Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டு 20 வருடங்கள் இன்றுடன் பூர்த்தி

Featured Replies

தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த ஆரம்பகால போராட்ட தலைவர்களில் ஒருவரான க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) செயலதிபரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எவ்) ஸ்தாபகருமான அமரர் க.உமாமகேஸ்வரன் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

நிலஅளவையாளர் திணைக்களத்தின் அதிகாரியாகக் கடமையாற்றிய உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக்கிளை செயலாளராகவும் நீண்டகாலமாக செயற்பட்டவர்.

1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதிய புலிகள் அமைப்பு New Tamil Tigers. NTT தமிழீழ விடுதலைப் புலிகள் Liberation Tigers of Tamil Eelam. LTTE என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயற்படத் தொடங்கிய போது அதன் முதற் தலைவராக அமரர் க.உமாமகேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.

பலஸ்தீனத்தில் பயிற்சியை முடித்துக் கொண்ட உமாமகேஸ்வரன் பலஸ்தீன போராட்ட அமைப்புக்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான இளைஞர்களை பயிற்சிக்காக பலஸ்தீனத்திற்கு அனுப்பி வைத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சுத்த இராணுவக் கண்ணோட்டத்தையும், தாக்கிவிட்டுத் தப்பியோடும் தாக்குதல் வழிமுறையையும் நிராகரித்து நாடு தழுவிய மக்கள் போராட்டத்தினூடாகவே தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்ற புரிதலோடு சுந்தரம் முதலானோர் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து விலகி புதியபாதை என்ற பெயரிலான பத்திரிகையை ஆரம்பித்த போது சுந்தரத்துடன் இணைந்து வெளியேறி வந்த உமாமகேஸ்வரன் புதியபாதைக் குழுவில் இணைந்து கொண்டார். பின்னர் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தை (புளொட்) தோற்றுவித்தார்.

பரந்துபட்ட மக்களை ஒன்றிணைப்பதன் ஊடாகவும் நீண்டகால மக்கள் புரட்சியின் ஊடாகவுமே மக்களுக்கான விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதன் அடிப்படையில் மக்கள் அமைப்பு, மாணவரமைப்பு, தொழிற்சங்க அமைப்பு, கடற்றொழிலாளர் மற்றும் விவசாயிகள் அமைப்புக்கள் என்றெல்லாம் வெகுஜன இயக்கங்களை உருவாக்கி வடகிழக்கில் ஒரு பலம் பொருந்திய அமைப்பாக புளொட் அமைப்பை உருவாகியிருந்ததோடு, தெற்கில் இடதுசாரி அமைப்புக்களோடு உறவுகளை வளர்த்திருந்ததோடு முஸ்லீம், மற்றும் மலையக இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் இணைவதற்குமான வேலைத்திட்டங்களையும் அவ்வமைப்பின் ஏனைய இடதுசாரி சிந்தனையாளர்களுடன் இணைந்து உருவாக்கியிருந்தார்.

குறிப்பாக புளொட் அமைப்பின் மத்திய குழுவில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அங்கம் வகித்திருந்தனர். சந்ததியார், வாசுதேவா, கண்ணன் என்ற ஜோதீஸ்வரன் முதலானோர் மட்டத்தில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் மத்திய குழுவில் முக்கியத்துவம் வகித்ததோடு தளத்தின் நிர்வாகக்கட்டமைப்பிற்கும் முஸ்லீம் இளைஞர் ஒருவரே பொறுப்பாக இருந்த நிலைமைக்கு புளொட் அமைப்பை வளர்த்தெடுத்திருந்தார்.

தென்னிலங்கைச் சிங்கள மக்களுடைய ஆதரவில்லாமல் தமிழ் மக்கள் தமது விடுதலையை வென்றெடுப்பது சாத்தியமில்லை என்பதால் தென்னிலங்கையின் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் போராட்டத்தைப் புரிய வைக்கவும், அவர்களுடைய ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்குமாக தமிழீழத்தின் குரல் என்கிற வானொலியை மூன்று மொழிகளிலும் ஆரம்பித்திருந்தார். இதனால் கவரப்பட்ட ஏராளமான சிங்கள இளைஞர்கள் புளொட்டுடன் இணைய ஆரம்பித்திருந்தனர்.

