Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு எதிரியை வைத்து இன்னொரு எதிரியை முறியடிக்கவேண்டிய தேவை எமக்கு உள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தமிழர்கள் அங்கீகாரம் அளிக்ககூடாது இவர்களுடைய காலத்தில் தமிழர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தார்கள். யுத்தத்தினை நடத்தி வன்னி பிரதேசத்தை நாசமாக்கியவர்களுக்கு நாம் வாக்களிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.

வவுனியாவில் இன்றுமாலை (திங்கள்) நடைபெற்ற சனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பேசியபோது இவர் கூறியதாவது: வன்னியில் பெரும் இராணுவ மயமாக்கல் வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றது. எமது மண்ணில் பௌத்த சின்னங்கள் அமைக்கப்படுகின்றது. இதற்கு எல்லாம் நாம் அனுமதிக்கலாமா? அதனால்தான் நாம் ஏகோபித்த முடிவை எடுத்துள்ளோம். இந்த ஆட்சியாளர்களை மாற்றவேண்டும் என்பதாகும்.

ஆட்சிமாற்றத்திற்கு சக்தி படைத்தவர் ஜெனரல் சரத்பொன்சேகா. மாற்றம் வந்த பின்னர் புதியவர் என்ன செய்யப்போகின்றார் என்பதினையும் நாம் பார்க்கத்தான் போகின்றோம். எனது கோரிக்கைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் முன்வைத்துள்ளோம். புதிய அத்தியாயத்தில் காலடிவைத்துள்ளோம், இது ஒரு பரிசோதனை களம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் பேசுகையில்: இந்த நாட்டில் ஒரு ஆட்சிமாற்றம் ஏற்படுவதன் மூலம்தான் தமிழ்மக்கள் தமது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளலாம். இந்த அரசாங்கம் எமது பிரதேசத்தினை ஆக்கிரமிப்பு செய்து இராணுவ மயமாக்கிவருகின்றது. இந்த திட்டங்களை இல்லாது ஒழிக்க ஆட்சி மாற்றம்வேண்டும்.

புதிய அரசு வரும்போது புதிய சிந்தனைகள், திட்டங்கள் ஏற்படும். நாம் சில காரியங்களை செய்யலாம். ஒரு எதிரியை வைத்து இன்னொரு எதிரியை முறியடிக்கவேண்டிய தேவை எமக்கு உள்ளது. அந்த தேவையைத்தான் நாம் பயன்படுத்துகின்றோம். தமிழ்மக்களுடைய அடிப்படை நலன்கள் என்னும் போது அதுதான் அந்ததேவையாகும். அரசு மாறவேண்டுமானால், நாம் அதற்குரிய வழிகள் பற்றி பார்க்கவேண்டும். மாற்றத்தை கொண்டுவரக்கூடிய சக்தியுள்ளவருக்கு வாக்களிப்பதன் மூலம்தான் மாற்றம் ஏற்படும். அந்தவகையில்தான் நாம் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிப்பதென தீர்மாணித்தோம் என்றார்.

Posted on 11 Jan 2010 by EelamTimes

  • கருத்துக்கள உறவுகள்

சரி. ஒரு எதிரியை வைத்து மற்ற எதிரியை வீட்டுக்கு அனுப்பியாச்சு என்றே வைத்துக்கொள்வோம். அதன் பிறகு என்ன? அந்த எதிர் நண்பனாகி விடுவானா?? இல்லையே, அவன் எப்பவும்போலவே எதிரிதானே??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி. ஒரு எதிரியை வைத்து மற்ற எதிரியை வீட்டுக்கு அனுப்பியாச்சு என்றே வைத்துக்கொள்வோம். அதன் பிறகு என்ன? அந்த எதிர் நண்பனாகி விடுவானா?? இல்லையே, அவன் எப்பவும்போலவே எதிரிதானே??

