Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது - இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது - இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிக அதிகாரங்கள் கொண்ட தீர்வையே நாம் வலியுறுத்தி வருகின்றோம் எனக் கூறியுள்ளார்.

நாங்கள் பெரும்பாண்மை சிங்கள சகோதரருக்கு மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். ஒருபோதும் நாங்கள் எவ்விதமான தீங்கையும் ஏற்படுத்துவது எங்களுடைய நோக்கம் அல்ல.

எமது மக்களான, தமிழ்,முஸ்லிம், மலையக மக்களும் இந்த நாட்டில் சம பிரஜைகளாக சுயமரியாதையுடனும், கௌரவத்துடன் வாழவேண்டியத்திற்கும ;அவர்களின் உரித்தை அடைவதற்கு எமது முயற்சி எடுக்கப்படுகின்றது என்பதை அன்பாகக் கூறி வைத்துக்கொள்ள விரும்புகிறோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

நன்றி பதிவு

  • Replies 85
  • Views 5.8k
  • Created
  • Last Reply

2001 ம் ஆண்டுக்கும் முன் வரைக்கும் உவர்(யாழ் களத்தை பொறுத்த மட்டில் அதி உத்தமர்) என்ன செய்து கொண்டு இருந்தவர் எண்டதை தெரியாத சனமும் இருக்கு... 1987ல இந்திய இராணுவம் ஆடின வெறியாட்டத்தை ஆதரித்த அமிர்தலிங்கத்துக்கு உவர் மிண்டு கொடுத்தும், அதன் பின் பிறேமதாசா காலம் விஜயதுங்கா காலம் சந்திரிக்கா காலம் வரைக்கும் நீலன் திருச்செல்வம் எப்படி எல்லாம் தமிழர் படுகொலைகளுக்கு உடைந்தையாக இருந்தாரோ அதேபோல நீலனுக்கும் உடந்தையாக இருந்தார்...

மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஐயா, மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் ஐயா போண்றவர்கள் இனப்படுகொலைக்கு எதிராக கொடுத்த குரலின் நூறில் ஒண்றை கூட இண்றைய தமிழர்கள்( சிலரின்) நம்பிக்கை நட்சத்திரம் காட்டவில்லை..

தமிழ் தேசியக்கூட்டமைப்பை புலிகள் உருவாக்கிய போது கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியை தலைவர் ஆக்கினவர்கள்... அப்ப ஆனந்தசங்கரி பல்லைக்கடிச்சு கொண்டு விலகாமல் இருந்து இருந்தால் அவரோ இப்ப தமிழர் தலைவர்...??

இரகுநாதன், .... சில தினங்களுக்கு முன் கொழும்புக்கு கதைத்த போது நண்பர் ஒருவர் சொன்னார் .."ஜேவிபி, ததேகூ, .. எல்லாம் காணமல் போகப் போகிறதென்று"!!! .... ஏன்???? அதுதான் அங்குள்ள ஜனநாயகம்!!!!

ஏற்கனவே நாம் புலத்தில், நிலத்துக்கு தொடர்பற்ற போராட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்!!! ... ஆனால் அங்குள்ள நிலமைகளை சற்று உணர்ச்சிகளுக்கு அப்பால் புரிந்து கொள்ள வேண்டும்!! ... இன்று சம்பந்தன் கூறியதற்கோ, அல்லது வேறு சில செயற்பாட்டுகளினாலோ ததேகூட்டமைப்பை ஒதுக்குவோம் என்றால், யார் மிச்சம்???? .... சிங்கள ஜனநாயக பண்புகளை கொண்ட டக்லசுகளும், கருணாக்களுமே!!! ... இந்தப் பண்பாணவர்களின் கைகளை ஓங்கச் செய்யப் போகிறீர்களா?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெல்லைய்யன்,

இங்கு நான் இந்தச் செய்தியை இணைத்ததன் நோக்கம் வேறு.1976 ஆம் ஆண்டு அப்போதிருந்த தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்கிற மூன்று பிரதான தமிழ்க் கட்சிகள் சேர்ந்துதான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையே பூரண இறமையுள்ள சமதர்ம ஈழம் என்கிற தனிநாடுதான். அதை தமது 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தேர்தல் பொருளாக முன்வைத்துத்தான் 23 இடங்களில் 19 இடங்களைக் கைப்பற்றியும் கொண்டார்கள்.

அதேபோல ரணில் புலிகள் சமாதானக் காலத்திலும் கூட புலிகளை ஏக பிரதிநிதிகளாகவும் பூரண சுயாட்சியுடைய தனிநாட்டுத் தத்துவத்தை ஏற்றுக்கொள்வதாகவும் கூறித்தான் தேர்தலில் நின்று அமோக வெற்றியும் பெற்றார்கள்.

இப்படியெல்லாம் செய்துவிட்டு, இன்று நாம் எப்போதுமே பிரிவினையையோ அல்லது தனிநாட்டுக் கோரிக்கையையோ முன்வைக்கவில்லை என்று கூறுவதை என்னெவென்று சொல்லுவது.