ஆனால் சிறு அமைப்பாக இருந்து பரந்த மக்கள் இயக்கமாக அது வளர்ச்சி கண்டாலும், மக்களுடைய விடுதலையை வென்றெடுப்பதற்கான அரசியல் வழிமுறையை அது கைவிட்டமை, அதனை சீரிய முறையில் வழிநடத்தும் ஆற்றலை இழந்தமை, நீண்ட கால அடிப்படையில் ஒருங்கமைக்கப்பட்ட போராட்டத்திற்கு ஏற்ப அமைப்பில் இணைந்தவர்களுக்கான அரசியல் தெளிவையோ வேலைத் திட்டத்தையோ ஏற்படுத்தாமை, இந்தியாவில் பயிற்சிக்காக உருவாக்கப்பட்ட முகாம்களில் உரிய வேலைத்திட்டங்கள் இன்றி வருடக்கணக்காக அமைப்பு உறுப்பினர்களை முடக்கி வைத்திருந்தமை, இந்திய உளவுப் பிரிவினர் முகாம்களுள் ஊடுருவ இடமளித்தமை முதலான இன்னோரன்ன காரணங்களால் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பாரிய முரண்பாடு உட்கொலைகள், சித்திரவதைகள் என ஆரம்பித்து பின்னர் அது அவ்வியக்கத்தின் கலாசாரமாக மாற்றம் பெற்றது.

அதனால் அவ்வியக்கம் பலகூறுகளாக உடைந்தது. இயக்கத்திலிருந்து வெளியேறியவர்களைத் தேடித் தாக்கும் நடவடிக்கைகளிலும் அவ்வியக்கம் ஈடுபட்டது. இதன் பின்னர் புளொட் புலிகளால் தடைசெய்யப்பட்டதுடன் அது பாரிய பின்னடைவைச் சந்தித்தது. உட்கட்சிப் போராட்டங்களுடன் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் விலகிச் சென்றதுடன் புலிகளின் தடை மற்றும் புளொட் மீதான புலிகளின் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக அவ்வமைப்பின் நூற்றுக்கணக்காண உறுப்பினர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டமை என்பவற்றுடன் அவ்வமைப்பு முழுமையாகவே சீர்குலைந்தது.

புளொட் அமைப்பினுள் உருவாகி வளர்ந்த இந்தக் கொலைக்கலாசாரத்தை முளையிலேயே கிள்ளி எறியாமல் வளர்ச்சியடைய அனுமதித்தன் விளைவு அதே கொலைக் கலாசாரத்திற்கு முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன் பலியாக நேர்ந்தது. ஈழத்தின் போராட்டக் குழுக்களின் தலைவர்கள் பெரும்பாலும் அவர்களது எதிரிகளாலேயே கொல்லப்பட புளொட் அமைப்பின் தலைவர் மட்டும் தான் தனது அமைப்பின் உறுப்பினராலேயே படுகொலைக்காளானது வரலாற்றுத் துர்அதிஸ்டமாக நிகழ்ந்தது.

மூலத்தின் இணைப்பு

http://www.globaltamilnews.net

============================

இனி என்ன ஆரம்பிக்க வேண்டியது தானே முத்திரை குத்துவதற்கு.....

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இனி என்ன ஆரம்பிக்க வேண்டியது தானே முத்திரை குத்துவதற்கு.....

முதல் முத்திரையை நான் அடித்து விடுகிறேன்.

இன்று முதல் நிழலி அவர்கள் துரோகியாக இனங்காணப்படுகிறார். :lol:

இவரை இந்திய உளவுத்துறையும் இலங்கையரசும் வாங்கிவிட்டது. நிழலி விலைபோய்விட்டார்.

(கடன்காறரான எங்களையெல்லாம் யாராவது விலைக்கு வாங்குவினமா எண்டு கேக்காதையுங்கொ நிழலி :lol: )

இதுதானே நீங்கள் சொன்ன முத்திரை :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று முளைச்ச காளானெல்லாம் இப்ப கதைக்க வெளிக்கிட்டுதுகள்.

இதுகளாலை ஏதும் பிரயோசனமெண்டால் ?????????????????

அதுவுமில்லை :D:lol:

பல தகவல்கள் திரிக்க பட்டும் பொய்யாக புனையப்பட்டும் இருக்கிறது...

உமாமகேஸ்வரனை சுட்டு கொண்றது பம்பலப்பிட்டியில் இல்லை... காலிமுகத்திடலுக்கு அண்மையில் கொள்ளுப்பிட்டியில்...

