Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்க்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை - இடம்பெயர்ந்த வன்னி மக்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்களுக்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை என்ற இந்தச் செய்தி இடம்பெயர்ந்த வன்னி மக்கள் என்ற பெயரில் அச்சிடப்பட்டுள்ளது என்பதை அவதானிக்கும் பொழுது, கட்டாயம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பாரிய குழப்பத்திற்கு உள்ளாகி அக்குழப்பத்தினால் தொடர்ந்தும் அவர்கள் வெளிநாடுகளில் முன்னெடுக்கும் பல செயற்பாடுகளை முடக்கிப் போடும் திட்டத்தை உடையதாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது. புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அழுத்தங்களினால் இன்று சிங்கள இனவாத அரசின் கோரமுகம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலை தொடரும் பட்சத்தில் சிங்கள அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் பாரிய சர்வதேச நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும், ஆகவே தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கும் இடையில் சிண்டு முடிவதன் மூலம் தமிழர்களின் ராஜதந்திர நகர்வுகளை நசுக்க முயலும் சக்தியாகவே இந்த அறிக்கையைப் பார்க்கத் தோன்றுகிறது. இன்றைய காலத்தில் வெளிநாட்டில் வாழும் தமிழரே, சிங்களப் பேரினவாதத்திற்கும், பிராந்திய நலனென்று பிடிவாதமாக தமிழின அழிப்பில் ஈடுபட்டவர்களுக்கும் மிகப்பெரிய தலையிடியாக மாறி வருவது கண்கூடு. ஆக புலம்பெயர்ந்த தமிழர்களையும், தாயகத்தில் வாழும் தமிழர்களையும் பிளவுபடுத்த இத்தகைய அறிக்கையை இலாபம் அடையக்கூடியவர்கள் விட்டிருக்கக்கூடும் என்று என் நாம் சந்தேகப்படக்கூடாது? இராணுவ முற்றுகைகளுக்குள் நாளாந்த வாழ்வைக் கழிக்கும் மக்கள் என்பது முழுமையான ஒடுக்குமுறைக்கு முகங்கொடுத்துக்கொண்டு எப்படி அதனை ஒரு நல்ல வாழ்வு என்று கருத முடியும்?

உதாரணத்திற்கு என்னுடைய குடும்பத்தின் உறுப்பினர் ஏதோ ஒரு வகையில் அது தொழிலாகட்டும், கல்வியாகட்டும், நாளாந்த வாழ்வாகட்டும் ஏன் உணர்வு ரீதியாக ஆகட்டும் இராணுவத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது எப்படி அவற்றிலிருந்து விடுதலைபெறவேண்டும் அவாவை மறுக்க முடியும்? வெளிநாடுகளில் வாழும் தமிழருக்காக சிலுவை சுமக்கத் தயாரில்லை என்று அங்குள்ளவர்கள் சொல்வதால் யாருக்கு இலாபம்? இப்படியான அறிக்கையை வெளியிடுவது யாருக்கு இலாபத்தைத் தரக்கூடியது?

வெளிநாட்டில் வசதியுடன் சொகுசாக வாழக்கூடியதாக இருக்கும் ஒரு இனம் ஏன் அங்குள்ளவர்களுக்காக இங்குள்ள மேலைத்தேய நகரங்களில் அவர்களின் வாழ்விற்காக பிச்சைக்காரர்கள்போலும், பைத்தியக்காரர்கள் போலும் பிதற்றிக் கொண்டு இருக்கவேண்டும்? இப்படியான ஒரு மனநிலை ஏற்பட்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயக மக்களுக்கு உதவும் நிலையில் இருந்து விடுபடவேண்டும் என்பதே இப்படிப்பட்ட அறிக்கையின் நோக்கமாக இருக்கும்.

திரும்பத் திரும்ப தாயக மக்களை போராட்டத்திற்குள் திணிப்பது புலம்பெயர்ந்த தமிழர்கள் அல்ல. இன்றும் அங்கு அவர்களை விலங்குகளாக நடாத்துபவர்களே. புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக அங்கு போராட்டம் நடைபெறவில்லை. புலம்பெயர்ந்த தமிழர் என்ற பெரும் சக்தி தாயகப்போராட்டத்தின் பின்புலமாக எந்தக் காலப்பகுதியிலிருந்து ஆரம்பமாகியது? தாயகத்தின் இழப்பை புலம்பெயர்ந்தவர்களாலேயே அதிகம் உணர முடியும்.

ஒரு மனிதன் தான் வளர்ந்து வாழ்ந்த வீட்டை இழக்கும்போதும், ஒரு ஊரைச் சார்ந்தவர்கள் தம்மூரை இழக்கும் போதும், அதைப்போலத்தான் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும். வளர்ந்து வாழ்ந்த சூழலில் இருந்து விடுபட முடியாமலும், வாழவந்த இடத்தின் சூழலுக்கேற்ப தம்மை மாற்ற முடியாமலும் திண்டாட்டத்துடனும் நடைப்பிணங்களாக வாழும் சூழலில், விடுபட்ட உறவாகிப்போன தாயகத்தில் வாழும் உறவுகளை எண்ணுதல் என்பதே மிகப் பெரிய விடயம். இந்த எண்ணத்தில் தீ வைக்கும் எண்ணம் நிச்சயமாக தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும் அது சிங்கள இனவாதத்திற்குக் கூட்டிக் கொடுக்கும் கும்பலுக்கு மட்டுமே ஏற்படும்.

  • Replies 100
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கேள்விக்கும் இதுவே பதில். நன்றிகள் !

இது போன்ற கருத்துக்கள் தமிழினத்தின் ஒட்டு மொத்த கருத்துக்களாக கவனிக்கப்பட வேண்டியதிலையே!ஓரு ஜனநாயக நாட்டில் பலவித கருத்துருவாக்கங்கள் இருக்கலாம்.வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு எதிராகவும் ஒரு சில வாக்குகள் விழுந்தது தானே.அதையும் மீறித்தான் எமது போராட்டம் விறுகொண்டு எழுந்தது.

ஒன்று மட்டும் ,சொல்கிறேன் போர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் பொங்கு தமிழ் எழுச்சி நடாத்தி "பொறுத்தது போதும் பொங்கி எழு தலைவா" என கோசமிட்டதும் இதே மக்கள் தானே.

Edited by vimalk

நான் எனக்கு சரியெனப்படுவதையும், அங்குள்ள மக்களைக் கருத்தில் கொண்டும் தான் எழுதிவருகின்றேன்.செய்வதெல்லாம் செய்துவிட்டு தேசியம் என்று படம் போட எனக்குதெரியாது.சரியென்றால் சரி பிழையென்றால் பிழை.

தமிழரின் குடிசனத் தொகை 3வது,4வது இடத்திற்கு போய்கொண்டிருக்கின்றது,தாங்கள் வந்ததுமல்லாமல் அப்பா,அம்மா, சொந்தம் பந்தம் எல்லாவற்றையும் இங்கு கூப்பிட்டுவிட்டு அங்கிருப்பவர்க்ளுக்கு இங்கிருந்து தீர்வு தேடுகின்ற அதிமேதாவிகள்.உ-ம். இங்கு சாப்பாட்டுகடையால் கலக்கிக்கொண்டிருக்கும் முழுப்புலி ஆதரவாளரின் குடும்பத்தில் 9 பேர்.ஒருவரும் இயக்கத்தில் இல்லை.புலியில் சேர்ந்த கடைசி தம்பியையும் தாயின் சொல்லை கேட்டு முதல்வேலையாய் வெளியில் எடுத்து விட்டார்.இதுதான் நடக்குது எங்களுக்குள்.

தமிழனுக்கு விடுதலை வேண்டும் அதற்கு ஒரு குறிபிட்டவர்களை பலிகடாக்கள் ஆக்க நினைக்காதீர்கள்.

