Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் வேட்பாளர் அல்லது பகிஷ்கரிப்பு; இரண்டுமே தமிழருக்கு பயன்தர மாட்டா!

Featured Replies

"இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதோ அல்லது பகிஷ்கரிப்பதோ தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தரா. அப்படி நாங்கள் தமிழ் மகன் ஒருவனுக்கு வாக்களித்தாலோ அல்லது பகிஷ்கரித்தாலோ அது எங்கள் ஜனநாயக உரித்தை நாங்களே விட்டுக் கொடுத்தவர்களாக அமைந்துவிடும்.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். கூட்டமைப்பை வழிநடத்தும் ஒருவரின் வழி காட்டலுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.'' இவ்வாறு வலியுறுத்திச் சுட்டிக்காட் டியிருக்கின்றார் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.

மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழகம் சென்றிருந்த அவர் சில தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தார். தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து முன்னர் பேசப்பட்டபோது, அதற்கு நீதியரசர் விக்னேஸ்வரனின் பெயரும் சில தரப்புகளால் சிபார்சு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தேர்தல் தொடர்பில் அவரது நிலைப்பாட்டை அவரைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.

அப்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு:

தமிழர்கள் இன்று தமது அரசியல் தலைமைத்துவத்தை இழந்து நிற்கின்றார்களோ என்று எண்ணத் தோன்றியுள்ளது. தனிப்பட்ட மனிதர்களின் சுயநலம் மேலோங்கி, அவர்களின் பொறுப்பற்ற வார்த்தைகளினால் தமிழ் மக்களின் மனங்கள் கலக்கத்திலும் குழப்பத்திலும் நீந்திக்கொண்டிருக்கின்றன.

நான் அண்மையில் இந்தியாவில் இருந்தபோது வெளிநாட்டில் இருந்து சில அன்பர்கள் என்னுடன் தொடர்புகொண்டு, தமிழ் மக்கள் சார்பில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் நான் நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு நான்கூறிய பதில் இதுதான்:

1. ஒரு தமிழ் மகன் தனித்துவமாக ஜனாதிபதித் தேர்தலில் நின்று, எல்லாத் தமிழ்ப் பேசும் மக்களும் அவருக்கு வாக்களித்தாலும் கூட எந்த நன்மையும் எமக்குக் கிட்டப் போவதில்லை. முக்கியமான இருவரில் ஒருவர்தான் பதவிக்கு வரப்போகின்றார். தனக்கு விரும்பியதைத்தான் அவர் செய்யப் போகின்றார்.

2. நாங்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தாலும் அதே நிலைதான்.

3. இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் கையாலாகாத் தன்மைøயையே வெளிக்காட்டும். மேலும் தங்களின் ஜனநாயக உரித்தை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை என்பதையும் அது எடுத்துக்காட்டும்.

4. இதுவரை காலமும் தேர்தல்களில் தமிழ் மகன் ஒருவரை நிறுத்துவது, தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்பன போன்ற காரியங்கள், தமிழ் மக்களின் பின்னணியில் ஆயுதம் தாங்கியோர் உறுதுணையாக இருக்கின்றனர் என்ற எண்ணத்தில், தமது தனித்துவத்தைக் காட்டும் விதத்தில், நடைபெற்றிருக்கலாம். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் அதே வழிமுறைகளைப் பின்பற்றுதல் சரிதானா என்று யோசிக்க வேண்டும்.

5. இந்த நிலையில் பதவிக்கு வர எத்தனிக்கும் இருவரையும் சந்தித்துத் தமிழ் மக்களுக்கு அவர்களிடமிருந்து பெற்றுக் கொடுக்கக்கூடிய ஆகக்கூடிய நன்மைகள் என்னவென்பதை ஆராய்ந்து பார்ப்பதே சிறந்தது.

இப்படி நான் அவர்களுக்குப் பதில் கூறினேன்.

இன்று இதைத் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு உணர்ந்து செய்வதையிட்டு மகிழ்வுறுகிறேன். இருவரிடமும் பேசிப் பார்த்து எவ்வாறு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தியம்ப வேண்டும். கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பேசுவதை நிறுத்தவேண்டும். கூட்டமைப்பை வழிநடத்தும் ஒருவரின் வழிகாட்டலுக்கே முதலிடம் கொடுக்கவேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம். நாங்கள் தமிழ் மகன் ஒருவருக்கு வாக்களித்தாலோ, தேர்தலைப் பகிஷ்கரித்தாலோ எங்கள் ஜனநாயக உரித்தை நாங்கள் விட்டுக் கொடுத்தவர்களாகவே அது அமையும்.

எங்கள் கைகளில் "வாக்கு" என்ற பலத்த ஆயுதம் ஒன்று இருப்பதை நாங்கள் மறத்தலாகாது. சௌமியமூர்த்தி தொண்டமான் மலைநாட்டுத் தமிழ்ச் சகோதர, சகோதரிகளை வழிநடத்தியபோது "வேலைநிறுத்தம்" என்ற பாரிய ஆயுதத்தைப் பாவித்தார். முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் உரித்துகளைப் பெற்றெடுக்க மத ரீதியாகத் தமக்கு உதவி செய்யக்கூடிய நாடுகள் இருப்பதை ஒரு ஆயுதமாகவே பாவித்தனர். ஆனால் இலங்கைத் தமிழ் மக்கள் ஆயுதத்தில் நம்பிக்கை வைத்து இன்று செய்வதறியாது இருக்கின்றனர். அப்படி இருப்பினும், தமிழ் மக்கள் எல்லா ஆயுதங்களையும் இழந்த நிலையில் இருக்கின்றார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிடக் கூடாது. ஜனநாயக ரீதியில் பார்த்தால் தமிழ்ப் பேசும் மக்களின் ஒற்றுமை ஒரு பெரிய ஆயுதம். உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோமானால் வரும் "பொதுத் தேர்தலில்" இரு பெரிய கட்சிகளும் கிட்டத்தட்ட சமபலம் பெற்றிருந்தால் அவர்களில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர்களே அரசு அமைக்கத் தமிழ் மக்கள் உதவுவர். சென்ற தடவை 22 பேர் நாடாளுமன்றுக்குத் தெரிவானார்கள். இம்முறை அந்த ஒற்றுமையை நாம் இழந்து விடுவோமானால் எங்களின் ஒரே ஆயுதத்தையும் நாங்களே விட்டெறிந்த நிலைக்கு வந்துவிடுவோம். தமிழ் மக்களின் ஒற்றுமை இந்த நாட்டின் ஜாதகத்தைக் கணிக்க உதவும். பதவியில் இருக்கும் ஒருவரைக் கீழே இறக்கவும், இன்னொருவரை மேலே ஏற்றவும் தமிழ்ப் பேசும் மக்களால் முடியும் என்பதைச் சிலர் அறிந்திருக்கின்றபடியால், தமிழ்ப் பேசும் மக்களிடையே வேற்றுமைகளை விதைக்க அவர்கள் பாடுபடுகின்றனர். எங்களின் வேற்றுமைகள் அவர்களுக்கு உதவும். எங்கள் ஒற்றுமை எங்களுக்கு உதவும். இவ்வளவுதான் என்னால் கூறமுடியும். என்றார் நீதியரசர் ஸி.வி. விக்னேஸ்வரன்.