அண்ணை லொஜிக் மறந்து எழுதுறீங்கள். பதவிக்கு வந்தபின் அவர் எதிரி அவருக்கு எதிரி நண்பன்.... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை லொஜிக் மறந்து எழுதுறீங்கள். பதவிக்கு வந்தபின் அவர் எதிரி அவருக்கு எதிரி நண்பன்.... :unsure:

அப்ப சீனா எங்களுக்கு என்ன நண்பியோ?

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ்நாட்டை போன்றே இக்கட்டான நிலை (ஜெயலலிதா-கருநாகம்.). எது எப்படி இருந்தாலும் கொள்கைகளை சர்வதேச சமூகத்திடம் தெரியபடுத்தி அதன் மூலம் கூட்டணி சேர்வதே சிறந்த்தது.. இங்கு தமிழ்நாட்டில் அந்த கொடுப்பினை கூட இல்லாமல் பலர் அடிமைகளாக உள்ளோம்..

சரி. ஒரு எதிரியை வைத்து மற்ற எதிரியை வீட்டுக்கு அனுப்பியாச்சு என்றே வைத்துக்கொள்வோம். அதன் பிறகு என்ன? அந்த எதிர் நண்பனாகி விடுவானா?? இல்லையே, அவன் எப்பவும்போலவே எதிரிதானே??

நாங்களும் சிங்களவனுக்கு நக்க வெளிக்கிட்டம், தயாராகீட்டம் எண்டதை கண்ணியமாக சொல்லுகினம்... டக்கிளசுக்கும் கருணாவுக்கும் இவர்களின் போட்டியை பாத்து இப்ப வயித்தாலை போக தொடங்கி இருக்கும்...

Edited by தயா

நாங்களும் சிங்களவனுக்கு நக்க வெளிக்கிட்டம், தயாராகீட்டம் எண்டதை கண்ணியமாக சொல்லுகினம்... டக்கிளசுக்கும் கருணாவுக்கும் இவர்களின் போட்டியை பாத்து இப்ப வயித்தாலை போக தொடங்கி இருக்கும்...

இத்தால் சகலரும் அறிக! :lol:

நெல்லை மற்றும் மதியுடன் தயாவும் இணைந்து கொண்டார்ர்ர்ர்!! :(

  • கருத்துக்கள உறவுகள்

r.raja

நீண்ட நாட்களின் பின்..

இதைச்சொல்லத்தான் வந்தீர்களா?

நாங்களும் சிங்களவனுக்கு நக்க வெளிக்கிட்டம், தயாராகீட்டம் எண்டதை கண்ணியமாக சொல்லுகினம்... டக்கிளசுக்கும் கருணாவுக்கும் இவர்களின் போட்டியை பாத்து இப்ப வயித்தாலை போக தொடங்கி இருக்கும்...

ambulance3.gif

r.raja

நீண்ட நாட்களின் பின்..

இதைச்சொல்லத்தான் வந்தீர்களா?

விசுகு,

இங்கு கருத்தெழுதும் சிலர் தங்களிடம் ஒரு தீர்வு இருந்தால் சொல்லனும், அல்லது விலகி நிக்கனும்!

தங்களை அறிவாளியாய் காட்டுவதற்காய் யார் எது செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதும் துரோகி பட்டம் கட்டுவதுமே வேலையாய் இருக்கின்றார்கள் அந்த ஆதங்கத்தில்தான் எழுதினேன்.

மற்றும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

இங்கு கருத்தெழுதும் சிலர் தங்களிடம் ஒரு தீர்வு இருந்தால் சொல்லனும், அல்லது விலகி நிக்கனும்!

தங்களை அறிவாளியாய் காட்டுவதற்காய் யார் எது செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதும் துரோகி பட்டம் கட்டுவதுமே வேலையாய் இருக்கின்றார்கள்

அந்த ஆதங்கத்தில்தான் எழுதினேன்.

மற்றும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.

இங்கு கருத்தெழுதும் சிலர் தங்களிடம் ஒரு தீர்வு இருந்தால் சொல்லனும் அல்லது விலகி நிக்கனும்!