ஆயுதப்போராட்டம்தான் முடிவிற்கு வந்துவிட்டது. எத்தனை பேர் ஊருக்கு போய் ஏதாவது செய்யப்போகின்றீர்கள். அங்கு விஜய் அன்டனியின் கச்சேரி பார்கின்றார்கள் என்று இங்கிருந்து பலர் அங்கலாய்ப்பு.இங்கு ஒவ்வொரு வீக்கெண்டும் கொண்டாட்டம். தயவு செய்து அது அவர்களின் விதி என்று சொல்லிவிடாதீர்கள்.

30 வருடங்கள் போராடி களைச்சுபோட்டுதுகள் ஒரு கொஞ்ச நாளைக்கு மூச்சு விட விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் நல்லவன் என்று சனம் சொல்லவில்லை.நம்பிய இயக்கங்கள் நாசமறுத்ததைத்தான் சனம் சொல்லுது.

சிங்களவனிடம் இருந்து விடுதலை வேண்டித்தான் போராட்டம் தொடங்கியது பின்னர் இயக்கங்களிடம் இருந்து விடுதலை வேண்டி நின்றது சனம்.

வடக்கும் கிழக்கும் அதைத்தான் சொல்லி நிற்குது.

சிங்களவன்,இந்தியன் கொன்ற அளவிற்கு தமிழனை தமிழன் கொன்றொழித்தான்.

இயக்கங்களை விட எடுபிடிகளால் மக்கள் பட்ட துன்பம் அதிகம்.

புலம் பெயர்ந்தவன் நாடு வேண்டிநிற்கின்றான்.புலத்திலுள்ளவன் வாழ்வு வேண்டி நிற்கின்றான்.

புலிகளாக இறந்த (மாவீரர்களாக) தமிழர்கள் 30 000 த்தில் ஒரு ஐந்து அல்லது ஆறுபேரை ஈப்பி சாப்பி அல்லது வேறேதாவது ஒரு டீப்பி சுட்டதாக வைத்தாலும்? 29 900 வரையான தமிழர்கள் (புலிகள்) சிங்கள இந்திய காடைகளுடன் போராடியே மாண்டார்கள். லிபரேசன் ஓபரேசன் போது சிங்களவன் குண்டுபோட்டு கொன்ற மக்களின் எண்ணிக்கை 15 000. இப்படியே தொடங்கி சிங்களவன் கொன்ற கணக்கு 180000 வரை வருகின்றது. இது ஆதரபூர்வமாக பல இணையங்களிலேயே உள்ளது தேதி சம்பவம் எல்லாம் குறித்து.

இந்த தமிழனை தமிழனே கொன்ற கணக்கை ஒருக்கா நீங்களாகவோ அல்லது கருணாதியிடமோ...... அல்லது இப்போதும் எஞ்சியுள்ள சொந்த இனத்தை விற்று பிழைக்கும் பிணங்களிடமோ உங்களால் வாங்கி இங்கே ஒருமுறை..........

நீங்கள் மேலே கூறியதுபோல் தமிழர்கள் கொன்றதே அதிகம் என்ற கணக்கை நிரூபிக்க முடியுமா?

உங்களின் நிறங்களை பல கதைகளை விட்டு உருமறைப்பு செய்தாலும். உண்மையான முகங்களை அவ்வப்போது காட்டுகின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நான் எனக்கு சரியெனப்படுவதையும், அங்குள்ள மக்களைக் கருத்தில் கொண்டும் தான் எழுதிவருகின்றேன்.செய்வதெல்லாம் செய்துவிட்டு தேசியம் என்று படம் போட எனக்குதெரியாது.சரியென்றால் சரி பிழையென்றால் பிழை.

தமிழரின் குடிசனத் தொகை 3வது,4வது இடத்திற்கு போய்கொண்டிருக்கின்றது,தாங்கள் வந்ததுமல்லாமல் அப்பா,அம்மா, சொந்தம் பந்தம் எல்லாவற்றையும் இங்கு கூப்பிட்டுவிட்டு அங்கிருப்பவர்க்ளுக்கு இங்கிருந்து தீர்வு தேடுகின்ற அதிமேதாவிகள்.உ-ம். இங்கு சாப்பாட்டுகடையால் கலக்கிக்கொண்டிருக்கும் முழுப்புலி ஆதரவாளரின் குடும்பத்தில் 9 பேர்.ஒருவரும் இயக்கத்தில் இல்லை.புலியில் சேர்ந்த கடைசி தம்பியையும் தாயின் சொல்லை கேட்டு முதல்வேலையாய் வெளியில் எடுத்து விட்டார்.இதுதான் நடக்குது எங்களுக்குள்.

தமிழனுக்கு விடுதலை வேண்டும் அதற்கு ஒரு குறிபிட்டவர்களை பலிகடாக்கள் ஆக்க நினைக்காதீர்கள்.

ஆயுதப்போராட்டம்தான் முடிவிற்கு வந்துவிட்டது. எத்தனை பேர் ஊருக்கு போய் ஏதாவது செய்யப்போகின்றீர்கள். அங்கு விஜய் அன்டனியின் கச்சேரி பார்கின்றார்கள் என்று இங்கிருந்து பலர் அங்கலாய்ப்பு.இங்கு ஒவ்வொரு வீக்கெண்டும் கொண்டாட்டம். தயவு செய்து அது அவர்களின் விதி என்று சொல்லிவிடாதீர்கள்.

30 வருடங்கள் போராடி களைச்சுபோட்டுதுகள் ஒரு கொஞ்ச நாளைக்கு மூச்சு விட விடுங்கள்.

தொண்டையை நெருக்குபவனுக்கு முண்டு கொடுக்கும் நீங்கள் கொஞ்சம் கைகளை தளர்த்தி பாருங்கள் அவர்கள் கொஞ்சம் சுவாசிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் வசதியுடன் சொகுசாக வாழக்கூடியதாக இருக்கும் ஒரு இனம் ஏன் அங்குள்ளவர்களுக்காக இங்குள்ள மேலைத்தேய நகரங்களில் அவர்களின் வாழ்விற்காக பிச்சைக்காரர்கள்போலும், பைத்தியக்காரர்கள் போலும் பிதற்றிக் கொண்டு இருக்கவேண்டும்? இப்படியான ஒரு மனநிலை ஏற்பட்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயக மக்களுக்கு உதவும் நிலையில் இருந்து விடுபடவேண்டும் என்பதே இப்படிப்பட்ட அறிக்கையின் நோக்கமாக இருக்கும்.

திரும்பத் திரும்ப தாயக மக்களை போராட்டத்திற்குள் திணிப்பது புலம்பெயர்ந்த தமிழர்கள் அல்ல. இன்றும் அங்கு அவர்களை விலங்குகளாக நடாத்துபவர்களே. புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக அங்கு போராட்டம் நடைபெறவில்லை. புலம்பெயர்ந்த தமிழர் என்ற பெரும் சக்தி தாயகப்போராட்டத்தின் பின்புலமாக எந்தக் காலப்பகுதியிலிருந்து ஆரம்பமாகியது? தாயகத்தின் இழப்பை புலம்பெயர்ந்தவர்களாலேயே அதிகம் உணர முடியும்.

ஒரு மனிதன் தான் வளர்ந்து வாழ்ந்த வீட்டை இழக்கும்போதும், ஒரு ஊரைச் சார்ந்தவர்கள் தம்மூரை இழக்கும் போதும், அதைப்போலத்தான் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும். வளர்ந்து வாழ்ந்த சூழலில் இருந்து விடுபட முடியாமலும், வாழவந்த இடத்தின் சூழலுக்கேற்ப தம்மை மாற்ற முடியாமலும் திண்டாட்டத்துடனும் நடைப்பிணங்களாக வாழும் சூழலில், விடுபட்ட உறவாகிப்போன தாயகத்தில் வாழும் உறவுகளை எண்ணுதல் என்பதே மிகப் பெரிய விடயம். இந்த எண்ணத்தில் தீ வைக்கும் எண்ணம் நிச்சயமாக தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும் அது சிங்கள இனவாதத்திற்குக் கூட்டிக் கொடுக்கும் கும்பலுக்கு மட்டுமே ஏற்படும்.