http://www.uthayan.com/Welcome/full.php?id=2479&Uthayan1261964443

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வந்த செய்தியின் சுருக்கம்.. தமிழர்கள் "கிங் மேக்கர்" ஆக இருந்தால் பல சலுகைகளை/உரிமைகளைப் பெற்று இருக்கலாம். இதை விளங்காமல் 30 வருடமாகப் போராடி அழிவுதான் கண்டது மிச்சம் போலுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு சரியான அரசியல் தலைமையாக இல்லை என்பதையும், உறுதியற்ற உதிரிகளின் கூட்டு என்பதையும் அண்மைய செயற்பாடுகள் சொல்லுகின்றன. தமிழர்களின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் சரியான அரசியல் போக்கோ, அரசியல் தெளிவோ த.தே.கூ விடம் இல்லை என்றே படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் நிற்பதாலும், தமிழர்களைக் கொன்ற இருவரில் ஒருவருக்கு ஆதரவு தெரிவிப்பதாலும், அல்லது பகிஸ்கரிப்பதாலும் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை தமிழர்களுக்கு தெளிவுபடுத்துவதை விட்டுவிட்டு, தமிழ்மக்களின் நாடியைப் பிடித்துபார்க்க முயல்கின்றார்கள். அதன்மூலம் தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகச் சொல்வது இவர்களின் அரசியல் அறிவின் வங்குரோத்தைத்தான் வெளிப்படுத்துகின்றது.

வன்னியில் எமது மக்களைக் கொடூரமாகக் கொலைசெய்தவர்கள், சரணடைந்த போராளிகளை சுட்டுக்கொன்றவர்கள், பலரை இன்னமும் வெளியுலகத் தொடர்பின்றி சிறைக்குள் அடைத்துவைத்திருப்பவர்களுடன் பேரம் பேசுகின்றார்கள். மக்களின் விருப்பங்களையும், அவர்களின் மானத்தையும், உணர்வுகளையும் எதிர்காலத்தையும் பேரத்தில் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. மாறாக சர்வதேச போர்க்குற்றவாளிகளாக வரக்கூடியவர்களை அங்கீகரிக்கவே முயல்கின்றார்கள்.

2இல் ஒருவருக்கு வாக்களிக்குமாறு கூறுவதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டியவர்களை தப்ப வைக்கத்தானே உதவும். ஒருவர் வென்றாலும் மற்றவரைக் காட்டிக் கொடுக்க மாட்டார்.ஏனெனில் தாங்கள் மாட்டிக் கொள்ள வேண்டிவரும் என்பதற்காக.மகிந்த வென்றால் எந்த பேரத்தையும் நிறைவேற்ற மாட்டார்.ஏனெனில்சிறிலங்கா அரசியல் அமைப்புப்படி ஒருவர் 2தடவைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குற்றவாளிக்கூண்டில ஏத்தவேண்டிய ஆக்கள் யாரெண்டு அங்க இருக்கிற மக்கள் டிசைட் பண்ணட்டும். கலோ எண்டமுதல் கிலோ கணக்கில அனுப்பிப்போட்டு அவருக்குப்போடு இவருக்குப்போடு எண்டிறது பணத்திமிரை காட்டுது. இங்க எங்கயோ நாங்கள் பணம் அனுப்பிறம் எங்கட சொல்லு கேக்கவேணும் எண்டு வாசிச்சன்...... அளவு மீறின அடாவடித்தனத்தைத்தான் உது காட்டிது. சிவாஜிலிங்கமோ கூட்டமைப்போ மக்களோ தங்களுக்கு என்ன தேவை எண்டதை முடிவுசெய்ய விடவேணும். தங்கட இருப்ப பாதுகாக்கிறதுக்கான எழுத்தும் சண்டைக்கான முன்னெடுப்பும், எத்தினை முள்ளிவாய்க்கால் வந்தாலும் இங்க இருக்கிற கொஞ்சப்பேருக்கு சண்டை தேவைப்படுது, அதுக்கான முன்னெடுப்புக்காக அங்க ஆக்களுக்கு காசுகுடுத்து துடங்க நிக்கினம் என்றதுதான் உண்மை. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மதிவதனன்,

உங்கள் கருத்துக்கள் பலவற்றில் உண்மைகளை எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் எழுதும் விதம், உங்களுடன் மாறுபட்ட கருத்து கொண்டவர்களை சிந்திக்க தூண்டுவதற்கு பதிலாக கோபப்பட வைப்பதை அவர்களது பதில்களில் இருந்து அவதானிக்க கூடியதாக இருக்கிறது. நடந்த சம்பவங்கள் உங்களையும் மற்றவர்களையும் என்னையும் பாதித்திருக்கின்றன. அந்த அழிவுகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளும் நிச்சயமாக பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள். அதை நாங்கள் எல்லோரும் அறிவோம். இங்கே எழுதும் பலர் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது நிறைந்த அளவு நம்பிக்கை வைத்திருந்தவர்கள், இன்னமும் நம்பிக்கை வைத்திப்பவர்கள் நிறையப்பேர். தமிழீழ விடுதலைப்புலிகள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் மக்கள் பெருமளவிலானவர்கள். இவர்களும் நீங்களும் நாம் எல்லோருமே உறவுகளை இழந்து நொந்து போயிருக்கும் நிலையில், நாம் ஒருவரை ஒருவர் தொடர்ந்தும் மனம் நோக வைப்பதில் என்ன பயனை காணப் போகிறோம்? நீங்கள் எழுதும் கருத்துகள் பயனுள்ளவை, உண்மைகளை எழுதுகிறீர்கள், மற்றவர்கள் அவற்றை படித்து சிந்திக்க வைக்கும் விதத்தில் எழுதினால் இனிமேலாவது எமது மக்களுக்கு விடிவு கிடைக்க உங்கள் பங்களிப்பாக அதுவும் அமையலாம் அல்லவா?

நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டிருக்க கூடும். உங்களை குறை காணும் நோக்கத்தில் நான் இதனை எழுதவில்லை. உங்கள் பங்களிப்பின் பயன் கருதியே இதனை களத்தில் எழுதியுள்ளேன்.

நன்றி.

குற்றவாளிக்கூண்டில ஏத்தவேண்டிய ஆக்கள் யாரெண்டு அங்க இருக்கிற மக்கள் டிசைட் பண்ணட்டும். கலோ எண்டமுதல் கிலோ கணக்கில அனுப்பிப்போட்டு அவருக்குப்போடு இவருக்குப்போடு எண்டிறது பணத்திமிரை காட்டுது. இங்க எங்கயோ நாங்கள் பணம் அனுப்பிறம் எங்கட சொல்லு கேக்கவேணும் எண்டு வாசிச்சன்...... அளவு மீறின அடாவடித்தனத்தைத்தான் உது காட்டிது. சிவாஜிலிங்கமோ கூட்டமைப்போ மக்களோ தங்களுக்கு என்ன தேவை எண்டதை முடிவுசெய்ய விடவேணும். தங்கட இருப்ப பாதுகாக்கிறதுக்கான எழுத்தும் சண்டைக்கான முன்னெடுப்பும், எத்தினை முள்ளிவாய்க்கால் வந்தாலும் இங்க இருக்கிற கொஞ்சப்பேருக்கு சண்டை தேவைப்படுது, அதுக்கான முன்னெடுப்புக்காக அங்க ஆக்களுக்கு காசுகுடுத்து துடங்க நிக்கினம் என்றதுதான் உண்மை. :unsure:

மதிவதனங்,

புலத்தில் இருப்பவர்கள் தங்கட உறவுகளுக்கு காசு குடுக்கிறதும் யாருக்கு வாக்குப்போடவேனுமேண்டு சொல்லுறதும் அவர்களின் குடும்ப விஷயம்.

ஆனா துவக்கி காட்டி மிரட்டி வாக்கு போடச்சொல்வதுதான் அராஜகம்.

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் வித்யாதரன் அவர்களின் பேட்டியிலிருந்து..

தமிழர்கள் இந்தத் தேர்தலை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம். இரு கொலைகாரர்களுள் யாரை தெரிவு செய்வது என்பதே தமிழர்கள் முன்னுள்ள கேள்வியாகும். இதற்கு இலங்கையின் அரசியல் யாப்பை விளங்கிக்கொள்வது அவசியமாகிறது.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற பலம் இல்லாதுபோனால் அவரால் முழு அளவில் செயல்படுவது முடியாத ஒன்றாகும். சந்திரிகா காலத்தில் ரணில் புலிகளுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு சந்திரிகாவுக்கு அதனைக் காட்டியது குறிப்பிடத்தகுந்தது.

இப்படியான ஒரு நிலையில், மகிந்த நாடாளுமன்ற பலத்துடன் நிறைவேற்று ஜனாதிபதியாக பிற்காலத்தில் நிலைப்பது தமிழர்களுக்கு மேலும் அழிவைக் கொடுக்கக் கூடிய ஒரு நிலையாகும். மாறாக சரத் பொன்சேகா (தமிழனை அழித்தவராக இருந்தாலும்) ஜனாதிபதியாக வருவது, நாடாளுமன்றத்துக்கும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் முறுகல் நிலையே காணப்படும். ராணுவ அதிகாரியாக இருந்த பொன்சேகா எந்த ஒரு கட்சிக்கும் தலைவராக நியமிக்கப்படப் போவதில்லை. எனவே அவர் நாடாளுமன்றத்தை தன்வசம் கொண்டுவருவார் என்பது நடக்காத விடயம். ஏதாவது ஒரு கட்சி நாடாளுமன்ற அதிகாரத்தையும், சரத் போன்ற ஒரு தனிநபர் ஜனாதிபதி அதிகாரத்தையும் கொண்டிருப்பது நமக்கு நன்மை தரலாம்.

மேலும், ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி இலங்கையின் ஜனாதிபதியாக இருப்பது, பாகிஸ்தானின் முஷாரஃப், அல்லது மியான்மர் ஆட்சியாளர்கள் போன்றதொரு தோற்றத்தையே சர்வதேச அளவில் ஏற்படுத்தும். நாடும் மேலும் ராணுவமயமாக வாய்ப்பு அதிகம். இலங்கைத் தீவு மேலும் ராணுவமயமாதல்பற்றி தமிழர்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏற்கனவே ஒரு காட்டுமிராண்டி ராணுவ ஆட்சிதான் தமிழரைப்பொறுத்தவரை அங்கு நிலவுகிறது. சிங்களவருக்கே இது தலையிடியாக அமையும். சர்வதேச அளவில் போர்க்குற்றங்கள் வெளிவர இந்தச் சூழ்நிலை அனுகூலமாக அமையலாம்.

திரு. வித்யாதரன் அவர்களின் கருத்து சரியனதாகவே படுகிறது.

எமது நிலையில் மகிந்தவின் அராஜக ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும்.பல பெண்கள் இன்று தமது உயிரை காப்பாற்ற தமது உடலை கொடுக்க வேண்டியுள்ளது கேடு கெட்ட இராணுவ மிருகங்களுக்கு. தன்னை யாரும் கேட் காத நிலையில் தான் நினைத்ததை மகிந்த சாதிப்பது மட்டுமல்லாது வாழ்கையை சந்தோசமாக அனுபவித்து கொண்டு இருக்கிறார். யாரும் இவரை கேள்வி கேட்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.அடுத்த தெரிவு சரத் தான். கூட்டமைப்பினர் சரத் - ரனில் கூட்டுடன் ஏதாவது ஒரு உடன்பாட்டுக்கு வந்து இவரின் வெற்றிக்கு உறுதுணையாகலாம்.சிவாஜிலிங்கம் அவர்கள் மேல் பலத்த சந்தேகம் உண்டு.மேலும் இவர்களில் ஒருவருக்கு வாக்களிக்காத போது வெற்றியீட்டுபவர் மேலும் பழிவாங்கவே முற்படுவாரே ஒழிய தமிழர் பிரச்சனையில் கண்டும் காணா போக்கையே மேற்கொள்வார்.

எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

கடந்த சனாதிபதித் தேர்தலில் புலிகள் வாக்களிப்பதை விரும்பவில்லை என்றுதான் சொன்னார்கள்... மக்கள் தான் வாக்களிக்காமல் விட்டார்கள். யாழ் குடாநாடு இராணுவத்தின் கட்டுப்பட்டில்தானே இருந்தது.

சரி அதுபோகட்டும் பாராளுமன்ற தேர்தலில் வன்னி மக்களை வாக்களிக்க விடாமல் இராணும் தடுத்தது அது என்ன வகையில் சரி?

வாக்களிக்க மக்கள் விருப்பம் இல்லாமல் இருந்தால் அது புறக்கணிப்பு என்றுதான் பொருள். கடந்த சனாதிபதி தேர்தலை புலிகள் விரும்ப வில்லை... அதனால் மக்கள் புறக்கணித்தார்கள். அதுக்காக புலிகள் தான் காரணம் என்று சொல்வது உண்மையை மறைப்பதுக்குத்தானே ஒழிய பிழையை திருத்துவதுக்கு இல்லை.

புலிகளை தடை செய்யும் நிலையை ஐரோப்பிய ஒன்றியம் ஏலவே எடுத்து விட்டது அவர்களுக்கு ஒரு காரணம் வேண்டும் அதுதான் அது.

புலிகள் பல சந்தர்ப்பங்களை விட்டார்களா என்பது பிறிதொரு தலைப்பு... அதைப்பற்றி சரியாக பிறிதொரு திரியில் ஆராய்வோம்.

எல்லாத்துக்கும் சும்மா புலிப்பாட்டும் எதிர்ப்பாட்டும் பாடாமல்... ஆக்க பூர்வமா எதையாவது ளழடடரபெமழ.

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுறுத்தி வோட்டு போடாமல்பண்ணலாம், வோட்டு போடப்பண்ணமுடியாது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் வோட்டு போடாமல் பண்ணியதன் விளைவாக ஐரோப்பிய யூனியனின் தடையை சம்பாதிக்கப்போவதாக பாலாமாமாமா சொன்னார் சொன்னதுபோலவே நடந்து முடிந்தது. விரும்பியபடியே ராஜபக்சாவை கொண்டுவர முடிந்தது. உங்களுடைய நிகழ்ச்சிநிரலுக்கேற்ப உலகநாடுகளின் அநுசரணையுடன் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தது. அச்சுறுத்தி 3 1/2 லச்சம் மக்களை கூட்டிச்சென்று பலிகொடுக்கமுடிந்துள்ளது, அச்சுறுத்தி ஓருயிரைக்கூட காப்பாற்ற முடியாதுபோயுள்ளது. யாழ் ஆயர் சொல்லியதை நினைவுகூருவோம், 30 வருட அச்சுறுத்தல் முடிந்து அமைதி ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து யாரால் அச்சுறுத்தல் இருந்தது என்பது விளங்குகின்றதா? யார் அராஜகம் செய்தனர் என்று ...... :unsure:

அதை தானே மீண்டும் கேட்றேன் எப்படி ஒட்டு குழு அமைச்சர்(??) பெற்று கொண்ட வாக்குகள் 40தே வாக்குகள். எப்படியப்பா இந்த தாடி காரன் அமைச்சர் ஆனவர்? விடை எங்கு தொடங்க வேண்டுமோ அங்கே தான் கேள்வி தொடங்கப்பட்டுள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களிக்க மக்கள் விருப்பம் இல்லாமல் இருந்தால் அது புறக்கணிப்பு என்றுதான் பொருள். கடந்த சனாதிபதி தேர்தலை புலிகள் விரும்ப வில்லை... அதனால் மக்கள் புறக்கணித்தார்கள். அதுக்காக புலிகள் தான் காரணம் என்று சொல்வது உண்மையை மறைப்பதுக்குத்தானே ஒழிய பிழையை திருத்துவதுக்கு இல்லை.

புலிகள் விரும்பவில்லை, மக்கள் புறக்கணித்தார்கள் என்று நாம் சொல்லலாம், அது எதை காட்டுகிறது? மக்களை அறிவூட்டி, இந்த புறக்கணிப்பினால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்து சொல்லி வழிநடத்த ஒரு சரியான தலைமைத்துவம் மக்களுக்கு இருக்கவில்லை என்று அல்லவா அது காட்டுகிறது?

மறுவளமாக பார்த்தால், புலிகள் மக்களை புறக்கணிக்கும்படி அறிவுறுத்தினார்கள் என்று எடுத்துக்கொண்டால் அதன் விளைவுகளுக்கு யார் பொறுப்பு? மக்களை அறிவுறுத்திய தலைமைத்துவம் தானே பொறுப்பெடுக்க வேண்டும்?

இன்று உதயன் ஆசிரியர் வித்தியாதரன் தந்த செய்தி பயனுள்ள செய்தி.

  • சந்திரிக்கா அதிபராக இருந்த போது, ரனிலின் அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கு இடைக்கால நிருவாகத்தை வழங்க முன்வந்தது. அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த சந்திரிக்கா ரனிலின் அரசாங்கத்தை கலைத்தார். அதே போல பொன்சேகா அதிபராக வந்தால், அவருக்கு பாராளுமன்றம் ஆதரவளிக்காது. ஐக்கிய தேசிய கட்சி ஒரு புறமும், ஜே.வி.பி. மறுபுறமும் இழுத்து எந்த செயற்திட்டத்தையும் நடைமுறை சாத்தியமற்றதாக்கும். இதனால் பொன்சேகா தனது இராணுவ அணுகுமுறையை தொடர்வது கடினமாக இருக்கும்.
  • ராஜபக்ச ஆட்சிக்கு மீண்டும் வந்தால், பாராளுமன்ற பலத்துடன் தனது கடும்போக்கு நடவடிக்கைகளை அவர் தொடர்வது இலகுவாக இருக்கும்.

ஆகவே இரண்டு பேய்களில் மோசமான பேயை தடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பது வித்தியாதரன் தரும் செய்தி.

இதற்கு மேலாக, பொன்சேகா ஆட்சிக்கு வந்த பிறகு, ராஜபக்ச சகோதரர்களுக்கு இராஜதந்திர பாதுகாப்பு இருக்காது.