தங்களை அறிவாளியாய் காட்டுவதற்காய் யார் எது செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதும் துரோகி பட்டம் கட்டுவதுமே வேலையாய் இருக்கின்றார்கள்

அந்த ஆதங்கத்தில்தான் எழுதினேன்.

நானும் இதுபற்றி பலமுறை இங்கு எழுதினேன்

எனது கருத்துகளுக்கு வெட்டு விழுந்ததே அங்குதான்...

நான் நெல்லையனின் பல கருத்துக்களுடன் உடன் படுகின்றேன்

வெட்டுவோம் குத்துவோம் என்பது இன்று வெறும் வாய்ச்சவாலே...

சிந்திக்கணும்

மூளையை பயன்படுத்தணும்

செயலாற்றணும்

அதுவே இன்றைய தேவை....

இப்பொழுதாவது செய்வோம் அல்லது சாகடிக்கப்படுவோம் நாம்

  • கருத்துக்கள உறவுகள்

ambulance3.gif

அவசரமாய் அம்புலன்சில எங்கை பயணம் நெல்லையன் ? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி. ஒரு எதிரியை வைத்து மற்ற எதிரியை வீட்டுக்கு அனுப்பியாச்சு என்றே வைத்துக்கொள்வோம். அதன் பிறகு என்ன? அந்த எதிர் நண்பனாகி விடுவானா?? இல்லையே, அவன் எப்பவும்போலவே எதிரிதானே??

நான் எங்கையோ படிச்சனான். அதை சொல்லுறன். முதலும் சொல்லியிருக்கலாம். லெனின் ஒருமுறை வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் போது சொன்னாராம். நமக்கு 4 எதிரிகள் இருந்தால் 3 எதிரிகளோடு சேர்ந்து ஒரு எதிரியை வெல்ல வேண்டும். பிறகு 2 எதிரியோடு சேர்ந்து 3வது எதிரியை வெல்ல வேண்டும். என்று. அப்ப அவரது மாணவன் ஒருவன் அப்ப கடைசியா ஒரு எதிரி மிஞ்சுவானே அவனை என்ன செய்யிறது என்று கேட்டானாம். அதற்கு லெனின் சொன்னாராம். ஓம் கடைசியா மிஞ்சுற எதிரியை நீதான் வெல்ல வேண்டும். அப்படி வெல்ல முடியாத நீ ஒரு கம்யுனிஸ்டே இல்லை என்று.

கதை முடிந்தது.

லெனினிண்ட கதைய நம்மோட ஆக்களுக்கு ஏற்றவகையில் மொடிபைவ் செய்து சொல்லுங்கையா.

நமக்கு நான்கு நண்பர்கள் இருந்தால் 3 நண்பர்களோடு சேர்ந்து ஒரு நண்பனை எதிரியாக்கவேண்டும். பிறகு 2 நண்பர்களோடு சேர்ந்து மூன்றாவது நண்பனை எதிரியாக்கவேண்டும். அப்ப கடைசியில எல்லாருமே நமக்கு எதிரியாகிடுவீனம். அப்பிடியெண்டால்.. ஓம் கடைசியா மிஞ்சிறது நாங்கள் மட்டும் தான். அப்புறம் என்ன? தற்கொலை செய்யவேண்டியதுதான். உப்புடி செய்யாட்டிக்கு நீங்கள் ஒரு --- இல்லை.

கதை முடிந்தது. :(

Edited by மச்சான்

:lol: :lol: :lol:

அப்ப எல்லாரும் என்ன சொல்ல வாறியள்...???

மகிந்த எண்ட எதிரியின் நண்பனாக இருந்த சரத் அவருக்கு துரோகம் செய்து எதிரியாகீட்டார்...! ஆகவே இன்னும் ஒரு எதிரியான தமிழர்களுடன் சேர்ந்து மகிந்தவை அழிக்க போறார்... அடுத்து சேர்ந்த தமிழர்களை...?? இப்படியும் எடுக்கலாமோ...??