ஒன்றில் சம்பந்தனுக்கு மறதி அதிகமாக இருக்க வேண்டும், அல்லது வட்டுக்கோட்டைத் தீர்மானமோ அல்லது 2001 சமாதானக் காலமோ சம்பந்தன் அவர்கள் பிறக்கு முன்னர் நடந்திருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெல்லைய்யன்,

நீங்கள் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது இப்போதுள்ள மனோநிலையில் தாயகத்து மக்களால் தமது அரசியல் எதிர்காலம் பற்றி எதுவுமே முடிவெடுக்க முடியாதுள்ளது என்பது. அப்படி அவர்கள் எடுக்கும் எந்த அரசியல் நடவடிக்கையும் அரச பயங்கரவாதத்தால் கொடூரமாக அடக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடும் என்பது எனக்குத் தெரியும். இது ஏற்கனவே பெரும் அழிவுகளைச் சுமந்து நொந்து போயிருக்கும் அவர்களுக்கு இன்னும் அழிவுகளை ஏற்படுத்தும் என்னும் தர்க்கத்தையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஆனால், நண்பரே, சிங்கலம் எதிர்பார்ப்பதும் இதைத்தான். அதாவது ஒரு சரணாகதி நிலையில் எந்தச் சலனமும் இல்லாமல் அரசியலில் நாம் அநாதைகளாவதைத்தான்.முன்னெப்போதையும் விட, நாம் இப்போதுதான் எமது அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். தாயகத்தில் இது முடியாத பட்சத்தில் புலத்திலாவது இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது இன்றி அமையாதது.

சிங்களவன் தானாக எமக்கு எந்த உரிமையையும் தரப்போவதில்லை என்று நாம் அனுபவித்து அறிந்துகொண்டபின்னரும் இன்னும் காத்திருப்பு ஏன்??நாம் எமது உரிமைக்காகவும், தேசத்துக்காகவும் போராடப் போவது அவசியமென்றால், தேவையென்றால், அதை இன்றே செய்வோமே?? நாளை செய்வதால் எமக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது??

புலத்திலுள்ள மக்களின் அரசியல் நடவடிக்கைகளினால் மட்டுமே சிங்களவன் கொதிப்படைந்து தாயகத்திலுள்ள எமது உறவுகளை இம்சிக்கிறான் என்று நான் நினைக்கவில்லை. நாம் இங்கு போராடினாலும், இல்லாவிட்டாலும் அது நடக்கத்தான் போகிறது. எமது போராட்டம் மூலம் அவன் செய்யும் அநியாயங்களாவது வெளியுலகிற்கு கொண்டுவரப்படுமாக இருந்தால், நாம் அதில் பின்னிற்கப்போவதுமில்லை.

சம்பந்தரோ கூட்டமைப்போ தனிநாடு கேட்டாலும் கிடையாது..

தனிநாடு கேட்டால் நாடென்ன கூட்டமைப்புக் கூட காணமல் போயிடும்.

இது ஒன்றும் புதுசில்லைத்தானே... இதுக்கும் முன்னரும் மிதவாதக்கட்சிகள் எலாம் இப்பிடித்தான் இருந்தன

புலிகளின் பலத்தின் பினர்தான் தனிநாடு ஏக பிரதி நிதிநிதிகள் என்றெல்லாம் சொன்னார்கள்.. இன்று புலிகளும் இல்லை ஏக பிரதிநிதி என்று சொல்லவும் எவரும் இல்லை.

தனிநாடு கேட்கும் அரசியல் சக்தி தாயகத்தில் இல்லையென்றால் புலத்தில் கேட்டு என்ன பயன்?

தனிநாடு கேட்கும் அரசியல் சக்தி தாயகத்தில் இல்லையென்றால் புலத்தில் கேட்டு என்ன பயன்?

தாயகத்தில் இருந்து தனிநாடுகேட்டால் கேட்பவர்களை கொன்றுவிடுவார்கள் எனவே புலத்தில் இருந்து கேட்பது தான் பாதுகாப்பானது. என்ன பயன் என்று கேட்டால் உயிருக்கு பெரும்பான்மை உத்தரவாதம் புலத்தில் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது - இரா.சம்பந்தன்.

ஒருபோதும் புலிகளை ஆதரித்தது கிடையாது - என்று சொல்ருவாரா? புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக அங்கீகரித்தவர் எப்படி அவர்களின் கொள்iகிய ஏற்காது விடலாம்?சரி 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து பிரகடனப்படுத்திய போது எங்கே இருந்தார்.எந்தத் தீர்மதனத்தின் மீது ஆணையாக 1977 இல் பொதுத்தேர்தலில் வென்று பாராளுமன்றம் போனது எந்தக் கொள்கையைச் சொல்லி என்று மறந்து விட்டாரா?

எந்தக்கட்டத்திலும் உளப்பூர்வமாக தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை இப்பொழுதாவது சொன்னதிற்கு நன்றி.

டக்களஸ் மகிந்தவை விட்டுக் கழண்டாத்தான் கொஞ்ச வாக்குகளையாவது வாங்கலாம் என்று இறங்கி வர(நடிப்புக்காவது)முயற்சிக்கும் போது சம்பந்தர் மகிந்தவை நாடிப் போகிறார்.ஏதாவது அமைச்சுப் பதவி கிடைக்கும் என்று. மகிந்தவும் கூட்டமைப்புக்குதான் மக்கள் செல்வாக்கு இருக்குதென்ற கூட்டமைப்பை வளைக்கப் பார்க்கிறார்.அப்ப தானே எல்லா மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட அரசு என்று உலகுக்குச் சொல்லலாம்.தமிழ் மக்கள் வைப்பார்கள் ஆப்பு.முற்றிலும் இளைஞர்களைக் கொண்ட புதிய அரசியல் அமைப்ப ஒன்று தமிழ்மக்களில் இருந்து முளை விட வேண்டும்.