உங்கள் கருத்தும் ஆதங்கமும் தேசியவாத உணர்வுக்குள்ளாகவே சுற்றுகின்றது. ஆனால் பிரச்சனையின் சாரம் அதுவல்ல. இன்று புலம்பெயர்ந்த ஒருவனும் அவன் சார்ந்து தாயகத்தில் இருக்கும் குடும்பமும் பொருளாதார நெருக்கடிகளை ஈடுகொடுத்து வாழமுடிகின்றது. அதேபோல் போராட்டங்களில் இருந்து விலகி அரசை அண்டிப்பிழைக்கும் சனமும் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து வாழ முடிகின்றது. கல்வி மற்றும் இதர விசயங்களில் முன்னேற்றம் காண முடிகின்றது. இதுவே புதிய வர்க்க நிலை. புலம்பெயர் உதவிகள் இன்றியும் தேசியப்போராட்டத்தை சுமந்தும் அரசின் அழுத்தங்களுக்கும் உட்பட்ட மக்கள் வாழ்விழந்து நிர்கதியாகி நிற்கின்றார்கள். பொருளாதாரம் கல்வி இதர விசயங்களில் அடிமட்டத்துக்கு சென்றுவிட்டார்கள். நாம் தேசிய உணர்வுடனும் பிறந்த மண் உறவுகள் மீதான பற்றுடனும் இங்கே பல போராட்டங்களை செய்தாலும் இந்த புதிய வர்க்க நிலையை சமன்செய்ய முனைந்தோமா? நிச்சயமாக இல்லை மாறாக வர்க்க நிலையை மேலும் ஏற்றதாழ்வுள்ளதாக மாற்றுகின்றோம். இங்கிருந்து நாம் எமது உறவுகளுக்கு பணம் அனுப்பி அவர்களை முதலாளிகளாக்க முனைகின்றோம் தாவிர சமுகத்தை பொதுவாக முன்னேற்ற முனையவில்லை. ஒவ்வொரு மக்களின் மனதிலும் குடும்பத்தில் ஒருவனை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் பொருளாதார அடிப்படையிலே உருவாகின்றது. தாயக மீட்பை விட இந்த எண்ணம் வலுவானது. எமக்கு முன் புலம்பெயர்ந்தோர் எமக்கு வழிகாட்டினார்கள் நாம் தாயகத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டி நிற்கின்றோம். இதே போல் போராட்டத்தை சுமந்த மக்களுக்கு அதிலிருந்து விலகி நின்ற மக்கள் வழிகாட்டி நிற்கின்றார்கள். இவற்றுக்கான முக்கியத்துவமே அதிகமானது தவிர தேசியம் தன்னாட்சி சுயநிர்ணயம் என்பன இரண்டாம்பட்சமானது என்பது தான் நடைமுறையில் நிஜம். இதை நிருபிக்கும் அடயாளமே புலம்பெயர்ந்த நாங்கள் தான். பொருளாதார அடிப்படையில் தாயக மக்களை சமன்படுத்தவேண்டும். எமது பற்று உண்மையாயின் எமது உதவிகள் தனிநபர்சார்ந்ததன்றி பொதுமையாக வேண்டும். ஓரளவான வர்க்க சமநிலையிலேதான் நாம் அடுத்த கட்டத்திற்கு போக முடியும். அதே போல் மத இறுக்கம் அற்ற சூழ்நிலையை அறிவார்ந்த பொதுச் செயற்பாடு மூலம் தோற்றுவிக்க வேண்டும். நாம் வர்க்க மற்றும் மதம் பிரதேசவாதம் போன்ற இனத்தை சிதைக்கும் விசயங்களை ஒரு கையிலும் மறுகையில் இனத்தேசியத்தையும் வைத்திருக்கின்றோம். இதனால் என்றும் விமோசனம் இல்லை.

யாழில் தேர்தலைப் புறக்கணியுங்கள்: விடுதலைப் புலிகள் பெயரில் ஈ.பி.டி.பியினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்

யாழ் குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் துண்டுப் பிரசுரங்களை துணை ஆயுதக் குழுவினர் விநியோகித்து வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக அந்த துண்டு பிரசுரங்கள் அமைந்துள்ளன.

குடாநாட்டில் செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பி துணை ஆயுதக் குழுவினரே இந்த துண்டு பிரசுரங்களை மக்கள் மத்தியில் விநியோகித்து வருவதாகவும் அவர்களுக் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவதாகவும் குடாநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் குடநாட்டு மக்களில் பெருமளவானவர்கள் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கக் கூடும் என்ற நிலையில் தமது இருப்பினை உறுதி செய்வதற்கு ஈ.பி.டி.பியினர் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் ஈ.பி.டி.பியின் அரசியல் எதிர் காலம் கேள்விக் குறியாகியுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://www.eelamsoon.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் ஒன்றை இழந்து தான் இன்னொன்றை பெற முடியும் என் உறவுகளும் சேர்ந்து தான் பலியாகிறது அத்தோடு நாங்களும் இங்கிருந்து கஸ்ட‌ப்பட்டு உழைத்து தான் காசு அனுப்புகிறோம்

ஓம் ஓம்.. இங்கு கஸ்டப்பட்டு வேலை செய்பவர்கள் குடும்பம் குடும்பமாக வேலைக் கஸ்டம் தாங்காது செத்துப்போகிறார்கள் அல்லவா..

சனம் குடும்பத்தில கிட்டத்தட்ட எல்லாரையும் இழந்துபோட்டு வந்திருக்கு. அவையிட்டை போய் ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெற வேண்டும் என்றால் சொல்லுறவற்றை கன்னத்தில அறை நிச்சயம்.

புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து உதவுகினமாம். புலிகள் இருந்த போதாவது கொஞ்சம் வன்னி பூர்வீக மக்களுக்கு (அங்கிருந்த மலையக மக்கள் உட்பட) உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இப்போ தனிய யாழ்ப்பாணத்து சனத்துக்குத்தான் காசு காசா போகுது.. வன்னி பக்கம் பாருங்கோ.. 4 தகரத்தால கூடு அடைச்சு சனம் இருக்குது. இவைக்கு யார் உதவுவது..?

புலம்பெயர்ந்தவர்கள் சிறுபான்மைதான். அங்கிருப்பவர்கள் தமது அரசியல் முடிவை எடுக்க சகல உரித்தும் உடையவர்கள். இப்பவே யாழ்ப்பாணத்தில O / L படிக்கிற பெடியனுக்கு புலிகள் என்றால் - எனக்கு PLO வை அறிந்த மாதிரி ஒரு செய்தியாகத்தான் அறிந்திருக்கிறான். இது வட கிழக்கு எங்கணும் அடுத்த 15 வருடத்தில் நடக்கும்.

தாயக - புலம்பெயர் பாலம் இப்ப இல்லை. தாயக மக்களது அரசியல தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரதிபலித்தாலும் கூட்டமைப்பு புலத்தில் நமது தேசிய செயற்பாடுகளிலிருந்து விலகித்தான் நிற்கப்போகிறார்கள். ஆக தமிழீழம் தமிழீழம் எனக் கடைசி வரை கத்தி ஓயப்போவது புலம்பெயர்ந்தவர்களாகிய நாங்கள் மட்டும்தான். அல்லது கோடை காலங்களுக்கு தாயகத்துக்குப் போய்வரப்போகிற புலம்பெயர்ந்தவர்களும் போயிட்டுவந்து அங்கை ஒரு பிரச்சனையும் இல்லையென்று சொல்லுவார்கள்.