  1. அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர்கள் அமெரிக்க அரசுக்கு தமது சொத்துகளுக்காக வரி செலுத்த வேண்டும். எவ்வளவு சொத்து? எங்கேயிருந்து வந்தது? அமெரிக்கா மற்ற நாடுகளை போலன்றி, வரி செலுத்தாதவர்களை நீண்டகாலத்துக்கு சிறை வைக்கும் பாரம்பரியம் கொண்ட நாடு.

  2. மேலும், அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளை ஆதரிக்கும் தன்னாட்டு குடிமக்களை அமெரிக்கா தேசத்துரோக சட்டங்களின்படி சிறை வைக்கிறது. சீனா, இந்தியாவுடன் சேர்ந்து அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்காக இந்த அமெரிக்க குடிமக்கள் எந்த நாட்டிலும் கைது செய்யப்படலாம். அமெரிக்கா உத்தியோகபூர்வமாக பொன்சேகாவையே கைது செய்து நாடுகடத்துமாறு வற்புறுத்தும் சாத்தியம் மிகவும் அதிகமானது.

இதெல்லாம் ராஜபக்ச பகுதிக்கு தெரியாததல்ல. அவர்கள் பொன்சேகாவை வெற்றி பெறாமல் தடுக்க எதையும் செய்வார்கள். வெள்ளைவானும் அதற்குள் அடக்கம். பொன்சேகாவும் வெள்ளைவான் ஏற்பாடு செய்யக்கூடியவராக இருக்கலாம், ஆகவே மீண்டும் லலித், பிரேமதாச வரலாறு ராஜபக்ச, பொன்சேகா வரலாறாக புதிப்பிக்கபடக்கூடும். இந்த முறை டி. பி. விஜேதுங்கவின் இடத்தை தமிழருக்கு என்றும் ஆதரவாக செயற்பட்ட விக்கிரமபாகு கருணாரட்ண எடுக்கும் சாத்தியம் உண்டு.

  1. ஆகவே தமிழ் மக்கள் தமது மூன்று வாக்குகளில் ஒன்றை விக்கிரமபாகு கருணாரட்ணவுக்கு வழங்க வேண்டும்.

  2. அதே வேளை, மேலும் மோசமான வன்முறை ஆட்சிக்குள் தமிழ் மக்கள் அழிந்து போவதை தடுக்க பொன்சேகாவுக்கு மற்றைய வாக்கை வழங்க வேண்டும்.

  3. மூன்றாவது வாக்கை சிறுபான்மையினருக்கு ஆதரவான விஜே டயஸுக்கு வழங்கி, அவருக்கு தமது ஆதரவை தெரிவிக்கலாம்.

இன்றைய நிலையில், 'தமிழீழம் அல்லது அழிந்து போகிறோம்' என்று பிடிவாதம் செய்வது பயனற்றது. நாடு பிரித்து ஆட்சி செய்ய இந்திய வல்லரசுக்கும் சீன ஆயுதங்களுக்கும் ஈடு கொடுக்கவல்ல ஆயுத பலம் இருந்தால் தமிழீழம் என்று பிடிவாதம் பிடிக்கலாம். இந்த அதிபர் தேர்தலில் அது பயனற்றது. கடந்த தேர்தலை போல, சரியான முறையில் இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்காவிட்டால் இன்னமும் மோசமான நிலை உருவாகலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை தானே மீண்டும் கேட்றேன் எப்படி ஒட்டு குழு அமைச்சர்(??) பெற்று கொண்ட வாக்குகள் 40தே வாக்குகள். எப்படியப்பா இந்த தாடி காரன் அமைச்சர் ஆனவர்? விடை எங்கு தொடங்க வேண்டுமோ அங்கே தான் கேள்வி தொடங்கப்பட்டுள்ளது?

என்னண்ணை இதுக்கும் டிவென்ஸ் அவங்களே?

சரி உதுக்கும் எழுதிறன் பிறகு திட்டக்குடாது, மட்டக்களப்பில யாரோ தேர்தலில படு கேவலமா தோத்ததாம் அதில நியாயமா பெரும்பான்மையான வாக்குப்பெற்றவர அச்சுறுத்தி ராஜினாமா பண்ணப்பண்ணி இன்னுமொருவரை போட்டுத்தள்ளி கேவலமா தோத்தவர கொண்டுவந்ததாம். அதைவிட தேர்தலில வெண்ட ஒருவன் அமைச்சரா வாறது கேவலமில்லையெண்டு நான் நினைக்கிறன். :unsure::lol:

Edited by Mathivathanang

40 வாக்குகள் பெற்று வெல்வதில் கேவலம் என்ன கிடக்கு?

(கேவலம் என்பது தமிழ் சொல் என்று நான் நினைக்கிறேன்.)

  • கருத்துக்கள உறவுகள்

.

Gen_Sarath_Fonseka.jpg

வருங்கால ஜனாதிபதியாக சரத் பொன்சேகா வந்தால் 108 தேங்காய் உடைப்பதாக எனது குலதெய்வத்துக்கு நேர்த்தி வைத்துள்ளேன்.cool.gif

குற்றவாளிக்கூண்டில ஏத்தவேண்டிய ஆக்கள் யாரெண்டு அங்க இருக்கிற மக்கள் டிசைட் பண்ணட்டும். கலோ எண்டமுதல் கிலோ கணக்கில அனுப்பிப்போட்டு அவருக்குப்போடு இவருக்குப்போடு எண்டிறது பணத்திமிரை காட்டுது. இங்க எங்கயோ நாங்கள் பணம் அனுப்பிறம் எங்கட சொல்லு கேக்கவேணும் எண்டு வாசிச்சன்...... அளவு மீறின அடாவடித்தனத்தைத்தான் உது காட்டிது. சிவாஜிலிங்கமோ கூட்டமைப்போ மக்களோ தங்களுக்கு என்ன தேவை எண்டதை முடிவுசெய்ய விடவேணும். தங்கட இருப்ப பாதுகாக்கிறதுக்கான எழுத்தும் சண்டைக்கான முன்னெடுப்பும், எத்தினை முள்ளிவாய்க்கால் வந்தாலும் இங்க இருக்கிற கொஞ்சப்பேருக்கு சண்டை தேவைப்படுது, அதுக்கான முன்னெடுப்புக்காக அங்க ஆக்களுக்கு காசுகுடுத்து துடங்க நிக்கினம் என்றதுதான் உண்மை. :unsure:

அதுசரி... கஸ்ரப்பட்டு வேலை செய்தவனுக்கு தானே காசின் அருமை தெரியும்... ஓசியிலை தந்தால் நீங்கள் பொலிடோல் வரைக்கும் குடிக்கும் ஆக்கள் தானே...