தாயகத்தில் இருந்து தனிநாடுகேட்டால் கேட்பவர்களை கொன்றுவிடுவார்கள் எனவே புலத்தில் இருந்து கேட்பது தான் பாதுகாப்பானது. என்ன பயன் என்று கேட்டால் உயிருக்கு பெரும்பான்மை உத்தரவாதம் புலத்தில் இருக்கின்றது.

அப்போ இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள தான் சம்பந்தர் இந்த முடிவுக்கு வந்தாரென்று எடுத்துக்கொள்ளலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டுவதற்க்காக இருப்பை பாதுகாப்பது போராட்டத்தின் அடிப்படை.

போராட்டுவதற்க்காக இருப்பை பாதுகாப்பது போராட்டத்தின் அடிப்படை.

இந்த அடிப்படையின் படி பார்த்தால் சம்பந்தரை குறை கூறமுடியாது.

போராட்டம் வெற்றியடைய போராட்ட சக்தி பாதுகாக்கப்பட வேண்டும். கட்டம் கட்டமாக என்றாலும் இலக்கை அடையவேண்டும். இப்போ உள்ள சூழலில் இலங்கையில் இருந்து கொண்டு எந்தப் போராட்டத்தையும் செய்யமுடியாது.

இதை சொல்லும்போது இன்னொன்றையும் சொல்லவேண்டும்இ சம்பந்தரால் கூட ஒரு அதிகாரப்பதிவு பெற்றுக்கொள்ள முடியாது. சிங்களவன் ஒன்றையும் தரமாட்டான்.

எங்களுக்கு பிரதேச சபைதான் மிச்சம்... அதுதான் நல்லதும்... அரியாலை வல்வெட்டித்துறை எண்டு அடிபடலாம்.

:huh: :huh: :huh: சபாஷ் சரியான அரசியல் தலைவர் கிடைத்திருக்கிறார். :lol::lol::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழீழம் நடைமுறை சாத்தியம் அற்றது. இப்படி எதையாவது கூறியிருக்கலாம். ஆனால் என்றுமே ஆதரிக்கவில்லை என்பது தமிழ் மக்கள் 30000 க்கும் மேற்பட்ட மாவீர்களை அர்பணித்து செய்த புனிதமான போராட்டத்தை கொச்சைப் படுத்துவதன்றி வேறேதுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லையன் அவர்கள் சொல்வது உண்மை

Edited by raja.m

இதோ இன்னுமொரு கருணாநிதி...அரசியல் வாழ்வென்றாலே பச்சோந்தி வேடம்தான் நீதியுமில்லை மண்ணுமில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ இன்னுமொரு கருணாநிதி...அரசியல் வாழ்வென்றாலே பச்சோந்தி வேடம்தான் நீதியுமில்லை மண்ணுமில்லை!

உண்மை உண்மை உண்மை

Edited by raja.m

  • கருத்துக்கள உறவுகள்

இது சம்பந்தனிடம் இருந்து எதிர்பார்த்ததுதான்.

தேசிய தலைவர் சம்பந்தனை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கி அவரை உலகிற்கு தமிழ் மக்களின் உரிமைகள் தேவைகள் குறித்துச் சொல்ல கேட்ட போதும்.. சம்பந்தன் சில விடயங்களை வார்த்தை அளவில் உச்சரித்துக் கொண்டு தனது சொந்த நிலைப்பாட்டையே பல இடங்களிலும் வலியுறுத்தி வந்ததாக சொல்லப்பட்டது.

இன்று அதனை அவர் உண்மையாக்கி இருக்கிறார்.

இப்படித்தான் அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் தான் வீரத்திலகமிட்டு தமிழீழக் கோரிக்கையையும் முன்வைத்தனர். இறுதியில் மரணத்தின் தறுவாயில் சிவசிதம்பரம் பிரபாகரனின் நிலைப்பாட்டை தமிழீழக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அறிக்கை விட்டு பின் மரணித்துக் கொண்டார்.

நெல்லையன் போன்வர்கள் டக்கிளஸ் கருணாக்களைக் காட்டியே சிலவற்றை நியாயப்படுத்த நினைக்கின்றனர். அது தவறு. டக்கிளஸ் கருணாவை நிராகரிக்கிற வழி தமிழ் மக்களுக்குத் தெரியும். வரதராஜப் பெருமாளையும் தான் இந்தியா முன்னிறுத்தியது. தமிழ் மக்கள் அவரையும் நிராகரித்து மீண்டும் இந்தியாவிற்கே அனுப்பி வைத்தனர். சந்திரிக்காவோடு இணைந்த சங்கரி போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. இறுதியில் தமிழ் மக்களால் அவரும் செல்லாக் காசாக்கப்பட்டார்.