கடைசியிலை வெளிநாட்டு உதவிகளுடன் காசா நிலமயிலை கொண்டு வந்து விட்டால் போதும்..

Edited by தயா

விசுகு,

இங்கு கருத்தெழுதும் சிலர் தங்களிடம் ஒரு தீர்வு இருந்தால் சொல்லனும், அல்லது விலகி நிக்கனும்!

தங்களை அறிவாளியாய் காட்டுவதற்காய் யார் எது செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதும் துரோகி பட்டம் கட்டுவதுமே வேலையாய் இருக்கின்றார்கள் அந்த ஆதங்கத்தில்தான் எழுதினேன்.

மற்றும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.

அப்ப சரத்தை ஆதரிப்பது தமிழர்களுக்கு தீர்வை தரும் எண்டுறீயள்....

முதலிலை சரத் பொன்ஸேகா யார்...?? அவன் இது வரை தமிழர்களுக்கு செய்யதவை என்ன எண்டது தெரியுமா...???

ஓய்வில் போய் இருக்க வேண்டிய சரத் பொன்ஸேகா கோத்தபாய இராசபக்ஸ்சவின் ஆதரவில் நட்பின் அடிப்படையில் இலங்கையின் இராணுவத்தளபதியாக நியமிக்க படுகிறார்... கூட்டுபடை தலைமையகத்தில் வைத்து இவனை கொல்லை முயண்று ஒரு பெண் உன்னதமான உயிரை தாய்நாட்டுக்காக இழக்கிறது... பின்னர் காயங்களில் இருந்து மீண்டுவந்து மாவிலாறு தொடக்கம், மட்டக்களப்பு வரைக்கும் நடந்த படுகொலைகள் அனைத்துக்கும் கொலைவெறியோடு தலைமை தாங்குகிறான்...

பின்னர் வடபகுதிக்கான போர்... ஆள ஊடுருவும் படையணியை வைத்து பொதுமக்களின் வாகனங்கள் முதல் எல்லாவற்றையும் தாக்கி அழிக்க ஆணையிடுகிறான்... வெளியில் வந்த மக்களை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தி முகாம்களில் அடைக்கிறான்... வெளியில் வராத மக்களை பேரளிவு ஆயுதங்களான பொஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் எறிகணைகள், இரசாயண ஆயுதங்கள் கொண்டு தாக்கி முடிந்தவரைக்கும் அழிவுகளைக் கொடுக்க ஆணையிடுகின்றான்... தாக்குதல் நடந்த்து இராணுவத்துக்கு பக்கபலமாகவும் நிக்கிறான்...

பின்னர் மக்கள் போர் பிரதேசத்தில் இருந்து வெளியில் வருகின்றனர்... அவர்களை இராணுவத்தில் வழமையாக கொடுமையான சோதனைகளுக்குபின் முகாம்களில் தனது இரணுவ வீரர்களின் துணையுடன் அடைத்து வைக்கிறான்... முகாம்களுக்குள் அடைபட்டு இருந்த பெண்களை தனது இராணுவ வீரர்களுக்கு விருந்தும் ஆக்குகிறான்...

பின்னர் தன்னை இராணுவ தளபதியாக ஆக்கிய மகிந்த சகோதரர்களை எட்டி உதைந்து விட்டு வெளியாலை வந்து தேர்தலில் நிக்கிறான்... தனக்கு உதவியவர்களுக்கு எதிராக மாறியவன் நாளை தமிழர்களை உதைய மாட்டான் எண்டதுக்கு ஏதும் உத்தரவதம்...??

இப்ப சொல்லுங்கோ இங்கை இருக்கும் ஒரு மாங்காய் சொல்லுது சரத் பொன்சேகாவை ஆதரிப்பது போராளியாக இருந்த ஒருவரின் கடமையாம்... ஏற்றுக்கொள்கிறீர்களா...??

