Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியகப் புலனாய்வுப் பணியகத்தின் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வீர மரணம் அடைந்துவிட்டார் என்றால் ஒருமுறை சொல்லிவிட்டு அதை விட்டு விடுங்களேன். அதையேன் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். இதனால் ஏற்படப்போகும் நண்மை என்ன? சனங்களிடத்தில் மேலும் கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கமா? இப்படி ஆளாளுக்கு நாளுக்கொரு அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதன் மூலம் எதுவுமே நடக்கப்போவதில்லை. நாடு கடந்த தமிழீழ அரசு குறித்து பேசப்பட்டு வரும் இந்த நேரத்தில் இவ்வாறான அறிக்கைகள் வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழரின் கவனத்தைக் குழப்பவென்று பரவ விடப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

  • Replies 93
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆக வேண்டியவைகளை கவனிப்பதற்கு நாளுக்கு ஒரு அறிக்கை இப்படி வர யாழும் அனுமதித்து கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காற்றுக்கூட உட்புக முடியாத இடங்களுக்குள் சென்று தகவல்களைச் சேகரிக்கும் புலிகளின் புலனாய்வுத்துறைக்கா அந்த அமைப்பின் தலைவர் இறந்த செய்தியை உறுதிப்படுத்த பல நாட்கள் சென்றன...? ( இராணுவத்தின் புலனாய்வுத்துறை செய்தி போல்லல்லவா இருக்கிறது)

முன்னுக்குபின் பல முரணான தகவல்கள் மிக குறுகிய காலத்தினுள் வந்துகொண்டிருக்கின்றன, இவைகளிலிருந்தே இந்தச் செய்திகளின் நம்பகத்தன்மையை அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே இப்படியான செய்திகளைக்கேட்டு போராட்டங்களில் ஈடுபடுவதை ஈடுபடுவதையும்/ ஈடுபடுபவர்களையும் குழப்பாமல் ஒரே லட்சியத்தோடு போராடுவோம் ...அது தான் தலைவரின் வேண்டுகோளும் கூட.

ஐயோ... கடைசியில இப்ப அறிவழகன் என்று சொல்லப்படுபவரும் துரோகி என்று சொல்லப்படபோறாரோ?

புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் உயிர்தப்பினார்கள் ஆனால் தலைவரால் ஏன் தப்பமுடியவில்லை என்று கேட்பது கேணைத்தனமான ஓர் கேள்வியாக இருக்கின்றது.

புலனாய்வு என்றால் என்ன என்று முதலில் பலருக்கு அரிவரி படிப்பிக்கவேண்டி இருக்கிறது. முதலில் புலனாய்வு என்றால் என்ன... புலனாய்வாளர்கள் எப்படி இருப்பார்கள், எப்படி எப்படியான ரூபத்தில் இருப்பார்கள் என்பதை ஆகக்குறைந்தது புத்தகங்களிலாவது படித்துவிட்டு வாருங்கள்.

புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் உயிர்தப்பக்கூடிய சூழ்நிலையில் தலைவர் உயிர்தப்ப முடியாமல் போவது என்பது உண்மையில் 100% நடைமுறைச் சாத்தியமான சம்பவமே! ஏன் என்றால் புலனாய்வுப் பிரிவில் இருப்பவர்களின் நிலமை அப்படிப்பட்டது. அவர்கள் மக்களோடு மக்களாக இருக்கலாம். ஏன் முன்னேறிச்சென்ற சிறீ லங்கா இராணுவத்தில்கூட இருந்து இருக்கலாம்.

எனது நோக்கம் அறிவழகன் அவர்களது அறிக்கைக்கு வக்காளத்து வாங்குவது அல்ல. முதலில்... எல்லாத்தையுமே எல்லாரையுமே சந்தேகப்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். யார் என்ன சொன்னாலும்... அதை மறுத்து அதீத கற்பனை உலகில் வாழ்வது எங்கள் வழக்கம். இப்படியான அதீத கற்பனை உலகில் நாங்கள் இவ்வளவு காலமும் வாழ்ந்தபடியால்தான் இன்று இந்த நிலையில் தாயகத்தில் மக்கள் கேவலம்கெட்டு இருக்கின்றார்கள்.