புலம்பெயந்தவை தங்களின் சுமையை இறக்கி வைக்க படாது ஆண்டாண்டுக்கு ஊரிலை இருக்கிறவையின் சுமையையும் தோழிலை தூக்கி கொன்டு திரியுறதுதான் உங்களுக்கு விருப்பமாக இருக்கலாம்... காசு கணக்கு இல்லாமல் வந்தால் தானே நீங்கள் கடத்தி கொன்டு போய் கப்பம் வாங்கலாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால ஜனாதிபதியாக சரத் பொன்சேகா வந்தால் 108 தேங்காய் உடைப்பதாக எனது குலதெய்வத்துக்கு நேர்த்தி வைத்துள்ளேன்.

சந்திரிக்கா ஜனாதிபதியாக வரும்போதும், அவரின் பேரில் காப்பு, குடை என்று பல விற்பனைக்கு வந்தன. தமிழருக்கு நல்லது செய்வார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு சூரியக்கதிர், ஜெயசிக்கிறு என்று பரிசு தந்தவர்.

சரத் பேரிலும் "பெல்ற்", ரவுசர், சேர்ட் என்று விற்கலாம். மீசை கூட வைக்கலாம். தமிழர்களுக்கு தருவதற்கு என்று நிறையப் பரிசு வைத்திருப்பார். மகிந்தவுடன் அவரும் சேர்ந்து முள்ளிவாய்க்காலில் வைத்து தந்த "பரிசு" மாதிரி இல்லாவிட்டாலும் ஏதாவது ஒன்று தந்து தமிழரை இரட்சிப்பார்.

நீங்கள் விரும்பியோ....., விரும்பாமலோ மகிந்த அல்லது பொன்சேகா தான் ஜனாதிபதியாக வரப்போகின்றார்கள்.தேர்தல் பகிஷ்கரிப்பு என்று தமிழர் மேல் மேலும் துன்பத்தை கூட்டாதீர்கள்.முஸ்லீம் இனத்து தலைவர்களை பார்த்தாவது தங்கள் இனத்துக்கு நன்மை செய்ய தமிழ் தலைவர்கள் முன் வரவேண்டும்.இப்போதிருக்கும் நிலையில் எந்த நாடும் தமிழருக்கு ஆதரவு தரத்தயாரில்லை என்ற கசப்பான உண்மையை உணர்ந்து இனி ஆக வேண்டிய காரியத்தை பார்க்க முயல வேண்டும்.

அதனைச் செய்யத் தவறுவோமானால் "உன்னாலை நான் கெட்டேன், என்னாலை நீ கெட்டாய்" என்று மாறி,மாறிஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

உதயன் வித்யாதரன் அவர்களின் பேட்டியிலிருந்து..

தமிழர்கள் இந்தத் தேர்தலை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம். இரு கொலைகாரர்களுள் யாரை தெரிவு செய்வது என்பதே தமிழர்கள் முன்னுள்ள கேள்வியாகும். இதற்கு இலங்கையின் அரசியல் யாப்பை விளங்கிக்கொள்வது அவசியமாகிறது.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற பலம் இல்லாதுபோனால் அவரால் முழு அளவில் செயல்படுவது முடியாத ஒன்றாகும். சந்திரிகா காலத்தில் ரணில் புலிகளுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு சந்திரிகாவுக்கு அதனைக் காட்டியது குறிப்பிடத்தகுந்தது.

இப்படியான ஒரு நிலையில், மகிந்த நாடாளுமன்ற பலத்துடன் நிறைவேற்று ஜனாதிபதியாக பிற்காலத்தில் நிலைப்பது தமிழர்களுக்கு மேலும் அழிவைக் கொடுக்கக் கூடிய ஒரு நிலையாகும். மாறாக சரத் பொன்சேகா (தமிழனை அழித்தவராக இருந்தாலும்) ஜனாதிபதியாக வருவது, நாடாளுமன்றத்துக்கும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் முறுகல் நிலையே காணப்படும். ராணுவ அதிகாரியாக இருந்த பொன்சேகா எந்த ஒரு கட்சிக்கும் தலைவராக நியமிக்கப்படப் போவதில்லை. எனவே அவர் நாடாளுமன்றத்தை தன்வசம் கொண்டுவருவார் என்பது நடக்காத விடயம். ஏதாவது ஒரு கட்சி நாடாளுமன்ற அதிகாரத்தையும், சரத் போன்ற ஒரு தனிநபர் ஜனாதிபதி அதிகாரத்தையும் கொண்டிருப்பது நமக்கு நன்மை தரலாம்.

மேலும், ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி இலங்கையின் ஜனாதிபதியாக இருப்பது, பாகிஸ்தானின் முஷாரஃப், அல்லது மியான்மர் ஆட்சியாளர்கள் போன்றதொரு தோற்றத்தையே சர்வதேச அளவில் ஏற்படுத்தும். நாடும் மேலும் ராணுவமயமாக வாய்ப்பு அதிகம். இலங்கைத் தீவு மேலும் ராணுவமயமாதல்பற்றி தமிழர்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏற்கனவே ஒரு காட்டுமிராண்டி ராணுவ ஆட்சிதான் தமிழரைப்பொறுத்தவரை அங்கு நிலவுகிறது. சிங்களவருக்கே இது தலையிடியாக அமையும். சர்வதேச அளவில் போர்க்குற்றங்கள் வெளிவர இந்தச் சூழ்நிலை அனுகூலமாக அமையலாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் விரும்பியோ....., விரும்பாமலோ மகிந்த அல்லது பொன்சேகா தான் ஜனாதிபதியாக வரப்போகின்றார்கள்.தேர்தல் பகிஷ்கரிப்பு என்று தமிழர் மேல் மேலும் துன்பத்தை கூட்டாதீர்கள்.முஸ்லீம் இனத்து தலைவர்களை பார்த்தாவது தங்கள் இனத்துக்கு நன்மை செய்ய தமிழ் தலைவர்கள் முன் வரவேண்டும்.இப்போதிருக்கும் நிலையில் எந்த நாடும் தமிழருக்கு ஆதரவு தரத்தயாரில்லை என்ற கசப்பான உண்மையை உணர்ந்து இனி ஆக வேண்டிய காரியத்தை பார்க்க முயல வேண்டும்.