  • தொடங்கியவர்

பல தகவல்கள் திரிக்க பட்டும் பொய்யாக புனையப்பட்டும் இருக்கிறது...

உமாமகேஸ்வரனை சுட்டு கொண்றது பம்பலப்பிட்டியில் இல்லை... காலிமுகத்திடலுக்கு அண்மையில் கொள்ளுப்பிட்டியில்...

என் ஞாபக சக்தி சரியெனில், கொள்ளுப்பிட்டியில் காலை நேரத்தில், ஒரு மழை நாளில் கொல்லப் பட்டார்.

தமிழ் இயக்கங்களில் மிகச் சிறப்பான இயக்கமாக உருவாகி பின் படு கேவலமாக இன்று வரை இருக்க காரணமாக இருந்தவர். இவரை கொல்ல உத்தரவிட்டவர்களில் முக்கியமானவரும் இதே இயக்கத்தின் தற்போதைய தலைவரின் வாகனத்தில் கடத்திச் செல்லப் பட்டு கொலை செய்யப் பட்டதுதான் பெரும் துயரம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னார் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு இயக்கத்திலிருந்த ஒரு பெண்ணுடனான பாலியல் கள்ளத்தொடர்பு காரணம் என்பதாக சமீபத்தில் யாழ்களத்திலிருந்த பதிவொன்றில் படித்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் ஞாபக சக்தி சரியெனில், கொள்ளுப்பிட்டியில் காலை நேரத்தில், ஒரு மழை நாளில் கொல்லப் பட்டார்.

தமிழ் இயக்கங்களில் மிகச் சிறப்பான இயக்கமாக உருவாகி பின் படு கேவலமாக இன்று வரை இருக்க காரணமாக இருந்தவர். இவரை கொல்ல உத்தரவிட்டவர்களில் முக்கியமானவரும் இதே இயக்கத்தின் தற்போதைய தலைவரின் வாகனத்தில் கடத்திச் செல்லப் பட்டு கொலை செய்யப் பட்டதுதான் பெரும் துயரம்.

Please check these out

The Split of the LTTE. by T. Sabaratnam;

http://www.sangam.org/articles/view/?id=110

1989 - The Year of Indian Intrigue

http://www.sangam.org/PIRABAKARAN/Part22.htm

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம்.. எனி ராசிக்குக்கும் நினைவு நாள் கொண்டாடும்.. டக்கிளஸ் தேவானந்தாவுக்கு.. பாத பூசை செய்யும்... கருணா அம்மானுக்கு அரசாங்கத்தில் 150 வது நாள் பெருவிழாக் கொண்டாடும்... வரதராஜப் பெருமாளின் தமிழீழப் பிரகடனத்துக்கு.. விழா எடுக்கும்...!

சுவிஸ் வாழ் புளொட் அன்பர்களை அரவணைத்து.. தமிழீழம் அமைக்கவும்.. கொழும்பு வாழ்.. ஊர்காவற்றுறை வாழ் ஈபிடிபி யினரை அரவணைத்து.. சிங்களப் படைகளை வெளியேற்றவும்.. கருணா அம்மானை அரவணைத்து.. கிழக்கை ஒருங்கிணைக்கவும்.. வரதராஜப் பெருமாளைக் கொண்டு.. இந்தியவுடனான தமிழீழ வெளியுறவைப் பலப்படுத்தவும்.. புலம்பெயர் ஊடக அவியலாளர்களைக் கொண்டு.. சர்வதேச பிரச்சாரங்களை மேற் கொள்ளவும்.. யாழ் களம்.. உறுதி பூண்டுள்ளது.

சங்கரி கும்மான்.. அமிர்தலிங்கம்.. நீலன்.. கதிர்காமர்.. சறோஜினி யோகேஸ்வரன்.. போன்ற மகோன்னத சன நாய் அகத்தலைவர்களின் வழியில் யாழ்களமும்.. ஜி ரி என் னும் விரைந்து நடை பயில திடசங்கற்பம் பூண்டுள்ளன.

துரோகி பிரபாகரனின்.. கூட்டாளிகளின்.. கொட்டம் அடக்கி தமிழீழத்தில் சன நாய் அகத்தை மலரச் செய்ததற்காக மகிந்த கோத்தபாய கூட்டணிக்கு பெருவிழா எடுக்க புலம்பெயர் மக்களை தயார் செய்யும் பணியை யாழ் களம் ஜி ரி என்னுடன் இணைந்து செய்ய இருக்கிறது.

