Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை' - பிரித்தானியாவில் வாழும் அரசியல்வாதியான தயா இடைக்காடர்

Featured Replies

பிரித்தானியாவில் வாழும் அரசியல்வாதியான தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம் ஜி.ரிவி. நேரடி நிகழ்ச்சி ஒன்றைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

வியாழன் நள்ளிரவு தொலைக்காட்சியின் 'வெளிச்சம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயா இடைக்காடர் 'சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை' என்று கூற முயன்ற அவரது கருத்தை, அதை நெறிப்படுத்திய செய்தியாளர் தினேஷ் அவர்கள் வெகு புத்திசாதுரியமாக தடுத்து நிறுத்தியுள்ளார். திரு. தினேஷ் அவர்களின் இந்த முடிவு பாராட்டத்தக்கது என்றாலும், திரு தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தெளிவு படுத்தியே ஆகவேண்டும்.

தயா இடைக்காடர் சொல்ல வந்தது போல், 'சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை' என்ற கருத்து, சிறிலங்காவில் ஒரு ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவந்தால் தமிழ் மக்களின் அத்தனை பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்ற மிக மட்டமான கருத்தாகவே தோன்றுகிறது.

புலம்பெயர் தேசங்களின் விடுதலைப் போர்க்களங்களில் அடிக்கடி முகம் காட்டுவதன் மூலமும், தொலைக்காட்சிகளில் தோன்றுவதன் மூலமும், ஈழத் தமிழர்களுக்கான சில போராட்டங்களை முன்நின்று நடாத்துவதாலும் மட்டும் ஈழத் தமிழர்களின் கொள்கை வகுப்பாளர்களாக அனைவரும் மாற முற்படுவது மிகவும் அபாயகரமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்வது அவசியம்.

சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே இன முரண்பாடு உருவாக்கப்பட்டு, அது கூர்மையடைந்ததன் காரணமாகவே இன்றுவரை சிங்கள தேசத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்பு யுத்தம்.

தமிழ் மக்களின் வாழ்வுரிமையை மறுதலிக்கும் இந்த இன அழிப்பு யுத்தத்தில் எல்லா சிங்கள மக்களும் பங்கு கொள்ளவில்லையானாலும், பெரும்பான்மையான சிங்கள மக்கள் சிங்கள அரசின் இந்த யுத்த முன்னெடுப்புக்களுக்கும், இன அழிப்பிற்கும் ஆதரவு வழங்கி வருகின்றார்கள் என்பதே உண்மை.

இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் கூர்மையடைந்து பாரிய மனிதப் பேரவலங்களை ஏற்படுத்திய சிங்கள தேசியத்தின் இனவாத சிந்தனைக்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்த சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் நிராகரிக்கப்பட்டு, அவர்கள் மீது கலாச்சார, பொருளாதார தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களது உயிரும் உடமைகளும் அழிக்கப்பட்டு, அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட வேளைகளில், சிங்கள மக்கள் மனிதாபிமான சிந்தனை கொண்டவர்களாக இருந்திருப்பின் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் வேதனைகளுக்குப் பரிகாரம் தேடியிருப்பார்கள்.

மாறாக, தமிழர்கள் மீது எவர் மிக மோசமான இனவாதக் கருத்துக்களை முன் வைக்கிறார்களோஈ அவர்களே சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலையே இப்போதும் சிங்கள மக்கள் மத்தியில் உள்ளது. இதற்கு அதிக காலம் பின் நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. தற்போதைய நாடாளுமன்றமே அதற்கு ஆதாரமாக உள்ளது. இனவாதக் கொள்கையுடன் போட்டியிட்ட ஜே.வி.பி., ஹெல உறுமய கட்சிகளின் பெரு வெற்றி சிங்கள மக்களின் எண்ணப் பிரதிபலிப்பே.

சிங்கள தேசத்தின் அரசியல் மட்டுமல்ல, தமிழீழ மக்கள் மீது போர் தொடுபடபதற்காகவே பெருத்து ஊதப்பட்ட 300,000 படையினரைக் கொண்ட சிங்களப் படைக் கட்டமைப்பில் உள்ள அனைவரும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து வந்தவர்களே. சிறுபான்மையான சிங்கள மக்களைத் தவிர, எஞ்சியுள்ள அனைத்து சிங்கள மக்களும் தங்கள் மனிதாபிமானங்களை இனவாத வெறியூட்டலுக்குள் தொலைத்து விட்டு, திரும்பி மீள முடியாத நிலையிலேயே உள்ளார்கள்.

யுத்த முனையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 300,000 இலட்சம் மக்களை விடுவிக்க வேண்டும், விசாரணையற்ற தடுப்புக்காவலில் தமிழர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டும், காரணமற்ற கைதுகள், தடுத்து வைத்தல்கள், கடத்தல்கள், காணாமல் ஆக்குதல், படு கொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள் என்று தொடரும் சிங்கள அரசின் அத்தனை கொடுமைகளையும் நிறுத்த வேண்டும் என்று எத்தனை மனிதாபிமான காரணங்கள் இருக்கின்ற போதும், எத்தனை சிங்கள மக்கள் அதனை எதிர்த்துப் போராட்டம் நடாத்த முன்வந்திருக்கிறார்கள்?

மனக் கொடூரங்களால் நிரப்பப்பட்ட சிங்கள இனவாத சமூகத்துடன் ஈழத் தமிழர்கள் இணைந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து பல தசாப்தங்களாகிவிட்டது. தமிழீழம் ஒன்றே தீர்வு என்று தந்தை செல்வா அவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன் வைத்து, தமிழீழ மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த தமிழீழத் தாகத்தோடு எத்தனை மறவர்கள், எத்தனை தமிழர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்துள்ளார்கள். அந்த முடிவிலிருந்து மாறுவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது.

தற்போது மாறிவரும் உலக சிந்தனைகளினூடாக எமது நியாயமான போராட்டங்களைத் தீவிரப்படுத்தி, தமிழீழ தேசத்தை மீட்டெடுக்கும் பணி மட்டுமே புலம்பெயர் தேசத்துத் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, சுய விருப்பக் கருத்துக்களைத் தெரிவிக்க முற்படுவது தமிழ்த் தேசியத் துரோகமாகவே கணிக்கப்பட வேண்டும்.