மிக முக்கியமாக - அடுத்த மே வரமுன்னரேயே அபாண்டமாக பழி சுமத்தாதீர்கள் என நாடுகடந்த தமிழீழ அரசு விடும் அறிக்கையும் - நாடுகடந்த அரசு நம்மை நசுக்குகிறது என வட்டுகோட்டை தீர்மானத்தார் விடுகிற அறிக்கையும் - வட்டுகோட்டை தீர்மானம் ஒரு அவமானம் என ஊடகங்கள் தமக்குள் நடாத்துகிற புடுங்குப்பாடும் - புலம்பெயர்ந்த நமக்கு தமிழீழம் ஒரு கேடா என்று கேட்க வைக்கின்றன. இன்றைக்கு அதிகாரங்களுக்கு அடிபிடிப்படுபவர்கள் எல்லாம் அண்ணை எப்ப போவார் திண்ணை எப்ப காலியாகும் என்று காத்திருந்தவர்களாகத்தான் இருந்திருக்கினம் போல.. வேறெதிலயும் நம்பிக்கையில்லாட்டியும் இவங்கட அடிப்பிடிப்பாடுகளிலேயே அண்ணை இல்லையென்பது தெளிவாயிட்டுது.

என்னத்தயாவது செய்து தொலைக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் உதவிகள் இன்றியும் தேசியப்போராட்டத்தை சுமந்தும் அரசின் அழுத்தங்களுக்கும் உட்பட்ட மக்கள் வாழ்விழந்து நிர்கதியாகி நிற்கின்றார்கள். பொருளாதாரம் கல்வி இதர விசயங்களில் அடிமட்டத்துக்கு சென்றுவிட்டார்கள். நாம் தேசிய உணர்வுடனும் பிறந்த மண் உறவுகள் மீதான பற்றுடனும் இங்கே பல போராட்டங்களை செய்தாலும் இந்த புதிய வர்க்க நிலையை சமன்செய்ய முனைந்தோமா? நிச்சயமாக இல்லை மாறாக வர்க்க நிலையை மேலும் ஏற்றதாழ்வுள்ளதாக மாற்றுகின்றோம்.இதை நிருபிக்கும் அடயாளமே புலம்பெயர்ந்த நாங்கள் தான். பொருளாதார அடிப்படையில் தாயக மக்களை சமன்படுத்தவேண்டும். எமது பற்று உண்மையாயின் எமது உதவிகள் தனிநபர்சார்ந்ததன்றி பொதுமையாக வேண்டும். ஓரளவான வர்க்க சமநிலையிலேதான் நாம் அடுத்த கட்டத்திற்கு போக முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கொரு வழி சமைப்போம்

பொருளாதார ரீதியில்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நிருபிக்கும் அடயாளமே புலம்பெயர்ந்த நாங்கள் தான். பொருளாதார அடிப்படையில் தாயக மக்களை சமன்படுத்தவேண்டும். எமது பற்று உண்மையாயின் எமது உதவிகள் தனிநபர்சார்ந்ததன்றி பொதுமையாக வேண்டும். ஓரளவான வர்க்க சமநிலையிலேதான் நாம் அடுத்த கட்டத்திற்கு போக முடியும்.

அப்படி இல்லை சுகன். அங்கையிருக்கிற சனம் பிச்சைக்காரரா எங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாத்தான் நாங்கள் இங்கையிருந்து சொல்லுறதைக் கேட்கும். படிச்சுக் கிடிச்சு அறிவு வந்து எங்களை எதிர்க்க வெளிக்கிட்டா என்ன ஆகும்..?

பிள்ளையாரப்பா எனக்கொரு ஆசை உண்டு.

புலம்பெயர்ந்தவர்கள் உடனடியாக நாடு திரும்பி வரவேண்டும் என்றொரு தீர்மானத்தை

வடக்கு கிழக்குத் தமிழர் எடுத்து அதற்கொரு எலக்சன் வைத்து 99 வீதத்தால வெல்ல வைக்கவேணும். பிறகு எங்களைபாத்து வாங்கோ என்று சொல்ல வேணும்.

என்ன காவடி குண்டைத்தூக்கி போடுகின்றீர்கள் காலையிலேயே.....

நான் இந்த விளையாட்டுக்கு வரல..

நமக்கு தாங்காதப்பா.......

உங்களுக்கு பகிடிக்கும் நிஐத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போச்சு...

இன்றைக்கு கனபேருக்கு நெஞ்சுவருத்தம் வரப்போகுது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை விசுகு அப்படியொன்று நடந்தால் என்ன நடக்கும்?

அவையார் எங்களை வரச் சொல்ல என்று கேட்போம்.

அல்லது

எங்களுக்குத் தெரியும் என்ன செய்யவேண்டும் என்று சொல்வோம்.

----

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை விசுகு அப்படியொன்று நடந்தால் என்ன நடக்கும்?

அவையார் எங்களை வரச் சொல்ல என்று கேட்போம்.

அல்லது

எங்களுக்குத் தெரியும் என்ன செய்யவேண்டும் என்று சொல்வோம்.

----

இதேகேள்வியை அவர்கள் எம்மிடம் கேட்டால்.....???

பரிதாபகரமானநிலையில் தமிழினம்

தன்னைத்தானே விமர்சனத்துக்குள்ளாக்காத இனம் வேறு என்ன செய்யமுடியும்.....?

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பொருத்தமில்லாவிட்டாலும்

இதனுடன் சம்பந்தப்பட்ட ஒரு கருத்தை இங்கு முன் வைக்கலாம் என்று நினைக்கின்றேன்

எனது அண்ணரின் மகன் முள்ளிவாய்க்கால்வரை மருத்துவப்போராளியாக நின்று இங்கு வந்துள்ளான்

எல்லோரும் அவனை விமர்சனத்துக்குள்ளாக்கினர்

நான் மட்டும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை

பலர் என்னிடம் கேட்டனர் ஏன் அவனிடம் அரசியல் சம்பந்தமாக எதுவுமே கதைக்கவில்லை என்று.

எனது பதில் அவனை மட்டும் ஏன் போராடவில்லை என்று கேட்க என்னால் முடியாது என்பதுதான்....

ஏறகுறைய மகிந்த பதவியேற்ற காலப்பகுதியில் இருந்து சிங்கள இனவாதம் நன்கு திட்டமிட்டு தன் மூளை வளங்களை ஒன்றுசேர்த்தது. பல்வேறு சிங்களப் பல்கலை களகப் பேராசிரியர்கள் தமிழரை அடக்க ஒன்றுசேர்ந்து அரசின் பின் நின்றார்கள். உள்ளூர் / வெளிநாடுப் பேராசிரியர்கள் எனப் பலர்.

இவர்களின் நீண்ட காலத்திட்டங்களுள் ஒன்றுதான் புலத்தில் இருக்கும் தமிழரை போராட்டத்திற்கு பயனற்றதாக்குவது. இதன் அடிப்படையில் பல பிரச்சாரங்களை முன்னெடுத்தர்கள். 2006 அளவில் போராட்டம் நடப்பதே புலம் பெயர்ந்தவர்களுக்குத்தான் என்று வேறு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

புலம் பெயர்ந்தவர்களிற்கும் உள்ளூரில் இருப்பவர்களிற்கும் இடையில் தனிநாடு சம்பந்தமாக சிந்தனையில் வேறுபாடு இருக்கின்றதென்பதும் இவர்களின் ஒரு பிரதான‌ பிரச்சாரம். ஏறகுறைய 4 வருடம் பழமை வாய்ந்த சிங்களக் கருத்து இது.

இன்று ந‌ம்ம‌வ‌ர்க‌ள் சில‌ர் இது போன்ற‌ க‌ருத்துக்க‌ளை முன்வைக்கின்றார்க‌ள் என்றால் சிங்க‌ள‌ப் பிர‌ச்சார‌ம் வேலை செய்கின்ற‌து என்று அர்த்த‌ம்.