அதனைச் செய்யத் தவறுவோமானால் "உன்னாலை நான் கெட்டேன், என்னாலை நீ கெட்டாய்" என்று மாறி,மாறிஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

மகிந்த வந்தாலோ அல்லது சரத் வந்தாலோ தமிழருக்கு நல்லது நடக்கப்போவதில்லை. முதலையை நம்பி அக்கரை போகலாம் என்று எண்ணும் செம்மறியாடுகள்தான் தமிழர்கள்.

பாக்கிஸ்தானில் , மியான்மரில் இராணுவ ஆட்ச்சியானது இராணுவத்தை கொண்டு அமைக்கப்பட்டது... தவிர மக்களால் நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் பலர் வேறு நாடுகளில் இருந்தனர் அவர்களின் செயற்பாடுகள் இராணுவ நிலை சாராது இருந்த வகையில் அவர்கள் மேற்குலகின் ஆதரவோடு இருந்தமையால் ஜனநாயக தன்மை சாத்தியமானது...

பாக்கிஸ்தான் என்பது எப்போது ஜனநாயகம் கொண்ட நாடாக எப்போதும் பார்க்க படுவதும் இல்லை அங்கு ஜனாதிபதியாக வரும் யாரும் இலகுவான அங்கீகாரத்தை பெற்றதும் இல்லை... அதில் இப்போதையை ஜனாதிபதியான சர்தாரியும் அடக்கம்..

இதை எல்லாவற்றையும் விட சாத்தியமான ஒரு வகை எண்றால் அது சூடானிய முன்னாள் இராணுவ தளபதியுமான நீண்டகால அதிபரான கேணல் Omar al-Bashir 1989 ம் ஆண்டு முதல் இண்று வரை ஆட்ச்சியில் இருப்பவர் 2004 ம் ஆண்டு இராணுவ வளியில் சூடானிய டாபர் பகுதியின் போராளிகளின் புரட்ச்சியை அடக்கியவர் என்னும் பெயரை பெற்று கொண்டார்.. அதுக்கு அனேக நாடுகளின் உதவியை இலங்கையை போல பெற்றும் கொண்டார்... அந்த இறுதிப்போரின் போது 400 000 லட்ச்சம் மக்களை படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அதுவரைக்கும் ஒத்துக்கொள்ளாத சர்வதேசம் இப்போது ஒத்த்து கொண்டது...

போரில் சிக்கி மக்கள் இறந்தனர் என்பது ஒரு வகை, அதில் மனித உரிமை பிரச்சினி தண்டனைகளோடு பிரச்சினை அடங்கி விடும்... ஆனால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்பதை நிறுவுவது மிகவும் கடினமான செயல்... சூடானியர்களாக் டாபர் ( பகுதி ) மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பது ஒடுக்க பட்ட டாபர் மக்களுக்கு நிரந்ததை தீர்வை பெற்று தர முனையும் செயலாக அமைந்தது....

ஈழத்தில் நடந்தது போல சூடானில் டாபர்பகுதி மக்கள் இனப்படுகொலை செய்ய பட்டனர் எண்று ஒத்துக்கொள்ள வைப்பதுக்காக உலகம் தழுவி டாபர் பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தினர்... முதலில் ஒத்துக்கொள்ளாத உலகம், சூடானில்( இலங்கையில் எதிர்பார்ப்பதை போல) ஒரு ஆட்ச்சி மாற்றத்தை எதிர்பார்த்தது... அதன் பின்னர் சூடானிய அதிபர் தேர்தலில் நடந்த முறைகேடுகளும் அதனை தொடர்ந்தும் Omar al-Bashir பதவில் தொடர அவரை எதிர்க்கும் முடிவுக்கு வந்தனர்... இண்று சூடான் இனப்படுகொலை நடக்கும் நாடுகளில் ஒண்று...

இண்றும் சூடானிய அரசு Omar al-Bashir தலைமையில் இஸ்லாமிய அடிப்படைவாதி நாடுகளின், சீனாவின், ருசியாவின் (இலங்கையில் இஸ்லாமிய நாடுகளுக்கு பதில் இந்தியா) வின் உதவியுடன் கொடுங்கோல் ஆட்ச்சி செய்கிறது... மேற்குலகம் அதன் மீது போடும் தடைகளை உடைக்கும் அளவுக்கு அருகு நாடுகளின் உதவியும் இயற்கை வளமும் கொண்டதால் பெரிய பாதிப்புக்கள் வரவில்லை... இஸ்லாமிய அடிப்படை வாதம் மக்களை ஒடுக்கி வைக்க சுலபமாகவும் இருக்கிறது..

கடல் வளத்தையும் சுற்றுலாத்துறையையும் பெரிதும் நம்பி இருக்கும் இலங்கை சூடானை போல திடமாக இருக்க முடியாது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

.

Gen_Sarath_Fonseka.jpg

வருங்கால ஜனாதிபதியாக சரத் பொன்சேகா வந்தால் 108 தேங்காய் உடைப்பதாக எனது குலதெய்வத்துக்கு நேர்த்தி வைத்துள்ளேன்.cool.gif

அவ்வளவு நம்பிக்கையா பொன்சேகரா மீது...இவர் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழருக்கும் உதவப் போறதும் இல்லை,மகிந்த சகோதரர்களை தண்டிக்க விடப் போறதும் இல்லை தானும் தண்டிக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத்துக்கு ஒரு கூட்டம், மகிந்தவுக்கு ஒரு கூட்டம், இங்கயே ஜனநாயகம் வந்திட்டிது. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரத்துக்கு ஒரு கூட்டம், மகிந்தவுக்கு ஒரு கூட்டம், இங்கயே ஜனநாயகம் வந்திட்டிது. :lol::lol:

சிங்களவனுக்கு ஓட்டுபோடுவதுதான் உலகில் ஜனநாயகம்!

எஜமானிகள் நல்லதான் பாடம் புகட்டி வைச்சிருக்கிறாங்கள். ஆனாலும் நீங்கள் நன்றி மறவாத ஒரு நல்ல பிள்ளை.

எல்லோரும் இந்த தேர்தலில் ஓட்டுபோட்டால் இலங்கைதான் உலகில் ஜனநாயகம் தலைவிரித்தாடும் முதலாவது நாடக வந்துவிடும்.

