Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது வ.ஐ.ச ஜெயபாலன் நடிக்கும் சினிமா பற்றியது

Featured Replies

மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்

இந்தப் பேட்டியி்னை பிரசுரிப்பதன் காரணம் இறுதியில் நமது வ.ஐ.ச ஜெயபாலன் பற்றியும் இருக்கு...

p24a.jpg

''சென்னைக்கு வந்து ஃபுல் ஏ.சி. போட்டு உட்கார்ந்து நாலு நாள் ஆச்சு. இன்னும் மனசைவிட்டு மதுர வெயில் போகலீங்க!'' - 'பொல்லாதவன்' படத்தில் அதிரும் சென்னையின் ஆக்ஸிலேட்டரை முடுக்கியவர் 'ஆடுகளம்' மூலம் மதுரைச் சேவலைச் சிலிர்க்கவிடுகிறார் வெற்றிமாறன்.

''ஆடுகளம்கிற டைட்டிலே உங்களுக்குக் கதை சொல்லும். உண்மையான வீரனுக்கு ஜெயிக்கிறதும் தோற்பதும் முக்கியம் இல்லை. அவனுக்குத் தகுதியான ஆடுகளம் வேணும். தகுதியான எதிரி வேணும். கால்ல கத்தியைக் கட்டிட்டா, சாவுக்குக்கூட தகுதியா மாறணும். அப்படி ஒரு வீரத்தோட ஆடுகளம் இது.''

''இன்னும் கொஞ்சம் கதைக்கு உள்ளே வாங்களேன்...''

''இப்படி ஒரு கதைன்னு முடிவு ஆனதும் நான் தேர்ந்தெடுத்தது மதுரை. ஆனா, அந்த ஊரை, போக வர ரயிலில் பார்த்ததோடு சரி. கதை பண்ண அது மட்டும் பத்தாது. அந்த நகரத்தோட பாரம்பரியம், மொழி, வீரம் எல்லாம் உண்மையா வேணும். மதுரையோட ஒவ்வொரு முக்கியமான வீதியும் படத்தின் சம்பவங்கள் நடைபெறுகிற இடங்களா வருது. இதை ஒரு தனிமனிதனின் கதைன்னு சொல்றதைவிட, ஒரு சமூகத்தைச் சேர்ந்த இரண்டு தலைமுறையின் கதைன்னு சொல்லலாம். எனக்கென்னமோ, நல்லதும் கெட்டதும் மனிதர்களைச் சார்ந்ததில்லை. அது சூழ்நிலையையும் இடத்தையும் பொறுத்ததுன்னு தோணுது. ஒருநாள் நல்லவனா இருக்கிறதும், மறுநாள் அவனே வேற ஆளா மாறுறதும் கண்ணுக்கு முன்னாடி நடந்துக்கிட்டே இருக்கு. நாம ஒவ்வொருத்தரும் பேலன்ஸ் பண்ணி அமைதியாகப் போவதை வாழ்க்கைன்னு நினைக்கிறோம். இது எவ்வளவு தூரம் சரின்னு இந்த ஆடுகளத்தில் சரிபார்த்திருக்கோம்.''

p25b.jpg

''தனுசுக்குச் சடாரென்று பெரிய திருப்பம் கொடுத்தவர் நீங்கள். இப்ப அவரைப் பார்க்க எப்படித் தோணுது?''

''இன்னிக்கு இருக்கிற அருமையான மிகச் சில நடிகர்களில் தனுசும் ஒருத்தர். பளிச்னு பெரும் வீச்சா வந்துட்டிருக்கிற ஆடுகளம், அவருக்கு இன்னும் பெரிய அடையாளத்தைக் கொடுக்கும். நான் பார்த்த அதே தெளிவான தனுஷ்தான். இப்போ வித்தியாசப்பட்டுத் தெரிவது அவரது மனோதைரியம். எந்தப் பாத்திரத்தையும் உள்வாங்கி அதை அதுவாகவே வெளிப்படுத்த முடிகிற அசாத்தியத் திறமை. வெறும் லுங்கி, அடிக்கிற கலர்களில் சட்டை இப்படித்தான் வருவார். ஒரு ஸீனில் பேன்ட் போட்டுக்கிட்டு வருகிற மாதிரி காட்சி வந்திருச்சு. அதில் அவரைப் பார்க்க எங்களுக்குச் சிரிப்பே வந்திருச்சு. இத்தனை மாசமா மதுரைப் புழுதியும் வெயிலும் சுமந்து தனுஷ் ஒரு தினுசாவே இருக்கார். எப்படி அடுத்த படத்துக்குப் போறதுன்னு எங்களையே கேட்கிறார்.''