இன்னுமொன்றையும் நாம் க‌வ‌னிக்க‌ வேண்டும். இவ்வள‌வு தேர்த‌ல் அம‌ளி தும‌ளிக்குள்ளும், த‌மிழ‌ரைப் பிரித்து புல‌த்த‌மிழ‌ரை சோர்வ‌டைய‌ வைக்க‌த்த‌க்க‌ வ‌கையில் செய்ற்பாடுகள் தொட‌ர்ந்து ந‌ட‌க்கின்ற‌தென்றால் சிங்க‌ள‌ இனவாதம், இன்னும் எவ்வ‌ள‌வு உசாராக‌ இருக்கின்ற‌து என்ப‌தையும், ச‌ர‌த், ம‌கிந்த‌விற்கு அப்பால் நிதான‌மாக த‌ன‌து அடிக‌ளை எடுத்துவைப்ப‌தையும் க‌வ‌னிக்க‌வேண்டும்.

"ள்ளையாரப்பா எனக்கொரு ஆசை உண்டு.

புலம்பெயர்ந்தவர்கள் உடனடியாக நாடு திரும்பி வரவேண்டும் என்றொரு தீர்மானத்தை

வடக்கு கிழக்குத் தமிழர் எடுத்து அதற்கொரு எலக்சன் வைத்து 99 வீதத்தால வெல்ல வைக்கவேணும். பிறகு எங்களைபாத்து வாங்கோ என்று சொல்ல வேணும்."

யாழ் கவிமணி, யாழ் பாக்கோ... கவிஞர் காவடி

நீங்கள் இப்படியெல்லாம் புலம்பெயர்ந்தவர்களின் உண்மைமுகங்களை கிழிக்க வெளிக்கிட்டால் நாடு கடந்த அரசு யார் எடுத்து தருவது?.ஏன் இந்த நாடு கடந்த அரசு பற்றி யாரும் தலைவர் இருக்க மட்டும் கதைக்கவில்லை.

நாங்கள் லண்டனில் இருந்து போராட்டத்திற்கு போனாங்களாக்கும், இணைய போராளிகளல்ல. அதுதான் நாட்டில் உள்ள மக்களை பற்றி கதைக்க வெளிக்கிட்டால் பலபேர் மனச்சாட்சியின் உறுத்துதலால் சும்மா துள்ளியடிக்கிறவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவோ இப்ப சில கருத்துக்கள் சூப்பர் ஹிட் ஆக போகுது...எங்கள் யாழ்ளில நடந்த/ நடக்கிற எலெக்சன்...மற்றது இது.....

எல்லாக்கருத்துகளுக்கும் பதில் சொல்ல முடியாதால் சிலவற்றிற்கு சொல்லுகிறேன்...

முதலில் சுகனுக்கும், காவடிக்கும் நன்றிகள்...வல்வை சகாரா, ரதி இனது கருத்களில் பிரதானமான (வெட்டிக்கருத்துகளுக்கு) கருத்துக்களுக்கு பதில் எழுத நினைத்தனான் உங்களது பதில் மிகவும் பொருந்தமானது..அதைத்தான் நானும் சொல்லவிரும்பியது..அதில் ரதியின் நாங்களும் கஸ்ரப்பட்டு பணம் அனுப்புகிறோம்.வடிவேலின் (வன்னி / தமிழ் சனத்தை வைத்து ) கொமடி பண்ணுகிற பகிடிதான் ஞாபகம் வந்தது ...என்ன செய்கிறது இதைதான் விதி என்னும், ஊழிக் காலம் என்றும் சொல்லுவதோ...

சுகன் முந்தி ஒருக்கா வேறு ஒருஇடத்தில் நிழலி சொன்னது போல நீங்கள் உங்கள் கருத்துக்களை வேறிடங்களிலும் போட்டால் நல்லம்..வாழ்த்துக்கள்

ரகுநாதன்...நான் சொல்லியிருந்தது...அவர்களின் சந்தோசத்தில் இணைகிற தன்மை எங்களுக்கு இல்லை என்று...அதைத்தான் அந்த படத்திலும் சொல்லவந்தது..அதைவிட தொடர்ந்து சொல்லியிருந்தேன் ...அவர்கள் அங்கே பொன்னும் பொருளுடனும் சீரும் சிறப்புமாய் வாழவில்லை, ஆனால் சிறிய நிம்மதி...ஏனோ அதை நான் சொல்லவில்லை என்பது போல் எழுதி இருக்கிறீர்கள்....கொஞ்ச பேர் அர்ஜுனின் கருத்துக்கள், அவரின் பின்னணி பற்றி , இதே மாதிரி ஒவோருவரையும் பின்புலம் தேடினால் தமிழர் என்று சொல்ல யாரும் மிஞ்ச்சுவார்களோ தெரியாது...அவரின் கருத்து சரி, பிழை..அதை சொன்னால் நல்லம்...

புலம் பெயர்ந்தவர்கள் மீள திரும்புவது பற்றிய வாக்கெடுப்பு..பலே..பலே...எங்க குடும்பத்தை பிரிகிற பிளனோ..எனக்கு தெரியாது ஆரும் கவிதை எழுதுகிறவர்கள் போவார்களோ என்று ...சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா, அட எந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கு ஈடாகுமா? இளையராஜாவையும் கூட்டிக்கொண்டு போகலாம் :(

இரணியன் -- அப்ப EPDP யும் புலியும், புலம் பெயர்ந்த ஆட்களும் (கொள்கை ரீதியில்)ஒன்றாய் வந்திட்டினம் போல...இதைதான் சொல்லுவதோ, நளவெண்பாவின் மாடப் பருந்தும் ....

ஈசன்... நீங்கள் சொல்லுவது உங்களையே நீங்கள் ஏமாத்துவது என்பது விளங்கிக்கொள்ள கன காலம் எடுக்காது...பிறகு ஒருவர் எழுதினமாதிரி இந்த சம்மர் நல்லூர் திருவிழாவோட என்னும் 100 , ஆயிரம் பேர் போட்டுவந்து கீரிமலை..மாவிட்டபுரம் பற்றி கதை கதைக்க யார் யாருக்காக யாரின் கதையை கதைக்கினம் என்று விளங்கும்...

அதில இன்னுமொருவரின் கொ(கு)சும்பு " அவர்கள் தானே பொறுத்தது போதும் பொங்கிஎழு தலைவா என்று சொன்னவை " உதைத்தான் சொல்லுவதாக்கும் குதிரைக்கு தண்ணியை காட்டலாம் அதுக்காண்டி குடிக்கேலாது என்று..

இறுதியாக...

ரகுநாதன்..என்னை விடுங்கோ..என்னைபோல கருத்தெழுகிற ஆட்களை விடுங்கோ ... உங்கடை நண்பர் என்னமாதிரி...யாரிட்டையும் காசு கீசு வாங்கிப்போட்டுத்தான் உப்படி சொன்னவர் என்றால்...முதலே சொல்லியிருக்கலாம்...நானும் எனக்கு சொன்னவரை (அவரின் கதைகளை ) பிற்காலத்தில் ஒரு இடத்தில் வைக்கிறதுக்கு உதவியாயிருக்கும்...

கருத்து பகிர்ந்து கொண்ட எல்லோருக்கும் நன்றி...

விசு உங்கள் உறவினருடன் கதைத்து மக்களுக்கு தெரிய படுத்த வேண்டிய (புதிதாக) விடயங்கள் இருந்தால் பகிர்ந்து கொண்டால் நன்றியுடையவர்களாய் இருப்போம் .

