறோ அல்லது புட்டு போன்ற சாப்பாடுகள் சாப்பிடுவதில்லை.
இது என்ன காரணத்திற்காக வருகிறது?...என்ன தீர்வு என்று சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, நெஞ்செரிவு (heart burn) என்பது இரைப்பையினுள் சுரக்கும் அமிலம் (அசிட்) மேலேறி உங்கள் உணவுக்குழாயினுள் வருவதால் வரும் குணங்குறி! வயிறு ஊதல் (bloat) என்பது இரைப்பை அல்லது குடலினுள் வாயுக்கள் உருவாவதால் ஏற்படும் குணங்குறி!

நெஞ்செரிவுக்குக் காரணங்கள் பல: சில உணவுகள் இயற்கையாகவே அமிலச் சுரப்பை சிலரில் கூட்டும். பசுப் பால் செரிமானப் பிரச்சினை (லக்ரோஸ் ஒவ்வாமை) இருந்தாலும் இது வரும். உடல் பருமன் இருப்போரில் நெஞ்செரிவு உணவோடு தொடர்பின்றியே வரக்கூடும்.

வயிறு ஊதலுக்கு சில உணவுகள் காரணம்: அதிக புரதம் கொண்ட  காய்கறிகளான பீன்ஸ் போன்றவை வயிறு ஊதலைத் தரலாம்.

இரண்டு நிலைமைகளுக்குமே நீங்கள் உங்கள் வைத்தியரிடம் போகும் போது சொல்ல வேண்டும். சில வைத்தியர்கள் நெஞ்செரிவுக்கு நெக்சியம் (nexium) போன்ற மருந்து ஏதாவது எடுக்கச் சொல்வர். ஆனால்,ஒரு நல்ல வைத்தியர் நீங்கள் சாப்பிடும் உணவுகள் என்ன என்று குறித்து வைத்துக் கொண்டு அவை இந்த இரண்டு பிரச்சினைகளையும் தருகின்றனவா என்று அவதானிக்கச் சொல்வார். உங்கள் அவதானிப்பை வைத்து அந்த உணவுகளைத் தவிர்க்க சொல்வார்.

(மேலும் நான் இளையபிள்ளை அல்ல! இப்ப களத்தில் எல்லாருக்கும் தெரிந்திருப்பது போல நான் மிருக வைத்தியர். ஆனால் அடிப்படை உடலியல், நோயியல், என்பன மனிதனுக்கும்  விலங்குகளுக்கும் ஒன்றே என்பதால் எனக்கு மருத்துவ விளக்கங்கள் தர இயலும். மருந்து மட்டும் உங்கள் குடும்ப மருத்துவரிடம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்!)

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

நன்றி ஐயா.

ரதி

இதற்கான கட்டணத்தை யாழ் கள உதவித்திட்டத்திற்கு அனுப்பிவிடவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜஸ்டின்...எனக்கு பருப்பு,பயறு,பயத்தங்காய்,கடலை,கச்சான் போன்ற சாப்பாடுகள் அலர்ஜி என்று நினைக்கிறேன்.அதை சாப்பிட்டதும் தான் இப்படி நடக்கின்றது.தவிர நெஞ்செரித்தலை கவனியாது விட்டால் அல்சர்,கான்சர் வரும் என சொல்கிறார்களே உண்மையா ஜஸ்டின்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.