''ஹீரோயினைத் தேட சிரமப்பட்டீங்களே?''

''ஆமா, மதுரை ரயில்வே காலனியில முன்னெல்லாம் ஆங்கிலோ இந்தியன்ஸ் அதிகமா இருப்பாங்க. தனுஷ் வாழ்க்கையில் அவங்க வர்ற ரோல் முக்கியமானது. அதுக்காக ரொம்பச் சிரமப்பட்டு, ரொம்ப நாள் காத்திருந்து, மும்பையில் இருந்து தாப்ஸிங்கிற புதுப் பொண்ணைப் பிடிச்சோம். கதைக்குத் தேவையான நடிப்பு, இயல்பான முக பாவனைகள்னு புதுப்பொண்ணு பின்னுது. இவ்வளவு நாள் காத்திருந்தது தப்பில்லைன்னு தோண்ற அளவுக்கு நல்லாப் பண்ணியிருக்காங்க. ஆடுகளத்தில் அவங்க பங்கு நிச்சயம் சுவாரஸ்யமா இருக்கும்.''

''கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் ஆடுகளத்தில் பெரிய மீசை வெச்சு கெட்டப்பில் பயமுறுத்துறாரே...''

''தனுசுக்கு இணையாகப் பெரும் பாத்திரத்தில் தோன்றுகிறார் ஜெயபாலன். ஆரம்பத்திலேயே அவர்கிட்டே, 'ஐயா, உங்க புலமை எல்லாம் எனக்குத் தெரியும். ஆனா, இது சினிமா. இதில் எனக்கு உடன்பட்டே ஆகணும். எனக்கு வேண்டி யதைக் கொடுக்க ஆயத்தமா இருங்க!'ன்னு சொன்னேன். அவர், தான் பெரிய கவிஞர்ங்கிற கம்பீரத்தைக் கழட்டி வெச்சிட்டு இதில் வாழ்ந்திருக்கிறார். இனிமேல் அவரை ஜெயபாலன்னு சொன்னா வெளியே தெரியாது. பேட்டைக்காரன் பெரியசாமிதான் இனி அவருக்குப் பெயர்!''

நன்றி விகடன்

இன்னும் சில படங்கள்

aadukalammoviepictures2.jpg

aadukalammoviepictures2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்

இந்தப் பேட்டியி்னை பிரசுரிப்பதன் காரணம் இறுதியில் நமது வ.ஐ.ச ஜெயபாலன் பற்றியும் இருக்கு...

p24a.jpg

-----

-----

''கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் ஆடுகளத்தில் பெரிய மீசை வெச்சு கெட்டப்பில் பயமுறுத்துறாரே...''

''தனுசுக்கு இணையாகப் பெரும் பாத்திரத்தில் தோன்றுகிறார் ஜெயபாலன். ஆரம்பத்திலேயே அவர்கிட்டே, 'ஐயா, உங்க புலமை எல்லாம் எனக்குத் தெரியும். ஆனா, இது சினிமா. இதில் எனக்கு உடன்பட்டே ஆகணும். எனக்கு வேண்டி யதைக் கொடுக்க ஆயத்தமா இருங்க!'ன்னு சொன்னேன். அவர், தான் பெரிய கவிஞர்ங்கிற கம்பீரத்தைக் கழட்டி வெச்சிட்டு இதில் வாழ்ந்திருக்கிறார். இனிமேல் அவரை ஜெயபாலன்னு சொன்னா வெளியே தெரியாது. பேட்டைக்காரன் பெரியசாமிதான் இனி அவருக்குப் பெயர்!''

நன்றி விகடன்

இன்னும் சில படங்கள்

aadukalammoviepictures2.jpg

aadukalammoviepictures2.jpg

பல மாதங்களுக்கு முன்பு யாழ் களத்தில் , நம்ம வ.ஐ.ச. ஜெயபாலன் சினிமாவில் தனுசுக்கு அப்பாவாக நடிக்கின்றார் என்று செய்தி வந்த போது ...... அதனை பொயட் மறுக்கவுமில்லை , ஆமோதிக்கவும் இல்லை.