இன்றைய நாளில் மாவீரர்களாய் மண்ணிற்காய் மரணித்தவர்களை நினைவு கூற ஒரு மனிசரில்ல.. அப்படி நினைவு கூறுவது.. இனத்துக்குச் செய்யும் முழுத் துரோகமாகவே யாழ் களம் கருதுகிறது. ஆனா.. போராட்டத்தை சுயநலத்துக்காகப் பயன்படுத்தி.. பதவிச் சண்டையில் உயிர் விட்டவங்களுக்கு.. அதுவும் சிங்கள தேசத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து விட்டவர்களுக்கு அஞ்சலியும் சிரார்த்த தினங்களும் அனுஸ்டிப்பதே தமிழீழத்தின் உதயத்துக்கு முதற்படியாக அமையும்.!

ஐயோ.. இதை.. எனித் துரோகி எண்டப் போகிறனம்.. என்று சொல்லிக் கொண்டு.. அதை மறைமுகமா.. எதிர்கிறாப் போல வரவேற்கிறவையும்.. இருக்கிறது..எதிர்பார்த்தது தான்.

ஏலவே.. 1987 - 90 ஆண்டுகள் எமக்கு கற்றுத் தந்து விட்டன. தமிழர்களின் ஒற்றுமையைப் பற்றி. என்ன அன்று 984 மாவீரர்கள் தான் இருந்தார்கள். இன்று 25,000 மாவீரர்கள் ஆனது புலிகள் விட்ட தவறு. அன்று வெளிநாடுகளில் அசைலம் அடிச்ச தொகை வெறும் 2 தொடக்கம் 3 இலட்சமாகத்தான் இருந்தது. இன்று அதுவே 12 இலட்சத்துக்கும் அதிகமாகி விட்டது.

வடலிக்க கக்கூசுக்குப் போனவை கொமட்டில போகேக்க.. உமாமகேஸ்வரன் என்ன.. அமிர்தலிங்கம் என்ன.. துரையப்பாவுக்கும் சிரார்த்த தினம் கொண்டாடுறது.. அதிசயமா இருக்காது..!

ஆனால்.. மாவீரர்களின்.. வழியில் நடக்க என்றும் ஒரு சிலர் இருப்பார்கள். சத்தியம் வெல்லும் வரை...!

காட்டிக் கொடுத்துப் பிழைக்கிறவனுக்கும் இப்ப ஒரு காலம் மீண்டும் பிறந்திருக்குது.. கொண்டாடட்டும்..! ஆனால் தமிழீழத்தை மீட்டாச் சரி. கோட்டவிடாம..!

வாழ்க்க காக்க வன்னிய.. எட்டப்ப கூட்டம். அவங்களுக்கும் ஒரு பரம்பரை.. ஜீன் இருக்கத்தானே செய்யும் உலகில...!

அன்பார்ந்த மேற்குல ராஜதந்திரிகளே.. சிறீலங்காவில் சன நாய் அகம் பூப்பூத்துக் குழுங்குவதால்.. கிழக்கில்.. உதயத்துடன் வடக்கில் வசந்தம் வீசுவதால்.. கொடுத்த அசைலத்தை.. குடியுரிமையை பறிச்சுப் போட்டு.. உவையளை கொஞ்சம் வடலி வளவுக்கு அனுப்பி வையுங்கோ. அங்க போய் இருந்து கொண்டு.. சிரார்த்த தினங்களை கொண்டாட வசதியா இருக்கும்..! தோழர் வரதராஜப் பெருமாளின்.. தோழர் டக்கிளசின்.. தோழர் உமாமகேஸ்வரனின்.. தோழர் பத்மநாபாவின்.. தோழர் சபாரட்ணத்தின்.. கூட்டாளிகளுக்கு.. லண்டன் பொண்ணுங்கள் தேவையா இருக்காம்.. கனடா குமரிகள்.. ஜேர்மன்.. பிரான்ஸ்.. சுவிஸ்.. அவுஸ்.. வாரிசுகள் வேண்டி இருக்காம்..! :D

Edited by nedukkalapoovan

வாழ்க்க காக்க வன்னிய.. எட்டப்ப கூட்டம். அவங்களுக்கும் ஒரு பரம்பரை.. ஜீன் இருக்கத்தானே செய்யும் உலகில...!