Maruthankerny' 11 January 2010 - 10:02 PM'அப்ப சீனா எங்களுக்கு என்ன நண்பியோ?

... உந்த லாஜிக்கெல்லாம் 9/11 உடன் மாறீட்டுது!! ... தெரியவில்லையா?????.... இந்தியா, பாகிச்தான், பங்களாதேஸ், சீனா, தாய்லாந்து, வியட்நாம், லிபியா, ஈரான் ... அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா எல்லாமே எமக்கெதிராக கை கோர்த்ததிலிருந்து!!! ...... இது இனியும் நடக்கும்!!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நல்லது வேண்டும்,மனதை சுத்தமாக வைத்திருந்தால் இந்த மாதிரியெல்லாம் வந்திருக்காது!

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா!

தீர்வெழுத சொன்னால் எப்படி?

இருந்த ஓரே தீர்வு புலிதான். அது இருந்தபோது தமிழ்மக்கள் கண்டுகொள்ளவில்லை (பெரும்பாலான). கண்கெட்ட பின்பு சூரியநமஸ்காரம்போல். இனி தீர்வு என்றால் என்னத்தை எழுதுவது. அதுக்காக எல்லாவற்றையும் ஏற்றுவிடலாமா?

சரத்துடன் கூடி ஏதும் ஆகப்போவதில்லை என்று தெரிந்தபின்பும். சும்மா பூச்சாண்டி காட்டி அரசியல் நடத்துவதில் தமிழ்மக்களுக்கு என்ன ஆகிவிடபோகின்றது? இலங்கையில் எல்லாம் ஜனநாயகபடி நடக்கின்றது என்று மேற்கு உலகத்திற்கு காட்டுவதற்கே அது உதவும்.

(துரோகி கூலிகள் அதைதான் இதுவரையும் செய்தன இனியும் செய்யபோகின்றன..... ஆகவே ததேகூ தனக்கொரு இடத்தை இலங்கை அரசில் தக்கவைத்திருந்தால்தான் வெளியுலகிற்கு ஏதாவது உண்மைகளையாவது சொல்லாம் என்று யாரும் சொன்னால் நான் மறுக்கவில்லை) அதற்காக பச்சை துரோகம் இழைத்த இந்தியா மாறுகிறது கொலை செய்ய சரத் கவலைபடுகிறார் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டவும் வேண்டுமா?

சரத்தினுடைய உண்மையான முகத்தை பார்ப்பதென்றால் ஒரு வருடங்களுக்கு முன்னைய அவனுடைய பேட்கள் எல்லாம் இப்போதும் யுரப்பில் உள்ளன சென்று பாருங்கள். இப்படி இன வெறி பிடித்த நாயிடம் எதையும் எதிர்பாப்பது எவ்வளவு மூடத்தனம்.

"உந்த லாஜிக்கெல்லாம் 9/11 உடன் மாறீட்டுது!! ... தெரியவில்லையா?????.... இந்தியா, பாகிச்தான், பங்களாதேஸ், சீனா, தாய்லாந்து, வியட்நாம், லிபியா, ஈரான் ... அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா எல்லாமே எமக்கெதிராக கை கோர்த்ததிலிருந்து!!! ...... இது இனியும் நடக்கும்!!

நெல்லையன்

என்ன 'எல்லாம் எமக்கெதிராக கை கோர்த்ததில் இருந்து" என்று. சிறு திருத்தம் "எல்லாம் புலிகளுக்கெதிராக கை கோர்த்ததில் இருந்து". என்று.

உலகம் முழுவதும் இதை அவர்களிடமே விளங்கப்படுத்தியது அவர்களுக்குத்தான் விளங்கவில்லை.புலம்பெயர் புலிகள் பலருக்கே விளங்கவில்லை.தர்மயுத்தம்,4 வது பெரிய இராணுவத்தை அடித்தனாங்கள் என்று உசுப்பேத்த தான் பலர் இருந்தார்கள்.