சம்பந்தன் தொடர்ந்தும்.. தமிழீழத்திற்கு எதிரான கருத்துக்களை மக்களின் விருப்பத்திற்கு எதிராக 30,000 போராளிகளின் வீரமரணத்தை மதிக்காமல் அரசியல் செய்ய முனைவாராக இருந்தால்.. எந்த அரசியல் சாணக்கியமும் பாராமல் அவர் மக்களால் தூக்கி வீசப்படுவது நடக்கும். மக்கள் ஒன்றும் ஏமாளிகள் கிடையாது.

தமிழீழத்தை ஆதரிக்காமல்.. தாயக் கோட்பாட்டை ஆதரிக்காமல்.. சுயநிர்ணயத்தை உச்சரிப்பதில் அர்த்தமில்லை.

சம்பந்தனின் இன்றைய நிலைப்பாடு இந்தியாவின் நிலைப்பாட்டை திருப்தி செய்வதாக இருக்கிறதே அன்றி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை திருப்தி செய்வதாக இல்லை.

எந்த ஒரு காரணத்திற்காகவும் தமிழ் மக்கள் தாயக் கோட்பாட்டையும் தமிழீழ நிலைப்பாட்டையும் எனி விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்த நிலைப்பாட்டை உயிர்ப்பிக்க 30,000 போராளிகளும் 150,000 மக்களும் உயிர்தியாகம் செய்துள்ளனர். அதுமட்டுமன்றி ஆயிரக்கணக்கான மக்கள் பல வகை துன்பங்களையும் சந்தித்து நிற்கின்றனர். தாயகம் இந்தக் கோட்பாடுகளைக் கையில் எடுத்தற்காக எதிரிகளால் இராணுவ ரீதியில் சிதைத்து சின்னாபின்னப்பட்டுப் போய் உள்ளது.

சம்பந்தன் சாணக்கிய அரசியல் செய்து.. ராஜபக்சவை குளிர்வித்து.. தமிழ் மக்களிற்கு தமிழீழம் பெற்றுத் தர முனையவே இப்படியான கருத்துக்களை விடுவிக்கிறார் என்று எனியும் போக்குக் காட்ட முடியாது.

சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு கிட்டத்தட்ட 65 ஆண்டு கால அனுபவம் இருக்கிறது தமிழ் மக்களை எப்படி ஏமாற்றுவது என்று. சம்பந்தன் எனியும் எங்களுக்கு அந்தப் பாடங்களை மீட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அவரால் அரசியல் செய்ய முடியாது என்றால் தயவுசெய்து ஓய்வுபெற்றுவிட்டு விலகி இருந்து கொள்ளுங்கள். தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க துணிச்சலும் துடிப்பும் மிக்க இளைய தலைமுறை இருக்கிறது. அதற்கு பண்டா காலத்து அரசியல் செய்யத் தெரியாது விட்டாலும் அப்படியான ஒரு இழுபடு அரசியல் செய்து தமிழ் மக்களை இன்னும் இன்னும் துன்பியலுக்குள் இருந்தி வைக்க விருப்பம் இருக்காது.

எமது மக்களின் உரிமைகள் தொடர்பில் எனியும் சமரசம் உலாவும் நிலைக்கு சிங்கள சகோதர சகோதரிகளே என்று புராணம் பாடிக் கொண்டிருக்க முடியாது. சிங்கள தேசத்திற்கு தெளிவான செய்தியை தமிழ் மக்கள் வாக்குகள் மூலம் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் அதுவோ பேரினவாதச் சிந்தனையில் இருந்து இறங்கி வருவதாக இல்லை. ஆனால் சம்பந்தன் மட்டும் தமிழ் மக்களை பாழும் கிணற்றுக்குள் தள்ளிவிடும் அரசியல் செய்ய முற்படுகிறார்.

இந்த வகையான பேச்சுக்கள் மூலம் சம்பந்தன் தமிழ் மக்களுக்கு எதனையும் ஈட்டிக்கொடுக்க முடியாது. தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் அவர் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு மக்களைக் காட்டிக் கொடுப்பதையே இதன் மூலம் செய்ய முடியும்.

மலையக தலைமைகளும் சிங்களப் பேரினவாதிகளுக்கு பயந்து அல்லது பணிந்து இதனையே செய்து கொண்டிருக்கின்றன. தொண்டமான் தொடங்கி சந்திரசேகரன் வரை சுருதி மாற்றி மாற்றி சிங்களத்தோடு கைகோர்த்துப் பயணித்தும் இன்னும் லயங்களும்.. தோட்டக்கூலிகளுமே தொடர்கதையாக உள்ளன. சம்பந்தனும் அந்த நிலைக்கு தமிழ் மக்களை தள்ளாது இருந்தால் நன்று.

மக்களின் மனவோட்டத்தோடு இசைந்து அரசியல் செய்த துணிவில்லையேல் தயவுசெய்து அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டு விலகிவிடுங்கள். இன்றேல் போட்டுத்தள்ளும் நிலைக்கு உங்களைக் கொண்டு வந்துவிட்டு ஐயோ ஜனநாயகவாதிகளை படுகொலை செய்கிறார்கள் என்று ஒப்பாரி வைக்காதீர்கள்.