உண்மையிலேயே நீங்கள் ஒரு பெரிய‌ அறிவாளிதான். பாராட்டுக்கள். ஒவ்வொரு வசனமும் அறிவுப் பெட்டகம். சில பேர் உங்கள் வரிகளைப் பார்த்துப் போட்டு லூசுப் புண்ணக்கு ஒண்டு புலம்புது எண்டு சொல்லப் பார்ப்பினம், அதுகளக் கேட்டு தயவு செய்து ஊக்கத்தை தளர விட வேண்டாம். தொடர்ந்து உங்கள் அறிவியற் சேவையைச் செய்யவும். உங்கள் அதீத, உன்னத கருத்துக்களை தொடர்ந்து எடுத்து விடுங்கோ. வாசிச்சு பயன் பெறுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி இல்லை சுகன். அங்கையிருக்கிற சனம் பிச்சைக்காரரா எங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாத்தான் நாங்கள் இங்கையிருந்து சொல்லுறதைக் கேட்கும். படிச்சுக் கிடிச்சு அறிவு வந்து எங்களை எதிர்க்க வெளிக்கிட்டா என்ன ஆகும்..?

பிள்ளையாரப்பா எனக்கொரு ஆசை உண்டு.

புலம்பெயர்ந்தவர்கள் உடனடியாக நாடு திரும்பி வரவேண்டும் என்றொரு தீர்மானத்தை

வடக்கு கிழக்குத் தமிழர் எடுத்து அதற்கொரு எலக்சன் வைத்து 99 வீதத்தால வெல்ல வைக்கவேணும். பிறகு எங்களைபாத்து வாங்கோ என்று சொல்ல வேணும்.

நான் இந்த பிச்சைகாரர் உதாரணத்துக்கு முற்றுமுழுதாக ஒத்துக்கொள்ளாவிடினும்...ஆனால் ஒருவிதமான ஆளுமைத்தன்மை, அறிவுத்தன்மை தங்களுக்கு தாயகத்தில் உள்ளவர்களை விட கூட தெரியும் என்கிற தன்மை இல்லாமல் இல்லை..நான் நினைக்கிறேன் இங்கு கூட ஒருவர் எழுதியிருக்கவேனும், தாயகத்தில் உள்ளவர்களை விட எங்களுக்கு தான் எதிர்காலத்தை பற்றி தீர்மானிக்கிற/ எதிர்வு கூறுகிற அறிவு கூட என்று..உந்த கருதுகோள் முந்தியும் இருந்தது " இங்கிலாந்து இல் இரும்பு தூக்கினவன் எல்லாம் engineer என்று" இப்ப அந்த அறிஜர்கள் தாயகத்தில் இருப்பவர்களுக்கு அறிவுரை கொடுக்குகிரார்கள். என்ன செய்யவேண்டும். "ஒன்றை/ பத்தை இழந்துதான் ஒன்றை பொறவேண்டும்", இதுபோல பல "முந்தியே சண்டை வேண்டாம் என்றிருந்தால் ஏன் அந்த 180000 சனமும் 30000 போராளிகளும் செத்திருப்பானேன்" ஒன்றை வசதியாக மறந்து விட்டார்கள், அவர்கள் பிடித்த சண்டையாலேயே நாங்கள் இங்கே அகதியாய் வந்தோம் என்று. அதற்க்கு மேல் அந்த சனமும் போராளிகளும் புலம்பெயர்ந்தவர்களுடையது, அவர்களுடைய அண்ணன் தம்பி.ஆனால் அந்த சனம் துரோகி கூட்டம் அவர்களுக்கும் அந்த மண்டுபோனவருக்கும் ஒரு தொடர்பும் இல்லை, இவ்வளவு காலமும் செவ்வாய் கிரகத்தில் இருந்துவிட்டு சண்டை வேண்டாம் என்று - சிங்களவனோடு சேர்ந்துகொண்டு - எங்கட 30 / 60 வருட போராட்டத்தை கைவிடப்பாண்ணிய துரோக கும்பல்...இன்னுமொன்று சிறைகளில் இருக்கிற 10000 - 13000 போராளிகளுக்கும் அந்த மக்களுக்கும் ஒருவித தொடர்பும் இல்லை ....

இன்னுமொன்று யாரோ ஒருவர் யாழ்மக்கள் கஸ்ரப்படவில்லை/ சொசுசாக இருந்தது என்று சொன்னவர்...mmm என்ன சொல்லுறது...யாழில் எல்லாரும் கஸ்ரப்படவில்லை என்று சொல்லுங்கோ, பலரும் கஸ்ரப்பட்டோம்....சும்மா கதை எழுதவேண்டாம்...

எனக்கு தெரியாது , நான் இப்படி எழுதுவது நிர்வாகத்திற்கும் என்னையோருக்கும் பிடிக்குமோ என்று..இதுவரைக்கும் கத்தி கித்தி என்று ஒருநாளும் வரவில்லை...நான் எழுதுவது பிடிக்காட்டி எனக்கு அறியதரவும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவே யாழ்ப்பாணத்தில O / L படிக்கிற பெடியனுக்கு புலிகள் என்றால் - எனக்கு PLO வை அறிந்த மாதிரி ஒரு செய்தியாகத்தான் அறிந்திருக்கிறான். இது வட கிழக்கு எங்கணும் அடுத்த 15 வருடத்தில் நடக்கும்.

கசப்பான ஆனால் மறுக்கமுடியாத உண்மை.:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலேயே நீங்கள் ஒரு பெரிய‌ அறிவாளிதான். பாராட்டுக்கள். ஒவ்வொரு வசனமும் அறிவுப் பெட்டகம். சில பேர் உங்கள் வரிகளைப் பார்த்துப் போட்டு லூசுப் புண்ணக்கு ஒண்டு புலம்புது எண்டு சொல்லப் பார்ப்பினம், அதுகளக் கேட்டு தயவு செய்து ஊக்கத்தை தளர விட வேண்டாம். தொடர்ந்து உங்கள் அறிவியற் சேவையைச் செய்யவும். உங்கள் அதீத, உன்னத கருத்துக்களை தொடர்ந்து எடுத்து விடுங்கோ. வாசிச்சு பயன் பெறுவோம்.

எசன்,

நீங்கள் இப்படி எழுதுவீங்களோ என நினைத்துதான் முதல் கருத்து பதிந்தனான். மற்றும்படி கற்பனையில கதை விட எனக்கு தெரியாது..

ஒருக்கா சொல்லுவாங்களாம் மொட்டு சிங்களவன் என்று, பிறகு சொல்லுவாங்களாம் "சிங்கள புத்திசீவிகள்" என்று உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியவில்லை. மற்றது உங்களுடைய அறிவுள்ள/ அறிவற்ற /லூசுத்தனமான/ வேலையில்லாத/ வெட்டித்தனமான - எது சரியோ அதை எடுங்கோ , ஏனென்றால் எனக்கு இப்ப உங்களுக்கு புத்தி எந்தளவு என்று தெரியாது - கருத்து சிங்களவர் எல்லாம் "மூளை" வளர்ந்து use பண்ண தொடங்கியது "4 வருட பழமைவாய்ந்தது" :( கவனம் கவனம் இன்னும் 40 வருடம் போனால் என்ன நடக்குமோ தெரியாது...

இன்னுமொன்று ...நீங்கள் சொல்லுகிறீர்கள் வெளிநாட்டு புத்திசாலிகளும் இப்ப (இந்த 4 வருடத்துக்குள்) சிங்களவரோடு..அப்ப என்ன மாதிரி...நாங்கள் நிறைய சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்...இதுவும் ஒருவகை உள்ளுக்கை விட்டு அடிக்கிற பிளானோ? நேரத்தோட சொன்ன எங்களுக்கும் ஏதும் விளங்கும்....