போராட்டம் போகின்ற போக்கில் தமிழருக்கு இப்படி ஒரு நிலை வரும் என பலரும் எதிர்பார்த்ததுதான்.

அண்ணை லொஜிக் மறந்து எழுதுறீங்கள். பதவிக்கு வந்தபின் அவர் எதிரி அவருக்கு எதிரி நண்பன்.... :D

அண்ணோய்

ஏன் லாஜிக்கை மருவளமா பார்க்க முடியாது?

அதாவது எதிரிக்கு எதிரி நண்பன்.... அந்த இரண்டு எதிரிக்கும் நாங்களும் எதிரியாயிட்டம்தானே அப்பா அவங்கள் இரண்டு பெரும் நண்பனாயிட்டா நாங்கள்?

திரும்ப ஒரு முள்ளியவாய்க்காலா? :D

தயா,மற்றும் மருதங்கேணி,

நான் உங்களிடம் எனக்கு வரலாற்று பாடம் நடத்த சொல்லவில்லை!

எனது கேள்வியே?

இங்கு கருத்தெழுதும் சிலர் தங்களிடம் ஒரு தீர்வு இருந்தால் சொல்லனும். என்பதுவே,

இன்று தமிழீழ மக்கள் யாருக்கு ஓட்டுபோடனும்?

அல்லது யாருக்குமே ஓட்டு போடாமல் இருப்பது நல்லதா!?

அப்படி செய்வதால் என்ன நன்மைகள்!!?

வெட்டொண்டு துண்டு ரெண்டு என்று பதில் சொல்லமுடியாதா?

என்னை பொறுத்தவரையில் தமிழ்தேசியகூட்டமைப்பின் முடிவு சரியானதே.

நான் யாரையும் குளப்பாமல் பதில் சொல்லிஉள்ளேன். உங்களால் முடிந்தால் குளப்பமில்லா பதிலை தாருங்களேன்.

நீங்கள் என்ன தமிழர் சுயநிர்ணய உரிமைக்கு எதிரானவரா...??

தீர்வே எண்டு ஒண்டை தரமுடியாத சிங்களவனுக்கு தமிழ் மக்கள் எதுக்காக வாக்களிக்க வேண்டும் ...??? இதுக்கு நீங்கள் பதில் ...

தமிழ் தேசிய கூட்டமைப்பு எண்டு பெயரை வைத்து கொண்டால் போதாது... தமிழ் தேசியத்தின் தூண்களாக இருக்க வேண்டும்... தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்தது தமிழர் தேசியம் எண்ட சொல்லுக்கு விரோதமான செயல்...

முதலில் உங்களுக்கு தேசியம் எண்டால் என்ன அர்த்தம் எண்டு தெரியுமா...?? தமிழர் தேசியவாதி எண்டு சொல்லி கொண்டு சிங்களவனுக்கு காவடி தூக்குவதுதான் தேசியத்தை வளர்க்கும் செயலா...?? கருணா குழுவுக்கும், டக்கிளஸ் குழுவுக்கும் ( தமிழ்தேசிய கூட்டமைப்பான) சம்பந்தன் குழுவுக்கும் என்ன வித்தியாசம்...???

எனக்கு தெரிய ஒரே ஒரு வித்தியாசம்... கருணா டக்கிளஸ் மகிந்தவின் காலுக்கு கீழை, சம்பந்தன்குழு சரத்தின் காலடியில்... இண்டைய சம்பந்தன் குழுவின் தோற்றம் இந்தியாவின் உபயம்...

எனது தெரிவை பற்றி கேட்டீர்கள்.... நான் யாருக்குமே வாக்களிக்க முடியாது... ஆனாலும் எனக்கு தலைமையில் வரமுடியாதவர் எண்டாலும் சிவாஜிலிங்கத்தாருக்கே என் ஆதரவு.... அப்படி சிவாஜிலிங்கத்தாரை விரும்பாதவர்களுக்கு நான் சொல்லக்கூடியது புறக்கணியுங்கள்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.