உண்மையில் எந்த ஒரு மக்கள் மனம் விரும்பும் ஜனநாயகவாதியும் போட்டுத்தள்ளப்படுவதில்லை. காந்தி கூட சுட்டுக்கொல்லப்பட்டார் காரணம் அவர் ஒரு பகுதி இந்திய மக்களின் கருத்துக்களை செவிமடுக்க மறுத்ததுதான். என்ன தான் தேச பிதாவாக காந்தியை காட்டிக் கொண்டாலும் காந்தி ஒரு துரோகி என்பதை இனங்காட்டவும் உதாரணங்களை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

தயவுசெய்து எமது உயிரினும் மேலான போராளிகளினதும் மக்களினதும் தியாகங்களுக்கும் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் மதிப்பளித்து அரசியல் செய்ய முனையுங்கள். இன்றேல் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று விடுவதே நன்று. பிரபாகரன் இல்லை நாம் என்னவும் பேசலாம் என்பது தவறு. பிரபாகரன் இல்லை என்று வைத்துக் கொண்டாலும் கூட பிரபாகரனை உருவாக்கிய சூழல் அப்படியே சிங்களப் பேரினவாதிகளால் கட்டிக்காட்டப்பட்டுக் கொண்டே வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு ரி 56 ஐ கையில் எடுப்பது பெரிய காரியமல்ல. ஆகவே மக்களின் மனதறிந்து அரசியல் செய்வது தான் முக்கியம்..! உணர்ந்து செயற்படுங்கள் அல்லது ஒதுங்கிக் கொள்ளுங்கள். இளைய தலைமுறைக்கு வழிவிட்டு அவர்களை வழிநடத்த முடியும் என்றால் அதை சரியான பாதையில் நின்று கொண்டு செய்யுங்கள்...!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டுவதற்க்காக இருப்பை பாதுகாப்பது போராட்டத்தின் அடிப்படை.

போராட்டத்தின் கருவூலத்திற்கு எதிராகவே கருத்தை வைத்துக் கொண்டு எப்படி போராட்டத்தின் அடிப்படையை பாதுகாக்க முடியும் என்று கருத்துரைக்கிறீர்கள். இதனை தெளிவாகச் சொல்ல முடியுமா..??!

இந்திய ஆளும் வர்க்கமும்.. சம்பந்தனும் ஒன்றையே சொல்கிறார்கள்.

ஐக்கிய இலங்கைக்குள் இனங்களுக்கு சம உரிமை என்று. அது எந்த வகையில் எவ்வாறு சாத்தியப்படும்.. சாத்தியப்படுத்தப்படும் என்பதை ஒருக்கால் சொன்னீர்கள் என்றால் அதையே ஐக்கிய உலகிற்குள் இனங்களின் சம உரிமை என்று உச்சரித்துக் கொண்டு புதிய உலக ஒழுங்கை சம்பந்த சாணக்கியதை கொண்டு நிறுவிக் கொள்ளலாம்.

இந்தியாவிலேயே இனரீதியில் அன்றி மொழி ரீதியில் மக்கள் தங்களை தனித்துக் காட்டி வாழ தனி மாநிலங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் இரு வேறு இனங்களாக வாழும் தமிழர்களையும் சிங்களவர்களையும் சேர் பொன் இராமநாதர்கள்.. பொன்னம்பலங்கள் தங்களின் பொக்கட்டை நிரப்ப சகோதர சகோதரிகளாக்கி வாழ்ந்துவிட்டு போனதை சம்பந்தனும் செய்வதால்.. தமிழ் மக்கள் உரிமை பெற்று வாழ முடியாது.

மாயைத்தனமான வார்த்தைப் பிரயோகங்களை விடுத்து சிங்களப் பேரினவாதத்திடம் இந்த அணுகுமுறைகள் எவ்வாறு எதை சாத்தியமாக்கும் என்பதை மட்டும் சொல்லுங்கள்.

சம்பந்தன் பிரிவினையை எதிர்க்கிறார். ஆனால் தமிழ் மக்கள் 1977 இல் இருந்து இன்று வரை பிரிவினைக்காக வாக்களிக்கின்றனர். இந்த நிலையில் சம்பந்தன்.. எப்படி தமிழ் மக்களின் குரலாக பிரதிபலிக்கப்பட முடியும். போராடிய மக்களே இத்தனை துன்பங்கள் மத்தியிலும் தெளிவாக இருக்கும் போது போராட்ட காலத்திலும் சிங்கள நாடாளுமன்றில் கதிரையில் வீற்றிரு அரசியல் செய்ய அனுமதித்தை சம்பந்தன் தனது தலைக்கணமாக வைத்துக் கொண்டு விட்டார் போலும்..!