இப்போது தான் தெரிகின்றது சினிமா தயாரிக்கும் போது அதனை பற்றிய இரகசியங்களை வெளியே விடக்கூடாது என்று எழுதப்படாத சட்டத்தை பொயற் பின்பற்றியிருக்கின்றார் என்று.

எமது யாழ் கள உறவு ஒருவர் சினிமாவில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

பேட்டைக்காரன் பெரியசாமிக்கு வாழ்த்துக்கள். :lol:

Edited by தமிழ் சிறி

எங்கட கவிஞருக்கு வெற்றிமாறனா நடிப்பு சொல்லி கொடுக்க வேணும். நோர்வெயில் நடந்த ஒரு கூட்டத்தில் பாலசிங்கம் சொன்னதை பார்த்தால் தெரியுமே.

  • கருத்துக்கள உறவுகள்

.

வேட்டைக்காரன் பெரியசாமிக்கு வாழ்த்துக்கள். :lol:

கவிஞர் ஜெயபாலன் நடிக்கும் வேடம் பேட்டைக்காரன் பெரியசாமி. வேட்டைக்காரன் அல்ல.வேட்டைக்காரன் படத்தை தமிழனக் கொலைக்கு உடந்தையாக இருக்கும் காங்கிரசு அரசின் மத்திய அமைச்சரவையில் இருக்கும் சன் தொலைக்காட்சி மாறனினால் தயாரிக்கப்படுகிறது.

கவிஞர் ஜெயபாலனுக்கு வாழ்த்துகள்.

வாழ்பவனை வாழ்த்தி தமிழனுக்கு பழக்கமில்லை.

செத்தவனை வைத்து பணம் பார்த்து பழக்கப்பட்டதன் வழக்கம்.

வேடம் , நல்ல கெட்டப்பில் இருக்கிறது. அசத்துவீர்கள் என நம்புகிறேன்.

தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி கந்தப்பு.இப்போ திருத்தி விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கவிஞருக்கு

படம் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டைக்காரன் பெரிய சாமிக்கு ( ஜெயபாலன்) வாழ்த்துக்கள்.

வெற்றியோடு மீண்டும் வருக யாழ் களத்துக்கு .

.பகிர்க உங்கள் அனுபவங்களை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல மாதங்களுக்கு முன்பு யாழ் களத்தில் , நம்ம வ.ஐ.ச. ஜெயபாலன் சினிமாவில் தனுசுக்கு அப்பாவாக நடிக்கின்றார் என்று செய்தி வந்த போது ...... அதனை பொயட் மறுக்கவுமில்லை , ஆமோதிக்கவும் இல்லை.

இப்போது தான் தெரிகின்றது சினிமா தயாரிக்கும் போது அதனை பற்றிய இரகசியங்களை வெளியே விடக்கூடாது என்று எழுதப்படாத சட்டத்தை பொயற் பின்பற்றியிருக்கின்றார் என்று.

எமது யாழ் கள உறவு ஒருவர் சினிமாவில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

பேட்டைக்காரன் பெரியசாமிக்கு வாழ்த்துக்கள். :)

என்னுடைய அபிமானக்கவிஞ்ர் / என்னுடைய நண்பர் ஜெயபாலன் திரைப்படத்தில் நடித்திருப்பது அறிந்து சந்தோசமடைந்தேன்.

அவருடைய கவிதைகளைப்பற்றி சுஜதா எழுதியபின்னர்தான் என்னைப்போன்றவர்களின் பார்வை அவர் கவிதை பக்கம் திரும்பியது. அதேபோல வெற்றிமாறன் மூலம் நடிகனாக பார்க்கிறோம். வாழ்த்துக்கள் நண்பரே.

கே.எஸ்.பாலச்சந்திரன்

கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயபாலனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயபாலனுக்கு வாழ்த்துகள்.

வாழ்பவனை வாழ்த்தி தமிழனுக்கு பழக்கமில்லை.

செத்தவனை வைத்து பணம் பார்த்து பழக்கப்பட்டதன் வழக்கம்.

வேடம் , நல்ல கெட்டப்பில் இருக்கிறது. அசத்துவீர்கள் என நம்புகிறேன்.

அது என்ன பெருந்தன்மையாய் வாழ்த்திவிட்டு பிறகு ஒரு கெட்டப்பில் ஒரு வாக்கியம்?

அது என்ன பெருந்தன்மையாய் வாழ்த்திவிட்டு பிறகு ஒரு கெட்டப்பில் ஒரு வாக்கியம்?