எங்களுக்கும் பெருமையா இருக்கும். பிறகு ஐக்கிய இலங்கைக்குள் கூழ்காச்சலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: என்னைய்யா ஒரே குழப்பாமாயிருக்கு ?! மகிந்தவுக்கு வாக்களிக்க ஏலாது. அவனைப் பழிவாங்க பொன்னருக்கு வாக்களிக்கலாமென்டால், அவரும் மகிந்தவுக்கு நிகராக தமிழ் ரத்தம் குடிச்சவர்.சிவாசி லிங்கம் கேட்கிறார் எண்டு பாத்தால் அந்தாளும் இந்தியாவின்ர பொம்மையாம். விக்கிரமபாகு கருணாரட்னவுக்குப் போடுங்கோ எண்டால் சனம் ஆர் எண்டு கேட்குது.பேசாமல் ஒரு நாயும் வேண்டாம், பகிஸ்கரிக்கலாம் எண்டு பாத்தால் அதுவும் வேண்டாமாம்.

என்ன செய்யுறது?!நாங்கள் வாக்களிச்சாலும் இல்லாவிட்டாலும் ஆரோ ஒரு நாய்தான் வரப்போகுது. இதில மகிந்த வாரது எங்களுக்கு 100 வீதம் பிடிக்காத விஷயம். பொன்னர் வந்தால் இனவாதம் கொடிகட்டிப் பறக்கும், ஆனால் ராணுவ ஆட்சி என்கிற பெயர் சர்வதேசத்தில வரும். அதோட மகிந்தவை வீட்டுக்கு அனுப்பலாம், இந்தியாவின்ர கனவில மண்போடலாம்....அப்படிப் பாத்தால் பொன்னருக்குத்தான் போடவேணும். ஆனால் அந்த நாய் செய்த இனவழிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறதாக அந்த நாய் சொல்லும், அல்லது அப்படியொன்றே நடக்கவில்லை எண்டு சொல்லும்.

மதுரைக்கு வந்த சோதனை !!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வந்தாலோ அல்லது சரத் வந்தாலோ தமிழருக்கு நல்லது நடக்கப்போவதில்லை. முதலையை நம்பி அக்கரை போகலாம் என்று எண்ணும் செம்மறியாடுகள்தான் தமிழர்கள்.

அவ்வளவு நம்பிக்கையா பொன்சேகரா மீது...இவர் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழருக்கும் உதவப் போறதும் இல்லை,மகிந்த சகோதரர்களை தண்டிக்க விடப் போறதும் இல்லை தானும் தண்டிக்க மாட்டார்.

கிருபன், ரதி நான் எந்த இடத்திலும் சரத் பொன்சேகா தமிழருக்கு நல்லது செய்வார் என்று குறிப்பிடவில்லை.

தமிழர் தமக்கு நடந்த அநியாயங்களை விரைவில் மறந்து விடுபவர்கள். எமக்கு இந்த வருடம் வந்த பேரிழப்பை ஒரு தமிழ் சந்ததியும் மறக்க முடியாது. அதற்கு பக்க பலமாக நின்று, மகிந்தவுக்கு உதவி செய்ததே இந்தியா தான் என்பதை யாவரும் அறிவார்கள். இப்போதும் மகிந்த மீண்டும் வர வேண்டும் என்றே அயல் நாடு காய் நகர்த்துகின்றது. இதனை முறியடிக்கவே சரத் வெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டேன். இந்த அருமையான சந்தர்ப்பம் மீண்டும் ஒரு முறை எமக்கு கிடைக்கப் போவதில்லை. இந்த சந்தர்ப்பத்தை தேசியத்தலைவரால் ஒருங்கமைக்கப் பட்ட தமிழ் கூட்டமைப்பு சரியான முறையில், தடுமாறாமல் பயன்படுத்த வேண்டும். இதில் தடுமாற்றம் ஏற்பட்டால் அது எமது கண் முன்னே பல கட்சிகளாகப் பிரிந்து செல்வதை காணநேரிடும். அதனை மீண்டும் இனி ஒருவராலும் ஒருங்கிணைக்க முடியாத நிலையே எதிர்காலத்தில் ஏற்படும். இதுகும் எதிரிக்கு வெற்றியாக அமையும். மற்றும், சிவாஜிலிங்கத்தின் தமிழ் பற்று மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. ஆனால் இந்த தேர்தலில் அவரின் பிரசன்னம் தேவை அற்றது.

தயா , உங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு பக்க பலமாக நின்று, மகிந்தவுக்கு உதவி செய்ததே இந்தியா தான் என்பதை யாவரும் அறிவார்கள். இப்போதும் மகிந்த மீண்டும் வர வேண்டும் என்றே அயல் நாடு காய் நகர்த்துகின்றது. இதனை முறியடிக்கவே சரத் வெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

தமிழ் சிறி எழுதியது போல இந்தியா இராஜபக்ச வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இராஜபக்ச வென்றால், பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று எந்த தடையும் இல்லாமல் இந்தியாவின் நலன்களுக்கு எஞ்சியுள்ள தமிழ்மக்களையும் அடிமைகள் ஆக்குவார். தமிழீழம் வெறும் கனவாக போய்விடும்.

மாறாக பொன்சேகா வென்றால், அவருக்கு ஆதரவான பாராளுமன்றம் எப்படி அமையும்? ஜே.வி.பி பெரும்பான்மை பெறுமா? யூ.என்.பி பெரும்பான்மை பெறுமா? இரண்டும் எந்த திட்டங்களுக்கு ஒத்து போவார்கள்? எல்லாம் குழம்பி போன நிலைக்கு சிறிலங்காவின் சிங்கள ஆட்சி வரும். அமெரிக்கா யூ.என்.பி.யை கட்டுப்படுத்தி, இராஜபக்சவின் அமெரிக்க, ஐரோப்பிய எதிர்ப்பு, ஈரானிய-சீன-லிபியா கூட்டுதிமிருக்கு பாடம் கற்றுக்கொடுப்பதற்காக போர்குற்ற விசாரணைகளை முடுக்கிவிடக்கூடும். பிரெஞ்சு, பிரித்தானிய அரசுகளும், நோர்வேயும் அமெரிக்காவுடன் சேர்ந்து யூ.என்.பியை கட்டுப்படுத்தி, தமது நாட்டு தமிழ்மக்களின் ஆதரவுக்காக இலங்கையில் சில செயற்திட்டங்களை முன்னெடுக்கும் சாத்தியம் இருக்கிறது. இதனை கவனத்தில் எடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட வேண்டும்.

ராஜபக்ச வெல்வது தமிழருக்கு நிரந்தரமான அழிவாக முடியும். அதேவேளை போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் எதுவும் செய்யமுடியாத நிலை உருவாகும். தமிழர் வாக்களிக்காவிட்டால் ராஜபக்ச வருவது சாத்தியம்.

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.