Edited by nedukkalapoovan

உண்மையில் ஊரில் இருந்த போது சரி, இப்போதும் சரி எனக்கு பழைய தலை முறை அரசியல் வாதிகளை பிடிப்பதில்லை, பழைய தலை முறைக்குள் சம்பந்தனும் அடக்கம். ஆனால் இப்போது உள்ள சூழ்னிலையில் சம்பந்தன் சொன்ன கருத்தை வைத்து துரோகி என்று புலம் பெயர்ந்திருந்து, உயிருக்கு எந்த பயமும் இல்லாது கோண்டு சொல்லுவோரை பார்க்க சிரிப்பாக தான் வருகிறது. அங்கு இப்பொதுள்ள சூழினிலையில் யாரவது தமிழீழம் தான் தீர்வு, அதற்கு வாகளியுங்கள் என கேட்பது, தமிழர்களுக்கு எந்த ஒரு அரசியல் தலமையும் இல்லாது அனாதைகள் ஆகுவதற்கு சமம். அப்படி கேட்பவர்கள் ஒன்றில் கொல்லப்படுவார், அல்லது சிறையில் தள்ள படுவார்கள், அல்லது குடியுரிமையை பறித்து நாடு கடத்தப்படுவார்கள். பிறகென்ன யாழில் டக்கிளஸ் 11 தொகுதியிலும் வெல்லுவார், வன்னியில் 5 இல் 4 ஐ சித்தார்த்தன் வெல்லுவார், கிழக்கை கருணாவும் பிள்ளையானும் பங்கு போட்டு கொள்ளுவார்கள். இதுதான் புலம் பெயர் தமிழரின் உள்ளம் கனிந்த விருப்பம் என்றால் எனக்கு வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை.

இல்லை சம்பந்தர், கூட்டமைப்பு துரோகி என்று இங்கிருந்து சொல்லும் துணிவுள்ள ஆக்கள் கூட்டக சிறிலங்காவுக்கு போய் தமிழீழத்துக்கு நாங்கள் வக்கு கேக்கிறம் என்று சொல்லி தேர்தலில் நிலுங்கோ. அது மிக சிறப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் ஊரில் இருந்த போது சரி, இப்போதும் சரி எனக்கு பழைய தலை முறை அரசியல் வாதிகளை பிடிப்பதில்லை, பழைய தலை முறைக்குள் சம்பந்தனும் அடக்கம். ஆனால் இப்போது உள்ள சூழ்னிலையில் சம்பந்தன் சொன்ன கருத்தை வைத்து துரோகி என்று புலம் பெயர்ந்திருந்து, உயிருக்கு எந்த பயமும் இல்லாது கோண்டு சொல்லுவோரை பார்க்க சிரிப்பாக தான் வருகிறது. அங்கு இப்பொதுள்ள சூழினிலையில் யாரவது தமிழீழம் தான் தீர்வு, அதற்கு வாகளியுங்கள் என கேட்பது, தமிழர்களுக்கு எந்த ஒரு அரசியல் தலமையும் இல்லாது அனாதைகள் ஆகுவதற்கு சமம். அப்படி கேட்பவர்கள் ஒன்றில் கொல்லப்படுவார், அல்லது சிறையில் தள்ள படுவார்கள், அல்லது குடியுரிமையை பறித்து நாடு கடத்தப்படுவார்கள். பிறகென்ன யாழில் டக்கிளஸ் 11 தொகுதியிலும் வெல்லுவார், வன்னியில் 5 இல் 4 ஐ சித்தார்த்தன் வெல்லுவார், கிழக்கை கருணாவும் பிள்ளையானும் பங்கு போட்டு கொள்ளுவார்கள். இதுதான் புலம் பெயர் தமிழரின் உள்ளம் கனிந்த விருப்பம் என்றால் எனக்கு வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை.

இல்லை சம்பந்தர், கூட்டமைப்பு துரோகி என்று இங்கிருந்து சொல்லும் துணிவுள்ள ஆக்கள் கூட்டக சிறிலங்காவுக்கு போய் தமிழீழத்துக்கு நாங்கள் வக்கு கேக்கிறம் என்று சொல்லி தேர்தலில் நிலுங்கோ. அது மிக சிறப்பாக இருக்கும்.

சம்பந்தன் கருணாநிதி இருவரும் ஒன்றுதான்

Edited by raja.m

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது இங்கு உள்ள தலைப்பு க்கு எனது கருத்து.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68705

உண்மையில் ஊரில் இருந்த போது சரி, இப்போதும் சரி எனக்கு பழைய தலை முறை அரசியல் வாதிகளை பிடிப்பதில்லை, பழைய தலை முறைக்குள் சம்பந்தனும் அடக்கம். ஆனால் இப்போது உள்ள சூழ்னிலையில் சம்பந்தன் சொன்ன கருத்தை வைத்து துரோகி என்று புலம் பெயர்ந்திருந்து, உயிருக்கு எந்த பயமும் இல்லாது கோண்டு சொல்லுவோரை பார்க்க சிரிப்பாக தான் வருகிறது. அங்கு இப்பொதுள்ள சூழ் நிலையில் யாரவது தமிழீழம் தான் தீர்வு, அதற்கு வாகளியுங்கள் என கேட்பது, தமிழர்களுக்கு எந்த ஒரு அரசியல் தலமையும் இல்லாது அனாதைகள் ஆகுவதற்கு சமம். அப்படி கேட்பவர்கள் ஒன்றில் கொல்லப்படுவார், அல்லது சிறையில் தள்ள படுவார்கள், அல்லது குடியுரிமையை பறித்து நாடு கடத்தப்படுவார்கள். பிறகென்ன யாழில் டக்கிளஸ் 11 தொகுதியிலும் வெல்லுவார், வன்னியில் 5 இல் 4 ஐ சித்தார்த்தன் வெல்லுவார், கிழக்கை கருணாவும் பிள்ளையானும் பங்கு போட்டு கொள்ளுவார்கள். இதுதான் புலம் பெயர் தமிழரின் உள்ளம் கனிந்த விருப்பம் என்றால் எனக்கு வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை.