இனியாவது கற்பனை உலகில் சஞ்சரிக்காது யதார்த்தத்தை உணர்ந்து நிஜ உலகில் வாழ்வோம். செய்யவேண்டிய கடமைகளை சாணக்கியமான முறையில்... உணர்வுடன் அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செய்வோம்.

Edited by கலைஞன்

ஆக வேண்டியவைகளை கவனிப்பதற்கு நாளுக்கு ஒரு அறிக்கை இப்படி வர யாழும் அனுமதித்து கொண்டிருக்கிறது.
.

அதெப்படி?

ஒவ்வொருக்காலும் இப்பிடி ஒருத்தன் எழுதும்போதெல்லாம் இஞ்சயம் எவராவதொருவர் அழுது வடிஞ்சு புறணி பாடிக்கொண்டுருப்பார்..

அவருக்கு எல்லாரும் சேந்து ஆறுதல் சொன்னாலும் அவரும் இல்லை என்று அடம்பிடிச்சு அழுவார்....

இந்த இலச்சனத்தில எங்க அடுத்தகட்டம் போறது... இதுக்கே கலம் சரியாக்கிடக்கு.

அழுததுபோது மூக்கை நல்ல துடைச்சுப்போட்டு உறிஞ்சிகொண்டு வேலைகளைப்பாருங்கப்பா.

ஐயோ... கடைசியில இப்ப அறிவழகன் என்று சொல்லப்படுபவரும் துரோகி என்று சொல்லப்படபோறாரோ?

கலைஞன் அண்ணா... யார் இங்கு அறிவழகனை துரோகி என்று சொன்னது???

இது எழுதினது அறிவழகனா என்பதே சந்தேகம் பலருக்கு.. :lol:

அடுத்தது என்ன சொல்லப் போறீங்கள் என்று எனக்கு இப்பவே தெரியுது.. மீ த எஸ்கேப்... :lol:

--------

இங்கு யாருக்காவது சேது அல்லது சிவாஜினி என்ற பெயருடையவரை தெரியுமா?

தலைவருக்கு செய்ய வேண்டிய உண்மையான அஞ்சலி அழுவதும் மற்றவர்களை நம்பவைத்து அழவைப்பதுமல்ல. தலைவர் எங்களிடம் ஒப்படைத்த தாயக மீட்பு பணியினை முழு மூச்சுடன் முன்னெடுப்பதும் முகாங்களில் அவலங்களின் மத்தியில் வாடும் மக்களையும் போராளிகளையும் காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுதலுமேயாகும். அதுவே நாம் உண்மையிலேயே எமது தலைவன் மீது வைத்துள்ள பாசத்திற்கும் மரியாதைக்கும் சான்றாகும் .

உது வேற அறிவழகன் எண்டால் உண்மையான அறிவழகன் பொத்திக்கொண்டு இருக்கமாட்டார் தானே? மேலும்.. புதினம், தமிழ்நாதத்திலையும் உது போடப்பட்டு இருக்கிதாம்.

தமிழ்நெட்தான் முதன் முதலில் யாரோ மூத்த ஊடகவியலாளரோட தொடர்புகொண்டாராம் எண்டு அறிவழகன் என்று ஒருவரை அறிமுகம் செய்தது. ஆகக்குறைந்தது தமிழ்நெட் சொன்ன அந்த மூத்த ஊடகவியலாளர் முதலாவது அறிவழகனை உறுதி செய்யக்கூடியவராக இருப்பார். எண்டபடியால கவலைப்படாதிங்கோ.

நாங்கள் எழுப்புகின்ற ஒவ்வொரு சந்தேகமும் - கேள்விகளும்... வி.பு அமைப்பு எவ்வளவு சீரழிந்துவிட்டது என்பதை காட்டுகின்றது. முன்பு என்றால்.. ஓர் அறிக்கைபோதும். இப்போது என்றால் ஆளை நேரில பார்த்தால்தான் நாங்கள் நம்புவம் எண்டுற நிலையில சனங்களிண்ட மனநிலை காணப்படுகிது.