Pathivu

Edited by sanjee05

  • கருத்துக்கள உறவுகள்

தயா இடைக்காடர் அவர்கள் முக்கிய நேரங்களில் எம்முடன் தோளோடு தோள் நின்றவர்

எனவே பொறுமையாக விவாதிக்கவேண்டிய விடயம் இது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிடுமாறு நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவிடம், பிமல் ரத்நாயக்க எழுத்து மூலமாக கோரியுள்ளார். யுத்தத்தின் பின்னர் 15000 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதி நீதி அமைச்சர் புத்தரசிகாமணி தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படாத பட்சத்தில் சர்வதேச ரீதியான விசாரணைகள் என்ற போர்வையில் வெளிநாட்டு சக்திகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். யுத்த நடைபெற்ற மற்றும் முடிவடைந்த காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கை சரிவர நிலைநாட்டுவதன் மூலம் வேறும் சக்திகளின் தலையீட்டை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குப் பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபருமான இமெல்டா சுகுமார் நேற்றுத் தெரிவித்தார்.

இப்பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அங்குள்ள திணைக்களங்களிலும் கடமை புரியும் 119 உத்தியோகத்தர்களும் அங்கு சென்று கடமையாற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் சிவில் நிர்வாக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும், கரைச்சி பிரதேச செயலகப் பிரி விலும் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாந்தை கிழக்கு, ஒட்டி சுட்டான், துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவு கட்டடங் களையும், பிரதேச செயலாளர்களதும், உத்தி யோகத்தர்களதும் தங்குமிடக் கட்டிடங்க ளையும் புனரமைக்கவென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு 21.8 மில்லி யன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இதேநேரம் கிளிநொச்சி மாவட்ட செயலகக் கட்டிடம், மாவட்ட செயலாளரின் தங்கும் விடுதிக் கட்டிடம், பூநகரி பிரதேச செயலாளர் தங்கும் விடுதி கட்டிடம், அரசாங்க அதிகாரிகள் தங்கும் விடுதி கட்டடம் ஆகியவற்றைப் புனரமைக்கவென பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு 42.8 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இந் நிதியூடான வேலைத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக்கட்டட வேலைகள் பூர்த்தியானதும் சிவில் நிர்வாகப் பணிகளை அங்கேயே மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.தற்போது கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர்கள் கிளிநொச்சியில் தங்கி இருந்தபடியே தங்களது பணிகளை மேற் கொள்ளுகின்றனர் என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர்கள் கிளிநொச்சியில் தங்கி இருந்தபடியே தங்களது பணிகளை மேற் கொள்ளுகின்றனர் என்றார்.

யாருக்கு.....???

தற்போது கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர்கள் கிளிநொச்சியில் தங்கி இருந்தபடியே தங்களது பணிகளை மேற் கொள்ளுகின்றனர் என்றார்.

யாருக்கு.....???

குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கும்

அடக்குமுறை செய்யும் ராணுவ பொலிஸ் அதிகாரிகளுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுறவன் சொன்னால்

கேட்கிறவனுக்கு எங்க போச்சு....????????????

தயா இடைக்காட்டார் அவர்களுக்கு தமிழில் ஒரே குழப்பம். பொதுவாக அவரது பேச்சுக்கள் தமிழ் ஒழுங்கமைந்து வருவதில்லை.

அப்படியான தவறாக இருக்கலாம். மற்றும்படி அவர் ஏதோ பேச்சு தமிழ் போல் சும்மா சொல்லிக்கொண்டே போவார்.

பார்ப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் தயா இடைக்காடரும் இப்போ துரோகியோ? எங்களுக்காகவே பாலிமெந்து முன்னால உண்ணாவிரதம் இருந்தவர், பரமேஸ்வரனயாவது விட்டிடுங்கோ, தலைவற்ற இந்தவருச உரை வாசிக்க தேவை. :(:):D:):D:D

  • கருத்துக்கள உறவுகள்

ம் தயா இடைக்காடரும் இப்போ துரோகியோ? எங்களுக்காகவே பாலிமெந்து முன்னால உண்ணாவிரதம் இருந்தவர், பரமேஸ்வரனயாவது விட்டிடுங்கோ, தலைவற்ற இந்தவருச உரை வாசிக்க தேவை. :(:):D:):D:D

எல்லாத்தையும் பகிடிபண்ண எப்படி முடியுது தங்களால்???

உடம்பிலிருந்து எதையாவது எடுத்துவிட்டீரா?

புலம்பெயர் நாடுகளில் பல்வேறு தேசிய இனங்களுடன் அனுசரித்து வாழும் நாங்கள் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் பிரிந்து வாழவேண்டும் என்ற கருத்தை நிலை நிறுத்த முடியாது. இலங்கையில் வாழும் தமிழ்மக்களுக்கான பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பது எமது கடமையாகின்றது. பிரிந்து செல்லுதலும் தனியாக நாட்டை உருவாக்குதலும் தான் தீர்வு என்ற எண்ணத்தை புலம்யெர் தமிழனோ அல்லது இந்தியனாக இருக்கும் தமிழனோ முன்வைக்க முடியாது. தாயகத்தில் உள்ள மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழுதல் தமக்கு நல்லது என்ற நிலையில் இருந்தால் அதை அவர்கள் செய்வார்கள். அதற்கு குறுக்கே நாம் செல்ல முடியாது. தமிழர்கள் தனியாக ஒரு நாட்டை உருவாக்கி அதை ஆழ முடியாது என்பது தமிழனாக இருக்கும் ஒவ்வொருவனுக்கும் தெரிந்த விடயம். அதற்குரிய தகுதி இந்த இனத்திற்கு இல்லை என்பது வெளிப்படையான உண்மை. இந்த உண்மை நிலைக்கு மாறாக கருத்துக்களை விதைப்பதும் பிடிவாதம் பிடிப்பதும் சிங்களப் பேரினவாதத்தை அதன் வீரியத்துடன் தக்கவைத்து எஞ்சிய தமிழர்களையும் பலியெடுப்பதற்கு மட்டுமே பயன்படும். சுருக்கமாகச் சொன்னால் புலம்பெயர்ந்த தமிழன் தாயகம் சென்று அங்கிருந்து கொண்டு எமக்கும் சிங்களவனுக்கும் ஒத்துவராது நாம் தனியே வாழவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கலாம். தமிழகத் தமிழன் நான் இந்தியன் இல்லை தமிழன் என்ற நிலைக்கு மாறி தமிழக மீனவர்களை சிங்களப்படைகள் கொல்வதற்கு எதிராக போராடும் போது தமிழனுக்கான தனிநாடுபற்றி பேசலாம். எதிர்காலம் என்பது சிங்கள மக்களுடன் இணைந்து கல்வி பொருளாதராம் போன்றவற்றில் முன்னேற்றம் காண்பதே தாயக மக்களுக்கான விடுதலை தவிர தேசியவாதத்தை திரும்ப தூக்கிப்பிடிப்பதாக இருந்தால் அழிவில் இருந்து மீள முடியாது. நாம் ஒரு இனமாக வலிமை பெற்ற பின்னரே இனத்தின் விடுதலையும் அது தன்னைத் தானே ஆழும் தகுதியும் உருவாகு