ஒவ்வொரு மக்களின் மனதிலும் குடும்பத்தில் ஒருவனை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் பொருளாதார அடிப்படையிலே உருவாகின்றது. தாயக மீட்பை விட இந்த எண்ணம் வலுவானது. எமக்கு முன் புலம்பெயர்ந்தோர் எமக்கு வழிகாட்டினார்கள் நாம் தாயகத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டி நிற்கின்றோம். இதே போல் போராட்டத்தை சுமந்த மக்களுக்கு அதிலிருந்து விலகி நின்ற மக்கள் வழிகாட்டி நிற்கின்றார்கள். இவற்றுக்கான முக்கியத்துவமே அதிகமானது தவிர தேசியம் தன்னாட்சி சுயநிர்ணயம் என்பன இரண்டாம்பட்சமானது என்பது தான் நடைமுறையில் நிஜம். இதை நிருபிக்கும் அடயாளமே புலம்பெயர்ந்த நாங்கள் தான். பொருளாதார அடிப்படையில் தாயக மக்களை சமன்படுத்தவேண்டும். எமது பற்று உண்மையாயின் எமது உதவிகள் தனிநபர்சார்ந்ததன்றி பொதுமையாக வேண்டும். ஓரளவான வர்க்க சமநிலையிலேதான் நாம் அடுத்த கட்டத்திற்கு போக முடியும். அதே போல் மத இறுக்கம் அற்ற சூழ்நிலையை அறிவார்ந்த பொதுச் செயற்பாடு மூலம் தோற்றுவிக்க வேண்டும். நாம் வர்க்க மற்றும் மதம் பிரதேசவாதம் போன்ற இனத்தை சிதைக்கும் விசயங்களை ஒரு கையிலும் மறுகையில் இனத்தேசியத்தையும் வைத்திருக்கின்றோம். இதனால் என்றும் விமோசனம் இல்லை.

இன்றைய நிலையை சமரசத்துக்கு இடமின்றி தெளிவாக உணர்த்தும் வரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வொல்கனோ நான் உங்களை மாதிரி படிக்கவில்லை நீங்கள் மெத்த அறிவாளி நான் ஏற்றுக் கொள்கிறேன் எனக்கு உங்களை மாதிரி சிந்திக்க தெரியாது...ஒன்று நீங்கள் அரச உதவிப் பணத்தில் இருப்பவராக இருக்க வேண்டும்[பெரும்பாலும் அப்படி இருக்காது என நினைக்கிறேன்]அல்லது நல்ல பெரிய படிப்பு படித்து விட்டு கணணியில் வேலை செய்பவராக இருக்க வேண்டும்...உங்களுக்கு அலுவலகத்தில் இருந்து வேலை செய்தால் பணம் வரும் ஆனால் இங்கு பெரும்பாலானோர் என்னையும் சேர்த்து கஸ்டப்பட்டு தான் உழைத்து காசு அனுப்புகின்றனர்..நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்ட எண்ணத்தில் செய்கிறார்கள்...இங்கிருந்து நாங்கள் பணம் அனுப்புவதும் அங்கு மக்கள் கஸ்டங்களை அனுப்புவதும்,உயிர் விடுவதும் ஒன்று இல்லை தான்....போராட்டம் என்று தொடங்கிய பின் எல்லாரும் ஊரில் இருந்து கொண்டு ஒருவருமே புலத்திற்கு இடம் பெயராமல் இருந்திருந்தால் போராட்டம் இந்த அளவுற்கு வளர்ச்சி அடைந்திருக்காது...சர்வதேசத்திற்கு எமது பிரச்சனை தெரிந்தும் இருக்காது...ஆயுதப் போராட்டத்திற்கும்,எமது மக்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்தவும் பணம் முக்கியமாகிறது.

அங்கு உயிர் விட்டது எமது சொந்த மக்கள் தான் ஆனால் ஒரு இயற்கை அழிவு வந்து அவ் மக்கள் இறந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்...இது தொடர்பாக வேறொரு பதிவில்கலைஞனின் கேள்விக்கு நெடுக்ஸீன் பதிலைப் பாருங்கள்.

போர் உச்ச கட்டம் அடைந்த போது நாங்கள் அவ் மக்களை காப்பாற்ற எவ்வளவு கஸ்டப்பட்டோம்...பாராளுமன்றத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தோம் இதனால் பல பேருக்கு வேலையே போய் இருக்கிறது... ஆனால் உங்களை போல் சிலர் சொல்வார்கள் நாங்கள் போய் நின்று கத்தித் தான் அவர்களுக்கு[வன்னி மக்களுக்கு] இந்த நிலை என ஒன்றும் செய்திருக்கா விட்டாலும் இதே தான் சொல்வீர்கள்.

உங்கள் கருத்தும் ஆதங்கமும் தேசியவாத உணர்வுக்குள்ளாகவே சுற்றுகின்றது. ஆனால் பிரச்சனையின் சாரம் அதுவல்ல. இன்று புலம்பெயர்ந்த ஒருவனும் அவன் சார்ந்து தாயகத்தில் இருக்கும் குடும்பமும் பொருளாதார நெருக்கடிகளை ஈடுகொடுத்து வாழமுடிகின்றது. அதேபோல் போராட்டங்களில் இருந்து விலகி அரசை அண்டிப்பிழைக்கும் சனமும் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து வாழ முடிகின்றது. கல்வி மற்றும் இதர விசயங்களில் முன்னேற்றம் காண முடிகின்றது. இதுவே புதிய வர்க்க நிலை. புலம்பெயர் உதவிகள் இன்றியும் தேசியப்போராட்டத்தை சுமந்தும் அரசின் அழுத்தங்களுக்கும் உட்பட்ட மக்கள் வாழ்விழந்து நிர்கதியாகி நிற்கின்றார்கள். பொருளாதாரம் கல்வி இதர விசயங்களில் அடிமட்டத்துக்கு சென்றுவிட்டார்கள். நாம் தேசிய உணர்வுடனும் பிறந்த மண் உறவுகள் மீதான பற்றுடனும் இங்கே பல போராட்டங்களை செய்தாலும் இந்த புதிய வர்க்க நிலையை சமன்செய்ய முனைந்தோமா? நிச்சயமாக இல்லை மாறாக வர்க்க நிலையை மேலும் ஏற்றதாழ்வுள்ளதாக மாற்றுகின்றோம். இங்கிருந்து நாம் எமது உறவுகளுக்கு பணம் அனுப்பி அவர்களை முதலாளிகளாக்க முனைகின்றோம் தாவிர சமுகத்தை பொதுவாக முன்னேற்ற முனையவில்லை. ஒவ்வொரு மக்களின் மனதிலும் குடும்பத்தில் ஒருவனை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் பொருளாதார அடிப்படையிலே உருவாகின்றது. தாயக மீட்பை விட இந்த எண்ணம் வலுவானது. எமக்கு முன் புலம்பெயர்ந்தோர் எமக்கு வழிகாட்டினார்கள் நாம் தாயகத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டி நிற்கின்றோம். இதே போல் போராட்டத்தை சுமந்த மக்களுக்கு அதிலிருந்து விலகி நின்ற மக்கள் வழிகாட்டி நிற்கின்றார்கள். இவற்றுக்கான முக்கியத்துவமே அதிகமானது தவிர தேசியம் தன்னாட்சி சுயநிர்ணயம் என்பன இரண்டாம்பட்சமானது என்பது தான் நடைமுறையில் நிஜம். இதை நிருபிக்கும் அடயாளமே புலம்பெயர்ந்த நாங்கள் தான். பொருளாதார அடிப்படையில் தாயக மக்களை சமன்படுத்தவேண்டும். எமது பற்று உண்மையாயின் எமது உதவிகள் தனிநபர்சார்ந்ததன்றி பொதுமையாக வேண்டும். ஓரளவான வர்க்க சமநிலையிலேதான் நாம் அடுத்த கட்டத்திற்கு போக முடியும். அதே போல் மத இறுக்கம் அற்ற சூழ்நிலையை அறிவார்ந்த பொதுச் செயற்பாடு மூலம் தோற்றுவிக்க வேண்டும். நாம் வர்க்க மற்றும் மதம் பிரதேசவாதம் போன்ற இனத்தை சிதைக்கும் விசயங்களை ஒரு கையிலும் மறுகையில் இனத்தேசியத்தையும் வைத்திருக்கின்றோம். இதனால் என்றும் விமோசனம் இல்லை.