சேது எண்டு தமிழ்ப்படங்களில ஒருத்தர் வாறவர். அவரையோ கேட்கிறீங்கள். சிவாஜினி எண்டுற பெயரில எனக்கு தூரத்து உறவான ஒரு அக்காவும், தங்கச்சியும் இருக்கிறீனம்.

Edited by கலைஞன்

எத்தனை பேர் அறிக்கை விட்டாலும், தலைவர் இறந்துட்டார் என்று சொல்லிக்கொண்டு திரியிறவை வந்து கண்ணை சிமிட்டுகினம் தாங்கள் வெற்றி பெற்று விட்டினமென்று. தவைவர் இருக்கிறார் என்று உறுதியா நம்பும் நாங்கள் தொடர்ந்தும் தலைவர் இருக்கிறார் என்று நம்புவோம்/ நம்புகிறோம்.

அடுத்த தடவை அறிக்கை விடும்போது சரியான சின்னத்தைப் பாவிக்கவும். புலி வலது பக்கமாகப் பார்க்க வேண்டும். இல்லையேல் கருணாவுக்கும் எமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

diltstatementtamil1page.gif

ltte_emblem.jpg

சரியான தெரிவு. மலைத்துப்போயிருப்பார்கள். அறிக்கை விட்டவர்கள்.

lttelogo.jpg

Edited by Iraivan

என் தலைவனுக்காக ஒரு பாட்டாவது யாராவது எழுதமாட்டீர்களா?

கேட்கவேண்டும்போல் உள்ளது

http://www.tamilkathir.com/news/1496/58//d,view_audio.aspx

கேட்டுப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol::lol::lol::blink::blink:

எத்தனை பேர் அறிக்கை விட்டாலும், தலைவர் இறந்துட்டார் என்று சொல்லிக்கொண்டு திரியிறவை வந்து கண்ணை சிமிட்டுகினம் தாங்கள் வெற்றி பெற்று விட்டினமென்று. தவைவர் இருக்கிறார் என்று உறுதியா நம்பும் நாங்கள் தொடர்ந்தும் தலைவர் இருக்கிறார் என்று நம்புவோம்/ நம்புகிறோம்.

எவ்வளவு காலத்துக்கு நம்பப் போகிறீர்கள்? மாவீரர் தினம் வரையா?. ஒருவருடம்? 5 வருடம்?..

சாதரண போராளிகள், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களுக்கு அஞ்சலி செலுத்திய நாங்கள் தனது வாழ்க்கை முழுவதையும் எமக்காக அற்பணித்த எமது தலைவனுக்கு உரிய நேரத்தில் அஞ்சலி செலுத்தாமல் விட்டது சரியா? .

எவ்வளவு காலத்துக்கு நம்பப் போகிறீர்கள்? மாவீரர் தினம் வரையா?. ஒருவருடம்? 5 வருடம்?..

சாதரண போராளிகள், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களுக்கு அஞ்சலி செலுத்திய நாங்கள் தனது வாழ்க்கை முழுவதையும் எமக்காக அற்பணித்த எமது தலைவனுக்கு உரிய நேரத்தில் அஞ்சலி செலுத்தாமல் விட்டது சரியா? .

எல்லோரையும் கேள்வி கேக்கவோ இண்டைக்கு கிளம்பியிருக்கிறியள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை வந்த அனைத்து அறிக்கைகளும் வெளிநாடுகளில் இருந்து வந்த அறிக்கைகள்!! இதுவரை எந்த ஒரு போராளியோ அல்லது தளபதியோ எந்த ஒரு அறிக்கையும் ஈழத்திலிருந்து விடவில்லை!! இதை கவனியுங்கள்!!

http://www.tamilkathir.com/news/1496/58//d,view_audio.aspx

Edited by suriyan

இதுவரை வந்த அனைத்து அறிக்கைகளும் வெளிநாடுகளில் இருந்து வந்த அறிக்கைகள்!! இதுவரை எந்த ஒரு போராளியோ அல்லது தளபதியோ எந்த ஒரு அறிக்கையும் ஈழத்திலிருந்து விடவில்லை!! இதை கவனியுங்கள்!!