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் பல்வேறு தேசிய இனங்களுடன் அனுசரித்து வாழும் நாங்கள் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் பிரிந்து வாழவேண்டும் என்ற கருத்தை நிலை நிறுத்த முடியாது. இலங்கையில் வாழும் தமிழ்மக்களுக்கான பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பது எமது கடமையாகின்றது. பிரிந்து செல்லுதலும் தனியாக நாட்டை உருவாக்குதலும் தான் தீர்வு என்ற எண்ணத்தை புலம்யெர் தமிழனோ அல்லது இந்தியனாக இருக்கும் தமிழனோ முன்வைக்க முடியாது. தாயகத்தில் உள்ள மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழுதல் தமக்கு நல்லது என்ற நிலையில் இருந்தால் அதை அவர்கள் செய்வார்கள். அதற்கு குறுக்கே நாம் செல்ல முடியாது. தமிழர்கள் தனியாக ஒரு நாட்டை உருவாக்கி அதை ஆழ முடியாது என்பது தமிழனாக இருக்கும் ஒவ்வொருவனுக்கும் தெரிந்த விடயம். அதற்குரிய தகுதி இந்த இனத்திற்கு இல்லை என்பது வெளிப்படையான உண்மை. இந்த உண்மை நிலைக்கு மாறாக கருத்துக்களை விதைப்பதும் பிடிவாதம் பிடிப்பதும் சிங்களப் பேரினவாதத்தை அதன் வீரியத்துடன் தக்கவைத்து எஞ்சிய தமிழர்களையும் பலியெடுப்பதற்கு மட்டுமே பயன்படும். சுருக்கமாகச் சொன்னால் புலம்பெயர்ந்த தமிழன் தாயகம் சென்று அங்கிருந்து கொண்டு எமக்கும் சிங்களவனுக்கும் ஒத்துவராது நாம் தனியே வாழவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கலாம். தமிழகத் தமிழன் நான் இந்தியன் இல்லை தமிழன் என்ற நிலைக்கு மாறி தமிழக மீனவர்களை சிங்களப்படைகள் கொல்வதற்கு எதிராக போராடும் போது தமிழனுக்கான தனிநாடுபற்றி பேசலாம். எதிர்காலம் என்பது சிங்கள மக்களுடன் இணைந்து கல்வி பொருளாதராம் போன்றவற்றில் முன்னேற்றம் காண்பதே தாயக மக்களுக்கான விடுதலை தவிர தேசியவாதத்தை திரும்ப தூக்கிப்பிடிப்பதாக இருந்தால் அழிவில் இருந்து மீள முடியாது. நாம் ஒரு இனமாக வலிமை பெற்ற பின்னரே இனத்தின் விடுதலையும் அது தன்னைத் தானே ஆழும் தகுதியும் உருவாகு

அகதி முகாமில் உள்ள மக்கள் ஒரு வேளை உணவுக்கே அடிபட வேண்டிய நிலையில் தமது எதிர்காலம் பற்றி தீர்க்கமான முடிவு எடுக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஒரு இனமாக வலிமை பெற்ற பின்னரே இனத்தின் விடுதலையும் அது தன்னைத் தானே ஆழும் தகுதியும் உருவாகும்

வலிமையைப் பெற்றுக் கொள்ளத்தானே நடையாய் நடக்கின்றோம், கூச்சல் போடுகின்றோம், இன்னும் என்னென்னவோ செய்கின்றோம்.

யூதர்கள் போன்று வலிய இனமாய் வளர்ந்து மேற்கு நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் பெரிய சக்தியாக நாம் உருவாகும்போது, எமது பலத்தைப் பார்த்துப் பயந்து அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளை மீட்டுத் தருவார்கள். நாங்கள் எமது சந்ததியினருடன் அங்குபோய் குடியமர்ந்து அணுகுண்டு செய்து சிங்களப் பகுதிகளையும் ஆக்கிரமிப்போம்.

தமிழர்களும் உலகில் இருந்த எவருக்கும் இளைத்தவர்கள் இல்லை!

ம் தயா இடைக்காடரும் இப்போ துரோகியோ? எங்களுக்காகவே பாலிமெந்து முன்னால உண்ணாவிரதம் இருந்தவர், பரமேஸ்வரனயாவது விட்டிடுங்கோ, தலைவற்ற இந்தவருச உரை வாசிக்க தேவை. :):D:):D:D:D

:(

சரி 30 வரியத்துக்கு மேலை முக்கி முக்கி இப்ப கட்ட கோவணமும் இல்லை! பிரச்சனை தமிழன் சிங்களவன் இல்லை! பேரினவாத அரசிற்கும் சிறுபான்மை சமூகத்திற்கும் இடையில் என்பதை கூட புரியாத நிலை இன்று!

கீழ் கண்ட கட்டுரையை ஒரு வாசிச்சுப்போட்டு அதுக்கும் பதில் சொல்லுங்கோ!

தனி ஈழம் சர்வரோக நிவாரணியல்ல

இங்குள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மக்களிடம் முன் வைப்பது போல் தனிநாடு அதாவது தமிழீழம் என்பது இலங்கைத் தமிழ் மக்கள் அனைவரின் பிரச்னைகளுக்கும் தீர்வாகவல்ல சர்வரோக நிவாரணி அல்ல. தனிஈழம் என்று ஏற்பட்டால் அங்கு தமிழ் உடமை வர்க்கத்தின் ஆட்சியே ஏற்படும். அத்தகைய தமிழ் ஈழ தேசம் அமைப்பதில் தொடங்கியே பல்வேறு வேதனைகள் தலைதூக்கும். ஏனெனில் அவ்வாறு உருவாகும் தனித் தமிழ் தேசத்தில் இலங்கையின் சிங்களர் வசிக்கும் பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வரும் ஏராளமான தமிழர்கள் தங்களது உடமைகளை விட்டுவிட்டு வந்து குடியேற முடியாது.

அவர்கள் தங்களது வசிப்பிடங்களில் விட்டுவிட்டு வந்த உடமைகளை ஈடு கட்டும் விதத்தில் தமிழ் ஈழத்தில் வசிக்கும் மக்கள் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளோ வசிப்பிடங்களோ புதிதாக ஏற்படுத்தி தருவது சாத்தியமல்ல. இப்போதும் பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து டெல்லியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் அகதிகளைப் போலவே வாழ்வது இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்நிலையில் சிங்கள மக்கள் வசிக்கும் பகுதிகளில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்களில் மிகப்பெரும்பாலோர் அப்பகுதிகளைவிட்டு பெரும்பாலும் வெளியேற விரும்பமாட்டார்கள்.