இல்லை சம்பந்தர், கூட்டமைப்பு துரோகி என்று இங்கிருந்து சொல்லும் துணிவுள்ள ஆக்கள் கூட்டக சிறிலங்காவுக்கு போய் தமிழீழத்துக்கு நாங்கள் வக்கு கேக்கிறம் என்று சொல்லி தேர்தலில் நிலுங்கோ. அது மிக சிறப்பாக இருக்கும்.

இந்த சம்பந்தரின் பேச்சு அரசியல் சாணக்கியமானது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தனிநாட்டுக் கோரிக்கையை நான் ஒரு போதும் ஆதிகரிக்கவில்லை என்பது அவரின் தனிப்பட்ட அரசியல் அங்கீகாரத்திற்காக அவர் சொல்லிக் கொண்டதாகவே தெரிகிறது. ஆனால் இவரின் இந்தக் கருத்தை வைத்து இதுதான் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று நம்ப சிங்களம் தயாராக இல்லை. அதேபோல் சம்பந்தனின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடே தமிழ் மக்களின் நிலைப்பாடும் அல்ல.

டக்கிளஸ்.. சித்தார்த்தன்.. கருணா.. வரதராஜப் பெருமாள்.. இவர்கள் சிங்கள.. இந்திய கூலிகள்.. அடியாட்கள். அரச ஆதரவுள்ள இவர்கள் நினைப்பதைச் செய்ய அரசுகள் ஆதரவளிக்கும். கடந்த பொதுத்தேர்தலிலும் கூட விடுதலைப்புலிகள் பகிரங்கமாக கேட்டுக் கூட அதற்கு மக்கள் செவிமடுத்து வாக்களித்தும் கூட 20,000 வாக்குகளை எப்படியோ பெற்று டக்கிளஸ் என்பவர் எம்பியாகி அமைச்சரும் ஆனார்.

அடுத்து கருணா.. அவர் தேர்தலை கூட சந்திக்கவில்லை. தேசிய பட்டியல் என்ற அட்சய பாத்திரம் மூலம்.. எம் பி ஆனார். பின் அமைச்சரானார். இப்போ சுதந்திரக் கட்சியின் உப தலைவராக இருக்கிறார். இவர்கள் தமிழ் மக்களின் வாக்குகள் இன்றியே அரச கூலிகள் அடியாட்கள் என்பதால் அரசால் உயர்பதவி நிலைகளுக்கு கொண்டு வரப்பட்டவர்கள். எதிர்காலத்திலும் அரசின் தேவை கருதி கொண்டு வரப்படுவார்கள். தமிழ் மக்கள் வாக்களித்தால் என்ன இல்லா விட்டால் என்ன சிங்களப் பேரினவாதம் நினைத்தால் யாரும் அமைச்சராகலாம். அப்படித்தான் கதிர்காமரும் அமைச்சரானார். எமது போராட்டத்தினை அழிக்க பெரும்பாடுபட்டவர்களில் அதுவும் சர்வதேச அளவில் பாடுப்பட்டவர்களில் அவர் பெயர் பெற்றார். சிங்களவர்களால் கூட தலைவா என்று மதிக்கப்படுகிறார்.

இப்படியான ஒரு அரசியலையா சம்பந்தனும் விரும்புகிறார்..???! இதன் மூலம் சம்பந்தன் எதனை சாதிக்கப் போகிறார்..???! தனி நாட்டுக் கோரிக்கையை சம்பந்தன் அங்கீகரிக்கவில்லை என்றால்.. உலக நாடுகளிடம் தமிழ் மக்கள் எப்படி கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டி அப்படியான ஒரு கோரிக்கையை முன் வைக்க முடியும்..??!

பொங்கு தமிழ் மூலம் தமிழ் மக்கள் தாயகத்திலும் சரி உலகெங்கும் சரி தனிநாட்டுக்கான ஆதரவை சொன்னார்கள்.. காட்டினார்கள் தானே. மீண்டும் ஒரு வாக்குப்பதிவு மூலம் தான் அதைக் காட்ட வேண்டும் என்றில்லை. சூழ்நிலைகள் சரியாக அமைந்து ஒரு நடுநிலையான சர்வதேச மத்தியஸ்துடனான தேர்தல் வரின் தமிழ் மக்கள் மீண்டும் தனி நாட்டுக் கோரிக்கைக்காக வாக்களிக்க மாட்டார்கள் என்றில்லை. நிச்சயம் வாக்களிப்பார்கள்.

ஆனால் சம்பந்தனின் இன்றைய இந்த நிலைப்பாடு என்பது மக்களின் நிலைப்பாட்டோடு முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. மக்கள் தமது கருத்தை தெரிவிக்க சுதந்திரம் இழந்துள்ள நிலையில்.. சம்பந்தனும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது உலகம் சிங்களப் பேரினவாதத்தின் நிலைப்பாட்டை அங்கீகரிக்க இட்டுச் செல்லும் நிலையையே வலுப்படுத்தும்.