[

மட்டு அரசியல் பொறுப்பாளார் தயா மோகன் என்ன வெளினாட்டிலையா இருக்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

தயாமோகன் என்ற பெயாரில் வேறு நபர் அறிக்கை விட்டு இருக்கலாம்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் அரசியல் துரையைச் செர்ந்தவர். போராளிகளுக்கும் தளபதிகளுக்கும் தான் உன்மை செய்திகள் தெரியும். அதை விட அவர் வெளிநாட்டிலிருந்து பத்மநாதன் விட்ட அறிக்கையை சுற்றிக் காட்டியுள்ளார்.

அதைவிட புதினத்தை தவிர சங்கதி, பதிவு அல்லது தமிழ்நெட் நேற்று வந்த அறிக்கையை வெளியிடவில்லை!

Edited by suriyan

எல்லோரையும் கேள்வி கேக்கவோ இண்டைக்கு கிளம்பியிருக்கிறியள்

எனக்கும் உங்களைப் போல தாயகத்தில் கொல்லப்பட்ட 50000 உறவுகள் மீது கவலை தான். தாயகத்துக்காக வீரமரணம் அடைந்த போராளிகள் நினைத்துக் கவலை தான். ஆனால் எம்மில் பலர் 5ம் ஈழப்போர் வெடிக்கும் என்று எழுதுவதை நினைக்க இன்னும் கவலையாக இருக்கிறது. இந்தப் போரில் சிங்களம் வெற்றி பெற்றுள்ளது என்பது கசப்பான உண்மை. பல அரசியல் துறைப் பொறுப்பாளர்கள் சிங்களத்தின் கொடிய சிறையில் சித்திரவதைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல போராளிகள், அப்பாவி இளையோர் பாலியல், கொலைகள், சித்திரவாதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்

நாளைக்கு நானும் அறிவழகன் என்ர பெயரில் தலைவரைப் பற்றி ஒரு அறிக்கை விடப் போரன் கட்டாயம் எல்லோரும் கருத்து எழுத வேணும், இல்லாட்டி நான் கண்ணைக் கட்டி கோபம் போடுவன், முதலில் எனக்குத் தேவை ஒரு துண்டு பேப்பர், புலிகளின் சின்னம்.

முதலில் புலத்தில் உள்ள பூசாரிகளை "உழைத்து வாழ வேண்டும்", என்ற வாத்தியாரின் சொல்லை நடைமுறை படுத்த சொல்ல வேண்டும்!! அது நடைபெற்றால் ............ தலையென்ன ..... அடிவரை முடிந்தென்று ஒத்துக் கொள்வார்கள்!!!

அவனவன் சீவியத்தில் சீவித்தவர்களுக்கு உண்மைகள் புளிக்கும்!!!!!! என்ன செய்வது!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எனக்கும் உங்களைப் போல தாயகத்தில் கொல்லப்பட்ட 50000 உறவுகள் மீது கவலை தான். தாயகத்துக்காக வீரமரணம் அடைந்த போராளிகள் நினைத்துக் கவலை தான். ஆனால் எம்மில் பலர் 5ம் ஈழப்போர் வெடிக்கும் என்று எழுதுவதை நினைக்க இன்னும் கவலையாக இருக்கிறது. இந்தப் போரில் சிங்களம் வெற்றி பெற்றுள்ளது என்பது கசப்பான உண்மை. பல அரசியல் துறைப் பொறுப்பாளர்கள் சிங்களத்தின் கொடிய சிறையில் சித்திரவதைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல போராளிகள், அப்பாவி இளையோர் பாலியல், கொலைகள், சித்திரவாதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

என்ன தூயா , ஒரே புழுக்கமா ?

அல்லது , இதுகளை வாசிக்க தலையை சுத்துதா ? :icon_idea:

பின்ன இருக்காதா? செம வெயில்ல “எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல...எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல...” இதையே திரும்ப திரும்ப கேட்கச் சொன்னா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.