அவர்களைத் தவிர 10 லட்சத்துக்கும் மேலான மலையகத் தமிழ் மக்கள் மனப்பூர்வமாக யாழ்ப்பாணத் தமிழர்களோடு ஒரே மொழி பேசுவதால் ஒத்துப் போகக் கூடியவர்கள் அல்ல. யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழர்களும் அவர்களுக்கு அடைக்கலம் தருவர் என்று கூற முடியாது. ஏனெனில் 5 லட்சம் மலையகத் தமிழர்களின் வெளியேற்றத்திற்கு பண்டார நாயகாவுடன் இணைந்து ஒப்புதல் அளித்தது யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழர்களின் பிரதிநிதி செல்வநாயகமே ஆவார்.

இன்று வரை மனப்பூர்வமாக மலையத் தமிழர்களை இங்குள்ள விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள் கூறுவது போல் தங்களது தொப்புள்கொடி உறவுகள் என்று யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழ்மக்கள் பார்ப்பதில்லை. யாழ்ப்பாணத்தில் உழைக்கும் வர்க்கத் தமிழர்களிடமும் வர்க்க உணர்வு மட்டம் குறைவாக இருந்ததால் அது ஏற்படவில்லை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய யாழ்ப்பாண உடமைவர்க்க தமிழ்மக்கள் மலையகத் தமிழர்களை கூலிக்கு வேலை செய்ய வந்த மக்களாகவே அதாவது சிங்கள உடமை வர்க்கத்தினர் பார்க்கும் விதத்திலேயே இப்போதும் பார்க்கின்றனர்.

இந்நிலையில் தமிழர்களுக்கு என்று தனிநாடு ஒன்று ஏற்பட்ட பின்னரும் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ நேரும் தமிழர்கள் மனவியல் ரீதியான ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையுடனேயே அப்பகுதிகளில் வாழ நேரும். இன்று பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் பிரிவினைக்குப் பின்னும் அந்நாடுகளிலேயே தங்கியுள்ள இந்து மக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்களோ அவ்வாறே சிங்களப் பகுதிகளில் வாழ வேண்டியிருக்கும் தமிழ் மக்களும் நடத்தப்படுவர். வங்கதேசத்தில் வசிக்கும் இந்துமக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை தஸ்லிமா நஸ்ஸ்ரீனின் லஜ்ஜா என்ற நவீனத்தை படித்தாலே தெரியவரும். அதைப்போலவே பிரிவினைக்குபின் நமது நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களும் வகுப்புவாத சக்திகளால் அவர்களின் மனம்புண்படும் விதத்தில் விமர்சிக்கப்படுவதையும் நடத்தப்படுவதையும் வகுப்பு மோதல்களுக்கு ஆட்படுத்தப்படுவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

மேலும் எவ்வெப்போது சிங்கள ஆளும் வர்க்கம் நெருக்கடிக்கு ஆட்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் இலங்கையில் சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது ஒரு கட்சி மாறி மற்றொரு கட்சி வெறுப்பையும் அவமரியாதை பேச்சுகளையும் உமிழவே செய்யும் அது சந்திக்கும் நெருக்கடிகளிலிருந்து பெரும்பான்மை சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்பி விட அதனைச் செய்யும்.

இத்தனை கொடுமையாக இராதெனினும் தமிழர் வாழும் கிழக்குப் பகுதியில் தமிழருடன் இணைந்து வசிக்கும் சிங்கள மக்களுக்கும் எங்கு செல்வது எவ்வாறு ஒன்றி வாழ்வது என்பது குறித்த பிரச்னைகள் நிச்சயம் இருக்கவே செய்யும். இவற்றைஎல்லாம் கருத்தில் கொள்ளாது தமிழ் ஈழம் தமிழ் மக்களுக்கு ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தித் தந்துவிடும் என்ற ஒரு கற்பனைச் சித்திரத்தை இங்குள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் முன் வைக்கின்றன.

இது 2006இல் எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் ஒரு பகுதி! இன்று .....

ஆகவே தமிழ்பேசும் மக்கள் புதிய வழிகளில்

பிரச்சினைக்கான தீர்வுகளை நோக்கித் தமது

கவனத்தைச் செலு;த்தவேண்டும். சுதந்திரத்துக்குப்

பின்னர் அமைந்த அரசுகள் மேற்கொண்ட இனவாத

அரசியல் சிந்தனைகள் அவர்களது இலட்சியங்களை

நிறைவேற்ற உதவவில்லை. பதிலாக நாடு பின்

நோக்கித் தள்ளப்பட்டது. இதேபோன்று சிங்கள

பேரினவாதத்திற்கெதிராக உருவாகிய தமிழ்த்

தலைமைகளால் அப்பேரினவாதத்திற்கு எதிரான

எதிர்ப்பு இயக்கத்தைத் தோற்றுவிக்க முடிந்ததே தவிர

உறுதியான தமிழ்த் தேசியக்கட்டுமானத்தை

உருவாக்கத் தவறிவிட்டது.

இவை யாவும் தோல்வி அடைந்தமைக்குக் காரணம்

அவை மக்கள் சார்ந்ததாக அமையவில்லை. பதிலாக

இருபுறத்திலும் காணப்பட்ட அதிகார வர்க்கங்கள்

தமது இருப்பைப் பேணுவதற்காக மேற்கொண்ட

உத்திகளாகும். சிங்களத் தேசியவாத அதிகார

சக்திகளும் தமிழ்த் தேசியவாத அதிகார சக்திகளும்

ஒன்றில் மற்றொன்று தங்கியே செயற்பட்டன. இன்றும்

செயற்படுகின்றன. சாதாரண சிங்கள மக்களும் தமிழ்

மக்களும் இணைந்து செல்ல முடியாதவாறு இந்த

அதிகார வர்க்கங்கள் தொடர்ந்து செயற்பட்டு

வருகின்றன. சிங்களவர்களோடு வாழமுடியாதென ஒரு

புறத்திலும் தமிழர்கள் சிங்கள தேசத்தைப் பிரிக்கி

றார்கள் என மறுபுறத்திலும் இந்த அதிகார வர்க்கங்கள்

தமது சூழ்ச்சி அரசியலை நடத்தி வருகின்றன. இச்

சூழ்ச்சி அரசியலில் பலிகொள்ளப்படுவது சாதாரண

குடும்பங்களைச் சார்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம்

மகக் ளாகும.; இக ;கூறுபோடும ;அரசியலை இனம ;கணடு;

அதற்கு எதிராகச் செயற்படவேண்டியது இந்த மூன்று

இனஙக் ளிலும ;காணபப் டும ;ஜனநாயக சகத் pகளாகும.;