யாரோ யாழில் எழுதிய ஞாபகம் பண்டாரவன்னியனின் பரம்பரை முழுமையாக அழிந்துவிட்டது, காக்கவன்னியனின் பரம்பரை தான் அப்போது மிஞ்சியிருந்தது என்று. நாங்கள் எல்லாம் அவனுடைய பரம்பரை. தலைவர் எங்களுடைய பரம்பரையில் வந்தார் என்பது தான் புரியாத புதிர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கரி கும்மான்.. அமிர்தலிங்கம்.. நீலன்.. கதிர்காமர்.. சறோஜினி யோகேஸ்வரன்.. போன்ற மகோன்னத சன நாய் அகத்தலைவர்களின் வழியில் யாழ்களமும்.. ஜி ரி என் னும் விரைந்து நடை பயில திடசங்கற்பம் பூண்டுள்ளன.

:D

ஏன் அண்ணே வவுனியாவை நாறடிச்ச பெருந்தலைவன் மாணிக்க தாசனை விட்டிட்டியள் ??

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளில் மாவீரர்களாய் மண்ணிற்காய் மரணித்தவர்களை நினைவு கூற ஒரு மனிசரில்ல

வீரவணக்கம் போட்டாலே கண்டுகொள்ளினமில்லை ...முந்தி என்றால் அப்படி இல்லை...

Edited by putthan

நன்றிகள் இணைப்பிற்கு ... அத்தனையும் உண்மைகள் .... உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டது வெள்ளவத்தையை அண்டிய பம்பலப்பிட்டிப் பகுதியில் ..... எந்தக் கொலைகளுக்கு எதிராக போராட புறப்பட்டாரோ, அதே கொலை வலயில் வீழ்ந்து கொலைகளையே கலாச்சாரமாக்கி, அதற்கு தானே பலியாகினார்!!!

ஒரு ஆய்வாளர் கூறினார் ... இலக்கு இருந்தது, கருவி இல்லை என்று!! ... இரண்டு தலைமைகள் ஒன்றிடம் இலக்கு இருந்தது ... இன்னொன்றிடம் கருவி இருந்தது ... இரண்டும் இணைந்திருந்தால் ... எம்மக்கள் என்றோ விடிவு பெற்றிருப்பார்கள்!!!

84 என்று நினைக்கிறேன் .... சுழுபுரம் பகுதிக்கு உமாமகேஸ்வரன் இந்தியாவில் இருந்து வந்து தங்கி நின்ற காலப்பகுதியில் ... 6 விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான இளைஞர்களை கடத்தி படுகொலை செய்தார்கள் ... புளொட்டின் சங்கிலி கூட்டத்தினர் ....

... அதை விட களை எடுக்கிறோம் எனும் பெயரில் இந்திய புளொட் முகாங்களில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டவர்களும், காடு/மலையடிவாரங்களில் சுட்டுக் கொல்லப்பட்டு எறியப்பட்டவர்களும் ..... எம்மக்களின் விடுதலை என்ற நோக்கத்தில் தம் வாழ்வு, குடும்பம், எதிர்காலம் எல்லாவற்றையும் அர்பணித்து சென்ற எம்மவர்களுக்கு .... எமது எல்லாத்தலைமைகளும் கொடுத்த பரிசு!!! ... அழிக்க முடியாத வரலாற்றுக்கறை!!!

வீரவணக்கம் போட்டாலே கண்டுகொள்ளினமில்லை ...முந்தி என்றால் அப்படி இல்லை...

...???????? ம்ம்ம்ம்... எங்கே விட்டார்கள்??????? வீரவணக்கம் ...... செலுத்தியவர்கள், துரோகிகள்!!!! .... எழுதியவர்கள் துரோகிகள்?????? .........

ஈழ விடுதலை போராட்டத்திலேயே பெருந்தொகை இளைஞர்களின் வாழ்வை பாழ் ஆக்கி போராட்டத்தை சிதைத்தது என்றால் அது உமாமகேஸ்வரன் தான் .

எத்தனை குழுக்கள், சாதி வெறி ,படித்தவர்கள் தான் என்ற மமதை.

உட்கொலை என்ற சொல் தொடங்கியதே புளட்டில்தான்.

ஆயுதம் இல்லாமல் பொல்லை கொண்டு சுட்டு பழகிய இயக்கம் . ஆரம்ப காலத்தில் இல்லை விடுதலை வளர்ந்து இராணுவம் முடக்கப்பட்டு

உச்சமாக இருந்த காலத்தில் கூட பொல்லுதான் ஆயுத பயிற்சி. கொக்குவிலில்,தீவகத்தில் அவர்களது பயிற்சி முகாமுக்கு பக்கங்களில் இருந்தவர்களுக்கு தெரியும்.