சுகனின் இந்த கருத்தை ஏற்கத் தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூறாவளி...

இந்த திரியை தொடங்கினபோது எதோ நாலு நல்லவிடயத்தை கதைக்கேக்க நானும் என்னுடைய கருத்தை சொல்லுவம் என்றுதான் இருந்தேன்..ஆனா இப்ப இது ஒரு கொமிக் சீரிஸ் மாதிரி இருப்பதால்..

உங்களிட்டையும் ௨ கேள்வியை கேட்பம் எண்டுதான் ....

போர் முடிந்தபின் நானும் இரண்டுமுறை சிறிலங்கா சென்றிருக்கிறேன்...

இரண்டுமுறையும் வவுனியா சென்று முகாம்களில் இருக்கும் மக்களையும் சந்தித்திருக்கிறேன்... யாழுக்கும் சென்றிருந்தேன்... எனக்கென்று அங்கு தெரிந்தவர்கள் யாருமில்லை... தந்தைவழி உறவினர் ஒருவரின் வீட்டில்தான் தங்கிருந்தேன்...

இரண்டுமுறையும் வவுனியா சென்று முகாம்களில் இருக்கும் மக்களையும் சந்தித்திருக்கிறேன்... யாழுக்கும் சென்றிருந்தேன்..

எனக்கென்று அங்கு தெரிந்தவர்கள் யாருமில்லை... தந்தைவழி உறவினர் ஒருவரின் வீட்டில்தான் தங்கிருந்தேன்...

அப்ப நீங்கள் எல்லாரும் வெளிநாட்டிலே? ஆகக அப்ப உங்கட அம்மாவழி சொந்தமும் வெளிநாட்டிலேயே?? mmm அப்ப அப்பாவின்ர ஆட்களில் எல்லாரும் வெளியில இல்ல போல ...ஒராள் இரண்டுபேர் இலங்கையில ஆக்கும்...அப்ப அவை வாடிட இருக்கினமே...கேபிள் டிவி, 2 / 3 வாகனம்...சாப்பாடுக்கு உடுபுடவைக்கு ஒரு குறையும் இல்லை தானே...அவையின்ர படிப்புகள் என்னமாதிரி..ஸ்டுடென்ட் விசா இல்லாட்டி ஏதேனும் ச்போன்சொர் அலுவல் பார்த்தநீங்க்களோ?? நீங்கள் பார்க்காமலே வந்திருப்பியல்...உங்கட சொந்தமெல்லாம் இங்காலை இருக்கேக்க...இப்ப போய் என்ன கொடுத்தனீங்கள் எதன் I போன், வீடியோ டிஜிட்டல் கேமரா..அவைகள் உடன உடன படம் எடுத்து அனுப்ப....மற்றது உந்த காணி அலுவலும் பார்த்திட்டுத்தானே வந்தனீங்கள்?? ஏனென்றால் இப்ப காணிகளுக்கு வலு டிமான்ட் ....கண்ட கலட்டு கணிஎன்றாலும் நல்ல விலை...பேய்த்தனமா வித்துப்போடாம பார்க்க வேண்டும்...

எனது நண்பர்களின் உறவினரையும் ஏனையோரையும் முகாமில் சந்தித்திருந்தேன்... எத்தனைபெறேன்று தெரியாது ஆனால் பலருடன் உரையாடடியுமுள்ளேன். அத்தனைபேரும் எந்த ஒரு இடத்திலும் புலிகளையோ போராட்டத்தையோ குறைகூறவில்லை...

எல்லோரும் தங்கள் தலைவிதியை நொந்தார்கள்....

என்னமாதிரி...இப்படி ஈழம் இல்லாமல் போட்டு எண்டோ? இல்லாட்டி பிரபாகரனை பற்றி ஒன்றும் தெரியாமல் போட்டுது எண்டோ...வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு என்னன்னாடன்ததோ என்று தெரியாமல் போச்சுது எண்டு? இப்ப KP என்ன செயிகிறார், உருத்திரகுமார் என்ன செய்கிறார் எண்டு தெரியாம போச்செண்டு கவலைப்பட்டு தங்கட தலைவிதியை நொந்தார்களே?

ஆரேனும் தங்கட பிள்ளைகள் செத்ததைபற்றி , ஆமிக்காரன் பிடிச்சுகொண்டுபோனதைப்றி, அந்தந்த நேர சாப்பாடு கிடைத்தது, கிடைக்காதது பற்றி ஏதும் சொன்னவையோ?? தங்கட வீடுவாசல் பற்றி எதன் கதைச்சவையோ??? நான் நினைக்கேல அவையளுக்கு அதுகள் ஒரு பிரச்சனையாக இருந்திருக்கும் என்று...அவையிண்ட மெயின் பிரச்சனை...ஈழம் எடுக்கிறதும்...வெளிநாட்டில இருக்கிற தமிழ் ஆட்களின் அரசில் முன்னெடுப்புகள் பற்றித்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்....

முகாமில் சிலர் தாங்கள் புலிகளால் தான் தாக்கப்பட்டார்கள் என்றும் சொன்னார்கள்...

உண்மையாய் சொன்னவையோ ? சும்மா பகிடியாய் சொன்னவையோ? எனக்கு க்ளியர் இல்லாமல் இருக்கு.....இஞ்ச ஆட்கள் எனக்கு சொன்னவை "அவைகள் தான் சண்டை வேணும் எண்டு சும்மா யுத்தநிறுத்தம் செய்து கொண்டிருத்த தலைமையை உசுப்பேத்தி சண்டை பிடித்தவை என்று...அப்படி புலிகள் தாக்கினது என்றால் ஏன் என்று சொன்னவையே?? எனக்கு என்னவே ஒன்றில் அவை ஒட்டுக்குழு உறுப்பினர்கள் இல்லாட்டி அரசாங்கத்திடம் காசு வாங்கியவர்கள், இல்லாட்டி நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்...

அவர்களின் வார்த்தையில் கேளிக்குறியைத்தான் பார்த்தேன். ஆனாலும் அவர்கள் புலிகளை போற்றி பேசியதை நம்ப முடியவில்லை... இறுதி நேரத்தில் போலிகள் தாம் இறப்போம் என்றிருந்த வேலையிலும் தாக்கு சமைத்த கஞ்சியும் மருந்தும் கொடுத்து இறுதிவரை இருந்ததாகவும் நினைவிட்டு அகலாமல் சொன்னார்கள்...

இது மனிதத்தன்மை இதை ஆர் செய்தாலும் செய்யவிருந்தாலும் நான் அவர்களுக்கு முன் சிறியவன

இவைகள் என்னும் என் நினைவை விட்டு அகலவில்லை...

நான் மீண்டும் செல்வேன்... என்னால் முடிந்தவரை அந்த மக்களுக்கு உதவி செய்வேன்... இதுவே என்னை சந்திப்படுத்டும்.

இது மனிதத்தன்மை இதை ஆர் செய்தாலும் செய்யவிருந்தாலும் நான் அவர்களுக்கு முன் சிறியவன

தயவுசெய்து துண்டுப்பிரசுரங்களை நம்பவேண்டாம்.... ஹெலியில் இருந்தும் எங்களுக்கு துண்டுபிரசுரம் போட்டவங்கள் தானே. இப்ப ஹெலி வேண்டாம் அதுதான் பஸ்சுக்குள் துண்டுப்பிரசுரம் கொடுக்கிறாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.