மக்களின் நலன்களுக்கு எதிராகச் செற்படும் அரசியற்

சக்திகளையும் அவர்களது அரசியல் கோட்பாடுகளை

யும் நிராகரிக்க வேண்டியது இவ் ஜனநாயக சக்திகளின்

கடமையாகும். ஒற்றையாட்சிக் கோட்பாடுகளும் தமிழ்

ஈழக் கோட்பாடுகளும் தோல்வி அடைந்துள்ளதை நாம்

வற்புறுத்த வேண்டும். கோட்பாடுகள் நிலைக்க

முடியாதவை என்பது நிதர்சனமாய் உள்ளதால் தமது

இறுதி ஆயுதமாக இராணுவ வலிமையை பயன்படுத்த

தயாராக உள்ளனர். இந்த இரு சாராரும் நடத்தும்

இப்பேரம் மக்களுக்கு உதவப் போவதில்லை. அப்பாவி

மக்களே இக்கொடுமையான பரிசோதனைக்கு

இரையாகப் போகிறார்கள். எனவே இதைத் தடுக்க

ஆவன செய்ய வேண்டும்.

இதற்கான ஒரே வழி இலங்கையில் ஜனநாய

கத்தைப் பலப்படுத்துவதற்கான மாற்றுவழிகளைத்

தேரந்தெடுப்பதுதான். ஒற்றையபாட்சியில் காணப்பட்ட

இனவாத அம்சங்கள் ஜனநாயக விரோத அம்சங்கள்

முற்றாக நீக்கப்பட வேண்டுமாயின் மத்திய அரசில்

குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பரவலாக்கப்பட

வேண்டும். குறிப்பாக தமிழ்ப்பிரதேசங்களில் நிர்வாக

மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அங்கு மீண்டும் ஜனநாயகம்

தழைக்க வழி கோல வேண்டும். இதன்மூலமே மத்தியில்

சர்வாதிகார ஆட்சி தோற்றாமலும் பிரதேசங்களில்

பிரிவினைவாதம் தலைதூக்காமலும் தடுக்க முடியும்.

இவ்வாறான அம்சங்கள் சமஷ்டி ஆட்சித்

தத்துவங்களில் நிறையவே காணப்படுகின்றன.

இலங்கையில் சமஷ்டி ஆட்சி தோற்றுவிக்கப்பட

வேண்டும் என்ற வாதத்தைவிட சமஷ்டி ஆட்சித்

தத்துவங்கள் இலங்கை அரசியல் அமைப்பில்

இணைக்கப்படவேண்டும் என்பதை வற்புறுத்துவதே

பொருதத் மான அணுகுமுறையாகவும ;இருகக் முடியும.;

சமஷ்டிக் கோட்பாடுகள் அல்லது சமஷ்டி ஆட்சி முறை

நாட்டுப் பிரச்சினைக்கான வாய்ப்பாக அமையும் என்பது

பெரும்பான்மையினரின் கருத்தாக உள்ளது. அதில்

சில நியாயங்கள் உண்டு.

ஆனால் இனப்பிரச்சினையின் கூர்மையைத்

தணிப்பதற்கான எந்தவிதமான முயற்சிகளையும்

எடுக்காமல், முன்வைக்கும் கருத்துகளை இனரீதியாகப்

பார்ப்பதும் எதிர்ப்பதும் பிரச்சினைகளைத் தீர்க்க

உதவாது. உதாரணமாக, அதிகாரப் பரவலாக்கத்

தையோ சமஷ்டி ஆட்சி முறையையோ தாம் ஏற்கப்

போவதில்லை எனவும் இவை யாவும் மேலும் இன

விரிசல்களை ஏற்படுத்து எனவும் வாதிக்கின்றனர்.

வடக்கு கிழக்கிற்கு வெளியில் பெரும்பான்மைத்

தமிழர்கள் வாழ்வதால் வடக்கு கிழக்கிற்கான

அதிகாரப் பரவலாக்கமோ அல்லது சமஷ்டி ரீதியிலான

தீர்வுகளோ தமிழர்களில் சிறுபான்மையினருக்கான

தீர்வாக அமையும் எனவும் இதனால் ஏனைய ஏழு

மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் வட

கிழக்கு மக்களுக்கும் இடையே விரிசல்கள் ஏற்படும்

எனபதே அவரக் ளது வாதமாகும்

சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிக் கோட்பாடு

களை இனரீதியான பார்வையினூடாக மட்டுமே

ஜேவிபியினர் பார்க்கின்றனர். அதற்கு அப்பாலும்

அவர்கள் கவனம் செலுத்தவேண்டும். நாட்டை

இனப்பிரச்சினை மட்டுமல்ல, பெரும்பான்மை என்கின்ற

சர்வாதிகாரம் ஜனநாயக வழிகளைத் தனது நலன்

களுக்கு உபயோகப்படுத்துவதும் நடந்தேறுகிறது.

சிங்களப் பெரும்பான்மை என்பது சிறுபான்மை

இனங்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. வாக்குப்

பெரும்பான்மை என்பதால் நிறைவேற்று அதிகாரம்

கொண்ட ஜனாதிபதி ஆட்சி என்ற பேரால் சர்வாதி கார

ஆட்சி நிறுவப்பட்டது. இதனால் ஜேவிபியின்

தலைவர்கள் ஒழிக்கப்பட்டார்கள். கடந்த 25ஆண்டு

களுக்கு மேலாக இலங்கையில் ஒரு நிலையான அரசு

தோற்றம் பெறவில்லை. இதன் காரணம் நாட்டில்

நிலவிவரும் ஆட்சி அமைப்பு முறையாகும்.