வாமன் கந்தன் சங்கிலியன் பரந்தன்ராசன், மாணிக்கன் எண்டு ஒரே கொள்ளை கோஸ்டி.. இவ்வளவுக்கும் இவை ஒருவரும் ஒரு இராணுவ தாக்குதலும் செய்ய்ததில்லை. எல்லாம் உமாமகேஸ்வரனை வெருட்டி வாங்கிய பதவிகள்.

பம்பாயில் தூள் கடத்தல் என்றால் புளட்தான்.

கடைசியின் உச்சம் தங்களது தலவனை தாங்களே கொண்டுவிட்டு அவருக்கு அவையே வீரமக்கள் தினம் கொண்டாடுகினம்.

இப்ப எஞ்சி இருக்கிற எச்சம் தான் சித்தார்த்தன். அவனும் மிக ப்பெரிய கொலையாளி. மாணிக்கதாசனை ஒரு மாதிரி வழி அனுப்பி போட்டு கவனமாக எட்டப்பன் வேலை செய்து கொண்டு இருக்கிறார். இவர் தான் பழய எம்பி தர்மலிங்கத்தின் மோன்.

என் ஞாபக சக்தி சரியெனில், கொள்ளுப்பிட்டியில் காலை நேரத்தில், ஒரு மழை நாளில் கொல்லப் பட்டார்.

தமிழ் இயக்கங்களில் மிகச் சிறப்பான இயக்கமாக உருவாகி பின் படு கேவலமாக இன்று வரை இருக்க காரணமாக இருந்தவர். இவரை கொல்ல உத்தரவிட்டவர்களில் முக்கியமானவரும் இதே இயக்கத்தின் தற்போதைய தலைவரின் வாகனத்தில் கடத்திச் செல்லப் பட்டு கொலை செய்யப் பட்டதுதான் பெரும் துயரம்.

இந்த காலப்பகுதியில் JVP யினரால் இந்திய எதிர்ப்பு போராட்டங்கள் அறிவிக்க பட்டு இருந்தன... போரூந்து சேவைகள் முடக்கப்பட்டு இருந்தன... புறக்கோட்டைக்கு பஸ்சில் செண்ற நானும் எனது மாமாவும் நடந்தே அண்று வெள்ளவத்தைக்கு வந்து கொண்டு இருந்தோம்... இந்திய தூதரகத்தை தாண்டி வரும் போது அமெரிக்க தூதரகம் பக்கம் வீதியை தடை செய்து போற வாறவர்களிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டு இருந்தார்கள்...

நாங்கள் வேறு பாதை பார்க்க வேண்டியதாயிற்று.. பின்னர் ரயில் பாதையால் நடந்து வீடு வந்து சேர்ந்தோம்...

யாழ் களம்.. எனி ராசிக்குக்கும் நினைவு நாள் கொண்டாடும்.. டக்கிளஸ் தேவானந்தாவுக்கு.. பாத பூசை செய்யும்... கருணா அம்மானுக்கு அரசாங்கத்தில் 150 வது நாள் பெருவிழாக் கொண்டாடும்... வரதராஜப் பெருமாளின் தமிழீழப் பிரகடனத்துக்கு.. விழா எடுக்கும்...!

சுவிஸ் வாழ் புளொட் அன்பர்களை அரவணைத்து.. தமிழீழம் அமைக்கவும்.. கொழும்பு வாழ்.. ஊர்காவற்றுறை வாழ் ஈபிடிபி யினரை அரவணைத்து.. சிங்களப் படைகளை வெளியேற்றவும்.. கருணா அம்மானை அரவணைத்து.. கிழக்கை ஒருங்கிணைக்கவும்.. வரதராஜப் பெருமாளைக் கொண்டு.. இந்தியவுடனான தமிழீழ வெளியுறவைப் பலப்படுத்தவும்.. புலம்பெயர் ஊடக அவியலாளர்களைக் கொண்டு.. சர்வதேச பிரச்சாரங்களை மேற் கொள்ளவும்.. யாழ் களம்.. உறுதி பூண்டுள்ளது.

இப்படி புனிதம் காத்து காத்து உங்கட எதிர்ப்பை கூட க்காட்டாது தடுத்தியள்... இண்டைக்கு தமிழ் சனம் தன்ர உணர்வை கூட வெளிப்படையாக வெளியிட தெரியாமல் முழிக்குதுகள்...