புகலிடத்தில் மக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்க சில நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சம்பந்தனின் இவ்வாறான குறைக்குரல்கள் எதனை சாதிக்கப் போகின்றன. அநாவசியமான சகோதரத்துவ கூவல்கள்.. எத்துணை சாத்தியம்.. சிங்களவர்கள் தமிழர்களை சகோதர்களாக நடத்துவார்களா..??! அப்படி என்றால் எதற்காக ஒரு இலட்சம் மக்களும் சந்தேக நபர்கள் 11 ஆயிரம் பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்...??! இதுதான் சிங்கள தேசம் காட்டும் சகோதரத்துவமா..???!

முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கும் போது மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சம்பந்தர்.. இந்தக் கூவலை அப்போதே விடுத்து சகோதர்களைக் சகோதர்கள் கொல்வதை தடுத்திருக்கலாமே...???! அப்பாவி தமிழ் மக்களை கொன்று வெற்றி கொண்டதை பட்டாசு கொழுத்தி கொண்டாடியதும் இதே சிங்களச் சகோதர்கள் தான் என்பதையும்.. அதன் பின் நிர்வாணப்படுத்தி எமது மக்களைக் கொன்றதும்.. சிறை வைத்ததும் இதே சிங்களச் சகோதரர்கள் தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சம்பந்தனைக் காட்டிலும் தந்தை செல்வா சிங்களவர்களை அதிகம் சகோதர்களாக மதித்தவர். அப்படிப்பட்டவராலேயே சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து தமிழ் மக்களைக் காக்க முடியவில்லை எனும் போது.. சம்பந்தன்.. இப்படியான கூவல்கள் மூலம் எதனை எப்படி சாதிக்கப் போகிறார்..???! இல்லை இதுதான் ஜனநாயகம் என்று காட்டப் போகிறாரா..???! அல்லது இப்படிக் கூவினால் தான் சோனியா உதவிக்கரம் நீட்டி தமிழ் மக்களை இரட்சிப்பாராமா..???! நடந்தால் சுபம். நடக்கட்டும் பார்க்கலாம்..??! அல்லது நடத்திக் காட்டட்டும்...??!

  • கருத்துக்கள உறவுகள்

உரல் இளைத்து உளிப்பிடியாகிய கதைதான். போறபோக்கைப் பார்த்தால் இவர்கள் கூட்டமைப்பினை, ஈபிடிபி போன்றதொரு கட்சியாக்கிப்போடுவனம் போலகிடக்கு. காலக் கிரமத்திலை அப்படித்தான் தமிழர் கூட்டமைப்பு? தன்னைத்தானே சுருக்கிக்கொள்ளும் அப்போதும் எங்கடையாக்கள் களநிலைமையைக் கருத்திலெடா.... என அதுக்கும் வியாக்கியானம் சொல்லுவினம். எதிர்காலத்தில் சிங்களவன் மகுடிக்கு அடங்கும் பெட்டிப்பாம்பாக வரவிருக்கும் ஒரு கட்சிக்குழுமத்தை இப்பவே நாம் ஏன் ஆதரிக்க வேண்டும். இதிலும்பார்க்க டக்ளஸ்சை இப்பவே ஆதரிக்கலாம். காரணம் இவ்வளவு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இன்றைக்குவரைக்கும் ஒரு ஒட்டுக்குழுவையோ (அன்றேல் ஒரு கட்சியையோ) வெற்றிகரமாக நடத்துது. என்னைப்பொறுத்தவரைக்கும் இவர்கள் இருவருக்குமிடையில் பெருத்த வேறுபாடுகள் இல்லை. அப்படி இருந்தாலும் காலப்போக்கிலென்ன வெகுவிரைவிலேயே ஒருவரும் ஒரேபுள்ளியில் சங்கமித்துவிடுவார்கள். என்ன வித்தியாசம் ஒருவர் அடாவடிக்கட்சி நடாத்துகிறார் கூட்டமைப்பினர் அப்புக்காத்துக் கட்சி நடாத்துகிறார்கள். டக்ளஸ்சேனும் திருந்த இடமுண்டு இவர்கள் திருந்தமாட்டார்கள. இல்லையேல் சுயநலமில்லாத இளைஞர்களை சுயேட்சைக் குழுவாக களத்தில் இறக்கி அவர்களைத் தேர்தலில் வெல்லவைப்பதே தமிழரது ஒரே தெரிவு. இப்போது இதற்கு யாரும் முன்வரமாட்டார்கள் ஆனால் அவர்களைக் காலம்காட்டி நிற்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கும் போது மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சம்பந்தர்.. இந்தக் கூவலை அப்போதே விடுத்து சகோதர்களைக் சகோதர்கள் கொல்வதை தடுத்திருக்கலாமே...???!

இதை அவர்கள் சம்பந்தரின் சானக்யதன்மை

என்று சொல்வார்கள்

Edited by raja.m

சம்பந்தர்.

நாம், தமிழீழம் கேட்கவில்லை, பிரச்சனைக்காரர் பிரபாகரன் தான் தமிழீம் கேட்கின்றார். என அனைத்துலக சமூகத்தின் கைகளைக்குலுக்கிக் கதைக்கும் போது சொல்லிவந்த கருத்தை இப்போது எமக்குச் சொல்லியிருப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

சரி இப்ப எங்களுக்கு யார் தான் தலைவர். :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.