இந்த ஆட்சி அமைப்பு முறை மாற்றப்படவேண்டும்

என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியிலே வாழும்

ஜனநாயக சக்திகள் மத்தியிலே ஆழமாக வேரூன்றி

வருகிறது. இவ் ஆட்சிமுறை மாற்றம் நாட்டின் தேசிய

இனங்களின் நலன்களுக்கும் உகந்தது என்பதால்

சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்

கட்சிகள் இவ் ஜனநாயக நீரோட்டத்தில் இணைய

வேண்டும். பெரும் சக்தியாக மாற்றம் பெறவேண்டும்

இந்த இறுதி நேரத்திலாவது இம்முயற்சிகள்

தீவிரமாக்கப்படாவிடில் நிலைமை மோசமாகிவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் நாடுகளில் பல்வேறு தேசிய இனங்களுடன் அனுசரித்து வாழும் நாங்கள் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் பிரிந்து வாழவேண்டும் என்ற கருத்தை நிலை நிறுத்த முடியாது. இலங்கையில் வாழும் தமிழ்மக்களுக்கான பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பது எமது கடமையாகின்றது. பிரிந்து செல்லுதலும் தனியாக நாட்டை உருவாக்குதலும் தான் தீர்வு என்ற எண்ணத்தை புலம்யெர் தமிழனோ அல்லது இந்தியனாக இருக்கும் தமிழனோ முன்வைக்க முடியாது. தாயகத்தில் உள்ள மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழுதல் தமக்கு நல்லது என்ற நிலையில் இருந்தால் அதை அவர்கள் செய்வார்கள். அதற்கு குறுக்கே நாம் செல்ல முடியாது. தமிழர்கள் தனியாக ஒரு நாட்டை உருவாக்கி அதை ஆழ முடியாது என்பது தமிழனாக இருக்கும் ஒவ்வொருவனுக்கும் தெரிந்த விடயம். அதற்குரிய தகுதி இந்த இனத்திற்கு இல்லை என்பது வெளிப்படையான உண்மை. இந்த உண்மை நிலைக்கு மாறாக கருத்துக்களை விதைப்பதும் பிடிவாதம் பிடிப்பதும் சிங்களப் பேரினவாதத்தை அதன் வீரியத்துடன் தக்கவைத்து எஞ்சிய தமிழர்களையும் பலியெடுப்பதற்கு மட்டுமே பயன்படும். சுருக்கமாகச் சொன்னால் புலம்பெயர்ந்த தமிழன் தாயகம் சென்று அங்கிருந்து கொண்டு எமக்கும் சிங்களவனுக்கும் ஒத்துவராது நாம் தனியே வாழவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கலாம். தமிழகத் தமிழன் நான் இந்தியன் இல்லை தமிழன் என்ற நிலைக்கு மாறி தமிழக மீனவர்களை சிங்களப்படைகள் கொல்வதற்கு எதிராக போராடும் போது தமிழனுக்கான தனிநாடுபற்றி பேசலாம். எதிர்காலம் என்பது சிங்கள மக்களுடன் இணைந்து கல்வி பொருளாதராம் போன்றவற்றில் முன்னேற்றம் காண்பதே தாயக மக்களுக்கான விடுதலை தவிர தேசியவாதத்தை திரும்ப தூக்கிப்பிடிப்பதாக இருந்தால் அழிவில் இருந்து மீள முடியாது. நாம் ஒரு இனமாக வலிமை பெற்ற பின்னரே இனத்தின் விடுதலையும் அது தன்னைத் தானே ஆழும் தகுதியும் உருவாகு

இது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியவிடயம் தானே...

தமிழினத்தை பொறுத்தவரை ஒற்றுமையாவது என்பது நடக்காத காரியம் எவ்வளவு தான் கல்வியறிவிலும் சரி,பொருளாதாரத்திலும் சரி முன்னேறினாலும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு வாழும் நிலை

தமிழினத்தின் பிறவிக்குணம் சொந்தமாக சுயமாக சிந்தித்து செயற்பட இன்னும் பல காலம் ஆகும். மற்றவன் கார் வைத்திருந்தால் நானும் வைத்திருக்கணும்,மற்றவன் வீடு வாங்கினால் நானும் வீடு வாங்கணும்

யாராச்சும் நல்லா திருமணவீடு செய்தால் அதை விட சிறப்பா கடன் பட்டாவது செய்ய வேண்டும் என்ற போட்டி,பொறாமை நிறைஞ்சவங்க ..இதே அக்கறை நாட்டின் மீதோ,நாட்டு மக்கள் மீதோ இல்லை

இதுவே எம்மினத்தின் சாபக் கேடு...எந்த ஒரு இனத்தை எடுத்தாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை நம்மில் இல்லை .

தமிழினத்தை பொறுத்தவரை சேர்ந்து வாழ்தலே தற்போதைய நிலையில் சரி என தோன்றுது..

இரண்டாம் உலக யுத்தத்தின் போது யப்பானின் ஹீரோசீமா,நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி அழித்த போதும் யப்பான் இன்று அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும்

ஒன்றித்து வாழவில்லையா? உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்கிறதே அது போல ஜேர்மனி பிரித்தானியா தலைமையிலான நேச நாடுகளால் சிதைக்கப் பட்ட போதும்

இன்று ஜேர்மனி ஜரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாய் இருக்கிறது...

இன்று எமக்கு தேவை புத்திசாதுரியத்துடனான செயற்பாடுகள் மாத்திரமே

வலிமையைப் பெற்றுக் கொள்ளத்தானே நடையாய் நடக்கின்றோம்இ கூச்சல் போடுகின்றோம்இ இன்னும் என்னென்னவோ செய்கின்றோம்.

யூதர்கள் போன்று வலிய இனமாய் வளர்ந்து மேற்கு நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் பெரிய சக்தியாக நாம் உருவாகும்போதுஇ எமது பலத்தைப் பார்த்துப் பயந்து அமெரிக்காவும்இ ஐரோப்பிய நாடுகளும் இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளை மீட்டுத் தருவார்கள். நாங்கள் எமது சந்ததியினருடன் அங்குபோய் குடியமர்ந்து அணுகுண்டு செய்து சிங்களப் பகுதிகளையும் ஆக்கிரமிப்போம்.

தமிழர்களும் உலகில் இருந்த எவருக்கும் இளைத்தவர்கள் இல்லை!