நான் போய் உமாமகேஸ்வரன் எண்டால் அவனை பற்றி பேசுவது எங்கட புனிதத்துக்கு பங்கம் எண்டியள்... ஆனால் அவங்கள் எல்லாம் சேர்ந்து புலிகளையும் தமிழர்களையும் காட்டு மிராண்டிகள் எண்றும் அடக்கு முறையாளர்கள் எண்றும், கருத்து சொல்வதை தடுக்கிறார்கள் எண்றும் கதை கட்டினார்கள்....

எதிர்த்து பதில் சொல்ல உங்களது புனிதம் தடுத்தது... ஆனால் அவங்கள் சொன்னதை வசனம் பிசகாமல் இலங்கை அரசும் உலகுக்கு படம் போட்டு காட்டியது.... அவர்களின் வாயை அடக்க நீங்கள் என்ன செய்தீர்கள் எண்று கேட்டால்.. நாங்கள் அவர்களை சமூகத்தில் இருந்து தள்ளிவச்சு புனிதம் காத்தோம் இனியும் காப்போம் எண்டிறீயள்...

எந்த துரோகியையும் நீங்கள் துரோகியாக சித்தரித்து பேசுவது கிடையாது... அது அவர்களுக்கு எவ்வளவு வசதியாக பட்டது தெரியுமா...??? அதை அவர்கள் எவ்வளவு சாதகமாக பயன் படுத்தினார்கள் என்பதை கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா...?? அப்படி தெரிந்து கொள்வதை கூட உங்களது புனிதம் தடுக்கிறதா...???

கருணாவும், டக்கிளசும் , நல்லவர்கள் எண்று காட்டுவதுக்காக இங்கு இடப்படுவதில்லை.. அவர்களின் துரோகங்கள் கீழ்த்தரமான நடவடிக்கைகளை மக்கள் புரிந்து வைத்து இருக்கிறார்கள் என்பதை அறிவிக்க பயன் படுவதாகத்தான் நான் எண்ணுகிறேன்...

ஒரு தலைப்பை இட்ட நபரை விமர்சிப்பதை விட்டு அந்த தலைப்பை பற்றி விமர்சிப்பது ஆரோக்கியமாக இருக்கலாம்.... ( இதே கருத்தை கலைஞர் கருணாநிதி சொன்னார் எண்று சொல்லி யாழில் இணைத்தால்தான் நீங்கள் ஒத்து கொள்வீர்களா என்ன..??)

இது உங்களது புனிதத்தன்மையை பாதிக்கும் எண்றால் புனிதம் அவ்வளவு இல்லாதவர்கள் செய்யட்டுமே... அதில் உங்களுக்கு என்ன தடை...??

Edited by தயா

ஈழ விடுதலை போராட்டத்திலேயே பெருந்தொகை இளைஞர்களின் வாழ்வை பாழ் ஆக்கி போராட்டத்தை சிதைத்தது என்றால் அது உமாமகேஸ்வரன் தான் .

எத்தனை குழுக்கள், சாதி வெறி ,படித்தவர்கள் தான் என்ற மமதை.

உட்கொலை என்ற சொல் தொடங்கியதே புளட்டில்தான்.

ஆயுதம் இல்லாமல் பொல்லை கொண்டு சுட்டு பழகிய இயக்கம் . ஆரம்ப காலத்தில் இல்லை விடுதலை வளர்ந்து இராணுவம் முடக்கப்பட்டு

உச்சமாக இருந்த காலத்தில் கூட பொல்லுதான் ஆயுத பயிற்சி. கொக்குவிலில்,தீவகத்தில் அவர்களது பயிற்சி முகாமுக்கு பக்கங்களில் இருந்தவர்களுக்கு தெரியும்.

வாமன் கந்தன் சங்கிலியன் பரந்தன்ராசன், மாணிக்கன் எண்டு ஒரே கொள்ளை கோஸ்டி.. இவ்வளவுக்கும் இவை ஒருவரும் ஒரு இராணுவ தாக்குதலும் செய்ய்ததில்லை. எல்லாம் உமாமகேஸ்வரனை வெருட்டி வாங்கிய பதவிகள்.

பம்பாயில் தூள் கடத்தல் என்றால் புளட்தான்.