:)இந்த வாக்கியம் பலரை வாழ்த்த வைத்துள்ளது? :D

"நமது வ.ஐ.ச ஜெயபாலன்"

ஐயாவின்... கவிஞரின்... அறிமுகம் தெரியாததால்.... அதுபற்றி அறிய ஆவல் நன்றி. :)

:)

Edited by Netfriend

  • கருத்துக்கள உறவுகள்
:) கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அய்யாவுக்கு எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள். :D
  • கருத்துக்கள உறவுகள்

நல் வாழ்த்துக்கள் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்களே . உங்கள் கலை பயணம் மேலும் வளர வாழ்த்துகிறேன்.

:)

ஜெயபாலன் ஐயா படம் நடிச்சு நம்மவர்கள் மூலம் பட்ட தனது கடன்சுமைகளை விரைவில் இறக்க வாழ்த்துகள்!

+++

இணைய நண்பன் உமது காணொளிகள் மூன்றையும் பார்த்து இருந்தேன். இதை இங்கு செருகாமல் தனித்திரியில் இணைச்சால் மேலும் பலர் பார்ப்பார்களே. வேரும் விழுதும் பகுதியில் இணைச்சுவிடலாமே?

டென்மார்கில் வாழும் இந்த ஈழத்து கலைஞரின் பேட்டி நன்றாக இருக்கின்றது, பல விசயங்களை தெரிஞ்சுகொண்டேன். இணைப்பிற்கு நன்றி

வணக்கம் உறவுகளெ!!!.எனக்கு paris விடுதலை பெண் தீயில் கருகிய சுதந்திர வேட்கை திரைப்படம் இறு வெட்டு இருந்தால் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் :D

கடந்த சில காலமாக செய்திவீச்சு பார்வையில் ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டு இருந்தது ஜி.ரிவியில்

முயற்சி செய்து பாக்கிறன்.

Edited by Kallan

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துரைத்த யாழ்க்கள தோழ தோழியருக்கும் இணைத்த நிழலிக்கும் நன்றி. நான் சினிமா தொடர்பாக ஒன்றும் எழுதுவதில்லை. காரணம் அது எனது வழ்வில் இன்னொரு Adventure. சகசப் பயணம் மட்டுமே. புலம் பெயர்ந்த சில தமிழர்கள் படப்பிடிப்பின்போது வருகை தந்திருந்தார்கள். யாழ்கள தோழர் நோர்வே வசியும் அவரது துணைவி நர்மதாவும் வருகைதந்தனர். மகிழ்ச்சியாய் இருந்தது. இனக்கொலைக்குத் துணிந்த எதிரியாலும் அந்த எதிரியையே உருவாக்கியது போன்ற எங்கள் தவறுகள் பலவற்றாலும் தோற்றும்போன தாய்மண் எரிந்த புல்வெளி மழைக்குத் துளிர்க்கிறதுபோல மீண்டும் செழிக்கும் என்கிற நம்பிக்கையை பகிர்ந்து கொள்கிறேன். மீண்டும் என் பேரன்பும் நன்றியும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளம் படப்பிடிப்பு இந்தவாரத்துடன் முடிவடைகிறது. டிசம்பரில் தொகுப்பு முடிந்தபின்னர் patch work விட்ட தொட்ட குறைகள் செம்மைப் படுத்த படப்பிடிப்பு இருக்கலாம். இரண்டு தலை முறை நாயகர்கள் நாயகிகளைப் பற்றிய கதை. பெரும்பாலும் மாசி மாதத்தில் ஆடுகளம் வெளியாகலாம். தைமாதம் புத்தகக் கண்காட்ட்சிக்கு என்னுடைய குறுநாவல்கள் சில புத்தகமாக வெளிவருகிறது. யாழ்க் களத்தில் எனது முயற்ச்சிகள் தோற்றுப்போனாலும் எமது கலைஞர்களையும் புலம் பெயர்ந்த எமது மக்களையும் கலைஞர்களின் உழைப்பை அங்கீகரிக்கிற வகையில் இணைக்கிற பணி தோற்றுப் போகக் கூடாது. ஈழத்துக் கலைஞர்கள் சார்பாக என்னுடைய கனவை முன்னெடுத்துச் சென்று நனவாக்க யாழ்க் கள தோழ தோழியர்கள் யாராவது முன்வருவார்களா?

தங்களின்

கனவு மெய்ப்படவேண்டும்

காரியம் கைகூட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.