போராட்டம் ஆரம்பித்தபோது தமிழ்சனத்தின் எண்ணிக்கை 45 லட்சம் என்று அண்ணளவாக சொன்னார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் பத்து லட்சத்திற்கும் மேலாக சனம் இடம் பெயர்ந்து விட்டது. கனடாவில் மூன்று லட்சம் இந்தியாவில் மூன்று லட்சம். மதவாரியாக இஸ்லாமிய மக்கள் ஒதுங்கி விட்டார்கள். பிரதேசவாரியாக கிழக்குமக்களுக்கும் வடபகுதி மக்களுக்கும் விரிசல். தென்னிலங்கையில் ஒதுங்கிய மக்கள்.அரபு நாடுகளில் பொருளாதார மேம்பாடு நாடிச் சென்ற மக்கள், இன்றும் எப்படியாவது வேறு ஒரு நாட்டுக்கு சென்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மக்கள். கடசியாக போரின் சுமையை சுமந்து சலித்த எஞ்சிய மக்கள். இவ்வாறு தமிழினம் இலங்கையில் இனமாகவே இல்லை என்பதே யதார்த்தம் ஆனால் இந்த இனம் குறித்தும் அதற்கான தனியரசு குறித்ததுமான கருத்து மட்டுமே தமிழ்த்தேசியவாதமாக மேலோங்கி நிற்கின்றது. தமிழர் தரப்பின் ஆயுதப்போராட்ட பலம் இருக்கும் வரையில் இனம் அடியொட்ட சிதைந்துகொண்டிருந்தது கண்ணுக்குத்தெரியவில்லை. ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்ததும் தேசியவாதம் சூனியமாக தெரிகின்றது. எந்த ஒரு பிடிமானமும் இல்லாத சூழ்நிலைக்குள் இனம் நிர்கதியாகிக் கிடக்கின்றது. ஆனால் இந்த நிலை குறித்து எந்த மாற்றத்தையும் செயலலளவில் தமிழர்கள் உருவாக்கும் நிலையில் இல்லை. புலம்பெயர்ந்த தமிழன் அந்தந்த நாடுகளில் நிரந்தரமாகும் முயற்சியிலேயே உள்ளான். தமிழகத்தமிழன் இந்தியனாகவே இருக்கின்றான். மேலும் உள்ளகமாக அவனவன் அந்தந்த சாதியின் பெயரில் பிரதேசத்தின் பெயரில் தொடரவே விரும்புகின்றான் தவிர அதை உடைத்து தமிழனாக இனவாரியாக ஒன்றுபட முடியாத நிலையில் உள்ளான். உள்ளகமாக தொடர்ச்சியான வர்க்கப்போராட்டம் மருத்துவர்களாகவும் பொறியியலாளளர் ஆவது குறித்ததுமான சிந்தனைகள் செயற்பாடுகள் போராட்டங்களே உள்ளது தவிர தமிழ்த்தேசியவாதத்தை கட்டியெழுப்புவது குறித்தல்ல. சிங்களவன் தமிழினத்தை ஒடுக்கியது ஒருபுறம். அது இன்றும் தொடர்கின்றது. ஆனால் நாம் நாமாக இனத்தை துறந்து வெளியேறியதே சிங்கள ஒடுக்குமுறைக்கும் மேலான செயல். அது எமது அறிவுக்குப் புலப்படவில்லை. நாம் சாதியாக இனத்தில் இருந்து விலகினோம் வர்க்கமாக அது உருவாக்கிய கருத்தாக புலப்பெயர்வாக மதவாரியாக பிரதேசவாரியாக இப்படி எல்லாவிதத்திலும் தேசியவாதத்தில் இருந்து செயலலளவில் விலகி கருத்தளவில் தேசியவாதம் பேசுகின்றோம். எம்மை நாம் ஏமாற்றுகின்றோம் அவ்வளவுதான். யூதன் எப்பவும் யுதன். தமிழனையும் யூதனையும் ஒப்பிடுவதைப்போல் அபத்தம் ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதரில் இரண்டு குணம் உண்டு! நல்ல குணம்,கெட்ட குணம்.

தமிழரிலும்தான்!

இன்றைய பிரச்சனை தமிழர் சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியுமா?

1.தமிழினத்தை மீள் ஒழுங்கமைத்த விடுதலை புலிகள் மக்களிடையே ஏற்ற தாழ்வற்ற{சமூக(சாதி),பொருளாதார(

வகுப்பு)} ஓர் இனத்தின் உயரிய பண்பான சுய ஒழுக்கம் என்பவற்றில் மிக இறுக்கமான கொள்கையை தமிழினத்தை தலை நிமிர்த்துவதற்க்கு பயன்படுத்தினர்,அத்துடன் நில்லாமல் ஒரு இனத்தின் பண்பாட்டிற்கு மூலாதாரமாக மொழி வளர்ச்சியை பேணினர்.

அடிப்படையில் எமது சமூகத்தில் பல் வேறு பாகு பாடுகளை புகுத்துவதிலேயே தமிழன் ஆர்வமாக இருக்கின்றான் சாதி, வகுப்பு புதிதாக பிரதேச வாதம்

என்னதான் தாம் படித்தவர்கள் என்று பிதற்றினாலும் மனிதர்கள் எல்லாரும் சமன் என்ற அடிப்படையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அதற்குள் கூட படித்தவன்,படிகாதவன் என்ற புதிய ஏற்றத்தாழ்வை உருவாக்குவதற்கு முயலுபவர்கள்.

தமிழினத்தின் நல்ல குணம் புலிகள் என்றால் அதன் கெட்ட குணம் அதை எதிர்ப்பவர்கள்(சமூக பண்பாட்டு ரீதியாக பின் தங்கியவர்கள்).

2.சிங்களவனைபொறுத்தவரை 80 களில் தன்னினத்திலேயே 60,000 பேரைக்கொண்டவன் எப்படி ஒரு காவல் துறையினன் வீட்டில் அவரது குடும்பத்திற்கு அந்த காவல் துறையினன் தகவல் சொல்வது போல் விருந்திற்கு ஆட்கள் வருகிறார்கள் என்று கூறி இறைச்சி சமைக்குமாறு இறைச்சியை கொடுத்து விட்டு பின்னர் ஒரு தகவல் அனுப்பினார்களாம் தான் வேலை இருப்பதால் வர முடியவில்லை விருந்தினரும் வரவில்லை நீங்கள் சாப்பிட்டு விட்டு தூங்குங்கள் என்றுஅந்த உணவை உண்ட பின்னர் தக்வல் அனுPPஇனராம் அந்த குடும்பத்திற்கு நீங்கள் சாப்பிட்ட இறைச்சி உங்கள் குடும்பத்தலைவனையே என்று!

சிங்களவனை இஸ்ரேல் காரன் அண்மையிலதான் மரத்தால இறங்கின இனம் என்று

இரண்டு இனமும் சேர்ந்து வாழுமா? முடியுமா?

இரண்டு இனமும் சேர்ந்து வாழுமா? முடியுமா?

தமிழினத்துக்குப் பதிலாக வேறுஒரு இனமாக இருந்தால் ஒரு வீதம் கூட சேர்ந்து வாழ முடியாது ஆனால் தமிழினத்தால் சேர்ந்து வாழ முடியும். கறுப்பு யூலை தொடக்கம் தென்னிலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்குப் பின்னர் தமிழன் தென்னிலங்கையில் வாழவில்லையா? எத்தனை தமிழனை கடத்தினால் என்ன கொன்றால் என்ன சிறையிலடைத்தால் என்ன இறுதித்தமிழனுக்கு பிரச்சனை வரும் வரை அவனால் தென்னிலங்கையில் வாழ முடியும். ஆயிரம் பேர் படிக்கும் பாடசாலையில் 999 பேரை கொன்ற பின் மீதமிருக்கும் ஒருவன் எஞ்சினியராகும் கனவுடன் படிக்கப்போவான். முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் இதுவரை இராணுவபிரதேசங்களுக்குள் நுழைகின்றார்கள். அது யாழுக்கு மீள போனதும் சரி வன்னி மக்கள் போனதும் சரி அதே நம்பிக்கை தான். எமக்கென்று ஒரு தேசம் அமைப்பது தான் எமக்கு பிரச்சனை தவிர சிங்களவர்களுடன் வாழமுடியும் அல்லது வேறு ஒரு நாட்டில் போய் வாழமுடியும்.