கடைசியின் உச்சம் தங்களது தலவனை தாங்களே கொண்டுவிட்டு அவருக்கு அவையே வீரமக்கள் தினம் கொண்டாடுகினம்.

இப்ப எஞ்சி இருக்கிற எச்சம் தான் சித்தார்த்தன். அவனும் மிக ப்பெரிய கொலையாளி. மாணிக்கதாசனை ஒரு மாதிரி வழி அனுப்பி போட்டு கவனமாக எட்டப்பன் வேலை செய்து கொண்டு இருக்கிறார். இவர் தான் பழய எம்பி தர்மலிங்கத்தின் மோன்.

புலிகள் பண்ணைகளை வைத்தும் , பண்றிகள் வளர்த்தும் , பல்பொருள் அங்காடிகள் வைத்தும் உணவுத்தேவையை போக்கினார்கள் எண்றால் இவர்கள் வீடுவீடாக மிரட்டி சாப்பாடு பாசல்கள் கேட்டார்கள்... வேலை ஏதும் இல்லாது ஊர் சுற்றுவதையே வேலையாக கொண்ட பலரும் PLOT உறுப்பினர் எனும் பெயருக்குள் பெருமையாக சுற்ற விரும்பி PLOT க்குள் இணைந்து கொண்டார்கள்...

எனக்கு தெரிய PLOT யினர் செய்த ஒரே நன்மையான விடயம் எண்றால் அது யாழ் நகருக்குள் கோட்டையில் இருந்து இராணுவம் அடிக்கும் செல்லுக்கு பங்கர் களையும் அரண்களையும் அடித்தது... அதுக்கும் ரோட்டாலை எவ்வளவு அவசரமாக வேலைகளுக்காகவும் வைத்திய சாலைக்கு போய் வந்த சனத்தை யும் பிடித்து வேலை வாங்கியது வேற கதை... . :D

அதை அவர்கள் செய்தது புலிகள் கோட்டையை சுற்றி இராணுவம் வெளியேறாது காவல் போட்டதுக்கு பிறகுதான்...

Edited by தயா

எந்த துரோகியையும் நீங்கள் துரோகியாக சித்தரித்து பேசுவது கிடையாது... அது அவர்களுக்கு எவ்வளவு வசதியாக பட்டது தெரியுமா...??? அதை அவர்கள் எவ்வளவு சாதகமாக பயன் படுத்தினார்கள் என்பதை கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா...?? அப்படி தெரிந்து கொள்வதை கூட உங்களது புனிதம் தடுக்கிறதா...???

இது முற்றிலும் உண்மை இன்று வரை

புலிகள் யாரையும் வசைபாடுவது கிடையாது அது அவர்களின் ஒழுக்கமாக இருந்தது ஆனால் துரோகத்தையும் துரோகிகளையும் கூட அவர்கள் அதே பாணியில் பேசாமல் விட்டது அவர்களுக்கு ஒழுக்கமாக இருந்தாலும்

உண்மைக்கு மாறான வதந்திகள் ஊதிப் பெருத்து அது மக்களுக்குள் குழப்பத்தையும் விரோதத்தையும் வளர்த்தன என்பதை அவர்கள் காணமல் விட்டுவிட்டார்கள்

இது துரோகிகளை நல்லவர்களாகவும் அப்பாவிகளை துரோகிகளாகவும் மக்களுக்கு தோற்றம் பெற்றுவந்தன

பத்திரிக்கைகளில் இருந்து வானொலி வரை அத்தனை ஊடகங்களும் பத்திரிக்கை தர்மம் என்ற பெயரில் இவற்றை அனுமதிப்பதில்லை

இதனால் அவர்கள் பலருக்கு அடையாளம் தெரியாமலே இன்னும் நல்லவர்கள் , தமிழ்த்தேசியவாதிகளாகவே வலம் வருகின்றார்கள்

தேசியத் தலைவர் எல்லா வலியையும் தானே சுமந்தது அவரின் பிரசன்னமின்மையின் பின்னர் தான் தமிழ்மக்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கின்றது

பிரபாகரன் ஒரு அதீதப் பிறவி

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவர் எல்லா வலியையும் தானே சுமந்தது அவரின் பிரசன்னமின்மையின் பின்னர் தான் தமிழ்மக்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கின்றது

அதுதான்

பிரபாகரன் என்ற நாமம்

அவரை அதற்காகத்தான் தேடுகின்றோம்

தேடிக்கொண்டோயிருப்போம்

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.