மாற்று இயக்கங்களை கொன்றொளித்தது! முஸ்லீம் மக்களை அடித்து விரட்டியது. சமூகத்தில் சாதாரண குற்றங்கள் செய்தவர்களை போட்டுத்தள்ளியது! மாற்றுக்கருத்தாளர்களின் கழுத்தை நெரித்து கொன்றது! மக்களின் கருத்தை உதாசீனம் செய்தது! வடக்கு கிழக்கு இரண்டாக பிரிய வழி சமைத்தது!அண்டை நாட்டு அரசியல் வாதிகளை போட்டுத்தள்ளியது! இப்படி பல புதிய விடயங்களையும்; செய்தது! ஒரு மனிதனை கொல்வதால் பிரச்சனை தீராது. ஒருவனைக் கொன்றால் இன்னொருவன் அவனை விட மிக மோசமாக வருவான் என்பதற்கு மகிந்தாவும் பொன்சேகாவும் நல்ல உதாரணம்! இந்த சிறய அடிப்படை தெரியாதவர்கள் தான் சமூக பண்பாட்டு ரீதியாக பின் தங்கியவர்கள். :(:):D

இந்த சிறய அடிப்படை தெரியாதவர்கள் தான் சமூக பண்பாட்டு ரீதியாக பின் தங்கியவர்கள்
.

இறுதியில் நல்லதொரு விடயம் சொன்னீர்கள். சமூக பண்பாட்டு ரீதியாக பி;ன் தங்கியவர்களை பற்றிக் கதைத்து இனி என்ன நடக்கப்போகின்றது? ; நீங்கள் சொன்ன அடிப்படைகள் நன்கு தெரிந்து சமூக பண்பாட்டு ரீதியாக முன்நிற்பவர்கள் யார்? அவ்வாறு முன்நிற்கும் தலைவர்கள் கருத்தாளர்களை இனம்காட்டும் பட்சத்தில் மக்கள் அவர்களை பின்பற்றி ஒரு நல்ல பாதையில் பயணிக்க முடியும். எங்களது சமூக அமைப்பு அதன இயக்கம் குறித்தும் எங்களுடைய பண்பாடு குறித்தும் எழுதுங்கள். படித்து நாமும் பயன் பெற வாய்ப்பாக இருக்கும்.

மாற்று இயக்கங்களை கொன்றொளித்தது! முஸ்லீம் மக்களை அடித்து விரட்டியது. சமூகத்தில் சாதாரண குற்றங்கள் செய்தவர்களை போட்டுத்தள்ளியது! மாற்றுக்கருத்தாளர்களின் கழுத்தை நெரித்து கொன்றது! மக்களின் கருத்தை உதாசீனம் செய்தது! வடக்கு கிழக்கு இரண்டாக பிரிய வழி சமைத்தது!அண்டை நாட்டு அரசியல் வாதிகளை போட்டுத்தள்ளியது! இப்படி பல புதிய விடயங்களையும்; செய்தது! ஒரு மனிதனை கொல்வதால் பிரச்சனை தீராது. ஒருவனைக் கொன்றால் இன்னொருவன் அவனை விட மிக மோசமாக வருவான் என்பதற்கு மகிந்தாவும் பொன்சேகாவும் நல்ல உதாரணம்! இந்த சிறய அடிப்படை தெரியாதவர்கள் தான் சமூக பண்பாட்டு ரீதியாக பின் தங்கியவர்கள். :unsure::unsure::lol:

உம்முடைய கதைகளையும் கட்டுரையையும் பார்த்தால் மாற்று இயக்ககாரன் மாதிரி இருக்கிறீர். போராட்டத்தை தொடக்கி விட்டு அங்க எத்தனை பெடியலை சாகடிச்சு போட்டு இங்க ஒளிச்சு இருந்து கொண்டு புலிகள் வசை பாடி பிழைப்பு நடாத்துகிறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இனத்தில் பிளவுகள் இல்லை? எந்த இனத்தில் சுயநலவாதிகள் இல்லை? எம் இனத்தில் கொஞ்சம் கூட உள்ளது அவ்வளவுதான். பிரிந்து கிடந்த தமிழன் ஓரளவுக்காவது ஒரு குடைக்கீழ் ஒற்றுமையாக வந்தது புலிகளின் போராட்டத்தால் தான்.அந்த ஒற்றுமையைக் குலைக்க தொடர்ந்து முயற்சித்து வரும் இந்தியனும் அவர்களுக்குத் துணை போன மாற்று இயக்கத்தவர்களும் தான் குற்றவாளிகள்.புலிகளிடமிருந்

எந்த இனத்தில் பிளவுகள் இல்லை? எந்த இனத்தில் சுயநலவாதிகள் இல்லை? எம் இனத்தில் கொஞ்சம் கூட உள்ளது அவ்வளவுதான். பிரிந்து கிடந்த தமிழன் ஓரளவுக்காவது ஒரு குடைக்கீழ் ஒற்றுமையாக வந்தது புலிகளின் போராட்டத்தால் தான்.அந்த ஒற்றுமையைக் குலைக்க தொடர்ந்து முயற்சித்து வரும் இந்தியனும் அவர்களுக்குத் துணை போன மாற்று இயக்கத்தவர்களும் தான் குற்றவாளிகள்.புலிகளிடமிருந்
  • கருத்துக்கள உறவுகள்

பொண்ட் 007

இவை எல்லாவற்றையும் தெரிந்துகொண்டும், ஏற்றுக்கொண்டும்தானே சென்றவருடம் வரை அவர்களை ஆதரித்தீர்கள்?! அப்போது இவை எல்லாம் சரியென்று தானே சொன்னீர்ர்கள், இப்போது மட்டும் தவறு என்று எப்படித் தெரிகிறது ?? புலிகளையும் மற்றவர்களையும் கேள்விகேட்பதை விடுத்து முதலில் உங்களை நீங்களே கேள்வி கேட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள். ஏனென்றால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்கே சிலவேளைகளில் தெரிவதில்லை.

இப்போது உங்களுடைய பிரச்சனை என்ன? புலிகள் கோட்டை விட்ட ஆத்திரத்தில் எழுதுகிறீர்களா அல்லது இவ்வளவு நாளும் நீங்கள் தேசியத்துக்கு ஆதரவானவராகக் காட்டிக்கொண்டது எல்லாம் வெறும் நடிப்பா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.